Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய இராணுவத்திற்கு யாழில் அஞ்சலி: தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை கடும்கண்டனம்

Featured Replies

இந்திய இராணுவத்திற்கு யாழில் அஞ்சலி: தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை கடும்கண்டனம்

யாழ்ப்பாணம் கோப்பாய் தெற்குப் பகுதியில் அமைந்திருந்த இந்திய இராணுவ அதிகாரியுடைய சமாதிக் கல்லறையொன்றை 30வருடங்களின் பின்னர் மீண்டும் புனரமைப்பதற்கான நடவடிக்கை இரகசியமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந் நிலையில்இவ்வாறு அவசர அவசரமாக புனரமைக்கப்பட்ட குறித்த சமாதியில் இன்று யாழ்ப்பாணம் வந்திருந்த இந்திய இராணுவத்தினர் அஞ்சலி செலுத்தியுள்ளமையை தமிழ்த் தேசியப்பண்பாட்டுப் பேரவை வன்மையாக கண்டித்துள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினரும், தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான எஸ்.நிஷாந்தன் இன்று பிற்பகல் விடுத்துள்ள கண்டனச் செய்தியில்,

30 வருடங்களுக்கு முன்னர் அமைதிப்படை என்ற பெயரில் யாழ்ப்பாணம் வந்த இந்தியஇ ராணுவம் எமக்கு உதவி செய்வதாக கூறி பின்னர் அவர்கள் எம் மக்களையே படுகொலை செய்தனர்.

கிட்டத்தட்ட 25000 த்திற்கும் மேற்பட்ட எம் பொது மக்களை கண்மூடித்தனமாக படுகொலை செய்ததை எம் மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள்.

அதுமட்டுமின்றி இன்றுவரை 30 வருடங்கள் கடந்தும் அக்காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நடவடிக்கைகளை இந்திய அரசோ, இலங்கை அரசோ மேற்கொள்ளவில்லை.

மிக முக்கியமாக அந்த படுகொலைகள் தொடர்பான எந்த விதமான விசாரணைகளும் மனித உரிமை பேரவையிலோ ஐ.நா சபையிலோ இடம்பெறவில்லை என்பதே வலுவான உண்மையாக இருக்கின்றது.

இதன் பின்னர் கடந்த- 2009 ம் ஆண்டு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் இந்திய இராணுவம் நேரடியாக இலங்கை அரசுக்கு ஆதரவளித்தது மட்டுமின்றி களத்திலும் நின்று எமது அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்றதில் முக்கிய பங்கு வகித்தநிலையில் எவ்வாறு?

யாருடைய துணிவில் இங்கு இரகசியமாக வந்து அஞ்சலி செய்யமுடிந்தது?, இதன் பின்ணணி தான் என்ன?

மேலும், முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்காக மே- 17 இயக்கம் சென்னை மெரீனா கடற்கரையில் அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காக அமைப்பின் தலைவர் திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து இன்று வரை அடைத்து வைத்திருக்கும் நிலையில் எவ்வாறு இந்திய இராணுவத்தினர் மிக இரகசியமாக வந்து தங்களது உயிரிழந்த இராணுவத்தினருக்கு அஞ்சலி செய்தனர்?

இன்று நடந்த இந்த நிகழ்வையும், இதற்கு மறைமுகமாக உதவி செய்த யாழ் இந்தியத் தூதரகத்தையும் அக்காலப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில்தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/community/01/155759?ref=home-feed

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, போல் said:

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்காக மே- 17 இயக்கம் சென்னை மெரீனா கடற்கரையில் அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காக அமைப்பின் தலைவர் திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து இன்று வரை அடைத்து வைத்திருக்கும் நிலையில் எவ்வாறு இந்திய இராணுவத்தினர் மிக இரகசியமாக வந்து தங்களது உயிரிழந்த இராணுவத்தினருக்கு அஞ்சலி செய்தனர்?

இதிலை குந்தியிருக்கிறவையை கேட்டால் ஏதும் சொல்லுவினம்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 7 பேர், பலர் அமர்ந்துள்ளனர், மேஜை மற்றும் உட்புறம்

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 10 பேர், தாடி

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 13 பேர், பலர் அமர்ந்துள்ளனர்

  • கருத்துக்கள உறவுகள்

தக்க தருணத்தில் மிகவும் கனகச்சிதமாக முக்கியமாக ஹிந்தியாவிட்கும் மற்றும்  சிங்களத்திட்கும் கனவை கலைக்கும் விதத்தில் கொடுக்கப்பட்ட பதிலடியும் சவாலும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஒரு விடையத்தக் கவனிக்கத் தவறிவிட்டீர்கள் அனந்தி அவர்கள் இப்போது இந்திய உயர் இஸ்தானிகர் ஒழுங்குசெய்யும் எல்லா நிகழ்சிகளிலும் காணப்படுகிறார். கூடிய விரைவில் நல்ல இடத்துக்கு வருவார். 

தவிர யாழுக்கான இந்திய துணைத்தூதர்தான் யாழ்குடாவின் இந்திய மத்திய அரசின் அறிவிக்கப்படாத ஆளுனர்.

  • தொடங்கியவர்
On 8/20/2017 at 4:15 PM, Elugnajiru said:

இதில் ஒரு விடையத்தக் கவனிக்கத் தவறிவிட்டீர்கள் அனந்தி அவர்கள் இப்போது இந்திய உயர் இஸ்தானிகர் ஒழுங்குசெய்யும் எல்லா நிகழ்சிகளிலும் காணப்படுகிறார். கூடிய விரைவில் நல்ல இடத்துக்கு வருவார். 

தவிர யாழுக்கான இந்திய துணைத்தூதர்தான் யாழ்குடாவின் இந்திய மத்திய அரசின் அறிவிக்கப்படாத ஆளுனர்.

ஹிந்திய பயங்கரவாதிகள் அனந்தியை வளைத்துப்போட முனைவதில் ஆச்சரியம் இல்லை!

அனந்தி மிகவும் ஆபத்தானவர் என்பதை ஹிந்திய பயங்கரவாதிகள் அறிவர்.

முன்பு சம்பந்தர், சங்கரி, மாவை, சித்தார்த்தன், உமாமகேஸ்வரன், சுரேஷ், பத்மநாப, டக்ளஸ் போன்றவர்களை தமது கைக்கூலிகளாக ஹிந்திய பயங்கரவாதிகளால் மாற்றியது போல அனந்தியை மடக்க முடியாது என்பதை ஹிந்திய பயங்கரவாதிகள் அறிவர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் அனந்தி மிகவும் ஆபத்தானவர்  அணுஆயுதங்கள் உட்பட பல பயங்கர விளைவிகளை உண்டாக்கும் ஆயுதங்கள் வைத்திருக்கிறார். சும்மா போங்க போல், இந்திய அரசின் அகராதியில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு விலை இருக்கு.

  • தொடங்கியவர்
On 8/23/2017 at 1:51 PM, Elugnajiru said:

ஆம் அனந்தி மிகவும் ஆபத்தானவர்  அணுஆயுதங்கள் உட்பட பல பயங்கர விளைவிகளை உண்டாக்கும் ஆயுதங்கள் வைத்திருக்கிறார். சும்மா போங்க போல், இந்திய அரசின் அகராதியில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு விலை இருக்கு.

காலம்தான் பதில்சொல்ல வேண்டும்!
பொறுத்திருந்து பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் நிகழ்ச்சி நிரல் என்பது  வட கிழக்கே அதன் உன்மையை  அறிந்தவர்கள் இவர்களே உள் நோக்கம் இல்லாமலா இருக்கும்  போனதற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பம் ஒட்டு மொத்தமா போயிரிக்கினும் நல்ல ஒற்றுமை  தமிழன் படுற கஸ்ரத்திலெல்லாம் பங்கெடுக்காத ஒற்றுமை ஒன்று வந்துள்ளது இதில் அப்போதே யோசித்து இருக்க வேண்டும் யாருடைய மொம்மைகள் என்று .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.