Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குளோபல் தமிழ் போரத்தின் தலைவர் அருட்தந்தை இமானுவெல் அமெரிக்கத் தூதுவரை சந்தித்து பேச்சுவார்த்தை

Featured Replies

குளோபல் தமிழ் போரத்தின் தலைவர் அருட்தந்தை இமானுவெல் அமெரிக்கத் தூதுவரை சந்தித்து பேச்சுவார்த்தை

imanual-athul.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

குளோபல் தமிழ் போராம் அமைப்பின் தலைவர் அருட்தந்தை இமானுவெல் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். புலம்பெயர் அமைப்புக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக அருட்தந்தை இமானுவெல் இலங்கைக்கு  பயணம் செய்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கும் அருட்தந்தை இமானுவெல் பயணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அருட்தந்தை இமானுவெலை சந்திக்க கிட்டியமை மகிழ்ச்சி  அளிப்பதாக அமெரிக்கத் தூதுவர் கேசப் தெரிவித்துள்ளார். மஹிந்த அரசாங்கத்தினால்கு;ளோபல் தமிழ் போராம் உள்ளிட்ட புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் நபர்களுக்கு எதிராக தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக அருட்தந்தை மீது குற்றம் சுமத்தப்பட்டதனைத் தொடர்ந்து அவர் 1997ம் ஆண்டு முதல் புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/archives/42153

  • தொடங்கியவர்

இலங்கை வந்துள்ள அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவேல் பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை

 

தடை விலக்கப்பட்டதையடுத்து இருபது ஆண்டுகள் கழித்து இலங்கை வந்துள்ள உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவேல், கொழும்பிலும் வடபகுதியிலும் பல முக்கியஸ்தர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

1_Father.jpg

புலிகளுடன் தொடர்புடைய, பயங்கரவாதத்துக்கு உதவும் குற்றச்சாட்டுகளின் பேரில் சுமார் நானூறு தனி நபர்களையும் அமைப்புகளையும் கடந்த ஆட்சியின்போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தடை செய்திருந்தார்.

அந்தத் தனி நபர்களுள் அருட்தந்தையும் ஒருவர்.

இந்தக் குற்றச்சாட்டையடுத்து அருட்தந்தை 1997ஆம் ஆண்டு புலம்பெயர்ந்தார். 

எனினும், புலம்பெயர் அமைப்புகளுடன் கலந்துரையாடி, போரினால் பாதிக்கப்பட்டுள்ள சமூகங்களை மீளக் கட்டியெழுப்பும் தற்போதைய அரசின் முயற்சியின் கீழ் மேற்படி தடைகள் விலக்கிக்கொள்ளப்பட்டன.

இதையடுத்தே அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவேல் இலங்கை வந்துள்ளார். இதன்போது, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அத்துல் கேஷப் உட்பட இலங்கையின் தென், வட பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு முக்கியஸ்தர்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவின் குற்றச்சாட்டினால், ஒரு கிறிஸ்தவ அருட்தந்தையான தாம் சமய ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/24796

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு என்ன விசா கொடுத்தவை...??! விசேட விசாவா.:rolleyes:

சாமானிய மக்களுக்கு கொடுக்கும் விசாவில்.. அரசியல் நடவடிக்கைகளில்.. பிரமுகர்களை சந்திக்க தடை இருக்கே. tw_angry:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

இவருக்கு என்ன விசா கொடுத்தவை...??! விசேட விசாவா.:rolleyes:

சாமானிய மக்களுக்கு கொடுக்கும் விசாவில்.. அரசியல் நடவடிக்கைகளில்.. பிரமுகர்களை சந்திக்க தடை இருக்கே. tw_angry:

தாயகத்திலே கூத்தமைப்பைச் சரிக்கட்டி ஒரு அரைகுறைத்  தீர்வை(?) வைக்க முழுமுயற்சி நடக்கிறதல்லவா? அதனைப் புலம்பெயர்ந்தவை ஏற்க முடியாது என்று ஏதும் பேரணி அது இது என்று (செய்யமாட்டினம் ) குழப்பினால்  இவர்தான் புலம்பெயர்ந்த அமைப்பபுகளின் சார்பில் ஓகே பண்ணினவர் என்று சொல்லச் சரியான ஒருவராக  சிங்கள.கிந்திய - மேற்குக் கூட்டணி  இனம் கண்டதன் விளைவாகவும் இராஜதந்திர விசாவை குடுத்திருப்பினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாற போற எல்லாரும் எங்கடை சனத்துக்கு/நாட்டுக்கு நல்லது செய்யோணும் எண்டுதான் மல்லுக்கட்டீனம். ஆனால் பிரச்சனை  அந்த நாள் தொடக்கம் இண்டுவரைக்கும்  நிண்ட இடத்திலையே நிக்குது.

ஒரு இஞ்சிகூட அரக்குதில்லை. :grin:

Edited by குமாரசாமி
Askp 4Qhc mO57 6sHz

  • கருத்துக்கள உறவுகள்

 இவர் அரசியல் செய்யவோ, பேசவோ மாட்டார். ஒருவேளை நல்லாட்சியை புகழ்ந்து, வெளிநாடுகளுக்கு இலங்கையில் எந்த பிரச்சினையுமில்லை, எல்லாம் நலமே உள்ளது என்று நல்லாட்சிக்கு ஒரு நற்பெயரை வெளிநாடுகளில்  உருவாக்க உதவும் என நம்புகிறேன். நல்லாட்சி அரசாங்கத்தின் ஒரு ராஜ தந்திர, அரசியல் வெற்றி இவரின் வருகை. ஐ . நாவுக்கே தண்ணி காட்டுறாங்கள். இவர் எம்மாத்திரம். பிரச்சினை நிண்ட இடத்திலேயே நிக்குது. ஆனால் அவனை அசைக்க முடியாமல் உதவுவதும் தமிழர்களே. 

  • தொடங்கியவர்

மைத்திரி அழைத்ததால் வந்தேன் ; எஸ்.ஜே இமானுவேல்

 

 

ஸ்ரீலங்காவுக்கு தாம் திருட்டுத்தனமாக வரவில்லை என்று உலக தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே இமானுவேல் தெரிவித்துள்ளார்.

மைத்திரி அழைத்ததால் வந்தேன் ; எஸ்.ஜே இமானுவேல்

ஸ்ரீலங்காவுக்கு வரும்படி ஸ்ரீலங்கா நாட்டு ஜனாதிபதி மைத்திரிபாலவே தனக்கு பலமுறை அழைப்பு விடுத்திருந்ததாகவும் அதற்கமையவே தாம் இந்த விஜயத்தை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தின் பின்னர் தனது முதலாவது ஸ்ரீலங்காவுக்கான விஜயமாக  இது அமைந்திருப்பதாக இம்மானுவேல் அடிகளார் சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தின்போது ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர், நிதியமைச்சர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ்த் தலைமைகள் எனப் பலரையும் சந்திக்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தாம் ஒருபோதும் சிங்கள மக்களுக்கு விரோதமானவரல்ல என்று தெரிவித்த அவர், ஒரு சிலர் இப்படியாக போலி பிரசாரங்களை முன்னெடுத்திருப்பது கவலைக்குரிய விடயமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த இம்மானுவேல் அடிகளார் 1997ஆம் ஆண்டு நாட்டிலிருந்து வெளியேறியதோடு ஜேர்மனில் குடிபெயர்ந்து வசித்து வருகின்றார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/imanuvel-in-srilanka

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.