Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர்ந்த தமிழரின் பங்களிப்பு பற்றாக்குறைகள் பல

Featured Replies

  • புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதானமான வேரூன்றிய அரசியல் வாழ்வு அற்ற நிலை என்பது சர்வதேச அரங்கில் எமது போராட்டம் எதிர்கொள்ளும் சில பிரச்சாரங்களிற்கு காரணமாக அமையலாம்.
  • தாயகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரின் பங்களிப்பு போல் புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பு எண்ணிக்கையில் பரந்து பட்டு இல்லை.
  • குறிப்பிட்ட வீதமானவர்கள் போராட்ட விடையங்களில் நாட்டமற்று இருப்பது வேதனைக்குரியது.
  • ஒரு நாடு நிலைப்படுத்தப்படுவதற்கு சர்வதேசத்தின் அங்கீகாரம் அவசியமான ஒன்று. அத்தகை அங்கீகாரத்தை பெறும் நோக்கிலான நிதானப்பாடுகளே கால நீட்சிகளாக மாறிக் கொண்டிருக்கின்றன எனபது தமிழர்களின் நிலைப்பாடு.
  • இந்தக் கால நீட்சி என்பது விடுதலை வேலைகளையும் மன உறுதியையும் குலைத்துவிடும் ஒரு பொறிமுறையாக சர்வதேசத்தாலும் சிங்களத்தாலும் கைய்யாளப்படுகிறது என்பது வெளிப்படை.
  • இருந்தாலும் தமிழர்கள் சுயதீர்மானத்தில் எதிர்பார்க்கப்படும் ஒரு காலத் தொடக்கத்தில் விடுதலைக்கான போரை ஆரம்பித்து தமிழீழம் நோக்கி விரைவார்கள்.

காலக் கணிப்பு காட்சிகளின் நாடித்துடிப்பு, 09 பங்குனி 2007.

http://www.pathivu.com/?ucat=sirappu_paarvai&file=090307

Edited by kurukaalapoovan

இந்தப் பிரச்சனையை இன்னொருவிதமாக நோக்குவதற்கு உரிய வழி எவ்வாறு சிறீ லங்கா அரசு, சிங்களப் பேரினவாதம், சிங்கிளவர் வெளிநாடுகளில் தமிழரின் சுதந்திரத் தாயக போராட்டத்திற்கு எதிராக செயற்படுகின்றார்கள், பிரச்சாரம் செய்கின்றார்கள் என்பதை அவதானித்து அவற்றிக்கெதிரான செயற்பாடுகளில் உலகத் தமிழர் ஈடுவடுவதாகும்.

புலம்பெயர்ந்த தமிழரின் போராட்ட பங்களிப்பு குறைவாக இருப்பதற்குரிய இன்னொரு காரணம் வெளிநாடுகளில் வாழும் பல தமிழ்க் குடும்பங்களிற்கும தாயகத்திற்குமிடையிலான தொடர்பு முற்றிலுமாக அறுந்துவிட்டது என்பதனாலும் ஆகும். அதாவது எம்மில் பலருக்கு நெருங்கிய இரத்த உறவுகள் தாயகத்தில் இல்லை. அவர்கள் எல்லோருமே ஏற்கனவே தாயகத்தை விட்டு வெளியேறி விட்டார்கள். எனவே இப்படிப்பட்டவர்களை தாயகத்தின் பக்கம் திருப்புவது கடினமான செயலாகும். இந்தப் பிரிவில் அடங்கும் தமிழரே தமிழீழ விரோதச் செயல்களை சர்வதேசத்தில் ஊக்குவிக்கின்றார்கள் என்று சொன்னாலும் அது மிகையாகாது.

வெளிநாடுகளில் உள்ள பல தமிழ் வானொலிகள், தமிழ் ஊடகங்கள் பீப்பீசி, சீறீ லங்கா அரசின் செய்திகள் போன்றவற்றை நேரடியாகவும், மறைமுகமானதுமான ஒளிபரப்புக்கள் செய்கின்றன. இதற்கு பதிலாக தமிழீழச் செய்திகளை நேரடி ஒளிபரப்பாக தினமும் வழங்கலாம். புலம்பெயர்ந்த தமிழரின் பங்களிப்பு பற்றாக்குறைகள் காணப்படுவதற்கான முக்கிய காரணமும் இதுவேயாகும். அதாவது வெளிநாட்டு தமிழ் ஊடகங்கள் தமது வேலைகளை ஒழுங்காகச் செய்வார்களானால் இப்படியான பிரச்சனைகள் வராது.

புலம் பெயர் மக்களின் பங்களிப்பு குறைவத்ற்க்கு முதற் காரணம். நாங்கள் போரிற்க்கு பணம் கொடுக்கின்றோம்தானே வேற என்ன பண்ணனும் என்கின்ற நினைப்புத்தான். போரிற்கு பணம் மட்டும் தேவை இல்லை என்கின்ற விடயத்தை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயாரயில்லை.

மற்றவிடையம் மாப்பு சொன்னது போல என் குடும்பம் எல்லம் இங்கேதானேயிருக்கு, எனக்கென்ன பிரச்சினை ஈழத்தில என்கின்ற நினைப்பு, அதற்காக நான் எல்லரையும் குற்றம் சாட்டவில்லை ஒரு சிலரது நடவடிக்கையும் காரணம்,

அடுத்தது, நான் சில காலமாக நடைமுறையில் பார்ப்பது சிலருக்கு அதிகூடின போர்மோகம். என்ன எவங்க சண்டபிடிக்கிறாங்கயில்லை. அவர்களிற்க்கு தெரியுமா உண்மைகள், கடந்த 2 நாட்களில் ஒரு லட்சம் மக்கள் இடம்பெயர்ந்து உள்ளனர் அவர்களின் அடிப்படை பிரச்சினைகள் அவர்களிற்க்கு புரியுமா....? நான் இங்க இருந்து காசு அனுப்புறேன் நீ சண்ட போடு மக்களப் பற்றி க்வலைப் படிவதில்லை. இப்படியும் சிலர் உள்ளனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது மட்டும் இல்லை அவர்களில் பலர் தாங்கள் அடிக்கடி இலங்கை போய் உல்லாச பயணம் பண்னி விட்டு வரமுடியாமல் இருகுதே எண்டு ஏங்கிகொண்டும் இருக்கினம். இப்படிபட்ட சலிப்பை தான் அவைகளிடம் பார்க்கக்கூடியதாய் இருக்கே தவிர தமிழ் தாயகத்துக்கு என்ன உணர்வு பூர்வமாக பண்ணலாம் என்பது பற்றி அக்கறை குறைவு

  • தொடங்கியவர்

உணர்வுபூர்வமாக புதிய புதிய இணையத்தளங்கள் உருவாக்கலாம். அவற்றையும் உணர்வுபூர்வமான பெயர்களோடு ஆரம்பிக்கலாம். அவற்றில் உணர்வுபூர்வமாக களமுனைச் செய்திகள் சுடச் சுட எழுதலாம்.

இப்படியான இணையத்தளங்கள் சில நூறாக இருப்பது தான் இன்று போராட்டத்தின் தேக்க நிலைக்கு முக்கிய காரணம். இப்படி ஆயிரம் பத்தாயிரம் லட்சம் தளங்கள் என்று ஆரம்பிக்க வேண்டும். அவற்றின் மூலம் புலம்பெயர்ந்தவர்களின் உணர்ச்சி கட்டில்லாது பெருகி காட்டாறு போல் வழிந்தோடுகிறது என்று காட்டலாம். இதனால் அச்சமடைந்து சர்வதேசம் எம்மிம் மண்டியிடும்.

உங்கள் பதிவிற்கு முந்திக் கொள்ளுங்கள்

பசி

தாகம்

விடாய்க்குது

அங்கலாய்ப்பு

வயித்தெரிச்சல்

சுழுக்கு

வலிப்பு

வயித்துக்குத்து

போனால் கிடைக்காது பொழுதுபட்டால் இருக்காது அக்காமாரே அண்ணாமாரே அய்யாமாரே அம்மாமாரே ஓடிப்போய் உங்கள் பதிவை செய்து கொள்ளுங்கோ.

எனக்கு விளங்குது உம்முடய வயுத்தெரிச்சல்...இப்பிடியே வயித்தெரிச்சலோட இருகவேண்டியதுதான்...

புலம்பெயர்ந்த மக்கள் ஒண்டும் இரத்த வெறி பிடித்து சண்டை சண்டையெண்டு சொல்லிக் கொண்டு திரியவில்லை.

சமாதானம் எண்ட பெயரில் போராளிகளும், மக்களும் தினம் தினம் அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை பொறுக்க முடியாததனாலேயே படையினருக்கு பதிலடி வழங்க வேண்டுமென்று கூறுகிறார்கள்.

சமாதானமெண்ட பெயரில் நாம் அழிவதை விடுத்து எமது விடுதலைக்கான பயணத்தை விரைவில் நிறைவேற்றுவதற்கான வழியினை நாடவேண்டுமென்றே அவர்கள் விரும்புகின்றனர்.

புலம்பெயர் சமூகத்தில் இருப்பவர்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினரே நீங்கள் சொல்லும் பணத்தைத் கொடுக்கிறார்கள். ஒரு கணிசமான தொகையினர் பங்களிப்பை வழங்க பின்நிற்கின்றனர். நாட்டு நடப்புக்களை ஊடகங்கள் ஊடகத் தெரிந்து கொள்கிறார்கள். போராட்டத்திற்கு ஆதரவாக பேசுகிறார்கள் ஆனால் பங்களிப்பை வழங்க அவர்கள் தயாரில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தலைப்பாக ஆரம்பித்து விட்டு, கேலியும் கிண்டலுமாக ஆக்கினால், தலைப்பு ஊர் பூய்ச் சேராது. மக்களுக்கு அரவணைப்பு மூலம் தான் ஊக்குவிப்பைக் கொடுக்கலாம் என்பது வரலாறு தந்த உண்மை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணர்வுபூர்வமாக புதிய புதிய இணையத்தளங்கள் உருவாக்கலாம். அவற்றையும் உணர்வுபூர்வமான பெயர்களோடு ஆரம்பிக்கலாம். அவற்றில் உணர்வுபூர்வமாக களமுனைச் செய்திகள் சுடச் சுட எழுதலாம்.

நீரும் உம்முடய அறிவும் ...

விளங்கவேண்டியது ஏதொ இருக்க ஏதோ ஏதோ விள்ங்கிக்கொள்ளும் உம்முடய அறிவு குறுக்கால போற அறிவு தான்

உணர்வுபூர்வமாக புதிய புதிய இணையத்தளங்கள் உருவாக்கலாம். அவற்றையும் உணர்வுபூர்வமான பெயர்களோடு ஆரம்பிக்கலாம். அவற்றில் உணர்வுபூர்வமாக களமுனைச் செய்திகள் சுடச் சுட எழுதலாம்.

இப்படியான இணையத்தளங்கள் சில நூறாக இருப்பது தான் இன்று போராட்டத்தின் தேக்க நிலைக்கு முக்கிய காரணம். இப்படி ஆயிரம் பத்தாயிரம் லட்சம் தளங்கள் என்று ஆரம்பிக்க வேண்டும். அவற்றின் மூலம் புலம்பெயர்ந்தவர்களின் உணர்ச்சி கட்டில்லாது பெருகி காட்டாறு போல் வழிந்தோடுகிறது என்று காட்டலாம். இதனால் அச்சமடைந்து சர்வதேசம் எம்மிம் மண்டியிடும்.

உங்கள் பதிவிற்கு முந்திக் கொள்ளுங்கள்

பசி

தாகம்

விடாய்க்குது

அங்கலாய்ப்பு

வயித்தெரிச்சல்

சுழுக்கு

வலிப்பு

வயித்துக்குத்து

போனால் கிடைக்காது பொழுதுபட்டால் இருக்காது அக்காமாரே அண்ணாமாரே அய்யாமாரே அம்மாமாரே ஓடிப்போய் உங்கள் பதிவை செய்து கொள்ளுங்கோ.

குறுக்ஸ்

பசி

தாகம் ஆகிய பெயர்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டன.

இடையிடையே தாகம் இணையத்தின் செய்திகளும் இங்கே கொட்டப்படுகின்றனவே!

பாருங்கள் அவர்களின் இன்றைய செய்தியை

மட்டு முறியடிப்பு சமரில் இராணுவத்திற்கு பலத்த சேதம்! 15 இராணுவ உடலங்கள், ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன! நீலவாணன் - மட்டு நகர் - 11 பங்குனி 2007

தற்போது மூன்றாவது நாளாக கிழக்கு மாகாணத்தில் சிறீ லங்கா இராணுவத்திற்கு எதிராக நடைபெறும் முறியடிப்பு சமரில் இராணுவம் பலத்த சேதங்களுடன் பின்வாங்கி வருகிறது. விடுதலைப் புலிகளை கிழக்கு மாகாணத்தில் இருந்து அப்புறப்படுத்துவது என்ற நோக்கில் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கையை விடுதலைப்புலிகள் தமது உக்கிர தாக்குதலால் முறியடித்துள்ளனர். வாகரை பகுதியை கைப்பற்றியது போல மட்டு நகரையும் அம்பாறையையும் மிக இலகுவாக கைப்பற்ற முடியும் என்று சிறீ லங்கா இராணுவம் நினைத்திருந்தது. ஆனால் விடுதலைப் புலிகள் தந்திரோபாயமாக எந்த வித சேதமுமின்றி வாகரையை விட்டு வெளியேறியதுடன் கிழக்கில் ஏனைய பகுதிகளில் தம்மை பலப்படுத்தியிருப்பது இந்த முறியடிப்பு தாக்குதல் மூலம் தெரியவந்துள்ளது.

நேற்று நடைபெற்ற முறியடிப்புத் தாக்குதலில் 36ஆம் கிராமம், வாதகல்மடு, நல்லதண்ணி ஓடை, அடைச்சகல் ஆகிய பகுதிகளில் இருந்து படையினர் விரட்டி அடிக்கப்பட்டனர். அத்துடன் பாவற்கொடிச்சேனையில் நிலைகொண்ட படையினர் மீதான உக்கிர முறியடிப்பு சமரில் இராணுவத்தினரிடமிருந்து ஆயுதங்களை கைப்பற்றியதுடன் 15 இறந்த இராணுவத்தினரின் உடலங்களையும் மீட்டுள்ளனர். இந்த தாக்குதலில் இராணுவ தரப்பில் மேலும் பலர் இறந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. பாவற்கொடிச்சேனையில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட இராணுவத்தினர் தற்போது உன்னிச்சைக் குளத்திற்கு பின்புறமான மகா ஓயாவுடன் தொடர்பு பட்ட பகுதிகளில் நிலை கொண்டுள்ளதாக தெரியவருகிறு.

இந்த சமரில் கைப்பற்றப்பட்ட ஆயுத விபரம்

1 - ஏ.கே எல்எம்ஜி

1 - பீகே எல்எம்ஜ

10 - எகே 2 ரைபிள்கள்

1 - ஆர்பிஜி லோஞ்சர்

1 – எம்16 கோல் கொமாண்டே

மற்றும் மோட்டர் ஷெல்கள், ஆர்பிஜி ஷெல்கள்.

அத்துடன் இன்று அதிகாலை புல்லுமலையில் நிலைகொண்ட சிறீ லங்கா ஆக்கிரமிப்பு படை மீதான தாக்குதலில் ஆயிரக்கணக்கான பீகே ரவைகளை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர். புலிகளின் தாக்குதலை எதிர் கொள்ள முடியாத விசேட அதிரடிப்படையினர் பெட்டி பெட்டியாக கொண்டு வந்த ரவைகளை விட்டுவிட்டு ஓடிச்சென்றுள்ளனர். புலிகளால் கைப்பற்றப்பட்ட இந்த ரவவைகள் பலமாத காலத்திற்கு பாவிக்க முடியும் என்றும் தெரிய வருகிறது.

தமிழ் இணையங்களின் வளர்ச்சி தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆற்றும் பங்கு மிகப்பெரியது. சுயவிளம்பரங்களிற்காக சிலர் இணையங்களை தவறாகப் பயன்படுத்தினாலும், ஆயிரங்கள், பத்தாயிரங்கள், இலட்சங்கள் அளவில் தமிழீழ விடுதலைக்காகக் பாடுபடும் இணையங்கள் உருவாகுவது வரவேற்கத்தக்கதே. ஆனால் பலருக்கு இந்த இணையங்களை பார்க்கும் போது எரிச்சல் வருவதற்கான காரணம் இந்த இணையங்களை ஒருங்கிணைத்து கட்டுப்படுத்தக்கூடிய அல்லது ஆகக்குறைந்தது அறிவுரை கூறக்கூடிய ஒரு தமிழ் நிருவாகக் கட்டமைப்பு என்று ஒன்றும் இல்லை அல்லது உருவாக்கப்படவில்லை. இதனால் ஒவ்வொரு தனிப்பட்ட இணைய நடத்துனர்களும் தங்களுக்கு தெரிந்த அறிவுடன், தங்கள் விருப்பங்களிற்கிணங்க, தங்கள் மனம் போன போக்கில் தமிழ் இணையங்களை நடாத்துகின்றார்கள்.

தினமும் நூற்றக்கணக்காக பெருகிவரும் தமிழ இணையங்களை அங்கத்துவர்களாகக் கொண்ட ஒரு தமிழீழ விடுதலையை தொலைநோக்காகக் கொண்ட தமிழர் நிருவாகக் கட்டமைப்பு ஒன்று ஊடகத்துறை சார்ந்தவர்களால் விரைவில் உருவாக்கப்படுமாயின் அது மிகச் சிறந்த பலாபலன்களை குறுகிய, நீண்ட காலத்தில் தமிழருக்கு தரும். உதாரணமாக இந்த நிருவாகக் கட்டமைப்பு கீழ்வரும் பொறுப்புக்களைச் செய்யலாம்.

1. தமிழ் இணையங்களை கண்காணித்து அவர்களிற்கு தேவையான Feedback ஐ வழங்குதல்

2. புதிதாக உருவாகும் இணையங்களை கண்காணித்து அவர்களிற்கு சரியான வழிகாட்டலை வழங்குதல்

3. தமிழ் மக்களிற்கு துரோகத்தனங்கள் செய்யும் இணையங்கள் பற்றி தமிழ் மக்களிற்கு அறிவுறுத்துதல்

4. Rating System ஐ உருவாக்குதல். சிறப்பாகச் சேவையாற்றும் இணையங்களை கண்டுபிடித்து கெளரவப்படுத்தல்.

5. சட்ட ஆலோசனகள் வழங்குதல், இணையங்களை நடத்துபவர்கள் அறிந்திருக்க வேண்டிய அடிப்படை சட்ட அறிவை வழங்குதல். உதாரணமாக Copyright, Privacy போன்றவற்றை நமது தமிழ் இணையங்கள் கடைப்பிடிப்பதில்லை, இது ஒரு காலத்தில் மிகுந்த ஆபத்துக்களில் இணைய நடாத்துனர்களை மாட்டிவிடக்கூடும்.

6. இவ்வாறு பல......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல தலைப்பாக ஆரம்பித்து விட்டு, கேலியும் கிண்டலுமாக ஆக்கினால், தலைப்பு ஊர் பூய்ச் சேராது. மக்களுக்கு அரவணைப்பு மூலம் தான் ஊக்குவிப்பைக் கொடுக்கலாம் என்பது வரலாறு தந்த உண்மை.

தூயவா உம்முடய தூய அறிவு அந்த குறுக்கால போன அறிவுக்கு திரும்பவும் ஏதோ ஏதோ மாதிரி விளங்கினலும் ஆச்சரியப்பட ஒண்றும் இல்லை

...

Edited by Innumoruvan

மின்னல்

தாகம் தாயக செய்திச் சேவை என்று ஒன்று திறம்பட இயங்குது என்று எல்லா இடமும் பரபரப்பா கதை படுது. நீங்கள் சொல்லுறதும் அது தானே? ஒருக்கா address அய் தரமுடியுமோ?

Edited by kurukaalapoovan

இப்படியான இணையத்தளங்கள் சில நூறாக இருப்பது தான் இன்று போராட்டத்தின் தேக்க நிலைக்கு முக்கிய காரணம். இப்படி ஆயிரம் பத்தாயிரம் லட்சம் தளங்கள் என்று ஆரம்பிக்க வேண்டும். அவற்றின் மூலம் புலம்பெயர்ந்தவர்களின் உணர்ச்சி கட்டில்லாது பெருகி காட்டாறு போல் வழிந்தோடுகிறது என்று காட்டலாம். இதனால் அச்சமடைந்து சர்வதேசம் எம்மிம் மண்டியிடும்.

உமது கருத்து ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. ஒரு நூற் இணையத்தை வைத்தே பராமரிக்க சிரமப் படுகிறார்கள் அதற்க்கும் எப்படி 1000 லட்ச்சம் தளங்கள்?

குறுக்காலபோனவரின் இரண்டாம் கருத்து எதிர் மறையான நோக்கத்துடன் (வஞ்சகப்புகழ்ச்சி) எழுதப்பட்டுள்ளது.

அவரின் கருத்தை ஆமோதிக்கிறேன். இவ்வாறன பல இணையத்தளங்களை உருவாக்குபவர்கள் உழைக்கிறார்கள் என்றால் பரவாயில்லை அவர்கள் அதை செய்யட்டும். ஆனால் தமிழ் தேசியத்திற்க்கு ஒரு சொட்டும் பயனில்லை. இல்லை அவர்கள் தமிழ்தேசியத்திற்காக பாடுபட விரும்புகிறார்கள் எனின் வேறு பலவற்றை செய்யலாம். உ+ம் http://www.yarl.com/forum3/index.php?showtopic=20045

காலக்கணிப்பில் தெரிவித்தபடி "மட்டக்கிளப்பு ராஜதந்திரிகள் பயணம் எதிர் வரும் ஐநா கூட்டத்தை இலக்காகக் கொண்டது" என்ற கூற்றின் படி பார்க்கும் போது தெரிகிறது சிறிலங்கா அரசின் பிரச்சார இயந்திரம் எத்தனை லாவகமாக கையாளப்படுகின்றது என்பது!

மின்னல்

தாகம் தாயக செய்திச் சேவை என்று ஒன்று திறம்பட இயங்குது என்று எல்லா இடமும் பரபரப்பா கதை படுது. நீங்கள் சொல்லுறதும் அது தானே? ஒருக்கா address அய் தரமுடியுமோ?

http://www.thaakam.com/

நீங்கள் சொல்வது இதைத்தான் எண்டு நினைக்கிறன்.

புதிய தளம் எண்டாலும் இருக்கிற தமிழ் தளங்களோடை போட்டிபோடும் அளவிற்கு செய்தியின் தரம் சிறப்பாக உள்ளது.

அரையம்பதி, மட்டுநகர், கொழும்பில் பெரிய நிருபர்கள் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்கள் வைத்திருக்கிறார்கள்.

லப்பெராப் கணினியுடன் செயற்கைக்கோள் இணைய இணைப்பை அவர்கள் வைத்திருப்பதால் செய்தி சேகரிக்கும் இடங்களிலிருந்தே அப்டேற் பண்ணுவதாகவும் சிலர் கதைக்கிறார்கள்.

நல்ல தலைப்பாக ஆரம்பித்து விட்டு, கேலியும் கிண்டலுமாக ஆக்கினால், தலைப்பு ஊர் பூய்ச் சேராது. மக்களுக்கு அரவணைப்பு மூலம் தான் ஊக்குவிப்பைக் கொடுக்கலாம் என்பது வரலாறு தந்த உண்மை.

குறுக்காலபோனவரின் பாணி இதுதான். எதிர்மறையாக கேலிசெய்வது. இது இங்கே பலரை தவறா புரிந்து கொள்ளவைத்து தேவையற்ற பல கருத்துகளுக்கு வழிவகுத்துவிட்டது!

http://www.thaakam.com/

நீங்கள் சொல்வது இதைத்தான் எண்டு நினைக்கிறன்.

புதிய தளம் எண்டாலும் இருக்கிற தமிழ் தளங்களோடை போட்டிபோடும் அளவிற்கு செய்தியின் தரம் சிறப்பாக உள்ளது.

அரையம்பதி, மட்டுநகர், கொழும்பில் பெரிய நிருபர்கள் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்கள் வைத்திருக்கிறார்கள்.

லப்பெராப் கணினியுடன் செயற்கைக்கோள் இணைய இணைப்பை அவர்கள் வைத்திருப்பதால் செய்தி சேகரிக்கும் இடங்களிலிருந்தே அப்டேற் பண்ணுவதாகவும் சிலர் கதைக்கிறார்கள்.

இணையப்புகழ் பெற்ற தாகம் இணையத்தளத்தின் சில புகழ் பெற்ற தலைப்புகள்......

சிறீ லங்காவில் ஆட்கடத்தலுக்கு 103வதாக புதிய அமைச்சு? -கொழும்பு சிவதாசன்

வெளிநாட்டு தூதுவர்களை கொல்ல சிறீ லங்கா சதி! - சிவதாசன்

நேற்று தென்மராட்சி தாக்குதலில் 4 இராணுவத்தினர் பலி! - சிவதாசன் - கொழும்பு

கழுத்தைக் கடித்த கருணா குழுவினர்! - சிவதாசன் - ஆரயம்பதி.

மூளையை நாய் நக்கும் என்பவரின் மூளை சிதறியது! - நீலவாணன்

பிரபல நிருபர் சிவதாசன் கொழும்பிற்கும் ஆரயம்பதிக்கும் மாறி மாறி பறக்க கெலிக்காப்டர் வசதியும் தாகம் இணையத்தளம் செய்து கொடுத்துள்ளது!

:rolleyes:

பல நூறு பல இலட்சம் இணையங்கள் தேவையில்லை தற்போது இருப்பவற்றுல் நல்ல தளங்களைத் ஒன்று சேர்த்து ஒரு கட்டுக் கோப்பிற்குள் கொண்டு வந்து அனைத்து தமிழீழ மக்களின் பார்வைக்கு வைத்தால் சிறந்த பலனை எதிர்பார்கலாம். இணையதளங்கள் அதிகரிக்க அதிகரிக்க ஒரு போட்டி உணர்வு ஏற்பட்டு குறிக்கோளை மழுங்கடிக்கச் செய்யலாம். மாப்பிள்ளையின் கருத்துக்களை செயற்படுத்துவதின் மூலம் சிறந்த பாலாபலன்களை எதிர்பார்களாம் என்பது தாழ்மையான அபிப்பிராயம்.

1. தமிழ் இணையங்களை கண்காணித்து அவர்களிற்கு தேவையான Feedback ஐ வழங்குதல்

2. புதிதாக உருவாகும் இணையங்களை கண்காணித்து அவர்களிற்கு சரியான வழிகாட்டலை வழங்குதல்

3. தமிழ் மக்களிற்கு துரோகத்தனங்கள் செய்யும் இணையங்கள் பற்றி தமிழ் மக்களிற்கு அறிவுறுத்துதல்

4. Rating System ஐ உருவாக்குதல். சிறப்பாகச் சேவையாற்றும் இணையங்களை கண்டுபிடித்து கெளரவப்படுத்தல்.

5. சட்ட ஆலோசனகள் வழங்குதல்இ இணையங்களை நடத்துபவர்கள் அறிந்திருக்க வேண்டிய அடிப்படை சட்ட அறிவை வழங்குதல். உதாரணமாக Copyright, Privacy போன்றவற்றை நமது தமிழ் இணையங்கள் கடைப்பிடிப்பதில்லைஇ இது ஒரு காலத்தில் மிகுந்த ஆபத்துக்களில் இணைய நடாத்துனர்களை மாட்டிவிடக்கூடும்.

ஈழத்திலிருந்து

ஜானா

தமிழ் இணையங்களின் வளர்ச்சி தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆற்றும் பங்கு மிகப்பெரியது. சுயவிளம்பரங்களிற்காக சிலர் இணையங்களை தவறாகப் பயன்படுத்தினாலும், ஆயிரங்கள், பத்தாயிரங்கள், இலட்சங்கள் அளவில் தமிழீழ விடுதலைக்காகக் பாடுபடும் இணையங்கள் உருவாகுவது வரவேற்கத்தக்கதே. ஆனால் பலருக்கு இந்த இணையங்களை பார்க்கும் போது எரிச்சல் வருவதற்கான காரணம் இந்த இணையங்களை ஒருங்கிணைத்து கட்டுப்படுத்தக்கூடிய அல்லது ஆகக்குறைந்தது அறிவுரை கூறக்கூடிய ஒரு தமிழ் நிருவாகக் கட்டமைப்பு என்று ஒன்றும் இல்லை அல்லது உருவாக்கப்படவில்லை. இதனால் ஒவ்வொரு தனிப்பட்ட இணைய நடத்துனர்களும் தங்களுக்கு தெரிந்த அறிவுடன், தங்கள் விருப்பங்களிற்கிணங்க, தங்கள் மனம் போன போக்கில் தமிழ் இணையங்களை நடாத்துகின்றார்கள்.

தினமும் நூற்றக்கணக்காக பெருகிவரும் தமிழ இணையங்களை அங்கத்துவர்களாகக் கொண்ட ஒரு தமிழீழ விடுதலையை தொலைநோக்காகக் கொண்ட தமிழர் நிருவாகக் கட்டமைப்பு ஒன்று ஊடகத்துறை சார்ந்தவர்களால் விரைவில் உருவாக்கப்படுமாயின் அது மிகச் சிறந்த பலாபலன்களை குறுகிய, நீண்ட காலத்தில் தமிழருக்கு தரும். உதாரணமாக இந்த நிருவாகக் கட்டமைப்பு கீழ்வரும் பொறுப்புக்களைச் செய்யலாம்.

1. தமிழ் இணையங்களை கண்காணித்து அவர்களிற்கு தேவையான Feedback ஐ வழங்குதல்

2. புதிதாக உருவாகும் இணையங்களை கண்காணித்து அவர்களிற்கு சரியான வழிகாட்டலை வழங்குதல்

3. தமிழ் மக்களிற்கு துரோகத்தனங்கள் செய்யும் இணையங்கள் பற்றி தமிழ் மக்களிற்கு அறிவுறுத்துதல்

4. Rating System ஐ உருவாக்குதல். சிறப்பாகச் சேவையாற்றும் இணையங்களை கண்டுபிடித்து கெளரவப்படுத்தல்.

5. சட்ட ஆலோசனகள் வழங்குதல், இணையங்களை நடத்துபவர்கள் அறிந்திருக்க வேண்டிய அடிப்படை சட்ட அறிவை வழங்குதல். உதாரணமாக Copyright, Privacy போன்றவற்றை நமது தமிழ் இணையங்கள் கடைப்பிடிப்பதில்லை, இது ஒரு காலத்தில் மிகுந்த ஆபத்துக்களில் இணைய நடாத்துனர்களை மாட்டிவிடக்கூடும்.

6. இவ்வாறு பல......

ஐயா! புலம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு தாயக விடுதலைக்கான வரலாற்றுக் கடமையை செய்யவில்லை என்று உங்களுக்கு யார் சொன்னார்கள்? இங்குள்ள மக்கள் எல்லோரும் பொறுமையின் விளிம்பில் எழுச்சிகொண்டு நிற்கின்றார்கள்.இங்குள்ள இளைய சமூகம் முழுவதும் ஒன்றுபட்டு தாயக விடுதலைக்காக உழைத்துக்கொண்டிருக்கிறது.இங

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர்ந்த நாடுகளில் எம்மவரின் அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்வோராக பின்வருவோரை இனங்காணலாம்.

  • அரசியல்வாதிகள்
  • தமிழர் அமைப்புக்கள்
  • வானொலி
  • தொலைக்காட்சி
  • இணையம்

இவர்கள் அனைவரினதும் தற்போதைய செயற்பாடுகள் பற்றியும் அவற்றை எவ்வாறு மேம்படுத்தலாம் என்ற ஆக்கபூர்வமான விமர்சனங்கள் தேவை. இங்கு ஒன்றைக்குறிப்பிடவேண்டும். காலக் கணிப்பு வில் கூட தற்போதைய அரசியல் செயற்பாடுகள் போதாது என்பதை கூறமுன்னர் இவர்கள் ஏற்கனவே ஆற்றிவரும் பங்களிப்பை நினைவுகூர்ந்து இருந்தார்கள்.

எனவே, இப்போதைய தேவை, தற்போது மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் பற்றிய விமர்சனங்களும் அவை தொடர்பான விவாதங்களுமே. எவ்வளவுக்கு விவாதங்களை இப்படி பப்பிளிக்கில் செய்ய முடியுமோ அவ்வளவுக்கு செய்து பின்னர் தேவைப்படும் போது தனி விவாதங்களை செய்வது தான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் இந்த முறையில் மட்டுமே கனடாவில் உள்ள ஒருவரும் அவுஸ்திரேலியாவிலுள்ள இன்னொருவரும் கருத்தை இலாவகமாக பரிமாற முடியும். மேலும் 24 மணி நேரமும் இங்கு கருத்துக்கள் சீர்செய்யப்படுகின்றன.

மேலும், மேற்குறிப்பிட்ட பல நிறுவனங்களை சார்ந்தோரும் யாழ் களத்தில் அங்கத்தவராக இருக்கிறார்கள் என்பது நாம் காலத்துக்குக் காலம் கண்ட உண்மை. எனவே அவர்களிடமிருந்து ஏதாவது ஒரு வடிவில் ஒரு fபீட்பாக் ஐயும் எதிர்பார்க்கிறோம்.

சொல்லப்போனால்,புலம் பெயர்ந்து வாழுகின்ற எங்கட சனத்தில அரைவாசிப்பேருக்கு சரியான

அரசியல் தெளிவு இல்லை பாருங்கோ.அதைதெளிவு படுத்திறதுக்கு இப்ப இருக்கிற ஊடகங்களே

போதுமானது.அவயளும் தங்கட கடமையை 90 % சரியாத்தான் செய்கினம்.இதில இன்னும் அரசியல் தெளிவில்லாத ஆக்களேண்டா,ஆரம்ப காலங்களில புலம் பெயர்ந்த பெரும்பலான எங்கட சனமும் அவயளின்ட குடும்பங்கழும் தான்(70 %).அவயள எங்கட வழிக்கு கொண்டுவாறது என்பது கானல் நீர்மாதிரித்தான்.இவயள ஊடகங்களால ஒண்டும் செய்யஏலாது.இவர்களுடன் நெருங்கிப்பழகுபவர்கள் மூலமாகத்தான் இத செய்யமுடியும்.மேலும் இப்ப அண்மைக்காலமா எங்கட சனத்தின்ட மனதில பல புதுப்புது கேள்விகள் எழுகிது பாருங்கோ,அதற்கும் இப்படியான ஒரு பிரச்சாரத்த அவர்களின் நண்பர்கள் மூலமாக கொண்டுசெல்லலாம் என்பது எனது கருத்து

புலம் பெயர்ந்த தமிழ் மக்களில் மூன்று வகையினர்

1. என்றும் எப்போதும் வற்றாத தாயகப்பற்றும் பலவிதமாக உதவிகளை எப்போதும் செய்பவர்கள்.

2. []தாயகப்பற்றும் இருக்கும், வெற்றிகளைக்கண்டு

பலவுதவிகளை செய்வர்கள், தோல்விகளை கண்டு மனம் சோர்ந்து வெறுப்பில்

எதிர்ப்பவர்கள்.உதவிகள் செய்யமாட்டார்கள். தடுமாற்றமாக இருப்பார்கள்.

3. எப்போதும் தாயகப்பற்று இருக்காது. இவர்களுக்கு சொல்வது செவிடன் காதில்

சங்கு ஊதுவது போன்றது. சிலர் விலத்தி இருப்பார்கள், சிலர் எதிராக சதி

செய்பவர்கள். தாயக விடுதலை என்றால் கிலோ என்ன விலை என்பார்கள்?

இவர்களுடன் காலத்தை வீணக்க கூடாது. எதிர்க்கவும் கூடாது.எனெனில்

இவர்களும் நம் தமிழ் தாய் பிள்ளைகளே. மன்னிப்போம். காலப்போக்கில்

வெற்றிவறலாருக்கள் தமிழினப்பற்றை உண்டாக்கலாம்.

Edited by KUGGOO

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்ப்பேர் இருக்கினம்.அவர்களுக்கு தாயகம் என்ன .தங்கள் பிள்ளைகளைப்பற்றிக்கூட சிந்திக்க நேரம் இல்லை.ஏன் என்றால் அவ்ாகள் தம் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு வழி சமைக்கினமாம் :rolleyes: எதிர் பாராமல் கிடைக்கும் கட்டாய விடுமுறையில் எந்தச்சனலில் புதுப்படம் போகுது என்ற ஆராச்சி.இந்த லட்ச்சனத்தில் எப்படிப்பட்ட ஊடகததாலும் இந்த வகையினரை திருத்த முடியுமா :icon_idea: என்றாலும் ஊடகங்களின் ஆரோக்கியம் முக்கியமானதுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.