Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவாஜி

Featured Replies

சூப்பர்ஸ்டாரை பற்றி யார் தப்பா குரல் கொடுக்கிறது........

  • Replies 351
  • Views 34.8k
  • Created
  • Last Reply

Hmmmm. you are all never change.

மிக்க நன்றி அடுத்த நேயரை பார்க்கலாம்

வணக்கம் நேயரே

வணக்கம் தலை ரஜினியின் புகழ் இந்தியா மட்டுமல்ல ஜப்பான் பிரான்ஸ்... ஏல்லா நாடுகளிலும் பரவ என் வாழ்த்துக்கள்.

நன்றி நேயர் வெங்கட் மற்றும் சின்னகுட்டி அடுத்த நேயர் என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம்,வணக்கம் நேயரே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்ச நாளைக்கு முதல் தான் இந்த களத்தில இந்தப்படத்தையே புறக்கணிக்கனும் என்டு கொஞ்ச பேர் மடிச்சுக் கட்டிக்கொண்டு நின்டவயள். எங்கய்யா போய்ட்டீங்கள்?

உங்கள் கருத்துக்கும் நன்றி 009 மற்ற நேயரை பார்க்கலாமா வணக்கம் நேயரே

  • தொடங்கியவர்
:lol:

ஆம் அடுத்த நேயர் தொலைபேசியில் சிரிக்கிறார் அதையும் கேட்கதானே வேண்டும் அடுத்த நேயரை பார்ப்போம் வணக்கம் நேயரை.

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர்ஸ்டாரை பற்றி யார் தப்பா குரல் கொடுக்கிறது........

அது நானில்லை.

அது ரஜினி, ஷங்கர், ரகுமான் கூட்டணி இல்லோ. விற்பனை அப்புடித்தான் இருக்கும்.

தத்துவம் என்று வந்த பிறகு இசைஞானியும் சூப்பர் ஸ்டாரையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது. இருவரும்தான் தமிழ் சினிமாவில் தத்துவத்தில் டாக்டரேட் வாங்கிய சூப்பர் சீனீயர்கள். இவர்கள் இருவரும் ஒன்றிணையும் புள்ளி ஆன்மீகம். மேடையும் மைக்கும் கிடைத்துவிட்டால் போதும். பணம் மாயை, புகழ் மாயை, எல்லாமே மாயை என்று பரவசப்பட்டு அப்ளாஸ்களை அள்ளிக் கொள்வது இவர்களது வாடிக்கை.

பணமும் புகழும் மாயை என்றால் தங்களிடம் இருக்கும் அளவுக்கு மீறிய செல்வங்களை கட்டிக் கொண்டு அழுவானேன்? இல்லாதவர்களுக்கு அள்ளி எறிவதுதானே? ஆனால், அதை மட்டும் செய்யமாட்டார்கள். தங்களுக்கு தங்கள் பிள்ளைகளுக்கு பேரக்குழந்தைகளுக்கு என மூன்று தலைமுறைக்கு சேப்டி செய்துவிட்டு பணம் மாயை புகழ் மாயை என ஆன்மீக கொட்டாவி விடுவது யாரை ஏமாற்ற? இன்னொரு சந்தேகம். அளவுக்கு மீறிய செல்வம், தகுதிக்கு மீறிய புகழ் இரண்டும் கிடைத்து வானத்துக்கு கீழ் உள்ள அனைத்தையும் சொந்தமாக்கும் தகுதி வந்த பிறகே இவர்களுக்கு இந்தமாதிரி கொட்டாவிகள் வருகின்றன. வாய்ப்புக்காக படக்கம்பெனிகளின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கும்போது இந்த கொட்டாவிகள் எங்கே போயிருந்தன?

விழா ஒன்றில் தான் இமயமலைக்குப் போவதை பற்றி இப்படி விளக்கமளித்தார் ரஜினி. "நமது வீட்டில் படுக்கையறைக்கு சென்றால் தூங்க தோன்றும். சமையலறைக்குப் போனால் சாப்பிட தோன்றும். பூஜையறைக்குப் போனால் சாமி கும்பிட தோன்றும். அதே மாதிரி இமயமலைக்குப் போனால் பக்தியாக இருக்க தோன்றும்." ஆஹா.... அற்புதமான ஆன்மீக விளக்கம்! அதாவது சாமி அறைக்கும் இமயமலைக்கும் போகும்போது மட்டும் ஆன்மீகம் இருந்தால் போதும். அதனால்தான் ஊருக்குள் கொள்ளையடித்து உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள். கடவுள் சந்நிதியில் மட்டும் நல்ல பிள்ளையாக இருந்தால் போதுமே! ஆகவேதான் ஆன்மீக செம்மலாக இமயமலைக்கு செல்லும் ரஜினியால் 'சந்திரமுகி' போன்ற கச்சடா படங்களில் நடிக்க முடிகிறது. அடுத்தவன் மனைவியை தங்கச்சி என்று அழைத்துக்கொண்டே ஒரே போர்வைக்குள் ஆவிபிடித்தபடி 'காலை உள்ளுக்கு இழுத்து டைட்டா வச்சுக்கோ. அப்பதான் நல்லாயிருக்கும்' என நாலாந்தர டபுள்மீனிங் வசனம் பேச முடிகிறது.

ஆனால் ஆன்மீகம் என்பது சாமியறையில் மட்டும் வரும் சமாச்சாரம் அல்ல. அது சுவாசம் மாதிரி! எங்கு போனாலும் இருக்கக் கூடியது. அப்படியொரு ஆன்மீகம் சித்திக்கப் பெற்ற ஒருவரால் மேலே பார்த்த டபுள் மீனிங் வசனத்தை பேச முடியாது. அப்படியே பேசினாலும் மேக்கப்பை கலைத்ததும் கடயோகம் பாபா மகிமை என புல்லரிக்க முடியாது. அப்படி இரண்டையும் ஒருவரால் செய்யமுடிகிறது என்றால் அது வேஷமாகவே இருக்கமுடியும்.

நன்றி: சினிசவுத்

அது நானில்லை.

அது தானே பார்த்தேன்

:lol:

சுவி,சுட்டி,மறுத்தான் ஆகிய நேயர்களின் கருத்துக்கு நன்றி அடுத்த நேயரை பார்க்கலாம்,வணக்கம் நேயரே வணக்கம்,வணக்கம் ,நேயரே வணக்கம் சொல்ல ஏன் இத்தனை தயக்கம்.

  • தொடங்கியவர்

இணையத்தளத்தில் சிவாஜி பாடல்கள் வெளியான இரகசியம்

இணையத்தளத்தில் சிவாஜி பாடல்கள் வெளியான இரகசியம்

`சிவாஜி' ஓடியோ ஏப்ரல்- 4 ஆம் திகதி வெளியிடப்பட்டது. அதற்குள் ஆறரை கோடி தமிழர்களும் அயல்நாட்டுத் தமிழர்களும் பாடல்களை கேட்டுவிட்டார்கள். இருந்தாலும் இந்த ஓடியோ பைரஸியை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.

`சிவாஜி'யில் மொத்தம் ஐந்து பாடல்கள். இதில் மூன்று பாடல்கள் இணையத்தளத்தில் வெளியாயின. `ஒரு கூடை சன் லைட்...', `சஹாரா பூக்கள்....', `ஜி.....சிவாஜி....' என்ற அந்த மூன்று பாடல்களின் திருட்டு ஓடியோ சி.டி.க்கள் கன ஜோராக வியாபாரமாகின்றன.

சின்னதாக செய்தி கசிந்தாலே சிலிர்த்தெழும் `சிவாஜி' யுனிட் இந்த ஓடியோ விடயத்தை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. இது அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை எழுப்பியுள்ளது.

ஆனால், இணையத்தளத்தில் பாடல்கள் வெளியானது பட தயாரிப்பாளர்களின் ஒப்புதலுடன்தான் என்கிறார்கள். படத்தின் மூன்று பாடல்களை லம்பமாக ஒரு தொகைக்குக் குறிப்பிட்ட இணையத்தளத்திற்கு விற்றிருக்கிறார்கள். ஏன் மூன்று பாடல்கள் மட்டும்? மொத்தப் பாடல்களையும் வெளியிட்டால் எதிர்பார்ப்பு கம்மியாகிவிடுமாம். எனவே முறைப்படி ஓடியோ வெளியிட்ட பிறகு மீதி இரு பாடல்களும் அந்த இணையத்தளத்திற்கு வழங்கப்படுவதாக ஒப்பந்தம்.

சின்னச் சின்னதாக இப்படி இன்னும் எத்தனை சாதனைகளை செய்யப்போகிறதோ தெரியவில்லை `சிவாஜி'.

thinakkural.com

படத்தின் பூஜை அன்று ரிலீஸ் தேதியை அறிவிக்கும் நேர்த்தியான நிர்வாக ஒழுங்கமைவு கொண்ட நிறுவனம் ஏ.வி.எம். பல படங்களின் பூஜை அன்று ரிலீஸ் தேதியுடன், படம் திரையிடயிருக்கும் திரையரங்குகளின் பெயரை அறிவித்து அதனை பிசகின்றி நடைமுறைப்படுத்திய பெருமையும் இதற்குண்டு.

'சிவாஜி' விதிவிலக்கு. படப்பிடிப்பு முழுமையாக முடிந்த பின்னும் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்காமல் மவுனம் காக்கிறார்கள் ஏ.வி.எம். சரவணனும், எம்.எஸ். குகனும். படத்தின் பூஜையின் போதே சரவணன் குறிப்பிட்டிருந்தார்; " சிவாஜியின் ரிலீஸ் தேதியையோ, பட்ஜெட்டையோ தீர்மானிக்கவில்லை. இரண்டையும் இயக்குனர் ஷங்கர் முடிவுக்கு விட்டு விடுகிறோம்."

'சிவாஜி'யின் டாக்கி போர்ஷன் மற்றும் பாடல்காட்சிகள் ஏற்கனவே முடிந்து விட்டன. டப்பிங்கும் ஏறக்குறைய முடிந்து விட்டது. பேட்ச் வொர்க் வேலைகளும் சென்ற வாரத்துடன் நிறைவடைந்து விட்டதாக ஸ்டுடியோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

படத்தில் முடிய வேண்டிய முக்கிய வேலை ரீ-ரிக்கார்டிங். வெளிநாட்டில் இருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் வந்த பிறகே ரீ-ரிக்கார்டிங் வேலை முழுமை பெறும். தற்போது வெளிநாட்டில் இருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் அடுத்த மாதமே சென்னை திரும்புவதாக கூறுகிறார்கள். அதனால் ஏப்ரல் 12 அல்லது 14-ம் தேதி படம் ரிலீஸாவது சந்தேகம் என்கின்றனர் படக்குழுவை சேர்ந்தவர்கள்.

மேலும், ரஜினியின் அதிர்ஷ்டதினம் வியாழன். இயக்குனர் ஷங்கரின் அதிர்ஷ்ட எண் எட்டு. இருவரும் ஜோசியத்தில் நம்பிக்கையுள்ளவர்கள். இருவருக்கும் தங்கள் அதிர்ஷ்ட தினத்தில் படத்தை வெளியிடவே விருப்பம்.

மேற்சொன்ன காரணங்களால் 'சிவாஜி' ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை. இந்த ஊசலாட்டம் பதினைந்துக்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களை பாதித்துள்ளது. தங்கள் படங்களை எப்போது ரிலீஸ் செய்வது என்ற குழப்பத்துக்குள் அவர்களை தள்ளியுள்ளது.

ரஜினி ஷங்கர் காம்பினேஷனில் உருவாகியிருக்கும் 'சிவாஜி' இதுவரை இல்லாத அளவுக்கு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படம் வெளியானால் மொத்த சினிமா ரசிகர்களையும் இப்படம் ஈர்த்து விடும். 'சிவாஜி'யுடன் ரிலீஸாகும் படங்களின் நிலைமை புயலில் சிக்கிய சருகாக சின்னா பின்னமாகி விடும்.

இந்த பயத்தால் ஏறக்குறைய பதினைந்து படங்கள் ரிலீசுக்கு தயாராக இருந்தும் திரையரங்குக்கு வர பயப்படுகின்றன. இதில் 'பிறப்பு', 'சத்தம் போடாதே', 'ஒரு பொண்ணு ஒரு பையன்', 'கானல் நீர்', 'உன்னாலே உன்னாலே', 'நினைத்து நினைத்து பார்த்தேன்', ' சொல்லி அடிப்பேன்', 'சென்னை 600028', 'தூவானம்', கண்ணும் கண்ணும்', கூடல் நகர்' ஆகிய படங்கள் முக்கியமானவை.

'சிவாஜி' எப்போது ரிலீஸானாலும் அதுபற்றி கவலைப்படாமல் தனது படத்தை ரிலீஸ் செய்யும் துணிச்சல் தமிழ் சினிமாவில் ஒருவருக்கே இருக்கிறது. அது சேரன். தனது 'மாயக்கண்ணாடி' ஏப்ரலில் திரைக்கு வரும் என திட்டவட்டமாக அறிவித்துள்ளார் சேரன்.

'பீமா' படம் எப்போதோ முடிந்திருக்க வேண்டியது. 'சிவாஜி'யை மனதில் வைத்து 'பீமா'வின் படப்பிடிப்பை முடிந்த அளவு தாமதப்படுத்துகிறார் லிங்குசாமி. "'சிவாஜி', 'தசாவதாரம்' படங்களின் ரிலீஸை பொறுத்தே 'பீமா' வெளிவரும்" என ஓபனாக சொல்லியிருக்கிறார் இவர்.

இத்தனைபேர் பயப்படுவதற்கு 'சிவாஜி' ஏற்படுத்தியிருக்கும் எதிர்பார்ப்பு மட்டுமே காரணமில்லை. திரையரங்கு பற்றாக்குறையும் முக்கிய காரணம்.

2005-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு மூன்று படங்கள் ரிலீஸாயின. 'சந்திரமுகி', 'மும்பை xபிரஸ்' மற்றும் 'சச்சின்.' சரியான திரையரங்குகள் கிடைக்காமல் 'அந்நியன்' தயாராக இருந்தும் சில வாரங்கள் கழித்தே ரிலீஸானது.

தற்போதைய தமிழக அரசு திரையரங்கு கட்டணத்தை வெகுவாக குறைத்துள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியாளரின் அனுமதி பெற்று படம் வெளியான முதல் இரண்டு வாரங்களுக்கு தியேட்டர் கட்டணத்தை உயர்த்திக் கொள்வதை முற்றிலுமாக தடை செய்துள்ளது.

'சிவாஜி'யோ சுமார் 35 கோடியில் உருவான படம். இவ்வளவு பெருந்தொகையை மேற்சொன்ன கட்டுப்பாடுகளால் வசூல் செய்வது கடினம். இதற்கு ஒரே மாற்று, அதிக தியேட்டர்களில் படத்தை வெளியிடுவது. மேலும், ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகள் கொண்ட காம்ப்ளக்ஸ்களில் மற்ற படங்களை தவிர்த்து அனைத்திலும் 'சிவாஜி' யையே திரையிடுவது.

இந்த காரணங்களால் பிற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பது கடினம். தயாரிப்பாளர்கள் 'சிவாஜி' ரிலீஸை எதிர்பார்த்து தங்கள் படங்களை முடக்கி வைத்திருக்க இதுவே பிரதான காரணம் என கூறப்படுகிறது.

மொத்த தமிழ் சினிமாவையும் 'சிவாஜி' பயமுறுத்திக் கொண்டிருக்க 'சிவாஜி'யையே பயமுறுத்தும் சாதனமாக உருவெடுத்துள்ளது இணையதளம். படத்தின் புகைப்படங்களையே ரகசியமாக பாதுகாக்கிறது 'சிவாஜி' யூனிட். அதேநேரம் படத்தின் பாடல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன் சில இணையதளங்களில் பாடல்கள் வெளியாகி உலகம் முழுக்க லட்சக்கணக்கானவர்களின் செவிகளை எட்டியுள்ளது. மேலும், ஏப்ரல் 4-ம் தேதி பாடல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன், ஆடியோ பைரஸி ஆடியோ மார்க்கெட்டை ஆக்ரமிக்கும் வாய்ப்பும் பிரகாசமடைந்துள்ளது.

இதே வேகத்தில் படத்தின் கிளிப்பிங்ஸ்களை இணையதளங்கள் வெளியிட்டால் அது 'சிவாஜி' மீதான எதிர்பார்ப்பை உடைத்து, கலெக்ஷனில் பெரிய அளவில் பொத்தல் ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.

இணையதளங்களின் இந்த முந்திரி கொட்டை போக்கை ஓரளவுக்கு மேல் கட்டுப்படுத்த முடியாது என்பதால் விரைவில் 'சிவாஜி' படத்தை ரிலீஸ் செய்வது ஒன்றே அதன் எதிர்பார்ப்பை நூறு சதவீத கலெக்ஷனாக மாற்ற ஒரேவழி.

இதனால், பிற தயாரிப்பாளர்களைவிட 'சிவாஜி' யூனிட்டே 'சிவாஜி' ரிலீஸ் எப்போது என தெரிந்து கொள்ள மிக ஆவலாக உள்ளது. எந்தவொரு படத்திற்கும் ஏற்படாத புதியவகை பிரச்சனை என்ற வகையில் இதனையும் 'சிவாஜி' யின் சாதனை என்றே கூற வேண்டும்!

:(:lol::o

தமிழ்நாட்டில் 'சிவாஜி' கோரஸ் ஒலிக்க ஆரம்பித்து கிட்டதட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனால் திரையில் ஒலிரபோவது எப்போது என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.

சூப்பர் ஸ்டார், மெகா பட்ஜெட், பெரிய இயக்குனர், பெரிய கம்பெனி என ஆரம்பிக்கப்பட்ட சிவாஜி சூப்பர் ஸ்டாரின் தரிசனம்காண தவமாய் தவமிருக்கின்றனர் ரசிகர்கள்.

எளிமையான பூஜையுடன் தொடங்கப்பட்ட இப்படத்தில் பிரமாண்டத்திற்கு பஞ்சமில்லாமல் தயாராகி உள்ளது. நொடிக்கொரு செய்தி நிமிடத்திற்கு ஒரு புரளி என இப்படம் பற்றி கிளம்பிய தகவல்களை கொண்டே ஷங்கர் இன்னொரு படம் இயக்கும் அளவிற்கு பப்ளிசிட்டியும் கிடைத்தது.

ஆனால் ரிலீஸ் தேதிதான் கன்னித்தீவு ரகசியமாய் நீண்டு கொண்டே இருக்கிறது.

தமிழ்புத்தாண்டு தினத்தில் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டு பிறகு, ஏப்ரல் 17-ம் தேதியாக மாற்றப்பட்டு இப்போது எந்த தேதி உண்மை என்பது யாருக்கும் தெரியாத புதிர்.

ஏன் இந்த தாமதத்திற்கு காரணம் என நம் தேடலை துவங்கியபொழுது கிடைத்த தகவல்கள் சில... படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்தபோதிலும் டி.ஐ என்னும் தொழில்நுட்பத்தை சேர்க்கும் பணி மட்டும் பாக்கியிருப்பதாக தெரிகிறது. இந்த பணி முடிவடைவதற்கு இருபது முதல் முப்பது நாட்கள் வரை ஆகும் என்று தெரிகிறது. எனவே அடுத்தமாதம் 8-ம் தேதி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

படத்தின் அனைத்து உரிமைகளும் விற்கப்பட்டுவிட்டாலும் தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமை மட்டும் எந்த விநியோகஸ்தர்களுக்கும் இதுவரை கொடுக்கப்படவில்லை என்ற உறுதியான தகவல். தமிழ்நாடு முழுவதும் முன்னூறு திரையரங்குகளில் படத்தை சொந்தமாகவே வெளியிட ஏ.வி.எம். விரும்புவதாக கூறப்படுகிறது. "எது எப்படியோ எப்ப வருவேன் எப்படி வருவேன் என்று எனக்கே தெரியாது ஆனால் வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்" என ரஜினி பேசிய வசனம் சிவாஜிக்கும் பொருந்துகிறது.

:rolleyes::rolleyes::rolleyes:

  • தொடங்கியவர்

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

12712543375.jpg

ஜூன் மாதம்தான் 'சிவாஜி' ரிலீஸ்: சில எதிர்பார்ப்புகளும் எதிர்ப்புகளும்...?

ரஜினியின் 'சிவாஜி' படம் வெளிவருவதற்குள் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளையும் எதிர்ப்புகளையும் உண்டாக்கியிருக்கிறது.

எதிர்பார்ப்புகள்:

* தமிழகத்தில் சிவாஜியை ரிலீஸ் செய்யும் உரிமையை ஜெமினி லேப் நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது. 65 கோடிக்குதான் படத்தை விற்பனை செய்வோம் என்று கூறி வந்த ஏ.வி.எம் நிறுவனம் 55 கோடிக்கு ஜெமினி லேப் நிறுவனத்திடம் விற்றுள்ளது

* மே 17}ல் ரிலீஸôகும் என்று எதிர்பார்க்கப்பட்ட சிவாஜி, ஜூன் மாதம் தான் திரைக்கு வருகிறாராம். இதற்கு இரு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

காரணம் 1: ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி இருவரும் நடிக்க, ஒரு காட்சி எடுத்து இணைக்கப்பட இருக்கிறது.

காரணம் 2: ஏ.ஆர். ரஹ்மான் படத்தின் பிண்ணனி இசைக்கு கால தாமதம் செய்கிறார்.

எதிர்ப்புகள்:

* படத்தின் டிக்கெட்டுகள் ராகவேந்திரா மண்டபத்தில் வைத்து வியாபாரம் செய்யப்பட்டது சட்டப்படி தவறு. தியேட்டர்களில் வைத்துதான் சினிமா டிக்கெட் விற்பனை செய்யப்பட வேண்டும். கல்யாண மண்டபத்தில் வைத்து விற்பனை செய்ததை எதிர்த்து நீதிமன்றத்தை நாடி பிரச்சினையை கிளப்ப ஒரு குழு தயராகி வருகிறதாம்.

* பாமக நிறுவனர் ராமதாஸ், தனது தொண்டர்களிடம் ரகசிய கட்டளை பிறப்பித்துள்ளதாகவும், அதன்படி சிவாஜி படம் ரிலீஸôகும் தியேட்டர்களில் எங்கெங்கெல்லாம் அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்பட்டால், உடனே தனது கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளாராம்.

சிவாஜி என்றாலே போராட்டம்தான் போல...

தகவல்:-தினமணி

Edited by குமாரசாமி

தாத்தா என்டா தாத்தா தான் நல்ல செய்தி போட்டு இருக்கிறீங்க

சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களுக்கு விருந்து படைக்க மே 31ம் தேதி சிவாஜி ரிலீஸ் ஆவதாக ஏவி.எம். நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரஜினிகாந்த், ஷ்ரியா நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ஏவி.எம். தயாரிப்பில், மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ள சிவாஜி ரிலீஸ் குறித்து பலவித தகவல்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துக் கொண்டிருந்தன.

முதலில் ஏப்ரல் 14ம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அது கேன்சல் ஆகி மே மாதத்தில் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. மே 26ம் தேதி படம் ரிலீஸாகும் என கடைசியாக தெரிவிக்கப்பட்டது.

இந் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை ஏவி.எம். நிறுவனம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது. அதன்படி மே 31ம் தேதி உலகெங்கும் சிவாஜி ரிலீஸ் ஆகிறார்.

படம் மிகச் சிறப்பாக வந்துள்ளதாகவும், படம் தொடர்பான அனைத்துப் பணிகளும் முடிந்து விட்டதாகவும், மே 31ம் தேதி படம் ரிலீஸாகும் எனவும் ஏவி.எம். நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவாஜியில் ரஜினி இரட்டை வேடத்தில் வருகிறார். அவருக்கு ஜோடியாக ஷ்ரியா நடித்துள்ளார். நயனதாரா ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். ரகுவரன், சுமன், விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

தமிழ் திரையுலக வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியாவில் மட்டும் 900 பிரிண்டுகளுடன் சிவாஜி திரைக்கு வருகிறது.

ரஜினி ரசிகர்களின் காத்திருப்புக்கு ஒரு வழியாக முடிவு வந்துள்ளது. தலைவரின் படத்தை கண்டு தரிசிக்க காத்திருக்கும் ரசிகர்களுக்கு மே 31ம் தேதி திவ்ய தரிசனம் தர வருகிறார் சிவாஜி.

:):lol::lol:

'சிவாஜி' குழுவினரின் முன் ஜாக்கிரதை

வியாழக்கிழமை, 17 மே 2007

ஒரு படத்தை பார்ப்பதாக இருந்தால், சென்ஸார் போர்டு அதிகாரிகள் விரும்பும் தியேட்டரில்தான் தயாரிப்பாளர்கள் படத்தை திரையிட வேண்டும்.

ஆனால், 'சிவாஜி'யை படநிறுவனத்தின் தியேட்டருக்கே வந்து பார்த்துவிட்டு தணிக்கை சான்றிதழ் கொடுத்துவிட்டு போயிருக்கிறார்கள். இப்படி நடப்பது தமிழில் இதுவே முதல்முறை.

படம் ஒன்பது மணிக்கெல்லாம் முடிந்துவிட்டது. ஆனாலும் படம் பார்த்த அதிகாரிகளுடன் பேச்சு கொடுத்து அதிகாலை 3 மணிவரை ஏவி.எம் வளாகத்துக்குள்ளேயே உட்கார வைத்திருந்தார்களாம்.

காரணம், படத்தை பற்றி அந்த நேரத்தில் யாருக்காவது சொல்லிவிடக்கூடாது என்ற முன் ஜாக்கிரதையாம்.

(மூலம் - வெப்துனியா)

yahoo-tamil

சென்னை: சென்னையில் நடந்த அதிரடி சோதனையில் ரஜினிகாந்த் நடித்து இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவுள்ள சிவாஜி படத்தின் திருட்டு விசிடி கவர்கள் சிக்கின. இதன் மூலம் சிவாஜி பட திருட்டு விசிடி விற்பனைக்கு ரெடியாகி உள்ளதாக தெரிய வந்துள்ளது.

சிவாஜி படத்தின் பாடல்கள், அதிகாரப்பூர்வமாக வெளியாகும் முன்பே இணைய தளங்களில் தடாலடியாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில் இப்போது மொத்தப் படமும் திருட்டு விசிடி, டிவிடி ரூபத்தில் விற்பனைக்கு ரெடியாகி விட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.

இதை நிரூபிக்கும் விதமாக சென்னை நகரில் நடந்த போலீஸ் சோதனையில் 30,000க்கும் மேற்பட்ட டிவிடி கவர்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரூ. 2 கோடி மதிப்புள்ள பிரிண்டிங் மெஷின்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை திருவல்லிக்கேணி முனியப்பன் தெருவில் உள்ள அன்னை ஆப்செட் பிரிண்டர்ஸ் என்ற அச்சகத்தில் சிவாஜி மற்றும் பெரியார் பட திருட்டு விசிடிக்கள், டிவிடிக்களுக்கான கவர்கள் அச்சிடப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த அச்சகத்தில் சோதனை நடத்த கூடுதல் ஆணையர் ஜாங்கிட் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அங்கு விரைந்த போலீஸார் அதிரடி சோதனையில் குதித்தனர்.

அப்போது, அந்த அச்சகத்தில் பெருமளவுக்கு விசிடி கவர்கள் அச்சிடப்பட்டு வந்தது தெரிய வந்தது. கிட்டத்தட்ட விசிடி தயாரிப்பு தொழிற்சாலை போல அது காணப்பட்டது. திருட்டு விசிடிகளுக்கான கவர்கள் அச்சிடப்பட்டு பண்டல் பண்டல்களாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து போலீஸார் திடுக்கிட்டனர்.

பெரியார், சிவாஜி பட திருட்டு விசிடி கவர்களும் பெருமளவு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை போலீஸார் கைப்பற்றி மூட்டை மூட்டைகளாக கட்டி லாரி ஒன்றில் கொண்டு சென்றனர். இவை தவிர பிலிம் சுருள்கள், நெகட்டிவ்கள் உள்ளிட்டவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ. 2 கோடி என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அச்சக உரிமையாளர் ஜோசப் செல்வாவின் தம்பி சகாயராஜன், டிசைனர் தமிழரசன், பிரிண்டர் ஜான்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஜோசப் தலைமறைவாகி விட்டார். அவருக்கு வலை வீசப்பட்டுள்ளது. இதேபோல இவர்களுக்கு உதவியாக இருந்த பர்மா பஜார் வியாபாரிகள் பைசல், காஜா ஆகியோரும் தலைமறைவாகி விட்டனர்.

கடந்த 6 மாதங்களாகவே சிவாஜி திருட்டு விசிடியை வெளியிட சிலர் தீவிரமாக முயற்சித்து வந்தனர். கடந்த ஜனவரி மாதம் வளசரவாக்கம் பகுதியில் சிவாஜி படத்தின் காட்சிகள் அடங்கி திருட்டு டிவிடிக்கள் சிக்கின.

40 நிமிடங்களுக்கு ஓடக் கூடியதாக தயாரிக்கப்பட்டிருந்த இந்த டிவிடியில் பாடல் காட்சிளும், சில வசனக் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.

இதையடுத்து சிவாஜி பட பாடல்கள் இன்ட்ர்நெட்டில் லீக் ஆகின.

சிவாஜி வெளியாகும் தேதியை (மே 31) ஏவி.எம். நிறுவனம் அளித்துள்ள நிலையில் அப்படத்தின் திருட்டு விசிடி, டிவிடிக்கள் தயாராகியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸார் நேற்று நடத்திய சோதனையில் கிட்டத்தட்ட 30,000க்கும் மேற்பட்ட சிவாஜி திருட்டு டிவிடி கவர்கள் சிக்கியுள்ளன. இதன் மூலம் பெருமளவுக்கு திருட்டு டிவிடி, விசிடிக்கள் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சோதனை குறித்து ஜாங்கிட் நமது நிருபரிடம் கூறுகையில்,

சிவாஜி படத்தின் திருட்டு விசிடி தயாரிப்பை சென்னை காவல்துறை ஆரம்பத்திலேயே தடுத்து விட்டது. சிவாஜி தவிர பெரியார், பருத்தி வீரன், உன்னாலே உன்னாலே ஆகிய படங்களின் திருட்டு விசிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ. 11 லட்சமாகும் என்றார்.

சந்திரமுகி வெளியானபோதும், அதற்கு முன்பாகவே திருட்டு விசிடிக்கள் வெளியாகி விட்டன. இந் நிலையில் சிவாஜி படம் அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்பு அதன் திருட்டு டிவிடி, விசிடி கவர்கள் சிக்கியுள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

:o:lol::lol::D

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜூன் 15ம் தேதிக்கு படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சிவாஜி படம் ஆரம்பத்திலிருந்தே செய்திகளில் அடிபட்டு வருகிறது. ஆரம்பத்தில் படப்பிடிப்பு தகவல்கள் கசியத் தொடங்கின. பலத்த பாதுகாப்பையும் மீறி புகைப்படங்கள் வெளியானதால் அப்செட் ஆனார் ஷங்கர்.

பின்னர் சிவாஜி படப் பாடல்கள் இண்டர்நெட்டில் வெளியாகின. சமீபத்தில் முழுப் படமே திருட்டு டிவிடி, விசிடிக்களில் தயாராகி விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின. சென்னை போலீஸார் திருட்டு டிவிடி, விசிடிக்களில் பொருத்தப்படும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அச்சிடப்பட்ட கவர்களைக் கைப்பற்றியுள்ளனர்.

இந்த நிலையில் இன்னும் ஒரு சிவாஜி நியூஸ் வெளியாகியுள்ளது. அதாவது மே 31ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த படம் ஜூன் 15ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டு விட்டதாம்.

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம் தேதி படம் ரிலீஸாகும் என கடந்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கியபோதே தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன் அறிவித்தார். ஆனால் திட்டமிட்டபடி தமிழ்ப் புத்தாண்டுக்குப் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை.

இதையடுத்து மே இறுதிக்குள் படம் நிச்சயம் ரிலீஸாகி விடும் என அறிவிக்கப்பட்டது. இரண்டு நாட்ளுக்கு முன்பு ஏவி.எம். நிறுவனம் ஒரு பத்திரிக்கைக் குறிப்பை வெளியிட்டது. அதில், மே 31ம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஏவி.எம். நிறுவனமே அதிகாரப்பூர்வமாக தேதியைக் குறித்து விட்டதால் ரசிகர்கள் பெரும் சந்தோஷம் அடைந்தனர். தமிழகமெங்கும் சிவாஜியின் வருகையை பிரமாண்டமாக வரவேற்க ரசிகர்கள் ஆயத்தமாக ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் திடீரென பட ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளது ஏவி.எம். ஜூன் 15ம் தேதி படம் ரிலீஸாவதாக குறிப்பிட்டு பத்திரிக்கை விளம்பரம் ஒன்றை ஏவி.எம். நிறுவனம் வெளியிட்டுள்ளது.

படம் ஏன் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதற்கான காரணத்தை ஏவி.எம் நிறுவனம் தெரிவிக்கவில்லை. ஆனால் தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் திடீரென போட்டுள்ள விற்பனை நிபந்தனை மற்றும் கர்நாடகத்தில் படத்தை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் ஆகியவையே படத்தை தள்ளி வைக்க முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, கர்நாடகத்தில் சிவாஜியை திரையிட கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் நாராயண கெளடாவுடன் சிவாஜி ரிலீஸ் தொடர்பாக ரஜினிகாந்த் பேச்சு நடத்தியுள்ளார்.

தமிழகத்தைப் போலவே ரஜினிக்கு கர்நாடகத்திலும் நல்ல கிராக்கி உள்ளது. ஆனால் கர்நாடகத்தில் சிவாஜியை திரையிடக் கூடாது. மீறித் திரையிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என கெளடா எச்சரித்துள்ளார். இதனால் அங்கு படத்தைத் திரையிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

எனவே ரஜினியே நேரடியாக கெளடாவை போனில் அழைத்துப் பேச்சு நடத்தியுள்ளாராம். இந்தப் பேச்சில் உடன்பாடு ஏதும் ஏற்பட்டதா என்பது தெரியவில்லை. இதனால்தான் படம் ஜூன் மாதத்திற்குத் தள்ளிப் போயுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிவாஜி தள்ளிப் போடப்பட்டுள்ளதால், பல விநியோகஸ்தர்கள் கோபமடைந்துள்ளனர். இயக்குநர் ஷங்கர் மீது அவர்கள் பாய்ந்துள்ளனர்.

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு விநியோகஸ்தர் கூறுகையில், வழக்கமாக படத்தை இயக்கியதும், அதை வெளியிட வேண்டும். ஆனால் ஷங்கர் விஷயத்தில் இது படு மோசமாக உள்ளது. ஒரு வருடத்திற்கு மேலாக அவர் படத்தை இயக்கினார். இன்னும் படத்தை வெளியிட வழி பிறக்கவில்லை.

அவரது செயல்களால் கிட்டத்தட்ட 25 படங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சிவாஜி வருவதால் தங்களது படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் இந்த 25 படங்களையும் அதன் தயாரிப்பாளர்கள் தள்ளிப் போட்டு வருகின்றனர். இதனால் அவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

படத்தை ரிலீஸ் செய்வதில் சிவாஜி யூனிட் செய்யும் தாமதங்கள், குழப்பங்களால் ஒட்டுமொத்த திரையுலகமே குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது, சிக்கலில் வீழ்ந்துள்ளது.

சந்திரமுகி படத்தை பி.வாசு எப்படி இயக்கினார், எப்படி அதை ரிலீஸ் செய்தார் என்பதை ஷங்கர் புரிந்து கொண்டு செயல்பட்டிருக்க வேண்டும்.

ஷங்கரின் போக்கால் சிறு தயாரிப்பாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தயாரித்த படத்தை என்ன செய்வது என்ற வேதனையில் அவர்கள் மூழ்கியுள்ளனர் என்று கொட்டித் தீர்த்தார்.

நியாயமான வேதனைதான்!

:angry: :angry: :angry: :angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.