Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவாஜி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவாஜி திரைப்படம் பற்றி திண்ணை இணையத்தில் காணப்பபட்ட பதிவு கொஞ்சம் வேறுவிதமாக இருந்தது. அதனை நன்றியுடன் உள்ளிடுகிறேன்.

Saturday June 23, 2007

ரஜினியின் "சிவாஜி"யின் வசூல் சாதனை - திரைப்படத்தின் சாதனையா? - ஏ.வி.எம்.நிறுவனத்தின் வியாபார உத்தியின் சாதனையா?

திசைகள் அ.வெற்றிவேல்

தமிழ் ஊடகங்கள்(?) மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ரஜினியின் "சிவாஜி" வெளிவந்து வெற்றிகரமாக தமிழகம் மட்டுமின்றி,உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.இந்திய அளவில் அதிக விலைக்குப் போன முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையுடன் ஊடகங்களின் துணையுடன் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி ஓடிக்கொண்டிருக்கும் "சிவாஜி",இதுவரை வந்த தகவலின் படி 50 விழுக்காடு மட்டுமே எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தள்ளதாக பார்வையாளர்கள் கருத்து சொல்கிறார்கள்.neither a rajini nor a shankar movie என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சித்துள்ளது. தமிழக மக்கள் இந்தப் படத்தை இன்னுமொரு ரஜினி படம் அல்லது இன்னுமொரு ஷங்கர் படம் என்ற அளவில் தான் எதிர்பார்ப்புகளை வைத்திருந்தார்கள்.ஆனால் தயாரித்த நிறுவனம் ஏ.வி.எம் அல்லவா..இதே எதிர்பார்ப்புகளுடன் விட்டால் தான் எதிர் பார்த்த அளவுக்கு அதிகமான லாபத்தை அடைய முடியாது என்ற நோக்கத்தில்,ஷங்கர் படத்தை முடித்துக் கொடுத்த போதும் வேறு வேறு காரணங்கள் கூறி தள்ளிவைத்து ,ஊடகங்கள் உதவியுடன் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அந்தப் பின்னணியில் வியாபாரம் பார்த்துள்ளனர் ஏ.வி.எம். நிறுவனத்தினர்.

தமிழகத்தில் மட்டும் 115 கோடிக்கு விற்றதாக தினமலர் இணையதளம் கூறுகிறது.மதுரை,திருநெல்வேலி மாவட்டங்களுக்கு மட்டும் 7.5 கோடிக்கு விநியோக உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.திரையரங

  • Replies 351
  • Views 34.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவாஜிக்காக இவ்வளவு பக்கங்களை தாண்டி யாழ்களம் வெற்றிநடை போடுகின்றது.மீண்டும் சொல்கின்றேன்.ஊருக்குபதேசம் உனக்கல்லடி மகளே.(ஒரு சிலருக்காக சொல்கின்றேன் "சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது" )

சிவாஜிக்காக இவ்வளவு பக்கங்களை தாண்டி யாழ்களம் வெற்றிநடை போடுகின்றது.மீண்டும் சொல்கின்றேன்.ஊருக்குபதேசம் உனக்கல்லடி மகளே.(ஒரு சிலருக்காக சொல்கின்றேன் "சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது" )

அட நீங்களொன்று கழுதைக்கு உபதேசம் காதில் ஓதினாலும் அபயக்குரலே அபயக்குரல் தான் என்றும் ஒரு பழமொழி உண்டுங்களே. அதை ஏன் மறந்தீங்கள். இனி; வரம்பு, மதில், தூண், அரசமரத்தடி என்று பலவற்றிலிருந்தும் விமர்சனம் வந்தாலும் வரும். எட்டாப்பழம் புளிக்குமுங்க. :):blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவாஜி திரைப்படம் பற்றி திண்ணை இணையத்தில் காணப்பபட்ட பதிவு கொஞ்சம் வேறுவிதமாக இருந்தது. அதனை நன்றியுடன் உள்ளிடுகிறேன்.

Saturday June 23, 2007

ரஜினியின் "சிவாஜி"யின் வசூல் சாதனை - திரைப்படத்தின் சாதனையா? - ஏ.வி.எம்.நிறுவனத்தின் வியாபார உத்தியின் சாதனையா?

திசைகள் அ.வெற்றிவேல்

தமிழ் ஊடகங்கள்(?) மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ரஜினியின் "சிவாஜி" வெளிவந்து வெற்றிகரமாக தமிழகம் மட்டுமின்றி,உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.இந்திய அளவில் அதிக விலைக்குப் போன முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையுடன் ஊடகங்களின் துணையுடன் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி ஓடிக்கொண்டிருக்கும் "சிவாஜி",இதுவரை வந்த தகவலின் படி 50 விழுக்காடு மட்டுமே எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தள்ளதாக பார்வையாளர்கள் கருத்து சொல்கிறார்கள்.neither a rajini nor a shankar movie என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சித்துள்ளது. தமிழக மக்கள் இந்தப் படத்தை இன்னுமொரு ரஜினி படம் அல்லது இன்னுமொரு ஷங்கர் படம் என்ற அளவில் தான் எதிர்பார்ப்புகளை வைத்திருந்தார்கள்.ஆனால் தயாரித்த நிறுவனம் ஏ.வி.எம் அல்லவா..இதே எதிர்பார்ப்புகளுடன் விட்டால் தான் எதிர் பார்த்த அளவுக்கு அதிகமான லாபத்தை அடைய முடியாது என்ற நோக்கத்தில்,ஷங்கர் படத்தை முடித்துக் கொடுத்த போதும் வேறு வேறு காரணங்கள் கூறி தள்ளிவைத்து ,ஊடகங்கள் உதவியுடன் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அந்தப் பின்னணியில் வியாபாரம் பார்த்துள்ளனர் ஏ.வி.எம். நிறுவனத்தினர்.

தமிழகத்தில் மட்டும் 115 கோடிக்கு விற்றதாக தினமலர் இணையதளம் கூறுகிறது.மதுரை,திருநெல்வேலி மாவட்டங்களுக்கு மட்டும் 7.5 கோடிக்கு விநியோக உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.திரையரங?கு உரிமையாளர்களிடம் ஒரு திரையரங்குக்கு 30-60 லட்சம் வரை வசூலிக்கப்பட்டுள்ளது.மொத்த தொகையும் கொடுத்தால் தான் படப்பெட்டி என்று ஜூன் 15 க்கு முன்னரே விநியோகஸ்தர்கள்

வசூலித்துக் கொண்டார்கள்.இப்பொழுது அதை வசூலிக்கும் பொறுப்பு என்ற கத்தி திரையரங்கு உரிமையாளர்கள் தலையில்.. இந்த 30-60 லட்சம் வசூலிக்க முடியுமா? என்று பைத்தியம் பிடித்த நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள்.தமிழ்த் திரைப்பட

வரலாற்றில் "சந்திரமுகி"க்கு ஒரு தனி இடம் உண்டு.அதனது வசூலை இப்படம் முறியடிக்கும் என்று எதிர்பார்ப்புகளை ஊடகத்தின் உதவியுடன் திட்டமிட்டு வளர்த்தெடுத்து அதற்கேற்ப அறுவடை செய்துள்ளார்கள் ஏ.வி.எம்.அவர்கள்.கடந்த நான்கு ஐந்து நாட்களில் வந்துள்ள நிலவரப்படி வசூலில் சந்திரமுகிக்குப் பக்கத்தில் வந்தாலே அதுவே இப்படத்தின் சாதனையாக இருக்கும் என்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.

மாவட்டத் தலைநகரில் உள்ள திரையரங்குகளுக்கு 30 முதல் 45 வரை வியாபாரம் ஆகியுள்ளது.மதுரையில் ஒரு திரையரங்கு 60 லட்சம் கொடுத்து இப்படம் வாங்கியுள்ளது.மதுரையில் 5 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.சந்திரமுகிக?கு வந்த பெண் ரசிகைகளின் கூட்டம் இப்படத்திற்கு இருக்கப் போவதில்லை என்றும் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். ஒரு மாவட்டத் தலைநகரில் வெளியாகி 100 நாட்களில் சந்திரமுகிக்கு கிடைத்தது 25 லட்சம் தான். சந்திரமுகிக்கே அந்த நிலை என்றால்..சிவாஜி வெளியிட்ட திரையரங்கு உரிமையாளர்களை கூடிய சீக்கிரம் ஏர்வாடி,குணசீலங்களில் பார்க்கலாம்.

நுகர்வோர் கலாச்சாரத்திற்கு அடிமையாகி,கடனுக்கு எல்லாவற்றையும் வாங்கிப் போட்டு,கடைசியில் தலையில் முக்காடு போட்டுக் கொண்ட குடும்பத் தலைவன் நிலைதான் இன்று "சிவாஜி "எடுத்த திரையரங்கு உரிமையாளர்களின் நிலை.உள்ளூர் தொழில் போட்டி, பொறாமை, மற்றும் சிவாஜி படம் வெளியிட்ட திரையரங்கு என்ற கிரீடத்திற்கு ஆசைப்பட்டு தலையைக் கொடுத்துள்ளார்கள் பல

திரையரங்கு உரிமையாளர்கள்.இதிலிருந்து தப்பிக்க திரையரங்குகள் செய்கிற முதல் வேலை பார்வையாளர்களின் கட்டணத்தை உயர்த்துவதுதான்.அது தான் தமிழகமெங்கும் இப்பொது நடக்கிறது. கலைஞர் தொலைக்காட்சியில் சிவாஜி வாங்கியுள்ளார்கள் என்ற செய்தி இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க முடியாமல்,அரசு நிர்வாகத்தை செயலிழக்கச் செயதுள்ளது.அரசும் கண்துடைப்பிற்காக ஒரு அறிக்கை வெளியிட்டு தனது கடமையில் இருந்து விலகிக் கொண்டுள்ளது.இந்த அநியாயத்தை தட்டிக் கேட்கப் போவதாச் சொன்ன விஜய.டி.ராஜேந்தர் மற்றும் பா.ம.க நிர்வாகிகள்என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.அரசு ஒரு சட்டம் போடுவதும் பின்னர் அதை நடைமுறைக்கு கொண்டு வராமல் அரசே அலட்சியம் செய்வதும்..இன்னும் எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை.

தினமலர் இணையதளத்தில் சிவாஜி பட செலவுப் பட்டியலில், ரஜினிக்கு 20 கோடியும்,லாபத்தில் 10 விழுக்காடு என்றும் ஷங்கருக்கு 5 கோடி,ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 1 கோடி என்ற வகையில் 50 கோடியும் மற்ற செலவுகள் 5 முதல் 10 கோடியும் மொத்த செலவு 60 கோடி என்றும் எழுதியுள்ளார்கள்.மற்ற 5 கோடி.ஊடகங்களூக்கு செலவு செய்ததாக இருக்கும் என்று நினைக்கிறேன்.ஊடகங்கள் எல்லாமே

இப்படத்தால் தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி வரப்போவது போல் நினைத்துகொண்டு எழுதி பக்கத்தை நிரப்பிவைத்தார்கள்.நடிப்படத?்கு 20 கோடி என்றும் ,வசூலில் 10 விழுக்காடு என்றதும், கடந்த 10 வருடங்களில் தான் நடித்த படங்களிலே இது தான் "பெஸ்ட்" என்று ரஜினியின் பேட்டி வேறு குங்குமம் இதழில்.குங்குமம் ஏன் வெளியிட்டது என்றால், அன்றைய நிலவரப்படி சன் தொலைக்காட்சி இப்படத்தை வாங்க வேண்டியது.சன் தொலைக்காட்சிக்கு இப்படம் வரும் என்ற நிலை இருந்த வரையில் தொடர்ந்து வாரவாரம் சிவாஜி படம் பற்றிய செய்திதான்.அது கலைஞர் தொலைக்காட்சிக்கு கை மாறியவுடன் விஜய்,அசின்,சூர்யா என்று அடுத்த வியாபாரத்திற்குப் போய்விட்டார்கள்.

ஒரு படத்தின் வெற்றி அப்படம் வெளியான நாளில் எப்படி தெரிய வரும்? படம் நன்றாக இல்லை என்றால் ரஜினியே ஆனாலும் "பாபா"வைப் போல் தோல்வியடைச் செய்துவிடுவார்கள் தமிழக மக்கள்.திரும்ப திரும்ப ரசிகர்களும், பெண்களும் கூட்டம் கூட்டமாக "சந்திரமுகி"க்கு வந்தது மாதிரி திரையரங்கு நோக்கி வந்தால், திரையரங்கு உரிமையாளர்களும் தான் செலவழித்ததைவிட லாபம் பார்த்தால் தான் இப்படம் வெற்றி என்று சொல்லவேண்டும்.

அதுவரை இந்த வசூல் சாதனை ஏ.வி.எம் நிறுவனத்தின் வியாபார தந்திரங்களுக்கும் உத்திகளுக்கும் கிடைத்த வெற்றியாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.இப்படம் வெற்றியா அல்லது தோல்வியா என்பதை 50 தினங்களுக்குப் பிறகு திரையரங்க உரிமையாளர்களிடம் விசாரித்துப் பின்னர் எழுதுகிறேன்.

பின் குறிப்பு 1: இப்படம் கறுப்புப்பணம் பற்றியதாம். அரசியல்வாதிகளின் கறுப்புப்பணத்தை மட்டுமே கேள்விக்குள்ளாக்குகிறார்கள

  • கருத்துக்கள உறவுகள்

புலத்துக்கு அகதியாக வந்து 7வருடங்கள் எதியோப்பியாவிலும், 2 வருடங்களாக சோமாலியாவிலும் குஜாலா வாழ்ந்து வரும் நான், இதுவரை எந்த ஒரு தமிழ் படத்தையும் சூவிட் மிச்சேயின் உதவியால் (வெப்சைட்) தியேட்டருக்கு சென்று பார்க்கவில்லை, விருப்பப்பட்டதுமில்லை, ஆனால் பல ஆங்கிலப்படங்களுக்கு சென்றுள்ளேன், (றோயல் பமிலி சம்பந்தப்பட்ட படமான த கிங்க் கொங்க், த வேல்ட் ஒவ் வோர், கொஸ்டெஜ், மிசன் இம்போசிபிள் உட்பட பல திரைப்படங்கள்),

ஆனால் நேற்று முந்தினம், சோமாலியா தலை நகரில் உள்ள திரையரங்கில் (டிரிஎஸ் சவுண்ட் சிஸ்ரம்) சிவாஜி படத்தை, பார்ப்பமெண்டு போனேன், அதிசயித்து விட்டேன், காரணம், கோடிக்கேற்ற படத்தைத்தான் எடுத்திருக்கிறார்கள், கதாப்பாத்திரங்கள் தேர்வு, கதை அம்சம் 40% இருந்தாலும், பாடல் காட்சிகள் எடுத்த விதம் (சகல பாடல்காட்சிகளும்) தூள்ள்!, பாடல்களோ அதைவிட சூப்பர்,

ரஜனியின் நடிப்பு சூப்பர், ரஜனியின் நடிப்பை தூக்கி விழுங்க கூடிய கமாரா மேன்,சிவாஜியில் இசைமையப்பாளர் + கமரமேனுக்கு சபாஸ் போடலாம்.

அதைவிட ஸ்ரேயா சூப்பரோ சூப்பர்ர், (ஸ்ரேயாவுக்கு ஒரு உம்மாவே சா சும்மாவே குடுக்கலாம் B) அட அவங்கட நடிப்புக்கு பாராட்டு குடுக்காலாம் எண்டு சொல்லவந்தன்.... :( ) அசினையோ, திரிசாவையோ போட்டிருந்தால் கூட இந்தளவுக்கு பாடல்காட்சிகளில் கலக்கி இருக்கமாட்டார்கள். பாடல்காட்சிகளை திரும்ப திரும்ப பார்க்கலாம். (தமிழ் சினிமாவில் எனக்கு பிடிக்காத ஒன்று பாடல் காட்சிகள், ஆனால் சிவாஜியில் எனக்கு பிடிச்சதே அந்த பாடல் காட்சிகள், காரணம் ரஹ்மான் இசை + பாடல் எடுக்கப்பட்ட விதம், அதற்காக தேர்வு செய்யப்பட்ட இடங்கள்).

மொத்ததில் ஒரு தரம் பார்த்தால் வெறுக்கும் தமிழ் சினிமாவில், சிவாஜி திரைப்படம் ஒரு திருப்பு முனையே.

ஆக மொத்தம் சிவாஜி ஒகெ....:D :D கூல்ல்ல்ல்ல்ல்... சும்மா அதிர்ர்ர்ர்ர்ர்தல்லா... :(

Edited by Danklas

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சங்கரின் சிவாஜி

கதை:

எல்லோருக்கும் தெரிந்த கறுப்புப் பணம் பற்றிய ஒரு வரிக் கதைதான் சங்கர் வழமைபோல் தன் பாணியில் அதிரடியாகவும் பிரமாண்டமாகவும் கொடுத்துள்ளார். இதனைப் பற்றி நான் அதிகம் அலட்டிக்கொள்ளவிரும்பவில்லை.

ரஜனி :

மீண்டும் ஒரு முறை ரஜனி தான் தான் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்ரார் என ஸ்டைலாலும் மேக்கப்பாலும் நிரூபித்திருக்கிறார். ரஜனியின் இளமையான தோற்றம் சூப்பர் ஸ்ரார் நாற்காலியைக் குறிவைக்கும் இன்றைய ஜெராக்ஸ் சூப்பர் ஸ்ரார்களான விஜய் அஜித் சிம்பு போன்றவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கும் என்பது வெளிப்படை உண்மை. ரஜனியிடம் இந்தப் படத்திலும் நடிப்பு மிஸ்சிங். முள்ளும் மலரும் தில்லு முல்லு ரஜனியை என்றுதான் பார்ப்போமோ. வழமைபோல் தன் காமெடியாலும் ஸ்டைலாலும் பைட்டாலும் கவர்ந்திருக்கிறார். ரஜனியைப் பொறுத்தவரை இந்தப்படம் பாட்ஷாவிற்க்கு அடுத்தபடமாக தன் வாழ்நாளில் கூறலாம்.

அதே நேரம் இந்தக் கதைக்கு ரஜனியைத் தவிர வேறு யார் நடித்திருந்தலும் படம் அவ்வளவாக ஓடியிருக்கமுடியாது.

ஸ்ரேயா :

ஒரு சாதாரண தமிழ்ப் பட கதாநாயகியாக பாடல்களுக்கு மட்டும் வந்துபோகிறார்ர். குளோசபில் முகத்தைக் காட்டுகிறபோது திரிஷா அசின் பரவாயில்லை போல் தெரிகிறது ( ஆனால் திரிஷாவினால் வாஜி வாஜி பாடலுக்கு ஸ்ரேயாபோல் கவர்ச்சி காட்டியிருக்க முடியாது). இவரை ஒரு அக்மார்க் தமிழ்ப்பெண்ணாக காட்டுகிறார்கள் ஆனால் வீட்டில் தாவணியுடன் இருக்கும் போதும் தொப்புள் காட்டுகிறார். பாடல்களில் தொப்புள் இடுப்பு இன்ன பிறவற்றால் ஸ்ரேயா தன் பணியைத் திறம்படச் செய்துள்ளார்.

திரிஷா நமீதா போன்றவர்களின் கவர்ச்சிக்கு ஆப்பு வைப்பது உறுதி.

விவேக் :ரஜனியுடன் கூடவே இருக்கிறார்(பாடல் காட்சிகளில் மட்டும் மிஸ்சிங்). சுஜாதாவின் வசந்த் பாத்திரம் போல் பெண்களைப் பார்த்து ஜொள்ளு பிளஸ் லொள்ளு பண்ணுகிறார். மற்றும்படி எந்த காமெடியும் மனதில் நிற்கவில்லை. அந்த நேரம் மட்டும் சிரிப்பு வருகிறது. விவேக்கிடம் ஒரு கேள்வி : உங்கள் சொல்லியடிப்பேன் எப்போ வெளிவரும்?

சுமன் :

தமிழ் சினிமாவுக்கு இன்னொரு அசத்தலான வில்லன் கிடைத்துள்ளார். உதட்டில் புன்சிரிப்புடன் இவர் செய்யும் வில்லத்தனங்கள் சூப்பராக இருக்கிறது. அதிலும் இவர் பெட்டிக்கடையில் பஜ்ஜி சாப்பிடும்போது முகத்தில் காட்டும் ரியாக்சன்கள் அமர்க்களமாக இருக்கிறது. ஆனால் பாத்திரப்படைப்புத் தான் கொஞ்சம் நெருடுகிறது. ஒரு தனிமனிதனால் ஒரு அரசாங்கத்தையே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமா? தமிழகச் சகோதரர்களிடம் இருந்து பதில் எதிர்பார்க்கிறேன்?

ஏ ஆர் ரகுமான் :

பாடல்களில் ரகுமான் தான் இருப்பை மீண்டும் காட்டியுள்ளார். சகல பாடல்களும் அருமையாக இருக்கிறது. ஆனால் பின்னணி இசையில் அவ்வளவாக சிரத்தை எடுக்கவில்லைபோல தெரிகிறது(படையப்பா பின்னணி இசை மாதிரி இல்லை). மிகமுக்கிய விடயம் டைட்டில் சூப்பர் ஸ்ரார் இசையும் கிராபிஸ்சும் ரஜனியின் அடுத்த(?) படங்களில் இனி உபயோகிக்கப்படும்.

சுஜாதா :

வழக்கம் போல் தன் இளமையான எழுத்துக்களால் வசீகரித்துள்ளார். இறக்கும் நாள் தெரிந்திருந்தால் வாழ்க்கை நரகமாகும் என்ற வசனங்கள் அவரின் ஆளுமையை காட்டுகின்றன. இம்முறை பாய்ஸ் மாதிரி எந்த இரட்டை அர்த்தவசனமும் இல்லை. அதே நேறம் ஜாதகம் ஜோதிடம் பற்றிய காட்சிகளில் குழப்புகிறார். ரஜனியின் ஜாதகத்தில் ரச்சுப் பொருத்தம் சரியில்லாதபடியால் ரஜனி இறப்பார் என்கிறார்கள் ஆனால் படத்தில் ரஜனி இறந்து மறுபடியும் வருகிறார். ஒரு வகையில் ஜோதிடம் உண்மையானதுபோல் தெரிகிறது இன்னொரு பக்கம் ஜோதிடம் பொய் போல் தெரிகிறது. இறுதியாக சுஜாதா என்ன சொல்ல வருகிறார் என்பதை கொஞ்சம் தெளிவாக சொல்லியிருக்கலாம். அடுத்த கற்றதும் பெற்றதும் கட்டுரையில் எழுதுங்கள்.

பீட்டர் ஹெயின் :

வாவ் அந்த ரைவின் கார் ஷேசிங் காட்சியிள் அவரின் உழைப்பு தெரிகிறது. இசை வளாகத்தில் அவரின் சண்டையுடன் காமெடியும் கலந்து ஜாக்கிசான் படம் பார்த்த உணர்வு ஏற்படுகிறது. கிளைமாக்ஸ் சண்டையிலும் சோடைபோகவில்லை. ஆனால் ரஜனி சுமனிடம் முதல் முறை பணம் வாங்கும் அந்த சண்டையில் கிட்டத்தட்ட 50 பேரை ரஜனி சமாளிப்பது நம்பும்படி இல்லை ( சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா).

இயக்குனர் சங்கர் :

என்னைப் போன்ற சங்கர் ரசிகர்களுக்கு இயக்குனர் சங்கர் ஏமாற்றம் அளித்துள்ளார். முதல்ப்பாதி சுந்தர். சி படம் பார்த்த உணர்வு. பாடல்களில் மட்டும் சங்கரும் அவருன் பிரமாண்டமும் தெரிகிறது. இறுதியில் மொட்டைபோட்ட ரஜனி காட்சிகளில் சங்கரின் பாணி தென்படுகிறது. பல இடங்களில் அடுத்தது இதுதான் என ஊகிக்க வைப்பதும் இவரது திரைக்கதை பழைய மொந்தையில் புதிய கள் போல் தென்படுகிறது. எம் எம் எஸ்சை பயன்படுத்தி ரஜனி தப்பும் காட்சியில் புதிய தொழில்னுட்பம் பயன்படுதும் இடங்களில் சங்கரிசம். ஆனாலும் ஒரு நிமிடம் கூட போரடிக்காத திரைக்கதையில் சங்கரின் அனுபவம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ஆணாலும் தியேட்டரை விட்டு வெளிவரும்போது இந்தியன் ஒரு நாள் முதல்வனும் அந்நியனும் மனதில் வந்துபோகிறார்கள். அடுத்த படம் என்ன யாருடன் ?

வீணடிக்கப்பட்டவர்கள் :

சாலமன் பாப்பையா, பட்டிமன்றம் ராஜா, மணிவண்ணன், ரகுவரன். அத்துடன் ஒளிப்பதிவாளர் கேவி ஆனந்த். எந்த ஒரு இடத்திலும் காமெராவில் புதிதாக ஏதும் காட்சிகளோ பிரேம்களோ இல்லை. பாடல்காட்சிகளில் மட்டும் பிரமாண்ட செட்டுகளை வைத்து விளையாடியிருக்கிறார்கள். வழமையான சங்கர் படத்தில் வருவதுபோல் கமெரா படம் பிடிக்கவில்லை.

பிடித்தவை :

1. ரஜனிகாந்த் ஓரிடத்திலும் சிகரெட் பிடியாதது.( அன்புமணி இம்முறையும் வாழ்த்துவாரா?).

2. வழமையான ரஜனி படங்களில் பெண்களுக்கு எதிரான வசனங்கள் காட்சிகள் வரும் இம்முறை அவை இல்லை.

3. பாடல்காட்சிகளும் அவைபடமாக்கப்பட்ட விதமும்.

பிடிக்காதவை :

1. ஸ்ரேயா.

2. ஒரு பாடலில் ஆடிய நயன் தாரா. அது நயன் தாரா என பக்கத்து சீட்டுக்காரர் சொல்லித்தான் தெரிந்தது. சிம்புவின் இழப்பு அவரை இப்படி வாட்டியுள்ளது. பேசாமல் நமீதாவை அந்தப்பாடலில் ஆடவிட்டிருக்கலாம்.

மனதில் எழும் சில கேள்விகள் :

1. இலவச கல்வி பற்றி பேசும் ரஜனி தன் ஆஸ்ரம் ஸ்கூலில் பணம் வாங்குகிறாரே ஏன்?

2 கறுப்புபணத்துக்கு எதிரான இந்தப் படத்தில் ரஜனி எவ்வளவு பணம் கறுப்பாக வாங்கினார்?

3. கறுப்புபணத்துக்கு எதிரான இந்தப் படத்துக்கு பிளாக்கில் ரிக்கெட் விற்பது நியாயமா?

4. இயக்குனர் சங்கரிடம் ஒரு கேள்வி? நீங்கள் லஞ்சத்துக்கு எதிராக எடுத்த இந்தியனும் ஊழல் செய்கின்ற அரசியல்வாதிகளுக்கு எதிராக எடுத்த முதல்வனும் மக்களிடம் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையா? இந்தியன் வெளிவந்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னமும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது ( சிவாஜியில் நிறைய காட்சிகளில் வெளிப்படையாக லஞ்சம் வாங்குகிறார்கள்).

5. இந்நாள் முன்னால் முதல்வர்கள் இந்தப்படம் பார்த்துள்ளார்கள். அவர்களது ஆட்சியில் நடக்கும் இந்த கொடுமைகள் அவர்களைப் பாதித்திருக்குமா? இல்லையா?

இறுதியாக எத்தனை நாட்டின் அவலங்களைச் சாடும் படங்கள் வந்தாலும் அரசியல்வாதிகள் திருந்தமாட்டார்கள். இந்தியா இலங்கை பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஒரு போதும் பொருளாதார வளர்ச்சியடையாது.

www.enularalkal.blogspot.com

டெல்லியைக் கலக்கும் சிவாஜி

டெல்லி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து டெல்லியில் கூடுதல் தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்பட்டுள்ளதாம். இதுவரை டெல்லியில் எந்தப் படமும் இத்தனை தியேட்டர்களில் திரையிடப்பட்டதில்லை என்பதால் டெல்லியிலும் சிவாஜி சாதனை படைத்து விட்டது.

சிவாஜி படம் உலகெங்கும் வசூல் மழையில் நனைந்து கொண்டுள்ளது. பல புதிய சாதனைகளையும் படைத்து வருகிறது. உலகம் பூராவும் அமர்க்களப்படுத்தி வரும் சிவாஜி, இப்போது தலைநகர் டெல்லியிலும் புதிய சாதனையை படைத்து விட்டது.

டெல்லியில், 2 மல்ட்டிபிளக்ஸ் வளாகத்திலும், கர்கோவனில் ஒரு தியேட்டரிலும்தான் முதலில் சிவாஜி திரையிடப்பட்டிருந்தது. ஆனால் ரசிகர்கள் கூட்டம் கட்டி ஏறியதால், அசந்து போய் இப்போது கூடுதல் தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்பட்டுள்ளதாம். தற்போது மொத்தம் 12 தியேட்டர்களில் சிவாஜி கலக்கலாக ஓடிக் கொண்டுள்ளதாம்.

இதுவரை தலைநகர் டெல்லியில் இத்தனை தியேட்டர்களில் எந்தப் படமும் திரையிடப்பட்டதில்லை என்பதால் சிவாஜி மூலம் தமிழ் சினிமா புதிய சாதனையை படைத்துள்ளது.

இதுகுறித்து பிவிஆர் சினிமா என்ற மல்ட்பிளக்ஸ் வளாகத்தின் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் துணைத் தலைவர் ஷாலு சபர்வால் கூறுகையில், சிவாஜி படத்துக்கு மிகப் பெரும் வரவேற்பு கிடைத்துல்ளது. இதனால் கூடுதல் திரையரங்குகளில் படத்தை திரையிட்டுள்ளோம். படம் அருமையாக உள்ளது. நான் படத்தைப் பார்த்தேன். எனக்கு படம் மிகவும் பிடித்து விட்டது என்றார் சபர்வால்.

மொழிப் பாகுபாடு இல்லாமல் பல்வேறு மொழி பேசுவோரும் சிவாஜியைப் பார்க்க கூடுகிறார்களாம். இதுவரை எந்தப் படத்திற்கும் இப்படி ஒரு வரவேற்பு கிடைத்ததில்லை என்று கூறப்படுகிறது.

டெல்லியின் ஆர்.கே.புரம், சத்தர்பூர் ஆகிய பகுதகளிலும் சிவாஜியின் சில காட்சிகள் படமாக்கப்பட்டன என்பதால் அந்தக் காட்சிகளைப் பார்க்கவும் டெல்லி ரசிகர்கள் ஆர்வமாக வருகின்றனர். டெல்லியில் கிட்டத்தட்ட 11 லட்சம் தமிழர்கள் உள்ளனர். அனேகமாக அனைவருமே சிவாஜியைப் பார்த்து முடித்திருப்பார்கள் என்று டெல்லி தமிழ் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

நன்றி தற்ஸ்தமிழ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி வானவில்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவாஜி பாருங்க
இதை இதை தான் நான் எதிர்பாத்தன்!!! நன்றி!!!

அனைத்து தமிழ் மக்களிற்கும் ஒரு துக்கமான செய்தி!! மனதை கல்லாக்கிக்கொள்ளுங்கள்.எனது மாநிலத்தில் இத் திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட்டவர் விடுதலைப்புலிகளின் எனது மாநிலத்திற்கான விளையாட்டுத்துறை பொறுப்பில் உள்ளவர்.ஆறு நியை தண்ணி போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்.

Edited by வடிவேல் 007

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் நேற்று முந்தினம், சோமாலியா தலை நகரில் உள்ள திரையரங்கில் (டிரிஎஸ் சவுண்ட் சிஸ்ரம்) சிவாஜி படத்தை, பார்ப்பமெண்டு போனேன், அதிசயித்து விட்டேன், காரணம், கோடிக்கேற்ற படத்தைத்தான் எடுத்திருக்கிறார்கள், கதாப்பாத்திரங்கள் தேர்வு, கதை அம்சம் 40% இருந்தாலும், பாடல் காட்சிகள் எடுத்த விதம் (சகல பாடல்காட்சிகளும்) தூள்ள்!, பாடல்களோ அதைவிட சூப்பர்,

ரஜனியின் நடிப்பு சூப்பர், ரஜனியின் நடிப்பை தூக்கி விழுங்க கூடிய கமாரா மேன்,சிவாஜியில் இசைமையப்பாளர் + கமரமேனுக்கு சபாஸ் போடலாம்.

அதைவிட ஸ்ரேயா சூப்பரோ சூப்பர்ர், (ஸ்ரேயாவுக்கு ஒரு உம்மாவே சா சும்மாவே குடுக்கலாம் B) அட அவங்கட நடிப்புக்கு பாராட்டு குடுக்காலாம் எண்டு சொல்லவந்தன்.... :( ) அசினையோ, திரிசாவையோ போட்டிருந்தால் கூட இந்தளவுக்கு பாடல்காட்சிகளில் கலக்கி இருக்கமாட்டார்கள். பாடல்காட்சிகளை திரும்ப திரும்ப பார்க்கலாம். (தமிழ் சினிமாவில் எனக்கு பிடிக்காத ஒன்று பாடல் காட்சிகள், ஆனால் சிவாஜியில் எனக்கு பிடிச்சதே அந்த பாடல் காட்சிகள், காரணம் ரஹ்மான் இசை + பாடல் எடுக்கப்பட்ட விதம், அதற்காக தேர்வு செய்யப்பட்ட இடங்கள்).

மொத்ததில் ஒரு தரம் பார்த்தால் வெறுக்கும் தமிழ் சினிமாவில், சிவாஜி திரைப்படம் ஒரு திருப்பு முனையே.

ஆக மொத்தம் சிவாஜி ஒகெ....:D :D கூல்ல்ல்ல்ல்ல்... சும்மா அதிர்ர்ர்ர்ர்ர்தல்லா... :(

ஆமா ஆமா , சும்மா அதிரரும் அண்ணாச்சி அதிரும்,நான் எல்லாரிட்டையும் (சுவப்பு எழுத்தில் எழுதி) சிவாஜியை புறக்கணிக்க சொல்லுவேன் . ஆனால் நான் மட்டும் பார்ப்பேன். :D அப்படிங்களா டன் கிளாஸு அண்ணாச்சி

:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:rolleyes: எந்த நடிகர்கள் மீதும் அரசியல் சாயம் பூசாதீர்கள். ரஜினி 'மூச்சு' விட்டாலும் அவர் அந்தக்கட்சியா இந்தக்கட்சியா என்ற பிரச்சனைக்குள் மாட்டிக்கொள்ளும் சூழ்நிலைக்கைதி அவர்.

ஈழத்தமிழர்களுக்கு அவர் உதவவேண்டும் என்பதன் கட்டாயம் என்ன?!.

நமக்குள் "கோடாரிக்காம்புகள்' முளைக்காது விட்டிருந்தாலே எம் ஈழம் என்றோ மலர்ந்திருக்கும், அந்த வகையில் ரஜினி எப்படி அதற்கு பொறுப்பாளி ஆவார்.?

எதற்காக ரஜினிமீது மாத்திரம் இத்தனை காழ்ப்புணர்ச்சி?

எந்த ஒரு பெரிய நிலையில் இருக்கும் நடிகனுக்கும் ஈழத்தில் நடக்கின்ற உண்மையான நிலைப்பாடு தெரியவே தெரியாது. அப்படி இருக்கு ரஜினி மீது மட்டும் பாய்சல் ஏன்?!!

புரியவே இல்லை.!

  • கருத்துக்கள உறவுகள்

இதை இதை தான் நான் எதிர்பாத்தன்!!! நன்றி!!!

அனைத்து தமிழ் மக்களிற்கும் ஒரு துக்கமான செய்தி!! மனதை கல்லாக்கிக்கொள்ளுங்கள்.எனது மாநிலத்தில் இத் திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட்டவர் விடுதலைப்புலிகளின் எனது மாநிலத்திற்கான விளையாட்டுத்துறை பொறுப்பில் உள்ளவர்.ஆறு நியை தண்ணி போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்.

வடிவேல் 007,

புலிகள் இதுமாதிரியான நிகழ்வுகளைத் தாயகத்தில் ஊக்கப்படுத்தாவிடினும், புலம்பெயர்ந்து வாழும் தமிழரிடம் ஊரோடு ஒட்டிவாழ் என்ற நிலையையே கடைப்பிடிக்கிறார்கள் என்று எண்ணுகிறேன். ஏனென்றால் புலம்பெயர்ந்த தமிழரிடம் உபதேசம் செய்ய அவர்களுக்கு நேரமுமில்லை. அவர்களின் சினிமா மோகத்தைக் கிள்ளியெறியும் சாத்தியக்கூறும் பெரிதாக இல்லை. இது திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போன்ற நிலை. அதற்காக புலிகள் தாங்கள் ஏன் இதில் வரும் வருமானத்தை இழக்க வேண்டுமென்ற எண்ணப்பாட்டில் இதுபோன்று செயற்படுகிறார்கள் போலும்.

தமிழ் ஊடகங்களில் வரும் விளம்பரங்கள் எல்லாம் இது போன்ற நோக்கம் கொண்டதே. வரும் காசை எதற்கு விடவேண்டும். வந்தவரை லாபம்தானே. சிவாஜி பார்க்காதே அந்தக் காசைப் போராட்டத்துக்குக் கொடு என்றால் பெரும்பாலானவர்கள் ஓட்டம் எடுக்கக்கூடியவர்களாகவே உள்ளனர். இதற்குப் புலிகள் என்ன செய்வார்கள்?

மறுபடியும்,

"திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது."

தயவுசெய்து சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பச்சோத்தித்தனமாக உங்கள் கருத்தை எழுதாதீர்கள். நீங்கள் முன்பு எழுதியவற்றையும் இதையும் மீண்டும் வாசித்துப் பாருங்கள். உங்கள் நிலை உங்களுக்கு ஒருவேளை புரியலாம். அவர் படத்தை வெளியிட்டது புலிகளுக்கு உதவவில்லை. தனது கல்லாப்பெட்டியை நிரப்பவே. :angry: :angry:

Edited by Vasampu

  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பச்சோத்தித்தனமாக உங்கள் கருத்தை எழுதாதீர்கள்.

முதலில் பச்சோந்தி அது இது என்று எழுதுவதை விட்டுவிடுங்கள்.

நீங்கள் முன்பு எழுதியவற்றையும் இதையும் மீண்டும் வாசித்துப் பாருங்கள். உங்கள் நிலை உங்களுக்கு ஒருவேளை புரியலாம்.

முன்பு எழுதியது ரஜினி என்ற தனிப்பட்ட மனிதன் ஒரு தமிழ் விரோதி. அதில் எந்த மாற்றமுமில்லை. இப்போது எழுதுவது புலிகளுக்கும் புலம்பெயர்ந்த தமிழருக்குமுண்டான தொடர்பு பற்றி. இரண்டு கருத்துக்களுக்கும் எதுவித தொடர்புமில்லை.

அவர் படத்தை வெளியிட்டது புலிகளுக்கு உதவவில்லை. தனது கல்லாப்பெட்டியை நிரப்பவே. :angry: :angry:

இதுபற்றி நான் அறிய வாய்ப்பில்லை. நான் சுவிசில் இல்லை. நான் வெளியிட்ட கருத்து புலிகளின் செயற்பாடு பற்றிய ஒரு ஊகம். அது தவறாகவும் இருக்கலாம்.

எங்கள் மீது நாங்களே காறி உமிழ்ந்துகொண்டிருக்கிறோம்...

தமிழ்நாட்டுக்காரங்கள் கூட இவ்வளவு கோபம்..வருத்தம்.. காட்டவில்லை..

ஒருவரிடம் உதவ முடியுமா என்று கேட்கலாம்..

நீ உதவவில்லை என்றால் நீ கெட்டவன் என்பதைவிட..

நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல என்பதை இன்னும் உலகம் நம்பவில்லை..

அப்படியிருக்க எங்கள் கோரிக்கைள் யாரோ ஒரு நடிகன் ஆதரவிக்கவில்லை என்பதால் தனியாகிவிடும் என்பதும்

எங்கள் ஈழவேள்வியில் பேர் எழுதுறவங்க தங்கள் பேரை வரலாற்றில் எழுதுகிறார்கள்..

அதற்காக நாங்கள் யாரையும் வருந்தி அழைக்கவேண்டியதில்லை..

நம்பிக்கை இழக்க வேண்டியதுமில்லை..

எதை எதையோ எல்லாம் எதந்கோ சம்பந்தப்படுத்தி ஈழத்தமிழனை தனிமைப்படுத்திவிடாதீர்கள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விகடகவி அவர்களே,

உங்களின் கருத்துக்கு ஒரு 'சபாஷ்"!..

மற்றைய இழைகளை விட மிக வேகமாக 14 பக்கங்களைத் தொட்டிருக்கின்றது " சிவாஜி" என்கின்ற இவ்விழை. !!..

எங்களை நினைத்துச் சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.!. ?

சரி படம் எப்படி??? :rolleyes::D:D

என்ன வாசகன்..

விளையாட்டுக்குத்தானே கேட்டீங்க...

14 பக்கங்கள்ல பாதி அது எப்பிடின்னுதானே சொல்லியிருக்காங்க

சரி படம் எப்படி??? :D:D:D

எதுங்க " சிவாஜி" தானே?? :rolleyes: அதிருதில்ல............... :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதுங்க " சிவாஜி" தானே?? :rolleyes: அதிருதில்ல............... :D

நீங்களும் இந்த இடத்தை விட்டு அங்காலை இஞ்சாலை அரக்கி நிக்கிற பிளான் இல்லைப்போலை இருக்கு :D

normal01pk2.jpg

normal04ba5.jpg

normal11lo9.jpg

இப்படியும் சனங்களா

படத்தின் இணைப்பு திருத்தப்பட்டுள்ளது.- யாழ்பிரியா.

Edited by yarlpriya

என்ன வாசகன்..

விளையாட்டுக்குத்தானே கேட்டீங்க...

14 பக்கங்கள்ல பாதி அது எப்பிடின்னுதானே சொல்லியிருக்காங்க

எதுங்க " சிவாஜி" தானே?? :rolleyes: அதிருதில்ல............... :D

:D:D:D கவிஞர் அவர்களின் மறைவு தினத்தை ஒட்டி சில செய்திகள் வந்திருந்தன. அதன் பாதிப்பு.

அர்த்தமுள்ள இந்துமதம் முதலாம் பகுதி முன்னுரையில்

"ஒரு மனிதன் எப்படியெல்லாம் இருக்கக கூடாதோ அப்படியெல்லாம் நான் இருந்திருக்கிறேன் எனவே ஒருவர் எப்படி இருக்கவேண்டும் என சொல்லும் தகுதி எனக்கிருக்கிறது"

என்னும் அர்த்தம் வரும் ஒரு பந்தி இருக்கிறது.

படம் பார்த்தவைதான்.....படத்துக்கு போக கூடாது என்று சொல்லினமோ?? :D

நீங்களும் இந்த இடத்தை விட்டு அங்காலை இஞ்சாலை அரக்கி நிக்கிற பிளான் இல்லைப்போலை இருக்கு :D
எல்லாம் உங்களுக்கு உதவிக்குத்தான். :):D
:):):) கவிஞர் அவர்களின் மறைவு தினத்தை ஒட்டி சில செய்திகள் வந்திருந்தன. அதன் பாதிப்பு.அர்த்தமுள்ள இந்துமதம் முதலாம் பகுதி முன்னுரையில் "ஒரு மனிதன் எப்படியெல்லாம் இருக்கக கூடாதோ அப்படியெல்லாம் நான் இருந்திருக்கிறேன் எனவே ஒருவர் எப்படி இருக்கவேண்டும் என சொல்லும் தகுதி எனக்கிருக்கிறது" என்னும் அர்த்தம் வரும் ஒரு பந்தி இருக்கிறது.படம் பார்த்தவைதான்.....படத்துக்கு போக கூடாது என்று சொல்லினமோ?? :D
:rolleyes:கொண்ணுட்டீங்க போங்க :rolleyes::D

என்னப்பா

கடவுளிற்குத்தான் நேர்த்தி அது இது என்று எதோ எல்லாம் செய்வார்கள். ஒரு தனிமனிதனிற்காக காவடி அலகு குத்துதல் ஆடு வெட்டுதல்

ம் நாடு விஞ்ஞான யுகத்தை நோக்கி போகவில்லை பழையபடி காட்டு வாழ்க்கைதான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.