Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணிக் கிணற்றினுள் கன நேரமாகப் பதுங்கியிருந்த பெண்

Featured Replies

காணிக் கிணற்றினுள் கன நேரமாகப் பதுங்கியிருந்த பெண்; அதிர்ச்சிக் காரணம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் பெண்ணொருவர் நீண்ட நேரமாக கிணற்றினுள் பதுங்கியிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கிக் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் வங்கி ஊழியர்களுக்கு பயந்து நான்கு மணி நேரமாக குறித்த பெண் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

காணிக் கிணற்றினுள் கன நேரமாகப் பதுங்கியிருந்த பெண்; அதிர்ச்சிக் காரணம்!

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

குடும்பத்தின் கஸ்ட நிலை காரணமாக வடமராட்சி பகுதியில் ஒரு குடும்பப் பெண் 3 நிதி நிறுவனத்திடம் இருந்து கடனை பெற்றிருந்தார். அதற்காக வாராந்தம் பணத்தை செலுத்தி வந்துள்ளார்.

பின்னர் அவரால் தொடர்ந்தும் செலுத்த முடியாமல் போன போது, இரு வாரங்களின் பின்னர் 3 நிதி நிறுவனங்களின் ஊழியர்களும் பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அவர்கள் தகாத வார்த்தைகளை பிரயோகித்து குறித்த பெண்ணைத் திட்டியுள்ளதோடு வீட்டை விட்டு செல்ல மாட்டோம் என கூறி அங்கேயே இருந்துள்ளனர்.

இதானல் பயந்துபோன குறித்த பெண் அருகிலுள்ள காணியில் இருந்த கிணற்றில் இறங்கி பதுங்கி இருந்துள்ளார்.

குறித்த நிதி நிறுவன ஊழியர்கள் நான்கு மணி நேரமாகியும்  வீட்டை விட்டு செல்லாத காரணத்தினால் அவர் நான்கு மணி நேரமும் கிணற்றுக்குள்ளேயே பதுங்கி இருந்துள்ளார். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்ற பின்னே அவர் வெளியே வந்துள்ளார். இந்த சம்பவம் அப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ் மாவட்டம் உள்ளிட்ட வட மாகாணத்தில் நுண் கடன் திட்டங்கள் என்ற பெயரில் சில நிதி நிறுவனங்கள் அப்பாவி மக்களை சிக்கலிலும் கஸ்டத்திலும் ஆழ்த்திவருவது அறிந்ததே. இந்த திட்டங்களால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் ஆராய மத்திய வங்கி ஆளுநர் குமாரசுவாமி இந்திரஜித், வடபகுதிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார் என்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/The-woman-who-was-hiding-in-the-well

  • கருத்துக்கள உறவுகள்

போர் முடிந்ததும் நான் முந்தி நீ முந்தி என தெற்கில் உள்ள வங்கிகள் முண்டியடித்து கொண்டு வடபகுதியில் நுழைந்து (மக்களின் வெளிநாட்டு பணத்தை இலக்கு வைத்து)மக்களுக்கு கடன் கொடுப்பதாக சொல்லி ஆசைகளை காட்டி இறுதியில் மக்கள் பணம் செலுத்த முடியாமல் கஸ்டப்படுகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் உள்ள உறவுகள் இன்று இல்லாவிட்டாலும் நாளை பணம் அனுப்புவார்கள் என்று அதிகளவு கடன் படுகின்றார்கள். சாதாரணமாக 15 லட்சம் கடன் படுகின்றார்கள். பெருள் வாங்க, வீடு கட்டுவதற்கு, சீதணம் கொடுப்பதற்கு, சாமத்திய வீடு செய்வதற்கு, என்று பல விசயங்களுக்கு கடன்படுகின்றார்கள். ஆனால் பெரும்பாலான வெளிட்டில் உள்ள உறவுகளால் இந்த கடனை அடைக்க முடியாது என்பதே உண்மை. வெளிநாட்டு உழைப்பை பொறுத்தவரை வரி பென்சன் காப்பீடு என எல்லாம் எடுத்து கையில் கிடைப்பது 1000 ல் இருந்து 2000. பெரும்பாலானவர்களுக்கு. நாட்டுக்கு போய் வரும் பெரும்பாலனாவர்கள் கிறிடிற் லைனில் கடன்பட்டு போவதை காண முடிகின்றது. வரும் உழைப்பில் வாடகை மோர்க்கேஜ் சாப்பாடு உட்பட அனைத்து செலவுகளும் தள்ளினால் கையும் கணக்கும் சரியா வருகின்றது. இதற்குள் ஒரு ஊடுபார்த்து ஒரு 200 , 300 அல்லது மிஞ்சினால் 500 அனுப்பலாம். அதுவும் ஒவ்வொரு மாதமும் அனுப்ப முடியாது. இந்தக் காசு அவர்கள் பட்ட கடனுக்கு வட்டிக்கு தான் உதவும். பத்து பதினைந்து வருடங்களுக்கு முதல் ஆயிரம் இரண்டாயிரம் கடன்பட்டவர்கள் இப்போது ஒரு லட்சம் இரண்டு லட்சம் கடன்படுவது சாதாரணமாகிவிட்டது. ஆனால் வெளிநாட்டு உறவுகளின் உழைப்பால் இதை ஈடுகட்ட முடியாத நிலை உள்ளது. ஆனாலும் புரிய வைக்க முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

கடனை கொடுத்தவர்கள் இனிமேல் கிணற்றை எட்டிபார்த்து பின்னர்தான் கடனாளி வீட்டில் இருக்கிறாரா என்று தேடிப்பார்ப்பார்கள்.

தகுந்த மீள்செலுத்தும் திட்டமும் அதற்கான வசதியும் உத்தரவாதமும் இல்லாமல் கடன்பெறுவது தற்கொலைக்குச் சமம் என்பது எனது அபிப்பிராயம். கடன் கொடுப்பவர்களும் இதுபற்றி ஆராய்ந்தபின்னரே கடனை வழங்கவேண்டும். நுண்கடன் என்று பெயரளவில் சொல்லிக்கொண்டு பெரிய தொகைகளை கடனாக வழங்குவதையும் அதனால் கடனாளி வாழ்வா சாவா என்ற நிலைமைக்கு தள்ளப்படுவதையும் காணக்கூடியதாக உள்ளது. பெரிய பணத்தொகையை ஆளுமை செய்யும் அறிவு தராதரம் என்பன எல்லோரிடமும் இருக்குமா என்பதும் சந்தேகமே. அதிஸ்டலாபத்தில் பெரிய தொகை பணம் வெல்லும்போதுகூட பணத்தை எப்படி உரியமுறையில் பயன்படுத்துவது முதலிடுவது என்பதுபற்றி லாட்டரி கம்பனிகள் பணத்தை வென்ற அதிஸ்டசாலிக்கு இலவசமாக ஆலோசனை வழங்கி கற்றுக்கொடுப்பதை புலம்பெயர் நாடுகளில் காண்கிறோம்.

நுண்கடன் வழங்குவதன் உண்மையான நோக்கமே முதலீடுதான். நுண்கடன் வழங்குவோர் முதலீட்டின் தன்மை அது நடைமுறைக்குச் சாத்தியமான முதலீடுதானா கிடைக்கும் இலாபத்தில் கடனை மீள்செலுத்த முடியுமா என்பதற்கு  தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டு ஆய்வுசெய்தபின்னர்தான் கடன் வழங்கவேண்டும். கடனை வழங்கலாமா இல்லையா என்று முடிவுசெய்வதற்கும் இந்த ஆய்வு உதவும். பொறுப்பில்லாத முறையில் கடன்வழங்கும் கம்பனிகளை தமிழ் பிரதேசங்களில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்த மாகாணஆட்சியாளர்கள் நடவடிக்கையெடுக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வீடு வாங்கும்போது அவர்களால் அந்த கடனை கட்டமுடியுமா இல்லையா என்பதை அவர்களின் வருமானத்தை வைத்து அளவிடுவது போல் இந்த வடபகுதியில் புகுந்த வங்கிகள் என்ன அளவுகோலை வைத்து இவ்வளவு கடன்களை கொடுத்தார்கள் ?  இருக்கும் காணி நிலத்தை வைத்தே அவர்கள் கொடுத்துள்ளார்கள் போல் தெரிகிறது கடன் வராவிடில் நில அபகரிப்பு சட்ட ரீதியாக நடக்கும் போல் தென்படுது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.