Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரனையும் என்னையும் நடவடிக்கை குழுவிலிருந்து வௌியேறுமாறு சிலர் கூறுகின்றனர், நேரம் வந்தால் நாம் வௌியேறுவோம் - இரா.சம்பந்தன்

Featured Replies

சுமந்திரனையும் என்னையும் நடவடிக்கை குழுவிலிருந்து வௌியேறுமாறு சிலர் கூறுகின்றனர், நேரம் வந்தால் நாம் வௌியேறுவோம் - இரா.சம்பந்தன்

  • தொடங்கியவர்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில், மன்னார் மக்களுடன் சமகால அரசியல் கள நிலை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுமந்திரனையும் என்னையும் நடவடிக்கை குழுவிலிருந்து வௌியேறுமாறு சிலர் கூறுகின்றனர், நேரம் வந்தால் நாம் வௌியேறுவோம் - இரா.சம்பந்தன்..

 

ஐயாமாரே! ஈழத்தமிழர் சொல்லணா பிரச்சனைகளில் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் தோளில் கலர் சால்வை போடும் கலாச்சாரத்தை எங்கிருந்து கற்றீர்கள்?

சிங்கள இன அரசை நோக்கி சுட்டுவிரலால் கைநீட்டி கதைக்கக்கூடிய பதவிகளில் இருந்துகொண்டும் ஏன் இன்னும் தமிழரை நோக்கியே விமர்சனம் செய்கின்றீர்கள்?????

 

mahinda-tna-.jpg

இப்படியொரு சிரித்த முகத்தை எப்போவாது எம் மக்களிடம் காட்டியிருக்கின்றீர்களா?

 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ' கறந்த பால்' மீண்டும் முலைக்கு ஏறாதே.,சம்பந்தன் ஐயா! அது தையிராக முன்னம் நடையைக் கட்டினால் எல்லாருக்கும் நல்லது தானே!

 

  • தொடங்கியவர்

இணைந்த வடக்கு – கிழக்­கில் படித்த பக்­கு­வ­மான முஸ்­லிம் முத­ல­மைச்­சரை ஏற்­கத் தயார்

 
 
இணைந்த வடக்கு – கிழக்­கில் படித்த பக்­கு­வ­மான முஸ்­லிம்  முத­ல­மைச்­சரை ஏற்­கத் தயார்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

“இணைந்த வடக்கு – கிழக்­கில் படித்த பக்­கு­வ­மான முஸ்­லிம் முத­ல­மைச்­சரை ஏற்­றுக்­கொள்­வ­தற்குத் தயார். நாம் அதற்­கும் பின்­னிற்­கப்­போ­வ­ தில்லை. ஆனால் முஸ்­லிம் மக்­க­ளின் பிர­தி­நி­தி­கள் சிலர் வழி­ந­டத்­தல் குழு­வில் கூறிய விடயங்­க­ளைக் கேட்­டால் நீங்­கள் வெட்­க­ம­டை­வீர்­கள். அவர்­கள், அதி­கா­ரங்­கள் பகி­ரப்­ப­டக்­கூ­டாது. அதி­கா­ரங்­கள் மத்­தி­யில் (கொழும்பு அர­சி­டம்) இருக்க வேண்­டும் என்று கூறி­னார்­கள்”

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்க்கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.
மன்­னா­ரில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

வடக்கு, கிழக்கு தனித்­த­னி­யாக உள்­ளன. ஆனால் இணைப்பு விட­யத்­தில் முஸ்­லிம் சகோ­த­ரர்­கள் எம்­மு­டன் இணைந்து செயற்­பட வேண்டும். வடக்கு கிழக்கை இணைப்­ப­தற்கு முகம்­கொ­டுத்த கஷ்­டங்­களை நான் அறி­வேன். அது பற்றி அதி­க­மாக பேச­வில்லை. இருப்­பி­னும் இந்த தரு­ணத்­தில் முஸ்­லிம் சமு­கத்­திற்கு ஒரு அழைப்பை விடுக்­க­வுள்­ளேன்.

நாம் சரித்­திர ரீதி­யாக வடக்கு கிழக்­கில் வாழ்ந்து வந்­தி­ருக்­கின்­றோம். நாம் தமிழ் பேசும் மக்­கள். வடக்­கி­லும் கிழக்­கி­லும் தான் தமிழ் பேசும் மக்­கள் பெரும்­பான்­மை­யாக இருக்­கின்­றார்­கள். இந்த உண்­மையை எவ­ரும் மறு­த­லிக்க முடி­யாது. ஆகவே எமக்­குள் இந்த விட­யம் சம்­பந்­த­மாக இணக்­கப்­பாடு ஏற்­பட்டு இதனை சுமூ­க­மாக தீர்க்க வேண்­டும்.

வட­கி­ழக்­கில் கூட படித்த பக்­கு­வ­மான முஸ்­லிம் முத­ல­மைச்­சரை ஏற்­றுக்­கொள்­வ­தற்கு தயார். நாம் அதற்­கும் பின்­னிற்­கப்­போ­வ­தில்லை. ஆனால் உங்­க­ளு­டை­ய­பி­ர­தி­நி­தி­கள் சிலர் வழி­ந­டத்­தல் குழ­வில் கூறிய விடங்­களை கேட்­டால் நீங்­கள் வெட்­க­ம­டை­வீர்­கள்.

அவர்­கள், அதி­கா­ரங்­கள் பகி­ரப்­ப­டக்­கூ­டாது. அதி­கா­ரங்­கள் மத்­தி­யில் இருக்க வேண்­டும். காணி அதி­கா­ரம் மத்­தி­யில் மாத்­தி­ரம் இருக்க வேண்­டும் என்­றெல்­லாம் கூறி­யி­ருக்­கின்­றார்­கள். இந்த விட­யங்­களை நீங்­கள் அறிந்­தீர்­களோ இல்­லையோ எனக்கு தெரி­யாது. ஆனால் இது தான் உண்மை.

1949ஆம் ஆண்டு தந்தை செல்­வா­வி­னால் தமி­ழ­ர­சுக்­கட்சி ஆரம்­பித்த காலத்­தி­லி­ருந்து அண்­ணன் அமிர்­த­லிங்­கத்­தின் காலம் என நீண்­ட­தொரு பய­ணத்­தினை மேற்­கொண்டு வரு­கின்­றோம். இன்­னும் பல முன்­னேற்­றங்­க­ளைக் காணப்­ப­தற்கு இட­முண்டு.

ஆறு மாதங்­க­ளுக்கு முன்­ன­தாக எமது நண்­பர்­கள் சிலர் எம்மை வழி­ந­டத்­தல் குழு­வி­லி­ருந்து வெளி­யே­று­மாறு கோரி­னார்­கள். குறிப்­பாக சம்­பந்­த­னும், சுமந்­தி­ர­னும் வழி­ந­டத்­தல் குழு­வி­லி­ருந்து வெளி­யே­று­மாறு கூறு­கின்­றோம் என்று கட்­டளை இட்­ட­போது நாம் பதில் கூற விரும்­ப­வில்லை. அப்­போ­தும் நான் நிதா­ன­மா­கவே இருக்க வேண்­டும் என்றே கூறி­னேன் – என்­றார்.

http://newuthayan.com/story/33798.html

6 hours ago, நவீனன் said:

1949ஆம் ஆண்டு தந்தை செல்­வா­வி­னால் தமி­ழ­ர­சுக்­கட்சி ஆரம்­பித்த காலத்­தி­லி­ருந்து அண்­ணன் அமிர்­த­லிங்­கத்­தின் காலம் என நீண்­ட­தொரு பய­ணத்­தினை மேற்­கொண்டு வரு­கின்­றோம். இன்­னும் பல முன்­னேற்­றங்­க­ளைக் காணப்­ப­தற்கு இட­முண்டு.

உங்களால் காலத்தை வீணாக்கி பின்னோக்கி மட்டுமே செல்ல முடியும்.
இன்னமும் முன்னேற்றம் வேண்டுமென்றால் அதற்கு மாவீரன் பிரபாகரன் மீண்டும் வந்தாதான் சாத்தியமாகும்.

 

நீங்கள் விரைவில் வெளியேறினால் பின்னோக்கி செல்வது நிற்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.