Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுட்டுக்கொன்ற மாணவனின் குடும்பத்துக்கு வீடு

Featured Replies

சுட்­டுக்­கொன்ற மாண­வ­னின் குடும்­பத்­துக்கு வீடு

அமைச்­சர் சுவா­மி­நா­தன் இன்று அடிக்­கல் நடு­வார்

 
சுட்­டுக்­கொன்ற  மாண­வ­னின் குடும்­பத்­துக்கு வீடு
 

பொலி­ஸா­ரின் துப்­பாக்­கிச் சூட்­டில் உயி­ரி ழந்த பல்­க­லைக் க­ழக மாண வ­னின் குடும்­பத்­தி­ன­ருக்கு அமைத்துக் கொடுக்­கும் வீட்­டுக்கு அடிக் கல் நடு­வ­தற்­காக, மீள்­கு­டி­யேற்ற அமைச்­சர் டி.எம்.சுவா­மி­நா­தன் யாழ்ப்­பா­ணத்­துக்கு இன் றைய தினம் வருகை தர­வுள்­ளார். இந்த வீடு இரா­ணு­வத்­தி­ன­ரால் அமைத்­துக் கொடுக்­கப்­ப­ட­வுள்­ளது.

கடந்த ஆண்டு ஒக்­ரோ­பர் மாதம் 21ஆம் திகதி கொக்­கு­வில் பகு­தி­யில் பொலி­ஸா­ரின் துப்­பாக்­கிச் சூட்­டில், யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த இரண்டு மாண­வர்­கள் கொல்­லப்­பட்­டி­ருந்­த­னர். இதன் பின்­னர் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் வகுப்­புப் புறக்­க­ணிப்பை மேற்­கொண்­டி­ருந்­த­னர்.

மாண­வர்­க­ளைச் சந்­தித்த மீள்­கு­டி­யேற்ற அமைச்­சர் டி.எம்.சுவா­மி­நா­தன், கொல்­லப்­பட்ட மாண­வர்­க­ளின் குடும்­பங்­க­ளுக்கு வீடு­கள் அமைத்­துக் கொடுக்­கப்­ப­டும் என்று தெரி­வித்­தி­ருந்­தார்.

துப்­பாக்­கிச் சூட்­டில் கொல்­லப்­பட்ட கந்­த­ரோ­டை­யைச் சேர்ந்த பல்­க­லைக்­க­ழக மாண­வன் விஜ­ய­கு­மார் சுலக்­ச­னின் குடும்­பத்­தி­ன­ருக்கு அர­சால் காணி கொள்­வ­னவு செய்து வழங்­கப்­பட்­டது. அந்­தக் காணி­யி­லேயே வீடு அமைக்­கப்­ப­ட­வுள்­ளது.

இரா­ணு­வத்­தி­னரே வீடு அமைத்­துக் கொடுக்;கும் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­னர். கீரி­மலை நல்­லி­ணக்­க­பு­ரத்­தில் அமைத்­துக் கொடுக்­கப்­பட்ட வீடு­க­ளைப் போன்றே இந்த வீடும் அமைத்­துக் கொடுக்­கப்­ப­ட­வுள்­ளது. இதற்­கான அடிக்­கல் நடும் நிகழ்வு இன்று மதி­யம் நடை­பெ­ற­வுள்­ளது. இதில் பங்­கேற்­கவே மீள்­கு­டி­யேற்ற அமைச்­சர் டி.எம்.சுவா­மி­நா­தன் யாழ்ப்­பா­ணத்­துக்கு வருகை தர­வுள்­ளார்.

http://newuthayan.com/story/21635.html

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்.....ஆனால் மாணவனின் உயிரிழப்பில் இவர்கள் அரசியல் செய்வது நல்லதல்ல ...பெரிய மனிதர்களுக்கு அழகல்ல....

  • தொடங்கியவர்

யாழ். துப்பாக்கிச்சூட்டில் பலியாகிய மாணவனுக்காக நிர்மாணிக்கப்படும் வீடு..!

 
யாழ். துப்பாக்கிச்சூட்டில் பலியாகிய மாணவனுக்காக நிர்மாணிக்கப்படும் வீடு..!

யாழ். கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ்.பல்கலைக்கழக மாணவனின் குடும்பத்திற்கு வீடு ஒன்டுறை நிர்மாணித்துக்கொடுக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த மாணவன் சுலக்ஷனின் சொந்த இடமான சண்டிலிப்பாய் - மாகியப்பிட்டி பகுதியில் குறித்த வீடு நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் அதற்கான அடிக்கல்லை
அமைச்சர் சுவாமிநாதன் இன்று நாட்டிவைத்துள்ளார்.
குறித்த நிகழ்வில் இராணுவத்தினரும் கலநது கொண்டு, அடிக்கல்லினை நாட்டிவைத்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/House-construction-for-jaffna-uni-student

விலைமதிப்பிட முடியாத பிள்ளையை இழந்த குடும்பத்துக்கு கொடுக்கக்கூடிய இந்த சிறு நிவாரணத்தில் சிங்கள ராணுவமோ  சுவாமிநாதனோ  கலந்துகொண்டு கீழ்த்தர அரசியல் செய்யும் உரிமை இல்லவே இல்லை.

அந்தக் குடும்பம் தாம் விரும்பியபடி, தாம் விரும்பும் விதத்தில் வீடமைக்கும் உரிமையை இந்த அரசியல் போக்கிரிகள் பறிக்கும் உரிமை கடும் கண்டனத்துக்கு உரியது.

நடைபெறும் நிகழ்வுகள் சிங்கள அரசின் அடக்குமுறையை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. இது அரச பயங்கரவாதமே இல்லாமல் வேறொன்றும் இல்லை.

  • தொடங்கியவர்

உதவிகள் இல்லை! – பொலிஸ் சூட்டில் உயிரிழந்த கஜனின் தாய் கவலை

 
உதவிகள் இல்லை! – பொலிஸ் சூட்டில் உயிரிழந்த கஜனின் தாய் கவலை
 

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன் கஜனின் குடும்பத்தாருக்கு இதுவரை எந்தவிதமான உதவிகளும் வழங்கப்படவில்லை என அவரது தாயாா் தெரிவித்தாா்.

இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தெரிவித்ததாவது-

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் எனது மகன் உயிரிழந்தான். குடும்பத்துக்கு இழப்பீடுகள் வழங்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் வாக்குறுதி வழங்கியிருந்தார். அவா் அளித்த வாக்குறிதியில் எவையும் நிறைவேற்றப்படவில்லை.

வீடு அமைத்து கொடுக்கப்படும். கல்வி கற்று வீட்டில் உள்ள ஒருவருக்கு அரச வேலை வாய்ப்பு வழங்கப்படும் என சுவாமிநாதன் கூறியிருந்தார். ஆனால் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை.

வீட்டுத்திட்டம் மூலம் வீடு ஒன்றை பெறுவதற்கு நான்பல்வேறு முயற்சிகள் எடுத்தேன். அதன் மூலம் வீட்டுத்திட்டம் கிடைத்துள்ள போதிலும் வீட்டை கட்டி முடிக்க முடியாத சூழ்நிலையில் நான் உள்ளேன். எனக்கு எந்தவித உதவியும் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. எனது பிள்ளையின் இறப்புக்கு நீதி வேண்டும்.- என்றார்.

http://newuthayan.com/story/21886.html

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, putthan said:

நல்ல விடயம்.....ஆனால் மாணவனின் உயிரிழப்பில் இவர்கள் அரசியல் செய்வது நல்லதல்ல ...பெரிய மனிதர்களுக்கு அழகல்ல....

அவர்கள் தாம் யார் என்பதை 
சந்தர்[ப்பம் கிடைக்கும்போதெல்லாம் 
சொன்னாலும் ........

அவர்களை பெரிய மனிதர்கள் என்று 
விழிப்பதட்கு அவர்கள் என்ன செய்ய முடியும் 

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுதெல்லாம் கொன்றால்  பாவம்

வீடு  கொடுத்தால்  போச்சு  என்றாகிவிட்டது

வித்தியாவானாலும்  கஐனானாலும்......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.