Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவாஜி

Featured Replies

சிவாஜி ட்ரெயிலருக்காக விட்டுக் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்!

"காக்க காக்க" படத்தின் மூலம் பா°ட் கட்டிங் (குயளவ ஊரவவiபே) என்ற யுக்தியை எடிட்டிங்கில் புகுத்தியவர் ஆண்டனி. அதனை தொடர்ந்து °டைலான படங்களை விரும்புகிற இயக்குனர்களுக்கு இவர்தான் ஆ°தான எடிட்டர்.

இவர் பணிபுரியும் படங்களின் ட்ரெயிலர் காட்சிகளை இயக்குனர் இல்லாமலேதான் கட் பண்ணுவார். மேலும் அதற்கான இசையையும் இவரே ஏதாவது ஆங்கில பட சி.டி அல்லது ஆல்பத்திலிருந்து எடுத்து பயன்படுத்தி கொள்வார். இதற்கு ஒப்புக் கொண்டு தான் இயக்குனர்கள் அவரை ஒப்பந்தம் செய்வார்கள்.

"சிவாஜி" படத்துக்கும் இவர்தான் எடிட்டர். படம் முடிந்த நிலையில் மார்ச் முதல் வாரம் படத்துக்கான ட்ரெயிலர் வெளியீட்டு விழா நடக்கப் போகிறது. அதற்காக டி.வி மற்றும் தியேட்டர்களுக்கான ட்ரெயிலர் கட் பண்ணச் சொல்லி ஆண்டனியிடம் கேட்டிருக்கிறார்கள்.

பின்னணி இசை குறித்து ஏ.ஆர்.ரஹ்மானிடம் ஒப்புதல் கடிதம் வாங்கிக் கொடுத்துவிடுங்கள் என்று ஆண்டனி ஷங்கரிடம் கேட்டிருக்கிறார். அதன்படியே வாங்கி கொடுத்திருக்கிறார் ஷங்கர்.

சிவாஜிக்காக பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்திருக்கிறார் ரஹ்மான்.

  • Replies 351
  • Views 34.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சிவாஜி-தசாவதாரம்! -ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகுமா?

தசாவதாரம் படத்தில் 12-ம் நூற்றாண்டில் வாழும் ஒரு புராண கேரக்டரில் நடிக்கிறார் கமல். ஒன்பது வேடங்களில் இதுவும் ஒன்று என்பதை உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. இந்த கேரக்டரில் நடிக்க பூணு£ல் அணிந்தாராம் கமல். நிஜ வாழ்க்கையில் பூணுலை புறக்கணித்தவர் கமல்.

இதுவரை எட்டு வேடங்களை எடுத்துவிட்டார்களாம். இன்னும் ஒரு வேடம் மட்டும்தான் பாக்கி. அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பில், புறப்பட்டு போன பிறகுதான் இதுவரை நாம் பார்த்துக் கொண்டிருந்தது கமல் என்பதே ஷ§ட்டிங் பார்ப்பவர்களுக்கு தெரிந்ததாம். அந்தளவுக்கு மேக்கப் பிரமாதம் என்கிறார்கள்! வழக்கம்போல் இந்த படத்திற்கும் அமெரிக்காவிலிருந்துதான் மேக்கப் கலைஞரை அழைத்து வந்திருக்கிறார் கமல். ஒருவர் பெயர் மேஷரூம். மற்றொருவர் அனில் பெம்ரிகர்.

அஸின், மல்லிகாஷெராவத், ஜெயப்பிரதா ஆகியோர் கமலுக்கு ஜோடி போட்டிருக்கிறார்கள். மல்லிகா ஆடியிருக்கும் ஒரு பாடல் மலேசியாவில் எடுக்கப்பட்டிருக்கிறது. கமல் படங்களில் பாடல் வரிகளுக்கு ஒரு அர்த்தம் மட்டுமல்ல, பல அர்த்தங்கள் இருக்கும். இதோ மல்லிகா ஷெராவத் பாடும் இந்த பாடலுக்கு அர்த்தம் என்ன?

க...கருப்பனுக்கும்

வெ...வெள்ளையர்க்கும்

பே...பேதமில்லை

இ..இருட்டுக்குள்ளே

ப...படுக்கைக்குள்ளே...

வா...வாதமில்லை

கருப்பர்கள் ஓர் சுவை

வெள்ளையர் ஓர் சுவை

என்பது பழைய கட்சி

விளக்குகள் அணைந்தபின்

வெளுப்பென்ன கருப்பென்ன

என்பது எனது கட்சி...

பல வருடங்கள் கழித்து ரஜினி படமும் கமல் படமும் ஒரே நேரத்தில் வரப்போகிறது என்று முன்பு செய்திகள் வந்ததே! சிவாஜியும், தசாவதாரமும் ஒன்றாக வருமா? தசாவதாரம் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில்தான் முடிவடைகிறது. சிவாஜி படத்தின் படப்பிடிப்பு முடிந்தே விட்டது. ரசிகர்கள் யூகித்து கொள்ளவும்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

சிவாஜி புரிந்த விற்பனை சாதனை!

சிவாஜி கவுண்டவுன் தொடங்கிவிட்டது. அத்துடன் ரிக்கார்ட் பிரேக்கும் ஆரம்பித்து விட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு கேரள விற்பனையில் சரித்திர சாதனை புரிந்துள்ளது 'சிவாஜி.'

கேரளாவை பொறுத்தவரை அங்கு வெளியாகும் நேரடி மலையாளப் படங்கள் ஐந்து கோடி வசூலித்தால் அதுவே சாதனை. நிலைமை இப்படியிருக்க நம்ப முடியாத அளவுக்கு விற்பனையாகியிருக்கிறது 'சிவாஜி' யின் கேரள உரிமை.

அடுத்த மாதம் ரஜினியின் இப்படம் தென்னிந்தியா முழுவதும் ரிலீஸாகிறது. கேரளாவில் டப் செய்யப்படாமல் தமிழிலேயே ரிலீஸாகிறது. இதுவரை எந்த தமிழ் படத்துக்கும் இல்லாதவகையில் கேரளாவில் மட்டும் எழுபது திரையரங்குகளில் 'சிவாஜி' ரிலீஸாகிறது. கேரள சினிமா சரித்திரத்தில் இதுவொரு சாதனை.

கேரளாவில் 'சிவாஜி' யை திரையிடுவதற்கான உரிமையை பாலக்காடு கோவிந்தன் என்பவர் மூன்று கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார். பொதுவாக ஒரு தமிழ் படத்தின் கேரள உரிமை ஐம்பது லட்சத்தை தாண்டாத நிலையில் மூன்று கோடிக்கு விற்பனையாகி அனைவரின் விழிகளையும் விரிய செய்திருக்கிறது 'சிவாஜி.'

இத்துடன் நிற்கவில்லை ஆச்சரியம். ரஜினியும் ஷங்கரும் இணையும் படமென்பதால் கேரளாவில் படத்துக்கான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது. இதனால் பாலக்காடு கோவிந்தனிடமிருந்து வேறோருவர் 'சிவாஜி'யின் கேரளா வெளியீட்டு உரிமையை ஐந்து கோடிக்கு வாங்கியுள்ளார். அதாவது படம் ரிலீஸாகாமலே கோவிந்தனுக்கு லாபம் இரண்டு கோடி.

அப்படியானால் தமிழ் தெலுங்கு விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், படத்தின் தயாரிப்பாளர் ஆகியோர் எத்தனை கோடிக்கு கல்லா கட்டுவார்கள் என ஒரு தோராய கணக்கு போட்டாலே 'சிவாஜி' யின் விற்பனை சாதனை புரிந்து விடும்!

விடுப்பு : Viduppu.com

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ரஜினியின் சிவாஜி திரைப்பட பாடல் இன்டர்நெட்டில் திருட்டுத்தனமாக ரிலீஸ்

சென்னை : "சிவாஜி' பட பாடல் திருட்டுத்தனமாக இணைய தளத்தில் வெளியிடப்பட்டதால் படத்தின் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ரஜினி நடித்த, "சிவாஜி' படத்தை தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியிட ஏற்பாடு நடந்து வருகிறது. பாடல் கேசட் மற்றும் "சிடி'யை ஏப்ரல் 4ம்தேதி ஏவி.எம்., மியூசிக் நிறுவனம் வெளியிட உள்ளது. பாடல் கேசட் மற்றும் "சிடி'க்கு மிகப்பெரிய வரவேற்பு இருப்பதால் வெளியான முதல் நாளே பல கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.

"சிவாஜி' படத்தின் பணிகள் அனைத்தும் ரகசியமாக நடந்து வந்த போதும், முதலில் போட்டோக்கள் திருட்டுத்தனமாக இணைய தளத்தில் வெளியிடப்பட்டன. தொடர்ந்து வெளிநாட்டில் நடந்த படப்பிடிப்பு காட்சிகள் வெளியிடப்பட்டன. இது எப்படி நடந்தது என்பதை தயாரிப்பு நிறுவனத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த சூழ்நிலையில், கடந்த இரண்டு தினங்களாக, "சிவாஜி' படப் பாடல்கள் திருட்டுத்தனமாக இணைய தளம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் வாலி, வைரமுத்து எழுதிய மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதில் ஒரு பாடல் படத்தின் டைட்டில் பாடலாகும். இந்தப் பாடல் வெளியானதும் ரஜினி ரசிகர்கள் ஆர்வத்துடன் இணைய தளத்திலிருந்து மொபைல் போனுக்கு பதிவு செய்து கொண்டுள்ளனர்.

பாடல் இணையதளத்தில் வெளியானது குறித்து தாமதமாக தெரிந்து கொண்ட படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியடைந்துள்ளது. மேலும், அந்த இணைய தளத்தை முடக்கவும் ஏற்பாடு செய்துள்ளது. இந்த தவறுக்கு பின்னணியில் யார் உள்ளனர் என்ற விசாரணை நடந்து வருகிறது. போலீசில் புகார் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.

http://www.dinamalar.com/

எந்த இணையதளம் என்று தெறியுமா கப்பி அக்கா...

  • கருத்துக்கள உறவுகள்

தெரியலயே.

தெரிந்தால் எழுதுறேன்

சிவாஜி படத்தின் சில பாடல்களை இந்த இணைப்பில் கேட்கலாம் .....

http://www.tamilbeat.com/tamilsongs/newrel...vaji/index.html

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றும் கேட்க முடியல

இப்போ சரி

லீக் ஆன சிவாஜி பாட்டு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவாஜி படப் பாடல்கள், காட்சிகளோடு, எம்பி 3 வடிவில் இணையதளங்களில் சக்கைப் போடு போட ஆரம்பித்துள்ளது.

சிவாஜி படம் குறித்து ஆரம்பத்திலிருந்தே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள், பரபரப்புகள், சர்ச்சைகள். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே ரஜினி சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சைையக் கிளப்பின. கடுப்பான ஷங்கர், படப்பிடிப்பை படு ரகசியமாக நடத்தி வந்தார்.

இடையே புதுப் பரபரப்பு கிளம்பியது. சிவாஜி பட டிவிடி வெளியாகி விட்டதுதான் அந்த பரபரப்பு. இந்த செய்தியை நாம் முன்பே முதன் முதலில் தெரிவித்திருந்தோம். பிளாட்பாரத்தில் போட்டு சிவாஜி டிவிடியை விற்கிறார்கள் என்று கூறப்பட்டது.

சிவாஜி படத்தின் பாடல் வெளியீடு ஏப்ரல் 4ம் தேதி நடைபெறவுள்ளது. ஆனால் அதற்குள் எம்.பி 3 வெளியாகி விட்டதாம், அத்ேதாடு பாடல்கள் அனைத்துமே காட்சிகளோடு வெளியாகி இணையதளங்களில் சக்கை போடு போடுகிறது.

படத்தில் இடம் பெற்றுள்ள 6 பாடல்களில் 3 பாடல்கள், முழுக் காட்சிகளோடு அட்டகாசமாக வெளியாகியுள்ளது. இங்கிலாந்திருந்து நடத்தப்படும் ஒரு இணையதளத்தில் 22ம் தேதி அதிகாலை முதல் இந்தப் பாடல்கள் அந்த இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.

ஒரு கூடை சன்லைட், ஒரு கூடை மூன்லைட், வா வா சிவாஜி, சஹானா சாரல் ஆகிய அந்த மூன்று பாடல்களும் படு சூப்பராக வந்துள்ளன. சன்லைட், மூன்லைட் பாடலில் அமெரிக்க டான்ஸர்கள் ஆடியுள்ளனர்.

வா வா சிவாஜி பாடலை ஹரிஹரன்-சாதனா சர்கம் பாடியுள்ளனர். சஹானா சாரல் பாடலை உதித் நாராயணன் பாடியுள்ளார். மூன்று பாடல்களுமே ரஹ்மான் பாணி டச்சிங்கில் படு கலக்கலாக வந்துள்ளன.

சிவாஜி பாடல் வெளியாகி விட்ட செய்தி நிச்சயம் ஷங்கர் அன் கோவுக்கு சந்தோஷமானதாக இருக்க முடியாது. பெரும் அதிர்ச்சியூட்டும் விஷயமாகவே இருக்கும்.

படம் குறித்த தகவல்களையே படு பத்திரமாக பாதுகாத்து வரும் ஷங்கர், 3 பாடல்கள் எப்படி வெளியானது என்பது ெபரும் குழப்பமாக இருக்கும்.

ஷங்கரின் முந்தைய படமான பாய்ஸ் படத்திற்கும் இதே கதிதான் நேர்ந்தது. அதிகாரப்பூர்வமாக பாடல் வெளியிடும் முன்பே பாய்ஸ் பாடல் வெளியாகி விட்டது.

இப்போது சிவாஜி படப் பாடல் வெளியான விவகாரத்தில் உள்ளுக்குள்ளேயயேதான் யாரோ லீக் செய்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.

பாடல் பதிவுக் கூடத்திலிருந்தோ அல்லது ரஹ்மானின் இசைக் குழுவிலிருந்து சிலரோதான் இதற்குக் காரணமாக இருக்க முடியும் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த பாடல் லீக் குறித்து போலீஸில் ஏவி.எம். நிறுவனம் புகார் கொடுக்குமோ என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இதுகுறித்து ஏவி.எம். சரவணனிடம் நாம் கேட்ேபாது, கருத்து கூற மறுத்து விட்டார்.

அதிகாரப்பூர்வமாக ரிலீஸாகும் முன்பே திருட்டுத்தனமாக மூன்று பாடல்களை உருவி இணையதளத்தில் உலவ விட்டு விட்டனர். அதேபோல படத்தையும் முன்கூட்டியே காணும் வாய்ப்பையும் மறுத்து விட முடியாது

http://www.tamilbeat.com/tamilsongs/newrel...vaji/index.html

மூன்று பாடல்களும் காட்சியோடு வெளியாகி உள்ளதாக தற்ஸ்தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது இது உண்மையா?

Edited by மறுத்தான்

Ignorance of Tamil film actors towards Sri Lankan Tamil’s crisis should be given a lesson to open their eyes

Dear friends,

All these times the Sri Lankan Tamil expatriates

whom are living all around the world have been being contributed enormously towards the Indian Tamil film industry to sustain in their difficult time and also to grow in crores worth of payments are being earned by those top actors.

Even though none of the top actors, except a very few, have never given a single thought or voiced against Sri Lankan government’s genocide and atrocities to the innocent Tamils who are living in Tamil Eelam.

In this circumstances if we all expatriates get together and boycott the film called Sivaji acted by Rajni Kanth directed by Shanker and produced by AVM Saravanan (these 3 people are super star, super director and super producer respectively) costing them over 100 crores to produce and believing themselves most of the money can be recovered from Sri Lankan expatriates living all around the world.

We should all aware that by boycotting this film will give them a chance to realise to open their blind eyes towards

our grievances.

Don’t you all think that by seeing that film can be thrilled only for a few hours, but in the meantime by boycotting this film will give a real chance for the whole Tamil cinema industry to open their blind eyes and to lead their millions of fans to support our cause.

Please, please, please send this email to every one of your Tamil contacts all around the world and get some printouts and distribute to the people as maximum as you

can.

If we don’t seize this great opportunity at this very difficult time then we may not have the same again. And the history won’t ever forgive us. Once again please act as fast as you can.

Tamil Expatriates Association

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nalla muatchi vettriyadaiua vazhuthakal

Ignorance of Tamil film actors towards Sri Lankan Tamil’s crisis should be given a lesson to open their eyes

Dear friends,

All these times the Sri Lankan Tamil expatriates

whom are living all around the world have been being contributed enormously towards the Indian Tamil film industry to sustain in their difficult time and also to grow in crores worth of payments are being earned by those top actors.

Even though none of the top actors, except a very few, have never given a single thought or voiced against Sri Lankan government’s genocide and atrocities to the innocent Tamils who are living in Tamil Eelam.

In this circumstances if we all expatriates get together and boycott the film called Sivaji acted by Rajni Kanth directed by Shanker and produced by AVM Saravanan (these 3 people are super star, super director and super producer respectively) costing them over 100 crores to produce and believing themselves most of the money can be recovered from Sri Lankan expatriates living all around the world.

We should all aware that by boycotting this film will give them a chance to realise to open their blind eyes towards

our grievances.

Don’t you all think that by seeing that film can be thrilled only for a few hours, but in the meantime by boycotting this film will give a real chance for the whole Tamil cinema industry to open their blind eyes and to lead their millions of fans to support our cause.

Please, please, please send this email to every one of your Tamil contacts all around the world and get some printouts and distribute to the people as maximum as you

can.

If we don’t seize this great opportunity at this very difficult time then we may not have the same again. And the history won’t ever forgive us. Once again please act as fast as you can.

Tamil Expatriates Association

  • தொடங்கியவர்

எந்த இணையதளம் என்று தெறியுமா கப்பி அக்கா...

http://www.tamilbeat.com/tamilsongs/newrel...vaji/index.html

http://66.90.103.126/~rose4you/www.only4ro...s%202007/Sivaji

http://mp3.tamilgrounds.com/index.php?q=f&...e<br%20/>

http://www.vanninet.com/

இத்தனை தளங்களிலும் பாடல் கேக்கலாம்

  • தொடங்கியவர்

முந்தியெல்லாம் திருட்டு வீசீடீ தான் வரும் இப்போ திருட்டு எம்பீதிறீயும் வ்ர ஆரம்பிச்சிடிச்சு :(

முந்தியெல்லாம் திருட்டு வீசீடீ தான் வரும் இப்போ திருட்டு எம்பீதிறீயும் வ்ர ஆரம்பிச்சிடிச்சு :(

நம்மள மாதிரி ஆட்கள் இந்த உலகத்தில நிறைய பேர் போல,நினைக்கவே சந்தோசமாக இருக்கு

:P

  • தொடங்கியவர்

நம்மள மாதிரி ஆட்கள் இந்த உலகத்தில நிறைய பேர் போல,நினைக்கவே சந்தோசமாக இருக்கு

:P

நீர்தான் களவா சிவாஜி பாடல்கலை ரிலீஸ் பண்ணினீரென்டு எனக்கு தெரியும் பொத்திட்டு இரும்: அப்புரம் சங்கர் சண்டைக்கு வந்திடப் போறாரு :P

நீர்தான் களவா சிவாஜி பாடல்கலை ரிலீஸ் பண்ணினீரென்டு எனக்கு தெரியும் பொத்திட்டு இரும்: அப்புரம் சங்கர் சண்டைக்கு வந்திடப் போறாரு :P

எல்லாரையும் உம்மை மாதிரி என்று நினைத்துவிட்டீரோ

:angry:

சிவாஜி பாட்டு லீக்: ரஹ்மான் மீது ஷங்கர் டவுட்? RSS

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவாஜி படப் பாடல்கள், காட்சிகளோடு, எம்பி 3 வடிவில் இணையதளங்களில் சக்கைப் போடு போட ஆரம்பித்துள்ளது.

சிவாஜி படத்தின் 3 சூப்பர் ஹிட் பாடல்கள், அதிகாரப்பூர்வ ரிலீஸுக்கு முன்பே லீக் ஆகி இணைய தளத்தில் வெளியான விவகாரத்தில் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீது இயக்குநர் ஷங்கர் சந்தேகப்படுகிறாராம்.

ஏண்டா இந்தப் படத்தைத் தயாரித்தோம் என்று ஏவி.எம். சரவணன் நொந்து போகும் அளவுக்கு சிவாஜி பல தலைவலிகளைக் கொடுத்து வருகிறது. படத்தின் ஸ்டில்கள் குண்டக்க மண்டக்க வெளியாகி முதலில் டென்ஷன் கொடுத்தது.

அடுத்து படத்தின் விற்பனை தொடர்பாக சகட்டு மேனிக்குத் தகவல்கள் வெளியாகி சரவணனை டென்ஷன்படுத்தியது. இப்போது சிவாஜி படத்தின் 3 பாடல்கள் எம்.பி.3 வடிவில் வெளியாகி கலக்கி எடுத்துள்ளது.

பாடல்கள் அதிகாரப்பூர்வமாக ரிலீஸாகும் முன்பே 3 பாடல்கள் வெளியாகி விட்டது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. யார் இதற்கு காரணம், ஹூ இஸ் தி பிளாக் ஷீப் என்ற கேள்வி ஏவி.எம். ஸ்டூடியோவுக்குள் முட்டி மோதி எக்கோ அடித்துக் கொண்டிருக்கிறது.

தற்போது இதில் ஒரு சுவாரஸ்யமான திருப்பம் ஏற்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ரஹ்மானும் அவரது உதவியாளர்களும்தான் பாடல் வெளியானதற்கு முக்கியக் காரணம் என இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளாராம்.

ஆனால் இதுகுறித்து ஷங்கரோ அல்லது சரவணனோ, ரஹ்மானிடம் எதுவும் பேசவில்லையாம். ஆனால் இந்த விவகாரம் குறித்து குற்றவாளி யார் என்பதைக் கண்டறியுமாறு சென்னை காவல்துறையை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.

ரஹ்மான் மீது ஷங்கருக்கு சந்தேகம் கிளம்பியுள்ளது, திரையலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை ஜாக்கிரதையாக கையாள ஏவி.எம். நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். இல்லாவிட்டால் வேறு பாதையில் பிரச்சினை திசை மாறி விடுமோ என்று அது அஞ்சுகிறது.

இன்னொரு கோணத்திலும் இந்த லீக் விவகாரம் அலசப்படுகிறது. அதாவது படத்தின் பாடல் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக ஏவி.எம். நிறுவனம் அறிவித்தவுடன், உலகளாவிய வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை வாங்கியுள்ள ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு ஆடியோ டிராக்குகளை அனுப்பி வைத்து விட்டனராம்.

எனவே அங்கிருந்தும் கூட பாடல்கள் லீக் ஆகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறதாம்.

படத்தின் பாடல்கள் முன்கூட்டியே திருட்டுத்தனமாக வெளியாகி விட்டது சிவாஜி யூனிட்டுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதனால் படத்துக்கு என்ன மாதிரியான பாதிப்பு ஏற்படும் என்ற பயமும் தயாரிப்பாளர் தரப்பில் நிலவுகிறது.

பாடல்கள் வெளியானது குறித்து ரஜினி கருத்து தெரிவிக்காமல் இருந்து வருகிறார்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக இன்னொரு ஷாக் நியூஸ் இது. கவிஞர் வைரமுத்துவை அமெரிக்காவிலிருந்து ஒருவர் போனில் தொடர்பு கொண்டுள்ளார்.

அவரிடம், நீங்கள் பூம்பாவை ஆம்பல் ஆம்பல், புன்னகையோ மையல் மையல் என எழுதியுள்ளீர்களே, அதன் அர்த்தம் என்ன, பாடல் வரிகள் ஆபாசத் தொணியில் இருக்கிறதே என்று கேட்டாராம். அவர் கூறியதைக் கேட்டதும் இந்த பாடல் உங்களுக்கு எப்படித் தெரியும் என்று வைரமுத்து ஷாக் ஆகி விட்டாராம்.

மொத்தத்தில், சிவாஜி பாடல் லீக் விவகாரம் கோலிவுட்டை பெரும் கலக்கு கலக்கி வருகிறது.

http://thatstamil.oneindia.in/specials/cin...aji_070324.html

Edited by Subiththiran

மூன்று பாடல்களும் காட்சியோடு வெளியாகி உள்ளதாக தற்ஸ்தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது இது உண்மையா?

பாடல் காட்சியோடு வெளியானது என்பதைப் பற்றி தெரியவில்லை .... ஆனால் பாடல்கள் டவுண்லோட் பண்ணி கேட்க கூடியமாதிரி நிறைய சைட்ல கிடக்கு..... நானும் கேட்டுப்பார்த்தன்... பாடல்கள் பரவாயில்லை :lol::unsure:

எம்பி3 மட்டும் தான் வெளியானது என்று நானும் நினைக்கின்றேன். காட்சியோடு வெளியானது உண்மையில்லை போலுள்ளது.

இதில் இருக்கும் பாட்டை கேட்டு பாருங்கள் 4வது பாட்டுவந்திருக்குது

http://koluvithaluvi.blogspot.com/2007/03/blog-post_25.html

  • தொடங்கியவர்

சிவாஜி பாடல்கள் எப்படி திருடு போனது?

சிவாஜி. நடிகர் ரஜினிக்கு ஒரு கூட்டம்.ஏ.ஆர்.ரகுமானுக்கு ஒரு பட்டாளம், டைரக்டர் சங்கருக்கு ஒரு திரள். இப்படி எல்லோரும் சிவாஜி படத்தின் பாடலுக்கு காத்திருக்க, எல்லோரையும் ஏமாற்றுவது போல இணையத்தில் சிவாஜி படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளிவந்து இருக்கின்றது.ஏப்ரல் 4ஆம் தேதி பாடல் வெளியிடுவது என அறிவித்து இருந்தார்கள்.ஆனால் வியாழன் காலை UK வலைதளம் ஒன்று, மூன்று பாடல்களை MP3 வடிவத்தில் வெளியிட்டு உள்ளது.

முதலில் பாடல்களை கேட்கும் போது இது சிவாஜி பாடல் தானா என்ற சந்தேகம் எழுந்தது. பின்னர் ரகுமானின் வேலைப்பாடு தெரிந்து உண்மை என முடிவிற்கு வரவைக்கின்றது. வெளியான மூன்று பாடல்களில் ஒன்று மெலடி”சஹானா சாரல் பூத்ததோ”- உதித் நாராயணன் குரலில் அருமையாக வந்துள்ளது.நல்ல தமிழ் குரல்கள் நாளெல்லாம் தொலைக்காட்சிகளில் கண்டெடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள், அதை விட்டு அதே குரலுக்கு ஏன் போகின்றார்கள் என தெரியவில்லை. மற்றொன்று “ஒரு குடை சன்லைட், ஒரு குடை மூன்லைட்” என்று பட்டையை கிளப்பும் பாடல் . வார்த்தைகளை கொஞ்சம் கஷ்டப்பட்டு கேட்க வேண்டும்.ராப் பாடல் வகை போல் தோன்றுகின்றது.சங்கர் காட்சியமைப்பில் விளையாடி இருப்பார் என்பது தெளிவாக தெரிகின்றது.வெளிநாடுகளில் படம் பிடித்த பாடல் இதுவாக தான் இருக்கும். அடுத்ததாக வாஜி வாஜி - சிவாஜி என்று துவங்கும் பாடல்.நிச்சம் ஹிட். ஹரிஹரன் - சாதனா சர்கம் பாடி இருக்கிறார்கள்.

மற்ற மூன்று பாடல் எப்படி இருக்கு என்று தெரியவில்லை.

முறையாக பாடல் வெளியிடாமலே இப்படி பாடல் திருட்டுபோவது எப்படி என்று தெரியவில்லை. பலருடைய உழைப்பு திருட்டுபோவதை தடுக்கப்பட வேண்டும். எப்படியும் ஏப்ரல் 4ஆம் தேதி ரகுமானுக்கு பயங்கர வசூல் காத்து இருக்கின்றது.

சிவாஜி பற்றி பேசும்போது சென்ற வாரம் என் அக்கா மகள் சொன்ன கதை நினைவிற்கு வருகின்றது. கிருபானந்த வாரியார் ஒரு கூட்டத்தில் பேசும் போது “என் அப்பன் முருகனின் தந்தை யார் என தெரியுமா?” என கேட்டிருக்கிறார். அதற்கு கூட்டத்தில் இருந்த ஒருவர், முந்தைய இரவு திருவிளையாடல் பார்த்துவிட்டு வந்திருந்தார் போல, “சிவாஜி” என சத்தமாக கூறி இருக்கிறார். அதற்கு கூட்டமே ஹோ வென சிரித்துவிட்டதாம். அதற்கு வாரியார் “எதற்கு சிரிக்கின்றீர்கள்?. அவர் சொன்னது சரியான பதில் தான். நீங்க காந்தியை காந்திஜி, நேருவை நேருஜி என்று ஜி போட்டு அழைப்பதை போல சிவாவை சிவாஜி என அழைத்துள்ளார்” என சொன்னாராம்.

அதனால தான் கேட்கிறேன் சிவாஜி பாடல் எப்படி திருடுபோனது?.:-)

50 ரூபாய்க்கு சிவாஜி டிவிடி! அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி கதறல்!!

50 கோடி முதலீட்டில் அரும்பாடு பட்டு தயாரிக்கப்பட்ட சிவாஜி படத்தின் திருட்டு டிவிடி 50 ரூபாய்க்கு சென்னை நகர பிளாட்பாரங்களில் கூவிக் கூவி விற்கப்படுகிறது.

தென்னிந்திய திரையலக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப் பெரிய முதலீட்டில், மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தயாரிக்கப்பட்டுள்ள படம் சிவாஜி. ஏவி.எம். நிறுவன வரலாற்றில் இப்படி ஒரு பரபரப்பான படம் தயாரிக்கப்பட்டதில்லை என்று கூறும் அளவுக்கு மிகப் பெரிய மெகா பட்ஜெட் படம் சிவாஜி.

இப்படிப்பட்ட படம் இப்போது வெறும் 50 ரூபாய்க்கு தெருவில் வைத்து விற்கப்படுகிறது. சென்னையின் புறநகரான நங்கநல்லூரில், ஒரு டிவிடி கடைக்கு எதேச்சையாக போக நேர்ந்தது. அந்தக் கடைக்காரர் ஒரு டிவிடியைக் காட்டினார்.

என்ன படம், என்ன விவரம் என்று எதுவும் அந்த டிவிடியில் இல்லை. ஆனால் கடைக்காரர், நமது காதை அருகில் இழுத்து கிசுகிசுத்தார். சிவாஜி பட டிவிடி சார் இது. படத்தின் 40 நிமிடக் காட்சிகள் இதில் உள்ளது. 50 ரூபாய்தான், வேணுமா என்று அவர் கூறக் கூற நமக்கு தலை சுற்றிப் போனது.

நிஜமாவா என்று நாம் ஆச்சரியம் காட்டியபோது, மெய்யாலும்தான் சார், குவாலிட்டியைப் பற்றிக் கவலைப்படாதீங்க, டிஜிட்டல் பிரிண்ட் இது. படு சூப்பராக இருக்கும், தியேட்டரில் பார்ப்பது போலவே எஃபக்டிவாக இருக்கும் என்று உத்தரவாதமும் கொடுத்தார்.

ஷாக்கிலிருந்து மீளாத நிலையில், நாம் உடனே படத்தின் பி.ஆர்.ஓ. பெரு துளசிபழனிவேலைப் போனில் பிடித்து விசாரித்தோம். மேட்டர் தெரியுமா என்று அவரிடம் கேட்டபோது, அப்படியா சார், எனக்கும் ஒரு காப்பி வாங்கிக் கொடுங்க சார் என்றார் படு கூலாக!.

தொடர்ந்து அவரே, தினசரி சிவாஜி குறித்து ஒரு செய்தி வருகிறது. ஒவ்வொரு செய்திக்கும், வதந்திக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் எங்களுடைய வேலைதான் கெட்டுப் போகும். ஏவி.எம். சரவணன் சார் சொல்வதுதான் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல். இதற்கு அவரே பதில் சொல்லட்டும் என்றார்.

முதலில் பட ஸ்டில்கள் லீக் ஆனது, பின்னர் படமே லீக் ஆனதாக செய்தி வந்தது. சமீபத்தில் 3 பாடல்களை இணையதளத்தில் உலவ விட்டனர். இப்போது 40 நிமிட படக் காட்சிகளை வெளியில் விட்டுள்ளனர். அடப் பாவிகளா..

http://thatstamil.oneindia.in/specials/cin...aji_070328.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் சிவாஜி படத்தை திரையிடுவதற்கு போட்டியாக இருக்க, ஐரோப்பாவிலும் சிவாஜியை திறந்துவிட மன்னிக்கவும் திரையிட சில மப்பு மாபியாக்கள் மன்னிக்கவும் விஐபியள் போட்டி இடுவதாக தெரியவருகிறது அந்த வகையில் ஏ.வி.எமிடருந்து...

சுவிசில் அப்படத்தை திரையிட திரு.சின்னப்பு என்பவர் ரூபா 34.90 பைசாவுக்கும்.

பிரான்சில் திரையிட திரு.ஆட்டுக்கால் அப்பாஸ் சாத்திரி 29ரூபா 30 பைசாவுக்கும்..

அவுஸ்ரேலியாவில் திரையிட சேர்.ஹந்தப்பு 28 ரூபா 32 பைசாவும்..

மேலும் மாப்பு, கொழுப்பு, உறைப்பு ஆகிய விஐபியள் ஒன்றினைந்து உலகமெங்கும் அவ் திரைப்படத்தினை திரையிட ரூபா 40, 99 பைசாவுக்கு சங்கரிடமிருந்து படத்தை வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலை கொமடி இணையத்தளமான தேனி.கொம் இணையத்தளம் உறுதிப்படுத்தி உள்ளது. :D:)

Edited by Danklas

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.