Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொய்ப் புகாரில் மன்னார் மீனவரின் 700 கிலோ பாறை மீன்களைப் பறித்த கடற்படையினர்

Featured Replies

பொய்ப் புகாரில் மன்னார் மீனவரின் 700 கிலோ பாறை மீன்களைப் பறித்த கடற்படையினர்

 

 

மன்னார், பள்ளிமுனை மீனவர் ஒருவரின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பாறை மீன்களை கடற்படையினர் இன்று (14) காலை பறிமுதல் செய்தனர்.

மன்னார், பள்ளிமுனையைச் சேர்ந்த மீனவர் ஒருவர் நேற்று (13) திங்கட்கிழமை மாலை மீன் பிடிப்பதற்காக பள்ளிமுனை கடற்பகுதியில் இருந்து சக மீனவர்களுடன் கடலுக்குச் சென்றுள்ளார்.

2_Fish1.jpg

அவர், இன்று காலை இரணைதீவு மேற்கு கடற்பகுதியில் உள்ள கடற்படை முகாமிற்கு சற்று தொலைவில் சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளார். இதன் போது தான் பிடித்த சுமார் 700 கிலோ பாறை மீன்களை பள்ளிமுனை கடற்கரைக்கு காலை 11 மணியளவில் கொண்டு வந்துள்ளார்.

அப்போது பள்ளிமுனை கடற்கரையில் இருந்த கடற்படையினர், டைனமெட் வெடிபொருளைப் பயன்படுத்தியே மீன்களைப் பிடித்ததாகக் கூறி அவற்றை கரைக்குக் கொண்டுசெல்ல அனுமதிக்கவில்லை.

2_Fish2.jpg

இதை மறுத்த மீனவர், சுருக்கு வலையைப் பயன்படுத்தியே மீன்கள் பிடிக்கப்பட்டதாகக் கூறியதோடு, அங்கு வந்த மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் மீன்களை வெட்டியும் காட்டியுள்ளார்.

அதை அலட்சியம் செய்த கடற்படையினர் மீனவர்களை அச்சுறுத்தியதோடு, பல இலட்சம் ரூபா பெறுமதியான 700 கிலோ பாறை மீன்களை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

2_Fish3.jpg

கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மீன்களை மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டரீதியாக மீன்பிடிக்கும் தங்கள் மீது கடற்படையினர் இதுபோன்ற பொய்ப் புகார்களைக் கூறி தம் மீது முறைப்பாடுகளை பதிவு செய்வதாக மன்னார் மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

http://www.virakesari.lk/article/27028

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மீனவர்களிடம் கொள்ளை அடிக்க புதுசு புதுசா காரணம் கண்டு பிடிக்கிறாங்க சொறிலன்காவின் கொள்ளைகூட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் இந்த விசயத்தில் மீனை தான் கொள்ளை அடிச்சிருக்கிறான். ஆனால்.. எங்கட ஊடகக்காரர்கள் சொந்த மொழியையே கொலை பண்ணுறாங்கள்.

பாரை மீன்.. பாறை அல்ல. :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, nedukkalapoovan said:

சிங்களவன் இந்த விசயத்தில் மீனை தான் கொள்ளை அடிச்சிருக்கிறான். ஆனால்.. எங்கட ஊடகக்காரர்கள் சொந்த மொழியையே கொலை பண்ணுறாங்கள்.

பாரை மீன்.. பாறை அல்ல. :rolleyes:tw_angry:

இத்தனைக்கும் தான் ஒரு பழம்பெரும் பத்திரிகை எண்டு தன்னைத்தானே பினாத்தல் வேறை...tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழனை உய்ய விடுறதில்லை எண்டு கங்கணம் கட்டுகிறார்கள். ஐயாவை கொஞ்சம் கூப்பிடுங்கோ. தேர்தல் வாறபடியால் ஒருவேளை வந்தாலும் வருவார், எதுக்கும் கூப்பிட்டு ஆள் இருக்கா,  இல்லையா என்று உறுதிபடுத்திக்கொள்ளுங்கோ 

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, nedukkalapoovan said:

சிங்களவன் இந்த விசயத்தில் மீனை தான் கொள்ளை அடிச்சிருக்கிறான். ஆனால்.. எங்கட ஊடகக்காரர்கள் சொந்த மொழியையே கொலை பண்ணுறாங்கள்.

பாரை மீன்.. பாறை அல்ல. :rolleyes:tw_angry:

இப்பொழுது அநேகமான ஊடகங்களில் எழுதப்படும் செய்திகள் இந்தியாவில் உள்ளவர்களை கொண்டே எழுதப்படுகிறதாம் ........ இந்தியாவில் பாரை மீனை பாறை மீன் என்பார்கள். இப்போது எனது சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.