Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுபிள்ளைகள் பிரபாகரன் ,காந்தி போன்று வர ஆசைப்படமாட்டார்கள். – சி.வி

Featured Replies

சிறுபிள்ளைகள் பிரபாகரன் ,காந்தி போன்று வர ஆசைப்படமாட்டார்கள். – சி.வி

vikki-1.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிறுபிள்ளைகளிடம் யாரை போல வர வேண்டும் என கேட்டால், காந்தி என்றோ பிரபாகரன் என்றோ அவர்கள் கூறமாட்டார்கள். தன்னுடைய அண்ணன் மாதிரி அக்கா மாதிரி என்றுதான் கூறுவார்கள். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முதல் தமிழ் பெண் விமானியான அர்ச்சனா செல்லத்துரை பாடிய மறத்தி இறுவட்டு வெளியீடும், கௌரவிப்பு விழாவும்  யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

அந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

வாழ்க்கையில் எமக்கென்று ஒரு குறிக்கோள் இருக்கவேண்டும். அதனை அடைவதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எமது குறுகிய கால குறிக்கோளை அடைந்துவிட்டால் போதுமென்று ஓய்ந்துவிடாது அந் நிலையில் இருந்து அடுத்தபடியை நோக்கி முன்னேற முயற்சிக்க வேண்டும். இவ்வாறான தொடர் முயற்சிகள் பல வெற்றிகளை எமக்கு அளிக்கும்.

யாரைப்போல வர ஆசைப்படுகின்றீர்கள் என்று நான் சிறுபிள்ளைகளிடம் கேட்பதுண்டு. காந்தி என்றோ பிரபாகரன் என்றோ அவர்கள் கூறமாட்டார்கள். தன்னுடைய அண்ணன் மாதிரி அக்கா மாதிரி என்றுதான் கூறுவார்கள்.

க.பொ.த சாதாரண தரத்தில் கூட முறையாக தேர்ச்சி அடையாத பலர் அரச வேலைகளைத் தேடிவருகின்றார்கள். கல்வியின் முக்கியத்துவம் அவர்களால் உணரப்படுவதில்லை. எவ்வழியிலாவது பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணந்தான் அவர்களுக்கிடையே மேலோங்கியிருப்பதை நான் காண்கின்றேன்.

வாழ்க்கையில் இலக்கற்று வாழ்கின்றார்கள். அவர்கள் கூட முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை. எமது பெண்கள் பல தொழில்களில் தம்மை ஈடுபடுத்த முன்வரவேண்டும். தாதியர் தொழில், காவல்த்துறை, உணவகத்துறை, சுற்றுலாத்துறை  போன்றவற்றில் தகுதி பொருந்திய பெண்களுக்கு இப்பொழுதும் வெற்றிடங்கள் பல உண்டு  என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/35814

  • தொடங்கியவர்

பிரபாகரன் போல் வரவேண்டுமென சிறு பிள்ளைகள் சொல்லமாட்டார்

யாழ். நகரில் நின்று இப்படிச் சொன்னார் விக்கி

 
பிரபாகரன் போல் வரவேண்டுமென சிறு பிள்ளைகள் சொல்லமாட்டார்
 

சிறு­பிள்­ளை­கள் பிர­பா­க­ரன் போன்று வரு­வ­தற்கு ஆசைப்­ப­டுவ தாகச் சொல்­ல­மாட்­டார் கள் என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­ சர் சி.வி.விக்­னேஸ்வ ­ரன் மீண்­டும் சர்ச்சை க்­கு­ரி­ய­வாறு பேசி­யுள்­ளார்.

முதல் தமிழ் பெண் விமானி அர்ச்­சனா செல்­லத்­துரை பாடிய ‘மறத்தி’ இறு­வட்டு வெளி­ யீடும் அவரை மதிப்­பு­றுத்­தும் நிகழ்­வும், வீர­சிங்­கம் மண்­ட­பத்­தில் நேற்று மாலை இடம்­பெற்­றன. இதில் கலந்து கொண்டு அதிதி உரை­யாற்­றி­னார் விக்­னேஸ் வரன். அதில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

யாரைப்­போல வர ஆசைப்­ப­டு­கின்­றீர்­கள் என்று நான் சிறு பிள்­ளை­க­ளி­டம் கேட்­ப­துண்டு. காந்தி என்றோ பிர­பா­க­ரன் என்றோ அவர்­கள் கூறமாட்­டார்­ கள். தன்­னு­டைய அண்­ ணன் மாதிரி அக்கா மாதிரி என்­று­தான் கூறு­வார்­கள். ஆகவே உங்­கள் ரோல் மொட­லாக ஓர் அக்கா கிடைத்­துள்­ ◌ளார் என்று அர்ச்­சனா செல்­லத்­து­ரையை சுட்­டிக்­காட்­டி­னார்.

அர்ச்­சனா செல்­லத்­துரை ­யின் பெற்­றோர் வல்­வெட்­ டித்­து­றை­யைச் சேர்ந்­த­வர்­கள். அதனை குறிப்­பிட்டு, ‘‘அவ­ரில் (அர்ச்­சனா செல்­லத்­துரை) வல்­வெட்­டித்­துறை மக்­க­ளின் வேகத்தை நான் காண்­கின்­றேன். இவ­ரைப் போலத்­தான் ஆழிக்­கு­ம­ரன் ஆனந்­த­னின் வாழ்க்­கை­யும் இருந்­தது அல்­லது அவர் போல்த்­தான் இவர் இருக்­கின்­றார். செயற்­க­ரி­ய­தைச் செய்­து­காட்ட வேண்­டும் என்ற மனோ­பா­வம் வல்­வெட்­டித்­துறை மக்­க­ளின் ஒரு சிறப்­பம்­சம். அவர்­க­ளுள் ஒரு அக்­னி­என்­னே­ர­மும் சுவா­லை­விட்டு ஒளிர்ந்து கொண்­டி­ருக்­கும்’’ – என்­றார்.

வடக்கு மாகா­ண­ச­பைத் தேர்­த­லின் போது, வல்­வெட்­டித்­து­றை­யில் நடந்த பரப்­பு­ரைக் கூட்­டத்­தில் ‘பிர­பா­க­ரன் மாவீ­ரன்’ என்று கூறி­யி­ருந்­தார். முத­ல­மைச்­ச­ரா­கத் தேர்வு செய்­யப்­பட்ட பின்­னர் சாவ­கச்­சே­ரி­யில் நடந்த தொழி­லா­ளர் தினக் கூட்­டத்­தில் பிர­பா­க­ரனை சர்­வ­தி­காரி என்று விழித்­துக் கூறி சர்­சைக்­குள் சிக்­கி­யி­ருந்­தார்.

http://newuthayan.com/story/17368.html

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் ஒரு விடுதலை வீரன். சேகுவரா ஒரு விடுதலை வீரன்.. பிடல் காஸ்ரே.. ஒரு விடுதலை வீரன்.. இவர்கள் போல வர ஒரு சிலரே தான் இந்த உலகில் துணிச்சல் கொண்டுள்ளனர். காரணம்.. வீரம் என்பது எல்லாருக்கும் உரித்தாக அமைய மாட்டாது. அதற்கு அசாத்திய மன உறுதியும் சாவினில் வாழ்வு என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும்.. கொள்கையில் உறுதியும் மிக அவசியம். 

வீரமும் - சண்டித்தனமும் ஒன்றல்ல. வீரம் என்பது தன்னையும் தான் சார்ந்தோரையும் பாதுகாப்பது.. உரிமைகளோடு வாழ வைப்பது.

சண்டித்தனம் என்பது தனக்காக மற்றவர்களை துன்புறுத்துவது... பயமுறுத்தி அடிமையாக்கி வைப்பது.

ஆனால்.. கோழையும்.. விமானி ஆகலாம். அது ஒன்றும் பெரிய அலுவல் இல்லை. எத்தனையோ மில்லியன் பேர் விமானி ஆகி இருக்கினம் உலகில். tw_blush::rolleyes:

சிவி பெரிய நீதிபதியாக இருந்தாலும் அவரிடம் சில சில்லறைத்தனமான சிந்தனைகளும் இருக்கின்றன.. என்பதை அவதானித்திருக்கிறேன். அப்படி சிந்திப்பது.. அவரின் உரிமை. அதனை நாளை திருத்திக் கொள்ள அவருக்கு வழிகாட்டுதல்களாக மக்கள் இருக்க வேண்டும். வழமையா தலைவர்கள் வழிகாட்டுவார்கள்.. மக்களுக்கு.. ஆனால்.. தேசிய தலைவரின் நிஜம் நிழலாகி நிற்கின்ற இந்த வேளையில்.. மக்கள் தான் தற்போதைய தலைவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய நிலை. tw_blush:

ஆனால்.. தேசிய தலைவரை காந்திக்கு நிகராக வைச்சதிலும் ஒரு சறுக்கல் இருக்குது.. காந்தி சரியான பேடி. ஆனால் இருவரும் தேச விடுதலை என்ற இலட்சியத்துக்காக போராடினார்கள் என்பதாகி இருந்தால் நன்று. :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணெய் இருக்கும்மட்டும் இந்த அடைகோழிகள் அடங்கியே கிடந்தன இப்போது தங்கள் நிலை மறந்து பிள்ளைகள்  கார் லைசென்ஸ் எடுத்தாலும் கொக்கரித்து சொல்கின்றன அதைகேட்டு சகித்து போகவேண்டிய துர்பாக்கிய நிலையில் நாங்கள்.

சேகுவோரா பிறந்த ஊரில் ஏன் இன்னுமொரு சேகுவோரா பிறக்கவில்லை நெடுக்கு சொல்லியது போல் பிரபாகரன் வீரன் உலகில் ஒருசிலரே அவ்வாறு இருக்க முடியும். அவர் இருந்த காலத்தில்  ஒரு சில டமார கூட்டம்களை ஒதுக்கியே வைத்து இருந்தார் அவருக்கு தெரியும் அவர்கள் குழப்பகரமான எண்ணம்களை விதைத்து விடுவார்கள் என்று.

 அதனால்தான் எந்த சிறு குழப்பமும் வரக்கூடாது என்று கடைசி வரை முன்கூட்டியே  எழுதி வைத்தே அவரின் பேச்சுக்கள் அமைந்தன.

 

அந்த குழப்பம் மிகுந்த ஆட்களின் மேடை நிகழ்ச்சியின்போது போன cvயருக்கு பெரும் குழப்பம் ஏற்படுவது இயல்பே.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

இப்போது தங்கள் நிலை மறந்து பிள்ளைகள்  கார் லைசென்ஸ் எடுத்தாலும் கொக்கரித்து சொல்கின்றன அதைகேட்டு சகித்து போகவேண்டிய துர்பாக்கிய நிலையில் நாங்கள்.

லண்டனில் பிள்ளை கார் லைசன்ஸ் எடுத்திட்டால்.. பார்ட்டியே கொடுக்கிறாங்கப்பா. எல்லாம் காலக் கொடுமை. வெள்ளை கூட அப்படியில்லை. tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

 

3 hours ago, நவீனன் said:

ஆகவே உங்­கள் ரோல் மொட­லாக ஓர் அக்கா கிடைத்­துள்­ ◌ளார் என்று அர்ச்­சனா செல்­லத்­து­ரையை சுட்­டிக்­காட்­டி­னார்.

என்னையா  நடக்குது  நம்க்கு எத்தனையோ தேவைகள் இருக்க ( வட கிழக்கு வாழ் தமிழர்கள் அனைவருக்கும் ) இது என்ன  வடகிழக்கில்  போரும் பிரச்சினையும் ஏற்படா வண்ணம் இருந்திருந்தால் இவரை போல எத்தனையோ  பிள்ளைகள் விண் வெளிக்கே போய் வந்திருக்கும்  அதை  விடுங்கோ காந்தி யாரு பிரபாகரன் யார் என்பதை வட மாகாண முதலமைச்சர் ருக்கு  கூட இன்னும்  விளங்கவில்லை என்பது தான் வேடிக்கை 

பிரபாகரன் . ஒரு போர் வீரன் அவரைபோல் யாருமே இனி வரவே இயலாது  அப்படி வந்தாலும் அவர் பிரபாகரன் இல்லை  மலை மலை தான் 

இந்த அக்காவா ரோல் மாடலா எடுத்து என்ன செய்வது    இங்குள்ளவர்கள் நல்ல பணம் இருந்திருந்தால்    பிளைன் என்ன கிபிர் கூட பெரட்டி பெரட்டி ஓட்டுவம்  இதுக்கு கூட நேரம் ஒதுக்குறார்கள் ஆனால் அல்லல்படும் மக்களூக்கு ?? மக்களே உஷாராகுங்கள் அழுதழுது பிள்ளை அவர்ள்கள்தான் பெற வேண்டும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.