Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுடப்பட்ட இந்திரா காந்தியின் உயிரை காப்பாற்ற '80 பாட்டில் ரத்தம்': நடந்தது என்ன?

Featured Replies

சுடப்பட்ட இந்திரா காந்தியின் உயிரை காப்பாற்ற '80 பாட்டில் ரத்தம்': நடந்தது என்ன?

 
இந்திரா காந்திபடத்தின் காப்புரிமைAFP/GETTY

இந்திரா காந்தியின் வாழ்க்கையில் புவனேஷ்வருடன் தொடர்புடைய பல நினைவுகள் இருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை இனிமையானவை அல்ல.

இந்திராவின் தந்தை ஜவஹர்லால் நேரு முதன்முறையாக கடுமையான நோயால் பாதிக்கப்பட்டது புவனேஷ்வரில்தான். நோயிலிருந்து குணமடையாத அவர் 1964ஆம் ஆண்டு மே மாதம் இறந்தார். புவனேஷ்வரில் 1967ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த இந்திரா காந்தியின்மீது கல் வீசி எறியப்பட்டு, அவரது மூக்கு எலும்பு உடைந்தது.

1984ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதியன்று மதியம் புவனேஷ்வரில் இந்திரா காந்தி ஆற்றிய தேர்தல் உரையை வழக்கம்போல் தயாரித்தவர் அவரது தகவல் ஆலோசகரான எச்.ஒய்.சாரதா பிரசாத்.

ஆனால், தயாரிக்கப்பட்ட உரையை தவிர்த்து ஆச்சரியப்படும்விதமாக தன் விருப்பப்படி பேச ஆரம்பித்துவிட்டார் இந்திரா காந்தி.

இந்திரா காந்திபடத்தின் காப்புரிமைPHOTO DIVISION

மாற்றப்பட்ட உரை

இந்திரா காந்தியின் உரை இது: "நான் இன்று இங்கு இருக்கிறேன், நாளை இல்லாமலும் போகலாம். நான் நீண்ட காலம் வாழ்ந்துவிட்டேன். நாட்டு மக்களின் சேவையில் எனது வாழ்க்கையை செலவிட்டதற்கு பெருமை கொள்கிறேன். எனது இறுதிமூச்சு வரை மக்களுக்கு சேவை செய்வேன். நான் இறந்தாலும், எனது ஒவ்வொரு சொட்டு ரத்தமும் இந்தியாவை வலுவாக்கும் பணியைச் செய்யும்".

சில சமயங்களில் தற்செயலாக திடீரென்று வெளிவரும் வார்த்தைகள் எதிர்வரும் தினங்களை சூசகமாக குறிப்பதாக அமைந்துவிடும். அதுபோலவே இருந்தது இந்திராவின் சுய உரை.

"வன்முறை, மரணம் என்று குறிப்பிட்டு என்னை உலுக்கிவிட்டீர்கள்" என்று கூட்டத்திற்குக் பிறகு ராஜ்பவனுக்கு திரும்பிய இந்திராகாந்தியிடம் மாநில ஆளுனர் பிஷம்பர்நாத் பாண்டே வருத்தப்பட்டார்.

நேர்மையான மற்றும் உண்மையான விடயங்களைப் பற்றியே தான்பேசியதாக இந்திரா காந்தி பதிலளித்தார்.

இந்திரா காந்திபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

தூங்கா இரவு

அன்று இரவு டெல்லி திரும்பிய இந்திரா காந்தி மிகவும் களைப்படைந்திருந்தார். அன்று இரவு இந்திராவால் ஆழ்ந்து உறங்க முடியவில்லை.

தனது அறையில் தூங்கிக்கொண்டிருந்த மருமகள் சோனியா காந்தி, அதிகாலை நான்கு மணிக்கு ஆஸ்துமாவுக்காக மருந்து எடுத்துக் கொள்வதற்காக குளியலறைக்கு சென்றார், அப்போதே இந்திரா காந்தி விழித்துக்கொண்டார்.

குளியலறைக்கு சென்ற தனது பின்னரே வந்த இந்திரா காந்தி, மருந்து எடுத்துக்கொடுக்க தனக்கு உதவியதாக சோனியா காந்தி 'ராஜீவ்' என்ற தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உடல்நிலை மீண்டும் மோசமாகிவிட்டால், எனக்கு ஒரு குரல் கொடுங்கள் நான் விழித்திருக்கிறேன் என்று இந்திரா, மருமகளிடம் கூறினாராம்.

இந்திரா காந்திபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇந்திரா காந்தி பற்றிய ஆவணப்படம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பீட்டர் உஸ்தீனோவ்

குறைவான காலை உணவு

காலை ஏழரை மணிக்கு இந்திரா காந்தி தயாராகிவிட்டார். அன்று குங்குமப்பூ நிற சேலையில் கருப்பு பார்டர் போட்ட சேலையை அணிந்திருந்தார் இந்திரா.

அன்று காலை இந்திராவை சந்திப்பதற்கு இந்திரா காந்தி பற்றிய ஆவணப்படம் தயாரித்துக் கொண்டிருந்த பீட்டர் உஸ்தீனோவுக்கு முன் அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. அதற்கு ஒருநாள் முன்னர் ஒடிசாவுக்கு சென்றிருந்தபோதும் இந்திரா காந்தி தொடர்பான சில காட்சிகளை அவர் படம் பிடித்திருந்தார்.

பிரிட்டனின் முன்னாள் பிரதம மந்திரி ஜேம்ஸ் கைலேகன் மற்றும் மிசோரத்தை சேர்ந்த ஒரு தலைவரையும் பிற்பகலில் இந்திரா காந்தி சந்திப்பதாக ஏற்பாடாகியிருந்த்து. அன்று மாலை, இந்திரா காந்தி, பிரிட்டன் இளவரசி ஆன்னுக்கு விருந்தளிக்கும் ஒரு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அன்று காலை சிற்றுண்டியாக, இரண்டு ரொட்டித் துண்டுகள், தானியங்கள், ஆரஞ்சு சாறு மற்றும் முட்டைகளை சாப்பிட்டார் இந்திரா. அதுவே இந்திராவின் இறுதி உணவாகவும் இருந்தது.

காலை உணவுக்கு பிறகு, இந்திராவின் ஒப்பனையாளர் அவருக்கு ஒப்பனை செய்தார். இந்திராவை தினசரி காலைவேளையில் சந்திக்கும் மருத்துவர் கே.பி மாதூரும் அங்கு வந்தார்.

மருத்துவர் மாதூரை உள்ளே அழைத்த இந்திரா அவருடன் பேசிக்கொண்டிருந்தார்.

அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் 80 வயதிலும் தேவைக்கு அதிகமாக ஒப்பனை செய்துக் கொள்வது, தற்போதும் அவரது முடி கருப்பாகவே இருப்பது என இருவரும் வேடிக்கையாக பேசிக்கொண்டிருந்தார்கள்

இந்திரா காந்திபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

திடீர் துப்பாக்கி சூடு

9 மணி 10 நிமிடங்களில் இந்திரா காந்தி வெளியே வந்தபோது மிதமான வெப்பத்துடன் காலை சூரியன் தகதகத்தது.

இந்திரா காந்திக்கு வெயில் படாமல் இருப்பதற்காக, கறுப்பு குடையை இந்திராவின் தலைக்கு மேலே உயர்த்தி பிடித்தவாறு நடந்து சென்றார் நாராயண் சிங். இந்திராவின் சில அடிகள் பின்னதாக ஆர்.கே. தவண் மற்றும் இந்திரா காந்தியின் தனிப்பட்ட ஊழியர் நாது ராம் நடந்து கொண்டிருந்தனர்.

அனைவருக்கும் பின்னர் நடந்துக் கொண்டிருந்தார் இந்திராவின் பாதுகாப்பு அதிகாரி துணை ஆய்வாளர் ராமேஷ்வர் தயால். இதனிடையில், பணியாளர் ஒருவர் 'கப் அண்ட் சாஸருடன்' சென்று கொண்டிருந்தார்.

முன்புறமாக கடந்து சென்ற அவரிடம் அது எங்கே எடுத்துச் செல்லப்படுகிறது என்று விசாரித்தார் இந்திரா. அந்த தேநீர் உஸ்தீனோவுக்காக எடுத்துச் செல்லப்பட்டதை தெரிந்துக் கொண்ட இந்திரா, வேறு 'கப் அண்ட் சாஸரை` பயன்படுத்துமாறு கூறினார்.

சப்தர்ஜங் சாலையில் உள்ள வீட்டை, அக்பர் சாலையுடன் இணைக்கும் சிறிய வாயிலை நோக்கி செல்லும்போது தவணிடம் பேசிக்கொண்டே சென்றார் இந்திரா காந்தி.

ஏமனுக்கு அதிகாரபூர்வ சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங், அன்று டெல்லிக்கு திரும்பவிருந்தார். இரவு ஏழு மணிக்கு அவரது விமானம் பாலம் விமானநிலையத்தில் இறங்கியதும், பிரிட்டன் இளவரசிக்கு தான் அளிக்கும் விருந்தில் கலந்துக் கொள்ளவேண்டும் என்ற செய்தியை ஜெயில் சிங்குக்கு இந்திரா அனுப்பச் சொன்னார் என்கிறார் தவண்.

திடீரென பிரதமரின் பாதுகாவலரான பியந்த் சிங் தனது துப்பாக்கியை எடுத்து இந்திரா காந்தியை நோக்கி சுட்டார். தோட்டா இந்திரா காந்தியின் வயிற்றில் பாய்ந்தது.

தனது முகத்தை மறைப்பதற்காக இந்திரா வலது கையை தூக்கினார், அதற்குள் பியந்த் சிங், இந்திராவின் பக்கவாட்டு மற்றும் மார்பில் இரண்டு முறை சுட்டார். துப்பாக்கியில் இருந்து சீறிப்பாய்ந்த தோட்டாக்கள் இந்திரா காந்தியின் மார்பு, பக்கவாட்டுப்பகுதி மற்றும் இடுப்புக்குள் ஊடுருவின.

இந்திரா காந்திபடத்தின் காப்புரிமைPIB

சுட்டுத் தள்ளுங்கள்

அங்கிருந்து ஐந்தடி தூரத்தில் சத்வந்த் சிங் ஒரு ஸ்டென் சப்மெஷின் துப்பாக்கியுடன் நின்றிருந்தார்.

இந்திரா காந்தி கீழே வீழ்ந்ததைப் பார்த்த சத்வந்த் சிங், தனது இடத்தில் இருந்து அசையாமல் ஒரு கணம் சிலைபோல் நின்றான். அதைப்பார்த்த பியந்த் சிங் 'சுடு' என்று கூச்சலிட்டான்.

சத்வந்த் சிங், உடனே தனது தானியங்கி துப்பாக்கியில் இருந்த 25 தோட்டாக்கள் தீரும்வரை இந்திராவை நோக்கி சுட்டான்.

பியந்த் சிங் பிரதமரை நோக்கி சுட்டு 25 வினாடிகள்வரை, அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.

சத்வந்த் துப்பாக்கியால் சுட்டபோது அனைவருக்கும் பின்னால் நடந்து நடந்துக்கொண்டிருந்த ராமேஷ்வர் தயால் முன்னோக்கி ஓடிவந்தார்.

ஆனால், இந்திரா காந்தியிடம் அவர் சென்று சேர்வதற்கு முன்னரே சத்வந்தின் தோட்டாக்கள் அவரது தொடைகளையும் கால்களையும் தாக்கியதில் அவர் கீழே விழுந்தார்.

தோட்டாவால் துளைக்கப்பட்டு கீழே வீழ்ந்துகிடந்த இந்திரா காந்தியை பார்த்த உதவியாளர்கள், ஒருவருக்கொருவர் உத்தரவுகளை பிறப்பித்தார்கள். துப்பாக்கி சத்தத்தைக் கேட்ட அக்பர் சாலையில் நின்று கொண்டிருந்த காவல்துறை அதிகாரி தினேஷ் குமார் பட் உள்ளே ஓடிவந்தார்.

இந்திரா காந்தி. Image captionஇந்திரா காந்தியின் பின்னால் நிற்பவர் காங்கிரஸ் தலைவர் ஆர்.கே.தவண்.

ஆம்புலன்ஸ்

அப்போது பியந்த் சிங்கும், சத்வந்த் சிங்கும் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டார்கள். "நாங்கள் செய்ய வேண்டியதை செய்துவிட்டோம், இனி நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள்" என்று எக்காளமிட்டான் பியந்த் சிங்.

அப்போது அங்கு குதித்து முன்னேறிய நாராயண் சிங், பியந்த் சிங்கை கீழே தள்ளினார். அருகில் இருந்த பாதுகாப்பு அறையில் இருந்து ஐ.டி.பி.பி வீரர்கள் ஓடிவந்து, சத்வந்த் சிங்கை பிடித்தனர்.

எப்போதும் அங்கு ஒரு ஆம்புலன்ஸ் நிற்பது வழக்கம். ஆனால் அன்று அந்த அவசர ஊர்தியின் ஓட்டுநர் அவசர உதவிக்கு வரவில்லை, அவர் எங்கே என்றே தெரியவில்லை. இந்திரா காந்தியின் அரசியல் ஆலோசகர் மாக்கன்லால் ஃபோதேதார், 'காரை கொண்டு வாருங்கள்' என்று கூச்சலிட்டார்.

நிலத்தில் வீழ்ந்துகிடந்த இந்திரா காந்தியை, ஆர்.கே.தவணும் பாதுகாவலர் தினேஷ் பட்டும் தூக்கி வெள்ளை அம்பாஸிடர் காரின் பின்புற இருக்கையில் கிட்த்தினார்கள்.

முன்புற இருக்கையில் தவண், ஃபோதேதாரும் அமர்ந்தார்கள். காரை கிளப்புன்போது ஓடிவந்த சோனியா காந்தியில் காலில் செருப்புகூட இல்லை. இரவு உடையில் சோனியா காந்தி 'மம்மி, மம்மி' என்று கத்திக் கொண்டு ஓடிவந்தார்.

இந்திரா காந்தி காரில் கிடத்தப்பட்டிருந்ததை பார்த்த சோனியா காந்தி, பின் இருக்கையில் இந்திரா காந்தியின் அருகில் அமர்ந்து, அவரது தலையை தனது மடியில் தூக்கி வைத்துக்கொண்டார்.

கார் வேகமாக எய்ம்ஸ் மருத்துவமனையை நோக்கிச் சென்றது. நான்கு கிலோமீட்டர் செல்லும் வரை யாரும் ஒன்றுமே பேசவில்லை. சோனியா காந்தியின் இரவு உடை இந்திராவின் ரத்தத்தால் நனைந்துபோனது.

இந்திரா காந்தி Image captionஇந்திரா காந்தி இறந்த பல மணி நேரத்திற்கு பிறகே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஸ்ட்ரெட்சர் இல்லை

ஒன்பது மணி 32 நிமிடத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனையை கார் சென்றடைந்தது. அங்கு இந்திரா காந்தியின் ஓ ஆர்.ஹெச் நெகடிவ் வகை ரத்தம் போதுமான அளவு இருந்தது.

ஆனால், இந்திரா காந்தி காயமடைந்திருப்பது, அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவது போன்ற எந்த ஒரு தகவலும் தொலைபேசி மூலமாக மருத்துவமனைக்கு சொல்லப்படவில்லை.

அவசர பிரிவு கதவு திறப்பதற்கும், இந்திரா காந்தி காரில் இருந்து இறக்கப்படுவதற்கும் மூன்று நிமிடங்கள் ஆனது. அங்கு அவரை கொண்டு செல்வதற்கு ஸ்ட்ரெட்சர் இல்லை!

சக்கரம் கொண்ட ஒரு ஸ்ட்ரக்ட்சர் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டு, இந்திரா காந்தி கொண்டு செல்லப்பட்டார். இந்திராவின் மோசமான நிலையைப் பார்த்த அங்கிருந்த மருத்துவர்கள் அதிர்ந்து போய்விட்டார்கள்.

அவர்கள் உடனே எய்ம்சின் மூத்த இதய சிகிச்சை நிபுணர்களுக்கு தகவல் அளித்தார்கள். சில நிமிடங்களிலேயே குலேரியா, எம்.எம். கபூர், எஸ்.பலராம் ஆகிய மருத்துவர்கள் விரைந்துவந்தனர்.

இந்திராவின் இதயம் சிறிதளவு செயல்படுவதாக எலெக்ட்ரோகார்டியோகிராம் இயந்திரம் காண்பித்தது. ஆனால் நாடித்துடிப்பு இல்லை.

இந்திரா காந்தியின் கண்கள் நிலைகுத்தி நின்றன. இது மூளை சேதமடைந்ததற்கான அறிகுறி.

இந்திராவின் நுரையீரலுக்கு ஆக்ஸிஜன் சென்றால் மூளை செயல்படலாம் என்ற எண்ணத்தில் அவரது வாயில் ஆக்சிஜன் குழாய் பொருத்தப்பட்டது.

இந்திரா காந்திக்கு 80 பாட்டில் ரத்தம் ஏற்றப்பட்டது. இது வழக்கமானதை விட ஐந்து மடங்கு அதிகமாகும்.

மருத்துவர் குலேரியா சொல்கிறார், "இந்திரா காந்தியை பார்த்ததுமே அவர் இறந்துவிட்டார் என்பதை அறிந்துக்கொண்டேன். ஈ.சி.ஜியும் அதை உறுதிப்படுத்தியது. இனி என்ன செய்வது என்று அங்கிருந்த சுகாதாரத்துறை அமைச்சர் ஷங்கரானந்திடம் கேட்டேன். பிரதமர் இறந்ததை அறிவித்துவிடலாமா என்று வினவினேன். வேண்டாம் என்று அவர் மறுத்துவிட்டார். பிறகு இந்திராவின் உடலை அறுவை சிகிச்சை அறைக்கு மாற்றினோம்".

இந்திரா காந்திபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதயம் மட்டுமே பாதிக்கப்படவில்லை

இந்திரா காந்தியின் உடலை இதயம் மற்றும் நுரையீரல் இயந்திரத்துடன் இணைக்கப்பட்டது. இது அவருடைய ரத்தத்தை சுத்தமாக்க தொடங்கியது, இதனால் ரத்த வெப்பநிலை 37 டிகிரிலிருந்து 31 டிகிரியாக குறைந்தது.

இந்திரா இறந்துவிட்டார் என்பது தெளிவாகிவிட்டது. ஆனாலும் அவர் எய்ம்ஸ் மருத்துவமனையின் எட்டாவது மாடியில் உள்ள ஆபரேஷன் தியேட்டருக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

தோட்டாக்கள், இந்திராவின் கல்லீரலின் வலது பகுதியை சேதப்படுத்திவிட்ட்தை மருத்துவர்கள் கண்டறிந்தார்கள். அவரது பெருங்குடலில் குறைந்தது பன்னிரண்டு துளைகள் இருந்தன, சிறுகுடலும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது.

பிரதமரின் நுரையீரலையும் தோட்டா துளைத்திருந்தது. முதுகுத்தண்டும் தோட்டாக்களின் இலக்கில் இருந்து தப்பவில்லை. இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்ட இந்திராவின் இதயம் மட்டுமே பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக இருந்தது.

இந்திரா காந்திபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமருத்துவமனைக்கு வெளியே சினத்துடன் நிற்கும் மக்கள்

திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது

பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திரா காந்தி கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்கு பிறகு, மதியம் இரண்டு மணி 23 நிமிடத்தில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அரசு பிரசார ஊடகங்கள் மாலை ஆறு மணிவரை பிரதமர் இறந்துவிட்டதை அறிவிக்கவில்லை.

"இந்திரா காந்திமீது இதுபோன்ற தாக்குதல் நடைபெறலாம் என உளவுத்துறை முகமைகள் எச்சரிக்கை விடுத்திருந்தன" என்று இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய இந்தர் மல்ஹோத்ரா கூறுகிறார்.

இந்திரா காந்தியின் அனைத்து சீக்கிய பாதுகாப்பு அதிகாரிகளும் அகற்றப்பட வேண்டும் என்றும் உளவுத்துறை அதிகாரிகள் ஏற்கனவே பரிந்துரை செய்திருந்தார்கள்

இந்திரா காந்திபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇந்திரா காந்தி படுகொலைக்கு பிறகு டெல்லியில் சீக்கீயர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது

ஆனால் அந்த கோப்பு, இந்திரா காந்தியிடம் சென்றபோது, நாம் மதசார்பற்றவர்கள் தானே? (Aren't We Secular?)) என்று கோபத்துடன் அவர் மூன்றே வார்த்தைகளில் முடித்துவிட்டார்.

இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவருடைய சீக்கிய பாதுகாவலர்கள் இருவரும் அவருக்கு அருகில் பணியில் அமர்த்தப்படவேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது.

இந்திரா காந்திபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇந்திரா காந்தியின் இறுதி சடங்குகளில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி

31ஆம் தேதியன்று தனக்கு வயிறு சரியில்லை என்று சத்வந்த் சிங் சாக்குபோக்கு சொன்னார். அதனால் அவருக்கு கழிவறைக்கு அருகில் இருக்குமாறு பணி வழங்கப்பட்டிருந்தது.

இப்படித்தான், சீக்கியர்களின் பொற்கோவிலில் இந்திராகாந்தி பிரதமராக எடுத்த 'ப்ளூ ஸ்டார்' நடவடிக்கைக்கு பழிவாங்கினார்கள் சத்வந்த் சிங்கும் பியந்த் சிங்கும்.

'தனது ஒவ்வொரு சொட்டு ரத்தமும் இந்தியாவை வலுவாக்கும் பணியைச் செய்யும்' என்று இறப்பதற்கு முதல் நாள் இந்திரா காந்தி ஆற்றிய உரைக்கு நேர்மாறாக, இந்திரா காந்தியை கொன்ற அவரது பாதுகாவலர்களின் சீக்கிய சமூகம் பல மடங்கு ரத்தத்தை சிந்தியது, காலத்தின் கோலமல்ல, அலங்கோலம்!

http://www.bbc.com/tamil/india-41810704

  • கருத்துக்கள உறவுகள்

சோனியாவா இந்திராவின் தலையை தாங்கி அம்புலன்சில் இருந்தவ நல்லா இருக்குடா கதை . அப்ப ஒருவேளை ஆள் தப்ப சந்தர்ப்பம் இருந்தாலும் விடக்கூடாது என்றுதான் காட்டேரி கூடவே போயிருக்கு .போன பின்னும் மூன்று நிமிடத்தை வேணுமெண்டே வீணடித்து உள்ளார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

தொலைநோக்கற்ற திமிர்த்தனமான மற்ற மத இனத்தவரின் உள்ளத்து உணர்வுகளை மதிக்காத உத்தரவுகள் அரசியற் பழிவாங்கல்கள்  நாட்டிற்கும் உலகிற்குமான ஆழுமைகளைப் பறித்துவிடுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

யாரு என்று மறந்து விட்டது.

யாழ்ப்பாணத்தில் இருந்து ஒருவர் பத்திரிகையில் மலரும் நினைவுகளில் எழுதினார். 

கல்கத்தாவின் சாந்தி நிகேதனில் தான் படித்த போது அங்கெ இந்திராவும் படிக்க வந்ததாயும், தமக்குள் காதல் மலர்ந்து, வளர்ந்து, சுருண்டு போனதாயும் சொல்லி இருந்தார். 

  • தொடங்கியவர்

இந்தியாவுக்கு இந்திரா கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்

 
இந்திராபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

1975, ஜூன் 25 அதிகாலை நேரம், டெல்லியில் பங் பவனில் உறங்கிக் கொண்டிருந்த மேற்கு வங்க முதலமைச்சர் சித்தார்த் ஷங்கர் ராயின் தொலைபேசி மணி ஒலித்தது.

பிரதமர் இந்திரா காந்தி அவரை உடனே வரச்சொல்லியதாக தொலைபேசியில் கூறியது பிரதமரின் சிறப்பு உதவியாளர் ஆர்.கே. தவண்.

1, சப்தர்ஜங் சாலையில் இருந்த பிரதமரின் வீட்டிற்கு ராய் சென்றபோது, இந்திரா காந்தி உளவுத்துறை அறிக்கைகள் பரப்பி வைக்கப்பட்டிருந்த மேசையின் முன் அமர்ந்திருந்தார்.

நாட்டின் நிலைமையைப் பற்றிய ஆலோசனை அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு தொடர்ந்தது. குஜராத் மற்றும் பீகார் சட்டசபை கலைக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், எதிர்கட்சிகளின் கோரிக்கைகளோ மிகவும் அதிகமாக இருந்தது.

இந்திராபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

கடுமையான உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதே இந்திராவின் விருப்பமாக, விவாதத்தின் மையப்புள்ளியாக இருந்தது.

அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனின் 'ஹிட் லிஸ்டில்' தனது பெயர் முதலிடத்தில் இருப்பதாக கூறிய இந்திரா, அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏவின் உதவியால் சிலி நாட்டு அதிபர் சல்வடோர் அயேந்தேவிற்கு ஏற்பட்ட நிலை தனக்கும் ஏற்படலாம் என்ற சந்தேகத்தை அச்சமாக தெரிவித்தார்.

பிறகு ஒரு நேர்காணலில் பேசியபோது இந்திரா காந்தி இவ்வாறு குறிப்பிட்டார். "இந்தியாவிற்கு அதிர்ச்சி வைத்தியம் தேவை என்று கருதினேன். அரசியலமைப்பு விவகாரங்களில் நிபுணர் என்று கருதப்பட்ட சித்தார்த் ஷங்கர் ராயுடன் அதுபற்றி ஆலோசித்தேன்".

கார்ட்டூன்

இந்த விடயத்தில் தனது சட்ட அமைச்சர் எச்.ஆர். கோகலேவுடன் அவர் ஆலோசனை கலக்கவில்லை என்பதுதான் வியப்புக்குரிய தகவல்! தனது அமைச்சரவை சகாக்களுடனும் பிரதமர் விவாதிக்கவில்லை.

அரசியலமைப்பு நிலையை சற்று தெளிவாக அலசி ஆராய அவகாசம் கொடுங்கள் என்று சித்தார்த் ராய் இந்திராவிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு ஒப்புக்கொண்ட இந்திரா காந்தி, ஆனால், அதிக நேரம் எடுத்துக்கொள்ளவேண்டாம் என்று அழுத்தம் கொடுத்தார்.

இந்திராவின் வீட்டில் இருந்து திரும்பிய ராய், இந்திய அரசியலமைப்பை மட்டுமல்ல, அமெரிக்க அரசியலமைப்பையும் அலசி ஆராய்ந்தார். பிற்பகல் 3.30 மணிக்கு இந்திராவை சந்திக்கச் சென்றார்.

உள்நாட்டு பிரச்சனைகளை சமாளிப்பதற்காக அரசியலமைப்பின் 352வது பிரிவின் கீழ் நெருக்கடி நிலையை அறிவிக்கலாம் என்று இந்திரா காந்திக்கு ஆலோசனை வழங்கினார்.

எமர்ஜென்சியை பிரகடனம் செய்வதற்கு முன்னதாக மத்திய அமைச்சரவையில் இந்த செய்தியை வைக்க விரும்பவில்லை, அதற்கு என்ன செய்யலாம் என்று யோசனை கேட்டார் இந்திரா. அமைச்சரவையை கூட்டுவதற்கு போதுமான கால அவகாசம் இல்லை என்று குடியரசுத் தலைவரிடம் விளக்கம் அளிக்கலாம் என்று யோசனை தெரிவித்தார் சித்தார்த் ராய்.

இளைய மகன் சஞ்சய் காந்தியுடன் இந்திரா காந்திபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇளைய மகன் சஞ்சய் காந்தியுடன் இந்திரா காந்தி

நெருக்கடி நிலை தொடர்பான முன்மொழிவை குடியரசுத் தலைவரிடம் வழங்குமாறு இந்திரா காந்தி சித்தார்த் ஷங்கர் ராயிடம் கூறினார்.

இதுபற்றி கேதரின் பிராங்க் ''இந்திரா' என்ற தனது புத்தகத்தில் கூறுகிறார், 'இந்திராவின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்த சித்தார்த், நான் மேற்கு வங்க மாநில முதலமைச்சர், இந்தியப் பிரதமர் அல்ல' என்று கூறிவிட்டார்.

ஆனால், குடியரசுத் தலைவரை சந்திக்கச் செல்லும்போது இந்திராவுடன் செல்வதற்கு ஒப்புக்கொண்டார். இருவரும் மாலை ஐந்தரை மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றார்கள்.

குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமதிடம் நீண்ட விளக்கம் அளிக்கப்பட்டது. நெருக்கடி நிலை அமல்படுத்தக்கோரும் கடிதத்தை அனுப்புமாறு ஃபக்ருதீன் அலி இந்திராவிடம் கூறினார்.

இந்திராவுடன், சித்தார்த்தா ராயும் சப்தர்ஜங் சாலையில் இருந்த இந்திராவின் வீட்டிற்கு வந்தபோது இருள் கவிந்துவிட்டது. இந்திராவின் செயலாளர் பி.என் தர்ரிடம் தகவலை சுருக்கமாகச் சொன்னார் சித்தார்த்.

நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனத்தை கோரும் முன்மொழிவு தட்டச்சு செய்பவரிடம் சொல்லப்பட்டது. தட்டச்சு செய்யப்பட்ட காகிதங்கள், தேவையான தகவல்கள் இணைக்கப்பட்டு கோப்புகளாய் தயாராகின.

பிரதமரின் பிரதிநிதியாக எமர்ஜென்சி நிலையை அறிவிக்க கோரும் கோப்பை எடுத்துக்கொண்டு குடியரசுத் தலைவர் மாளிகைக்கு விரைந்தார் ஆர்.கே. தவண்.

காலை 6 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம்

சஞ்சய் காந்திபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசஞ்சய் காந்தி

அமைச்சரவை கூட்டத்திற்கு காலை 6.00 மணிக்கு வந்து சேருமாறு அடுத்த நாள் காலை 5 மணிக்கு அமைச்சர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுக்குமாறு இந்திராகாந்தி உத்தரவிட்டார். இதை இந்திரா காந்தி சொல்லும்போது ஏற்கனவே நள்ளிரவு ஆகிவிட்டது. அந்த நேரத்திலும் சித்தார்த் ஷங்கர் ராய் அங்கேயே இருந்தார்.

அடுத்த நாள் காலை அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றவேண்டிய உரையை அவருடன் சேர்ந்து தயாரித்துக்கொண்டிருந்தார் சித்தார்த்.

அவர்கள் இருவரும் இருந்த அறைக்கு இந்திராவின் மகன் சஞ்சய் காந்தி அடிக்கடி வந்துசென்றார். ஓரிரு முறை இந்திராவை அறைக்கு வெளியே அழைத்து தனியாக 10-15 நிமிடங்கள் பேசினார் சஞ்சய் காந்தி.

தவணின் அறையில் அமர்ந்து ஓம் மெஹ்தா மற்றும் சஞ்சய் காந்தியும், கைது செய்யவேண்டியவர்களின் பட்டியலை தயார் செய்துக் கொண்டிருந்தார்கள். அந்த பட்டியலைப் பற்றி பேசவும், ஒப்புதல் வாங்கவுமே சஞ்சய் அடிக்கடி தாயின் அறைக்கு வந்து சென்றார்.

அடுத்த நாள், பத்திரிகைகளுக்கு மின்சார இணைப்பை எப்படி துண்டிப்பது, பத்திரிகைகளை எவ்வாறு தணிக்கைக்கு உட்படுத்துவது போன்ற திட்டங்களையும் இந்த மூவர் அணி உருவாக்கியது.

இந்திரா காந்தி வானொலியில் ஆற்றவேண்டிய உரையை தயாரித்து முடிக்கும்போது அதிகாலை மூன்று மணியாகியிருந்தது.

பத்திரிகை தணிக்கை

பிறகு இந்திராவின் வீட்டிலிருந்து புறப்பட்ட ராய், வாயிலை அடையும்போது ஓம் மேத்தாவை சந்தித்தார். அடுத்த நாள், பத்திரிகைகளுக்கு மின்சாரத்தை துண்டிப்பது, நீதிமன்றங்களை மூடுவது போன்ற திட்டங்கள் பற்றி அவர் கூறினார்.

இதைக்கேட்ட ராய் உடனடியாக அதை எதிர்த்தார், "இது வினோதமான முடிவு, நாங்கள் இதைப் பற்றி பேசவேயில்லை, நீங்கள் இவ்வாறு செய்ய முடியாது" என்று கடிந்துகொண்டார்.

இந்திராவின் அரசிலிருந்து வெளியேறிய பிறகு பத்திரிகையாளர் கூட்டத்தில் ஜக்ஜீவன் ராம் (பிப்ரவரி 16, 1977 புகைப்படம்).படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇந்திராவின் அரசிலிருந்து வெளியேறிய பிறகு பத்திரிகையாளர் கூட்டத்தில் ஜக்ஜீவன் ராம் (பிப்ரவரி 16, 1977 புகைப்படம்).

இந்திராவின் வீட்டிற்குள் சென்ற ராய் மீண்டும் இந்திராவை சந்திக்க விரும்புவதாக சொன்னார். அவர் படுக்கைக்கு சென்றுவிட்டார் என்று தவண் கூறியபோதிலும், 'நான் கண்டிப்பாக அவரை சந்திக்க வேண்டும்' என்று ராய் வலியுறுத்தினார்.

வேறுவழியில்லாமல் தயக்கத்துடன் இந்திரா காந்தியை அழைத்தார் தவண். பத்திரிகை நிறுவனங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவது பற்றிய மேத்தாவின் திட்டத்தை இந்திராவிடம் சொன்னபோது அவருக்கு கடும்கோபம் ஏற்பட்டது.

ராயை காத்திருக்கச் சொன்ன இந்திரா அறையில் இருந்து வெளியே சென்றார். இதற்கிடையில், தவணின் அறையில் இருந்து பன்சிலாலுக்கு தொலைபேசி செய்த சஞ்சய், பத்திரிகைகளுக்கு மின்சாரத்தை துண்டிக்கும் திட்டத்தை ராய் எதிர்க்கிறார் என்று சொன்னார்.

அதற்கு பதிலளித்த பன்சிலால் "ராயை முதலில் வெளியில் அனுப்புங்கள், அவர் காரியத்தையே கெடுத்துவிடுவார். தன்னை மிகப்பெரிய வக்கீலாக நினைத்துக்கொள்கிறார் ராய். ஆனால் அவருக்கு ஒன்றும் தெரியாது" - இவை ஜக்கா கபூரின் 'What price perjury: ஷா ஆணையத்தின் உண்மைகள்' புத்தகத்தில் கூறப்பட்டுள்ளவை.

இந்திராவுக்காக ராய் காத்துக்கொண்டிருந்தபோது, ஓம் மெஹ்தா அவரிடம் சொன்னார், 'பத்திரிகைகளை தணிக்கை செய்வது இந்திராவின் விருப்பம். ஆனால், பத்திரிகை நிறுவனங்களுக்கு மின்சாரம் துண்டிப்பது, நீதிமன்றங்களை மூடுவது போன்றவை சஞ்சய் காந்தியின் திட்டம்'.

இந்திரா திரும்பிவந்தபோது அவரின் கண்கள் சிவந்து காணப்பட்டன. "சித்தார்த், மின்சாரம் துண்டிக்கப்படாது, நீதிமன்றங்கள் மூடப்படாது" என்று கூறினார்.

எல்லாம் சரியாகவே நடக்கிறது என்ற திருப்தியுடன் இந்திராவின் வீட்டிலிருந்து வெளியேறினார் மேற்கு வங்க மாநில முதலமைச்சர் சித்தார்த் ராய்.

ஜே.பி கைது

பொது கூட்டம்படத்தின் காப்புரிமைSHANTI BHUSHAN Image captionபொதுமக்களின் பேரணியில் ஜே.பி

ஜூன் 26-ஆம் தேதி அதிகாலையில் இந்திரா உறங்கச் சென்றபோது, கைது நடவடிக்கைகள் தொடங்கின. முதலில் ஜெய்பிரகாஷ் நாராயண் மற்றும் மொராஜி தேசாய் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாட்டை சேர்ந்த காமராஜ், பிகார் மாநில அரசியல் தலைவரும், ஜெயபிரகாஷ் நாராயணனின் சகாவுமான கங்காதர் சின்ஹா, புனாவை சேர்ந்த எஸ்.எம். ஜோஷி ஆகிய மூன்று பேரை கைது செய்ய இந்திரா காந்தி அனுமதி வழங்கவில்லை.

டெல்லி பகதூர் ஷா ஜாஃபர் மார்கில், செய்தித்தாள்கள் அச்சில் ஏறும் சமயத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அடுத்த நாள் ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் ஸ்டேட்ஸ்மேன் ஆகியவை மற்றுமே வெளியாகின, ஏனெனில், அவை மட்டும்தான் பகதூர் ஷா ஜாஃபர் மார்க் சாலையில் இல்லை.

முதல் நாள் பரபரப்பாக இயங்கிய இந்திரா காந்தி சில மணி நேரமே ஓய்வெடுத்தபோதிலும், அடுத்த நாள் காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது உற்சாகமாகவே காணப்பட்டார்.

அந்த கூட்டத்தில் எட்டு அமைச்சர்களும், ஐந்து இணை அமைச்சர்களும் மட்டுமே பங்கேற்றனர், ஒன்பது அமைச்சர்கள் டெல்லியில் இல்லை.

அமைச்சரவை கூட்டம் தொடங்கியதும், எமர்ஜென்ஸி எனப்படும் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதை பிரதமர் இந்திரா காந்தி அறிவித்தார். கைது செய்யப்பட்ட தலைவர்களின் பட்டியலையும் கொடுத்தார். நெருக்கடி நிலை அறிவிக்கும் நிலைக்கு தன்னைத் தள்ளிய நெருக்கடிகளையும் பட்டியலிட்டார்.

ஸ்வர்ண் சிங்கின் கேள்வி

ஸ்வர்ண் சிங்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஸ்வர்ண் சிங்

அமைச்சர்கள் அதிர்ந்துபோய் மெளனம் காக்க, அங்கு கேள்வி எழுப்பியது ஒரு அமைச்சர் மட்டுமே. தைரியமாக கேள்விகேட்ட பாதுகாப்பு அமைச்சர் ஸ்வரண் சிங் கேட்ட கேள்வி என்ன தெரியுமா? 'அவர்கள் எந்த சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்கள்?' என்பதுதான்.

அதற்கு இந்திரா மெல்லிய குரலில் பதிலளித்தார். அவர் அளித்த பதிலை அங்கு அமர்ந்திருந்த பிற அமைச்சர்களால் கேட்கவே முடியாத அளவுக்கு கட்டுப்பாடான குரலில் பதிலளித்தார் இந்திரா.

அப்போது, சில நிமிடங்களுக்கு தனது குரலை கட்டுப்படுத்திய இந்திரா காந்தி, தொடர்ந்து பல மாதங்கள் வரை நெருக்கடி நிலையை தொடர்ந்து நாட்டையே கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

கூட்டத்தில் வேறு எந்த எதிர்கேள்வியும் எழுப்பப்படவில்லை, 'எமர்ஜென்சிக்கு அனுமதி கொடுக்கும் அமைச்சரவை கூட்டம் வெறும் அரை மணி நேரத்திலேயே முடிந்துவிட்டது' என்று 'த எமர்ஜென்ஸி அண்ட் இண்டியன் டெமாக்ரசி' என்ற தனது புத்தகத்தில் பி.என். தர் குறிப்பிடுகிறார்.

எமர்ஜென்சியை எதிர்த்து யாரும் சாவல் விடவில்லை. சில மாதங்களுக்கு பிறகு ஒரு கூட்டத்தில் இந்திரா காந்தி பேசியபோது அவர் சொன்ன வார்த்தைகள் இவை, 'When I implied the Emergency Not Even a Dog breached'.

http://www.bbc.com/tamil/india-41826626

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேரு வம்சமே இந்தியாவை ஆளக்கூடாது என்று பழைய பகையாளிகள் யாரோ நினைக்கின்றார்கள் போலும்.....
ஏனென்றால்....
அந்த குடும்ப அங்கத்தவர்களின் மரணங்கள் வித்தியாசமாகவே இருக்கின்றது.

 

 

  • தொடங்கியவர்

"பெரிய மரம் தரையில் வீழ்ந்தால் அதன் தாக்கம் நிலஅதிர்வாக வெளிப்படும்"

 
இந்திரா காந்திபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

1984 அக்டோபர் 31ஆம் தேதி இந்திய பிரதமர் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டார். அதையடுத்து, டெல்லி மற்றும் நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் சீக்கிய சமூகத்தினர் மீதான வெறுப்பு, கலவரங்களாக மாறி நாட்டையே உலுக்கின.

சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகள் நாடு முழுவதும் நடைபெற்றது என்று சொன்னாலும், டெல்லியில்தான் பாதிப்பு அதிகமாக இருந்தது. சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களை பற்றிய 'When a tree shook delhi: The 1984 Carnage and Its Aftermath' என்ற புத்தகம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

கலவரங்கள், உயிர் இழப்புக்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வலி மற்றும் அரசியல்வாதிகளுடன் போலீசாரின் கூட்டணி போன்ற பல்வேறு செய்திகள் அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

"பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டபிறகு, சீக்கியர்களுக்கு எதிரான மக்களின் சீற்றம் வன்முறையாக வெளிப்பட்டது. அவரின் படுகொலை இந்தியாவையே உலுக்கிவிட்டதாக மக்கள் கருதியதையும் உணர்ந்தேன். ஒரு பெரிய மரம் வேரோடு கீழே விழுந்தால், அதன் தாக்கம் நிலஅதிர்வாக வெளிப்படும்."

ராஜீவ் காந்திபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த வார்த்தைகளை சொன்னது அப்போதைய பிரதமரும், இந்திராகாந்தியின் மகனுமான ராஜீவ் காந்தி. 1984 நவம்பர் 19ஆம் நாளன்று டெல்லி போட் கிளப்பில் கூடியிருந்த மக்களிடம் பேசிய ராஜீவ் காந்தி இப்படிக் கூறினார்.

வீடுகளை, உறவுகளை இழந்து அனாதைகளாக, அனாதரவாக நின்ற ஆயிரக்கணக்கான சீக்கியர்களைப் பற்றியோ, அவர்களுக்கு ஆறுதலையோ, பொறுப்பான பதவியில் இருந்த ராஜீவ் காந்தி எதுவும் கூறவில்லை. அவரின் இந்த வார்த்தைகள் ரத்தம் சொட்டும் காயத்தின் மீது உப்பைத் தூவி, வலியை அதிகப்படுத்தும் செயலாகவே பார்க்கப்பட்டது.

உணர்வுப்பூர்வமான அறிக்கை

'சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களை, வன்முறைகளை கொலைகளை நியாயப்படுத்தும் முயற்சி' என்று ராஜீவ் காந்தியின் வார்த்தைகள் கருதப்பட்டன. இதனால் ஏற்பட்ட பரவலான அதிருப்தியை சரிசெய்யவும், நியாயப்படுத்தவும் காங்கிரஸ் கட்சி பல முயற்சிகள் எடுக்க வேண்டியிருந்தது.

"எந்த நோக்கத்தில் என்ன காரணத்திற்காக சொல்லப்பட்ட கருத்து என்பதை அதைச் சொன்னவர்தான் சரியாக சொல்லமுடியும். ஒரு கருத்தை புரிந்துக் கொள்ளும்போது, எந்த நேரத்தில், எந்த சந்தர்ப்பத்தில் சொல்லப்பட்டது, சொன்னவரின் மனநிலையையும் கருத்தில் கொள்ளவேண்டும்" என்று சொல்கிறார் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித்.

இந்திரா காந்திபடத்தின் காப்புரிமை.

"எங்கள் தலைவர் ராஜீவ் காந்தியைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவர் மற்றவர்களின் உணர்வுகளை மதிப்பவர், தாராள குணமுடையவர். குறுகிய மனப்பான்மையோடு, மற்றவர்களை புண்படுத்தும் விதத்தில் மனதிற்கு தோன்றிய கருத்துகளை அவர் வெளியிட்டிருப்பார் என்று நான் நம்பவில்லை." என்று குர்ஷித் கூறுகிறார்,

ஆரம்ப நிகழ்வுகள்

இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட தகவல் தீயாக பரவியதும், கலவரங்களும் காட்டுத்தீயாக இடைவிடாமல் பற்றியெரியத் தொடங்கின. அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் ஜெயில் சிங், தனது ஏமன் பயணத்தை முடித்துக்கொண்டு உடனடியாக நாடு திரும்பினார்.

ஜெயில் சிங், விமானநிலையத்தில் இருந்து நேரடியாக இந்திரா காந்தியின் உடல் இருந்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றார். டெல்லியில் ஆர்.கே.புரம் பகுதி வழியாக குடியரசுத் தலைவரின் வாகனங்கள் சென்றபோது முதல் தாக்குதல் நடத்தப்பட்டது.

குடியரசுத் தலைவரின் செய்தித் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்த தர்லோசன் சிங், பிறகு தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவராகவும் பணிபுரிந்தவர், அவர் சென்ற வாகனம் தாக்கப்பட்டது.

இந்திரா காந்திபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

"குடியரசுத் தலைவருடன் விமான நிலையத்தில் இருந்து சென்றவர்களில் நானும் ஒருவன். அவரது காருக்கு பின்னால் அவருடைய செயலரின் வாகனம் அதன்பிறகு என்னுடைய கார் சென்று கொண்டிருந்தது." என்று தர்லோசன் சிங் நினைவுகூர்கிறார்,

"முதல் இரண்டு வாகனங்கள் சென்றுவிட்டன. திடீரென்று என்னுடைய காரின் முன்னால் வந்த கும்பலில் இருந்தவர்கள், கைகளில் இருந்த எரியும் தீப்பந்தங்களை வீசியெறிந்து ஆக்ரோஷமாக கூச்சலிட்டார்கள். பீதியடைந்தாலும், வாகன ஓட்டி மிகுந்த சிரமத்துக்கு இடையில் என்னை பத்திரமாக வீட்டிற்கு கொண்டு சேர்த்தார்."

"எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற கியானி ஜெயில் சிங், இந்திரா காந்தியை பார்ப்பதற்காக வண்டியை விட்டு கீழே இறங்கியதும், அங்கிருந்த மக்கள் அவரை சுற்றி வளைத்துக் கொண்டார்கள். அவரது காரையும் மறித்தார்கள். குடியரசுத் தலைவரின் பாதுகாவலர்கள் அவரை மிகுந்த சிரமத்துக்கு இடையில் பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்கள்." என்கிறார்.

கற்பனைகூட செய்து பார்க்கமுடியாத வன்முறை

இது தொடக்கம்தான். சீக்கிய சமூகத்தை சேர்ந்த குடியரசுத் தலைவர் ஜெயில் சிங்கின் நிலைமையே இப்படி என்றால், மற்றவர்களின் நிலையை சிந்தித்துப்பாருங்கள்!

அதன்பிறகு அடுத்த இரண்டு நாட்களுக்கு சீக்கியர்களுக்கு எதிராக நடந்தவை அனைத்தும் கற்பனைகூட செய்து பார்க்கமுடியாத கொடூரமான சம்பவங்கள்.

சீக்கியர்களுக்கு எதிரான போராட்டம்படத்தின் காப்புரிமைAFP

1984 நவம்பர் 2: இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் ராகுல் பேதி தன்னுடைய அலுவலகத்தில் இருந்தார். டெல்லியில் திரிலோக்புரி பகுதியில் 32வது பிளாக்கில் சீக்கியர்கள் பலர் வெட்டிக் கொல்லப்படுவதாக தகவல் கிடைத்தது.

"எங்கள் அலுவலகத்திற்கு வந்த மோகன் சிங் என்பவர் திரிலோக்புரியில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள் பற்றி சொன்னார். அதை கேள்விப்பட்ட நான், அலுவலகத்தில் இருந்து மேலும் இருவரை அழைத்துக் கொண்டு அவருடன் அங்கு சென்றேன். எங்களை பல இடங்களில் கும்பல்கள் தடுத்தன. ஆயிரக்கணக்கான மக்கள் கும்பல்களில் இருந்ததை கண்டு அதிர்ச்சியாக இருந்தது." என்கிறார் ராகுல்.

"எப்படியோ மாலைவேளையில் மோகன் சிங் சொன்ன இடத்தைச் சென்றடைந்தபோது, சுமார் 240 அடி நீளமான தெருவில் நடந்து செல்லவே இடம் இல்லாத அளவு சடலங்களும், வெட்டுப்பட்ட உடல் பாகங்களும் இறைந்துகிடந்தன. கால் வைக்கவே இடம் இல்லாமல் இருந்த நிலையை பார்த்து திகைத்து நின்றோம்."

"குழந்தைகள், பெண்கள் என பாகுபாடில்லாமல் அனைவரும் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். அங்கு இறந்து கிடந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 320 என்று பிறகு தெரியவந்தது. அதுபோன்ற கொடூரமான காட்சியை வாழ்க்கையில் மறக்கமுடியாது. சுமார் பத்தாயிரம் மக்கள் அங்கு சுற்றி வளைத்திருந்தார்கள்." என்கிறார் ராகுல்.

கேள்விக்குள்ளாகிய போலிசாரின் நடவடிக்கை

சீக்கியர்களுக்கு எதிரான போராட்டம்படத்தின் காப்புரிமைAFP

இந்திய விமானப்படையில் கேப்டனாக பணிபுரிந்து, 1971 ல் மகாவீர் சக்ரா விருதுபெற்ற மன்மோகன் வீர் சிங் தல்வார் சந்தித்தது வேறுவிதமான பிரச்சனை. ஐந்தாயிரம் பேர் கொண்ட கும்பல் அவரது வீட்டை சூழ்ந்து தீவைத்தது.

அவரிடம் அந்த சம்பவம் பற்றி கேட்டறிய விரும்பினோம். ஆனால் அதைப்பற்றி நினைத்துப் பார்க்கவே விரும்பாத அவர், "பழைய புண்ணை மீண்டும் கிளறி ரணமாக்காதீர்கள்" என்று சொல்லிவிட்டார்.

ஆனால், தற்போது கலிஃபோர்னியாவில் வசிக்கும் ஜஸ்வீர் சிங் அந்த அவலத்தில், தன் குடும்பத்தினர் கொத்தாக கொல்லப்பட்ட கொடூரத்தை பகிர்ந்துக் கொள்கிறார்.

"டெல்லியில் யமுனை நதிக்கு அருகில் இருக்கும் ஷாத்ராவில் எங்கள் வீடு இருந்தது. எங்களுடைய கூட்டுக் குடும்பத்தில் மொத்தம் 26 பேரை கொன்று குவித்தார்கள். 33 ஆண்டுகளாக கணவன் இல்லாமல், எப்படி வாழ்கிறாய் என்று கேட்டு அம்மாவை கேவலப்படுத்தினார்கள், பிற பெண்களையும் அசிங்கமாக பேசினார்கள்." என்கிறார் ஜஸ்வீர் சிங்.

சீக்கியர்களுக்கு எதிரான போராட்டம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

"எங்கள் முழுக் குடும்பமும் கொன்று குவிக்கப்பட்டது. குழந்தைகள் காப்பாற்ற யாருமே இல்லாமல் அனாதையாக நின்றார்கள். அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வர முடியாமல் மனதளவில் பாதிக்கப்பட்டோம்." ஜஸ்வீர் மனதின் வடுக்களை வலியுடன் கூறுகிறார்.

இதில் காவல்துறையின் பங்கு குறித்த கேள்விகள் எழுந்தன. புகார்களை போலீசார் கண்டுக்கொள்ளாமல் விட்டதோடு, சில இடங்களில் வெறி கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியபோது அவர்களுக்கு துணையாக போலீஸ் செயல்பட்டது என்றும் குற்றம்சாட்டப்பட்டது.

"போலிஸ், சீக்கியர்களை காப்பாற்றுவதற்கு பதிலாக அவர்களுக்கு எதிராக செயல்பட்டது." என்று கூறுகிறார் கலவரங்களுக்கு பிறகு சீக்கியர்களின் சார்பில் நீதிமன்றங்களில் வாதிட்ட வழக்கறிஞரும், 'When a tree shook delhi: The 1984 Carnage and Its Aftermath' என்ற புத்தகத்தை இணைந்து எழுதியவருமான ஹர்விந்தர் சிங் ஃபுல்கா.

"கல்யாண்புரி காவல்நிலையத்தில் கிட்டத்தட்ட 600 பேர் கொல்லப்பட்டனர். படுகொலைகளில் பெரும்பாலானவை நவம்பர் முதல் தேதி நிகழ்ந்தன. அங்கு காவல்துறையினர் கைது செய்த 25 பேரும் சீக்கியர்கள்தான்."

இந்திரா காந்தி

"நவம்பர் முதல் மற்றும் இரண்டாம் தேதிகளில் வேறு யாரையும் காவல்துறையினர் கைது செய்யவேயில்லை. அதுமட்டுமல்ல, சீக்கியர்களை பிடித்து வன்முறை செய்யும் கும்பலிடம் போலீசார் ஒப்படைத்தார்கள்." என்கிறார் ஹர்விந்தர் சிங் ஃபுல்கா.

'வன்முறை திட்டமிடப்பட்டதா?'

இங்கு எழும் முக்கியமான கேள்வி என்னவென்றால், இந்த கலவரங்கள் திடீரென்று நடைபெற்றதா? அல்லது வேண்டுமென்றே திட்டமிடப்பட்டதா?

'When a tree shook delhi: The 1984 Carnage and Its Aftermath' புத்தகத்தை எழுதிய மனோஜ் மித்தாவின் கருத்துப்படி, நடைபெற்ற எல்லா சம்பவங்களுமே அரசியல் தலைவர்களின் ஆசீர்வாதத்துடனேயே நடைபெற்றது.

  •  

இந்திராகாந்தி கொல்லப்பட்ட அக்டோபர் 31ஆம் தேதி, நடைபெற்ற வன்முறை வேண்டுமானால் திடீரென்று இயல்பாக வெகுண்டெழுந்த சீற்றத்தால் நடைபெற்றதாக இருக்கலாம்.

ஆனால் நவம்பர் முதல் மற்றும் இரண்டாம் தேதிகளில் நடந்த சம்பவங்கள் திட்டமிடப்படாமல் நடந்திருக்க முடியாது. நாட்டின் பிரதமர் படுகொலை செய்யப்பட்டதும், வன்முறைகள் வெடித்தெழும் என்று கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாதது ஏன்?

இந்திரா காந்திபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

மனோஜின் கருத்துப்படி, "வன்முறை கோரதாண்டவம் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்கு பிறகே, அதாவது நவம்பர் முதல் நாளன்றுதான் அரங்கேறியது."

"அரசியல் தலைவர்கள் தங்கள் பகுதிகளில் கூட்டம் நடத்தி, திட்டமிட்டார்கள். மக்கள் ஆயுதங்களுடன் வன்முறை செயல்களில் ஈடுபட முழுமையாக தயார் செய்தார்கள். அது போலீசுக்கும் தெரியும், அவர்களும் அரசியல் தலைவர்களுக்கு உதவினார்கள்."

வன்முறை செயல்கள் அரங்கேறியது, அவற்றை தடுக்காமல் போலீசார் கைகட்டி வேடிக்கைப் பார்த்தது ஆகியவை, இந்த சம்பவங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டவை என்பதை தெளிவாக காட்டுகிறது என்கிறார் ஹர்விந்தர் சிங்.

"சீக்கியர்களின் வீடு எது என்பது போன்ற குறிப்பான தகவல்கள் ஆயுதங்களை ஏந்திய கும்பலுக்கு தெரிந்திருந்தது. ஆயிரக்கணக்கான லிட்டர் மண்ணெண்ணெய் அவர்களுக்கு எப்படி கிடைத்தது? சுலபமாக பற்றி எரியக்கூடிய வெடிமருந்து பொருட்களும், பல்வேறு அளவுகளில் இரும்புக் கம்பிகளும் அவர்களிடத்தில் இருந்தது."

அரசியல்வாதிகளின் விளையாட்டு

இந்திரா காந்திபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இங்கு பல்வேறு கேள்விகள் எழுவதை தவிர்க்கமுடியவில்லை. போலீசார் ஏன் இப்படி நடந்துக் கொண்டார்கள்? அவர்கள் கடமையை ஏன் சரியாக செய்யவில்லை. காவல்துறை, அரசியல்வாதிகளின் கைப்பாவையாக ஏன் மாறியது?

1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்களில் போலீசாரின் பங்கை விசாரிக்கும் பொறுப்பு மூத்த போலிஸ் அதிகாரி வேத் மார்வாஹ்வுக்கு வழங்கப்பட்டது. அவர் தனது அறிக்கையை 1985ஆம் ஆண்டின் மத்தியிலேயே வழங்கிவிட்டார். அவர் தலைமையிலான விசாரணைக் குழுவின் அறிக்கைகள் பிறகு அமைக்கப்பட்ட வேறொரு குழுவிடம் வழங்கப்பட்டது.

"போலீசார் ஒரு கருவிதான். தங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் கருவியை பயன்படுத்தலாம். அரசியல்வாதிகள் தங்களிடமிருந்து விரும்புவதை போலிஸ் அதிகாரிகள் குறிப்பாக புரிந்துகொள்கிறார்கள். அரசியல்வாதிகளின் எழுத்துப்பூர்வமான அல்லது வாய்வழி உத்தரவுகளுக்காக காத்திருப்பதில்லை."

"ஆனால் அரசியல்வாதிகளின் விருப்பத்திற்காக செயல்படாமல், மக்களின் நலனுக்காக கடமையாற்றும் அதிகாரிகளும் இருந்தார்கள். கலவரத்தின்போது அதுபோன்ற இடங்களில் நிலைமை கட்டுக்குள் இருந்தது. முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் டெல்லி சாந்தினி செளக் பகுதியில் மிகவும் பிரபலமான குருத்வாரா இருக்கிறது". என்கிறார் வேத் மார்வாஹ்.

"அங்கு காவல்துறை துணை ஆணையராக பொறுப்பில் இருந்த மேக்ஸ்வெல் பரேரா அந்தப் பகுதியில் சீக்கியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு நிலைமையை கட்டுக்குள் வைத்திருந்தார். அரசியல்வாதிகளின் அழுத்தத்திற்கு அடிபணிந்த போலிசார் இருந்த பகுதிகளில் வன்முறை தாண்டவமாடியது."

வெட்கித் தலைகுனிந்த அரசு

இந்திரா காந்திபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்திராகாந்தி இறந்து 21 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் மன்னிப்புக்கோரினார். அவரின் தலை வெட்கத்தால் தலைகுனிந்தது.

ஆனால் வருத்தம் தெரிவித்ததுடன் அரசு விவகாரத்தை கைகழுவி விடமுடியுமா? சுதந்திர இந்தியாவின் மிகவும் கொடூரமான வன்முறைச் சம்பவங்களின் மோசமான நினைவுகள் அழிந்துவிடுமா?

காங்கிரஸின் மூத்தத் தலைவர் சல்மான் குர்ஷித் கூறுகிறார், "இதற்கான பதிலை நீதிபதிதான் கொடுக்கமுடியும். நியாயம் கிடைத்துவிட்டாலும்கூட, பாதிக்கப்பட்டவர்கள் என்ன சொல்வார்கள்? நியாயம் கிடைத்துவிட்டாலும், வலியை யாரால் சரி செய்யமுடியும் என்று கேட்பார்கள். நியாயம் கிடைத்ததா இல்லையா என்பதை எப்படி சொல்லமுடியும். யார் பாதிக்கப்பட்டார்களோ, யார் வலியை அனுபவித்தார்களோ, அவர்களே இதற்கான பதிலை அளிக்கமுடியும்".

பூசிமெழுகும் பதில்களும், கருத்துகளும் வன்முறை சம்பவங்களை மறக்கடித்துவிடுமா? சரி, 1984க்கு பிறகு இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நடக்காமல் நின்றுபோய்விட்டதா?

1988இல் பாகல்பூரில், 1992-93இல் மும்பையில், 2002இல் குஜராத்தில் என வன்முறைகள் வெவ்வேறு காரணங்களுக்காக பல்வேறு காலகட்டங்களில் தனது கோரமுகத்தை வெளிக்காட்டிக் கொண்டேயிருக்கிறது.

ஆனால் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை கிடைக்கிறதா? இல்லை என்ற காரணத்தால்தான் வன்முறை இன்றும் இங்கு வாழ்வாங்கு வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.

http://www.bbc.com/tamil/india-41874946

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

இந்திராவைப் பற்றி ஃபிடல் காஸ்ட்ரோவிடம் என்ன சொன்னார் யாசர் அராஃபத்?

கம்பீரமான, அதிகாரம் பொருந்திய ஒருவராகவே பெரும்பாலும் இந்திரா காந்தி பார்க்கப்படுகிறார். இயல்பானவர், பழகுவதற்கு இனிமையானவர் என்றோ, பிறரை கவரும் நபராகவோ அல்லது பிறர் மீது அக்கறை கொண்டவராகவோ இந்திரா காந்தி பார்க்கப்படவில்லை.

ராணி எலிசபெத்துடன் இந்திரா காந்திபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionராணி இரண்டாம் எலிசபெத்துடன் இந்திரா காந்தி

உண்மையில் தனது நாவன்மையால் அனைவரையும் ஈர்க்கக்கூடியவர் இந்திரா காந்தி. அரசியலைத் தவிரவும் பல தளங்களில் அக்கறை கொண்டவர், ஆளுமையின் சின்னம் அவர்.

கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், திறன்படைத்தவர்களின் தோழமையை விரும்புபவர், நகைச்சுவை உணர்வு கொண்டவர் இந்திரா என்பது பெரிதும் அறியப்படாத தகவல்கள்.

1984 அக்டோபர் 31ஆம் தேதியன்று அவர் படுகொலை செய்யப்பட்டபோது, என்னுடைய வாழ்வின் வசந்தமே முடிந்துவிட்டதாக உணர்ந்தேன். அனைவரையும் உற்சாகப்படுத்தி, எப்போதும் ஊக்கம் அளிக்கும் இந்திரா நட்புணர்வுடன் பழகுபவர், பிறரை மதிக்கும் குணம் படைத்தவர்.

நான் அவருக்கு நன்றிக்கடன்பட்டவன். அவர் எனக்கு கற்றுக் கொடுத்தவை அளப்பரியவை, அளவிட முடியாதவை. அவர் கற்றுக் கொடுத்ததில் ஓரு சிறிய பகுதியை மட்டுமே நான் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்றால் அது மிகையாகாது.

கே.நட்வர் சிங் Image captionகே.நட்வர் சிங்

தங்கள் வாழ்க்கையைப் பற்றி மட்டுமே சிந்தித்து முடிவெடுப்பவர்கள் மற்றும் பிரச்சனைகளை சந்திக்காமல் பின்வாங்குபவர்கள் மீது இந்திரா காந்திக்கு பெரியளவு அபிமானம் இருந்ததில்லை.

தனது கூர்மையான பார்வையினால் பல சமூக மற்றும் அரசியல் தடைகளை உடைத்து ஒரு பெரிய விடுவிக்கும் சக்தியாக இருந்த இந்திரா காந்தி, மிகுந்த வலிமை மிக்கவர்.

எனக்கு எழுதிய முதல் கடிதம்

1968 ஆகஸ்டு மாதம் 28ஆம் நாள், கைப்பட எனக்கு ஒரு கடிதம் எழுதினார் இந்திரா காந்தி. எனது மகன் ஜகத் பிறந்த சமயம் அது. அதில்,

அன்புள்ள நட்வர்,

உங்களுக்கு மகன் பிறந்த செய்தியை செயலாளர் சொன்னதும் உடனே தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் அது முடியவில்லை.

இருவருக்கும் வாழ்த்துகள். மனம் நிறைந்த மகிழ்ச்சியையும், சிறப்பையும் கொண்டு வந்து சேர்க்கும் வகையில் உங்கள் மகன் வளர வாழ்த்துகிறேன்.

உங்கள் உண்மையுள்ள,

இந்திரா காந்தி

1970 ஜனவரி 27ஆம் தேதியன்று இந்திரா காந்திக்கு நான் ஒரு குறிப்பு அனுப்பினேன்.

உங்களை எப்படி அழைப்பது என (அன்பான மேடம், மதிப்பிற்குரிய மேடம், மேடம், திருமதி காந்தி, அன்பான ஸ்ரீமதி காந்தி, அன்பான பிரதமர்) பலவிதமாக முயற்சித்தேன். இறுதியாக எதுவுமே சரியில்லை என்று தோன்றியதால் ஒரு குறிப்பு வடிவில் இதை அனுப்புகிறேன்.

இரண்டு வாரங்களுக்கும் மேல் படுத்த படுக்கையாக இருக்கிறேன். தரையில் இருந்த மகனின் பொம்மையை எடுத்து கொடுப்பதற்காக கீழே குனிந்தபோது, இடுப்பு எலும்பு சுளுக்கிவிட்டது. நடுத்தர வயதில், சிறிது வலியை அனுபவிக்க வேண்டியிருக்கும். இப்போது நான் டெல்லியில் இருந்து தொலைவில் இருப்பதும் துன்பத்தை அதிகரித்துள்ளது.

பொறுக்கமுடியாத வலியுடன் வெறுமனே கூரையைப் பார்த்துக் கொண்டே படுத்திருப்பதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியவில்லை. கூரைக்கு வண்ணம் பூச வேண்டியது அவசியம் என்று தோன்றுகிறது.

எனது குறிப்புக்கு ஜனவரி 30ஆம் தேதியன்று இந்திரா பதிலனுப்பினார். அதில்…

நீங்கள் விடுமுறையில் இருப்பதை அறிந்தேன், ஆனால் உடல் நலக்குறைவு என்று தெரியவில்லை. இடுப்பு எலும்பு சுளுக்கினால் ஏற்படும் வேதனையை உணர்வேன்.

அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன், ஆனால் இந்த நேரத்தை, உங்களுடைய கடந்தகாலம் நிகழ்காலம், எதிர்காலம் பற்றி நன்கு சிந்தித்து பகுப்பாய்வு செய்ய பயன்படுத்துங்கள். அது எப்போதும் நம் அனைவருக்கும் தேவைப்படுவது.

வெளிநாட்டு விருந்தினர்கள், முக்கிய பிரமுகர்களின் வருகை என குடியரசு தின நிகழ்வுகளின்போது ஒரு வார காலம் டெல்லி எப்படி பரபரப்பாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியும். நாளைக் காலையில் ஒரு நிகழ்ச்சிக்காக செல்கிறேன். நீங்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

கே.பி.எஸ் மேனனும் இப்படி சிரமப்பட்டாரே நினைவிருக்கிறதா? அஜந்தா சிலைபோல் அவர் அசையாமல் நின்று கொண்டிருக்கவேண்டிய நிலையில் இருந்தார். நீங்கள் இப்போது தந்தை என்ற நிலையில் இருப்பதால் ஏற்படும் சில ஆபத்துகளையும் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

கோபமடைந்த யாசர் அராஃபத்

யாசர் அராஃபத்படத்தின் காப்புரிமைCHRIS HONDROS/ GETTY IMAGES Image captionயாசர் அராஃபத்

1983 மார்ச் ஏழாம் தேதியன்று அணிசேரா நாடுகளின் உச்சிமாநாடு டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. அப்போது நான் பொதுச் செயலாளராக பணிபுரிந்தேன்.

உச்சிமாநாட்டின் முதல் நாளே ஒரு பிரச்சனை எழுந்தது. பாலஸ்தீன லிபரேசன் அமைப்பின் தலைவர் யாசர் அராஃபத்தை சமாதானப்படுத்த வேண்டிய நிலை உருவானது.

மாநாட்டில் தனக்கு முன்னரே ஜோர்டான் மன்னர் உரையாற்றியதை தனக்கு நேர்ந்த அவமானமாக கருதிய யாசர் அராஃபத், மதிய உணவுக்கு பின் டெல்லியில் இருந்து கிளம்பிவிடும் முடிவில் இருந்தார்.

இந்திரா காந்திக்கு தொலைபேசியில் தகவலைச் சொல்லிவிட்டு, விஞ்ஞான் பவனுக்கு வரமுடியுமா என்று கேட்டேன். கியூபாவின் அதிபர் ஃபிடரல் கேஸ்ட்ரோவும் வந்திருப்பதையும் கூறினேன். காஸ்ட்ரோவிடம் இந்திரா பேசியதும், அவர் உடனே அராஃபத்திடம் பேசினார்.

"நீங்கள் இந்திரா காந்தியின் நண்பரா" என்று கேஸ்ட்ரோ, அராஃபத்தை கேட்டார். அதற்கு பதிலளித்த அராஃபத், "நண்பரே, அவர் எனது மூத்த சகோதரி, அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்" என்றார்.

ஃபிடரல் கேஸ்ட்ரோபடத்தின் காப்புரிமைSTIG NILSSON/AFP/GETTY IMAGES Image captionஃபிடரல் கேஸ்ட்ரோ

உடனே அதை பிடித்துக் கொண்ட கேஸ்ட்ரோ "அப்படியென்றால், இளைய சகோதரன் போல் நடந்துக்கொள்ளுங்கள், உச்சி மாநாட்டின் மதிய அமர்விலும் கலந்துகொள்ளுங்கள்," என்று அன்புடன் கடிந்துக்கொண்டார். அதன் பிறகே அராஃபத் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்.

1983 நவம்பர் மாதம், டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டின் தலைமை ஏற்பாட்டாளராக பொறுப்பு வகித்தேன்.

உச்சி மாநாட்டின் இரண்டாவது நாளன்று பிரச்சனை வெடித்தது. மகாராணி இரண்டாம் எலிசபெத், குடியரசுத் தலைவர் மாளிகையில் அன்னை தெரசாவுக்கு 'ஆர்டர் ஆஃப் மெரிட்' என்ற விருதை வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் தகவல் பிரதமருக்கு தெரிந்தது.

உண்மையை கண்டறியுமாறு பிரதமர் எனக்கு உத்தரவிட்டார். உண்மையிலுமே குடியரசுத் தலைவர் மாளிகையில் விழா ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. ஆனால் குடியரசுத் தலைவரைத்தவிர இதுபோன்ற நிகழ்ச்சியை வேறு யாரும் ஏற்பாடு செய்ய முடியாது.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மகாராணிக்கு அனுமதியளிக்கமுடியாது என்று கூறுமாறு பிரிட்டன் பிரதமர் மார்கரெட் தாட்சரிடம் சொல்லச்சொன்னார் இந்திராகாந்தி. நானும் உத்தரவை நிறைவேற்றினேன்.

ஆனால், இடத்தை மாற்றுவதற்கான காலம் கடந்துவிட்டது என்று சொன்ன மார்கரெட் தாட்சர், இப்போது நிகழ்ச்சியில் மாறுதல்கள் செய்வது மகாராணிக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் என்று கூறி மறுத்துவிட்டார். தாட்சரின் பதிலை இந்திராவிடம் சொல்லிவிட்டேன்.

அதை ஏற்றுக்கொள்ளாத இந்திரா, மீண்டும் தாட்சரிடம் பேசும்படி சொன்னார். மேலும் இந்த பிரச்சனை அடுத்த நாள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் அப்போது பிரிட்டன் அரசியின் செயல் விமர்சிக்கப்படும் என்பதையும் கூறச்சொன்னார்.

பிரச்சனை பெரிதாகும் என்பதால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையின் தோட்டத்தில் நடைபெற்ற சிறிய நிகழ்ச்சி ஒன்றில் அன்னை தெரேசாவுக்கு 'ஆர்டர் ஆஃப் மெரிட்' விருதை மகாராணி இரண்டாம் எலிசபெத் வழங்கினார்.

இந்திரா காந்திபடத்தின் காப்புரிமைSTF/AFP/GETTY IMAGES Image captionஇந்திரா காந்தி

பின்னணியில் நடைபெற்ற சச்சரவுகள் பற்றிய தகவல்கள் எதுவும் அன்னை தெரெசாவுக்கு தெரியாது என்பது ஆறுதல் அளித்தது.

காமன்வெல்த் உச்சிமாநாட்டின் இறுதி நாளன்று பிரதமர் இந்திரா காந்தியை சந்திப்பதற்காக அனுமதி கோரினேன். 31 வருடங்களாக இந்திய வெளியுறவுத்துறையில் பணியாற்றும் நான் பணியில் இருந்து வெளியேறும் விருப்பத்தை தெரிவித்தேன்.

அரசியலில் ஈடுபடும் எனது ஆர்வத்தையும் அவரிடம் வெளிப்படுத்தினேன், அதற்கு இந்திரா அனுமதி கொடுத்தார்.

நவம்பர் 28ஆம் தேதியன்று, டெல்லி செளத் பிளாக்கில் அவரை சந்தித்தேன். ஓரிரு நாட்களில் பரத்பூருக்கு செல்கிறேன், அங்கிருந்து அரசியல் பயணத்தை தொடங்குகிறேன் என்று சொன்னேன். கதராடையும் நேரு கோட்டும் வாங்கப்போவதாக பேச்சுவாக்கில் சொன்னேன்.

அப்போது, "இனி நீ அரசியலில் காலடி எடுத்துவைக்கிறாய், அதற்கு உனது தோல் தடித்து இருப்பது நல்லது" என்று அறிவுரை சொன்னார் இந்திரா காந்தி.

(காங்கிரஸ் தலைவர் நட்வர் சிங், வெளியுறவு அமைச்சராக பதவி வகித்தவர். வெளியுறவு அமைச்சக செயலராகவும் பணியாற்றியவர். 'One life is not enough' என்ற தனது சுயசரிதையில் இந்திரா காந்தி மற்றும் அவரது குடும்பத்தைப் பற்றி எழுதியிருக்கிறார் நட்வர் சிங். இந்திராகாந்தி நூற்றாண்டு இம்மாதம் அனுசரிக்கப்படுவதை ஒட்டி வெளியாகும் பல கட்டுரைகளில் ஒன்று இது)

 

http://www.bbc.com/tamil/global-42033923

  • தொடங்கியவர்

இந்திரா மதச்சார்பற்றவரா? என்ன சொல்கிறது வரலாறு?

988084322c30ea18-dbcc-4995-9c95-93a3cc3d

நான் இந்திரா காந்தியைப் பார்ப்பதற்கு முன்பே பெரோஸ் காந்தியை மிகவும் நெருக்கமாக பார்த்துள்ளேன். காரணம், எனது மாமா சயீத் வாசி நக்வியின் ரேபரேலி சட்டமன்றத் தொகுதி அமைத்திருந்த அதே ரேபரேலி நாடாளுமன்றத் தொகுதியின் மக்களவை உறுப்பினராக பெரோஸ் இருந்தார்.

நிலக்கிழார்கள் நிறைந்த அவத் பகுதியில், நேரு குடும்பம் பற்றி அதிகம் யாரும் விமர்சிக்க மாட்டார்கள். ஆனால், பெரோஸ் காந்தியின் பூர்விகம் குறித்த முனகல்கள் இருந்துகொண்டே இருக்கும்.

இந்தியாவின் முக்கியமான பிராமணர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் எப்படி, ஒரு 'பனியா' (தொழில் செய்யும் சமூகம்) சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை மணக்கலாம். 'காந்தி' என்பது பனியா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயர் என்று அவர்கள் முடிவு செய்தனர். ஆனால், உண்மையில் பெரோஸின் உண்மையான பெயர் 'பெரோஸ் ஜெஹாங்கிர் காண்டி'. அவர் பார்சி மதத்தை சேர்ந்தவர். பனியா வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல.

'காண்டி' என்பது 'காந்தி' என மாறியது, நேரு-காந்தி குடும்பம் என்று, இந்திரா காந்திக்கு உதவியாக இருந்த காங்கிரஸ்காரர்களால் பெரிதுபடுத்தப்படுவதற்கு முந்தைய நிலையாக இருந்தது. இதன்மூலம், ஜவஹர்லால் நேரு மற்றும் மகாத்மா காந்தி ஆகிய இருவரும் சங்கமத்தையும் அந்தக் குடும்பம் பிரதினிதித்துவப்படுத்தியது.

பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி 1966-இல் இறந்ததைத் தொடர்ந்து, காங்கிரசின் பழமைவாதத் தலைவராக இருந்த மொரார்ஜி தேசாயை கட்சிக்குள்ளேயே தோற்கடித்து பிரதமர் பதவியைப் பிடித்தார் இந்திரா.

இந்திரா தலைமையில் காங்கிரஸ் சந்தித்த முதல் தேர்தல் அக்கட்சிக்கு பலத்த அடியாக இருந்தது. காங்கிரஸ் எட்டு மாநிலங்களில் தோற்றது. நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையும் குறைந்தது. இந்திராவை விமர்சித்த ராம் மனோகர் லோகியாவுக்கு இந்தச் சரிவு கூடுதல் வாய்ப்பாக அமைந்தது.

"பேசாத பொம்மை" என்று பொருள்படும் "கூங்கி குடியா" எனும் தொடரை, இந்திராவை விமர்சிக்க அவர் பயன்படுத்தினார்.

நேருவின் மகள் என்பது 1957-இல் இந்திரா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராகவதற்கு உதவியது. காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த பழமைவாத வலதுசாரிகளை எதிர்க்க அவருக்கு அது உதவிகரமாக இருந்தது. கட்சிக்குள் இருந்த வலதுசாரிகளை சமாதானப்படுத்துவதும், கேரளாவில் அமைந்த உலகின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசை அவர் கலைக்கக் காரணமாக இருக்கலாம்.

இந்த கொள்கை சமநிலையின்மை, 1969-இல் கட்சியில் ஏற்பட்ட பிளவு, வங்கிகள் தேசியமயமாக்கல், மன்னர் மானியம் ஒழிப்பு உள்ளிட்டவற்றால் சரிசெய்யப்பட்டது. "சுயநலன் கருதி செயல்படும் இடது" என்று டைம்ஸ் இதழின் அப்போதைய லண்டன் செய்தியாளர் பீட்டர் ஹஸ்லேக்கர்ஸ் குறிப்பிட்டார்.

அவரது முதன்மை செயலராக இருந்த பி.என்.ஹக்ஸர் ஒரு இடதுசாரியாக இருந்தார். ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து செயல்பட இந்திராவுக்கு ஆலோசனை சொன்னவர் அவரது அமைச்சரவையில் இருந்த மோகன் குமாரமங்கலம்.

அப்போது கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஸ்ரீபத் டாங்கே, காங்கிரஸ் உடனான உறவை ஒற்றுமையாக இருந்துகொண்டே போராடும் கொள்கை என்று கூறினார். அதாவது, காங்கிரஸ் கட்சியின் மக்கள் ஆதரவுக் கொள்கைகளுக்காக ஒற்றுமை, மக்களுக்கு எதிரான கொள்கைகளுக்காக போராட்டம்.

சோவியத் யூனியனின் ஆதரவுடன் வங்கதேசம் உருவாக அவர் உதவிய சமயம் காங்கிரசில் இடதுசாரித் தன்மை அதிகமாக இருந்தது. அப்போது அடல் பிஹாரி வாஜ்பாயி இந்திராவை, "துர்க்கை" என்று குறிப்பிட்டார்.

கம்யூனிஸ்ட் கட்சியுடனான இந்திராவின் நெருக்கம் இந்திய மற்றும் சர்வதேச அளவில் ஒரு பிரச்சனையைக் கிளப்பியது. அப்போது, மேற்கத்திய நாடுகள் கம்யூனிச கொள்கைகளுடன் எதிர்ப்போக்கு கொண்டிருந்த சமயம்.

காங்கிரஸ் கட்சிக்கு உள்ளும் வெளியிலும் இருந்த சோசியலிஸ்டுகள், இன்றைய பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடி அமைப்பான ஜன சங்கம் ஆகியவை காந்தியவாதத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் இந்திரா காந்தியின் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக ஜே.பி இயக்கம் அல்லது பிஹார் இயக்கம் என்று அறியப்படும் இயக்கத்தைத் தொடங்கினர்.

98808434gettyimages-3401099jpg

இளைய மகன் சஞ்சய் காந்தியுடன் இந்திரா காந்தி   -  Getty Images

அந்த இயக்கத்தின் கடுமையான அழுத்தங்களுக்கு இந்திரா உள்ளானார். தனது கதம் குவான் இல்லத்தில் தங்க ஜெயப்பிரகாஷ் என்னை அழைத்தார். அதனால், நேரு குடும்பத்தின் நீண்டகால நண்பரான முகமத் யூனுஸ் மூலம் இந்திரா என்னைத் தொடர்புகொண்டார்.

அவர் யூனுஸ் மூலம் என்னிடம் கேட்ட கேள்விகள் அரசியல் கிசுகிசுக்களாகவே இருந்தன. ஜே.பி மற்றும் இந்திராவுக்கு இடையே தூது செல்பவர்களாக இருந்த ஷியாம் நந்தன் மிஸ்ரா, தினேஷ் சிங் ஆகியோருடன் ஜே.பி கொண்டிருந்த நம்பிக்கை மற்றும் நெருக்கம் குறித்து என்னிடம் கேட்கப்பட்டது.

நேரு எப்படி இந்தியாவின் பெருமையை உலக அளவில் பிரநிதித்துவப்படுத்தினாரோ, அதேபோல இந்தியாவின் அதிகாரத்தை இந்தியா பிரதிநிதித்துவப்படுத்தினார். ஆனால், ஜே.பி இயக்கத்தின் வலிமை அதிகரித்து வந்ததால் அவர் சற்று கலங்கிப்போயிருந்தார்.

அவரின் சிறிய தேர்தல் பிழைக்காக அலகாபாத் உயர் நீதிமன்றம் அவரை தகுதிநீக்கம் செய்ததால் அவர் நிலைகுலைந்தார். அவரது இளைய மகன் சஞ்சய் காந்தி 1975-இல் அவசரநிலையைப் பிரகடனப்படுத்த ஆவனவற்றை செய்தார்.

இந்திரா மற்றும் சஞ்சயுடன் செல்வாக்கு மிகுந்தவராக இருந்த முகமத் யூனுஸ் ஊடகங்களை சமாளிப்பதற்காக சிறப்பு பிரதிநிதியாக பதவி பெற்றார். அவரது அதிகாரத்தால், பிறரால் பார்க்க முடியாத, இந்திராவின் இயல்புகளை அறியக்கூடிய ஒன்றை செய்ய அவர் எனக்கு உதவினார்.

லண்டனில் இருக்கும் சண்டே டைம்ஸ் இதழின் பகுதிநேர செய்தியாளாராக நான் இருந்தேன். அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டபின் இந்திரா கொடுக்கும் முதல் பேட்டி எனக்கு கொடுத்தார்.

பேட்டியின்போது அவர் மிகவும் இறுக்கமாக இருந்தார். என் கேள்விகள் எதற்கும் அவர் பதில் சொல்லவில்லை. சுவரைப் பார்த்தே அவர் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். தன் கையில் வைத்திருந்த தாள் ஒன்றை பார்க்காமலேயே ஏதோ கிறுக்கிக்கொண்டிருந்தார்.

இந்த சம்பவம் மட்டும் அவரின் குணாதிசயங்களை வெளிப்படுத்தவில்லை. வங்கதேசப் போரில் அவர் காட்டிய தீரமும் அவரை இரும்புப் பெண்மணியாகக் காட்டியது. ஆனால், துணிச்சல் மிக்கவர் என்றும் மதச்சார்பற்றவர் என்றும் இந்திராவுக்கு இருந்த பெயர் மாறவில்லை. 1982-இல் ஜம்முவில் நடந்த தேர்தலில் அவர் தன்னை ஒரு சமயவாதியாக அவர் காட்டிக்கொண்டபோதும் அது மாறவில்லை.

98808436gettyimages-108425609jpg

ராஜீவ் காந்தி   -  Getty Images

பஞ்சாபில் நடந்த காலிஸ்தான் போராட்டமும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மதச்சாயத்தைக் கொடுத்தது. 1984-இல் அவர் கொலை செய்யப்பட்டபின்னும் , அது தொடர்ந்தது. ராஜீவ் காந்தி தலைமையில், 1985 தேர்தலில் மக்களவையின் 514 தொகுதிகளில் காங்கிரஸ் 404 தொகுதிகளில் வெல்ல அந்த அனுதாப அலை உதவியது என்று பலரும் நினைத்தோம். ஆனால், சிறுபான்மை மதவாதத்திற்கு எதிராக இந்துகளின் வாக்குகளை ஒண்டு சேர்த்ததே அந்த வெற்றிக்கு காரணம் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் கூறினர்.

ராம ராஜ்யம் அமைக்கப்படும் என்று 1989-இல் ராஜீவ் காந்தி அயோத்தியாவில் தனது பிரசாரத்தை தொடங்கியது வியப்பேதும் இல்லை. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி விஸ்வ ஹிந்து பரிஷத் கோயில் கட்ட வேண்டும் என்று கோரிய அதே இடத்தில் அவர் அடிக்கல் நாட்டினார்.

இந்த போக்கு இப்போதும் தொடர்கிறது. குஜராத் தேர்தலுக்கான பிரசாரத்தையும் ஒரு கோயிலுக்கு சென்றபின்னர்தான் ராகுல் காந்தி தொடங்கினார். பெரும்பான்மையாக இந்துக்கள் வாழும் நாட்டில் கோயிலுக்கு போவது இயல்பான ஒன்றாகவே இருக்க வேண்டும்.

ஆனால், சிறுபான்மையினர் வாக்குகளை வாங்க காங்கிரஸ் முயல்கிறது என்று பாரதிய ஜனதா குறை கூறுவதை தவிர்க்க இவ்வாறு நடக்கிறது. 2005-இல் வெளியான சச்சார் கமிட்டியின் அறிக்கையில், சிறுபான்மையினரை கருத்தில் கொண்டு காங்கிரஸ் 60 ஆண்டுகள் செயல்பட்டது எவ்வாறு என்பது தெளிவாகிவிட்டது.

முற்போக்குவாதிகள் மத்தியில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா ஆகிய இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்ற குரல் ஒலிப்பது அதிகரித்துள்ளது. அதில் இந்திரா காந்திக்கும் பங்கு உள்ளது.

http://tamil.thehindu.com/bbc-tamil/article20555109.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.