Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மியன்மார் அகதிகளின் துன்பங்கள், தொண்ணூறுகளில் நாம் பட்ட வேதனைகளை மனக்கண்முன் கொண்டு வருகின்றது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மியன்மார் அகதிகளின் துன்பங்கள், தொண்ணூறுகளில் நாம் பட்ட வேதனைகளை மனக்கண்முன் கொண்டு வருகின்றது.

இலங்கையில் தஞ்சமடைநது தவிக்கும் ; மியன்மார் அகதிகளை காட்டுமிராண்டித்தனமாக இனவாதிகள் வெளியேற்றும் காட்சியைப் பார்க்கும் போது, 1990 களில் நாம் பட்ட கஷ்டம், மனக்கண்முன் வந்து மேலும் வேதனைப்படுத்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் கரடிக்குளி அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஜப்பானிய அரசின் நிதி உதவியுடன் யு.என்.ஹெபிடாட் நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட வகுப்பறைக்கட்டிடம் மற்றும் சிற்றுணடிச்சாலையை இன்று மாலை 29 திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார்.

உலக நாடுகளிலே வாழும் நமது சமூகம் அட்டுழியங்களாலும் கொடுரங்களாலும் வதைக்கப்டுகின்றனர். மியன்மாரில் தாய்மார்க்ள், சிறுவர்கள,; பாலகர்கள் என்ற பேதங்கள் பாராமல் தினமும் கொல்லப்பட்டு வருகின்றனர். கடந்த 6 மாத காலத்துக்கு முன்னர் அந்த நாட்டிலிருந்து எங்கேயோ தப்பிச் சென்ற மக்கள் கடற்படையினரால் பிடிக்கப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டனர். பின்னர் ஐ.நா நிறுவனத்தின் பாதுகாப்பில் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த போது, இனவாதிகள் தங்களது கொடுரத்தை அவர்களின் மீது ; காட்டினர். இந்த நாசகார நயவஞ்சக கூட்டத்தின் செயற்பாடுகளைப் பார்க்கும் போது எமது இரத்தம் கொதிக்கின்றது. வில்பத்துவிலே இந்த மியன்மார் அகதிகளைக் குடியேற்ற நான் முயற்சிப்பதாக இனவாதிகள்  போலிப்பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர்.

ஏற்கனவே வில்பத்து தொடர்பில் என் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு பல வழக்குகளுக்கு முகம்கொடுத்து வருகின்றேன். எமது கட்சிக்கு எந்தவித பங்களிப்பும் செய்யாத ஒருவரை நாம் அரசியலுக்குள் கொண்டு வந்து அவருக்கு அரசியல் அந்தஸ்தை பெற்றுக்கொடுத்து எம்.பி, ஆக்கியதன் விளைவையும் நாம் இன்று உணர்கின்றோம் என்னைப்பழி வாங்குவதற்காக நமது பூர்வீகப்பிரதேசத்தை இனவாதிகளிடம் பொய்யாகக் காட்டிக்கொடுத்து எமக்கு எதிரான பல பிரசாரங்களை மேற்கொள்வதற்கு அவர் முன்னின்று செயற்பட்டார்.  தனியார் ஊடகம் ஒன்றின் உதவியுடன்; இந்த இழிசெயலை அவர் மேற்கொண்டதன் மூலம் எமக்குச் சொந்தமான பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை பறிகொடுக்கக்கூடிய ஆபத்துக்களுக்கு முகங்கொடுத்து வருகின்றோம். அத்துடன் ஏற்கனவே வன இலாக்காவினருக்கு சொந்தமாக்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட காணிகளையும் மீண்டும் பறிகொடுத்து விடுவோமா? ஏஎன்ற ஏக்கம் இப்போது நமக்கு ஏற்பட்டுள்ளது.  

5 வருடங்களுக்கு முன்னர் இந்தப்பிரதேசத்தில் நாங்கள் குடியேறிய நிலைக்கும் இப்போதைய நிலைக்குமிடையே பல தேவைப்பாடுக்ள ஏற்ப்பட்டுள்ளன ஒரு காலத்திலே தூரப்பிரதேசமாகவும் கஷ்டப்பிரதேசமாகவும் பாரக்கப்பட்ட மறிச்சிக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி பிரதேசங்கள் இன்று படிப்படியாக அபிவிருத்தி கண்டு வருகின்றன. கட்டார் நிறுவனத்தின் நிதியுதவியுடன் ஜாசீம் சிட்டியை உருவாக்கினோம். இலவங்குளம் பாதையை புனரமைத்து திறக்க நடடிக்கைகள் எடுத்த போது இனவாதிகள் போட்ட வழக்;குகளுக்கு முகங்கொடுத்து அதனை எதிர் நோக்குகின்றோம்.

ஜப்பானிய அரசின் விசேட தூதுவர் யசூசி அகாசியிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க  மன்னார் மாவட்ட பாடசாலைகளில் கட்டிடங்கள் அமைப்பதற்கும் இன்னோரன்ன தேவைகளுக்கும் சுமார் 60 கோடி கிடைத்தது. அதன் மூலம் அழகிய, வசதியான கட்டிடங்களை நாம் அமைத்துள்ளோம். யு.என்.ஹெபிட்டாட் நிறுவனம் பன்னூற்றுக்கணக்கான வீடுகளை இந்தப்பிரதேசத்தில் அமைத்துத் தந்தமைக்கு நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் நாம் பிரிந்து செயற்பட்டால் பிரதிநிதித்துவத்தை இழக்கக்கூடிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவோம். சிலர் இந்தப்பிரதேசத்தில் எல்லை நிர்ணயத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முயற்சிப்பதாக அறிகிறோம் தேர்தலுக்கு முகம் கொடுக்க முடியாதவர்கள,; மக்கள்செல்வாக்கு இல்லாதவர்கள,; தேர்தல் பீதியில் தத்தளிப்போரே இவ்வாறான வழக்குகளை தாக்கல் செய்து தேர்தலை குழப்;பியடிக்க நினைக்கின்றனர்.  சமூகத்துக்கு பாதிப்பான இந்த நகர்வுக்கு இட மளிக்கக் வேண்டாம். எல்லை நிர்ணய அறிக்கையின் மூலம் எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்களில் எமக்கு நன்மைகள் கிடைக்குமென உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே நம்பிக்கையுடன் செயற்படுவோம். என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=163462 .

 

Edited by colomban

  • கருத்துக்கள உறவுகள்

றிஷாட் பதியுதீன்.... இதனை கண்டித்து, 
இன்று வெள்ளிக்கிழமை, ஜும்மா பள்ளிவாசல் தொழுகை முடிந்த பின்...
கொழும்பு, காலி வீதியே... ஸ்தம்பிக்கும் அளவிற்கு, ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தால்... பலன் கிடைத்திருக்கும்.
அதற்கு... பயந்து தானா, மன்னாரில்.... நின்று கொண்டு.. சவுண்டு கொடுக்கின்றீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

மியன்மார் அகதிகளின் துன்பங்கள், தொண்ணூறுகளில் நாம் பட்ட வேதனைகளை மனக்கண்முன் கொண்டு வருகின்றது.

மியன்மாரில் தாய்மார்க்ள், சிறுவர்கள,; பாலகர்கள் என்ற பேதங்கள் பாராமல் தினமும் கொல்லப்பட்டு வருகின்றனர். 

 

தற்போது மியான்மாரில் நடப்பது சிலநூறு கல்தொலைவில் இருக்கும் முள்ளிவாய்க்காலில் 2009 நடந்தபோது உறைந்துபோயிருந்தீங்களா றிஷாட் நானா!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

மியன்மார் அகதிகளின் துன்பங்கள், தொண்ணூறுகளில் நாம் பட்ட வேதனைகளை மனக்கண்முன் கொண்டு வருகின்றது.

 

மியன்மார் அகதிகளின் துன்பங்கள், தொண்ணூறுகளில் நாம் பட்ட வேதனைகளை மனக்கண்முன் கொண்டு வருகின்றது.

றிஷாட் பதியுதீன்

என்னது நீங்க வேதனைப்பட்டீங்களா? எங்க எப்படி?
பாகிஸ்தான் தொடக்கம் ஐரோப்பா வரைக்கும் முஸ்லீம் பயங்கரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து தாக்குகின்றார்களே....அது தெரியவில்லையா? அல்லது கேள்விப்படவில்லையா?

கனரக வாகனங்களை ஆயுதங்களாக பயன்படுத்தி பொதுமக்கள் கூடிநிற்கும் களியாட்ட இடங்களில் கொலைகளை செய்கின்றார்களே.

எப்போதாவது கண்டனக்குரல் தெரிவித்தீர்களா?

செய்தவர்கள் முஸ்லீம் பயங்கரவாதிகள் என ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டும் விட்டது.

மனிதாபத்துடன் இருந்த ஐரோப்பிய பொதுமக்களையே முஸ்லீம் என்றால் பயங்கரவாதிகளென சொல்லுமளவிர்க்கு வைத்து விட்டீர்களே.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.