Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் சரணடைய விரும்பவில்லை

Featured Replies

பிரபாகரன் சரணடைய விரும்பவில்லை

 

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய கேசரிக்கு விசேட செவ்வி

 

நேர்காணல்:- ஆர்.ராம் 
படப்பிடிப்பு:- உதேஷ் இந்திக்க

 

இந்­திய அமை­திப்­ப­டை­யி­ன­ருக்கு எதி­ரான யுத்­தத்­தினை ஆரம்­பித்த விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் பிர­பா­கரன் ராஜீவ் காந்­தியை படு­கொலை செய்த பின்­னரே நிறுத்­தினார். முப்­ப­டை­யையும் வன்னி நிலப்­ப­ரப்பு நிரு­வா­கத்­தி­னையும் கொண்­டி­ருந்த அவர் பேச்­சு­வார்த்­தையை விரும்­ப­வில்லை. ஆயு­தங்கள் மூலம் வெற்றி பெறலாம் என்­பதே அவ­ரது மனோ­நிலை. யுத்­தத்தின் இறு­தியில் கூட கே.பி. அவரை வெளியே­று­மாறு கோரினார். அதற்கு அவர் இணங்­க­வில்லை. எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் அவர் சர­ண­டைய இணங்­க­வில்லை. எமக்கும் உயி­ருடன் பிடிப்­ப­தற்கு வாய்ப்­புக்கள் கிடைத்­தி­ருக்­க­வில்லை என முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார்.

தற்­போது ஐ.எஸ். தீவி­ர­வாதம் குறித்து அவ­தா­னத்­துடன் இருக்க வேண்­டும்­ என குறிப்­பட்ட அவர் மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சிக்­கா­லத்­தி­லேயே அதி­யுச்ச ஜன­நா­யகம் காணப்­பட்­ட­தா­கவும் விடு­த­லைப்­பு­லிகள் ஆயுத ரீதி­யாக தோற்­க­டிக்­கப்­பட்­ட­மை­யானது இலங்­கை­யர்­க­ளுக்கும் இந்­தியா உள்­ளிட்ட அனை­வ­ருக்­குமே நன்­மை­யா­னது எனவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தபாய ராஜ­பக் ஷ மிரி­ஹா­னவில் உள்ள அவ­ரது இல்­லத்தில் கேச­ரிக்கு வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் வழங்கிய செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

Q:- முன்னாள் பாது­காப்புச் செய­லா­ள­ராக இருந்த நீங்கள் தற்­போது எவ்­வா­றான செயற்­பா­டு களில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றீர்கள்?

A:- புதிய அர­சாங்­கத்தின் ஆட்­சிக்­கா­லத்தில் என்ன நடக்­கின்­றது என்­பதை அனை­வரும் அறி­வார்கள். நான் நீதி­மன்­றத்­திற்குச் செல்­கின்றேன். குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு, நிதிக்­குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு ஆகி­ய­வற்­றுக்குச் சென்று வரு­கின்றேன். அந்த நிறு­வ­னங்­க­ளுக்குச் செல்­வ­தற்கு முன்­ன­தாக தயார்ப் படுத்­தல்­களில் ஈடு­ப­டு­கின்றேன். சட்­டத்­த­ர­ணி­க­ளுடன் கலந்­து­ரை­யாட வேண்­டி­யுள்­ளது. இவற்­றுக்கே எனது நேரம் செல­வாகி விடு­கின்­றது.

Q:- உங்­க­ளுக்கு இவ்­வா­றான நிறு­வ­னங்­க­ளுக்குச் செல்­ல­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டதேன்?

A:- தற்­போ­துள்ள அர­சியல் நிலை­மையே காரணம். தற்­போ­துள்ள அர­சாங்கம் பல்­வேறு விட­யங்­களை முன்­வைத்தே ஆட்­சி­யினை எடுத்­துக்­கொண்­டது. அவற்றை அவர்­களால் நடை­மு­றையில் செய்ய முடி­யாமல் போயுள்­ளது. ஆகவே வைராக்­கி­ய­மான அர­சி­யலை முன்­னெ­டுக்­கின்­றார்கள்.

அதனை விடவும் பல்­வேறு பொய்­களை கூறி­னார்கள். ஆனால் அவற்றை நிரூ­பிக்க முடி­ய­வில்லை. குறிப்­பாக எனது சம்­பந்­தப்­பட்ட விட­யத்­தினை நான் கூறு­கின்றேன். நான், தேசிய வங்­கி­க­ளிலும், அமெ­ரிக்கா, சிங்­கப்பூர், டுபாய், சீனா உட்­பட வெளிநா­டு­க­ளி­லுள்ள வங்­கி­க­ளிலும் வைப்புச் செய்­தாக கூறி ஆராய்ந்­தார்கள். வெவ்­வே­று­பட்ட நிறு­வ­னங்­களில் உள்ள பங்­குகள், பங்­குச்­சந்­தையில் உள்ள பங்­குகள் குறித்து தேடிப்­பார்த்­தார்கள். எனது காலத்தில் நான் சம்­பா­தித்த சொத்­துக்­க­ளையும் தேடிப்­பார்த்­தார்கள்.

இவற்­றை­யெல்லாம் தேடிப்­பார்த்­து­விட்டு அது தொடர்­பாக எந்த தக­வ­லையும் வெளியி­டு­கின்­றர்கள் இல்­லையே. மூன்று வரு­ட­மாக ஆராய்ந்த விட­யங்­களை வெளியிட வேண்­டு­மல்­லவா? அவ்­வாறு செய்­யாது விட்டு தேடாத விட­யங்­க­ளையே கூறு­கின்­றார்கள். இதுதான் வேடிக்கை.

நான் பணத்­தினை சம்­பா­திப்­ப­தற்­காக இங்கு வந்து கடந்த ஒன்­பது வரு­டங்­க­ளாக பணி­யாற்­ற­வில்லை. நாட்­டுக்­காகவே பணி­யாற்­றினேன். பொரு­ளா­தார ரீதி­யாக பார்க்­கையில் எனக்கு நஷ்டம் தான் ஏற்­பட்­டுள்­ளது. அமெ­ரிக்­காவில் தொடர்ந்தும் இருந்­தி­ருப்பேன் என்றால் பொரு­ளா­தார ரீதி­யாக முன்­னேற்றம் அடைந்­தி­ருக்க முடியும்.  

நாட்­டுக்­காக சேவை­யாற்­றினேன் என்­ப­தற்­காக எனக்கு விசேட விலக்­க­ளிப்புச் செய்ய வேண்டும் என்று நான் கூற­வில்லை. நான் தவ­றி­ழைத்­தி­ருந்தால் அதனை வெளிப்­ப­டுத்­துங்கள். அதற்­காக நேர்­மை­யாகச் செயற்­ப­டுங்கள். நிதித்­து­றையை சுயா­தீ­ன­மாகச் செயற்­ப­டுத்­து­வ­தற்கு இட­ம­ளி­யுங்கள். விசா­ர­ணைகள் நேர்­மை­யாக மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.

Q:-ஆட்சி மாற்­றத்தின் பின்னர் நாட்டின் தேசிய பாது­காப்பு என்ற விடயம் தான் அதி­க­ளவில் பேசப்­ப­டு­கின்­றது. அதற்கு காரணம் என்­ன­வெனக் கரு­து­கின்­றீர்கள்?

A:- தேசிய பாது­காப்பு தொடர்­பாக சரி­யான நிலைப்­பாட்­டினை வெளிப்­ப­டுத்­து­வ­தாயின் புல­னாய்­வுத்­து­றையின் தக­வல்கள் சரி­யாக இருக்க வேண்டும். தற்­போது எனக்கு புல­னாய்வுத் தக­வல்கள் கிடைப்­ப­தில்லை. அர­சாங்க அதி­கா­ரி­க­ளுக்கே அது­கு­றித்து சரி­யான பதி­ல­ளிக்க முடியும். அவர்கள் உண்­மை­யான தக­வல்­களை வெளியி­டு­கின்­றார்­களா என்­பது கேள்­விக்­கு­ரிய விடயம். எனினும் உள்­நாட்­டிலும், வெளிநாட்­டிலும் நடை­பெறும் சம்­ப­வங்­களை அடிப்­ப­டை­யாக வைத்து என்னால் பதி­ல­ளிக்க முடியும்.

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­பினால் உல­க­நா­டு­க­ளுக்கு அச்­சு­றுத்­தல்கள் காணப்­ப­டு­கின்­றன. ஆகவே அது தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்­டி­யுள்­ளது. குறிப்­பாக சிங்­கப்பூர் இவ்­வி­டயம் தொடர்பில் முக்­கிய கவனம் செலுத்­தி­யுள்­ளது.

அர­சாங்கம் என்ற வகையில் நிலை­மை­களை உணர்ந்தும் தெளிவுற்றும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும். அத­னை­ வி­டுத்து ஒரு மக்கள் கூட்­டத்­திற்கு எதி­ரா­ன­தாக பார்க்கக்கூடாது. உண்­மை­யான நிலை­மையை மக்­க­ளுக்கு புரி­ய­வைக்க வேண் டும்.  

உள்­நாட்டில் விசே­ட­மாக யாழ்ப்­பா­ணத்தில் பல குழுக்கள் செயற்­ப­டு­கின்­றன. அங்கு சட்டம் ஒழுங்கு சீர்­கு­லைந்­துள்­ளது. அங்­கி­ருந்து என்­னுடன் பேசு­ப­வர்­களும் அவ்­வா­றான தக­வல்­களை வழங்­கி­யுள்­ளார்கள். ஆகவே அந்த குழுக்­களின் பிர­தான நோக்கம் என்ன? செயற்­ப­டுத்­து­ப­வர்கள் யார் என்­பது தொடர்­பாக அவ­தானம் செலுத்த வேண்டும்.

முப்­பது வரு­டங்­க­ளாக யுத்தம் நடை­பெற்று நிறை­வ­டைந்­தி­ருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு போன்ற அர­சியல் தரப்­புக்கள் கடந்த கால அடிப்­ப­டை­வா­தங்­களை மக்கள் மத்­தியில் கொண்டு சென்று அர­சியல் இலாபம் ஈட்­டப்­பார்க்­கின்­றன. புலம்­பெயர் நாடு­களில் உள்ள அமைப்­புக்­களும் அச்­சம்­ப­வங்­களை பயன்­ப­டுத்தி நன்­மை­ய­டையப் பார்க்­கின்­றன.

கடந்த காலத்­தினை முழு­மை­யாக மறந்தோ அல்­லது புறந்­தள்­ளி­விட்டோ நாட்டை நிர்­வ­கிக்க முடி­யாது. அப்­படி நினைப்­பதே முட்டாள் தன­மா­னது. ஆகவே உள்ளூர், வெளி யூர் நிலை­மை­களை மைய­மா­க­வைத்து அவ­தா­னத்­துடன் இருக்க வேண்­டி­யது அவ­சியம். 

Q:-வடக்கில் ஆவா குழு­வினை உரு­வாக்கி செயற்­ப­டுத்­தி­யவர் நீங்­க­ளென்றே அமைச்­ச­ரவை இணைப்­பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன கூறு­கின்­றாரே?

A:- இது அடிப்­ப­டை­யற்ற கருத்­தாகும். நாட்டின் தேசிய பாது­காப்பு சம்­பந்­த­மான முக்­கி­ய­மான விட­யத்தில் அர­சாங்க அமைச்­சர்கள் அடிப்­ப­டை­யற்ற பொய்­யான கருத்­துக்­களை வெளியிட்டு திசை திருப்ப முயல்­வது கால விர­யமே தவிர அதில் எவ்­வி­த­மான பயன்­பாடும் கிட்­டப்­போ­வ­தில்லை. இங்கு(தெற்கில்) வேறு எந்தக் குழுவும் இல்­லாது யாழில் ஆவா குழுவை வைத்­தி­ருப்பேன் என்று அமைச்சர் ராஜித சிந்­திப்­பது மிகவும் முட்டாள்தன­மா­னது.

Q:-அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் கூட் டத்­தொ­ட­ரொன்­றி­லேயே அமைச்சர் ராஜித இவ் ­வாறு கூறி­யி­ருக்­கின்றார். அது அர­சாங்­கத்தின் உத் தி­யோக பூர்­வ­மான அறி­விப்­பா­கவே பார்க்­கப்­ப­டு மல்­லவா?

A:- நான் மீண்டும் கூறு­கின்றேன். அது அடிப்­ப­டை­யற்ற கூற்­றாகும். புல­னாய்­வுத்­து­றை­யினர், அக்­கு­ழு­வுக்கும் எனக்கும் தொட ர்பு இருப்­ப­தாக கூறி­யுள்­ள­னரா? அவ்­வா­றா யின் அதனை வெளிப்­ப­டுத்­துங்கள். நான் இந்த அறையில் இருந்து கொண்டு கனவில் அக்­கு­ழுவை இயக்­க­மு­டி­யா­தல்­லவா? நாட்­டுக்கு பய­னற்ற கூற்றே அது­வாகும்.

Q:-தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ராக ஆயு­த­ரீ­தி­யான யுத்­தமே முடிந்த முடிவு என்ற நிலைப்­பாட்­டினை தாங்கள் எட்­டு­வ­தற்கு காரணம் என்ன?

A:- இவ்­வா­றான பிரச்­சி­னை­யொன்றை தீர்ப்­ப­தென்றால் இரண்டு வழி­களே உள்­ளன. பேச்­சு­வார்த்­தை­யூ­டாக பிரச்­சி­னை­களை தீர்ப்­பது. இல்­லையேல் படை நட­வ­டிக்கை மூல­மாக தீர்த்­துக்­கொள்­வது என்­ப­தாகும். விடு­தலைப் புலிகள் அமைப்பு உரு­வாக்­கப்­பட்­டதன் பின்னர் எத்­த­னையோ தட­வைகள் நாட்டில் அவ்­வப்­போது ஆட்­சியில் அமர்ந்­தி­ருந்த அர­சாங்­கங்கள் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யுள்­ளன. ஆனால் அவை கைகூ­ட­வில்லை.

இந்­திய–இலங்கை ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்டு மாகாண சபை முறை­மைகள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டன. இந்­திய அமை­திப்­ப­டை இலங்­கைக்கு வந்­தது. ஆனாலும் விடு­தலைப் புலிகள் இந்­திய அமை­திப்­ப­டை­யி­ன­ருக்கு எதி­ராக யுத்தம் செய்ய ஆரம்­பித்­தார்கள்.

எமது நாட்டில் அமை­தி­யான நிலை­யொன்று ஏற்­பட வேண்டும் என்ற நோக்கில் சிறந்த செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்த இந்­தியப் பிர­தமர் ராஜீவ் காந்­தியை படு­கொலை செய்த பின்­னரே விடு­த­லைப்­பு­லிகள் இந்­திய அமை­திப்­ப­டை­யி­ன­ருக்கு எதி­ரான தமது யுத்­தத்­தினை நிறுத்­தி­னார்கள்.

பிர­பா­கரன் பேச்­சு­வார்த்­தை­யூ­டாக தீர்­வைப்­பெ­ற­மு­டியும் என்று ஒரு­போதும் நம்­ப­வில்லை. அந்த விட­யத்தில் அவ­ரு­டைய பக்­கத்­தி­லி­ருந்து பார்க்கும் போது நியா­யப்­பா­டுகள் சில இருப்­ப­தாக உணர்­கின்றேன்.

காரணம், அவர் பூச்­சி­யத்­தி­லி­ருந்தே விடு­தலைப்புலிகள் அமைப்பை கட்­டி­யெ­ழுப்­பினார். நான் பாது­காப்புச் செய­லா­ள­ராக பதவி ஏற்கும் போது 35 ஆயிரம் போரா­ளிகள் அந்த அமைப்பில் இருந்­தனர் என்ற தக­வல்கள் கிடைத்­தி­ருந்­தன. தரைப்­படை, கடற்­படை, விமா­னப்­படை ஆகிய மூன்று வகைப் படைகளையும் அவரால் கட்­டி­யெ­ழுப்ப முடிந்­தது.

இலங்கை படை­யி­ன­ரி­டத்­தி­லுள்ள ஆயு­தங்­க­ளுக்கு நிக­ரான ஆயு­தங்­களை அவ­ரால் பெற முடிந்­தது. படை­யினர், பொலிஸார் செல்ல முடி­யாத அள­வி­லான நிலப்­ப­ரப்­பினை அவரால் முழு­மை­யாக பரி­பா­லனம் செய்ய முடிந்­தது. முல்­லைத்­தீவு, பூந­கரி, ஆனை­யி­றவு, ஆகிய பகு­தி­களை பார்க்­கையில் படை­யி­னரை தோற்­க­டிப்­ப­தற்­கான ஏது­நி­லைகள் பாரி­ய­ளவில் காணப்­பட்­டன.

அவ்­வா­றி­ருக்­கையில், இத்­தனை காலமும் ஆயு­த­ரீ­தி­யாக வெற்­றி­களை பெற்ற நான் எதற்கு சம­ரச பேச்­சுக்கு செல்ல வேண்டும்? எஞ்­சி­ய­தையும் ஆயுத ரீதி­யா­கவே வெற்றி கொள்ள முடியும் என்­பதே அவ­ரு­டைய மனோ­நி­லை­யா­க­வி­ருக்கும்.

அத்­துடன், திம்பு முதல் நோர்வே வரை­யி­லான சமா­தானப் பேச்­சு­வார்த்­தைகள் வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. அதன்­மூலம் பிர­பா­கரன் பேச்­சு­வார்த்தை ரீதி­யி­லான சம­ர­சத்­திற்கு விருப்­ப­மான நப­ரல்ல என்­ப­தையே அவர் வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார்.

அவ்­வா­றி­ருந்த போதும் 2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்ட பின்னர் யுத்த நிறுத்தம் செய்­யப்­பட்­டி­ருந்­தது. அந்த நேரத்தில் நாம் விடு­த­லைப்­பு­லி­க­ளுடன் பேச்­சு­வார்த்­தையை நடத்­தி­யி­ருந்தோம். முத­லா­வது வட்­ட­மேசை பேச்­சு­வார்த்­தையின் போதே பிர­பா­கரன் சம­ரச முயற்­சி­களை விரும்­ப­வில்லை என்­பதை எம்மால் தெளிவாக உணர முடிந் ­தது.

இருப்­பினும் நாம் மூன்று தட­வைகள் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யி­ருந்தோம். ஆனாலும் அவை வெற்­றி­ய­ளித்­தி­ருக்­க­வில் லை. அதன் பின்­னரே படை­யினர் மூல­மாக விடு­தலைப் புலிகள் அமைப்பை தோற்­க­டிக்கும் தீர்­மா­னத்­தினை எடுத்தோம். அதனை வெற்­றி­க­ர­மா­கவும் செய்து முடித்தோம்.

விடு­த­லைப்­பு­லிகள் தோற்­க­டிக்­கப்­பட்­ட­மை­யா­னது இந்த நாட்டில் உள்ள சிங்­கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்­க­ளுக்கும் நன்­மை­யான விடயம் என்றே நான் கரு­து­கின்றேன். மேலும் இந்­தி­யாவின் வெளிவிவ­கார செய­லா­ள­ரா­கவும் பின்னர் தேசிய பாது ­காப்பு ஆலோ­ச­க­ரா­கவும் செயற்­பட்ட சிவ்­சங்கர் மேனன் தனது புத்­த­கத்தில், விடு­த­லைப்­பு­லிகள் தோற்­க­டிக்­கப்­பட்­ட­மை­யா­னது இலங்­கைக்கு நன்மை என்றே குறிப்­பிட்­டுள்ளார்.

Q:-மனி­தா­பி­மான நட­வ­டிக்­கைகள் என்ற பெயரில் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான யுத்­தத்­தினை 2006 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 26 ஆம் திகதி கிழக்கு மாகா­ணத்­தி­லி­ருந்து ஆரம்­பித்­தது முதல் முள்­ளி­வாய்க்கால் வரையில் முன்­னெ­டுத்­த­போது எவ்­வா­றான சவால்­க­ளுக்கு முகங்­கொ­டுத்­தீர்கள்?

A:- பிர­தான அமைப்­பான விடு­தலைப் புலி­களின் கட்­டுப்­பாட்­டுக்குள் பிர­வே­சித்து தோற்­க­டிக்கச் செய்ய வேண்­டிய நிலைமை காணப்­பட்­டது. அது வெளிப்­ப­டை­யான சவா­லாகும். அதிர்ஷ்­ட­வ­ச­மாக எமது அயல் நாடான இந்­தியா மற்றும் பாகிஸ்தான், சீனா, அமெ­ரிக்கா, ரஷ்யா உள்­ளிட்ட நாடுகள் அதி­க­ள­வி­லான ஆத­ரவை வழங்­கி­யி­ருந்­தன.

அடுத்­த­தாக வெளிநா­டு­களில் படை நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ரான நிலைப்­பாட்­டினைக் கொண்ட சிவில் அமைப்­புகள், ஐ.நா.வுடன் தொடர்­பு­பட்டு பணி­யாற்றும் அமைப்­புக்கள் மற்றும் சில மேற்­குல நாடு­களும் இடை­யூ­று­களை அளித்­தன.

பொறுப்­பான அர­சாங்கம் என்ற வகையில் எமக்கு சவால்கள் இருந்­தன. சிவி­லி­யன்­களை பாது­காக்க வேண்டும். அதற்­காக நாம் யுத்த சூனிய பிர­தே­சங்­களை அமைத்தோம். விடு­தலைப் புலி­களின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்து வெளியேறி வரு­ப­வர்­களை பாது­காப்­பாக அழைத்து வரு­வ­தற்­கான ஏற்­பா­டு­களை செய்தோம்.

பாது­காப்பு அமைச்சில் எனது கண்­கா­ணிப்பின் கீழ் மனி­தா­பி­மான பொருட்­களை அந்த சிவி­லி­யன்­க­ளுக்கு அனுப்­பு­வ­தற்கு நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருந்தோம். இதற்­காக தூது­வர்கள், அதி­கா­ரிகள், ஐ.நா.நிறு­வ­னங்­களின் முக்­கி­யஸ்­தர்கள் அடங்­கிய கூட்­டத்­தினை தொடர்ச்­சி­யாக நடத்­தி­வந்தோம்.

குறிப்­பாக யுனெஸ்கோ அதி­கா­ரி­யொ­ருவர் முன்­பள்ளிப் பாட­சாலை அமைப்­பது குறி த்து கூட கலந்­து­ரை­யா­டிரு­யிருந்தார். அத்தனை தூரம் நாம் சிவி­லி­யன்கள் விட­யத்தில் கவ னம் செலுத்­தி­யி­ருந்தோம் என்­ப­தற்கு இது­வொரு சிறந்த உதா­ரணம்.  

முப்­பது வரு­டங்­க­ளாக வன்னிப் பகுதி எமது நிர்­வா­கத்­தினுள் இருக்­க­வில்லை. இருப்­ பினும் கூட நாம் எரி­பொருள், உலர் உணவு உள்­ளிட்ட அத்­தி­யா­வசிப் பொருட்­களை தொடர்ச்­சி­யாக அனுப்பி வந்தோம். சீமெந்து, முட்­கம்பி கூட அனுப்­பினோம். 

அந்தப் பொருட்­களை விடு­தலைப் புலி கள் பாவிக்­கின்­றார்கள் என்றே நாம் கரு­தினோம். அவர்­களின் கட்­டுப்­பாட்­டினுள் காணப்­பட்ட சிவி­லி­யன்­களைப் பாது­காக்க வேண்டும் என்­பது எமது பொறுப்­பா­க­வி­ருந்­தது. ஆனால் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு அது நோக்­க­மல்ல. மோதலை முன்­னெ­டுப்­பது மட்­டுமே அவர்­களின் பிர­தான நோக்­க­மாக இருந்­தது.

எங்­க­ளுக்கு அப்­படி அல்ல. கன­ரக ஆயு­தங்­களை எங்கு பயன்­ப­டுத்த வேண்டும். கன­ரக ஆயு­தங்­களை எங்கு பயன்­ப­டுத்தக் கூடாது. சிவி­லி­யன்­க­ள் பாது­காப்­பாக ஒன்று சேர்­வ­தற்­கான இடம் எது, அவ்­வாறு சேர்­ப­வர்கள் வெளியே­று­வ­தற்­கான இடம் எது என்­றெல்லாம் கவனம் செலுத்த வேண்டும். இத்­தனை சவால்­க­ளுக்கு மத்­தியில் தான் நாம் யுத்­தத்­தினை முன்­னெ­டுத்­தி­ருந்தோம்.

Q:-விடு­த­லைப்­பு­லி­களே இந்தியப் பிர­தமர் ராஜீவ் காந்­தியை படு­கொலை செய்­த­தாக கூறு­கின்­றீர்கள். இந்­தியா விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான யுத்­தத்­திற்கு ஆத­ர­வ­ளித்­த­தா­கவும் கூறு­கின்­றீர்கள். அக்­கா­லப்­ப­கு­தியில் ராஜீவ் காந்­தியின் மனைவி சோனியா காந்­தியின் கட்­டுப்­பாட்­டிற்­குள்ளே பிர­தமர் மன்­மோகன் சிங் தலை­மை­யி­லான காங்­கிரஸ் அர­சாங்­கமே ஆட்­சியில் இருந்­தது. அவ்­வா­றாயின் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான தமது கோபத்­தினை இலங்கை இரா­ணு­வத்­தினை பயன்­ப­டுத்தி இந்தியா பழி­தீர்த்துக் கொண்­டதா என்ற கேள்வி எழு­கின்­ற­தல்­லவா? 

A:- எமது படை­யினர் பழி தீர்ப்­ப­தற்கு பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அவ்­வாறு கூற வும் முடி­யாது. 2005ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தி­யாக மஹிந்த ராஜ­பக் ஷ பத­வி­யேற்ற பின்னர் இரு வாரங்­களில் இந்­தி­யா­வுக்கு சென்­றி­ருந்தார். அவர் தலை­மை­யி­லான அணியில் நானும் பங்­கேற்­றி­ருந்தேன்.

அச்­சந்­தர்ப்­பத்தில் எம்.கே.நாராய­ண­­னுடன் ஒன்­றரை மணி­நேரம் கலந்­து­ரை­யா­டினேன். அதன்­போது, கடந்த முப்­பது வரு­டங்­களில் இலங்­கையில் ஆட்­சி­யி­லி­ருந்த ஜனா­தி­ப­திகள் படை நட­வ­டிக்­கைகள் மூலம் விடு­த­லைப்­பு­லி­களை தோற்­க­டிக்க முன்­னெ­டுப்­புக்­களைச் செய்­தனர். ஆனால் அவை எதுவும் கைகூ­ட­வில்லை.

ஆகவே அதே படை­யி­னரே தற்­போதும் உள்ள நிலையில் படை நட­வ­டிக்­கைகள் மூல­மான முயற்சி நிச்­சயம் வெற்­றி­ய­ளிக்­காது. பேச்­சு­வார்த்­தை­களின் மூலமும் இந்த விட­யத்­திற்கு முற்­றுப்­புள்ளி வைக்க முடி­யாது. ஆகவே ஏதா­வது ஒரு முறை­மை­யொன்றை கண்­ட­றியும்படி எம்.கே.நார­ாணயன் குறிப்­பிட்டார்.

அத்­துடன் இந்­தி­யா­விற்கு விடு­த­லைப்­பு­லி­களை தோற்­க­டிக்க வேண்டும் என்ற அவ­சியம் இருந்­தது. விடு­தலைப் புலிகள் அமைப்பு இருப்­பதால் தமிழ் மக்கள் பாதிக்­கப்­ப­டு­கின்­றார்கள். அவர்­களின் கலா­சாரம் சீர­ழிக்­கப்­ப­டு­கின்­றது. அமை­தி­யான சூழ­லற்ற நிலை­மையே தொடர்­கின்­றது. ஆகவே தமிழ் மக்­க­ளுக்கு சற்றும் ஒவ்­வாத அமைப்பே விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பு என்று கரு­தி­னார்கள்.

Q:-யுத்தம் வெகு­வாக முன்­னெ­டுக்­கப்­பட்ட காலப்­ப­கு­தியில் இலங்­கைக்­கான தூது­வ­ராக கட­மை­யாற்­றிய ரொபேர்ட் ஓ பிளேக், சமா­தான தூது­வ­ராக கட­மை­யாற்றிய எரிக் சொல்ஹெய்ம், அப்­போ­தைய நோர்வே தூதுவர் ரோ ஹற்றம் போன்­ற­வர்கள் யுத்­தத்­தினை இடை­நி­றுத்தி விடு­த­லைப்­பு­லி­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் தங்­களை அணு­கி­னார்­களா?

A:- பிளேக்கைப் பொறுத்­த­வ­ரையில் அவர் அமெ­ரிக்­காவின் நிலைப்­பாட்­டி­லேயே இருந்தார். அமெ­ரிக்­கா­வா­னது தமது பயங்­க­ர­வாத பட்­டி­யலில் புலிகள் அமைப்பை உய­ரி­டத்­தி­லேயே வகைப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. அமெ­ரிக்­கா­வுக்கு பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான யுத்தம் என்­பது அடிப்­படை கொள்­கையில் உள்­ள­டக்­கப்­பட்ட விட­ய­மாகும்.

அதன்­மூலம் விடு­த­லைப்­பு­லிகள் தோற்­க­டிக்­கப்­பட வேண்­டிய அமைப்பு என்­பது வெளிப்­ப­டை­யா­கின்­றது. அதற்­க­மை­வாக அமெ­ரிக்கா தன்னால் வழங்க கூடிய முழு­மை­யான பங்­க­ளிப்­புக்­க­ளையும் வழங்­கி­யி­ருந்­தது.

அதே­போன்று நோர்வே தரப்­பினர் தங்­களால் முன்­னெ­டுக்­கப்­பட்ட சமா­தான முயற்­சி­களை வெற்­றி­பெறச் செய்­ய­வேண்டும் என்ற

நோக்கில் செயற்­பட்­டார்கள். இருப்­பினும் விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பு பேச்­சு­வார்த்­தை­களில் எவ்­வ­ளவு தூரம் நேர்­மைத்­த­மை­யு டன் பங்­கேற்­கின்­றார்கள் என்­பதை அவர்கள் உணர்ந்­தி­ருப்­பார்கள்.

Q:-யுத்தம் உக்­கி­ர­ம­டைந்த காலத்தில் (2009 ஏப்ரல் இறுதி வாரத்தில்) அவ­சர விஜ­யங்­களை மேற்­கொண்டு இலங்கை வந்­தி­ருந்த பிரித்­தா­னிய வெளியு­ற­வு­த்துறை அமைச்சர் டேவிட் மில்­லிபாண்ட், பிரான்ஸ் வெளியு­றவு அமைச்சர் பேனார்ட் கௌச்னர், ஐ.நா. செய­லாளர் ஜோன் ஹோம்ஸ் ஆகி­யோரின் நிலைப்­பாடு என்­ன­வாக இருந்­தது?

A:- இந்த வகை­யா­ன­வர்கள் நாட்டின் நிலைமை, பயங்­க­ர­வா­தத்தின் நிலைமை குறித்து சரி­யான தெளிவில்­லாது யுத்­தத்­தினை நிறுத்த வேண்­டு­மென்ற நிலைப்­பாட்­டி­லி­ருந்­தனர். யுத்­தத்­தினை நிறுத்­து­மாறு கூறி­ய­வர்கள் இப்­பி­ரச்­சி­னைக்கு எத்­த­கைய தீர்­வினை வழங்க வேண்டும் என்ற திட்­டத்­தினை முன்­மொ­ழி­ய­வில்லை.

இவ்­வா­றான முன்­மொ­ழி­வுக்கு அந்த நபர்­களின் அர­சியல் நிலைப்­பாடு அல்­லது அந்த நாடு­களில் அவர்­க­ளுக்கு காணப்­பட்ட அழுத்தம் ஆகி­ய­னவே கார­ண­மாக இருக்­கின்­றது. குறிப்­பாக கூறு­வ­தாயின், 1983 ஆம் ஆண்டு இந்த நாட்­டி­லி­ருந்து வெளியேறி தமிழ் மக்கள் ஐரோப்­பிய நாடு­களில் வாழ்­கின்­றார்கள். அவர்கள் அர­சியல் ரீதி­யாக அழுத்­த­ம­ளிக்க கூடிய வகை­யி­லான சக்­தியைக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

இந்த இடத்தில் டேவிட் மில்­லி­பாண்ட் தனிப்­பட்ட வகையில் என்­னி­டத்தில் தெரி­வித்த ஒரு­வி­டயம் நினை­வுக்கு வரு­கின்­றது. அவ­ரு­டைய தொகு­தியில் தமிழ் மக்­களின் வாக்­குகள் 3 ஆயிரம் வரையில் காணப்­ப­டு­கின்­றன. அவர் 300 வாக்­கு­களால் தான் வெற்றி பெறு­கின்றார். ஆகவே தமிழ் மக்­களின் வாக்­குகள் கிடைக்­காது விட்டால் அவர் தோல்­வி­ய­டைவார்.

எனவே அங்­குள்ள தமிழ் மக்­களை மகிழ்ச்­சிப்­ப­டுத்­து­வ­தற்­காக இலங்கை அர­சாங்­கத்­திற்கு அழுத்­த­ம­ளிக்க வேண்­டிய தேவை அவர்­க­ளுக்கு எழுந்­தி­ருந்­தது. இது நல்ல உதா­ரணம் அல்­லவா?

ஆனால் இவர்கள் ஆப்­கா­னிஸ்தான், ஈராக் போன்ற நாடு­களில் பாயங்­க­ர­வா­தத்­தினை ஒழிக்க வேண்டும் என்­ப­தற்­காக தலை­யீ­டு­களை செய்து இரா­ணு­வத்­தினை அனுப்பி வைத்­த­ந­பர்கள். அவ்­வா­றி­ருக்­கின்ற போது இலங்­கையில் மாத்­திரம் யுத்­தத்­தினை நிறுத்­து­மாறு கோரு­கின்­றார்கள். ஒரு­பக்­கத்தில் பயங்­க­ர­வாத்­திற்கு எதி­ரான நிலைப்­பாட்­டி­னையும் பிறி­தொரு பக்­கத்தில் மாற்று நிலைப்­பாட்­டினை கடைப்­பி­டிக்­கின்­றார்கள்.

மஹிந்த ராஜ­பக் ஷ யுத்­தத்­தினை ஆரம்­பித்­தி­ருக்­க­வில்லை. அவர் நாட்டை பொறுப்­ பேற்ற போது யுத்தம் ஆரம்­பித்து 30 வரு­டங்­களைக் கடந்­தி­ருந்­தது. அதற்கு முன்னர் ஆட்­சி­யி­லி­ருந்த சகல ஜனா­தி­ப­தி­களும் யுத்­தத்­தினை நிறை­வுக்கு கொண்டு வரு­வ­தற்­கான முன்­னெ­டுப்­புக்­க­ளையும் பேச்­சு­வார்த்தை மூல­மான முன்­னெ­டுப்­புக்­க­ளையும் மேற்­கொண்­டி­ருந்­தார்கள். அவர்­களின் செயற்­பா­டுகள் சாத்­தி­யப்­ப­ட­வில்லை.

அவ்­வா­றான நிலையில் தான் ஆட்­சிக்கு வந்த நாம் புலிகள் பேச்­சு­வார்த்­தையை தொடர்­வ­தற்கு தயா­ரில்லை என்ற கட்­டத்தில் படை நட­வ­டிக்கை மார்­க்கத்தை தெரிவு செய்தோம். படை நட­வ­டிக்கை மார்க்­கத்­தினை தெரிவு செய்­த­மைக்கு காரணம் என்­ன­வென்றால் படை­களை எம்மால் கட்­டுப்­ப­டுத்த முடியும் என்­ப­த­னா­லாகும்.

Q:-யுத்தம் உக்­கி­ர­ம­டைந்த தரு­ணத்தில் விடு­தலைப் புலி­களின் முக்­கி­யஸ்­தர்கள் சர­ண­டையத் தயா­ரா­கி­னார்­களா? அது குறித்து உங்­க­ளுக்கும் அவர்­க­ளுக்கும் இடையில் நேர­டி­யாக அல்லது மத்­தி­யஸ்தத்­துடன் பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­றி­ருந்­தனவா?

A:- விடு­த­லைப்­பு­லிகள் சர­ண­டை­வது குறித்து எம்­மி­டத்தில் ஒரு­வரும் பேச­வில்லை. அப்­போ­தைய நோர்வே தூதுவர் 50 பேர் சர­ண­டையத் தயா­ராக உள்­ளார்கள் என்று கூறினார். பின்பு அவர் அது­கு­றித்து பேச­வில்லை. அவரும் நிலை­மையை புரிந்­து­கொண்­டி­ருப்பார் என்றே நான் கரு­து­கின்றேன்.

பிர­பா­கரன் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் சர­ண­டையும் நப­ராக இருக்­க­வில்லை. பிர­பா­கரன் கே.பி.யுடன் (குமரன் பத்­ம­நாதன்) தொலை­பேசி வாயி­லாக உரை­யா­டியதை செவி­

ம­டுத்தோம். யுத்தம் நிறை­வ­டை­வ­தற்கு இரு மாதங்­க­ளுக்கு முன்­னரும் இரு வாரங்­க­ளுக்கு முன்­னரும் நடத்­திய உரை­யா­டல்­களை செவி­ம­டுத்தோம். இச்­சந்­தர்ப்­பங்­களில் கே.பி. பிர­பா­க­ர­னி­டத்தில் இவ்­வாறு கூறு­கின்றார்: உங்­களால் இதனை (யுத்­தத்­தினை) செய்ய முடி­யாது எனவே கைவி­டுங்கள். நீங்கள் முதலில் வெளியே­றுங்கள். நீங்கள் வெளியேறி வெளி நா­டுக்கு செல்லுங்கள். பின்பு ஒரு சந்­தர்ப்­பத்தில் நாட்­டுக்கு திரும்பி சென்று பார்க்­கலாம் என்றார். 

ஆனால் பிர­பா­கரன் அதனை ஏற்­க­வில்லை. என்னால் நிலை­மையை மாற்­ற­மு­டியும். நிலை­மையை மாற்­று­வ­தற்கு எனக்கு ஆயு­தங்கள் மாத்­தி­ரமே தேவை என்றே பதி­ல­ளித்தார். அத­ன­டிப்­ப­டையில் பார்க்கும் போது அவர் எந்­த­வொரு நப­ரி­டத்­திலும் சர­ண­டை­வ­தற்கு இணங்­க­வில்லை என்­பதே உண்மை.

Q:-பிர­பா­கரன் அத்­த­கைய நிலைப்­பாட்டில் இருந்­தாலும் புலி­களின் காவல்­துறை பொறுப்­பாளர் ப.நடேசன் உள்­ளிட்­ட­வர்கள் வௌ்ளைக் கொடி­யுடன் சர­ண­டைய முற்­பட்ட வேளையில் உயி­ரி­ழக்க நேரிட்­ட­தாக கூறப்­ப­டு­கின்­றதே?

A:- இவ்­வா­றா­ன­வைகளைக் கூறு­வது மிக இல­கு­வா­னது. ஆனால் யுத்த களத்தில் இவ்­வா­றான செயற்­பா­டுகள் இடம்­பெ­றுமா என்­பது குறித்து சிந்­திக்க வேண்டும். வட்­ட­மேசைக் கலந்­து­ரை­யா­டலில் வெள்ளைக்­கொடி ஏந்தி வந்­தார்கள். சிவப்­புக்­கொடி ஏந்தி வந்­தார்கள் என்று பேசு­வ­தற்கு இல­கு­வாக இருக்கும். ஆனால் யுத்­த­க­ளத்தில் ஒவ்­வொரு கணத்­திலும் என்ன நடக்கும் என்­ப­தி­லேயே சிப்­பாய்கள் குறி­யாக இருப்­பார்கள்.

யுத்­தத்தின் இறுதித் தரு­ணங்­களில் விடு­தலைப் புலிகள் எந்த நேரத்­திலும் பாது­காப்பு வல­யங்­களை தகர்த்துச் செல்ல முனை­வார்கள் என்ற நிலை­மையே இருந்­தது. அவ்­வா­றான முயற்­சி­க­ளையும் மேற்­கொண்­டி­ருந்­தார்கள். அச்­சந்­தர்ப்­பத்தில் சிப்பாய் ஒருவர் எந்த நிலை­மையில் இருப்பார் என்­பதை சிந்­திக்க வேண்டும். தலையையே முழு­மை­யாக தூக்க முடி­யாத அச்­சந்­தர்ப்­பத்தில் நப­ரொ­ரு­வரால் எழுந்து வெள்ளைக் கொடி­யினை உயர்த்த முடி­யுமா?

மேலும் அந்தச் சந்­தர்ப்­பதில் விடு­தலைப் புலிகள் அமைப்பின் அனைத்து தலை­வர்களும் அப்­பி­ர­தே­சத்­தி­லேயே இருந்­தார்கள். பிர­பா­க­ரனும் அங்­கேயே இருந்தார். எனவே அவர்­களும் உச்சக் கட்ட

படை நட­வ­டிக்­கையை அல்­லவா வெளிப்­ப­டுத்த முயல்­வார்கள். அது எவ்­வாறு இருக்கும் என்று சிந்­தித்து பார்க்க முடியும்.

அவ்­வா­றான தரு­ணத்தில் வெள்ளைகொடி ஏந்­திக்­கொண்டு வர முயற்­சித்­தாலும் சுற்­றி­யுள்ள சிப்­பாய்­களின் கண்­க­ளுக்கு தெரி­வார்­களா? அது­கு­றித்து சரி­யான புரிதல் இருக்க வேண்டும். இவ்­வாறு வெள்ளைக்­கொடி விட­ யத்­தினைக் கூறு­ப­வர்கள் அங்­கி­ருந்த நிலை­ மை­களை சிந்­தித்து பார்த்து கருத்து வெளி யிட வேண்டும்.  

Q:-பிர­பாக­ரனின் இறப்பு குறித்து பல கதைகள் கூறப்­ப­டு­கின்­றன. ஈற்றில் தற்­கொலை செய்து கொண்டார் என்று ஒரு கதை. கொழும்­புக்கு கொண்டு வரப்­பட்டு சித்­தி­ர­வதை செய்­யப்­பட்டு கொல்­லப்­பட்டார் என்று மற்­றொரு கதை. இவற்­றுக்கு எல்லாம் அப்பால் அவர் உயி­ருடன் இருப்­ப­தாக தமி­ழக அர­சி­யல்­வா­திகள் கூறு­கின்­றனர்? உண்­மையில் நடந்­தது என்ன?

A:- இவை எது­வுமே உண்மை இல்லை. அவர் யுத்­தத்தில் உயி­ரி­ழந்தார். பிர­பா­க­ரனை எத­னையும் செய்ய வேண்­டிய தேவை எமக்கு இருக்­க­வில்லை பிர­பா­க­ர­னுக்கு அவ்­வா­றான அவ­சியம் இருந்­ததா என்­பது எனக்கு தெரி­யாது.

Q:-பிர­பா­கரன் உயி­ரி­ழந்து விட்டார் என்ற தகவல் உங்­க­ளுக்கு எவ்­வாறு கிடைத்­தது? அந்த மோதல் குறித்து சற்று விளக்­க­மாக கூறுங்கள்?

A:- நான் யுத்­த­க­ளத்தில் இருக்­க­வில்லை. யுத்­த­க­ளத்தில் இருந்த சிப்­பாய்­களால் எனக்கு தெரி­விக்கப்பட்ட­தையே நான் அறிவேன். 16ஆம் திகதி இரவு புலிகள் பாது­காப்பு வல­யங்­களை தகர்த்து தப்பிச் செல்ல முற்­பட்ட போது கடு­மை­யான மோதல் இடம்­பெற்­றது.

இரவு வேளையில் களப்பில் பிர­பா­கரன் பதுங்­கி­யி­ருந்தார். அவரின் மெய்ப்­பா­து­கா­வ­லர்­களும் பதுங்­கி­யி­ருந்­தனர். இரா­ணு­வத்­தினர் வரு­வதை பார்த்து பிர­பா­க­ரனின் மெய்­ப்

பா­து­கா­வ­லர்கள் தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர். அந்த மோதலின் போதே பிர­பா­கரன் உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம்.

அவர் மீது துப்­பாக்கிச் சூடு பட்­டி­ருக்கும் விதத்­தினை பார்த்­த­துமே விளங்­கு­கின்­றது. அப்­ப­கு­தியின் ஒரு பக்­கத்­தி­லி­ருந்து தான் துப்­பாக்கிச் சூடுதான் நிகழ்ந்­தி­ருக்­கின்றது என்­பது தெளிவா­கின்­றது. எந்­த­வொரு சந்­தர்ப் பத்­திலும் பிர­பா­க­ரனை பிடித்து விட்டோம் என்ற செய்தி கூறப்­ப­ட­வில்லை. அவ­ரு­டைய உடல் கண்டு பிடிக்­கப்­பட்­ட­தென்றே அறி­விக்­கப்­பட்­டது.  

அவரை உயி­ருடன் பிடித்துக் கொண்­டி­ருக்கும் புகைப்படங்கள் கூட ஒரு சந்­தர்ப்­பத்­திலும் வெளிவ­ர­வில்லை. அவரை உயி­ருடன் பிடிப்­ப­தற்­கான எந்த சந்­தர்ப்­பமும் எமக்கும் கிடைத்­தி­ருக்­க­வில்லை.

Q:-பிர­பா­க­ரனின் இளைய மகன் இரா­ணு­வத்­தினால் பிடிக்­கப்­பட்ட பின்­னரே கொலை செய்­யப்­பட்டார் என்று கூறப்­ப­டு­கின்­றது. புகைப்­பட ஆதா­ரங்கள் சிலவும் உள்­ளன. முன்னாள் தூதுவர் எரிக் சொல்­ஹெய்மும் இந்த விடயம் குறித்து விமர்­சித்­துள்ளார்? இது­பற்றி தாங்கள் என்ன கூறு­கின்­றீர்கள்?

A:- இந்த விடயம் குறித்து பரி­சீ­லனை நடத்­தினோம். எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் பாலச்­சந்­தி­ரனை பிடித்து வைத்­தி­ருந்­தமை குறித்த தக­வல்கள் இல்லை. ஆகவே அவ­ரு­டைய மர­ணமும் யுத்­த­மொன்றின் போது தான் நடந்­தி­ருக்கும் என்று நான் கரு­து­கின்றேன்.

பிர­பா­க­ரனின் மூத்த புதல்வர் சார்ள்ஸ் அன்­டனி தந்­தையை விட்டு தனி­யாக சென்று யுத்தம் செய்­தவர் என்று கூறலாம். ஆனால் இவர் அவரைப் போன்று தனி­யாகச் சென்று யுத்தம் செய்யக் கூடிய வய­து­டை­ய­வ­ராக இருக்­க­வில்லை. அதனால் அவர் (பாலச்­சந்­திரன்) பிர­பா­க­ர­னு­ட­னேயே இருந்­தி­ருப்பார். இவ்­வா­றான வரை தனி­யாக விட்டு பிர­பா­கரன் சென்­றி­ருக்­க­மாட்டார் அல்­லவா? பிர­பா­கரன் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லி­லேயே அவரும் உயி­ரி­ழந்­தி­ருப்பார். உத்­தி­யோக பூர்­வ­மாக நான் அறிந்து கொண்ட விபரம் இது தான்.

இவ்­வி­டயம் குறித்து பர­வ­லாக பேசு­கின்­றார்கள். ஒசாமா பின்­லேடன், அவரின் மனைவி, அவர்­களின் பிள்­ளைகள் என்று எவ­ரு­டைய மரணம் குறித்தும் பேச­வில்லை. அவர்களை நிரா­யு­த­பா­ணி­யாக இருந்­த­போதே சுட்­டுக்­கொன்­றார்கள். அதனை அமெ­ ரிக்க ஜனா­தி­பதி உள்­ளிட்­ட­வர்கள் நேர­டி­யாக பார்த்­துக்­கொண்­டி­ருந்­தார்கள்.  

எரிக் சொல்ஹெய்ம், ஐ.நா. அதி­கா­ரிகள் உள்­ளிட்­ட­வர்கள் ஏன் இவ்­வி­டயம் குறித்து பேசு­வ­தில்லை? கேள்வி எழுப்­பு­வ­தில்லை? ஆனால் இலங்­கையின் யுத்­த­க­ளத்தில் இடம்­பெற்ற அவ்­வி­ட­யத்தை பெரி­து­ப­டுத்தி விமர்­சிக்­கின்­றார்கள்.

எனக்கு இன்­னமும் நினை­வி­ருக்­கின்­றது. யுத்­தத்தின் இறுதி நாட்­களில் இரவின் எந்த நேரத்­திலும் கூட புலிகள் பாது­காப்பு வல­யங்­களை உடைத்­துக்­கொண்டு செல்­வார்கள் என்ற அச்­சத்­து­ட­னேயே சிப்­பாய்கள் இருந்­தார்கள். 16ஆம் திகதி இரவு ஒரு குழு களப்பு வழி­யாக பாது­காப்பு வல­யத்­தினை உடைத்துச் செல்ல முற்­பட்­டார்கள். அவ்­வாறு எந்த நேரத்­திலும் மற்றும் பல சம்­ப­வங்கள் நிக­ழக்­கூ­டிய இடத்தில் நடந்த சிறு விடயம் குறித்துத்தான் விசா­ரணை செய்ய முற்­ப­டு­கின்­றார்கள்.

ஒசாமா விட­யத்­தினை கண்­டு­கொள்­ளா­தி­ருக்­கின்­றார்கள். அதற்­காக ஒசாமா பின்­லேடன் கொலை செய்­யப்­பட்­டமை தவறு என்று கூற­வில்லை. எமது விவ­கா­ரத்­தினை ஒரு­வ­கை­யிலும் அந்த விவ­கா­ரத்­தினை இன்­னொரு வகை­யிலும் இரு­வி­த­மாக பார்ப்­பது ஏன் என்றே கேட்­கின்றேன்.

Q:-புலி­களின் புல­னாய்வுப் பிரிவு பொறுப்­பாளர் பொட்டு அம்மான் (சண்­மு­லிங்கம் சிவ­சங்­கரன்) கொல்­லப்­பட்­டரா? அவ­ரு­டைய உடல் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் அடை­யாளம் காணப்­ப­ட­வில்­லையே?

A:- புலிகள் அமைப்பின் முக்­கி­யஸ்­தர்கள் மோதல்­களில் இறந்­தார்கள். அவர்கள் எந்தச் சந்­தர்ப்­பத்தில் என்­பதை நாம் அறி­ய­வில்லை. கூடி­ய­ளவில் புலிகள் களப்பு வழி­யாக தப்பிச் செல்ல முற்­பட்ட போது நடை­பெற்ற தாக்­கு­தல்­க­ளுக்கு இலக்­காகி அத­னுள்­ளேயே இறந்­தி­ருக்­கலாம்.

அவ்­வாறு இறந்­த­வர்கள் யார் என்­பதை அறி­வ­தற்கு புல­னாய்­வுப்­பி­ரி­வினர் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்ட போதும் அந்த உடல்கள் உருக்­கு­லைந்­தி­ருந்­தன. அவ்வாறு காணப்­பட்­டதால் பொட்டு அம்மான் யார்? ஏனைய முக்­கி­யஸ்­தர்கள் யார் யார் என்­பதை அடை­யாளம் காண­மு­டி­ய­வில்லை.

Q:- பிர­பாக­ர­னின் மனைவி மதி­வ­தனி, மகள் துவா­ரகா ஆகியோர் குறித்தும் எவ்­வி­த­மான தக­வல்­களும் வெளியி­டப்­ப­ட­வில்­லையே?

A:- குறிப்­பாக கடல் மார்க்­க­மாக தப்பிச் செல்ல முற்­பட்ட விடு­த­லைப்­பு­லி­களின் கடற்­படை தள­பதி சூசையின் மனைவி, பிள்­ளைகள் உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்­களின் குடும்­பத்­த­வர்­களை நாம் உயி­ருடன் பிடித்­தி­ருந்தோம். ஆனால் அவர்­களை நாம் எதுவும் செய்­ய­வில்லை. அவர்­களை கடலில் வைத்து பிடித்­த­போதே நாம் நினைத்­தி­ருந்தால் யாரும் அறி­யாது அழித்­தி­ருக்­கலாம். நாங்கள் அவ்­வாறு செய்­ய­வில்லை. மனி­தா­பி­மா­ன­மா­கவே செயற்­பட்டோம்.

அவர்­களை கடற்­ப­டையின் பாது­காப்பில் வைத்­தி­ருந்தோம். ஆகவே பிர­பா­க­ரனின் பிள்­ளை­களும் குடும்­பத்­தி­னரும் எம்­மி­டத்தில் கிடைத்­தி­ருந்­தாலும் பாது­காத்­தி­ருப்போம். பிர­ பா­க­ரனின் தாயையும் தந்­தையையும் நாம் அறிந்­தி­ருக்­க­வில்லை.  

ஆனால் அவர்­களைப்பற்றி அறிந்து கொண்ட பின்பும் அவர்­களை பாது­காத்து வந்தோம். இவ்­வாறு செயற்­பட்ட நாம் பிர­பா­க­ரனின் குடும்­பத்­தி­ன­ருக்கு மாத்­திரம் வேறு­வி­த­மாக நடந்­து­கொண்­டி­ருப்­போமா? அவர்கள் பிடி­பட்­டி­ருந்­தாலும் இவ்­வாறு தான் நடத்­தி­யி­ருப்போம். அது எங்­களின் நற்­பெ­ய­ரை மேலும் வலு­வாக்­கி­யி­ருக்கும். கூச்­ச­லிடும் நபர்கள் அதனைப் பற்றி பேசு­வ­தில்லை.

Q:- இந்­திய அமை­திப்­படை காலத்தில் லிப­ரேஷன் ஒப­ரேஷன் நட­வ­டிக்­கையில் முக்­கி­யஸ்­த­ராக செயற்­பட்­டீர்கள். யாழ்.கோட்­டையில் இருந்து பல வரு­டங்கள் பணி­யாற்­றி­னீர்கள். ஜே.ஆர், டி.பி.விஜே ­துங்க போன்­ற­வர்­களால் கௌர­விக்­கப்­பட்ட நீங்கள் இரா­ணுவ சேவை­யி­லி­ருந்து விலகி அமெ­ரிக்கா செல்ல காரணம் என்ன?

A:- நான் இரா­ணு­வத்தில் 21 வரு­டங்­க­ளாக கட­மை­யாற்­றினேன். அக்­கா­லத்தில் அதிகம் வடக்­கி­லேயே சேவை­யாற்­றினேன். அப்­போது யாழ்ப்­பாணக் கோட்டை, வட­ம­ராட்சி ஆகிய நெருக்­க­டி­யான யுத்­தங்­களில் எனது கணி­ச­மான பங்­க­ளிப்பு இருந்­தது. லெப்­டினன்ட், மேஜர், லெப்­டினன்ட் கேணல் என சேவை­களை புரிந்தேன். இக்­காலம் தான் கடு­மை­யா­னது. நேருக்கு நேராக மிக நெருக்­க­டி­யான யுத்த காலத்தில் முன்­னின்று பணி­யாற்­ற­வேண்­டிய காலப்­ப­கு­தி­யாகும். அதற்கு பின்னர் பிரி­கே­டியர், ஜெனரல் போன்ற பத­வி­களே உள்­ளன. அப்­ப­த­வி­க­ளுக்­கான காலம் வரும்­போது தான் நான் அமெ­ரிக்­கா­வுக்குச் சென்றேன். தனிப்­பட்ட கார­ணங்­க­ளுக்­காகத் தான் சென்றேன்.

Q:-அக்­கா­லத்தில் காணப்­பட்ட அர­சியல் அழுத்­தங்­களால் வெளியே­றி­னீர்களா?

A:- இல்லை. அவ்­வாறு அர­சியல் அழுத்­தங்கள் எதுவும் இருக்­க­வில்லை. நான் சேவை­யாற்­றிய காலங்­களில் ஐக்­கிய தேசிய கட்சி தான் ஆட்­சியில் இருந்­தது. நான் தனிப்­பட்ட கார­ணங்­க­ளுக்­கா­கவே சென்­றி­ருந்தேன்.

Q:-12 ஆயி­ரத்­திற்கும் அதி­க­மான விடு­த­லைப்­புலி போரா­ளி­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளித்த நீங்கள் கே.பி. எனப்­படும் குமரன் பத்­ம­நாதன், கருணா அம்மான் எனப்­படும் விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன் ஆகி­யோ­ருக்கு புனர்­வாழ்வு அளிக்­காது உயர் பாது­காப்பு வழங்­கி­யுள்­ளீர்கள்? அதே நிலை­மையே தற்­போதும் தொடர்­கின்­றதே?

A:- குறிப்­பாக கே.பி.யை நாங்கள் சில ஆண்­டு­க­ளாக வைத்து பிரத்­தி­யே­க­மாக புனர்­வாழ்­வ­ளித்­துள்ளோம். அதனால் தான் அவர் தற்­போ­தி­ருக்கும் நிலை­மைக்கு முன்­னேற்­ற­ம­டைந்­துள்ளார். ஆனால் கருணா அம்மான் புலிகள் அமைப்­பி­லி­ருந்து பிரிந்து வந்து இந்­தி­யாவில் இரு வரு­டங்கள் இருந்­த­துடன் அர­சி­ய­லிலும் பங்­கேற்­றி­ருந்த கார­ணத்­தினால் அவர் இயல்­பா­கவே புனர்­வாழ்வு பெற்­று­விட்டார் என்றே கூற வேண்டும்.

Q:-தற்­போது விடு­த­லைப்­பு­லி­களின் திரு­கோ­ண­மலை மாவட்ட அர­சியல்துறை பொறுப்­பாளர் எழிலன் உள்­ளிட்ட 12 பேர் தொடர்பில் ஆட்­கொ­ணர்வு மனு மீதான வழக்கு விசா­ரணை நடை­பெ­று­கின்­றது. யுத்­தத்தின் இறுதி தரு­ணத்தில் வண.அருட்­தந்தை பிரான்சிஸ் ஜோசப் முன்­னி­லையில் இவர்கள் சர­ண­டைந்­த­தாக சாட்­சி­யங்கள் உள்­ளன. அவர்­க­ளுக்கு நடந்­தது என்ன?

A:- ஒவ்­வொரு நிகழ்­வு குறித்தும் நான் அறி­ய­வில்லை. சில சம்ப­வங்கள் தொடர்பில் இரா­ணுவத்­திடம் தவ­றான செயற்­பா­டுகள் இருந்­தி­ருந்தால் அது குறித்து ஆராய்ந்து நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் பணித்­தி­ருந்தோம். அதன் பிர­காரம் பல­ருக்கு சட்ட நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­பட்­டுள்­ளது. அதனால் சிறிய பிரச்­சினை ஒன்றை பொது­வான பிரச்­சி­னை­யாக காண்­பிக்க முயற்­சிப்­பது தவ­றாகும். தற்­போது அதுவே நிகழ்­வ­தற்கு முயற்­சிக்­கப்­ப­டு­கின்­றது.

 

எங்­க­ளு­டைய நிர்வாகம் அங்கு நடை­பெற்­றி­ருக்­க­வில்லை. அங்­கி­ருந்து கிடைத்த தக­வல்­களின் பிர­காரம் அதா­வது, உலக சுகா­தார, உணவு ஸ்தாப­னங்கள், ஐ.நா. மற்றும் தொண்டர் நிறு­வ­னங்கள், மாவட்ட செய­லா­ளர்கள் ஆகிய தரப்­புக்கள் மூன்று இலட்சம் மக்கள் மறு­பு­றத்தில் இருக்­கின்­றார்கள் என்று தான் அறி­யத்­தந்­தன.

அவர்­க­ளுக்கு தான் நாம் உணவும் அனுப்­பினோம். யுத்தம் முடிந்த பின்பும் மூன்று இலட்­சத்­துக்கும் கிட்­டி­ய­வர்கள் எம்­பக்கம் வந்­தார்கள். அவ்­வாறு வந்­த­வர்­களை இடைத் ­தங்கல் முகாம்­களில் தற்­கா­லி­க­மாக தங்­க­வைத்து சொற்ப காலத்­தினுள் நாம் மீள்­கு­டி­ய­மர்த்­தினோம். நாங்கள் செய்த நல்ல விட­யங்­களை எவரும் பேசு­வ­தில்லை. சர்­வ­தே­சமும் இவ்­வி­ட­யத்தில் தவ­றி­ழைத்­தது.

Q:-எனினும் யுத்­தத்தில் மனித உரிமை மீறல்கள், மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் இடம்­பெற்­ற­தா­கவும், யுத்­தத்தின் பின்னர் ஆறு ஆண்­டுகள் ஆட்­சியில் இருந்­த­போதும் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் குறித்து முழு­மை­யான கரி­சனை காட்­ட­வில்லை என்றும் ஜன­நா­ய­கத்­தினை உறு­திப்­ப­டுத்தி நல்­லி­ணக்­கத்­தினை கட்­டி­யெ­ழுப்ப தவ­றி­விட்­ட­தா­கவும் அடுக்­க­டுக்­காக குற்­றச்­சாட்­டுக்கள் காணப்­ப­டு­கின்­றனவே?

A:- உண்­மையில் இந்த விட­யங்­களில் மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் குறித்து தமிழ் மக்­களின் புரிதல் தவ­றா­னது. தமிழ் மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் சரி புலம்­பெயர் தமிழ் அமைப்­புக்­களும் சரி உண்­மையை மறைக்­கின்­றன.

சர்­வ­தே­சத்தின் பல தரப்­புக்­களுக்கும் உண்மை நடப்­புக்கள் குறித்து புரி­தலே இல்லை. சில தலை­வர்­க­ளுக்கு உண்மை தெரிந்­தாலும் அதனை மறைக்­கின்­றனர்.

ஆனால் புலிகள் இரா­ணுவ ரீதியில் தோற்­க­டிக்­கப்­பட்­டார்கள். அதனால் தமிழ் மக்­க­ளுக்கும் சரி மொத்த நாட்­டிற்கும் சரி பாத­க­மான செயல்கள் எவையும் நிக­ழ­வில்லை என்­பதே உண்­மை­யாகும்.

யுத்த காலத்தின் பின்னர் எமது செயற்­பா­டுகள் அனைத்தும் வெளிப்­ப­டை­யா­கவே அமைந்­தி­ருந்­தன. மூன்­றரை வருட குறு­கிய காலத்தில் நிலக்கண்ணி வெடி­களை அகற்­றினோம். இடம்­பெ­யர்ந்த அனை­வ­ரையும் விரைவில் குடி­ய­மர்த்­தினோம். அதன் பின்னர் கல்வி, சுகா­தாரம், போக்­கு­வ­ரத்து, மின்­சாரம், குடிநீர் கட்­ட­மைப்­புக்­களை மேம்­ப­டுத்தி, விவ­சா­யத்துறையை மேம்­ப­டுத்தி அதற்­கான நீரையும் பெற்­றுக்­கொ­டுத்தோம்.

குறிப்­பாக யாழ்ப்­பா­ணத்தில் இலங்­கை­யி­லேயே மிகச்­சி­றந்த வைத்­தி­ய­சா­லையை அமைத்தோம், அதன் பின்னர் படிப்­ப­டி­யாக மக்கள் காணி­க­ளையும் விடு­வித்தோம். மக்­க­ளுக்கு வீடு­களை வழங்க இந்­திய அர­சாங்­கத்தின் உத­வி­யுடன் திட்­டங்­களை முன்­னெ­டுத்தோம். 2014 ஆம் ஆண்­டா­கின்­ற­போது இரா­ணு­வத்­தி­ட­மி­ருந்த நூற்­றுக்கு 90 வீத­மான வீடு­களை நாங்­க­ளா­கவே முன்­வந்து மக்­க­ளி­டத்தில் வழங்­கினோம்.

முக்­கிய இடங்­களில் மாத்­தி­ரமே இரா­ணுவ முகாம்­களை அமைத்தோம். பலா­லியை அண்­மித்த பகு­தி­களில் வசித்த மக்­களை குடி­ய­மர்த்­து­வது மாத்­தி­ரமே சற்று கடி­ன­மாக இருந்­தது. ஆனால் அதற்கு மாற்று வழி­களை மேற்­கொண்டோம் இருப்பினும் தெல்லிப்பளை பகுதிகளை விடுவித்தோம்.

2014 ஆம் ஆண்டு ஆகும்­போது 13ஆயிரம் விடு­த­லைப்­புலி போரா­ளி­க­ளுக்கும் கைது செய்­யப்­பட்ட 5 ஆயிரம் பேரில் 270 பேர் தவிர்ந்த அனைத்து தரப்­பி­ன­ரையும் புனர்­வாழ்­வ­ளித்து விடு­வித்­தி­ருந்தோம். புனர்­வாழ்­வ­ளித்த செயற்­பாட்­டிற்­காக சர்­வ­தே­சத்தின் பாராட்­டி­னையும் பெற்­றி­ருந்தோம்.

இதனை விடவும் முக்­கிய விட­ய­மொன்று உள்­ளது. இந்த பகு­தியில் பல ஆண்­டு­க­ளாக ஆயு­தக்­கு­ழுக்கள் காணப்­பட்­டன. குறிப்­பாக டக்ளஸ், சித்­தார்த்தன், கருணா ஆகி­யோ­ரையும் அவர்­களின் குழு­வி­ன­ரையும் உரு­வாக்­கி­யவர்கள் நாங்கள் அல்ல. எமக்கு முன்­னைய ஆட்­சி­யா­ளர்­க­ளுடன் நட்­பா­க­வி­ருந்த ஆயு­தக்­கு­ழுக்கள்.

அவ்­வாறு ஆயுதம் தாங்­கிய குழு­வி­னரை நிரா­யுதபாணி­க­ளாக்­கினோம். அவர்­களை நிரா­யுதபாணி­க­ளாக்­கி­ய­மை­யா­னது அர­சியல் ரீதியில் எமக்கு பெரும் நஷ்­டமே. அதனை நன்கு அறிந்தும் ஜன­நா­ய­கத்­தினை ஸ்தாபிக்க வேண்டும் என்­ப­தற்­காக அக்­க­டி­ன­மான பணியை முன்­னெ­டுத்­தி­ருந்தோம்.

தேசிய பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்­வாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்டு மாகாண சபை வழங்­கப்­பட்­டது. அவ்­வாறு வழங்­கப்­பட்ட நாள் முதல் வடக்கில் மாகாண சபை நேர்த்தியாக இயங்­க­வில்லை. மஹிந்த ராஜ­ப­க் ஷவே வட­மா­காண சபையை முதன்­மு­த­லாக ஸ்தாபித்தார். விக்­கி­னேஸ்­வரன் இன்று முத­ல­மைச்சர் என்ற உய­ரிய இடத்தில் இருப்­ப­தற்கும் மஹிந்த ராஜ­ப­க் ஷவே காரணம்.

டக்ளஸ், சித்­தார்த்தன் போன்­ற­வர்­க­ளி­டத்தில் ஆயு­தங்­களை களை­யாது தேர்­தலை நடத்­தி­யி­ருந்தால் தற்­போது டக்ளஸ் தான் முத­ல­மைச்­ச­ராக இருந்­தி­ருப்பார். வடக்கில் இரா­ணுவ ஆட்சி இருப்­ப­தாக கூச்­ச­லி­டு­கின்­றார்கள். அப்­ப­டி­யென்றால் நாம் எமக்கு தேவை­யான வகையில் தேர்­தலை நடத்­தி­யி­ருப்போம்.

ஐக்­கிய தேசியக் கட்சி மாவட்ட சபை தேர்­தலை எவ்­வாறு நடத்­தி­யது என்­பதை அனை­வரும் அறி­வார்கள். நாங்கள் வாக்­குப்­பெட்­டி­களை நிரப்பி தேர்­தலை நடத்­த­வில்லை. எமக்கு தேவை­யான ஒரு­வரை முத­ல­மைச்­ச­ராக நிய­மிப்­ப­தற்கு சகல ஏதுக்­களும் இருந்­தன. ஆனால் நாங்கள் அப்­படி செய்­ய­வில்லை.

தமிழ் மக்­க­ளுக்­காக தேர்­தலை நடத்­தினோம். அவர்­க­ளுக்கு பொருத்­த­மா­ன­வரை தெரிவு செய்­வ­தற்கு இட­ம­ளித்தோம். இது தான் ஜன­நா­யகப் பண்பு. இதுதான் எமது அடிப்­படைக் கொள்கை. இது குறித்து எவரும் பேசு­வது கிடை­யாது.

யுத்­தத்தின் பின்னர் நாங்கள் முன்­னெ­டுத்த விடயங்­களே நல்­லி­ணக்­கத்­துக்­கான அடிப்­படைக் கார­ணங்­க­ளாக அமையும். தற்­போது தேர்தல் நடத்­தப்­ப­டு­வ­தில்லை. இந்த அர­சாங்கம் நல்­லி­ணக்­கத்­திற்காக என்ன செய்தது? அவ்வாறான ஒரு செயற் பாட்டையும் முன்னெடுக்கவில்லை. 

சர்­வ­தேசம் எமது ஆட்­சியைக் கவிழ்த்து புதிய ஆட்­சியை அமைக்க உத­வி­யது. ஆனால் இது­பற்றி அவர்கள் பேசு­வது கிடை­யது. பேசு­வ­தற்கு ஏன் தயங்­கு­கின்­றார்கள்? ஆகவே இந்த இடத்தில் தான் தமிழ் மக்கள் எம்மை புரிந்­து­கொள்­ளாத நிலைமை இருக்­கின்­றது என்று கூறு­கின்றேன்.

அதற்கு மூல­காரணம் தவ­றான அர­சியல் அடிப்­ப­டை­வா­தத்தினை முன்­னெ­டுப்­ப­தே­யாகும். ஆனால் தமிழ் மக்­க­ளுக்கு தற்­போது புரிய ஆரம்­பித்­தி­ருக்­கின்­றது என்று நினைக்­கின்றேன். முன்னாள் ஜனா­தி­பதி தமிழ் மக்­க­ளுக்கு நியா­ய­மான தீர்வு வழங்­கு­வ­தற்கு தடை­யாக இருந்த விடு­தலைப் புலிகள் அமைப்­பினை ஒழித்தார் என்­பதை தமிழ் மக்கள் புரிந்­து­கொள்ள வேண்டும்.

தமிழ் மக்­களும் ஏனைய மக்கள் கூட்­டத்­தி­னைப்­போன்று சுதந்­தி­ர­மான வாழ்க்­கை­யையும் சூழ­லையும் மஹிந்த ராஜ­பக் ஷ பெற்­றுக்­கொ­டுத்­தி­ருந்தார். தற்­போது பேசப்­படும் அதி­காரப்பகிர்வும் கூட அர­சி­யல்­வா­தி­களின் தேவைகள் மாத்­தி­ரமே. அதனை மக்கள் கோர­வில்லை. வட மாகாண சபை உரு­வாக்­கப்­பட்­டுள்ள நிலையில் மக்­களின் தேவை­களை தற்­போது வரையில் நிறை­வேற்ற முடி­யாது போயி­ருப்­பதேன்?.

நாட்டின் மருத்­துவ, பொறியியல், சட்­டத்­துறை, உயர்­கல்வி, வர்த்­தகம், பொரு­ளா­தாரம் உள்­ளிட்ட சகல துறை­க­ளிலும் தமி­ழர்கள் முன்­ன­ணியில் இருக்­கின்­றார்கள். உதா­ர­ண­மாக கொழும்பில் பௌத்த விகா­ரை­களைப் பார்க்­கிலும் அதி­க­மாக இந்துக் கோவில்­களே உள்­ளன.

ஆகவே அர­சியல் கார­ணங்­க­ளுக்­கா­கவே மக்கள் பிரிக்­கப்­ப­டு­கின்­றார்கள். நாம் வேறு­பட்ட இனங்­க­ளாக பிரிந்து நல்­லி­ணக்­கத்தை அடைய முடி­யாது. இலங்­கை­ய­ராக வாழ்ந்தால் மாத்­தி­ரமே அந்த இலக்­கினை அடைய முடியும். தமிழ் மக்கள் மஹிந்த ராஜ­பக்­ ஷவை அடிப்­ப­டையில் புரிந்­துகொள்­ள­வில்லை என்றே நான் நினைக்­கின்றேன்.

Q:- இர­சா­யன ஆயு­தங்­களை யுத்­தத்தின் இறு­தியில் பயன்­ப­டுத்­தி­ய­தாக குற்றச்சாட்­டுக்கள் உள்­ளனவே?

A:- எங்­க­ளி­டத்தில் இர­சா­யன ஆயு­தங்கள் இருக்­க­வு­மில்லை. நாங்கள் பயன்­ப­டுத்­த­வு­மில்லை. நாங்கள் இர­சா­யன ஆயு­தங்­களை பயன்­ப­டுத்­தினோம் என்றால் எமக்கு அதனை வழங்­கிய எந்­த­வொரு நாடும் அத்­த­கைய ஆயு­தங்­களை வழங்­கினோம் என்று கூற­மு­டியும்.

Q:- யுத்­தத்தின் இறு­தியில் மீட்­கப்­பட்ட தங்க நகை­களில் ஒரு­தொ­குதி மீள­ளிக்­கப்­பட்­டாலும் எஞ்­சி­யவை தொடர்பில் முரண்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­ற­னவே?

A:- அது தவ­றான கருத்­தாகும். இரா­ணு­வத்­தி­னாலும் பொலி­ஸா­ராலும் மீட்­கப்­பட்ட அனைத்து தங்­கங்­களும் இலங்கை மத்­திய வங்­கிக்கு அனுப்­பப்பட்­டன. ஒரு தொகுதி கிளி­நொச்சி உள்­ளிட்ட பகு­தி­களில் உரி­ய­வர்­க­ளி­டத்தில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. உரி­மை­யா­ளர்­களை தேட­மு­டி­யாத நிலையில் உள்ள தங்­கங்கள் இலங்கை மத்­திய வங்­கியில் இருக்க வேண்டும்.

அர­சியல் நலன்­க­ளுக்­கா­கவே இவ்­வா­றான பொய்­யான பிர­சாரம் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. இரா­ணு­வத்­தி­னரும், பொலி­ஸா­ருமே தங்­கங்­களை மீட்டு ஒப்­ப­டைத்­தார்கள். அவர்­க­ளி­டத்தில் விசா­ரித்து கோத்­தபாய ராஜ­ப­க் ஷவா, மஹிந்த ராஜ­ப­க் ஷவா பெற்­றுக்­கொண்டார் என்று வெளிப்­ப­டுத்­துங்கள்.

Q:-திரு­கோ­ண­ம­லையில் உள்ள கடற்­படை முகா மில் நிலக்கீழ் சிறைக்­கூடம் அல்­லது வதைக்­கூடம் ஒன்று தங்­களின் காலத்தில் செயற்­பட்­டுள்­ள­தாக தக­வல்கள் வெளியி­டப்­பட்­டுள்­ளனவே?

A:- திரு­கோ­ண­ம­லையில் நிலக்கீழ் பதுங்கு குழிகள் இருப்­பது உண்­மைதான். அதனை பிரித்­தா­னி­யர்­களே உரு­வாக்­கி­னார்கள். இரண்டாம் உலக யுத்தத்தின் போது பயன்­ப­டுத்­தி­னார்கள். நாங்கள் அவற்றை உரு­வாக்­க­வில்லை. அதன் பின்னர் ஆயு­தங்­களை பாது­காக்க அவற்றை பயன்­ப­டுத்­தி­னோமே தவிர வேறு எந்த விட­யத்­திற்கும் அதனை நாங்கள் பயன்­ப­டுத்­த­வில்லை.

Q:-ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­தினை முழ­ுமை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இரண்டு ஆண்­டுகள் கால அவ­கா­சத்­தினை தேசிய அர­சாங்கம் கோரி­யுள்­ளதே?

A:- ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­களில் சில­வற்றை நடை­மு­றைப்­ப­டுத்­தினால் மென்­மேலும் சிங்­கள மக்­க­ளி­டத்­தி­லி­ருந்து தமிழ் மக்கள் தூரப்­ப­டுத்­தப்­ப­டு­வார்­களே தவிர ஒற்­று­மைப்­பட மாட்­டார்கள்.

நாங்கள் யதார்த்­தத்­தினை புரிந்து கொள்ள வேண்டும். யுத்­தத்­தினை வெற்றி கொண்ட படை­யினர் யார்? 70 சத­வீ­த­மான சிங்­கள­மக்­களை பெரும்­பான்­மையாகக் கொண்ட நாட்டில் அனைத்து கிரா­மங்­க­ளையும் சேர்ந்த நபர்­களே பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்­றார்கள்.

அத்­த­கைய படை­யினர் இந்த நாட்­டி­லி­ருந்து பயங்­க­ர­வா­தத்­தினை ஒழிப்­ப­தற்கு ஆற்­றிய அர்ப்­ப­ணிப்­பான சேவை தொடர்­பாக பாரிய மரி­யாதை மக்கள் மத்­தியில் இருக்­கின்­றது. காரணம் அந்த மக்­களின் பிள்­ளைகள், சகோத­ரர்கள், கண­வர்மார் ஆகி­யோரே அந்த அதி­யுன்­னத சேவையைப் புரிந்­த­வர்கள்.

முழு நாட்­டிற்கும் பயங்­க­ர­வா­தத்­தினால் தான் பிரச்­சினை காணப்­பட்­டது என்­பதை அனை­வரும் அறி­வார்கள். ஆகவே அதனை இல்­லா­தொ­ழித்­த­வர்கள் படை­யினர். அதனால் அவர்­களை அன்று உயர்­மட்­டத்தில் அனை­வரும் பார்த்­தார்கள். இவ்­வா­றான தீர்­மா­னங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதால் அத்­த­கைய சேவை­யாற்றி உயர்­மட்­டத்­தி­லி­ருந்­த­வர்கள் பாதிக்­கப்­ப­டு­வார்கள் என்ற நிலைப்­பாடு சிங்­கள மக்கள் மத்­தியில் உரு­வாகும். அதன் பின்னர் எவ்­வாறு தமிழ், சிங்­கள மக்கள் மத்­தியில் ஒற்­றுமை உரு­வாகும்?

அத­னை­வி­டவும் உல­க­நா­டு­களை எடுத்­துப்­பார்த்தால் வெற்­றி­பெற்ற அணி­யினர் மீது எங்கும் குற்­றச்­சாட்­டுக்கள், விமர்­ச­னங்கள் காணப்­ப­ட­வில்லை. யுத்­தக்­குற்ற நீதி­மன்­றங்கள், தீர்ப்­பா­யங்கள் அனைத்தும் தோல்­விய­டைந்­த­வர்­க­ளுக்­காவே உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. தோல்­வி­ய­டைந்­த­வர்­களே யுத்­தத்­திற்கு கார­ண­மான தரப்­பினர்.

முதலாம், இரண்டாம் உல­கப்­போர்­களின் பின்னர் என்ன நடந்­தது? தென் ஆபி­ரிக்­காவில் என்ன நடந்­தது? தோல்­வி­ய­டைந்­த­வர்கள் மீதே குற்­றச்­சாட்­டுக்கள் கூறப்­பட்­டன. ஆனால் உலகில் முதற்­த­ட­வை­யாக இலங்­கையில் தான் வெற்­றி­ய­டைந்­த­வர்கள் மீது யுத்­தக்­குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­ப­டு­கின்­றன.

Q:-சண்டே லீடர் பத்­தி­ரிகை ஆசி­ரியர் லசந்த ­விக்­கி­ர­ம­துங்­கவின் படு­கொ­லைக்கு நீங்களே கார ணம் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா பாரா­ளு­மன்­றத்தில் பகி­ரங்­க­மாக கூறி­யுள்ளார்? 

A:- அதே­ பா­ரா­ளு­மன்­றத்தில் தான் பிர­தமரும் அக்­கொ­லையை யார் செய்­தார்கள் என பகி­ரங்­க­மாக கூறி­யுள்ளார். அது ஹன்ஸ்­சார்ட்­டிலும் உள்­ளது. இரா­ணு­வத்­த­ள­பதி பொன்­சே­காவின் அணி­யிரே என்று கூறி­யுள்ளார்.

Q:- பொது­ப­ல­சேனா அமைப்­பினை செயற்­ப­டுத்தும் சக்­தி­யாக நீங்கள் இருந்­தீர்கள். உங்­களின் ஆசீர் வா­தத்­துடன் அவ்­வ­மைப்பு தீவி­ர­மாக அச்­ச­மின்றி செயற்­பட்­டது. அதன் கார­ணத்­தி­னாலேயே அவ்­வ­ மைப்பு மீது எந்த நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை. என்­பதே இன்றும் முஸ்லிம் மக்­களின் நிலைப் ­பா­டா­க­வுள்­ளதே? 

A:- எனக்கும் அவ்வமைப்புக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக முஸ் லிம் களை அவ்வாட்சியிலிருந்து அந்நியப் படுத்த மேற்கொள்ளப்பட்ட சதியே அதுவாகும்.  

மஹிந்த ராஜபக் ஷவுக்கு அதிகளவான மக்கள் ஆதரவாக இருந்தனர். ஆகவே முஸ்லிம் களின் ஆதரவை நீக்கினால் தான் ஆட்சியை கவிழ்க்க முடியும் என்பதை ஆட்சியை கவி ழ்க்க சதித்திட்டம் தீட்டிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் அறிந்திருந்தன. 

ஒரு அமைப்பினை ஸ்தாபிப்பது என்பது இலகுவானதல்ல. சில பல காரணங்களின் அடிப்படையில் அந்த அமைப்பு உருவாகி யிருக்கின்றது. அதற்கு சில தரப்புக்கள் ஆதர வளித்துள்ளன. அப்போது நான் பாதுகாப்புச் செய லாளராக இருந்தேன். முஸ்லிம்களுடன் இந்த அமைப்புக்கு காணப்படும் முரண்பாடுகள் வலுத்துச் செல்லாதிருப்பதற்காக நடவ டிக்கை களை எடுத்திருந்தேன்.  

இதனை எங்களுடன் அன்றிருந்த அனைத்து முஸ்லிம் பிரதிநிதித்துவங்களும் நன்கறிவார் கள். துரதிர்ஷ்டவசமாக இப்பிரச்சினையைத் தீர்ப் பதற்கு அந்த பிரதிநிதித்துவங்களின் ஆதரவு கிடைத்திருக்கவில்லை என்பது தான் பிர தான காரணம்.  

குறிப்பாக முஸ்லிம் வர்த்தக பிரமுகர்கள், சமூக தலைவர்கள் உள்ளிட்டவர்களோடு கலந்துரையாடி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

Q:-இந்த செயற்பாடுகள் வெற்றியளித்தன வா?

A:- அரசியல் காரணத்தினால் இந்த விட யம் வேறுபக்கத்திற்கு திசை திருப்பப்பட்ட மையால் சுமுகமான நிலைமை ஏற்பட முடியாது போனது.  

Q:-அதிகாரம் மிக்க பாதுகாப்புச் செயலாள ராக இருந்த தங்களால் பொதுபலசேனா அமைப் பினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரமுடியாது போனதேன்? 

A:- அமைப்பொன்றை அவ்வாறு கட்டுப் படுத்த முடியாது.

Q:-அந்த அமைப்பினர் பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள், மீது தாக்குதல் நடத்தியதா கவும், முஸ்லிம்களின் கலாசாரத்தினை விமர்சித்து அச்சுறுத்தியிருக்கின்றமைக்கான பதிவுகள் உள்ள னவே?

A:- அந்த மாதிரியான நேரங்களில் நாங்கள் நடவடிக்கைகளை எடுத்திருந்தோம். எந்தவி தமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை யென்று கூறமுடியாது. வெறுமனே குற்றச் சாட்டுக்களை வைத்து அமைப் பொன்றை சிறையிலிட முடியாது. அவ்வாறான நடவ டிக்கையை முன்னெடுத்திருந்தால் இந்த நிலைமை மேலும் மோசமடைந் திருப்பதற் கான வாய்ப்புக்களே உள்ளன. ஆட்சியை முன்னெடுக்கும்போது அரசாங் கம் என்ற வகையில் சூட்சுமமாக முன்னெடுக்க வேண்டும். சொல்வதற்கு இலகுவாக இருக் கும். தேரர் ஒருவரை கைது செய்து சிறை யிலிட்டால் இப்பிரச்சினை இருமடங்காகி யிருக்கும் அபாயமே உள்ளது. 

Q:-2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலன்று நள்ளிரவில் தங்களின் பின்புலத்துடன் இராணு வப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதாகவும் சில தூதரகங்களின் தலையீட்டினால் கைவிடப்பட்டதாகவும் தகவல்கள் உள்ளனவே?  

A:- இராணுவப்புரட்சி மூலம் ஆட்சியைப் பிடிப்பதற்கு தேவைப்பாடு இருந்திருந்தால் அதனை நான் செய்திருப்பேன். ஜனநாயகத் திற்கு மாறாக அவ்வாறு செய்வது எனது நோக்கமல்ல. மஹிந்த ராஜபக் ஷ தேர்தல் முடிவுகளின் ஈற்றில் நிலைமைகளை புரிந்து கொண்டு தங்காலைக்குச் சென்றுவிட்டார். அப்படியொரு திட்டமிருந்திருந்தால் இரண்டு வருடங்களுக்கு முன்னதாக தேர் தலை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டி ருந்திருக்காது அல்லது மஹிந்த ராஜபக் ஷவும் வெளியேறிச் சென்றிருக்க மாட்டார்.  

மஹிந்த ராஜபக் ஷ திருட்டுத்தனமாக வாக்குகளை பெறவில்லை. தேர்தல்களை பிற்போடவில்லை. மக்களின் விருப்பத் தினை, ஆணையை வழங்கும் அதியுன்ன தமான ஜனநாயக உரிமையை வழங்கினார். யார் என்ன சொன்னாலும் மஹிந்த ராஜபக் ஷவின் காலத்தில் அதியுயர் ஜனநாயகம் காணப்பட்டது.

அதனை விடவும் இராணுவப்புரட்சிக்கான முயற்சி எடுக்கப்பட்டது எனக்கூறுவது இந்த நாட்டின் சட்டரீதியான இராணுவத்திற்கு எதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டாகும். அவ்வாறான இல்லாதவொரு குற்றச்சாட்டை முன்வைப்பது தவறு.

Q:- ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்வதற்கு விசேட நீதிமன்றக் கட்டமைப்பு அமைக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தரப்பினர் கூறு வது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

A:- விசேட நீதிமன்றங்கள் அமைப்பது எதற்காக? தற்போதுள்ள நீதிமன்றங்கள் போதாதா? நல்லாட்சி என்று கூறிக்கொண்டும் சுயாதீன நீதித்துறை எனக் கூறிக்கொண்டும் விசேட நீதிமன்றம் அமைக்க வேண்டிய தற்கான அவசியம் என்ன? இருக்கின்ற நீதிமன்றத்தைப் பயன்படுத்தித்தானே இத் தனை காலமும் சிறையிலிடுகின்றார்கள்.  

விசேட நீதிமன்றத்தினை அமைப்பதை விடவும் சுயாதீனமானதாக செயற்பட்டு உண்மையை வெளிப்படுத்தி பேச வேண்டும். அதனைவிடுத்து நபர்களை சிறையி லிடும் நோக்கத்துடன் செயற்படுவதாயின் அது சர்வாதிகாரத்தினை நோக்கிச் செல்லும் செயற்பாடாகும். சிறையிலிடும் நோக்கத் துடன் திட்டமிட்டு விசேட நீதிமன்றம் அமைப்பது தான் சதித் திட்டம்.  

Q:- தாங்கள் அரசியலில் பிரவேசிக்கப்போகின் றீர்களா?

A:- இல்லை. அப்படியொரு எண்ணமி ல்லை.

Q:- 19 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ள மையால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவுக்கு போட்டியிட முடியாது. அந்த வகையில் தாங்களே அந்த வேட்பாளருக்கான தகுதியானவர் என பல்வேறு மட்டங்களில் கணிக்கப்பட்டுள்ளதே?

A:- எனக்கு இங்கு தேர்தலில் போட்டியிட முடியாது. நான் இரட்டைக் குடியுரிமை கொண்ட நபராவேன்.

Q:- இறுதியாக மக்கள் சேவைக்காக தாங்கள் இரட்டைக் குடியுரிமையை இரத்துச் செய்ய மாட் டீர்களா?

A:- நீண்டதொரு புன்னகை.. நன்றி.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-08-26#page-6

  • தொடங்கியவர்

பிரபாகரன் முப்படைகளையும் கட்டியெழுப்பினார்: கோத்தபாய ராஜபக்‌ஷ!

 
பிரபாகரன் முப்படைகளையும் கட்டியெழுப்பினார்: கோத்தபாய ராஜபக்‌ஷ!

ஸ்ரீலங்கா படைத்தரப்பிடம் இருந்த ஆயுதங்களுக்கு நிகரான ஆயுதங்களை பிரபாகரனால் பெறமுடிந்தது என்றும் அதனாலேயே அவர் தன்னுடைய ஆயுத பலத்தை நம்பி பேச்சுவார்த்தை மூலம் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு விரும்பவில்லை என்று ஸ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கைப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய விசேட விசேட செவ்வி ஒன்றிலேயே இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ள சில முக்கிய விடயங்களாக, விடுதலைப் புலிகள் அமைப்பை பிரபாகரன் பூச்சியத்திலிருந்தே ஆரம்பித்தார். ஆனால் தரைப்படை கடற்படை வான்படை என முப்படைகளையும் அவரால் கட்டியெழுப்ப முடிந்துள்ளது. பரந்துபட்ட நிலப்பரப்பு ஒன்றினை தனது ஆழுகைக்குள் அவரால் வைத்திருக்க முடிந்தது.

இதன் காரணமாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் ஸ்ரீலங்கா படையினராலோ பொலிஸாரினாலோ செல்லமுடியாத சூழ்நிலை இருந்துள்ளது.

ஸ்ரீலங்காவின் பாதுகாப்புச் செயலாலராக நான் பதவி ஏற்கும் போது விடுதலைப் புலிகள் அமைப்பில் 35,000 உறுப்பினர்கள் இருந்துள்ளதாக தகவல் கிடைத்திருந்தது.

புலிகள், படையினரைத் தோற்கடித்த பகுதிகளில் முல்லைத்தீவு, ஆனையிறவு, பூநகரி ஆகியன முக்கியமானவை. புலிகளால் படையினர் தோற்கடிக்கப்படுவதற்கான ஏதுநிலைகள் இந்தப் பகுதிகளில் காணப்பட்டன. இதில் அவர்கள் வெற்றியும் கண்டார்கள்.

படையினருக்கு நிகரான ஆயுத பலத்தைப் பெறுவதற்கான ஏது நிலைகள் பிரபாகரனிடத்தில் இருந்ததனாலேயே அவர் அதன்மீது நம்பிக்கை வைத்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வைப் பெறுவதற்கு விரும்பவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Prabhakaran-builds-three-forces

இறுதிவரை நம்பிக்கையுடன் இருந்த பிரபாகரன் வீழ்த்தப்பட்டது எப்படி?

 
 

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தென்னிலங்கை பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் விடுதலைப் புலிகள் பற்றியும் அவர்களின் இறுதிக் கட்டம் தொடர்பாகவும் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் பின்வருமாறு தெரிவித்துள்ளார்..

தன்னால் இறுதி வரை யுத்தம் செய்ய முடியும், வெற்றி பெற முடியும், இந்த நிலைமையை மாற்ற முடியும் என பிரபாகரன் நம்பிக்கையுடன் இருந்தார்.

இறுதி யுத்தத்தின் போது 50 பேர் சரணடையத் தயாராக இருப்பதாக நோர்வேக்கான முன்னாள் தூதுவர் தெரிவித்திருந்தார். ஆனால் அது குறித்து மேலதிக தகவல்கள் எதையும் அவர் தெரிவிக்கவில்லை.

எனினும் பிரபாகன் எச்சந்தர்ப்பத்திலும் சரணடைவதற்கு தயாராக இருக்கவில்லை. யுத்தம் நிறைவடைவதற்கு இரு மாதங்களுக்கு முன்னர் அவருடைய தொலைபேசி அழைப்பை நாம் கேட்டோம்.

இதன்போது கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனுக்கும் பிரபாகரனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலை செவிமடுத்தோம். அதில் கே.பி பின்வருமாறு தெரிவித்தார்..

உங்களால் யுத்தத்தை செய்யமுடியாது, எனவே கைவிடுங்கள். நீங்கள் முதலில் வெளியேறுங்கள். நீங்கள் வெளியேறி வெளிநாட்டுக்குச் செல்லுங்கள் பின்பு ஒரு சந்தர்ப்பத்தில் நாட்டுக்குத் திரும்பிச் சென்று பார்க்கலாம் என்றார்.

ஆனால் பிரபாகரன் அதனை ஏற்கவில்லை. என்னால் நிலைமைகளை மாற்ற முடியும். நிலைமையை மாற்றுவதற்கு எனக்கு ஆயுதங்கள் மாத்திரமே தேவை என்று பதிலளித்தார்.

இதிலிருந்து நாம் விளங்கிக் கொண்டது பிரபாகரனுக்கு ஒருபோதும் சரணடையும் எண்ணம் இருக்கவில்லை என்பதே எனவும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/prabhakaran-was-not-ready-to-surrender

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ட்ரேட் மார்க் அரசியல் வியாபாரம்(காந்தி, எம்ஜியார் மாதிரி), இலங்கையையும் தொற்றிவிட்டதா..? :unsure:

 

பிரபாகரனை உயிருடன் பிடிக்கவில்லை. அதற்கான சந்தர்ப்பமும் எமக்கு கிடைக்கவில்லை. அவர் உயிரிழந்து விட்டதாக யுத்தகளத்தில் இருந்த இராணுவத்தினரே எனக்கு அறிவித்தனர் என இறுதி யுத்தத்தின் உக்கிர மோதல் குறித்து கோத்தபாய ராஜபக்ச கருத்து தெரிவித்துள்ளார்.

மே மாதம் 16ஆம் திகதி இரவு வேளையில் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டது. இதன்போதே அவர் உயிரிழந்திருக்கலாம்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவருடைய மெய்ப் பாதுகாவலர்களுடன் பதுங்கி இருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் பிரபாகரனின் இருப்பிடத்தை இராணுவத்தினர் முற்றுகையிட்டனர்.

இதன்போது பிரபாகரனின் மெய்ப் பாதுகாவலர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டது. இதனால்தான் பிரபாகரன் உயிரிழந்திருக்க வேண்டும்.

ஒரு பக்கத்தில் இருந்து தான் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. பிரபாகரனின் உடலை பார்க்கும் போது இது தெரிகின்றது.

எனினும் அவர் இறந்து விட்டார் என்ற செய்தி அப்போது களத்திலிருந்த இராணுவத்தினரே என்னிடம் கூறினார்கள்.

அவரை ஒருபோதும் உயிருடன் பிடிக்கவில்லை. அவருடைய உடல் கண்டு பிடிக்கப்பட்டு விட்டது என்றே கூறப்பட்டது. அவரை உயிருடன் பிடித்தமைக்கான எந்த தடயங்களும் இல்லை. அதற்கான புகைப்படங்களும் இல்லை, அந்த சந்தர்ப்பமும் எமக்கு கிடைக்கவில்லை என கோத்தபாய

http://www.tamilwin.com/politics/01/156457?ref=rightsidebar

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ராசவன்னியன் said:

இந்த ட்ரேட் மார்க் அரசியல் வியாபாரம்(காந்தி, எம்ஜியார் மாதிரி), இலங்கையையும் தொற்றிவிட்டதா..? :unsure:

 

பிரபாகரன், கோத்தாபாயா,மகிந்தா ,மைத்திரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.