Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் பெருகி வரும் நுண் கடன் திட்டங்களால் பாதிப்புறும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்

Featured Replies

வடக்கில் பெருகி வரும் நுண் கடன் திட்டங்களால் பாதிப்புறும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்

 

 

வடக்கில் பெருகி வரும் நுண் கடன் திட்டங்களால் பாதிப்புறும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்
 

நுண் கடன் திட்டத்தினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பெரிதும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

நுண் கடன் வழங்கும் நிறுவனங்கள் தற்போது அதிகளவில் வட மாகாணத்தினைத் தளமாகக்கொண்டு, பல நுட்பங்களைப் பயன்படுத்தி மக்களுக்கு கடன் வழங்கி வருகின்றனர்.

இலங்கையில் வறுமை கூடிய மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இறுதிக்கட்ட யுத்தத்தில் அதிகளவு பாதிக்கப்பட்ட மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது.

யுத்தத்தின் பின்னர் வட மாகாணத்தில் சுமார் 45 ஆயிரம் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவு மக்கள் விவசாயம், மீன் பிடி, கூலித்தொழில் மற்றும் சுயதொழில்கள் மூலமாக நாளாந்த வருமானத்தினை ஈட்டுகின்றனர்.

போதிய வருமானம் இன்மை மற்றும் குடும்பத்தலைவனை இழந்தமை போன்ற காரணங்களினால் இலகுவில் பெற்றுக்கொள்ளக்கூடிய நுண் கடன்களை நாடிச்செல்கின்றனர்.

வங்கிகளில் கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் கடினமாக இருப்பதனால், நுண் கடன்களை வழங்கும் நிறுவனங்கள் தமது இலக்கினை இலகுவதாக எட்டிவிடுகின்றன.

பிள்ளைகளின் கல்விச்செலவு மற்றும் நாளாந்த செலவீனங்களை வருமானத்தின் மூலம் ஈடு செய்ய முடியாமையால் மாற்று வழியின்றி நுண் கடன்களைப் பெறுகின்றனர்.

நாளாந்த, வாராந்த, மாதாந்த அடிப்படையில் திருப்பிச் செலுத்தும் வகையில் நுண் கடன்கள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

நுண் கடன் நிதி நிறுவனங்களின் வட்டி வீதமானது நிறுவனங்களைப் பொறுத்து மாறுபடுகின்றன.

12 வீதம் முதல் 25 வீதம் வரையான வட்டி வீதத்தில் நுண் கடன்கள் வழங்கப்படுகின்றன.

நுண் கடனை உரிய காலத்தில் திருப்பி செலுத்தத் தவறும் பட்சத்தில், பெண்கள் பாலியல் சுரண்டல்களுக்கு உள்ளாவதுடன் சிலர் தற்கொலை செய்யும் நிலைக்கு மனரீதியாக தள்ளப்படுகின்றனர்.

http://newsfirst.lk/tamil/2017/09/வடக்கில்-பெருகி-வரும்-நு/

 

  • தொடங்கியவர்

வடமாகாணத்தில் தற்கொலை அதிகரிப்பிற்கு நுண்கடனும் ஒரு காரணம் – உளநல மருத்துவர்கள் கருத்து

 

 

வடமாகாணத்தில் தற்கொலை அதிகரிப்பிற்கு நுண்கடனும் ஒரு காரணம் – உளநல மருத்துவர்கள் கருத்து
 

வடமாகாணத்தில் தற்கொலை அதிகரிப்பிற்கு நுண்கடன்களும் ஒரு காரணியாக அமைவதாக உளநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டமும் யுத்தத்தினால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவிய மூன்று தசாப்த யுத்தத்தினால் சொந்த நிலத்தினை விடுத்து, உடமைகளை இழந்து ஏதிலிகளாக அகதி முகாம்களில் குடியேறினர் மக்கள்.

மீண்டும் சொந்த நிலத்தில் குடியேறிய மக்களுக்கு, வாழ்வில் முன்னேறுவதற்கான பொருளாதார வழிமுறைகள் எதுவும் இருக்கவில்லை.

வங்கிகளில் கடன் வழங்கும் நடைமுறைகள் கடினமாக இருந்தமையால், இலகுவில் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு வடக்கில் தவிர்க்க முடியதாயிற்று.

நுண்கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் மிக சூட்சுமமாக மக்களுக்கு கடன்களை வழங்கி அதிக வட்டியினை அறவிட்டனர்.

சதாரண வட்டி வீதத்தினை விட அதிக வட்டிகளையே மக்களிடமிருந்து அறவிட்டனர்.

12 வீதம் முதல் 25 வீதம் வரையான வட்டிவீதத்தில் நுண்கடன்களை வழங்கி மக்களின் வருமானங்களை சுரண்டுகின்ற செயற்பாட்டில் நுண்கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

வடமாகாணத்தில் தற்கொலை அதிகரிப்பிற்கு கடன்களும் ஒரு காரணியாக அமைவதாக உளநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

http://newsfirst.lk/tamil/2017/09/வடமாகாணத்தில்-தற்கொலை-அத/

  • தொடங்கியவர்

நுண்கடன் நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை

 


நுண்கடன் நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை
 

முல்லைத்தீவு – தேராவில் கிராமத்தில் நுண்கடன் நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேராவில் கிராம மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலில் வடமாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது நுண்கடன் வழங்கும் நிறுவனங்களினால் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

நுண்கடன் நிதிநிறுவனங்கள் தேராவில் கிராமத்திற்குள் கடன்வழங்கும் செயற்றிட்டத்தை நிறுத்துமாறுகோரி வடமாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரனிடம் மகஜர் ஒன்றும் இதன்போது கையளிக்கப்பட்டது.

 

http://newsfirst.lk/tamil/2017/10/நுண்கடன்-நிதி-நிறுவனங்கள/

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வதற்கு பணமில்லை.  திரும்பி வராது என்று  வங்கிகள் கடன் கொடுக்க மாட்டா.
கடன் கொடுக்கும் நுண் கடன்களையும் நிறுத்து.

எப்படி வாழப் போகிறார்கள்?
இந்த நிறுவனங்களை தடை செய்யாமல் கடனை திருப்பி செலுத்துவதை ஒழுங்கமைக்க தனிப்பட்டவர் வங்குரோத்து சட்டத்தை மாகாணசபை கொண்டு வர வேண்டும். வங்குரோத்து அடைந்தவர் கடனை எப்படி, மற்றும் எவ்வளவு காலத்தில் திருப்பி செலுத்துவது என்று இந்த சட்டத்தின் மூலம் ஒரு மூன்றாவது அமைப்பு முடிவு செய்யும். இந்த மூன்றாவது அமைப்பு ஒரு கணக்கியல் நிறுவனம் அல்லது சட்டத்தரணிகள் நிறுவனம் அல்லது பொது நல அமைப்பாக இருக்கும். இப்படித்தான் மற்ற நாடுகளில் தனிப்பட்டவர் வங்குரோத்து சட்டம் செயற்படுகிறது.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Jude said:

வாழ்வதற்கு பணமில்லை.  திரும்பி வராது என்று  வங்கிகள் கடன் கொடுக்க மாட்டா.
கடன் கொடுக்கும் நுண் கடன்களையும் நிறுத்து.

எப்படி வாழப் போகிறார்கள்?
இந்த நிறுவனங்களை தடை செய்யாமல் கடனை திருப்பி செலுத்துவதை ஒழுங்கமைக்க தனிப்பட்டவர் வங்குரோத்து சட்டத்தை மாகாணசபை கொண்டு வர வேண்டும். வங்குரோத்து அடைந்தவர் கடனை எப்படி, மற்றும் எவ்வளவு காலத்தில் திருப்பி செலுத்துவது என்று இந்த சட்டத்தின் மூலம் ஒரு மூன்றாவது அமைப்பு முடிவு செய்யும். இந்த மூன்றாவது அமைப்பு ஒரு கணக்கியல் நிறுவனம் அல்லது சட்டத்தரணிகள் நிறுவனம் அல்லது பொது நல அமைப்பாக இருக்கும். இப்படித்தான் மற்ற நாடுகளில் தனிப்பட்டவர் வங்குரோத்து சட்டம் செயற்படுகிறது.

சிங்களம் திட்டமிட்டு இங்கும் விளையாடுகிறது பதில் இதுதான் https://www.yarl.com/forum3/topic/201567-210-ஏக்கர்-கரும்புத்-தோட்டக்காணியை தனவந்தர்களுக்கு-வழங்க-முயற்சி/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.