Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவாஜி

Featured Replies

நீங்களும் இந்த இடத்தை விட்டு அங்காலை இஞ்சாலை அரக்கி நிக்கிற பிளான் இல்லைப்போலை இருக்கு :)

வசம்பண்ணா வாறார் என்றாலும் அதிருதில்ல........... வசம்பண்னா இஸ் ட போஸ்

:P ;)

  • Replies 351
  • Views 34.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஒரு கூடைமூன்லைட் ரகசியங்கள்

சிவாஜி படத்துக்காக கறுப்பு ரஜினியை வெள்ளை ரஜினியாக மாற்றிய ரகசியத்தை படத் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம், ஓராண்டு கடின உழைப்பில் இது சாத்தியமானது என்று அவர்கள் தெரிவித்தனர். ஏ.வி.எம். நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடித்து திரைக்கு வந்திருக்கும் படம் சிவாஜி. ஷங்கர் இயக்கிய இந்தப் படம் 15ம் திகதி வெளியானது.

இப்படத்தில் ஒரு காட்சியில், ரஜினி கறுப்பாக இருப்பதால் அவரை திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை என்று நாயகி ஸ்ரேயா கூறுவார். உடனே, தன் நிறத்தை மாற்றிக் காட்டுவதாக சவால் விடும் ரஜினி, வெள்ளைக்காரனைப்போல் நிறம் மாறி ஸ்ரேயா முன் வந்து நிற்பார். அப்போது வரும் ஒரு கூடை சன் லைட் என்ற பாடல் காட்சியில், வெள்ளைக்காரரைப்போல் பளபளப்பார் ரஜினி.

கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம், ரஜினியை வெள்ளையாக மாற்ற ஓராண்டு ஆகியிருக்கிறது. இதுபற்றி, அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் கூறியதாவது: ரஜினியின் நிறத்தை எப்படி மாற்றுவது என்று பல முறை ஆலோசனை செய்த இயக்குனர் ஷங்கர், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் மாற்றலாம் என்று முடிவு செய்தார். ஹாலிவுட் படங்களில், ஒல்லியானவரை குண்டாகவும் குண்டானவரை ஒல்லியாகவும் காட்டியிருக்கிறார்கள். தோல் நிறத்தை மாற்றி இதுவரை காட்டியதில்லை.

ஒரு கூடை சன் லைட்.. பாடல் காட்சி ஸ்பெயினில் படமாக்கப்பட்டது. அப்போது, ஒவ்வொரு பிரேமிலும் ரஜினியைப் போலவே வெள்ளைக்காரப் பெண் ஜாக்கி என்பவரையும் அதே ஸ்டைலுடனும் வேகத்துடனும் ஆட வைத்தோம். அந்தக் காட்சியை அன்ரனி எடிட் செய்தார். பிறகு, சென்னையில் உள்ள இந்தியன் ஆர்ட்டிஸ்ட் என்ற கிராபிக்ஸ் நிறுவன நிபுணர் டி.கே.ஜெயகுமாரிடம் முழுப் பாடல் காட்சியையும் ஒப்படைத்தோம். இந்தப் பணியை முடிக்க முழுமையாக 365 நாட்கள், அதாவது ஓராண்டு தேவைப்பட்டது.

ரஜினியின் முகம், கழுத்து, கை, கால் என அனைத்துப் பகுதிகளுக்கும், வெள்ளைக்காரப் பெண் ஜாக்கியின் தோல் நிறத்தை எடுத்துப் பொருத்தினோம். மொத்தம் 6,700 பிரேம்களில் இப்படி மாற்றம் செய்யப்பட்டது. படத்தில் இப்பாடல் 5 நிமிடம் 7 செகன்ட் மட்டுமே ஓடும். கலர் பவுடர் மூலம் ரஜினியை வெள்ளையாக மாற்றியதுபோல் படத்தில் வசனம் இடம் பெற்றிருக்கும். ஆனால், உண்மையில் கிராபிக்ஸ் முறையில்தான் இந்தக் காட்சி மாற்றப்பட்டது. திரையில் இக்காட்சியை பார்த்து, ரஜினியே ஆச்சரியப்பட்டு, பாராட்டினார். இவ்வாறு கே.வி.ஆனந்த் கூறினார்.

கம்ப்யூட்டர் நிபுணர் டி.கே.ஜெயகுமார் கூறும்போது, அந்நியன், இந்தியன் என ஷங்கரின் படங்களுக்கு கிராபிக்ஸ் பணியாற்றி இருக்கிறேன். இதுவரை செய்த கிராபிக்ஸ் பணிகளிலேயே மிகவும் நுணுக்கமாக, அதிக நாட்கள் செலவழித்தது இந்தப் பாடலுக்குதான். இதுபோல் ஒரு முயற்சியை இதுவரை யாரும் செய்தது கிடையாது. டிஜிட்டல் ஃபியூஷன் என்ற மெயின் சாப்ட்வேரில் ஸ்கிரிப்ட் தயாரித்து, இதைச் செய்து முடித்தோம். ஒரு வருடம் நடந்த இப்பணியில் மொத்தம் 22 கிராபிக்ஸ் வல்லுனர்கள் பணியாற்றினார்கள் என்றார்.

படத் தயாரிப்பாளர் எம்.எஸ்.குகன் கூறும்போது, 2006 ஜனவரி மாதம் இப்பாடலுக்காக லொகேஷன் பார்க்க ஸ்பெயின் சென்றோம். அங்குள்ள மியூசியத்தின் எதிரே இதுவரை ஜேம்ஸ்பாண்ட் படம் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளது. சிவாஜி படத்துக்காக முதல் முறையாக அந்த இடத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக, வேறு இந்தியப் படம் எதற்கும் அங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கக் கூடாது என்ற ஒரு ஒப்பந்தமே செய்துகொண்டோம்.

வெள்ளை நிறத்திலும் கறுப்பு நிறத்திலும் இருக்கும் நடனக் கலைஞர்களைத் தேர்வு செய்ய லண்டன் பத்திரிகையில் விளம்பரம் கொடுத்தோம். 800 பேர் தேர்வுக்கு வந்திருந்தார்கள். ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி. என்ற பாடலை இசைத்து, அதற்கேற்ப ஆடச் சொல்லி, நம்முடைய நடன கலைஞர்கள் போல் யார் ஆடுகிறார்கள் என்று பார்த்து அவர்களில் 60 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்களை ஸ்பெயினுக்கு அழைத்துச் சென்று படப்பிடிப்பை நடத்தினோம். ரஜினிக்காக பாடல் காட்சியில் போஸ் கொடுத்த வெள்ளைக்காரப் பெண்ணுக்கு கூடுதல் சம்பளம் கொடுத்தோம். பாடல் காட்சியில் அவரும் நடனமாடி இருக்கிறார் என்றார்.

பேட்டியின்போது, படத் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன், எடிட்டிர் அன்ரனி ஆகியோர் உடனிருந்தனர

Edited by வானவில்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த செய்தி பழையது. சுகாசினி சிவாஜி Tv Showவில் சொல்லி இருக்கா.

என்னப்பா இது சிவாஜி படம் வந்து Download பண்ணி பார்த்து அலுத்து போன பின்பும் இவங்க எழுதிக் கொண்டே இருக்காங்க. புளிச்ச மாவை ஆட்டுறது போல :rolleyes: . வாழ்க தமிழ் தேசிய பற்று :)

--------------------------------------------------------------------------------

Edited by sinnakuddy

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

--------------------------------------------------------------------------------

சின்னக் குட்டி உங்கள் Blog பார்த்தேன். நன்றாகவுள்ளது. ஆனால் சிறிது வயோதிப வாடை அடிக்கின்றது.

just kidding :D

anyway your page does not support with windows 2000 to see tamil letters. You should explain to your viewers about the way to setup to view tamil letters(windows 2000).

ஏன் என்றால் பல அரச காரியாலங்களில் இப்போதும் விண்டோஸ் 2000 உபயோகத்திலுள்ளது.

Edited by tamillinux

அட இங்க பாருங்கோ வண்ணத்திரை பிரிவில..சிவாஜி விமர்சங்கள் சும்மம அதிருது!! :D

...ஏதோ சினிமா விடயங்கள் கதைக்கிற அளவுக்கு நம்ம ஈழத்தில அக்கறை இல்லை அது இதெண்டு எப்பவோ சொல்லிச்சினம்! இப்ப பார்த்தா சன் டீவில காலுக்கு மேல கால் போட்டுக்கொண்டு விமர்சனம் குடுப்பாரே அவரை விட பெட்டரா விமர்சனங்கள்.... கூல்ல்ல்! B) இப்போ என்ன நம்ம ஈழத்து பிரச்சனை என்ன தீர்ந்து விட்டது என்கிறீர்களா??

...............................

நான் விமர்சனம் சொல்வதை பிழை சொல்லல..ஆனா ஒவ்வொரு காலத்துக்கு ஒவ்வொண்டு குறை சொல்வாங்க..அது பிறகு கொஞ்ச காலத்தில காத்தோட போயிடுது.பார்க்க மாட்டம் எண்டு எதிர்ப்பா பெரிய எழுத்தில கலர் கலரா போடுவாங்க..அப்புறம் விளாவாரியா விமர்சனம். எல்லாம் இதிலேயே போடுறாங்க..அதையும் வாசிச்சு, இதையும் வாசிக்குறது தான். ஏதோ சொல்லுவினம்..கேட்கிறவன் கேனயனா இருந்தால்..எண்டு..அது இங்க பொருத்தமா இருக்கு!

.................

சரி அதை விடுங்கோ..எண்ட விமர்ச்னமும் சொல்லுவம். கன காலம் சொல்லல விமர்சனங்கள்.

நானும் பார்த்தன் சிவாஜியை..எம் ஜி ஆரை..ரண்டும் தான் எண்டு சொல்லாம சொல்லும் சிவாஜி என்னும் ரஜினியின் படத்தை!

ரஜினி ஏதோ வெள்ளைகாரன் ஆகி இருக்கார் சிவாஜில. கஷ்டப்பட்டு நடிச்சிருக்கார்.

பார்க்கலாம்..பொண்ணுங்க மேக் அப் போட்டா கண்டது பேசும் போய்ஸ் ரஜனி மாவை பூசியோ இல்லை வெள்ளைக்காரியை கிராபிக் செய்தோ திரையில வந்து " சன் லைற் மூன் லைற்" எண்டு ஏலாட்டாலும் கையை ககலை ஆட்டினா உடனே விசில்!

அப்புறம் ஸ்ரேயா..நல்ல நடிப்பு,டான்ஸ், அழகு! பாராட்டணும்!...அவர் அழகில அதிராத ஆக்கள் எல்லாரும் சும்மாவே குடுக்க வந்திட்டாங்க பாருங்கோ..அது ஏற்றுக்கொள்ளத்தான் வேணும்! அதுக்காக ஸ்ரேயா சும்மா குடுக்கிறதெல்லாம் வாங்குவா எண்டு நம்ப முடியுமா :lol:

பாடல்களில் இரு பாடல் ரஜினியின் வாயுக்கயே நுழையுதா தெரியல...காதுல சரியாவே விழல..என்ன சொல்லினம் எண்டு..ஏதோ வெஸ்ரேர்ன் ல எடுத்திருக்கினம். ஆங்கிலம்,டச்சு,டொச்சு எண்டு கன்க்க மொழி போல..ஆனால் ஏ.ஆர்.ரகுமானின் இசை நல்லா இருக்கு. ஒரு பாடலில் வரும் செட்டும் சூப்பர்!

கதை - என்னத்த சொல்ல..

வழமையான காதில் பூ இல்ல மாலையே சுத்தும் ரஜினி கதை.

இடையில் சாத்திரமும் உண்மை போல காட்டினம். சாகும் ரஜினியை உயிர் பிழைக்க வைப்பது கொஞ்சம் விஞ்ஞானம்...ஆனா நிறைய :) சும்மா புல்லரிச்சுது.

ஓபீஸ் ரூமுக்க கூட்டி போய் அடிப்பது புது ஐடியா..நாம் இருந்த தியேட்டரும் ஒரு வித ஓபீஸ் ரூமோ எண்டு நினைக்க தோணிச்சு.

மொத்தத்தில...

சிவாஜி - பூச்சாண்டி!

ஆசைகளை நிறைவேற்ற சினிமா! அதை பார்க்க 4 கூட்டம்..விமர்சிக்க 2 கூட்டம்! போதாததுக்கு காவடி..அது இதெண்டு...எல்லாம் வேஸ்ட்!

இதில ஒரு முரண்பாடு என்னெண்டா...

சினிமா அவாட்டர் போட கூடாது எண்ட நம்ம யாழ் களத்தில்...சிவாஜி விமர்சனம் அது இதெண்டு சும்மா வண்ணத்திரையே அதிருதில்ல........!! அதுதான்!

Edited by பிரியசகி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

...............................

நான் விமர்சனம் சொல்வதை பிழை சொல்லல..ஆனா ஒவ்வொரு காலத்துக்கு ஒவ்வொண்டு குறை சொல்வாங்க..அது பிறகு கொஞ்ச காலத்தில காத்தோட போயிடுது.பார்க்க மாட்டம் எண்டு எதிர்ப்பா பெரிய எழுத்தில கலர் கலரா போடுவாங்க..அப்புறம் விளாவாரியா விமர்சனம். எல்லாம் இதிலேயே போடுறாங்க..அதையும் வாசிச்சு, இதையும் வாசிக்குறது தான். ஏதோ சொல்லுவினம்..கேட்கிறவன் கேனயனா இருந்தால்..எண்டு..அது இங்க பொருத்தமா இருக்கு!

ப்ரியாசகி அக்காச்சி, நீங்க சொல்லுறது சரிதானுங்கோ அவர்கள் சிவாஜியை புறக்கணிச்சவைதானுங்கோ

கலர்கலராக எழுதி புறக்கணியுங்கோ என்று சொன்னவர்கள், எப்படியுங்கோ சிவாஜியைப் பார்ப்பார்கள். வித்தியாசமாயோசியுங்கோ அவர்கள் பார்த்தது சிவாஜியை அல்ல சிரேயாவை வாவ் கூஊஊஊஊஊஊஊஊஉல்

:D

Edited by இவள்

அடடா...

இவ்ளோ கதைக்கும் எனக்கு இது விளங்கலையே பாருங்கோ...ம்ம் எல்லாம் இப்பிடித்தான்..

சரி உங்க விமர்சனம் எங்க? போடுங்கோவன்...கேட்பம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ப்ரியசாகி அக்காச்சி விமர்சனம் சொல்லலாமுங்கோ அதிலொரு பிரச்சனையும் இல்லை ஆனாப்பாருங்கோ நானென்னும் சிரேயாவ அட சீ சிவாஜியைப் பார்க்கலயுங்க

பார்க்காததுக்கு காரணம் என்னும் சிரேயாவை சா சிவாஜியை புறக்கணிக்கிறனுங்க

:P

Edited by இவள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பொண்ணுங்களுக்கு கொஞ்சம் அழகான பெண்களை கண்டாலே பிடிக்காது :P

இணையத்தில் சிவாஜி திரைப்படம் - பலகோடி நஸ்டம் திரைப்பட இணையத்தளங்களும் இணைக்கப்பட்டுள்ளன

35 கோடி பெறுமதியில் 2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமான சிவாஜி த போஸ். இப்படத்தை ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பது சிறப்பம்சமாகும். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், விவேக் முக்கிய பாத்திரங்களிலும் நயன்தாரா, மணிவண்ணன், மற்றும் இயக்குநர் ஷங்கரும் இத்திரைப்படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கதாகும். இத்திரைப்படத்தின் தெலுங்கு மொழிப் பதிப்பும் தமிழ்ப் பதிப்பும் நாளில் திரையிடப்பட இருக்கிறது. பல்வேறுபட்ட காலதாமத்திற்குப் பின்னர் உலகளாவிய ரீதியாக 15 ஜூன் 2007 திரையரையங்குகளில் வெளிவிடப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தை பல்வேறு பட்ட இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களில் இணையத்தில் உலா வர ஆரம்பித்து விட்டது. இதனால் திரைப்படம் வாங்கியோர் முதல் அனைவருக்கும் பல நஸ்டங்கள் ஏற்படவாய்ப்புகள் உள்ளன. இருந்தும் இன்றைய சூழ்ந்நிலையில் மக்கள் இணையத்திலே கூடிய நேரத்தை செலவுசெய்கின்றவர்களாக இருப்பதால் இணையத்திலே அவர்களுக்காக திரைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள். அந்த திரைப்படம் வெளியிட்டுள்ள இணைப்புக்கள் வருமாறு.

freshtamil.net

kathalworld

tamildivx.net

tubetamil.com

tamiltorrents.net

htn-news

http://www.viduppu.net/index.php?subaction...amp;ucat=1&

Edited by விது

இணையத்தில் சிவாஜி திரைப்படம் - பலகோடி நஸ்டம் திரைப்பட இணையத்தளங்களும் இணைக்கப்பட்டுள்ளன

35 கோடி பெறுமதியில் 2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமான சிவாஜி த போஸ். இப்படத்தை ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பது சிறப்பம்சமாகும். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், விவேக் முக்கிய பாத்திரங்களிலும் நயன்தாரா, மணிவண்ணன், மற்றும் இயக்குநர் ஷங்கரும் இத்திரைப்படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கதாகும். இத்திரைப்படத்தின் தெலுங்கு மொழிப் பதிப்பும் தமிழ்ப் பதிப்பும் நாளில் திரையிடப்பட இருக்கிறது. பல்வேறுபட்ட காலதாமத்திற்குப் பின்னர் உலகளாவிய ரீதியாக 15 ஜூன் 2007 திரையரையங்குகளில் வெளிவிடப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தை பல்வேறு பட்ட இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களில் இணையத்தில் உலா வர ஆரம்பித்து விட்டது. இதனால் திரைப்படம் வாங்கியோர் முதல் அனைவருக்கும் பல நஸ்டங்கள் ஏற்படவாய்ப்புகள் உள்ளன. இருந்தும் இன்றைய சூழ்ந்நிலையில் மக்கள் இணையத்திலே கூடிய நேரத்தை செலவுசெய்கின்றவர்களாக இருப்பதால் இணையத்திலே அவர்களுக்காக திரைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள். அந்த திரைப்படம் வெளியிட்டுள்ள இணைப்புக்கள் வருமாறு.

உண்மைதான் விது :( பிரகாஷ்ராஜ் :D நடித்த சிவாஜி திரைப்படம் படுதோல்வியென்றுதான் நானும் அறிந்தேன். அதுசரி அந்தப்படத்தை விடுப்பு இணையத்தளமா தயாரித்தது. பாவம் அவங்க நாங்க எல்லோரும் காசு சேர்த்து ஒரு குத்துவிளக்கு வாங்கி அவங்களுக்கு அனுப்பி வைப்போமா?? :lol::)

இது ஆகலுந்தான் குசும்பு பாருங்கோ :D
இணையத்தில் சிவாஜி திரைப்படம் - பலகோடி நஸ்டம் திரைப்பட இணையத்தளங்களும் இணைக்கப்பட்டுள்ளன 35 கோடி பெறுமதியில் 2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமான சிவாஜி த போஸ். இப்படத்தை ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பது சிறப்பம்சமாகும். இப்படத்தில் சுமன்,விவேக் முக்கிய பாத்திரங்களிலும் நயன்தாரா, மணிவண்ணன், மற்றும் இயக்குநர் ஷங்கரும் இத்திரைப்படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கதாகும். இத்திரைப்படத்தின் தெலுங்கு மொழிப் பதிப்பும் தமிழ்ப் பதிப்பும் நாளில் திரையிடப்பட இருக்கிறது. பல்வேறுபட்ட காலதாமத்திற்குப் பின்னர் உலகளாவிய ரீதியாக 15 ஜூன் 2007 திரையரையங்குகளில் வெளிவிடப்பட்டுள்ளது.இத்திரை

இலங்கையிலும் சிவாஜி!

உலகம் முழுவதும் ஆட்டிப் படைத்து வரும் சிவாஜி மேனியா, இலங்கையையும் விட்டுவைக்கவில்லை. அங்கும் அடித்துப் பிடித்துக் கொண்டு படத்தைப் பார்த்து வருகிறார்களாம்.

இலங்கையிலும் சிவாஜி அலை படு வேகமாக அடித்துக் கொண்டிருக்கிறதாம். தலைநகர் கொழும்பில் 7 தியேட்டர்களில் தினசரி 41 முறை படத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்களாம். அத்தனைக் காட்சிகளும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

கொழும்பில் சிவாஜி திரையிடப்பட்டுள்ள தியேட்டர்கள் முன்பு திருவிழாக் கூட்டமாம். இதுகுறித்து கொழும்பில் உள்ள ராம் திலக் என்கிற செய்தியாளர் கூறுகையில், அமெரிக்க தூதரகம் முன்பு கூட இத்தனை கூட்டத்தை நான் பார்த்ததில்லை. கொழும்பில் வசிப்பவர்களில் பாதிப் பேர் தமிழர்கள் என்பதால், சிவாஜிக்கு அங்கு பெரும் வரவேற்பு கிடைத்துல்ளது.

நான்கு தியேட்டர் வளாகங்களில் உள்ள தியேட்டர்களில் வேறு எந்தப் படத்தையும் போடாமல் சிவாஜியை மட்டுமே திரையிட்டுள்ளனராம். மரடனா என்ற இடத்தில் உள்ள மல்ட்டிபிளக்ஸ் ஒன்றில் தினசரி 20 காட்சிகளை ஓட்டிக் கொண்டுள்னராம். இங்கு டிக்கெட்டின் விலையும் பிரமாண்டமாகவே உள்ளது. 300 ரூபாய் வரை வசூலிக்கிறார்களாம்.

இனப் பிரச்சினையின் அழுத்தத்தால் தொய்ந்து போயிருக்கும் தமிழர்களுக்கு சிவாஜி 3 மணி நேர இளைப்பாறுதலை கொடுப்பதாக உள்ளதாம்.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தில் உள்ள மனோகரா தியேட்டரிலும் சிவாஜி திரையிடப்பட்டுள்ளதாம். இங்கு 2வது வாரமாக அரங்கு நிறைந்த காட்சிகளாக சிவாஜி ஓடிக் கொண்டுள்ளதாம்.

திரிகோணமலையிலும், மத்திய இலங்கையில் உள்ள தியேட்டர்களிலும் கூட சிவாஜி திரையிடப்பட்டுள்ளதாம். சிவாஜி படத்தைப் பற்றி டெய்லி மிர்ரர், தி ஐலண்ட் ஆகிய இதழ்கள் வெகுவாகப் பாராட்டி விமர்சனம் வெளியிட்டுள்ளன. இதை விட பெரிய படம் இனி வரப் போவதில்லை என்று டெய்லி மிரர் கூறியுள்ளது.

சிவாஜிக்கு இப்படி இலங்கையில் வரவேற்பு ஒரு பக்கம் இருந்தாலும் கடுமையான எதிர்ப்பும் கூடவே கிளம்பியுள்ளது.

இலங்கையிலிருந்து நடத்தப்படும் தமிழ்நாதம் என்ற இணையதளம், சிவாஜி படத்தை தமிழர்கள் பார்க்கக் கூடாது, புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

ரஜினிகாந்த் ஒரு கன்னட வெறியர், தமிழர்களுக்கு விரோதி. எனவே ரஜினி படத்தைப் பார்க்கக் கூடாது என்று தமிழ்நாதம் கடுமையாகக் கூறியுள்ளது.

-thatstamil-

Edited by Kuddithambi

சிவாஜி படத்தில் இருந்து நான் உணர்ந்து கொண்டதை பகிர்ந்து கொள்கின்றேன்.

இந்தியாவில் கறுப்பு பணம் என்பது மாபெரும் பிரச்சனை. சில செய்திகள் இந்திய தினசரி பத்திரிகையில் வரும்" திருப்பதி உண்டியலில் இரண்டு கோடி பணமூட்டை என்று" கறுப்பு பணம் சிக்கலுக்குள்ளகும் போது பல தடவைகள் திருப்பதி உண்டியலில் போய் விழுந்திருக்கின்றது.

இந்தியாவின் வறுமைக்கும் நிர்வாக சீர்கேடுகளுக்கும் இந்த விசயம் பிரதான காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. இதை மூலமாக வைத்தே பாடத்தின் கரு அமைந்துள்ளது.

கதையின் பிரகாரம் கறுப்பு பணத்தை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்ற செய்தியே சொல்லப்படுகின்றது. காரணம் ரஜனி கையாள்வது போல் கறுப்பு பணத்தை நாட்டு நலனுக்கு எந்த ஒருவனாலும் மாற்ற முடியாது என்பது யதார்த்தம். எனவே கற்பனையிலாவது நாட்டை திருத்திய ஒரு காட்சியை பார்ப்போம் என்பது தான் சமூகத்துக்கு சொல்லப்பட்ட செய்தி.

இவ்வாறான ஒரு விபரீதமான சமூக திருத்த கருத்தை முன்வைத்த படம் தான் சங்கரின் அந்நியன் படமும் ஆகும். கருடபுராணத்தை கொண்டு நாட்டை திருத்த வெளிக்கிட்டார். மனநிலை குழம்பிய ஒருவன் நாட்டை திருத்த புராணத்துடன் புறப்பட்டான் இது தான் அந்நியன். அதில் சொல்லப்பட்ட செய்தி இந்த நாட்டை திருத்த முடியாது என்பதாகும். எனெனில் யதார்த்தம் அப்படி இல்லை. இந்த வரிசையில் முதல்வன், இந்தியன் போன்ற படங்களும் விதிவிலக்கில்லை. நடைமுறைக்கு சாதிதியமில்லாத செயற்பாட்டுக்களங்களை சித்தரிப்பதன் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காணக்கூடிய சாதகமான பக்கங்களை பலவீனப்படுத்துவதே உண்மையாக அமைகின்றது.

மக்கள் அரசியல் வாதிகளால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். நிர்வாக சீர்கேடுகளால். லஞ்சம், ஊழல், மோசடி போன்ற வற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பாதிக்கப்பட்ட பக்கங்களில் சதிராடுகின்றது சங்கரின் கலைதாகம்.

சங்கர் தயாரிக்கும் படங்களின் செலவு என்ன என்பது யாவரும் அறிந்தது. நடிகர்களின் சம்பளம் என்ன என்பதும் யாவரும் அறிந்தது. எல்லாவற்றையும் மக்களிடமிருந்தே எடுத்துக் கொள்ளப்போகின்றார்கள். போட்ட முதலுக்கு பன்மடங்கு மேலாக எடுத்துக்கொள்ளப்போகின்றார்

எனக்கு ஒரு சிறிய சந்தேகம்

உங்கள் விமர்சனங்களை பார்க்கும்போது முழுமூச்சாக ரஜனியும் சங்கரும் கறுப்புப்பணத்தை ஒழிக்கணும் என்று போராடியிருக்கின்றார்கள். வாழ்த்துக்கள். ஏதோ ஒரு செய்தியை மக்கள் மத்தியில் பரவவிட்டிருக்கின்றார்கள்.

எனது கேள்வி

ரஜனியும் சங்கரும் வாங்கிய சம்பளத்தில் 30வீதம் வருமான வரி செலுத்தினார்களா ?

அவர்களிடம் கறுப்புப்பணம் இல்லையா ?

தமிழர்களின் விம்பமாக தன்னைக்காட்டிக்கொள்ளும் விஜயகாந்தே கறுப்புப்பணத்தை வைத்திருந்து வசமாக மாட்டிக்கொண்டது நாம் அறிந்தது

ரஜனியும் சங்கரும் வாங்கிய சம்பளத்தில் 30வீதம் வருமான வரி செலுத்தினார்களா ?

அவர்களிடம் கறுப்புப்பணம் இல்லையா ?

கொலண்டில் திரைப்படம் பார்த்து விட்டு சீற்றுகளில தட்டு தடுமாறி வெளியேறும் போது பக்கத்தில அந்த கஷ்டத்துக்கையும் ஒருவர்..(குரலை பார்த்தா கொஞ்சம் வயசு கூட போல தான் இருந்திச்சு)

" உவங்கள் கறுப்பு பணத்தில தான் படத்தை எடுத்துப்போட்டு...பிறகு கனவு நிஜமாகட்டும் எண்டு போடுறாங்கள்..நானும் வந்தன் வேலையில்லாமல்" என்று புறுபுறுத்தார். :(

போற போக்கில் அடுத்த கருத்து வைக்க முன் நானும் சிவாஜி பாத்துடுவேன் போல :P

Edited by I.V.Sasi

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜி: அந்தக் கருமத்தை நானும் பார்த்தேன்...

சுகுணா திவாகர்

பத்துவருடங்களுக்கு முன்புவரை ரஜினி என்றால் மெண்டல் என்றும் பரட்டை என்றும் ஒரு இமேஜ் இருந்தது. ஆனால் அது திடீரென்று ஆன்மீகவாதியாக அரசியல் தீர்மானிப்பாளராக என்று பலவிதத் தோற்றங்களுக்கு மாறிவிட்டது. மேலும் ரஜினி ரசிகர்கள்தான் ரஜினி படம் பார்ப்பார்கள் என்கிற நிலை மாறி எல்லோருமே ரஜினி படத்தைப் பார்த்தாக வேண்டும் என்கிற ஒரு 'நிர்ப்பந்தம்' எப்படியோ உருவாகிவிட்டது. ஒருவேளை ரஜினியின் படம் 'எப்போதோ ஒருமுறை' வெளியாகாமல் மூன்று மாதத்திற்கு ஒருமுறை வெளியானால் அதை யாரும் சீந்தமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

ரஜினியின் குறும்பும் ஸ்டைலும் பைத்தியக்காரத்தனமான சேட்டைகளும் நகைச்சுவைகளும் எனக்கும் பிடித்தமான ஒன்று. சமயங்களில் கமலின் படங்களில் உறுத்தும் நடுத்தர வர்க்கத்து புத்திசாலித்தனப் பாவனையும் போலி முற்போக்கும் எரிச்சலூட்டுபவை. இதனாலேயே ரஜினியை ரசிக்க வேண்டியிருக்கிறதோ என்ற எண்ணமும் எழுகிறது.

ஆனால் ரஜினி தத்துவஞானி ரேஞ்சிற்குப் பெண்களைப் பற்றி உதிர்க்கும் கருத்துக்கள் எப்போதும் எரிச்சலூட்டுபவை. இதோடு ஷங்கர் என்கிற விஷக் கிருமியும் சேர்ந்துவிட்டதால் எப்படியும் படம் மோசமாகத்தானிருக்கும் என்ற அரசியல் ரீதியான முன் தீர்மானத்தோடு சிவாஜி படத்திற்குச் சென்றால்..? ஏதோ தெலுங்குப் படத்திற்கு வந்துவிட்டோமோ என்று தோன்றியது. 'சிவாஜி - த லூஸூ' குழந்தைகள் பார்க்கவேண்டிய அனிமேஷன் படம். இனிச் சில அபத்தங்கள்.

* அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக இருந்தால் 200 கோடி சம்பாதிக்க முடியுமா என்பதை அமெரிக்கவாழ் நண்பர்கள்தான் சொல்ல வேண்டும். அப்படியே 200 கோடி சம்பாதித்தாலும் அத்தனையயும் இலவசச் சேவைக்கு ஒருவன் வழங்க முடியுமா என்ன? திட்டமிட்டு ஆதி(சுமன்) சிவாஜியை நடுத்தெருவிற்குக் கொண்டு வருகிறார் என்கிறது கதை. ஆனால் சுமன் அப்படியே விட்டுவிட்டால் கூட சிவாஜி இருக்கிற பணத்தையெல்லாம் இலவசச் சேவை செய்துவிட்டு நடுத்தெருவிற்குத்தான் வந்திருப்பார்.

* இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் ஊழலும் லஞ்சமும் ஊடுருவியிருக்கிறது. ஆனால் இன்கம்டாக்ஸ் அலுவலகத்தில் மட்டும் நேர்மையான அதிகாரிகளே வேலை செய்கின்றனர். ரஜினி தகவல் கொடுத்தவுடனே கருப்புப்பணம் வைத்திருப்பவர்களைப் பிடித்துச் சென்று விடுகின்றனர். புல்லரிக்கிறது. அதேபோல அமெரிக்கா செல்லும் ரஜினி வெள்ளையாக மாற்றிய பணத்தை தன் அறக்கட்டளைக்கு அனுப்பச் சொன்னதும் அனைவரும் ஒரு பைசா கூட 'ஆட்டை' போடாமல் அனுப்பி வைக்கின்றனர். ஏ.வி.எம் செலவழித்த நூற்றுக்கணக்க்கான கோடிகளில் கால்வாசி சாக்கு வாங்குவதற்கே செலவாகியிருக்கும்.

* தமிழ்ப்பண்பாடுப்படி பெண் வேண்டும் என்கிறார் ரஜினி. உடனே தமிழ்ப் பண்பாட்டின்படி நயன்தாரா மாராப்பைக் கழற்றியெறிந்துவிட்டு 'பல்லேலக்கா' என்று ஆட்டம் போடுகிறார். ஸ்ரேயாவும் பாடல் காட்சிகளிலும் ரயிலை நிறுத்தும் காட்சிகளிலும் (இந்த ரயில் நிறுத்தும் காட்சி அனேகமாக 327வது தமிழ்ப் படத்தில் இடம் பெறுகிறது) 'மேற்படிப் பாணியில்' தமிழ்ப் பண்பாட்டைக்' காப்பாற்றுகிறார்.

* சாலமன் பாப்பையா 'சிவாஜியில் உங்களுக்கு நல்ல வேடம் என்றவுடன் நடிக்க வந்துவிட்டார்' போலும். **** இதுவரை ரஜினி ஏற்காத 'வித்தியாசமான' வேடம்.

* அந்த ஜோசியக்காரன் போன்ற கொடூரமான வில்லனை எந்தப் படத்திலும் பார்த்ததேயில்லை. ரஜினி ஸ்ரேயா ஜாதகத்தைப் பார்த்தவுடனே 'திருமணம் நடந்தால் ரஜினி உயிருக்கு ஆபத்து' என்கிறார். அத்தோடு விட்டாரா? திருமணத்திற்கும் வந்து 'சீக்கிரம் தாலியறுப்பாய்" என்று ஸ்ரேயாவை 'வாழ்த்துகிறார்'. பொருத்தம் பார்க்கும் ஜோசியக்காரனைத் திருமணத்திற்கு அழைக்கும் முதல் வீட்டுக்காரர்கள் இவர்களாகத் தானிருக்கும்.

* ரஜினி ஒரு 15 அடியாள்களை வைத்து தமிழ்நாட்டிலிருக்கும் தொழிலதிபர்களிலிருந்து அதிகாரிகள், அமைச்சர் வரை மிரட்டுகிறார். பாவம் அவர்கள் அனைவரும் அடியாட்கள் வைத்துக் கொள்ளாத, வன்முறையில் நம்பிக்கையில்லாத காந்தியவாதிகள்.

* ரகுவரன் என்னும் திறமையான கலைஞரை இந்தப் படம்போல எந்தப் படத்திலும் வீணடித்ததில்லை.

* ரஜினியின் சண்டைக் காட்சிகள் போகோ சேனலையும் ஜெட்டிக்ஸ் சேனலையும் ஒருசேரப் பார்த்ததைப் போல இருக்கிறது.

* படத்தில் விவேக் காமெடி என்ற பெயரில் எரிச்சல் ஏற்படுத்துகிறார் என்றாலும் மேலே சொன்னபடி பெரும்பான்மையான காட்சிகள் காமெடியாகத் தானிருக்கின்றன. அதில் உட்சபட்சம் கருப்புப் பணமெல்லாம் ஒழிந்து ரேஷன்கார்டு போல மணிகார்டு வந்து 2015ல் இந்தியா வல்லரசாவது. விழுந்து விழுந்து சிரிக்கலாம்.

* இந்தக் கதையைத்தான் லீக் ஆகிவிட்டது, லீக் ஆகிவிட்டது என்று பில்டப் கொடுத்தீர்களா, அடப்பாவிகளா, ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் வாங்கி நாலு 'இரும்புக்கை மாயாவி' யைப் படித்து மிக்ஸ் செய்தால் அதுதானே சிவாஜி கதை!

* ஆனாலும் படத்தில் இரண்டு பெரிய வித்தியாசங்கள் இருப்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். வழக்கமாக ஷங்கர் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் சட்டவிரோதமாக 'சமூக சேவை' செய்யும் கதாநாயகன் 'மாட்டிக்' கொண்டவுடன் மக்கள் அவனை விடுதலை செய்யச் சொல்லி போராடோ போராடென்று போராடுவார்கள். அதேபோல ரஜினி படங்களின் கிளைமாக்சில் ரஜினியின் தங்கை, அம்மா, மனைவி என்று யாரையாவதோ அல்லது ஒட்டுமொத்தமாகவோ வில்லன் கடத்திக் கொண்டுபோய்க் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டிருப்பான். ஆனால் இந்த இரண்டு கருமாந்திரங்களும் இந்தப் படத்தில் இல்லை.

* அதேபோல சென்ற படத்தில் மலைகள், லாரி என்றெல்லாம் ஷங்கர் 'வித்தியாசமாக' பெயிண்ட் அடித்திருந்தார். ஆனால் இதில் மாறுதலாக தொப்பையுள்ள 50 பேரை அழைத்துவந்து அவர்களின் தொந்தியில் ரஜியின் முகத்தை பெயிண்ட் அடித்துக் குலுங்க விட்டிருக்கிறார். ஒரே கதையை வைத்து பல படங்களை எடுத்து இம்சைப்படுத்துவதைவிட பேசாமல் ஷங்கர் பெயிண்ட் அடிக்கப் போகலாம்.

இந்த அபத்தங்களையும் தாண்டி நிழலாடும் சில அரசியல் உறுத்தல்கள்:

* பராசக்தி படத்தின் தொடக்கக் காட்சியில் சிவாஜி ரங்கூனிலிருந்து சென்னையில் காலடி வைக்கும்போது ஒரு பிச்சைக்காரர் 'அய்யா தர்மம் போடுங்க' என்பார். 'தமிழ்நாட்டின் முதல் குரலே இப்படி இருக்கே' என்பார் சிவாஜி. அதில் ஒரு கூர்மையான அரசியல் விமர்சனமும் சமூகநிலை குறித்த எள்ளலும் இருக்கும். ஆனால் அதே காட்சியை சிவாஜியில் பார்க்கும்போது காறித் துப்பலாமென்றுதான் தோன்றுகிறது.

* ரஜினி மருத்துவமனை கட்டும்போது 'ஷாக்' அடித்து ஒரு சிறுவன் துடிக்கும் காட்சியில் 'சிவாஜி பார்ட்டி'யில் இறந்துபோன அந்த தொழில் நுட்பக் கலைஞன் ஞாபகத்திற்கு வந்துபோவது தவிர்க்க முடியவில்லை.

* கர்நாடகத்து ரஜினி 'காவேரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்துபோகுமா?' என்று பாடும்போது 'சும்மா எரியுதில்ல'.

- சுகுணா திவாகர் (sugunadiwakar@yahoo.co.in)

http://www.keetru.com/literature/essays/su..._diwakar_2.html

**** நீக்கப்பட்டுள்ளது - இணையவன்

Edited by இணையவன்

இதை வாசித்தால் ரஜனிக்கு சும்மா அதிருமெல்ல :(

* சாலமன் பாப்பையா 'சிவாஜியில் உங்களுக்கு நல்ல வேடம் என்றவுடன் நடிக்க வந்துவிட்டார்' போலும். இதுவரை ரஜினி ஏற்காத 'வித்தியாசமான' வேடம்.

'சும்மா எரியுதில்ல'.

:( முழு விமர்சனமும் இந்த ஒரு சொல்லினுள் அடக்கம் :rolleyes:

Edited by இணையவன்

'சும்மா எரியுதில்ல'.

:( முழு விமர்சனமும் இந்த ஒரு சொல்லினுள் அடக்கம் :rolleyes:

இவர் ஏன் எப்பவும் தலை(வர்) ரின் படம் என்றவுடன் கொஞ்சம் அதிர்து தான் போனார் ஏன் இவரின் தலைக்குள்ளே ஒன்றும் இல்லையா?

இவர் ஏன் எப்பவும் தலை(வர்) ரின் படம் என்றவுடன் கொஞ்சம் அதிர்து தான் போனார் ஏன் இவரின் தலைக்குள்ளே ஒன்றும் இல்லையா?

:(சிவாஜியை புறக்கணிப்போமென்று தொடங்கி 3 தலையங்கங்களில் மொத்தமாக 40 பக்கங்களையும் தாண்ட வைத்துப் புலம்பிக் கொண்டிருக்கும் உங்களைப் போன்றவர்களின் தலைக்குள்ளிருக்கும் ஒன்றும் எனது தலைக்குளில்லைத் தான். :rolleyes:

நகைச்சுவை என்னவென்றால் புறக்கணிப்போம் என்று சொல்லிவிட்டு இங்கே விமர்சனங்களைத்தான் அதுவும் சாதகமாக அள்ளித் தெளிக்கின்றார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.