Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறிலங்கா அரச படைகளைச் சேர்ந்த ஐந்து பேரைப் அவர்களது உறவினர்கள் பார்வையிட்டுள்ளனர்.

Featured Replies

இராணுவப் போர்க்கைதிகளுடன் உறவினர்கள் சந்திப்பு.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறிலங்கா அரச படைகளைச் சேர்ந்த ஐந்து பேரைப் அவர்களது உறவினர்கள் பார்வையிட்டுள்ளனர். கைதிகளைச் சந்திப்பதற்காக அவர்களது உறவினர்கள் செஞ்சிலுவைச் சர்வதேசக்குழு ஊடாக இன்று கிளிநொச்சிக்கு அழைத்து வரப்பட்டு இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு ஒக்ரோபர் 11ஆம் திகதி முகமாலையில் இடம்பெற்ற சமரில் இராணு வத்தைச் சேர்ந்த ஒருவரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதி வடமராட்சி கிழக்கு கடற்பகுதி யில் இடம்பெற்ற கடற்சமரின்போது நான்கு கடற்படையினரும் விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

முகமாலையில் இடம்பெற்ற சமரின் போது விடுதலைப்புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டவரான சமந்த வீரசிங்க (வயது 18) என்ற சிறிலங்காப் படையைச் சேர்ந்தவரும் வடமராட்சி கிழக்குக் கடலில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் மீது சிறிலங்கா கடற்படையினர் வலிந்த தாக்குதலை மேற்கொண்டனர் இதற்கு பதில் தாக்குதல் தொடுத்தனர் கடற்புலிகள் இத் பதில் தாக்குதலின்போது நான்கு சிறிலங்கா கடற்படையினர் சிறைப்பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இத் தாக்குதலின் போது சிறைப்பிடிக்கப்பட்ட நுவரெலியாவைச் சேர்ந்த இந்திக்கா பிரியகுமுற (வயது30), கலேவெலவைச் சேர்ந்த சமிந்த குமார ஹெவகே (வயது 28) அனுராதபுரத்தைச் சேர்ந்த கமல் ஹெமந்த குமாரசிறீ (வயது 26) மாத்தறையைச் சேர்ந்த அனில் பிரியங்க மடதெனியா (வயது 26) ஆகிய கடற்படையினரும் விடுதலைப் புலிகளினால் சிறைப்பிடிக்கப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் சந்திப்பானர் இன்று காலை 11.00மணியளவில் ஆரம்பித்து 2.30 மணிவரை இடம்பெறவுள்ளது. இச்சந்திப்பில் கலந்துகொண்ட சிறிலங்காப் படையினரின் பெற்றோர்களும் உறவினர்களும் கருத்துத் தெரிவிக்கையில் அரசாங்கம் எமது பிள்ளைகளை விடுவிக்க எந்தவித முயற்சிகளை எடுக்கவில்லை எனவும் அவர்கள் விடுதலைப்புலிகளின் பராமரிப்பில் மிகவும் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

http://sankathi.org/news/index.php?option=...82&Itemid=1

தலைப்பு மாற்றப்பட்டுள்ளது - மோகன்

  • தொடங்கியவர்

kaithi3pv2.jpg

kaithi4zi0.jpg

kaithi5su9.jpg

kaithi6vl0.jpg

  • தொடங்கியவர்

தமிழன் றோட்டு றோட்டாகவும், குப்பை, காடு, .... என்று தலையற்றும், எரிபட்டும், ..... கசாப்புக்கடைக்கு செல்லும் மிருகங்கள் கூட அனுபவிக்காதவற்றை எல்லாம் அனுபவித்து நாசமாகப் போக, சிங்களக் கைதிகள் புது உடுப்போடு, உறவினர் அடிக்கடி பார்த்துப்போக, "நாங்கள் நல்லாக இருக்கிறோம்" என்று சொல்வதை எந்த உலகு கேட்கப் போகுது????????????

எமது மனிதாபிமானத்தை உலகம் அங்கீகரிக்கப் போகின்றதா???? அல்லது இதுதான் எமக்கு இயலுமானதா??????????

உந்த நாலு சிங்களவங்களை உயிருடன் படம் காட்டுவதை விடுத்து, உயிரற்றுப் படம் காட்டி இருக்கலாம்!!!!!!!

  • தொடங்கியவர்

babyfs3.png

இவைகள் தான் எமது மனிதாபிமானத்திற்குக் கிடைத்த சிங்களத்தின் பரிசு!!

சரி உது பிழை புண்ணாக்குத் தனம் என்றீர். பிழை என்று முடிவா சொல்லுறவைக்கு சரி எது என்றும் தெரிஞ்சிருக்கும் தானே?

எப்பிடி சொன்ன உலகம் கேக்கும் அங்கீகரிக்கும் போல உம்மடை விளக்கத்துக்கு தெரியுது?

எமது மனிதாபித்தனத்தை அங்கீகரிக்க என்ன செய்வேண்டும் என்றும் சொன்ன கொஞ்சம் புண்ணியமாப் போகும் எல்லோ?

  • கருத்துக்கள உறவுகள்

பிடிபட்ட சிங்களப் படைகளையும் பார்க்க வந்த குடும்பத்தினரையும் சுட்டு அல்லது வெட்டித் தள்ளி கிளிநொச்சிச் சந்தியில் மக்கள் பார்வைக்கு வைப்பது சிலவேளை தமிழரின் மனிதாபிமானத்துக்குள் அடங்கும் போலுள்ளது.. அப்படிச் செய்தால்தான் இங்குள்ள சிலருக்கு நெஞ்சு குளிரும்..

Edited by kirubans

பிடிபட்ட சிறீ லங்கா கூலிப்படைச் சிப்பாய்கள் கைதுகள் பறிமாற்ற முறை மூலம் போரின்போது கைதுசெய்யப்பட்ட போராளிகளை விடுவிப்பதற்கு பயன்படுத்த முடியும் தானே? மேலும் தமிழீழப் போராட்டத்தை முன்னெடுக்கும் பிரச்சாரங்களிற்கும் இவர்கள் பயன்படுத்தபட முடியும். எனவே இவர்களும் ஒரு முதலீடுதான். இதை ஒரு வியாபாரக் கண்ணோட்டத்துடன் பார்த்தால் சோழனுக்கு மேலுள்ள சந்தேகங்கள் எழுந்திருக்காது!

இந்த மனிதபிமானம் இன்றல்லாவிட்டாலும் நாளை எமது போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும். கொடுக்கல் வாங்கல் இரக்கமுள்ளவர்களுடன் செய்யலாம். அரக்கர்கள் மிலேச்சத்தனமானவர்களுடன் முடியுமா?

ஈழத்திலிருந்து

ஜானா

பிடிபட்ட சிறீ லங்கா கூலிப்படைச் சிப்பாய்கள் கைதுகள் பறிமாற்ற முறை மூலம் போரின்போது கைதுசெய்யப்பட்ட போராளிகளை விடுவிப்பதற்கு பயன்படுத்த முடியும் தானே? மேலும் தமிழீழப் போராட்டத்தை முன்னெடுக்கும் பிரச்சாரங்களிற்கும் இவர்கள் பயன்படுத்தபட முடியும். எனவே இவர்களும் ஒரு முதலீடுதான். இதை ஒரு வியாபாரக் கண்ணோட்டத்துடன் பார்த்தால் சோழனுக்கு மேலுள்ள சந்தேகங்கள் எழுந்திருக்காது!

இதுதான் இன்றைய நவீன உலகம்...

இது எல்லா உலகிலும்.... விதம்விதமான கோணங்களில்....

வளர்கப்படுகிறது மானிடர்களே.... மானிடர்களை.....

ஆளும் இலச்சண நவீன உலகம்....

நாமும் பளக்கபடுகிறோம்.... நாமாக அல்ல......... :mellow: :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் சர்வதேச படைத்துறை மனித உரிமைப் பிரமாணங்களுக்கு அமைய செயற்படுகின்றனர். போர்களத்தில் பொதுமக்களைக் கொல்வது காயப்படுத்துவது காயப்படுத்தப்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ வசதிகளை அளிப்பதை தடுப்பது பொதுமக்கள் பாதுகாப்பாக இடம்பெயர்வதை தடுப்பது பொதுமக்கள் வாழிடங்கள் பாடசாலைகள் மருத்துவமனைகள் மதசார் வழிபாட்டிடங்கள் என்பவற்றைத் தாக்குவது சர்வதேச போரியல் விதிகளின் கீழ் குற்றமாகும். சிறீலங்காப்படை இவை அனைத்தையும் செய்கிறது.

நிராயுதபாணிகளான எதிர்ப் படையினரைக் கொல்லுதல் காயப்படுத்தல்,சிறைபிடிக்கப்

கொத்துக் கொத்தாக கொல்லப்படும் இந்த அப்பாவி மக்களுக்காக இதுவரை புலத்தில் ஒரு போராட்டம் நடத்தப்பட்டதா?

புலிகள் சொன்னால்தான் அதுவும் நடக்குமா?

அல்லது மக்கள் கொல்லப்பட அனுமதிப்பதும் ஒரு வியாபாரமா?

Edited by சாணக்கியன்

கொத்துக் கொத்தாக கொல்லப்படும் இந்த அப்பாவி மக்களுக்காக இதுவரை புலத்தில் ஒரு போராட்டம் நடத்தப்பட்டதா?

புலிகள் சொன்னால்தான் அதுவும் நடக்குமா?

அல்லது மக்கள் கொல்லப்பட அனுமதிப்பதும் ஒரு வியாபாரமா?

http://www.tamilnaatham.com/sencholai20060816.html

http://www.tamilnaatham.com/urimaikural_photos.html

babyfs3.png

இவைகள் தான் எமது மனிதாபிமானத்திற்குக் கிடைத்த சிங்களத்தின் பரிசு!!

என்ன செய்ய பார்க்க வேதனையாய் தான் இருக்கிறது. எம்மைப்போலவே வாழ்ப்பிறந்த அந்த பிஞ்சின் உயிர் அரும்பிலேயே பறிக்கப்பட்டது. ஏதுமறியா பாவை போல் அரைத்தூக்கத்தில் படுத்திருப்பதை பார்க்க மிகவும் மனவேதனையாய் இருக்கிறது.

என்ன சொல்ல யாரை நோக பெற்ற மனங்கள் என்ன வேதனைப்படும்.

kaithi3pv2.jpg

kaithi4zi0.jpg

kaithi5su9.jpg

kaithi6vl0.jpg

இவர்களின் முகங்கள் அதாவது பிடிபட்டு இருக்கும் கடல்படை வீரர்களின் (சூரர்களின்) முகங்கள் நன்றாக சிரித்தபடி இருக்கின்றது ஆனால் அதன் உறவினர்களின் முகங்கள் அழுத படி அல்லவா இருக்கின்றது இதை அந்த அரக்கர்கள் உணர்வார்களாக இருந்தாள் என்றோ தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ்ந்து இருப்பார்கள்

இப்படி எத்தனை மக்கள் ( தமிழ்் மக்கள் தன் தாய் தந்தை மகன் மகள் கணவன் மணைவி என்று உறவுகளை இழந்து அழுத முகத்தோடு அழுத நிலையோடு இருண்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு நடைப்பிணமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்?

சிங்களத்தலைமைக்கு இது புரிந்தாள் இரு இணங்களும் நின்மதியாக வாழலாம்!

இன்னும் ஒன்றையும் இங்கு வந்து இருக்கும் தாய் தந்தையர்கள் மணைவி பிள்ளைகள் உறவுகள் சிந்தித்து இருப்பார்கள் அல்லது பிடிபட்ட நிலையில் இருக்கும் கள்ளத்தோணிகள் ( கடல்படைக்காரர்) உணர்ந்து இருப்பார்கள் அதாவது தாங்கள் உயிருடன் பிடிபடாது போனால் தாங்கள் பிணமாகத்தான் வீட்டுக்கு அனுப்பப்பட்டு இருப்பார்கள் அல்லது கடலில் சிதைந்து இருப்பார்கள்.

Edited by Inathant

  • கருத்துக்கள உறவுகள்

படங்களைப் பார்க்கும் போது விடுதலைப் புலிகள் எவ்வாறு சிங்களக் கைதிகளை அன்பாகவும் பண்பாகவும் நடத்துகிறார்கள் என்று தெரிகிறது. ஒன்றும் தெரியாத அப்பாவித்தமிழர்களை சிங்கள அரசு கைதிகளாகக் பலவிதமாகக் கொடுமைப் படுத்துகிறது. சிங்கள அரசின் கொடுமைகளப்பற்றி தெரியாதவர்கள் யாழ்கள மாப்பிள்ளையின் சொந்த அனுபவங்களை வாசித்துப்பாருங்கள். கதைகள் பகுதியில் மாப்பிள்ளை அனுபவங்களை எழுதியிருக்கிறார்.

படங்களைப் பார்க்கும் போது விடுதலைப் புலிகள் எவ்வாறு சிங்களக் கைதிகளை அன்பாகவும் பண்பாகவும் நடத்துகிறார்கள் என்று தெரிகிறது. ஒன்றும் தெரியாத அப்பாவித்தமிழர்களை சிங்கள அரசு கைதிகளாகக் பலவிதமாகக் கொடுமைப் படுத்துகிறது. சிங்கள அரசின் கொடுமைகளப்பற்றி தெரியாதவர்கள் யாழ்கள மாப்பிள்ளையின் சொந்த அனுபவங்களை வாசித்துப்பாருங்கள். கதைகள் பகுதியில் மாப்பிள்ளை அனுபவங்களை எழுதியிருக்கிறார்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=19439

இராணுவப்போர் கைதிகளை போட்ட சம்பவங்களும் இருக்கு அதையும் மறக்க வேண்டாம்

இராணுவப்போர் கைதிகளை போட்ட சம்பவங்களும் இருக்கு அதையும் மறக்க வேண்டாம்

ஏதோ நேரில் கண்டது போல் கதைக்கின்றீர்? இப்போது பிடித்து வைத்திருப்பவர்களையும் போட்டுவிடலாம் என்று சொல்கின்றீரா?

நான் சந்தித்து கதைத்த அந்த கைதிகள் இப்ப உயிருடன் இல்லை

இப்ப இருக்கிறவர்களை போடவேண்டும் என்று செல்லவில்லை

இராணுவப்போர் கைதிகளை போட்ட சம்பவங்களும் இருக்கு அதையும் மறக்க வேண்டாம்

ஆம் உண்மை தான் 1987 இற்கு முன் கைதிகளை போடுவது தான் வழக்கம் ஏன் 1987 இல் யாழ் நல்லூரில் மக்கள் பார்வைக்கு வைத்த இராணுவத்தினரை பின் ஏனைய சீமெந்து தொழிற்சாலை சிங்கள ஊழியர்களுடன் சேர்த்து சுட்டுவிட்டு யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் போடவில்லையா?

அது பழமை................. இப்பொழுது

சர்வதேச போர் விதிகளை மதித்து. அதற்கேற்ப கைதிகளை பராமரிக்கும் தேசம் என நான் புவிப்பந்தில் தமிழீழத்தையே காண்கிறேன். பெருமையாய் இருக்கிறது.

Edited by mathuka

ஆம் உண்மை தான் 1987 இற்கு முன் கைதிகளை போடுவது தான் வழக்கம் ஏன் 1987 இல் யாழ் நல்லூரில் மக்கள் பார்வைக்கு வைத்த இராணுவத்தினரை பின் ஏனைய சீமெந்து தொழிற்சாலை சிங்கள ஊழியர்களுடன் சேர்த்து சுட்டுவிட்டு யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் போடவில்லையா?

அது பழமை................. இப்பொழுது

சர்வதேச போர் விதிகளை மதித்து. அதற்கேற்ப கைதிகளை பராமரிக்கும் தேசம் என நான் புவிப்பந்தில் தமிழீழத்தையே காண்கிறேன். பெருமையாய் இருக்கிறது.

இது நடந்தது 1996 முல்லைத்தீவு தாக்குதல் சம்பவத்தில் நான் அந்தத்தருனத்தில் அங்கு நின்றேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.