Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெற்களஞ்சியசாலைகள் திறப்புவிழாவுக்கு முதலமைச்சரை அழைத்தால் நான் கலந்துகொள்ளமாட்டேன் – சிறிதரன்!

Featured Replies

hqdefault-4.jpg

இரணைமடுக்குள அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இபாட் நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட நெற்களஞ்சியசாலை திறப்புவிழாவுக்கு வடமாகாண விவசாய அமைச்சரான வடமாகாண முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கவில்லையென விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் விவசாய அமைச்சரை அழைத்தால் தான் கலந்துகொள்ளப் போவதில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார் எனவும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இரணைமடு அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் இபாட் நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட பன்னங்கண்டி, இராமநாதபுரம் நெற்களஞ்சியசாலைகள் இன்று திறந்துவைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கலந்துகொண்டு நெற்களஞ்சியசாலையைத் திறந்துவைத்தார். பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதிலும் அவர் கலந்துகொள்ளவில்லை.

கடந்த காலத்தில் இரணைமடுத் திட்டத்தின் கீழ் இடம்பெற்றுவந்த அனைத்து விவசாய நடவடிக்கைகளுக்கும் விவசாய அமைச்சரான வடமாகாண முதலமைச்சர் அழைக்கப்பட்டிருந்தார்.

குறித்த நெற்களஞ்சிய சாலைகள் திறப்பு விழாவுக்கும் முதலமைச்சரை அழைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றவேளை, முதலமைச்சர் குறித்த நிகழ்வுக்கு வருகை தந்தால் தான் இந்நிகழ்வில் கலந்துகொள்ளப் போவதில்லையென கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதன்காரணமாக வடமாகாண முதலமைச்சருக்கு தாம் அழைப்பு விடுக்கவில்லையென நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதுடன், இவ்வாறானவர்களின் அரசியல் தலையீடுகளால் பாதிக்கப்படப்வோது விவசாயிகளே எனக் கவலை வெளியிட்டுள்ளனர்.

http://thuliyam.com/?p=76789

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Athavan CH said:

என்னப்பா இது?????

ஊரிலை கலியாணவீட்டுக்கு பணியாரம் சுட கூப்பிடேக்கை வாற குடும்பபிரச்சனை மாதிரி கிடக்கு.

இது மக்கள் பிரச்சனையப்பா!

இதிலையே ஒற்றுமையை காணேல்லை.

விட்டுக்கொடுப்பை காணேல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

 முதலமைச்சரை தூற்றி தாம் நல்லவர் எனக் காட்ட ஒரு கூட்டம், முதலமைச்சரை ஏற்றி வைத்து அதில்  லாபம் காண ஒரு கூட்டம். தனது காலத்தில்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது செய்யத்துடிக்கும் முதலமைச்சரை வைத்து,  அவரை ஒரு முட்டாளாக்குகிறார்கள்   கையாலாகாதவர்கள். 

16 hours ago, Athavan CH said:

நெற்களஞ்சியசாலை திறப்புவிழாவுக்கு வடமாகாண விவசாய அமைச்சரான வடமாகாண முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கவில்லையென விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஸ்ரீதரன் தனது செல்வாக்கை வேகமாக இழந்து வருகிறார்!

ஸ்ரீதரன் எத்தனை காலம் தான் மக்களை ஏமாற்ற முடியும்?

சிறீதரன் முதலில் குடிநீர் விவகாரத்தில் பிரதேசவாத அரசியல் செய்தார்!

பின்னர் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த நண்பர்களை காப்பற்றும் விபச்சார அரசியல் செய்தார். அதற்கு முட்டுக்கட்டையாக இருந்த முதலமைச்சரை தனது எதிரியாக்கினார்.

பின்னர் பாகுபாட்டு அரசியல் செய்தார்.

இப்போது கீழ்த்தர அரசியலில் தொடர்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.