Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதன்முறையாக யாழ் மண்ணில் உருவாகும் பிரம்மாண்டமான நெடுந்தொடர்!

Featured Replies

முதன்முறையாக யாழ் மண்ணில் உருவாகும் பிரம்மாண்டமான நெடுந்தொடர்!

597ee610d6a81-IBCTAMIL.jpg
 
597ee6110f8b9-IBCTAMIL.jpg
597ee610b4101-IBCTAMIL.jpg
 
597ee6113c7e4-IBCTAMIL.jpg

யாழ் மண்ணில் முதன் முறையாக IBC தமிழ் தயாரிப்பில் மர்மக்குழல் நெடுந்தொடர் தயாரிக்கப்பட்டு அதன் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றன.

அண்மையில் மர்மக்குழல் நெடுந்தொடர் நாடகத்தின் டீசர் மற்றும் ப்ரோமோ வெளியிடப்பட்டு அனைவரினதும் அமோக ஆதரவினைப் பெற்றது மட்டுமல்லாமல், மர்மக்குழல் நெடுந்தொடருக்கான அனைவரின் எதிர்பார்ப்புக்களையும் அதிகப்படுத்தியிருக்கின்றது.

இந்நிலையில் மர்மக்குழல் நெடுந்தொடருக்கான ஆரம்பப் பாடலின் காட்சிகள் வடமராட்சியின் வல்வை மற்றும் கைதடியின் திறந்த வெளியில் மிகப் பிரமாண்டனான முறையில் செட் அமைத்து காட்சிகள் பதிவுசெய்யப்பட்டன.

யாழ் மண்ணில் மட்டுமன்றி தாயகத்திலும் இதுவரையிலும் இல்லாத  பிரம்மாண்ட செட் அமைப்புடன் இப்பாடல் தயாரிக்கப்படுகின்றது.

மர்மக்குழல் நெடுந்தொடரின் ஆரம்பப் பாடலை திருமதி. பகீரதி கணேஷதுரை எழுதியிருந்ததோடு, பாடலுக்கான இசையினை தீபன் கணேஷ் வழங்கியிருகின்றார். அபயன் கணேஷ் மர்மக்குழல் நெடுந்தொடரினை இயக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/For-the-first-time-in-the-Jaffna-soil-mega-serial

Edited by நவீனன்

  • 1 month later...
  • Replies 109
  • Views 9.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வெளியாகியது மர்மக்குழல் நெடுந்தொடர்; ஈழத்திரைத்துறையில் ஓர் புதுப்புரட்சி!

ஈழத்தின் சின்னத்திரை வரலாற்றில் புதியதொரு புரட்சியாக ஐபிசி தமிழின் பிரமாண்டமான தயாரிப்பில் ஈழத்துக் கலைஞர்களின் மண்வாசம் மிக்க படைப்பாக ’மர்மக் குழல்’ எனும் தொலைக்காட்சி நெடுந்தொடர் ஏற்கனவே அறிவித்திருந்தபடி சற்று முன்னர் வெளியாகியுள்ளது.

உலகத் தமிழர்க்கோர் உறவுப் பாலமாக விளங்கும் ’அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்’ (IBCதமிழ்) ஊடகத்தின் யாழ்ப்பாண அலுவலகத்திலேயே இந்த வெளியீட்டுவிழா நடைபெற்றுள்ளது.

வெளியாகியது மர்மக்குழல் நெடுந்தொடர்; ஈழத்திரைத்துறையில் ஓர் புதுப்புரட்சி!

முற்றிலும் ஈழத்துக் கதை, ஈழத்துக் களம், ஈழத்துக் காட்சி, ஈழத்து கலைஞர்கள், ஈழத்துத் தொழிநுட்பம் என எங்கள் மண்ணின் வாசனைகளைச் சுமந்த மர்மங்களும் திகில்களும் நிறைந்த படைப்பாக மர்மக்குழல் நெடுந்தொடர் வெளிவந்துள்ளது.

கடந்த காலத்தில் நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலைகளால் ஈழத்தின் தமிழ்ச் சினிமா எழுபதுகளோடு அஸ்தமனமானது. மண் வாசனை மிக்க படைப்புக்களாக வெளிவந்த செங்கை ஆழியானின் ’வாடைக்காற்று’, தர்மசேனா பத்திராஜாவின் ‘பொன்மணி’, V.S மஹேந்திரனின் குத்துவிளக்கு போன்ற திரைப்படங்கள் ஈழத் திரைப்படங்களுக்கோர் சிறப்பான எடுத்துக்காட்டுகளாகும்.

வெளியாகியது மர்மக்குழல் நெடுந்தொடர்; ஈழத்திரைத்துறையில் ஓர் புதுப்புரட்சி!

அதன் பின்னர் போர்க்காலங்களிலும் போருக்குப் பின்னரான காலத்திலும் ஈழத் திரைப் படைப்புக்கள் என்பது முற்றுமுழுதான மண்வாசனையினையும் ஜனரஞ்சகமிக்க கதையமைப்பினையும் சுமந்து வரவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் நிலவிவருகின்றன. பல குறுந்திரைப்படங்கள் வெளிவந்துள்ளபோதும் அவைகூட ஈழ மண்ணின் முற்றுமுழுதான வேரோட்டங்களைத் தாங்கியனவாக அமையவில்லை என்ற அதிருப்தி நிலையும் காணப்படுகின்றது.

போர்க்காலத்தில் விடுதலைப் போர் பற்றிய பதிவுகளையும் குமுகாய வெளிப்பாடுகளையும் மக்களின் நிதர்சன அவலங்களையும் தாங்கிய பல்வேறு குறுந்திரைப்படங்களும் முழு நீளத் திரைப்படங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் வெளியிடப்பட்டிருந்தன. அவை ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட படைப்புக்களாக விளங்கினாலும், பனைமர ஓலைக்காலின் தடயங்களைப் போல, ஈழத்தின் ஒரு காலக்கோடுகளாகவே விளங்குகின்றன.

இதனிடையே, கடந்துபோன கால நீட்சியின் அடுத்த அத்தியாயமாகவும் புதியதோர் புரட்சியாகவும் வெளிவர இருப்பதே ஈழத்துக் கலைஞர்களின் மர்மக்குழல் நெடுந்தொடர். இதன் வருகையானது ஈழத்துச் சினிமாவின் மறுமலர்ச்சிக்கான ஆக்கமும் ஊக்கமும் மிக்க ஒன்றாக விளங்கும் என்பதை நாளைய தடயங்கள் கண்டிப்பாக எடுத்துரைக்கும் என நம்புகின்றோம்.

அதன்படி இன்றைய நாள் ஈழத்துத் திரைத்துறை வரலாற்றில் ஓர் புதிய அத்தியாயமாக இந்த மர்மக்குழல் படைப்பினை எம் மக்களுக்கு சமர்ப்பிக்கின்றோம். இந்த பிரமாண்டமான நெடுந்தொடரினை ஐபிசி தமிழ் தொலைக்காட்சியில் இலண்டன் நேரம் மாலை ஆறு மணியளவில் உலகெங்கும் பரந்து வாழ்கின்ற அனைத்து தமிழ் நெஞ்சங்களும் பார்வையிட முடியும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்!

மேலும் முதன்முதலாக தாயகத்திலிருந்து வெளிவரும் எமது படைப்புக்கு எமதருமை மக்களின் கனிவான நல்லாதரவினை வேண்டி நிற்கின்றோம்!

வெளியாகியது மர்மக்குழல் நெடுந்தொடர்; ஈழத்திரைத்துறையில் ஓர் புதுப்புரட்சி!

வெளியாகியது மர்மக்குழல் நெடுந்தொடர்; ஈழத்திரைத்துறையில் ஓர் புதுப்புரட்சி!

https://news.ibctamil.com/ta/internal-affairs/marmakuzhal-released-in-jaffna

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி...!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நவீனன் said:

கடந்த காலத்தில் நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலைகளால் ஈழத்தின் தமிழ்ச் சினிமா எழுபதுகளோடு அஸ்தமனமானது. மண் வாசனை மிக்க படைப்புக்களாக வெளிவந்த செங்கை ஆழியானின் ’வாடைக்காற்று’, தர்மசேனா பத்திராஜாவின் ‘பொன்மணி’, V.S மஹேந்திரனின் குத்துவிளக்கு போன்ற திரைப்படங்கள் ஈழத் திரைப்படங்களுக்கோர் சிறப்பான எடுத்துக்காட்டுகளாகும்.

1990 களின் ஆரம்பத்தில்.. ஈழத்துத் திரைகளில் ஓடிய முழு நீள.. தமிழீழத் திரைக்காவியங்கள்.. ஐபிசி ஆக்களுக்கும்.. மறந்து போட்டுது போல. 

அதுமட்டுமன்றி பல குறும்படங்களும் அக்காலத்தில் வெளியாகி இருந்தன.

சிங்கள அரசின் பல பொருண்மிய தடைகள் மத்தியிலும் ஈழத்தமிழ் மக்களை மகிழ்வூட்ட வந்த அந்தப் படங்கள் மறக்கப்படுவது.. மறைக்கப்படுவது வரலாற்றுத் துரோகமாகும். :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nedukkalapoovan said:

உன்மைதான் 

இப்ப எல்லோரும் படம் எடுக்க வெளிக்கிட்டினும் இருந்தாலும் கிசி கிசு வராமல் இருந்தால் சரிப்பா 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

உன்மைதான் 

இப்ப எல்லோரும் படம் எடுக்க வெளிக்கிட்டினும் இருந்தாலும் கிசி கிசு வராமல் இருந்தால் சரிப்பா 

இதை நான் மென்மையாக மறுக்கிறேன் த.கா.ராஜா...., திரைப்படம் என்றால் கூடவே கிசுகிசுவும் பூவும் நாரும்போல் வரத்தான் செய்யும். கிசு கிசு அத் திரைப்படத்துக்கு ஒரு மறைமுகமான விளம்பரமும்கூட ....அதனால் சம்பந்தப் பட்டவர்களே அதை ஆங்காங்கே தூவி விடுவார்கள்.  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

 இந்திய சினிமாக்கு துவினால் வியாபாரம் பணம் சம்பாத்தியம் ஈழத்து சினிமாக்கு தூவினால் கொஞ்சம் நாறித்தான் போகுமென நினைக்கிறம் எங்க சனம்  கண்ணு காது மூக்கு பல்லு எல்லாம் வச்சி கதையை கட்டிடும் அதுக்குத்தான் சொல்ல வந்தேன் ஏற்கனவே ஒரு கிசி கிசு வந்து  நாரவைத்து போனதுதான் மிச்சம் அண்ண :10_wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, suvy said:

இதை நான் மென்மையாக மறுக்கிறேன் த.கா.ராஜா...., திரைப்படம் என்றால் கூடவே கிசுகிசுவும் பூவும் நாரும்போல் வரத்தான் செய்யும். கிசு கிசு அத் திரைப்படத்துக்கு ஒரு மறைமுகமான விளம்பரமும்கூட ....அதனால் சம்பந்தப் பட்டவர்களே அதை ஆங்காங்கே தூவி விடுவார்கள்.  tw_blush:

ஐயனே! :(

அந்த தம்பி எவ்வளவு கஸ்ரப்பட்டு "தனிக்காட்டு ராஜா" எண்டு பேரை மாத்தி வைச்சிருக்கு...இதற்குள் நீங்கள்  த.கா.ராஜா என்று சுருக்கினால் அந்த இளம் மனது வேதனைப்படாதா? இல்லை நியாயமா? tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

ஐயனே! :(

அந்த தம்பி எவ்வளவு கஸ்ரப்பட்டு "தனிக்காட்டு ராஜா" எண்டு பேரை மாத்தி வைச்சிருக்கு...இதற்குள் நீங்கள்  த.கா.ராஜா என்று சுருக்கினால் அந்த இளம் மனது வேதனைப்படாதா? இல்லை நியாயமா? tw_blush:

இல்லை கு.சா.....! பெயர் கொஞ்சம் பெரிசாய் இருக்கு. சும்மா காட்டு ராஜா என்டு சொன்னால் அவர் யோசிக்கத் தொடங்கிடுவார், இவர் இப்ப எதைக் காட்டச் சொல்லுறார் ..... அறிவையா ,புலமையையா அதெல்லாம் இருந்தால் நான் காட்டிட மாட்டேனா என்று குழம்பிடுவார். அதுதான் தா.கா.ராஜா....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் அவர் தில்லான காட்டு ராஜா என்று பெயரை வைக்கில்லை.:unsure:

  • தொடங்கியவர்

மர்மக்குழல் நெடுந்தொடர் முதல் நாள்;

  • தொடங்கியவர்

மர்மக்குழல் நெடுந்தொடர் பாகம் - 2

  • தொடங்கியவர்

மர்மக்குழல் நெடுந்தொடர் மூன்றாம் நாள்

  • தொடங்கியவர்

மர்மக்குழல் நெடுந்தொடர் நான்காம் நாள்

  • தொடங்கியவர்

மர்மக்குழல் நெடுந்தொடர் ஐந்தாம் நாள்

  • தொடங்கியவர்

மர்மக்குழல் நெடுந்தொடர் Episode 6

  • தொடங்கியவர்

Episode 7 மர்மக்குழல் நெடுந்தொடர்

  • தொடங்கியவர்

Episode 7 மர்மக்குழல் நெடுந்தொடர்

| Episode 8 மர்மக்குழல் நெடுந்தொடர்

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

Episode 9 மர்மக்குழல் நெடுந்தொடர்

  • தொடங்கியவர்

10 மர்மக்குழல் நெடுந்தொடர்

11 மர்மக்குழல் நெடுந்தொடர்

  • தொடங்கியவர்

12 மர்மக்குழல் நெடுந்தொடர்

13 மர்மக்குழல் நெடுந்தொடர்

  • தொடங்கியவர்

14 மர்மக்குழல் நெடுந்தொடர்

15 மர்மக்குழல் நெடுந்தொடர்

  • தொடங்கியவர்

16 மர்மக்குழல் நெடுந்தொடர்

17 மர்மக்குழல் நெடுந்தொடர்

  • தொடங்கியவர்

18 மர்மக்குழல் நெடுந்தொடர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.