Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாத்தறை கடற்பரப்பில் வெடி பொருட்களுடன் கப்பலொன்று கடற்படையினரால் தாக்கியழிக்கப்பட்டது.

Featured Replies

மாத்தறை கடற்பரப்பில் வெடி பொருட்களுடன் கப்பலொன்று கடற்படையினரால் தாக்கியழிக்கப்பட்டது.

மாத்தறை கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான கப்பல் ஒன்றை கடற்படையினர் இன்று புதன்கிழமை தாக்கியழித்துள்ளனர்.

இக்கப்பலினை இனங்கான்பதற்கான எதுவித சின்னங்களோ கொடிகளோ காணப்படவில்லை. கடற்படையினர் இக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து கப்பல் பலத்த சத்தத்துடன் தொடர்ந்து வெடித்தது. எனவே விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பலாக இருக்கலாம் என கடற்படை பேச்சாளர் டி.கே.பி தஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.

-Virakesari-

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

தொடர்புடைய செய்தி:

http://www.alertnet.org/thenews/newsdesk/COL202427.htm

உதெல்லாம் சிங்கள அரசின் யுத்த நிறுத்தத்திற்கு கிடைத்த வெற்றிகள்!!!

நாங்கள் கொட்டாவி விட்டுக் கொண்டு, சிங்களவங்கள் அழிக்கிறதுகளைப் பாத்துக் கொண்டிருக்கிறம்!!!! ;)

இப்பவெல்லாம் தமிழர்களுக்கு அடி வேண்டி, அடி வேண்டி பழக்கப்பட்டுப் போச்சு!!!! நரம்பில்லாத மனிசராகத் திரிகிறம், சொரணை கெட்டு!!!

தாக்கப்பட்டது படகு என்று தேசிய பாதுகாப்பு ஊடகநிலைய இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்கப்பட்டது றோலர் எண்டு பாதுகாப்பு அமைச்சின் இணையத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது பின்னர் என்று மாற்றியிருக்கிறார்கள்.

பிரசாத் சமரசிங்க தாக்கப்பட்டது கப்பல், பெரிய கப்பல் என்றும் சொல்லியிருக்கிறார்.

கடற்படைப் பேச்சாளர் 70-75 மீட்டர் நீளமான கப்பல் எண்டு ரொய்ட்டசிடம் சொல்லியிருக்கிறார்.

இவங்களே தாக்கப்பட்டது எது எண்டு தெரியாது ஆளாளுக்கு ஒரு கதை சொல்லுறாங்கள்.

உதெல்லாம் சிங்கள அரசின் யுத்த நிறுத்தத்திற்கு கிடைத்த வெற்றிகள்!!!

நாங்கள் கொட்டாவி விட்டுக் கொண்டு, சிங்களவங்கள் அழிக்கிறதுகளைப் பாத்துக் கொண்டிருக்கிறம்!!!! ;)

இப்பவெல்லாம் தமிழர்களுக்கு அடி வேண்டி, அடி வேண்டி பழக்கப்பட்டுப் போச்சு!!!! நரம்பில்லாத மனிசராகத் திரிகிறம், சொரணை கெட்டு!!!

ஐசே நீர் என்ன சொல்லுறீர் எண்டே விளங்கேல்லை.

தாக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் கப்பலோ இல்லையோ தெரியாது.

ஆனால் விடுதலைப் புலிகள் சந்திரிகாவுடன் செய்திருந்த போர் நிறுத்த நிறைவடைந்து சில காலத்தில் அதாவது சண்டை நடந்த காலத்தில் ஒரு கப்பல் முல்லைத்தீவுக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையாலும், வான் படையாலும் தாக்கி அழிக்கப்பட்டது. எனவே விடுதலைப் புலிகள் போரைத் தொடங்கிய பின்னர் விடுதலைப் புலிகளின் கப்பல் ஒன்று ஆயுதத்துடன் நாட்டை நோக்கி வருகிறது என்று சிறிலங்காவிற்குத் தெரிந்தால் விடுதலைப் புலிகள் போரைத் தொடங்கி விட்டனர் எனவே அவர்களின் கப்பலைத் தாக்கக்கூடாது எண்டு சிறிலங்கா அந்த கப்பல் முல்லைத்தீவில் வந்து ஆயுதங்களை இறக்க விட்டு விடுவிடுமா?

ஐசோ போரைத் தொடங்கவில்லை என்று ஆதங்கப்படுறீர். போரைத் திட்டமிடாமல் நடத்தி போராளிகளின் உயிரைக் காவு கொடுக்க விடுதலைப் புலிகள் ஒன்றும் சிங்களப் படைகள் அல்ல. போர் தொடங்கப்பட்டால் அது இறுதிப் போர் அதில் எமக்கு வெற்றி என்ற ஒன்று மட்டுமே இலக்கு. போரைத் தொடங்குவதென்றால் தாக்குலுக்கான வேவு, திட்டமிடல், எற்பாடு, பயிற்சி, ஒத்திகை இப்படி பல செய்யப்பட்ட பின்பே அந்த இலக்கு மீது தாக்குதல் நடத்தப்படும். அதுவே போராளிகளின் இழப்பைக் குறைத்து எதிரிக்கு அதிக இழப்பை ஏற்படுத்தி எமக்கு வெற்றியைத் தரும். அதைவிடுத்து நீர் நினைக்கிற நேரமெல்லாம் தாக்குதல் நடத்தப்படவேண்டுமென சிறு பிள்ளை மாதிரி சிந்திக்காதையும்.

Edited by மின்னல்

கப்பல் அழிந்துவிட்டது என்பது கவலையாக இருக்கிறது. ஆனால் இவ்வளவு எண்ணிக்கையான கப்பல்களை புலிகள் வைத்திருக்கிறார்கள் என்பது சந்தோசமாக இருக்கிறது.

தாக்கப்பட்டது யாருடைய கப்பல் என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. அருண்டவன் கண்ணுக்கு இருண்டதேல்லாம் பேய் என்னும் வகையில் கடலில் போய் வரும் கப்பலையோ வள்ளத்தையோ தகர்த்துவிட்டு வி.பு கப்பல் என்று கப்பசா விட்டுக் கொண்டிருக்கின்றார்கள். தாக்குதல் நடந்தால் பாரிய சத்தத்துடன் வெடித்தச் சிதறும் தானே. கடல் நடுவில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது என்பதே சந்தேகமே. இனி பிளேனில் இருந்து கமராவால் படமெல்லாம் எடுத்து பிலிம்; காட்டுவார்கள். கப்பல் கவுண்டு போச்சு என்று தலையில கைவைச்சுக் கொண்டு நிக்காமல் ஆகவேண்டிய காரியத்தைக் கவனிப்போம்.

ஈழத்திலிருந்து

ஜானா

என்ன மின்னல் இப்பவும் வேவு பயிற்சி மட்டுமல்ல சர்வதேசத்தின் அவதானிப்பையும் கவனித்து தான் புலிகளின் தாக்குதல் இருக்குமே தவிர எடுத்த எடுப்பில் தாக்குதல் நடத்தமாட்டார்பகள்

என்ன கிளைமோறா அல்லது கிரனைட்டா எடுத்த எடுப்பில் எறியிறதுக்கு

அது சரி நாம் அக்கினி அருந்ததி பார்க்க இங்க கதை எல்லாம் முடிஞ்சுடுமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி நாம் அக்கினி அருந்ததி பார்க்க இங்க கதை எல்லாம் முடிஞ்சுடுமே.

ஏன் இங்க என்ன கலியானமே நடக்குது? :angry: நடப்பது போர் எடுத்தோம் கவிழ்த்தோம் என்றால் நட்டம் எங்களுக்குதான். அதைத்தான நீர் விரும்பிறீர்? :angry: :angry: :angry:

கப்பல் அழிந்துவிட்டது என்பது கவலையாக இருக்கிறது. ஆனால் இவ்வளவு எண்ணிக்கையான கப்பல்களை புலிகள் வைத்திருக்கிறார்கள் என்பது சந்தோசமாக இருக்கிறது.

உண்மைதான் நன்பா 25 லட்சம் கடற்படையை கொண்டுள்ள அமெரிக்கா கூட

கடற்படையை விட அதிகமாக கப்பலோ இல்லை போட்டோ வைத்து இருந்தது இல்லை ஆனால் இலங்கை அரசின் கனக்குபடி புலிகள் தான் உலகிலேயே அதிகமான கடற்கலன்கள் வைத்துருக்கும் அமைப்பு.......

சர்வதேச அவதானிப்பைப் பற்றி இனி புலிகள் கவனிப்பார்கள் எண்டு நினைக்கவில்லை. அதற்குரிய காலம் கடந்து விட்டது.

...........................

பகிடி என்னவென்றால் வெடித்துச் சிதறிய கப்பலில் இருந்து 130, 152 மிமி ஆட்டிலறி எறிகணைகளை கடற்படையினர் மீட்டுள்ளனராம்.

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறவுகள்

அழிக்கப்பட்டது என்னவோ கப்பலாம். அதுவும் புலிகளுக்கு ஆட்லறி செல் கொண்டு வந்த கப்பலாம். ஆட்லறி செல் கொண்டு வந்த கப்பலை அழிச்சதால எனி அமெரிக்கத் தூதர் உட்பட வெளிநாட்டவர்கள் புலிகளின்ர அனுமதி பெறாமலே மட்டக்களப்புக்கு பயமில்லாமல் போகலாமாம். கிழக்கில வேற குண்டு போட்டிருக்கினமாம். காரணம் புலிகளுக்கு ஆட்லறி செல் கொண்டு வந்ததை அவதானிச்சதால. அதுபோக திருமலைத் துறைமுகத்துக்க புக முனைந்த புலிப்படகுகள் அழிப்பாம். 15 பேர் பலியாம். தங்கள் தரப்பில் எப்பவும் போல 2 பேருக்கு சிராய்ப்பாம்.

Defence spokesman Brigadier Prasad Samarasinghe told the BBC News website that 14 rebel boats coming from Mullaitivu had been detected trying to enter the port at Trincomalee.

Two rebel boats were destroyed and another four damaged in the fighting that followed, he said. Two navy personnel were injured.

In the other sea clash, the navy said it detected what it called a suspicious ship in the deep sea around 180 nautical miles south of the island on Wednesday morning.

After a challenge and warning shots, the navy patrol fired on the 70-metre-long vessel, setting it ablaze.

Navy spokesman DKP Dassanayake said there were several explosions on board as it burned - and he believed the ship was carrying artillery shells for the rebels.

In another incident, Sri Lanka's air force attacked a rebel base in an eastern jungle, Brig Samarasinghe said. There was no information on whether there were any casualties.

"The rebels were bringing in mortars and arms to this base," he said. -bbc.com

ஆக நேற்றைய ஆட்லறி அடி.. உறைச்சுக் கொண்டிருக்குது இன்னும். உலகமும் நீங்க அடிச்சு புலியைப் பலவீனப்படுத்துங்க என்று போட்டு போர்நிறுத்தம் கண்காணிக்குது. :P :blink::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அழிக்கப்பட்டது என்னவோ கப்பலாம். அதுவும் புலிகளுக்கு ஆட்லறி செல் கொண்டு வந்த கப்பலாம். ஆட்லறி செல் கொண்டு வந்த கப்பலை அழிச்சதால எனி அமெரிக்கத் தூதர் உட்பட வெளிநாட்டவர்கள் புலிகளின்ர அனுமதி பெறாமலே மட்டக்களப்புக்கு பயமில்லாமல் போகலாமாம். கிழக்கில வேற குண்டு போட்டிருக்கினமாம். காரணம் புலிகளுக்கு ஆட்லறி செல் கொண்டு வந்ததை அவதானிச்சதால. அதுபோக திருமலைத் துறைமுகத்துக்க புக முனைந்த புலிப்படகுகள் அழிப்பாம். 15 பேர் பலியாம். தங்கள் தரப்பில் எப்பவும் போல 2 பேருக்கு சிராய்ப்பாம்

சிங்களவன் எழுதுறது குறள் மாதிரியும்..

நம் தமிழர் சிலர் எழுதுறது பொழிப்புரை மாதிரியும் இருக்கு..

ஏன் இவ்வளவு தெளிவு நமக்கு..குழப்பமே இல்லாம :blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்கள் சொல்வதை பார்தாள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிர்குள்தான் இந்துசமுத்திரபிரந்தியம்ஃஅத

சிங்களவன் எழுதுறது குறள் மாதிரியும்..

நம் தமிழர் சிலர் எழுதுறது பொழிப்புரை மாதிரியும் இருக்கு..

ஏன் இவ்வளவு தெளிவு நமக்கு..குழப்பமே இல்லாம :blink:

:icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

நிறைகுடம் தழும்பாது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாத்தறை கடற்பரப்பில் சந்தேகக் கப்பல் தாக்கியழிப்பு: சிறிலங்கா அரசு

[புதன்கிழமை, 28 பெப்ரவரி 2007, 17:54 ஈழம்] [க.திருக்குமார்]

சிறிலங்காவின் தெற்கு கடற்கரையான மாத்தறைப் பகுதியில் இருந்து 230 கடல்மைல் தொலைவில் சந்தேகத்திற்கு இடமான கப்பலை கடற்படையினர் தாக்கியழித்துள்ளதாக கொழும்பில் உள்ள சிறிலங்காவின் படைத்தரப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று புதன்கிழமை காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் படைத்தரப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:

அனைத்துலக கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான கப்பலை நிறுத்தும்படி எச்சரிக்கை வேட்டுக்கள் தீர்க்கப்பட்ட போதும் அது நிறுத்தப்படாது சென்றதனால், கடற்படையினர் அதன் மேல் தாக்குதலை தொடுத்தனர். கப்பல் தீப்பற்றியதுடன் வெடித்து மூழ்கியுள்ளது.

அழிக்கப்பட்ட கப்பல் தொடர்பான விபரங்கள் தெரியவில்லை. சிறிலங்காவில் இருந்து சென்று கொண்டிருந்த இக்கப்பல் விடுதலைப் புலிகளுடையதாக இருக்காலம் என சந்தேகிப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமோடர் டி.கே.பி.தசநாயக்க தெரிவித்துள்ளதாவது:

70-75 (220 அடி) மீற்றர் நீளமான இக்கப்பலானது கடற்படையினரின் தாக்குதலில் தீப்பற்றி எரிந்தது மூழ்கிவிட்டது. எனினும் அதன் பின்னர் 120 மி.மீ - 152 மி.மீ ஆட்டிலறிகளுக்கு பயன்படுத்தப்படும் 10,000 எறிகணைகளை நாம் கடலில் கண்டுள்ளோம். இறந்தவர்களின் உடல்களை நாம் காணவில்லை. அவை எரிந்திருக்கலாம் அல்லது எல்லாம் மூழ்கிவிட்டன என்றார்.

வெடித்துச்சிதறிய கப்பலில் இருந்த ஆட்டிலெறி எறிகணைகள் சேதமடையாது கடலில் மிதப்பதும், சிறிலங்காவை விட்டுச் சென்ற கப்பலில் எறிகணைகள் ஏற்றிச் செல்லப்பட்டதும். சிறிலங்கா படையினரின் கூற்றுக்களில் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியிருப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

http://www.eelampage.com/?cn=30929

10,000 ஆட்டிலறிகளை இருந்து எண்ணினவையாமோ? மடையங்கள்.

சரி ஒரு பேச்சுக்கு புலிகளின் கப்பல் என்று வைத்தால் அது ஏன் ஆட்டிலறிகளை தமிழீழத்தில் இருந்து வெளியே கொண்டு போகுது. இவை தாக்கியவையாம் கப்பல் உடன் சிதறியதாம்! ஆனால் 10,000 செல்லுகள் கடலில் மிதந்தனவாம் அதை கொமடோர் ஒன்றுவிடாமல் எண்ணி சிங்களப் பத்திரிகைகளுக்கு அலுப்பையும் பாராது உடன் சொன்னாராம்.

சரி விடுங்கோ இன்று சக்தி தொலைக்காட்சியில் காமெடி ரைம் பார்க்கல்ல ஆனால் இணையத்தில பார்த்தச்சு.

மாங்காய் மடையங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

10,000 ஆட்டிலறிகளை இருந்து எண்ணினவையாமோ? மடையங்கள்.

மாங்காய் மடையங்கள்.

<<<<<<<<<<<<<,,

மோட்டுச் சிங்களவங்கள் மோட்டுச் சிங்களவங்கள் என்று சொல்லிறதை மீண்டும் மீண்டும் நிரூபிச்சுக்கொண்டே இருக்கிறாங்களப்பா!!...

  • கருத்துக்கள உறவுகள்

'' மாத்தறை கடற்பரப்பில் வெடி பொருட்களுடன் கப்பலொன்று கடற்படையினரால் தாக்கியழிக்கப்பட்டது. "

ஆகா என்ன செய்தி; மாத்தறை கடலில் 10,000 பனங்கொட்டைகள். இது விடுதலைப்புலிகளினதாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். இந்திய வானொலி

கால நிலை சொல்லுகிற மாதிரி இருக்கல்லவா?

ஜயா டி.கே.பி. தஸ்நாயக்க என்னும் என்னவெல்லாம் சொல்ல போகிறீங்களோ?

நண்றி

வல்வை மைந்தன்

'' நம்புங்கள் தமிழீழம் கிடைக்கும் நாங்கள் மனம் வைத்தால் "

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.