Jump to content

வெளியிலிருந்து வருபவர்கள் யாரையும் நாம் முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை- சி.வி.கே.சிவஞானம்


Recommended Posts

வெளியிலிருந்து வருபவர்கள் யாரையும் நாம் முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை- சி.வி.கே.சிவஞானம்

 

 

வெளியிலிருந்து வருபவர்கள் யாரையும் நாம்  முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை- சி.வி.கே.சிவஞானம்

இனிவரும் காலங்களில் வடமாகாண முதலமைச்சராக இறக்குமதிகளைக் கொண்டு வரப்போவதில்லை என, தமிழரசுக் கட்சி முடிவெடுத்துள்ளதாக வடமாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபைக்கான அடுத்த தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் பிரதம நீதியரசர் ஸ்ரீபவனை நியமிப்பதற்கு தமிழசுக் கட்சி அவருடன் பேச்சு நடத்தியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு விளக்கமளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், ஊடகங்களில் சில செய்திகள் ஊகத்தின் அடிப்படையில் வெளிவருகின்றன. இருப்பினும் இறக்குமதிகளின் அனுபவம் தமிழரசுக் கட்சிக்கு உண்டு. இனிவரும் காலங்களில் எந்தத் தேர்தலாக இருந்தாலும் தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில், இந்த மண்ணிலே எங்களோடு நின்று, கட்சியோடு நின்று, கட்சியோடு பாடுபட்டவர்கள்தான் தேர்தல்களில் பங்குபற்றலாம். ஸ்ரீபவனுக்காக நான் இந்தக் கருத்தைக் கூறவில்லை. பொதுவாகவே வெளியிலிருந்து வருபவர்கள் யாரையும் நாம் இனிவரும் காலங்களில் முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளப்போவதில்லையெனத் தெளிவாக முடிவெடுத்துள்ளோம் எனத் தெரிவித்தார்.(15)

 

http://www.samakalam.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இவருக்கு முதலமைச்சர் பதவியில் ஆசை வந்திட்டுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது மக்கள் தெரிவு செய்வது, நீவிர் அல்ல.

ஏன் இந்த மாற்றாந்தாய் பாகுபாடு?

தற்போது முதலமைச்சராக பதவி வகிக்கும் மாண்புமிகு விக்னேஸ்வரன்,
உங்கள் எல்லோரிலும் பார்க்க ஈழததமிழ் தேசத்தின் வரலாறு, பூர்விகம் என்பதை தெளிவாக அறிந்து,
தூர நோக்குடனும்,
அத்துடன் அரசியல் தீர்வு என்ற பெயரில்  ஈழததமிழ் தேசத்தின் நலன்களையும் உரிமைகளையும் விட்டுக் கொடாமலும்,
அதே நேரத்தில் எந்த தரப்புடனும் வன்முறை அற்ற வழிகளில்  அவர்களை , ஹிந்தியா உட்பட எந்தவொரு சக்தியிடமிருந்து திணிக்கப்படும் அழுத்தங்களையும் ஈழத்தமிழ் தேசத்தின் நலன்களையும் உரிமைகளையும் பத்திரப்படுத்துவதற்கு தனக்கு எந்தவோர் இடர் வரினும் எதிர் கொள்வதற்கு தான் தயங்கமாட்டேன்

என்பதை தன்னுடைய முதிர்ந்த வயதிலும் செயலில் காட்டி மக்களின் நம்பிக்கையையும், மனவுறுதியையும்  மிகக்குறுகிய காலத்தில் கட்டி எழுப்பிய தமைத்துவம் எங்கே?

உங்களுடைய சிந்தனை எங்கே?

இந்த நிலைப்பாடே போதும் நீங்கள் ஒரு போதும் தைமத்துவம் வழங்க தகுதி அற்றவர் என்பதை அறிவதற்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது மக்கள் தெரிவு செய்வது, நீவிர் அல்ல

கள்ள வோட்டு போடுறவைக்கு அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை. மக்களைப்பற்றி கவலைப்பட்டால் இந்த மாதிரி இவர் கதைக்கவோ, ஆள் தேடு படலம் செய்யவோ மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.