Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நோபல் பரிசுகள் நாளை முதல் அறிவிக்கப்படுகிறன!

Featured Replies

நோபல் பரிசுகள் நாளை முதல் அறிவிக்கப்படுகிறன!

நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல் நாளை முதல் வெளியிடப்பட உள்ளன.

நோபல் பரிசு

 

ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசுகள் இலக்கியம், கலை, அறிவியல் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தோருக்கும் வழங்கப்படும். இந்தாண்டுக்கான நோபல் பரிசுகள் நாளை முதல் அறிவிக்கப்பட உள்ளன. ஓர் இறையாண்மை நாட்டிலுள்ள அரசாங்க உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக வேந்தர்கள், வரலாறு, தத்துவம், அரசியல், சட்டம் ஆகிய துறைகளின் பேராசிரியர்கள், அயல் உறவு துறைகள் உள்ள கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், அனைத்துலக நீதிமன்ற உறுப்பினர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள், நார்வே நாட்டின் நோபல் கமிட்டியின் தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்கள், நார்வே நோபல் கமிட்டியின் முன்னாள் ஆலோசகர்கள் போன்றோர் மட்டுமே நோபல் பரிசு பெற தகுதியானவர்களின் பெயரை பரிந்துரைக்கமுடியும்.

இதன் அடிப்படையில் யாருக்கு விருது வழங்குவது என்கிற ஆய்வு  எட்டு மாதங்கள் வரை நடக்கும். 5 நபர்களின் தலைமையிலான நார்வே குழு மட்டுமின்றி சர்வதேச ஆலோசகர்களும் இதில் பங்கு கொண்டு ஒவ்வொரு நபர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் பரிசீலித்து பின்னர் தகுதியான நபர்களுக்கு இப்பரிசை அறிவித்து வழங்குவர்.

 

 

http://www.vikatan.com/news/world/103780-announcement-over-nobel-prizes-will-be-declared-tomorrow.html

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் அரசியல்வாதிகள் போன்றவர்களுக்கு நோபல் குடுப்பதை தடை செய்யணும் ஏனென்றால் உலகத்திலே அவர்களை வென்ற போலி நடிப்பு காரர் கிடையாது .

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பெருமாள் said:

முதலில் அரசியல்வாதிகள் போன்றவர்களுக்கு நோபல் குடுப்பதை தடை செய்யணும் ஏனென்றால் உலகத்திலே அவர்களை வென்ற போலி நடிப்பு காரர் கிடையாது .

ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்று இரண்டு மாதங்களில்,
அவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசை கொடுத்ததன் பின்...
இந்த அமைப்பின் மீது இருந்த நம்பகத் தன்மையும் போய் விட்டது.

  • தொடங்கியவர்

இன்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு!

 

மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ளது.

நோபல் பரிசு

 

ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசுகள் இலக்கியம், கலை, அறிவியல் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தோருக்கும் வழங்கப்படும். இந்தாண்டுக்கான நோபல் பரிசுகள் நாளை முதல் அறிவிக்கப்பட உள்ளன. ஓர் இறையாண்மை நாட்டிலுள்ள அரசாங்க உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக வேந்தர்கள், வரலாறு, தத்துவம், அரசியல், சட்டம் ஆகிய துறைகளின் பேராசிரியர்கள், அயல் உறவு துறைகள் உள்ள கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், அனைத்துலக நீதிமன்ற உறுப்பினர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள், நார்வே நாட்டின் நோபல் கமிட்டியின் தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்கள், நார்வே நோபல் கமிட்டியின் முன்னாள் ஆலோசகர்கள் போன்றோர் மட்டுமே நோபல் பரிசு பெற தகுதியானவர்களின் பெயரை பரிந்துரைக்கமுடியும்.

இதன் அடிப்படையில் யாருக்கு விருது வழங்குவது என்கிற ஆய்வு  எட்டு மாதங்கள் வரை நடக்கும். 5 நபர்களின் தலைமையிலான நார்வே குழு மட்டுமின்றி சர்வதேச ஆலோசகர்களும் இதில் பங்கு கொண்டு ஒவ்வொரு நபர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் பரிசீலித்து பின்னர் தகுதியான நபர்களுக்கு இப்பரிசை அறிவித்து வழங்குவர்.

இந்தாண்டின் மருத்துவ படிப்புக்கான நோபல் பரிசு இன்று பிறபகல் 3 மணி அளவில் அறிவிக்கப்பட உள்ளது. மேலும், நாளை இயற்பியலுக்கும், அக்டோபர் 4-ம் தேதி வேதியலுக்குமான நோபல் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/world/103818-the-nobel-prize-for-medicine-will-be-announced-today.html

  • தொடங்கியவர்

2017-ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நோபல் பரிசை வென்றெடுத்த ’உயிரியல் கடிகாரம்’ குறித்த ஆய்வின் விவரம்! #NobelPrize #Medicine

 

உயிரியல் கடிகாரம் செயல்படும் முறையைக் கண்டறிந்த விஞ்ஞானிகள் ஜெஃப்ரி சி.ஹால், மைக்கேல் ரோஸ்பாஸ் மற்றும் மைக்கேல் டபிள்யூ.யங் ஆகியோருக்கு 2017-ம் ஆண்டுக்கான மருத்துவத் துறை நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது

Noble_16081.jpg

 

Photo Credit: Nobleprize.org

பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் புவியின் சுழற்சிக்கேற்ப தன்னுடைய உடலைத் தகவமைத்துக் கொள்கின்றன. மனிதன் உள்பட அனைத்து உயிரினங்களும் புவியின் சுழற்சிக்கேற்ப தங்களுடைய உடலைத் தகவமைத்துக் கொள்வதற்காக, அதற்காக பிரத்யேக உயிரியல் கடிகாரத்தைக் (Biological Clock) கொண்டுள்ளன என்பதை நாம் அறிவோம். நமது நாட்டுடன் நேர அளவில் மாறுபட்ட நாடுகளுக்குப் பயணிக்கும் போது, அந்த சூழலை ஏற்றுக்கொள்ளும் வரை ஜெட் லாக் ஏற்படுவதுண்டு. உயிரியல் கடிகாரம் எப்படி செயல்படுகிறது என்பதைக் கண்டறிந்ததற்காகவே மேற்கூறிய 3 விஞ்ஞானிகளுக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

உயிரியல் கடிகாரம்: 

மனிதன் உள்பட அனைத்து விலங்குகளுக்குள்ளும் சுற்றுச்சூழல் மாறுபாடுகளை உணர்ந்துகொள்ளும்  விதமாக உயிரியல் கடிகாரம் இருக்கிறது என்பது 18-ம் நூற்றாண்டில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலமே உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது என்றே கூறலாம். அந்த காலகட்டத்தில் ஜேக்குஸ் டி மாய்ரான் எனும் வானியல் அறிஞர், மிமோசா எனும் தாவரங்கள் (Mimosa Plants) குறித்து ஆய்வுகளை மேற்கொண்டார். பகலில் அந்த தாவரங்கள் சூரியனை நோக்கி இலைகளை அகல விரித்தும், இரவில் தரையை நோக்கி கவிழ்ந்தும் இருப்பதைக் கண்டறிந்தார். அதேபோல், மனிதர்கள், விலங்குகளுக்குள்ளும் சுற்றுச்சூழல் மாற்றத்தை உணர்ந்துகொள்ளும் விதமாக உயிரியல் கடிகாரங்கள் இருப்பதை மற்ற ஆய்வுகள் உறுதி செய்தன. தினசரி நிகழும் இந்த மாற்றம் சிர்காடியன் ரிதம் (Circadian Rhythm) என்றழைக்கப்படுகிறது. ஆனால், இந்த உயிரியல் கடிகாரம் எப்படி செயல்படுகிறது என்பது இதுவரை மர்மமாகவே இருந்து வந்தது. 


ஃப்ரூட் ஃப்ளை (Fruit Flies) எனும் பழங்களில் மொய்க்கும்  ஒரு வகை ஈக்களில்  உயிரியல் கடிகாரத்தைக் கட்டுப்படுத்தும் மரபணுவைக் கண்டறிய முடியுமா என்ற கேள்வியுடன் சீமோர் பென்சார் மற்றும் அவரது மாணவரான ரொனால்ட் கனாபா ஆகியோர் ஆய்வை மேற்கொண்டார். அந்த ஈக்களில் உள்ள ஒரு மரபணுவில் நடக்கும் மாற்றங்கள் சிர்காடியன் ரிதம் நிகழ்வைப் பாதிப்பதை அவர்கள் கண்டறிந்து, அந்த மரபணுவுக்கு பீரியட் (Period) என்று பெயரிட்டனர். ஆனால், எந்த வகையில் சிர்காடியன் ரிதத்தை அந்த மரபணுக்கள் மாற்றுகின்றன என்ற கேள்விக்கு விடைகாண அவர்களால் முடியவில்லை. 


அதே ஃப்ரூட் ஃப்ளை ஈக்களை அடிப்படையாகக் கொண்டு, அவற்றில் உயிரியல் கடிகாரம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கண்டறிவதற்கான ஆய்வை தற்போது நோபல் பரிசை வென்றிருக்கும் விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். அமெரிக்காவின் போஸ்டன் நகரில் உள்ள பிராண்டிஸ் பல்கலைக்கழகத்தில் ஆய்வுமேற்கொண்ட ஜெஃப்ரி ஹால் மற்றும் மைக்கேல் ரோஸ்பாஸ் ஆகியோரும், நியூயார்க்கில் உள்ள ராக்ஃபெல்லார் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டிருந்த மைக்கேல் யங் ஆகியோரும் இணைந்து சிர்காடியன் ரிதத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் பீரியட் (Period) மரபணுவைக் கடந்த 1984-ல் வெற்றிகரமாகத் தனியாகப் பிரித்தனர். பின்னர், சிர்காடியன் ரிதத்தில் முக்கியப் பங்காற்றும் பீரியட் மரபணுவில் சுரக்கப்படும் பிஇஆர் (PER) எனும் புரதத்தை ஜெஃப்ரி ஹால் மற்றும் மைக்கேல் ரோஸ்பஸ் ஆகியோர் கண்டறிந்தனர். பிஇஆர் எனும் அந்த புரதம் இரவு நேரத்தில் அதிகமாகச் சுரக்கப்படுவதும், பகல் நேரத்தில் அளவு குறைவதையும் அவர்கள் கண்டறிந்தனர். 24 மணி நேரத்தில் சிர்கார்டியன் ரிதத்தை ஒத்து பிஇஆர் புரத்தின் அளவில் மாற்றம் ஏற்படுவதையும் அவர்கள் நிரூபித்தனர். 

Human_16108.jpg

Photo Credit: Nobleprize.org

 

தூக்கம், ஹார்மோன் செயல்பாடு மற்றும் ரத்த அழுத்தம் போன்ற செயல்பாடுகளை மனித உடலில் உள்ள உயிரியல் கடிகாரமே கட்டுப்படுத்துகிறது. இந்த கண்டுபிடிப்பு மூலம் மனித உடலியல் குறித்த ஆய்வில் முக்கியமான மைல்கல்லை மருத்துவ உலகம் எட்டியிருப்பதாக நோபல் பரிசுக்குழு விஞ்ஞானிகளைப் பாராட்டியுள்ளது.        

 

http://www.vikatan.com/news/world/103850-the-2017-nobel-prize-in-medicine-has-been-awarded-to-jeffrey-c-hall-michael-rosbash-and-michael-w-young.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஈர்ப்புவிசை அலைகள் இருப்பை உறுதி செய்த 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு!

 

ஈர்ப்புவிசை அலைகள் இருப்பை உறுதி  செய்த ஜெர்மனியைச் சேர்ந்த ரெய்னர் வைஸ் மற்றும் பேரி சி.போரிஸ் மற்றும் கிப்.எஸ்.த்ரோன் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Physics_15020.jpg

 

Photo Credit: Nobelprize.org

 


இவர்களில் ரெய்னர் வைஸுக்கு பரிசுத் தொகையில் பாதியும், மற்ற இருவர்களுக்கு பாதியும் பிரித்து வழங்கப்படும் என்று நோபல் பரிசுக் குழு அறிவித்துள்ளது. இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டறிந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்புவிசை  அலைகளின் இருப்பை உறுதி செய்ததற்காக விஞ்ஞானிகள் மூவருக்கும் 2017-ம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபஞ்சத்தில் ஈர்ப்புவிசை அலைகள் இருப்பதாக ஐன்ஸ்டீன் ஊகித்த நூறாண்டுகளுக்குப் பின்னர், முதல்முறையாக ஈர்ப்புவிசை அலைகளை அமெரிக்காவில் உள்ள ஆய்வு மையம் உணர்ந்தது.

கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 15-ல் அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ள லீகோ எனும் ஈர்ப்புவிசை ஆய்வகம் முதல்முறையாக பிரபஞ்சத்தில் இருந்து வெளியான ஈர்ப்புவிசை அலைகளை உணர்ந்தது. இந்த ஈர்ப்புவிசையானது பிரபஞ்சத்தில் உள்ள இரு கருந்துளைகள் மோதியதால் ஏற்பட்டதாகவும், அது பூமிக்கு வந்தபோது மிகவும் பலவீனமாக இருந்ததாகவும் விஞ்ஞானிகள் கூறினர். வானியல் இயற்பியலில் முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படும் ஈர்ப்புவிசை அலைகளின் இருப்பைக் கண்டறிவதற்காக அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ள லீகோ (the Laser Interferometer Gravitational-Wave Observatory) என்ற ஆய்வகம், 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வாளர்களின் உழைப்பால் உருவாக்கப்பட்டது. ஐன்ஸ்டீன் கூறிய பிரபஞ்சத்தின் ஈர்ப்பு அலைகளைக் கண்டறியும் நோக்கத்துடன் அந்த ஆய்வகம் அமைக்கப்பட்டது. 

 

http://www.vikatan.com/news/world/103925-nobelprize-in-physics-is-awarded-to-rainer-weiss-barry-c-barish-and-kip-s-thorne.html

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா மைதிரிக்கு ஆப்பா?

  • தொடங்கியவர்

நோபல் வென்ற உயிர்க் கடிகாரக் கண்டுபிடிப்பு... நம் முன்னோரின் ‘நாள் ஒழுக்க’ தியரிதான்! #NobelforMedical2017

 

லுவலகத்தில் பரபரப்பாக வேலை பார்த்துக்கொண்டிருப்போம், திடீரென்று பசிக்கத் தொடங்கும். கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தால் வழக்கமாக நாம் தினமும் சாப்பிடும் நேரமாக இருக்கும். "சாப்பிடுற நேரம் எனக்குத் தெரியுதோ இல்லையோ, என் வயிறுக்கு கரெக்ட்டா தெரியுது... சரியா ஒரு மணி ஆனதும் வயித்துல மணி அடிக்க ஆரம்பிச்சுடுது" என்று சிலர் விளையாட்டாகச் சொல்வார்கள். ஆனால், அதில் உண்மை இருக்கிறது. வெளியில் எப்படி நம்மை இயக்க கடிகாரம் இருக்கிறதோ, அதைப்போல நம் உடலுக்குள்ளும் ஒரு கடிகாரம் இருக்கிறது. அதுதான் 'உயிரியல் கடிகாரம்'. 

நோபல் பரிசு

 

18-ம் நூற்றாண்டில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் இந்த உயிரியல் கடிகாரம் கண்டறியப்பட்டது. வானியல் அறிஞரான ஜேக்குஸ் டி மாய்ரான்,  'மிமோசா'  (Mimosa Plants)  என்னும் தாவரங்கள்குறித்து ஆய்வுகள் மேற்கொண்டபோது இதைக் கண்டறிந்தார். இந்தத் தாவரங்கள் பகலில் சூரியனை நோக்கி இலைகளை விரித்தும், இரவில் கீழ்நோக்கி கவிழ்ந்தும் கொண்டிருப்பதையும் பார்த்து, உயிரியல் கடிகாரம் பற்றிய தியரியை உருவாக்கினார். 

அதன்பிறகு, ஆய்வுகள் சூடுபிடித்தன. மனிதர்களுக்குள்ளும், பிற உயிரினங்களுக்குள்ளும் சுற்றுச்சூழல் மாறுபாடுகளை அறிந்துகொள்ளும் விதமாக  உயிரியல் கடிகாரங்கள் இருப்பது அந்த ஆய்வுகளில் கண்டறியப்பட்டன. தினசரி நிகழும் இந்த மாற்றங்களுக்கு 'சிர்காடியன் ரிதம்' (Circadian Rhythm) என்று பெயர் சூட்டப்பட்டது. 

இந்த உயிரியல் கடிகாரம் எப்படி செயல்படுகிறது? அதற்குக் காரணமாக இருப்பது என்ன? என்பது பற்றி ஆய்வுசெய்து பல முடிவுகளை உருவாக்கியதற்காகத்தான், இந்த ஆண்டு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு ஜெஃப்ரி சி.ஹால், மைக்கேல் ரோஸ்பாஸ் மற்றும் மைக்கேல் டபிள்யூ.யங் ஆகியோருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள்

"உயிரியல் கடிகாரம் எப்படிச் செயல்படுகிறது? நோபல் பரிசு தரும் அளவுக்கு அதில் அப்படியென்ன முக்கியத்துவம் இருக்கிறது?"  

மத்திய அரசின் விக்யான் பிரச்சார் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி தா.வி.வெங்கடேஸ்வரனிடம் கேட்டோம்தா.வி.வெங்கடேஸ்வரன்

“நமக்குக் குறிப்பிட்ட நேரத்தில் பசியெடுக்கும், குறிப்பிட்ட நேரத்தில் தூக்கம் வரும், குறிப்பிட்ட நேரத்தில் விழிப்பு வரும். இது எல்லாம் வெளிப்படையாகத் தெரிகிற இயக்கங்கள். ஆனால், வெளியில் தெரியாக பல செயல்பாடுகள் உடலுக்குள் நடைபெறும். உதாரணமாக, ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீரகம் இயங்கவேண்டும், ரத்தம் எவ்வளவு ஊறவேண்டும், குடலின் உள்சுவரில் உள்ள பொருள்கள் எத்தனை நாளைக்கு ஒருமுறை உதிர்ந்து புதிதாக உருவாக வேண்டும்  என்பதை எல்லாம் அந்த உயிரியல் கடிகாரம்தான் தீர்மானிக்கிறது. 

மனிதர்களுக்கு மட்டும் அல்ல. எல்லா உயிரினங்களுக்கும் அப்படித்தான்.  உதாரணமாக, ஒரு தாவரம் அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் பூ பூக்கும் என்றால் எக்காலமும் அது மாறாது. 60 வருடம் ஆனது தாவரங்களுக்கு எப்படித் தெரியும். வேறு வேறு இடங்களில் அந்தத் தாவரத்தை நட்டால் கூட அது சரியாகத்தான் பூக்கும். 

மனிதர்கள் மட்டுமின்றி, அனைத்து உயிரினங்களும் சரியான கால நீரோட்டத்தில் இயங்கக் காரணமாக இருப்பவை இரண்டு ஜீன்கள்.  பீரியட் (period). டைம்லெஸ் ஜீன் (Timeless). 

முதல் ஜீனை,  ஜெஃப்ரி சி.ஹால், மைக்கேல் ரோஸ்பாஸ் ஆகிய இருவரும் கூட்டாக கண்டறிந்தனர். இரண்டாவது ஜீனை, மைக்கேல் டபிள்யூ.யங்மாகி கண்டறிந்தார். 

இந்த ஜீன்கள்  செய்யும் வேலை என்ன ?

பீரியட் ஜீன் , ஒரு வகையான புரதத்தை உற்பத்தி செய்யும். இது ஒவ்வொரு செல்லிலும் இருக்கும். செல்லில் இந்தப் புரதத்தின் அளவு குறையக் குறைய,  இரண்டாவது ஜீனான டைம்லெஸ் (Timeless). ஜீன் சிதையும். இந்த சிதைவுதான் காலம் நகருவதை செல்களுக்கு உணர்த்தும். இதன்மூலம் தான் நமக்குத் தூக்கம், பசி போன்ற வெளிப்படையான உடலியல் இயக்கங்களும், உடலுக்குள் ஏற்பட வேண்டிய  இயக்கங்களும் சரிவர நடக்கின்றன. இந்தப் புரதம் இரவு நேரத்தில் அதிகமாகச் சுரப்பதையும், பகலில் அதன் அளவு குறைவதையும் மேற்கண்ட மூவரும் தற்போது கண்டறிந்துள்ளனர். ஒரு நாளின் 24 மணி நேரத்தில் 'சிர்காடியன் ரித'த்தைப் பொருத்து புரதத்தின் அளவில் மாற்றம் ஏற்படுவதையும் நிரூபித்துள்ளனர்.

 ஃப்ரூட் ஃப்ளைஸ் (Fruit Flies) என்னும், பழங்களை மொய்க்கும் ஒரு வகை ஈக்களில் இருந்து இந்த ஆராய்ச்சியை முன்னெடுத்து சாதித்திருக்கிறார்கள். 

இந்த ஆராய்ச்சிக்கும் பிறகு நடைபெற்றுவரும் ஒரு முக்கியமான விவாதம், மனிதர்களில் உள்ள வேறுபாட்டைப் பற்றியது. மனிதர்களில்  பகலில் சுறுசுறுப்பாக இயங்குபவர்கள் இருப்பார்கள். இவர்கள் காலை நேரத்தில் சிறப்பாக வேலை செய்வார்கள். படிப்பார்கள், எழுதுவார்கள். ஆனால், சிலர் இரவு நேரத்தில்தான் சுறுசுறுப்பாக இயங்குவார்கள்.  படிப்பார்கள். எழுதுவார்கள்.

இரவு நேரத்தில் இயங்கவே முடியாத ஒருவர் நைட் ஷிப்ட்டில் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டிருப்பார். அவரால் வேலையை ஒழுங்காகச் செய்யமுடியாது. அது மட்டுமல்லாமல் பல்வேறு உடல் உபாதைகளும் அவருக்கு உண்டாகும். 

ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர்களின் தனித்தன்மைகளைக் கண்டறிந்து விட்டால் அனைவரும் காலை 9 மணி முதல் 5 மணி வரை வேலை செய்யவேண்டும் என்கிற நிலை மாறும். ஐரோப்பாவில் பல நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் 8 மணி நேரம் வேலை செய்யவேண்டும். ஆனால், அது எந்த நேரம் என்பதை ஊழியர்களே தீர்மானம் செய்துகொள்ளலாம். அதைப்போன்ற முறை இங்கே இல்லை.

எதிர்காலத்தில் அறிவியல் ரீதியாக ஒரு மனிதத் தன்மையுடன் ஒரு சமூகத்தைப் படைக்க இந்த கண்டுபிடிப்பு உதவும்... " என்கிறார் தா.வி. வெங்கடேஸ்வரன்.

உயிரியல் கடிகாரம் பாதிக்கப்பட்டால் என்னென்ன உடல்நல பாதிப்புகள் உண்டாகும்?

மருத்துவர் சிவராமக்கண்ணன்பொதுநல மருத்துவர் சிவராமக்கண்ணனிடம் கேட்டோம் 

“உயிரியல் கடிகாரத்துக்கு மாறாக நாம் செயல்படும்போது டயாபட்டீஸ், ரத்த அழுத்த நோய், இதயநோய்கள், ஹார்மோன் சம்பந்தமான பிரச்னைகள் உண்டாகும். உதாரணமாக, ஒரு நாளில் காலை 9 மணி முதல் 2 மணி வரைதான் நாம் சிறப்பாக இயங்க முடியும் அதற்குப் பிறகு ரத்த அழுத்தம் குறைந்துவிடும். இரவு நேரம் நெருங்கியதும் மெலட்டனின் சுரந்து நமக்குத் தூக்கம் வந்துவிடும். ஆனால், அந்த நேரத்தில் வலுக்கட்டாயமாக வேலை செய்தால் பல்வேறு பாதிப்புகள் உண்டாகும். இதற்கெல்லாம் காரணம் உயிரியல் கடிகாரத்தை செயல்படுத்த உதவும் ஒரு வகையான புரதம்தான். இந்தப் புரதம் அதிகமாக இருக்கும்பொழுது நம்மால் சிறப்பாக செயல்பட முடியும். குறையும்போது செயல்பட முடியாது. இந்தப் புரதத்தைக் கண்டறிந்ததற்காகத்தான் தற்போது நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நன்மைகள் ஏற்பட இருக்கின்றன. எப்படி தூக்கம் வருவதற்கு மெலட்டனின் மாத்திரைகள் உதவுகிறதோ, அதேபோல் இந்தப் புரதத்தை உற்பத்தி செய்யக்கூடிய மருந்துகள் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால் பெரும்பாலான நோய்கள் ஏற்படுவதைத்  தவிர்க்க முடியும்" என்கிறார் மருத்துவர் சிவராமக்கண்ணன்.

"உயிரியல் கடிகாரம் பற்றி  சித்த மருத்துவம் என்ன சொல்கிறது?"

சித்த மருத்துவர் வேலாயுதத்திடம் கேட்டோம்.சித்த மருத்துவர் வேலாயுதம்

“சிர்காடியன் ரிதம், சித்த மருத்துவத்தில் 'நாள் ஒழுக்கம்' என்று அழைக்கப்படுகிறது. ‘அண்டத்தில் உள்ளதே பிண்டம், பிண்டத்தில் உள்ளதே அண்டம்' என்பதே சித்த மருத்துவத்தின் கான்செப்ட். வெளியில் உள்ள பஞ்சபூதமும், உடலில் உள்ள பஞ்சபூதமும் சேர்ந்துதான் உடலை இயக்குகின்றன. காலை 4.30 முதல் 6 மணிக்குள் எழுந்துவிட வேண்டும் என்பதே முதல் ஒழுக்கம். காலை எழுந்ததும் நல்ல காற்றுக்காக நுரையீரல் ஏங்கும். நல்ல காற்றானது 4.30 முதல் 6 மணி வரை தான் இருக்கும். இதுதான், 'பிரம்ம முகூர்த்தம்' என்கிறோம். அதனால்தான் காலை விடியற்காலையில் எழவேண்டும் என்கிறோம். இரவு 7 மணிக்குள் சாப்பிட்டு விடவேண்டும். எட்டு மணிக்குள் உறங்கிவிட வேண்டும். இதுபோன்ற பழக்கவழக்கங்களை வாழ்வியல் முறைகளோடு பிணைத்துத் தந்துள்ளனர் நம் முன்னோர்கள். நாம் பகுத்து ஆராய்ந்து தீர்த்த இயற்கையை நவீன ஆராய்ச்சி மூலம் இப்போது கண்டுபிடித்துள்ளனர். முன்னோர்கள்  சொன்னார்கள் என்றால் யாரும் கேட்கமாட்டார்கள். விஞ்ஞானிகள் சொன்னால்தான் கேட்பார்கள். எப்படியாவது நல்லது நடந்தால் மகிழ்ச்சி..." என்கிறார் வேலாயுதம்.

உயிர்க்கடிகாரம் பற்றிய ஆராய்ச்சி நம் மதுரையில் மேற்கொள்ளப்பட்டது. அதுகுறித்து விவரிக்கிறார், 'கைக்கடிகாரமும், உயிர்க்கடிகாரமும்' என்ற புத்தகத்தை எழுதிய  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் பொன்னையா ராஜமாணிக்கம். 

பொன்னையா ராஜமாணிக்கம்“உயிர் கடிகாரம் குறித்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஒருமுறை சோதனை செய்யப்பட்டது. பிக்பாஸ் மாதிரி, இது 'பங்கர் ஸ்டடி'. பூமிக்கடியில் குழி தோண்டி அதற்குள் மூன்று விஞ்ஞானிகள் தங்கியிருந்தனர். அவர்களுக்கு பகல், இரவு என்று  எதுவும் தெரியாது. அவர்களின்  தூக்கம், வேலைநேரம், ஒய்வு நேரம் இதெல்லாம் கணக்கிடப்பட்டது . அதேபோல் பெண்களுக்கு மாதவிடாய் சம்பந்தமாக ஏதாவது மாற்றங்கள் ஏற்படுகிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பெரிய அளவில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. அந்த ஆய்வில் ' உயிர்க்கடிகாரம்'  மரபணுக்களால் தீர்மானிக்கப்படுகிறது என்று கண்டறியப்பட்டது. அதற்குக் காரணமான புரதம்தான் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. 

உயிர் அணுக்களும் ஒருவித கடிகாரச் சுழற்சியில்தான் இயங்குகின்றன. ஆஸ்துமா நோயாளிகளுக்கு காலை நேரத்தில்தான் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். அதனால் அவர்களுக்கு கொடுக்கப்படும் மருந்துகள் எல்லாம் காலைநேரத்தில் வேலை செய்யக்கூடியவையாக இருக்கும்.

அதேபோல், நம் வீட்டில் மாலை நேரத்தில் சவரம் செய்யக்கூடாது என்று சொல்வார்கள். அதற்குக் காரணம் மாலை நேரத்தில் ரத்தம் உறைவது தாமதமாகும் என்பதற்காகத்தான்... " என்கிறார் ராஜமாணிக்கம்.

 

ஆக, நோபல் பரிசு பெற்ற கண்டுபிடிப்பென்பது, நம் முன்னோர் முன்பே கண்டறிந்த ஒரு தத்துவத்தின் சிறு பொறிதான். நம் முன்னோரின் சித்தாந்தங்களை, கண்டுபிடிப்புகளை, தத்துவங்களை, மருத்துவத்தை எல்லாம் தொகுத்து, மொழி மாற்றி உலகின் பார்வைக்குக் கொண்டு சென்றால்..? நோபல் என்ன... உலகில் இருக்கும் அத்தனை விருதுகளும் நமக்குத்தான்! 

http://www.vikatan.com/news/health/103955-nobel-prize-for-medicine-awarded-for-insights-into-internal-biological-clock.html

  • தொடங்கியவர்

உயிர்வேதியியல் மூலக்கூறு ஆய்வுக்காக மூன்று விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிப்பு

 

 
Chemistry%20Nobel%202017jpgjpg

வேதியியலுக்குக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கபப்ட்டுள்ளது.

உயிர் வேதியியல் மூலக்கூறு ஆய்வுக்காக இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சுவீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 2017-ம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசை இன்று (புதன்கிழமை) நோபல் பரிசு கமிட்டி தலைவரால் அறிவிக்கப்பட்டது.

2017-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ழாக் துபோசே, அமெரிக்காவைச் சேர்ந்த ஜோகிம் பிராங்க், லண்டனை சேர்ந்த ரிச்சர்ட் ஹெண்டர்சன் ஆகிய மூவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

உயிரி வேதியியலை புதிய யுகத்தை நோக்கி நகர்த்திய ஆய்வுக்காக இந்த மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இம்முவரும் உயிர் மூலக்கூறு வடிவங்களை எளிமையாக படம்பிடித்து ஆய்வில் நுணுக்கங்களை அதிகரிக்க மேம்பட்ட முறையிலான கிரையோ எலக்ட்ரான் மைக்ரோஸ்கோபியை கண்டுபிடித்துள்ளனர்.

உயிரி வேதியல், மருத்துவ துறை ஆகியவற்றில்  இந்த கண்டுபிடிப்புகள் முக்கிய பங்காற்ற உள்ளன.

விரைவில் உயிர் மூலக்கூறுகள் குறித்த விரிவான, விளக்கமான, நுட்பமான படங்கள் நமக்குக் கிடைக்கும்.

மானுடக் கண்களுக்குத் தெரியாத விஷயங்கள் ஏராளமாக உள்ளன, இவற்றை வெற்றிகரமாக படம்பிடிக்கும் போதுதான் விஞ்ஞானத்தில் மிகப்பெரிய கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. இதுவரை உயிர்வேதியியல் வரைபடங்கள் உயிரிகளின் மூலக்கூறு அமைப்புகளை சரிவர படமாகக் காண்பிக்கவில்லை, படங்களுக்குப் பதிலாக வெற்றிடம்தான் அங்கு இருக்கும். தற்போது இந்த நோபல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த கிரையோ-எலெக்ட்ரான் மைக்ரோஸ்கோப் இதனை புரட்சிகரமாக மாற்றியமைக்கும். இதனால் மருத்துவம் மற்றும் மூலக்கூறு துறையில் புதிய கண்டுபிடிப்புகள் பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://tamil.thehindu.com/world/article19796123.ece?homepage=true

  • தொடங்கியவர்

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிரட்டனின் கசுவோ இசிகுரோவுக்கு அறிவிப்பு

 

உலகின் உயர்ந்த விருதான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிரட்டனின் கசுவோ இசிகுரோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிரட்டனின் கசுவோ இசிகுரோவுக்கு அறிவிப்பு
 
 
ஸ்டாக்ஹோம்: 
 
இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
 
அவ்வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டு வருகிறது. பரிசுகளை நோபல் பரிசுக்குழு தலைவர் கோரன் ஹான்சன் அறிவித்து வருகிறார். இதுவரை மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
இந்நிலையில், இன்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்தாண்டிற்கான நோபல் பரிசு பிரட்டனை சேர்ந்த எழுத்தாளரான கசுவோ இசிகுரோவுக்கு அறிவிக்கப்பட்டது. ஜப்பானின் நாகசாகியில் பிறந்த அவர் பின்னர் பிரட்டனில் குடியேறினார்.
 
அவர் ஆங்கிலத்தில் பல்வேறு சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதியுள்ளார். அவருக்கு 7 கோடி ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளது.

http://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்

நோபல் பரிசு எவ்வாறு முடிவு செய்யப்படுகிறது?

நோபல் பரிசு மதக்கம்படத்தின் காப்புரிமைJONATHAN NACKSTRAND/AFP/GETTY IMAGES Image captionபிரிட்டிஷ் எழுத்தாளர் காஷோ இஷிகோரோ இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளார்.

நோபல் பரிசை பெறுவோரை தேர்வு செய்யும் வழிமுறைகள்.

  • பரிந்துரை செய்ய தகுதியானவர்கள், உலகளவில் உள்ள வேட்பாளர்களை, பிப்ரவரி மாதத்தில் பரிந்துரைக்க வேண்டும். இதன் மூலம், நோபல் குழுவிற்கு, தேர்வு செய்யப் போதுமான நேரம் கிடைக்கும்.
  • பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை பரிந்துரைக்குழு ஆய்வு செய்யும். நார்வே நாடாளுமன்றத்தால் தேர்வு செய்யப்பட்ட இந்த ஐந்து பேர் கொண்ட குழு, பரிந்துரைக்கப்பட்டவர்களில் 20 முதல் 30 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • பரிசுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரங்களில் நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும்.
  • ஒருமித்த முடிவு எடுக்கப்பட முடியாத நிலையில், பெரும்பான்மை வாக்குகளின்படி முடிவு எடுக்கப்படும்.
  • பரிசுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, ஆல்ஃப்ரெட் நோபல் நினைவு தினமான டிசம்பர் 10ஆம் தேதி பரிசளிக்கும் விழா நடைபெறும்.

http://www.bbc.com/tamil/global-41526841

 

 

  • தொடங்கியவர்

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வென்ற அமெரிக்கர்!

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இன்று மதியம் ஸ்டாக்ஹோல்மில் அறிவிக்கப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் உட்பட ஆறு பேர் இந்த நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். அதில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நட்ஜ் தியரிக்குப் பேர் போன ரிச்சர்ட் தாலர் விருதைத் தட்டிச் சென்றார்.

நோபல்

 

தனிநபர் மனநிலை மற்றும் நடத்தைகள் பொருளாதாரத்தில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றிய ஆராய்ச்சிக்காக இந்த நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 

http://www.vikatan.com/news/world/104496-american-got-a-noble-prize-for-economics.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.