Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில்.வாள் குழுவை கட்டுப்படுத்த STF களத்தில்

Featured Replies

யாழில்.வாள் குழுவை கட்டுப்படுத்த STF களத்தில்

jaffna-stf.jpg

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள் வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கும், வாள் வெட்டுச் சம்பவங்களை கட்டுப்படுத்தவும் விசேட அதிரடிப் படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், ரோந்து நடவடிக்கை தொடர்பாக பொது மக்கள்அச்சமடைய வேண்டாமென்றும் விசேட  காவல்துறை அதிரடிப் படையின் உயர் அதிகாரி இன்று தெரிவித்தார்.

இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

அண்மைக்காலமாக யாழ் மாவட்டத்தில் வாள் வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. அவற்றினை க்கு கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட அதிரடிப் படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதுடன், வாள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடுபவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

குறிப்பிட்ட சிலரே இவ்வாறான வாள் வெட்டுச் சம்பவங்களை செய்கின்றார்கள். இவ்வாறானவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க பொது மக்களின் ஒத்துழைப்பு அவசிமென்றும், தங்களின் பிரதேசங்களில் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தெரிந்தால், யாழ்.பண்ணையில் உள்ள விசேட அதிரடிப் படை முகாமிற்கு அறியத்தருமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேவேளை, இவ்வாறான தகவல்களை அறிவிப்பதற்கு அவசர அழைப்பு இலக்கம் ஒன்றினை மிக விரைவில் அமைக்கவுள்ளதாகவும், அந்த இலக்கத்தின் மூலம் அறிவிக்க முடியுமென்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/50709

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவின் புலனாய்வுத்துறை நினைத்தால் இவர்கள் நாற்பத்தியெட்டு மணிநேரத்தில் கட்டுப்படுத்தலாம். எல்லாரையும் மண்டையிலபோட்டல் சரிவரும். 

சோசலிசம் இல்லையேல் மரணம்

பிடல்  கஸ்ரோ.

இதில் சோசலிசம் என்பது எல்லோருடனும் ஒத்துவாழ்வதென்பது,
மரணம், சரிவராட்டில் போட்டுத்தள்ளுவது.

இதை யார் செய்தாலும் வரவேற்கத்தக்கதே. விடுதலைப்புலிகள்தான் செய்யவேண்டுமென்பதில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Elugnajiru said:

சிறீலங்காவின் புலனாய்வுத்துறை நினைத்தால் இவர்கள் நாற்பத்தியெட்டு மணிநேரத்தில் கட்டுப்படுத்தலாம். எல்லாரையும் மண்டையிலபோட்டல் சரிவரும். 

சோசலிசம் இல்லையேல் மரணம்

பிடல்  கஸ்ரோ.

இதில் சோசலிசம் என்பது எல்லோருடனும் ஒத்துவாழ்வதென்பது,
மரணம், சரிவராட்டில் போட்டுத்தள்ளுவது.

இதை யார் செய்தாலும் வரவேற்கத்தக்கதே. விடுதலைப்புலிகள்தான் செய்யவேண்டுமென்பதில்லை.

 

இலங்கை புலனாய்வுதுறை என்னமோ ரொம்ப யோக்கியர்கள்போல மண்டையில் போடுறதுக்கு ஐடியா கொடுக்கிறீங்க? தனக்கு வேண்டாதவர்கள் எல்லோ

ரையும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சா போட்டு தள்ளுவான், அப்போது அதனை கண்டிச்சு முதல் ஆளா கருத்து சொல்லவும் நீங்களே வரகூடும்!

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, valavan said:

இலங்கை புலனாய்வுதுறை என்னமோ ரொம்ப யோக்கியர்கள்போல மண்டையில் போடுறதுக்கு ஐடியா கொடுக்கிறீங்க? தனக்கு வேண்டாதவர்கள் எல்லோ

ரையும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சா போட்டு தள்ளுவான், அப்போது அதனை கண்டிச்சு முதல் ஆளா கருத்து சொல்லவும் நீங்களே வரகூடும்!

இலங்கையில் தமிழர் தாயகத்தில் நடக்கின்ற வன்முறைக்கெல்லாம் சிறீலங்காவே காரணம் என ஒற்றையாய் கூறமுடியாது. 

கொஞ்சமாவது சிந்தித்துப்பாருங்கள், எங்களுக்கு என பிறிதான வரலாறு இருக்கின்றது என நாங்கள்தான் கூறிக்கொள்கிறோம் அது உண்மையும்கூட இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு ஒரு தனி அடையாளம் இருக்கெனவும் கூறுகிறோம் உலகின்மூத்தமொழிக்குச் சொந்தக்காரர்கள் எனவும் கூறுகிறோம் தவிர எமது தேசம் கடந்த ஆனால் எம்முடன் தொடர்புபட்ட தமிழ்நாட்டு மக்களது அரசியலைக் கண்டமேனிக்கு விமர்சனம் செய்கின்றோம் தமிழுணர்வு இன உணர்வு தமிழ் எழுர்ச்சி இப்படியான சொற்பதங்களைப்பாவித்து அவர்களை ஏழனம் செய்கின்றோம் அதைவிடக்கொடுமை இலங்கையின் வடக்கில் வாழும் நாம்தான் படிப்பறிவில் சிறந்தவர்கள் எனக்கூறுகிறோம்.

இப்படியான ஒரு சமூகக்கூட்டம் தனது வாழ்வியலை எப்படி வடிவமைத்திருக்கவேண்டும். தங்கள் உரிமைக்காக பல்லாயிரக்கணக்கான மக்களையும் போராளிகளையும் இழந்து எதுவித அரசியல் எதிர்வுகூறலும் இல்லாது வாழும் சமூகத்தை இனக்குழுமத்தை யார் வழிநடத்திச்செல்லவேண்டுமோ அவர்களே தமது சமூகம்மீது வன்முறையைப்பிரயோகிக்கையில் அந்நியன் எம்மைச் சுடாமல் இனச்சுத்திகருப்பிச்செய்யாமல் இனப்பரம்பலை இல்லாதொழிக்காமல் எமது வழங்களை அழிக்க முனையாமல் இருப்பான் எனக் கூறுகிறீர்களா.

போய் யாழ்ப்ணக்குடாநாட்டில் பாருங்கள் சந்திக்குச் சந்தி நிற்கும் சிறீலங்காவின் போக்குவரத்துக்காவற்றுரைக்கும் முன் மண்டியிட்டு எத்தனை இளைஞர்கள் நிற்கிறார்கள் என அவர்களது கைகளில் சாரதி அனுமதிப்பத்த்ரம் காப்புறுதிப்பத்திரம், வரிகட்டிய துண்டு இவைகளுகுப்பதிலாக செங்களக்காவல்துறைக்குக் கொடுப்பதற்கான மாமூல்பணம்தான் இருக்கின்றது என அறிவீர்கள். 

நள்ளிரவில் தலைக்கவசம் இல்லாது வாகன அனுமதிப்பத்திரம் இல்லாது ஏனைய எதுவித விடையங்களும் இல்லாது இதுவும் கொக்குவிலை அண்டிய பகுதியில் மதுபோதையில் மிகவும் வேகமாகச் செல்லும் ஒரு மோட்டர்சைக்கிளை மறித்தால் நிற்காது சென்று சூடுவாங்கிச்செத்தது யார் பிழை போலீசார் சுட்டதை நியாயப்படுத்தவில்லை ஆனால் தவறு எங்களிடமும் இருக்கின்றது.

மேற்கூறிய விடையங்கள் ஒரு உதாரணமே இப்படியானவை அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கின்றது. முதலில் நாம் திருந்திக்கொள்வோம்.

பொல்லாப்பிள்ளையை விட இல்லாப்பிள்ளை மேல் என என் அம்ம அடிக்கடி சொல்லுவார் எனது சமூகம் சீர்கெட்டுப்போவதைவிட இல்லாதிழிந்துபோவதே மேல் என நான் கூறுகிறேன்.

யாழ் குடாநாட்டின் படித்த புடுங்கிகளால் முள்ளிவாய்க்காலுக்குப் பின்பு ஒரு காத்திரமான அரசியல் இயக்கததைக் கட்டியமைக்கமுடிந்ததா. புடுங்கிகளால்.
கேவலம் வாகன உரிமையாளர்கள் அனைவரும் தேவையான அனுமதிப்பத்திரத்துடனும் சாலை விதிமுறைகளுடனும் போக்குவரத்தைப் பராமரித்திருந்தால் சிங்களப்போலீசில் அரைவாசிப்பேர் சொல்லாமல்கொள்ளாமல் சொந்த உருக்கு ஒடிப்போயிருப்பர் குடாநாட்டைவிட தண்ணியில்லாக்காடு மேல் என.

யாழ்ப்பாணம் கச்சேரியில் அமைந்திருக்கும் வாகனப்போக்குவரத்துப் பிரிவின் முன்வாசலில் காலையில் போய் அவதானியுங்கள் யாழ் குடாநாட்டின் பிரபலமான சாரதிப்பயிற்சிமையத்தின் வேலையாள் சிங்கள ப்ரிசோதனை அதிகாரிக்குச் சோத்துக்கோப்பை ஏந்திக்கொண்டுபோவார்.  இத்தனைக்கும் எழுத்துச்சோதனை நடாத்தும் கேள்விப்பேப்பர் கிட்டத்தட்ட பத்துவருடங்களாக எதுவித மாற்றங்களுக்கும் உள்ளாக்கபடாமல் இருக்கு தவிர அனைத்து பயிற்சி மையங்களிலும் அதன் பிரதியை வைத்திருக்கிறர்கள் 

முடியுமெண்டால் படிப்பம் இல்லையெண்டால் ரவுடியாய் திரிவம், அப்பனோ சித்தப்பனோ அல்லது தலையில் வழுக்கை விழுந்து இருபது வயது மூத்த வெளிநாட்டில் கோப்பை கழுவும் மாப்பிளைக்கு செக்ஸ் அடிமையாகவும் வீட்டு வேலைக்கரியாகவும் வெளிநாடுபோன அக்காவோ தங்கச்சியோ ஏயன்சிக்காரனுக்குக் கோடி கோடியக் குடுத்து வெளிநாட்டுக்கு எடுத்துவிட்டிருவா எனம் நம்பிக்கையில் மீதியாக ஊரில் வாழும் காலத்தில் வன்முறைபூமியாக்குபவர்கள் இருந்தென்ன செத்தென்ன.

நாங்கள் எல்லோரு ஆறாம் அறிவுக்கு மட்டுமல்ல ஏழாம் அறிவுக்கும் சொந்தக்காரர்கள் எனப் பினாத்தல் வேற.
 

18 minutes ago, Elugnajiru said:

இலங்கையில் தமிழர் தாயகத்தில் நடக்கின்ற வன்முறைக்கெல்லாம் சிறீலங்காவே காரணம் என ஒற்றையாய் கூறமுடியாது. 

கட்டுப்பாடற்ற முறையில் நடக்கிற குழுவன்முறைக்கெல்லாம் சொறிலங்கா சிங்கள அரசு தான் 100% காரணம்.

காரணம், தமிழர் பிரதேசத்தில் குழுவன்முறைகளையும், சட்டவிரோத மண்கடத்தல் - மரம் வெட்டுதல் - கசிப்பு - போதைப்பொருள் கடத்தல்  போன்ற அனைத்து சமூகவிரோத செயல்களையும் பின்னிருந்து இயக்குவது சொறிலங்காவின் சிங்கள அரச பாதுகாப்புத்துறை தான்.  

குழுவன்முறைகளை கட்டுப்படுத்த வேண்டியவர்களே அவற்றுக்கு துணைசெய்வதால் இவை அடங்கும் என எதிர்பார்ப்பது மூடத்தனம்.

மேலும், சமூகம் தான் இவற்றுக்கு பொறுப்பு என்றால் பாதுகாப்பு, நீதித்துறை என்ற அமைப்புக்கள் ஒரு நாட்டுக்கு தேவையில்லை.

எனவே, கட்டுப்பாடற்ற முறையில் நடக்கிற குழுவன்முறைக்கெல்லாம் சொறிலங்கா சிங்கள அரசு தான் 100% காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

பின்னாலிருந்து இயக்குவது சிறீலங்காவாக இருக்கலாம் அவன் செய்யச்சொல்லிறான் என்றால் உவர்களுக்கு மூளை எங்க போச்சு. நீங்கள்தானே படிச்சனீங்கள் பண்பாளர்கள் வரலாற்றுக்காலங்களிலிருந்தே பேயாகப் புறப்பட்ட மூத்தகுடி. தமிழ் இளையோர் செய்யாது தமிழ்பேசக்கூடிய பேய்களா செய்யுதுகள். அடுப்படியில சொதி கொதிக்கவில்லயெனிலும் சொறீலங்கா என ஊழையிடுவியள்போல. 

அப்பனாத்தை பொருக்கிகளைப் பெத்துவிட்டு அலையவிட்டதை அனுபவிக்கிறம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.