Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எடுத்த எடுப்பிலேயே எல்லாம் கிடைக்காது படிப்படியாகத்தான் முன்னேறவேண்டும்

Featured Replies

 

எடுத்த எடுப்பிலேயே எல்லாம் கிடைக்காது படிப்படியாகத்தான் முன்னேறவேண்டும்

 
 
எடுத்த எடுப்பிலேயே எல்லாம் கிடைக்காது படிப்படியாகத்தான் முன்னேறவேண்டும்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

வானூர்தி உரு­வாக்­கப்­பட்டபோது தற்­போது இருக்­கின்ற வானூர்­தி­யாக உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. காலம் செல்­லச் செல்ல பல தொழில்­நுட்­பங்­கள் மூலம் அவை மெரு­கூட்­டப்­பட்டு தற்­போது ஜெட் விமா­னங்­கள் என்ற வரை­யில் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.

அதே­போன்­று­தான் எந்­த­வொரு அர­ச­மைப்­பும் ஆக்­கப்­ப­டும் போது அது முழு­மை­யா­ன­தாக ஆக்­கப்­ப­டு­வ­தில்லை. 1977ஆம் ஆண்டு அர­ச­மைப்­புக் கூட தற்­போது வரை­யில் 19 திருத்­தங்­கள் வந்­தி­ருக்­கின்­றன. இந்­திய அர­ச­மைப்­புச் சட்­டத்­துக்கு 50க்­கும் மேற்­பட்ட திருத்­தங்­கள் வந்­தி­ருக்­கின்­றன.

இவ்­வாறு இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் பொதுச் செய­ல­ரும், முன்­னாள் விவ­சாய அமைச்­ச­ரு­மான கி.துரை­ரா­ச­சிங்­கம் தெரி­வித்­தார்.
கிழக்கு மாகாண விவ­சாய கால்­நடை அபி­வி­ருத்தி அமைச்­சின் 21 மில்­லி­யன் ரூபா நிதி ஒதுக்­கீட்­டின் மூலம் புதி­தாக அமைக்­கப்­பட்ட கால்­நடை அபி­வி­ருத்­தித் திணைக்­கள மட்­டக்­க­ளப்பு மாவட்­டப் பிர­திப் பணிப்­பா­ளர் காரி­யா­ல­யத்தைத் திறந்து வைக்­கும் நிகழ்­வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும் போதே அவர் இத­னைத் தெரி­வித்­தார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

நாட்­டி­னு­டைய மிக முக்­கி­ய­மான நாள்­கள் இப்­போது நகர்ந்து கொண்­டி­ருக்­கின்­றன. நாட்­டிலே ஆக்­கப்­பட்ட அர­ச­மைப்­புச் சட்­டங்­கள் எல்­லாம் ஒரு கை ஓசை­யாக அமைக்­கப்­பட்ட அர­ச­மைப்­புக்­க­ளா­கத்­தான் இருக்­கின்­றன. டொன­மூர் தொடக்­கம் மகிந்­த­வால் ஆக்­கப்­பட்ட அர­ச­மைப்­புச் சட்­டம் வரை­யில் இந்த நாட்­டின் ஒட்­டு­மொத்த மக்­க­ளை­யும் பிர­தி­நி­தித்­து­வப் படுத்­து­கின்ற அர­ச­மைப்­பாக அவை இருக்­க­ வில்லை. இப்­போது ஆக்­கப்­பட்­டுக் கொண்­டி­ருக்­கும் அர­ச­மைப்­புச் சட்­ட­மா­னது அப்­ப­டி­யல்ல.

தற்­போ­தைய அர­ச­மைப்­புக்­கும் இதற்கு முன்­பி­ருந்த அர­ச­மைப்­புக்­கும் இடை­யிலே இருக்­கின்ற வித்­தி­யா­சத்தை, வேறு­பாட்டை ஒவ்­வொரு அர­சி­யல்­வா­தி­யும், ஒவ்­வொரு குடி­ம­க­னும் விளங்­கிக் கொள்ள வேண்­டும்.
இணக்­கப்­பா­டு­கள், வேறு­பா­டு­களை உள்­ள­டக்­கி­ய­தாக இடைக்­கால அறிக்கை தற்­போது வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

இடைக்­கால அறிக்­கையை வெறு­மனே தூக்கி எறிந்து விடு­வது, சில சொற்­க­ளைப் பாவித்து இதனை நிரா­க­ரிப்­பது என்­பது என்­னைப் பொறுத்­த­மட்­டில் அறி­வு­ட­மை­யான காரி­யமோ அல்­லது இது­வரை நாங்­கள் கடந்து வந்த வர­லா­று­களை மன­திலே வைத்­துச் செயற்­ப­டு­கின்ற காரி­யமோ அல்ல. இது எமது தலை­வர்­க­ளும் சேர்ந்து உரு­வாக்­கு­கின்ற அறிக்கை. இதில் இன்­னும் பல திருத்­தங்­க­ளும் மேற்­கொள்­ளப்­ப­ட­லாம்.

அது இறு­தி­யில் அறிக்­கை­யாக வரு­கின்ற போது ஒரு தீர்­மா­னத்தை எமது தலை­வர்­கள் எடுப்­பார்­கள். அந்­தத் தீர்­மா­னத்­துக்கு நாங்­கள் ஒத்­த­து­ழைப்­ப­வர்­க­ளாக ஒரே குர­லிலே அவர்­க­ளோடு நின்று உழைக்­கக் கூடி­ய­வர்­க­ளாக இருக்க வேண்­டும்.
இலட்­சோ­ப­லெட்­சம் உடன்­பி­றப்­பு­களை நாங்­கள் இழந்­தி­ருக்­கின்­றோம்.

எங்­க­ளு­டைய சந்­ததி அப்­ப­டியே நாச­மாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்த நாடு ஒரு பன்­மைத்­து­வம் கொண்ட நாடு. ஒரு குறிப்­பிட்ட இனத்­திற்கோ, மொழிக்கோ மாத்­தி­ரம் உரிய விட­யங்­கள் இங்கு கையா­ளப்­ப­டக் கூடாது. பன்­மைத்­த­வம் மிக்க இந்த நாட்­டிலே இங்­கி­ருக்­கின்ற விகி­தா­சா­ரத்­தை­யும் கவ­னத்­திற் கொண்டு இந்த நாட்­டில் பெரும்­பான்மை, சிறு­பான்மை என்ற விட­ய­மும் இருக்­கின்­றது என்­ப­தை­யும் மறந்து விடா­மல் சகல அடிப்­படை விட­யங்­க­ளை­யும் நாங்­கள் அங்­கீ­க­ரித்­துத் தான் ஆக வேண்­டும் என்­கின்ற உலக நிய­தியை நாங்­கள் வெறு­மனே தூக்கி எறிந்து விட முடி­யாது.

அவற்­றை­யெல்லாம் மன­தில் வைத்து ஆக்­கப்­ப­டு­கின்ற அர­ச­மைப்­புச் சட்­டம் நாங்­கள் எமது அடை­வு­களை எய்­தக் கூடிய அள­வுக்கு, எய்த முடி­யா­மல் இருந்­தா­லும்கூட அடை­யக் கூடி­ய­திலே அதி­யுச்­சத்தை நாங்­கள் அடைந்­தி­ருக்­கின்­றோம் என்று வரு­கின்ற போது நாங்­கள் அனை­வ­ரும் அதற்கு ஒத்­து­ழைக்க வேண்­டும். வெறும் சொற்­களை மாத்­தி­ரம் வைத்து விமர்­ச­னம் செய்­யக் கூடாது.

கூட்­டாட்சி, ஒற்­றை­யாட்சி என்­பது தற்­போது வளர்ந்த, வளர்ந்து வரு­கின்ற நாடு­க­ளில் பார்க்­கின்ற போது பல்­வேறு வித­மான கோட்­பா­டு­கள் இருக்­கின்­றன. இந்த எல்­லாக் கோட்­பா­டு­கள் பற்றி கலந்து ஆலோ­சித்து ஆக்­கப்­பட்­டுக் கொண்­டி­ருக்­கின்ற அர­ச­மைப்­புச் சட்­டம் தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு எந்த நிலைப்­பாட்டை எடுக்­கின்­றதோ அந்த நிலைப்­பாட்­டோடு சிறு­பான்மை மக்­க­ளா­கிய நாம் எல்­லோ­ரும் ஒத்­து­ழைக்க வேண்­டும் என்று எல்­லாத் தலை­வர்­க­ளுக்­கும் வேண்­டு­ கோள் விடுக்­கின்­றேன்.

ஒரு அர­ச­மைப்­புச் சட்­டம் அடிப்­ப­டை­யான விட­யங்­க­ளைக் கொண்­ட­தாக இருக்­கின்ற போது எமது தலை­மை­யும் அதனை அங்­கீ­க­ரிக்­கின்ற போது நாங்­கள் அதனை ஏற்­றுக் கொள்­ளத்­தான் வேண்­டும். அவ்­வாறு ஏற்­றுக் கொண்டு அதன் பின்­னர் நீடித்து நிலைத்­தி­ருக்­கக் கூடிய நல்­லி­ணக்­கம் இருக்­கும் என்­றால் நாங்­கள் அதனை இன்­னும் மெரு­கூட்­டிக் கொண்டு செல்­ல­லாம் என்­பதை எல்­லோ­ரும் உணர்ந்து ஆராய்ந்து ஏற்­றுக் கொள்ள வேண்­டும்.

இந்த நாட்­டின் இயல்பை, வர­லாற்றை அறிந்து கொண்டு யதார்த்­த­மான நிலமை, வடக்கு -– கிழக்­கின் நிலமை, குறிப்­பாகக் கிழக்­கின் நிலமை இங்கு நாம் முட்­டி­மோ­திக் கொண்ட கசப்­பு­ணர்­வு­க­ளை­யெல்­லாம் அப்­பால் நகர்த்தி விட்டு எவ்­வாறு நாங்­கள் ஒற்­று­மை­யாக இருக்­கப் போகின்­றோம் என்ற விட­யங்­க­ளை­யெல்லாம் கவ­னத்­திலே எடுத்­துச் செயற்­படவேண்­டும்.

இடர்­பட்­டுக் கொண்­டி­ருப்­ப­வர்­களை எவ்­வாறு இணங்­கச் செய்­ய­லாம் என்­றெல்­லாம் சிந்­தித்து இந்த நாட்டு மக்­க­ளுக்கு முழு­மை­யான தீர்­வினை நாங்­கள் பெற்­றுக் கொடுக்க முடி­யா­விட்­டா­லும் இந்த இடத்­தில் இருந்து முன்­னேற்றகர­மான இடத்­திற்கு நாங்­கள் செல்­லக் கூடி­ய­தான ஒரு தீர்­வி­னைப் பெற்­றுக் கொள்­வ­தற்­காகக் கடு­மை­யாக உழைத்­துக் கொண்­டி­ருக்­கின்­றோம்.

இப்­ப­டி­யான கருத்­துக்­க­ளு­டன் எமது தலை­வர்­க­ளும் சேர்ந்து ஆக்­கிக் கொண்­டி­ருக்­கின்ற இந்த அர­ச­மைப்­பினை வெறு­மனே நுனிப்­புல் மேய்ந்­த­வர்­க­ளாக நாங்­கள் உத­றி­வி­டக் கூடாது.

நாங்­கள் கடந்து வந்த பாதை­யினை, இழந்த இழப்­புக்­க­ளைப் பார்க்க வேண்­டும். அதற்­காக நாங்­கள் தற்­போது எந்த வகை­யிலே செயற்­ப­டு­கின்­றோம் என்­ப­தைப் பார்க்க வேண்­டும். இவற்­றை­யெல்­லாம் அடிப்­ப­டை­யா­கக் கொண்டு புதிய அர­ச­மைப்­புச் சட்­டம் ஆக்­கப்­பட்­டுக் கொண்­டி­ருக்­கின்­றது. தலை­மை­யின் கருத்தை ஏற்­ப­வர்­கள் தான் ஒழுங்­கான தொண்­டர்­க­ளாக இருக்க முடி­யும் அவ்­வா­றான தொண்­டர்­கள் தான் சமு­தா­யத்­திற்கு வழி­காட்­டி­க­ளாக இருக்க முடி­யும் – – என்­றார்.

http://newuthayan.com/story/33751.html

  • கருத்துக்கள உறவுகள்

எங்களை விட குறைவான ஆண்டுகளே ஆன குர்திஸ்தான் கூட விடுதலை அடையும் நிலைக்கு வந்து விட்டது உங்களை மாதிரி ஆட்களும் உங்கள் கட்சியும்  பொத்தி கொண்டு இருந்தாலே காணும் தமிழனுக்கு விடிவு கிடைக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

இவை இதை தான் பிரித்தானியாவிடம் சுதந்திரம் வாங்க முதலில இருந்து சொல்லிக் கொண்டிருக்கினம். சோல்பரி யாப்பில இருந்து.. இன்று ரணிலின் அரசியலமைப்பு திருத்தப் பரிந்துரை வரை.

இதுக்குள்ள எத்தனையோ இன மக்கள் சுதந்திர தேசங்களை உருவாக்கி நிம்மதியா வாழ வெளிக்கிட்டு விட்டார்கள்.

இறுதியாக ஸ்பெனிலும் ஒரு சுதந்திரத்துக்கான வாக்குப்பதிவு நடந்துள்ளது. அதனை ஸ்பெயின் அரசு வன்முறையால் சந்திக்க வெளிக்கிட்டு.. உலக அரங்கில் அவலப்பட்டு நிற்கிறது.

ஆனால்.. சிங்கள அரச.. வன்முறையை காட்டியே.. சொந்த இனத்தை அடக்கி வைக்கின்ற மோசமான.. கோழைத்தன அரசியலை தான் தமிழ் மக்கள் மீது திணிக்கின்றது.. சம் சும் மாவை மற்றும் அதன் அடிவருடிக் கும்பல். 

எல்லாம் சுயபோக சுகபோக நோக்கங்களே அரசியலாக அமைந்ததால்.. தமிழருக்கு இந்த கேடுகெட்ட நிலை.tw_angry:tw_angry:

Catalan leader Carles Puigdemont says the Spanish region has won the right to statehood following a contentious referendum that was marred by violence. 

Catalan officials later said 90% of those who voted backed independence in Sunday's vote. The turnout was 42.3%.

Spain's constitutional court had declared the poll illegal and hundreds of people were injured as police used force to try to block voting.

Officers seized ballot papers and boxes at polling stations.

http://www.bbc.co.uk/news/world-europe-41463719

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.