Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவாஜி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Replies 351
  • Views 34.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

pg5.jpg

pg5a.jpg

ஏ... பல்லேலக்கா.. பல்லேலக்கா... சேலத்துக்கா... மெட்ராசுக்கா... பிரான்சிலிருந்து வந்திருக்காங்க சாண்ட்ரின் அக்கா.’’ பிரெஞ்சு அழகியை ரவுண்டு கட்டி கும்மியடிக்கிறது இளமைப் பட்டாளம். சிக்கி முக்கித் தமிழில் வா..ஜி..வா..ஜி என வயாகரா குரல் நயாகராவாய் வழிகிறது. சென்னை ஸ்பென்ஸரிலுள்ள நேச்சுரல் சலூனில் கிறு கிறு சிவா(ஜி) மயம்!

‘‘சலூன்ல வெச்சு இப்படி சரவெடி கொளுத்தறீங்களே... இப்பவே சிவாஜி டிக்கெட் கிடைக்குடுச்சா?’’

‘‘ம்ஹ§ம்... ரஜினி சாரோட ‘சன்லைட்’ இளமை சங்கதியே சிக்கிடுச்சு’’. சாண்டிரினை சுட்டிக்காட்டி கிசுகிசுப்பாய் கை நீட்டுகிறது ‘கட்’டழகிகளின் மொத்தக் கூட்டமும். நெடு நெடு உயரத்தில் குப்பி ஐஸாய் சாண்ட்ரின். கிட்ட வராதே என எச்சரிக்கும் தொனியில் கைப்பிடிக்குள் சின்னதாய் கத்தரி. டைரக்டர் ஷங்கரின் பேவரைட் ஹேர் ஸ்டைலிஸ்ட். பாய்ஸ், அந்நியனில் ஆரம்பித்து லேட்டஸ்ட்டாக இப்போது சிவாஜி. ‘தக தக’ ஜிகினா தலைமுடியை சிலுப்பியபடி ரஜினியிடம் புதிய ‘லுக்’!. கூடுதல் கலர். காரணம்? சகலமும் சாண்ட்ரினின் வேலைதான்.

தலைவிரிகோலமாகக அடுத்த ‘கட்’டிங்கிற்கு காத்திருந்த ஏஞ்சல்களை தள்ளிக் கொண்டு உள்ளே புகுந்து ஒரு ‘ஹாய்’ சொன்னோம்.

என்ன திடீர்ன்னு சென்னைல?

‘‘இந்த திடீர் விசிட்டுக்கு காரணமே உங்க ஊரு பசங்கதான். ரஜினிக்கு நான்தான் ஹேர் ஸ்டைலிஸ்டுன்னு தெரிஞ்ச பின்னாடி சும்மா விடுவாங்களா?’’ தலையெல்லாம் காய்ஞ்சு கிடக்கு... கொஞ்சம் தங்க முலாம் பூசிட்டு போம்மா’ன்னு ஒரே நச்சரிப்பு. அதான் ப்ளைட் புடிச்சு சென்னைல இறங்கிட்டேன்.’’ பிரெஞ்சு சிவப்பில் பளிச்சென பேசுகிறார் சாண்ட்ரின்.

‘‘பிறந்தது, வளர்ந்தது எல்லாமே பிரான்சுதான்.

சின்ன வயசுலயே நான் ரொம்பவும் துறுதுறு. கத்தரியும், கையுமாத் திரிவேன். யாராவது அப்பிராணி மாட்டினா அவங்க தலையில கை வெச்சிருவேன்.

என்னோட இந்த பொழுதுபோக்கை சலூன் வேலையா மாத்துனது எங்க அத்தைதான்.

சரி.. ஷங்கருடன் இணைந்த அனுபவத்தைச் சொல்லுங்களேன்?

உச்சந்தலையில அருவி கொட்டுன மாதிரியான ‘ஜிலீர்’ அனுபவம் அது. மும்பைல ஒரு நாள் என்னை தேடிட்டு வந்தார். எங்கிட்ட நாலு பசங்க இருக்காங்க. படத்துக்கு ‘பாய்ஸ்’ன்னு பேரு. ஹேர் ஸ்டைலிஸ்ட், மேக்கப் எல்லாமே நீங்கதான். ரகளையான கதை.. நீங்களும் வந்து ரவுசு காட்டுங்களேன்னு கூப்பிட்டாரு.

அப்ப ஆரம்பிச்சக் கூட்டணி அடுத்து அந்நியன், அப்போது சிவாஜி...

‘ஷங்கர்கிட்ட பிடிச்ச விஷயமே, எந்தக் கண்டிஷனும் போடாம கேரக்டரை என் கையில கொடுத்துடுவார். சிவாஜிலயும் அதான் நடந்திருக்கு. நானும், ஷங்கரும் நெறைய டிஸ்கஷன் செஞ்சோம். இதுவரைக்கும் யாரும் பார்க்காத ரஜினி வேணும்ன்னு பிடிவாதமாச் சொன்னார். அதே சமயத்துல ‘புதுக்கவிதை’, ‘படிக்காதவன்’ படங்கள்ல வர்ற பழைய ரஜினியோட ஹேர் ஸ்டைலை அப்படியே கொண்டு வாங்கன்னு ஸ்பெஷலா இன்ஸ்ட்ரக்ஷனும் கொடுத்தார். ரஜினிக்கு ‘விக்‘ பொருந்துவதில் கொஞ்சங்கூட சிரமமே இல்லை.

‘டூயட்’ பாட்டுகளில் மட்டும் வெரைட்டியான ஹேர் கலரிங்கில் ரஜினியை ஆடவிட்டிருக்கிறோம். மனிதர் பாதி வயது குறைந்து படு ‘யூத்’தாகிவிட்டார்.

இப்போதைக்கு இவ்வளவுதான். பேச்சை முடித்துக் கொண்டு அடுத்தக் கட்ட ‘கட்’டிங்கை ஆரம்பிக்கிறார் சாண்ட்ரின்.

வெட்டு ஒண்ணு துண்டு ஆயிரம்.

‘புதுக்கவிதை’, ‘படிக்காதவன்’ படங்கள்ல வர்ற பழைய ரஜினியோட ஹேர் ஸ்டைலை அப்படியே கொண்டு வாங்கன்னு ஸ்பெஷலா இன்ஸ்ட்ரக்ஷனும் கொடுத்தார். ரஜினிக்கு ‘விக்‘ பொருந்துவதில் கொஞ்சங்கூட சிரமமே இல்லை.

ஆமா இருக்காது முடியில்லாட்டி ஈசிதானே.. :wub:

Edited by vikadakavi

ஏவிஎம்மின் பிரமாண்ட தயாரிப்பான சிவாஜி வெளியாக இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஷங்கர் அளித்த பேட்டி:

சிவாஜி பெரிய வெற்றி பெறும் என்று எனக்கு தெரியும். ஆனால் எந்த அளவிற்கு வெற்றி பெறும் என்பது தெரியாது. சிவாஜி படத்தை பொருத்தவரை எல்லாமே புதுசாக இருக்கும்.

சிவாஜி ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க படத்தை பற்றிய பரபரப்பு அதிகாரித்து கொண்டே இருக்கிறது. எனவே வெற்றியின் அளவை தீர்மானமாக சொல்ல முடியவில்லை என்றாலும் பெரிய அளவில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதில் ரஜினி பல வேடங்களில் நடித்துள்ளாரா?

ரஜினி ஒரே ஒரு வேடத்தில் தான் நடிக்கிறார். ஆனால் கதைப்படி அவர் 3 விதமான தோற்றங்களில் வருவார். பாடல் காட்சிகள்ல் 13 விதமான தோற்றங்களில் வருவார்.

படத்தை ரஜினி பார்த்து விட்டாரா?

முதல் பிரதி தயாரான பின் அவர் முழு படத்தையும் பார்க்கவில்லை. ஆனால் டப்பிங் பேசும்போது படத்தை பார்த்தார். முழுமையான திருப்தி அடைந்தார். படம் சுப்பர் ஹிட் ஆகும் என்றார். படத்தின் முதல் பாதி படுவேகமாக இருக்கிறது. இரண்டாம் பாதி இன்னும் சூப்பராக இருக்கிறது என்றார்.

கதை கல்வி சம்மந்தப்பட்டதா?

சமுதாய அக்கறை உள்ள ஒரு மனிதனின் கதை இது. இந்த மண் மீது அக்கறை கொண்ட ஒருவரின் கதை. நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது செய்ய நினைக்கிறார் ரஜினிகாந்த்.

அதற்கு நிறைய தடைகள் வருகிறது. மற்றவர்கள் என்றால் நமக்கு எதற்கு வம்பு என்று ஒதுங்கி போவார்கள். ஆனால் ரஜினிகாந்த் ஒதுக்கி போகாமால் நல்லது செய்ய முயன்று வெற்றி பெறுகிறார்.

ஸ்ரேயாவின் கேரக்டர் என்ன?

ஸ்ரேயா ஒரு மியூசிக் ஷாப்பில் வேலை செய்யும் தமிழ்ச்செல்வி என்ற பெண்ணின் பாத்திரத்தில் வருகிறார். ரஜினியும், ஸ்ரேயாவும் அறிமுகமானதுமே அவர்களுக்கிடையே காதல் வந்து விடுகிறது.

ஸ்ரேயா மாடர்ன் கேரக்டர்களுக்கு பொருந்துகிறார். குடும்ப பங்கான தோற்றத்திற்கும் பொருந்துகிறார். துடுக்குதனம், அமைதி, கோபம் ஆகிய எல்ல உணர்ச்சிகளும் அவருக்கு சுலபமாக வருகின்றன. ரஜினி என்ற சூப்பர் ஸ்டாருடன் ஜோடியாக நடிக்கக் கூடிய அளவுக்கு கனமான கதாபாத்திரத்தை தாங்க கூடிய திறமை அவருக்கு இருக்கிறது. நன்றாக நடனமும் ஆடுகிறார்.

படத்தில் எத்தனை பாடல்கள், சண்டைகள்?

மொத்தம் 5 பாடல்களும், 5 பிரமாண்டமான சண்டை காட்சிகளும் உள்ளன.

உங்கள் அடுத்த படம்?

சிவாஜி ரிலீசாகி 2 மாதங்கள் கழித்து அடுத்த படம் பற்றி முடிவுக்கு வருவேன்.

பிறமொழி படங்களை இயக்கும் திட்டமுண்டா?

மற்ற மொழி படங்களை டைரக்ட் செய்ய வேண்டும் என்றும் இல்லை, செய்யக் கூடாது என்றும் இல்லை. எப்படி சூழ்நிலை அமைகிறதோ அதற்கு தகுந்த மாதிரி படம் செய்வேன். ஆனால் நான் ரொம் விரும்பி செய்ய ஆசைப்படுவது தமிழ் படம் தான்.

ஒவ்வோறு படம் முடிந்ததும் வெளிநாடு செய்வீர்களே. இப்போது எந்த நாட்டிற்கு செல்கிறீர்கள்?

அதுபற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை. அதுகுறித்து முடிவு எடுப்பது என் மனைவியும், குழுந்தைகளும் தான் என்றார் ஷங்கர்.

:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவாஜி-மனம் திறக்கும் ஷங்கர்

ஏவிஎம்மின் பிரமாண்ட தயாரிப்பான சிவாஜி வெளியாக இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில்இ ஷங்கர் அளித்த பேட்டி:

சிவாஜி பெரிய வெற்றி பெறும் என்று எனக்கு தெரியும். ஆனால் எந்த அளவிற்கு வெற்றி பெறும் என்பது தெரியாது. சிவாஜி படத்தை பொருத்தவரை எல்லாமே புதுசாக இருக்கும்.

சிவாஜி ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க படத்தை பற்றிய பரபரப்பு அதிகாரித்து கொண்டே இருக்கிறது. எனவே வெற்றியின் அளவை தீர்மானமாக சொல்ல முடியவில்லை என்றாலும் பெரிய அளவில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதில் ரஜினி பல வேடங்களில் நடித்துள்ளாரா?

ரஜினி ஒரே ஒரு வேடத்தில் தான் நடிக்கிறார். ஆனால் கதைப்படி அவர் 3 விதமான தோற்றங்களில் வருவார். பாடல் காட்சிகள்ல் 13 விதமான தோற்றங்களில் வருவார்.

படத்தை ரஜினி பார்த்து விட்டாரா?

முதல் பிரதி தயாரான பின் அவர் முழு படத்தையும் பார்க்கவில்லை. ஆனால் டப்பிங் பேசும்போது படத்தை பார்த்தார். முழுமையான திருப்தி அடைந்தார். படம் சுப்பர் ஹிட் ஆகும் என்றார். படத்தின் முதல் பாதி படுவேகமாக இருக்கிறது. இரண்டாம் பாதி இன்னும் சூப்பராக இருக்கிறது என்றார்.

கதை கல்வி சம்மந்தப்பட்டதா?

சமுதாய அக்கறை உள்ள ஒரு மனிதனின் கதை இது. இந்த மண் மீது அக்கறை கொண்ட ஒருவரின் கதை. நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது செய்ய நினைக்கிறார் ரஜினிகாந்த்.

அதற்கு நிறைய தடைகள் வருகிறது. மற்றவர்கள் என்றால் நமக்கு எதற்கு வம்பு என்று ஒதுங்கி போவார்கள். ஆனால் ரஜினிகாந்த் ஒதுக்கி போகாமால் நல்லது செய்ய முயன்று வெற்றி பெறுகிறார்.

ஸ்ரேயாவின் கேரக்டர் என்ன?

ஸ்ரேயா ஒரு மியூசிக் ஷாப்பில் வேலை செய்யும் தமிழ்ச்செல்வி என்ற பெண்ணின் பாத்திரத்தில் வருகிறார். ரஜினியும்இ ஸ்ரேயாவும் அறிமுகமானதுமே அவர்களுக்கிடையே காதல் வந்து விடுகிறது.

ஸ்ரேயா மாடர்ன் கேரக்டர்களுக்கு பொருந்துகிறார். குடும்ப பங்கான தோற்றத்திற்கும் பொருந்துகிறார். துடுக்குதனம்இ அமைதிஇ கோபம் ஆகிய எல்ல உணர்ச்சிகளும் அவருக்கு சுலபமாக வருகின்றன. ரஜினி என்ற சூப்பர் ஸ்டாருடன் ஜோடியாக நடிக்கக் கூடிய அளவுக்கு கனமான கதாபாத்திரத்தை தாங்க கூடிய திறமை அவருக்கு இருக்கிறது. நன்றாக நடனமும் ஆடுகிறார்.

படத்தில் எத்தனை பாடல்கள்இ சண்டைகள்?

மொத்தம் 5 பாடல்களும்இ 5 பிரமாண்டமான சண்டை காட்சிகளும் உள்ளன.

உங்கள் அடுத்த படம்?

சிவாஜி ரிலீசாகி 2 மாதங்கள் கழித்து அடுத்த படம் பற்றி முடிவுக்கு வருவேன்.

பிறமொழி படங்களை இயக்கும் திட்டமுண்டா?

மற்ற மொழி படங்களை டைரக்ட் செய்ய வேண்டும் என்றும் இல்லைஇ செய்யக் கூடாது என்றும் இல்லை. எப்படி சூழ்நிலை அமைகிறதோ அதற்கு தகுந்த மாதிரி படம் செய்வேன். ஆனால் நான் ரொம் விரும்பி செய்ய ஆசைப்படுவது தமிழ் படம் தான்.

ஒவ்வோறு படம் முடிந்ததும் வெளிநாடு செய்வீர்களே. இப்போது எந்த நாட்டிற்கு செல்கிறீர்கள்?

அதுபற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை. அதுகுறித்து முடிவு எடுப்பது என் மனைவியும்இ குழுந்தைகளும் தான் என்றார் ஷங்கர்.

சிவாஜி படத்தில் ஒரு நகைச்சுவை

ரஜனி வடிவுக்கரசியிடம் அம்மா ஏன் என்னை கறுப்பாக பெற்றாய் என கேட்பார்.

அதற்கு அவர்

உன்னை வெள்ளையாக பெற்றால் நீ அழுக்காகி விடுவாய்டா ....................

நன்றி பரணி அண்ணா எப்படி உங்களுக்கு கிடைத்தது?

எல்லாம் அவன் செயல்

சிவாஜி படத்தில் ரஜனியை பார்க்கும்போது 80களின் ரஜனியினை பார்க்ககூடியதாக இருந்தது.

உது ட்ரெய்லர்லயே வருகுதல்லோ

உது ட்ரெய்லர்லயே வருகுதல்லோ

ஆமாங்கோ தரிசனம் உட்பட பல தொலைக்காட்சியிலும் வருதுங்கோ?? இதற்குள் சிவாஜி பட புறக்கணிப்பு ஒரு பக்கம். :P :P :lol:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள சிவாஜி படத்தின் முதல் ஷோ அமெரிக்காவில் ஜூன் 14ம் தேதி திரையிடப்படுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஏவி.எம் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஸ்ரேயா நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்ட படைப்பான சிவாஜி ஜூன் 15ம் தேதி உலகெங்கும் திரையிடப்படுகிறது.

ஆனால் ஒரு நாள் முன்னதாக ஜூன் 14ம் தேதி அமெரிக்காவின் சியாட்டில் நகரில் திரையிடப்படவுள்ளது. இதற்கான டிக்கெட் புக்கிங் கடந்த 3ம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம்.

பெலுவி, கிர்க்லாண்ட், ரெட்மாண்ட் ஆகிய பகுதிகளில் டிக்கெட் விற்பனை படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மயூரி வீடியோஸ் என்ற நிறுவனம் டிக்கெட் விற்பனையை மேற்கொண்டுள்ளது.

படத்தின் பிரமாண்டத்தைப் போலவே டிக்கெட்டுகளிலும் அட்டகாசம் கொடி கட்டிப் பறக்கிறதாம். கண்ணைக் கவரும் வகையில் டிக்கெட் டிசைன் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

சிவாஜி படம் ஒரு நாள் முன் கூட்டியே சியாட்டிலில் திரையிடப்படுவதால் அமெரிக்காவில் உள்ள ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

ஆனால் கொலம்பஸ் பகுதியில் ஜூன் 17ம் தேதிதான் சிவாஜி திரையிடப்படுகிறதாம். இதனால் அப்பகுதி ரஜினி ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

-thatstamil-

Edited by Kuddithambi

நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன் குட்டி.

எதைத்தான் கண்டிக்குறீங்கள்

புலம்பெயர் தேசத்தில் சிவாஜி திரையிடக்கூடாது என்று முழுங்கிக்கொண்டு தொலைக்காட்சியில் விளம்பரம் மட்டும் செய்யலாமோ ? உரியவர்கள் கவனிக்கவும்

  • தொடங்கியவர்

ஆமாங்கோ தரிசனம் உட்பட பல தொலைக்காட்சியிலும் வருதுங்கோ?? இதற்குள் சிவாஜி பட புறக்கணிப்பு ஒரு பக்கம். :P :P :lol:

என்னதான் இருந்தாலும் டைகர் வானிலியில திருட்டு விசிடில நானும் ஜம்முவும் வெளியிடாம விடமாட்டோம்ல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மலைவிழுங்கி கள்ளன் சிவாஜிராவ்வுக்கு யாழ்களத்திலை நல்லாய்த்தான் விளம்பரம் நடக்குது.என்னமோ கூத்துகளை நடத்துங்கோ!அது சரி பிறந்தநாள்,கலியாணவீட்டுக்கு போடுறமாதிரி நல்ல பாட்டுக்கள் சிவாஜி படத்திலை ஏதுமிருக்கோ????

கக்*****க்க இருந்து முக்குற மாதிரி ஒரு பாட்டிருக்கு :P

என்னதான் இருந்தாலும் டைகர் வானிலியில திருட்டு விசிடில நானும் ஜம்முவும் வெளியிடாம விடமாட்டோம்ல

அதானே எப்படிப் புறக்கணிப்பது. விசிடியிலாவது பார்த்து விட மாட்டோமா. சும்மா ஒரு பேச்சுக்குப் புற :D கணிப்புத் :P தானுங்க. :lol:

நீண்ட நெடிய விவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது 'சிவாஜி.'

தூயதமிழில் படத்துக்கு பெயர் வைத்தால் முழு வரிச்சலுகை என முதல்வர் கருணாநிதி அறிவித்து, அது நடைமுறையிலும் உள்ளது. இந்த அறிவிப்பால் 'சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்' வெறும் 'உனக்கும் எனக்கும்' மாக சுருங்கியது. 'எம்டன்-மகன்' 'எம்-மகன்' ஆக பொருளற்றுப் போனது. 'ஜில்லென்று ஒரு காதல்' 'சில்லென்று ஒரு காதலா'க சிதறியது.

இதில் எம்டன் என்பது ஜெர்மன் கப்பலின் பெயர். பெயர்களை தமிழ்ப்படுத்த முடியாது. இருந்தும் எம்டனை எம்மாக சுருக்கிய பின்னரே வரிச்சலுகை அளிக்கப்பட்டது.

அந்த வகையில் சிவாஜி என்பதும் தமிழ் கிடையாது. மராட்டிய பெயர். ஆகவே, 'சிவாஜி' படத்துக்கு வரிச்சலுகை அளிக்கக்கூடாது, மீறினால் வழக்கு தொடர்வோம் என பிரபல அரசியல் கட்சியின் வக்கீல்கள் பிரிவு முண்டா தட்டியது.

இந்த வரிச்சலுகையால் பொதுமக்களுக்கு எந்த பயனும் இல்லை. இதனை முழுமையாக அனுபவிப்பவர்கள் திரையரங்கு உரிமையாளர்கள். சிலநேரம் இதன் பயனை விநியோகஸ்தர்களும் அனுபவிப்பதுண்டு.

'சிவாஜி'க்கு வரிச்சலுகை ரத்தானால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு சும்மா கிடைக்கும் வரிச்சலுகை லாபம் இல்லாமல் போகும். அதனை ஒருபோதும் அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். பெயரை மாற்றுங்கள் என தயாரிப்பாளரை நெருக்குவார்கள். இத்தனை நாள் 'சிவாஜி' என்று விளம்பரப்படுத்தி விட்டு சட்டென்று பெயரை மாற்றவும் முடியாது.

இந்த சிக்கல்கள் அனைத்தையும் தமிழக அரசு ஊதித் தள்ளியுள்ளது. அதாவது 'சிவாஜி' தமிழ் பெயர்தான் என அரசு ஒத்துக் கொண்டுள்ளது. இதனால் வரிச்சலுகையை 'சிவாஜி' தாராளமாக அனுபவிக்கலாம்!

:lol::D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிக்கல்கள் அனைத்தையும் தமிழக அரசு ஊதித் தள்ளியுள்ளது. அதாவது 'சிவாஜி' தமிழ் பெயர்தான் என அரசு ஒத்துக் கொண்டுள்ளது. இதனால் வரிச்சலுகையை 'சிவாஜி' தாராளமாக அனுபவிக்கலாம்!

எப்படி இவர்கள் அதைத் தமிழ்பெயர் என்று ஒத்துக் கொண்டார்கள். சிவாஜியில் வேறு கிரந்த எழுத்தும் இருக்கின்றது. தங்களின் விருப்பத்துக்குத் தமிழ் பற்றிக் கதைக்கவோ, தூயதமிழ் பற்றிக் கதைக்கவோ முடியும் எனத் தமிழக அரசு சிந்திக்கின்றதா?

இப்படியான வேலைகளால் தான் முக்கியமாகத் தமிழ் நலிந்து போகின்றது. எந்தத் தமிழ் கொம்பன் வந்து சொன்னாலும் சிவாஜி தமிழ் ஆகிவிடாது.

எதைத்தான் கண்டிக்குறீங்கள்

பரணி அண்ணா நான் கண்டித்தது அழுஸ்ரெலியாவில முதல் சோ போடாம அமேரிக்காவில போடுறதை

:P

கக்*****க்க இருந்து முக்குற மாதிரி ஒரு பாட்டிருக்கு :P

:angry: :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கக்*****க்க இருந்து முக்குற மாதிரி ஒரு பாட்டிருக்கு :P

அவரின்ட அனேகமான பாட்டுக்கள் அந்த மாதிரி தானே. :lol:

அப்படி இல்லாவிடில் தன்னை பற்றி புளுகிற மாதிரி ஏதாவது பாட்டுக்கு வாயசைக்க தெரியும் :P

அவரின்ட அனேகமான பாட்டுக்கள் அந்த மாதிரி தானே. :lol:

அப்படி இல்லாவிடில் தன்னை பற்றி புளுகிற மாதிரி ஏதாவது பாட்டுக்கு வாயசைக்க தெரியும் :P

எல்லாருக்கும் அது தான் ஆசை அவர் நேரா காட்டி கொள்கிறார் மற்றவை வேற விதத்தில காட்டினம்

:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா அப்போ வீடீயோவும் அடுத்த நாளே வரப்போகிறது போல இருக்கு நெட்டில் :P

  • கருத்துக்கள உறவுகள்

எதைத்தான் கண்டிக்குறீங்கள்

புலம்பெயர் தேசத்தில் சிவாஜி திரையிடக்கூடாது என்று முழுங்கிக்கொண்டு தொலைக்காட்சியில் விளம்பரம் மட்டும் செய்யலாமோ ? உரியவர்கள் கவனிக்கவும்

எம்மவர்களா இப்படி செய்கிறார்கள்?

என்ன கொடுமை சார் இது??? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜி படத்தில் ஒரு நகைச்சுவை

ரஜனி வடிவுக்கரசியிடம் அம்மா ஏன் என்னை கறுப்பாக பெற்றாய் என கேட்பார்.

அதற்கு அவர்

உன்னை வெள்ளையாக பெற்றால் நீ அழுக்காகி விடுவாய்டா ....................

பலே பாண்டியா! அருமை!

சிவாஜியை புறக்கணிக்கனும் எண்ட தலைப்பில விழுந்து விழுந்து கருத்தெழுதியதில் தங்களுக்கும் பங்குண்டோ பரணி? என்ன கொடுமை சேர் இது. :P

அதானே எப்படிப் புறக்கணிப்பது. விசிடியிலாவது பார்த்து விட மாட்டோமா. சும்மா ஒரு பேச்சுக்குப் புற :lol: கணிப்புத் :P தானுங்க. :lol:

அது சரி இவருக்கும், சிவாஜிக்கும் ஏதாச்சும் சம்பந்தம் இருக்கா? இல்லை சிவாஜி செக்சனில புகுந்து விளையாடுறார் அதுதான்.. அதுசரி அண்ணாச்சி யாரு? முன்னாள் சந்தில் சிந்து விளையாடும் உறுப்பினராச்சே விடுவாரா இதை. :rolleyes:

Edited by Danklas

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.