Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் மூத்த ஊடகவியலாளர்மீது இருவர் கண்மூடித்தனமான தாக்குதல்!

Featured Replies

யாழில் மூத்த ஊடகவியலாளர்மீது இருவர் கண்மூடித்தனமான தாக்குதல்!

 
யாழில் மூத்த ஊடகவியலாளர்மீது இருவர் கண்மூடித்தனமான தாக்குதல்!

மூத்த ஊடகவியலாளா் நவரத்தினம் பரமேஸ்வரன் மீது இன்றைய தினம் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் வைத்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதில் சம்மந்தப்பட்டவர்கள் இலங்கையின் முன்னாள் எதிர்கட்சி தலைவராக இருந்த அமிர்தலிங்கத்தின் மகன் மற்றும் மானிப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த கௌரிகாந்தன் என்றும் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்துக் கருத்துவெளியிட்ட ஊடகவியலாளர் பரமேஸ்வரன்,

“சுமார் 32வருட ஊடக வரலாற்றினில் சிறீலங்கா படை அதிகாரிகள் முதல் விடுதலைப்புலிகளது தலைமை வரை கேள்விக்குள்ளாக்கியிருந்த போதும் எனக்கு எந்தவித அச்சுறுத்தலும் இருந்ததில்லை. அதே போன்று தமிழ் ஆயுதக்குழுக்களாலும் இருந்ததில்லை. ஆனால் பகிரங்கமாக தமக்கு வன்முறை தெரியாதென சொல்லிவந்த கட்சியினரால் நான் தாக்கப்பட்டமை மிகுந்த வேதனையினை ஏற்படுத்தியுள்ளது“ – என்றார்.

இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 90ஆவது பிறந்ததின நிகழ்வுகள் யாழ்.பொதுநூலகத்தில் நடைபெற்றிருந்தது. இந்நிலையில் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக எதிர்க்கட்சித்தலைவராக பதவி வகித்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கு சிலை கட்டப்படுவது தொடர்பாக பரமேஸ்வரன் கேள்வி எழுப்பியிருந்தார்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் நாடாளுமன்றில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது தமிழர்களின் தலைவர் என வர்ணிக்கப்பட்ட தளபதி எதிர்க்கட்சித்தலைவர் அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினர்களெவரும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. முன்னாள் எத்ர்க்கட்சித் தலைவர், இந்நாள் எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி உட்பட்டோர் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிர்ப்புத்தெரிவிக்காமல் விட்டதன் மூலம் தமது வரலாற்றுக்கடமையிலிருந்து தவறி விட்டனர்.

கடந்த இருபத்தெட்டு வருடங்களாக வடகிழக்கில் தமிழ் இளைஞர் யுவதிகள் காணாமலாக்கப்பட்டதற்கும், கொல்லப்பட்டதற்கும், சித்திரவதை செய்யப்பட்டதற்கும் தமிழ் மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்தமைக்கும் அமிர்தலிங்கமும் தமிழர் விடுதலைக்கூட்டணியும் ஒரு காரணம் என்பதை தமிழ் மக்கள் மறந்து விடக்கூடாதென தெரிவிக்கும் சிறிய துண்டுபிரசுரமொன்றினை பரமேஸ்வரன் நிகழ்வில் பங்கெடுத்தவர்களிடையே தனது பெயருடன் விநியோகித்திருந்தார்.

இந்நிலையில் பரமேஸ்வரனை மண்டபத்திற்கு வெளியே அழைத்துச்சென்று அமிர்தலிங்கத்தின் மகன் பகீரதன் மற்றும் மானிப்பாய் பிரதேசசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் கௌரிகாந்தன் ஆகிய இருவரும் இணைந்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய இந்தச் சம்பவம் மிகப்பெரிய சன நாயக மீறல் என்றும் சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் பலரும் தமது கருத்துக்களை முன்வைத்துவருகின்றனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Attack-on-senior-journalist-in-Jaffna

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் விடுதலைக் கூட்டணி சண்டியர்களை வைச்சு வாக்குச் சேகரித்த காலமும் இருந்தது. அந்தச் சண்டியர்களின் வாரிசுகளும்.. ஒட்டுக்குழு எச்சங்களும்.. இவர்களுக்கு சேவகம் செய்வது ஒன்றும் வியப்பில்லை.

இவர்களின் மென்போக்கு எல்லாம்.. சிங்களவர்களோடும்.. ஹிந்தியர்களோடும் தான்.. எசமான விசுவாசத்தைக் காட்டி தங்களின் சுயபோக சுகபோகத்தை அனுபவிக்க. 

தமிழ் மக்களோடு இவர்கள் எப்போதுமே கடுமையாகத்தான் நடந்து கொண்டிருக்கிறார்கள்.. ஆனால்.. வெளி உலகிற்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற போர்வையை போற்றிக் கொண்டு.

அமிர்தலிங்கம் போன்ற அப்பட்டமான தமிழினத் துரோகிகளுக்கு..  தமிழின அழிப்புக்கு துணைபோன கொலைஞர்களுக்கு சிலை என்ன.. ஒரு பிடி மண்ணும்.. தமிழர் நிலத்தில் மிச்சம் வைக்க அனுமதிக்கக் கூடாது. தமிழர் விடுதலைக் கூட்டணி எச்சமின்றி அழிந்தொழியனும். அது தமிழர்களின் அவமான அரசியலின் அடையாளம்.  :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

இந்நிலையில் பரமேஸ்வரனை மண்டபத்திற்கு வெளியே அழைத்துச்சென்று அமிர்தலிங்கத்தின் மகன் பகீரதன் மற்றும் மானிப்பாய் பிரதேசசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் கௌரிகாந்தன் ஆகிய இருவரும் இணைந்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய இந்தச் சம்பவம் மிகப்பெரிய சன நாயக மீறல் என்றும் சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் பலரும் தமது கருத்துக்களை முன்வைத்துவருகின்றனர்.

சுமந்திரனும் சாவகச்சேரியிலை வைச்சு எச்சரிக்கிறன் எண்டு வெருட்டினவர்.அதிலை ஆயிரம் அர்த்தங்கள் பொதிஞ்சுகிடக்கு கண்டியளோ.....வாயை பொத்திக்கொண்டு பேசாமல் கிடவுங்கோ...எங்களுக்கு எல்லாம் தெரியும்.
தமிழ்மக்களின் அடுத்த போராட்டம் இன்றைய தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிரானதாக இருக்கவேண்டுமே தவிர.......சிங்கள அரசியலுக்கு எதிராக இருக்கக்கவேண்டிய அவசியமேயில்லை. :cool:

  • கருத்துக்கள உறவுகள்

மாட்டு கள்வனுக்கு சனம் அடித்தபோது ஆயிரம் நீதி கதைச்ச புத்திசாலிகளுக்கு பரமேஸ்வரன் செய்தது சரி என்று சொல்லமாட்டினம்................

  • தொடங்கியவர்

ஊடகவியலாளரைத் தாக்கியதாக பொலிஸ் நிலையத்தில் முறையீடு

 
 
ஊடகவியலாளரைத் தாக்கியதாக பொலிஸ் நிலையத்தில் முறையீடு
 Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

யாழ்ப்­பா­ணப் பொது நூல­கத்­தில் நடந்த நிகழ்­வில் ஊட­க­வி­ய­லா­ள­ரைத் தாக்­கி­ய­தாக யாழ்ப்­பா­ணப் பொலிஸ் நிலை­யத்­தில் நேற்று முறைப்­பாடு செய்­யப்­பட்­டது.

ந.பர­மேஸ்­வ­ரன் என்ற ஊட­க­வி­ய­லா­ளரே, தன்னை இரண்டு பேர் தாக்­கி­னர் என்று முறைப்­பாடு செய்­துள்­ளார். வலி.தென்­மேற்கு பிர­தேச சபை­யின் முன்­னாள் தவி­சா­ளர் கௌரி­காந்­தன் மற்­றும் முன்­னாள் எதிர்க்­கட்­சித் தலை­வர் அமிர்­த­லிங்­கத்­தின் மக­னான காண்­டீ­பன் ஆகி­யோரே தாக்­கி­ய­தாக பொலிஸ் நிலை­யத்­தில் முறைப் பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

அமிர்­த­லிங்­கத்­தின் நினை­வு­தி­னம் யாழ்ப்­பா­ணப் பொது நூல­கக் கேட்­போர் கூடத்­தில் நேற்­றுப் பிற்­ப­கல் இடம்­பெற்­றது. அதில் இந்­தச் சம்­ப­வம் இடம்­பெற்­ற­தாக பொலிஸ் முறைப்­பாட்­டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அமிர்­த­லிங்­கத்­தின் மக­னான காண்­டீ­பன் வெளி­நாட்­டில் உள்­ளார். அவ­ரது மற்­றைய மக­னான பகீ­ர­தன் என்­ப­வரே தற்­போது யாழ்ப்­பா­ணத்­தில் தங்­கி­யுள்­ளார்.

“குறித்த ஊட­க­வி­ய­லா­ளர் கையில் துண்­ட­றிக்­கை­கள் பல­வற்றை வைத்­துக்­கொண்டு நிகழ்­வில் கலந்­து­கொண்­ட­வர்­க­ளி­டம் அவற்றை வழங்­கிக் கொண்­டி­ருந்­தார்.

அது தவ­றான கருத்­து­டைய துண்­ட­றிக்­கை­கள் என்று அங்கு கூறப்­பட்­டது. பின்­னர் அந்த ஊட­க­வி­ய­லா­ளரை ஒரு­வர் நிகழ்வு மண்­ட­பத்­தி­லி­ருந்து வெளியே அழைத்­துச் சென்­ற­தைக் கண்­டேன்.

நிகழ்வு நிறை­வ­டை­யும்­வரை நான் நிகழ்வு மண்­ட­பத்­தை­விட்டு வெளி­யே­ற­வில்லை” என்று அமிர்­த­லிங்­கத்­தின் மக­னான பகீ­ர­தன் தெரி­வித்­தார். கௌரி­காந்­த­னு­டன் தொடர்பை ஏற்­ப­டுத்­தி­ய­போ­தும் அவ­ரது தொடர்பு கிடைக்­க­வில்லை.

http://newuthayan.com/story/25562.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.