Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துபாயில் இப்போது வேலை கிடைக்குமா, கிடைக்காதா?

Featured Replies

துபாயில் இப்போது வேலை கிடைக்குமா, கிடைக்காதா?

 

தற்போது துபாய் வளர்ச்சியடைந்துவிட்டது. இப்போது அங்கு தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகள் எப்படி இருக்கிறது? தொழிலாளர்களின் நிலை என்ன?

துபாயில் இப்போது வேலை கிடைக்குமா, கிடைக்காதா?படத்தின் காப்புரிமைA. VINE/DAILY EXPRESS/GETTY IMAGES

அண்மையில் கத்தார் மற்றும் செளதி அரேபியாவுக்கான உறவுகளில் ஏற்பட்ட சிக்கல்களால் பல இந்திய தொழிலாளர்கள் வேலையின்மை என்ற சிக்கலை எதிர்கொண்டனர்.

ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்டில் மட்டும் தொழிலாளர்களின் வேலைகளுக்கு குந்தகம் ஏற்படவில்லை. ஒரு காலத்தில் 'துபாய்க்கு போகிறேன்' என்று சொன்னால், அங்கு வேலைக்கு போகிறேன் என்பதே பொதுவான பொருள்.

தற்போது துபாய் வளர்ச்சியடைந்துவிட்டது. இப்போதும் அங்கு தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகள் எப்படி இருக்கிறது? தொழிலாளர்களின் நிலை என்ன?

துபாய்

இதைப் பற்றி நேரடியாக கள ஆய்வு மேற்கொள்வதற்காக பிபிசி நிருபர் ஜுபைர் அஹமத் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொண்டார். அவரின் பார்வையில் அந்த நாட்டில் வேலைவாய்ப்பு நிலைமை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்வோம்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள் கூட்டாக வசிக்கும் கட்டடங்கள் தொழிலாளர் முகாம் என்று அழைக்கப்படுகிறது.

துபாயில் இருக்கும் ஒரு தொழிலாளர் முகாமிற்கு சென்றேன். அது ஒரு குடிசைப்பகுதியாக இருக்கும் என்ற எண்ணத்தில்தான் சென்றேன். ஆனால், வெளியில் இருந்து பார்க்கும்போது, இந்தியாவில் நடுத்தர வர்க்க மக்கள் வசிக்கும் குடியிருப்பு கட்டடங்களைப்போலவே அந்த முகாம் இருக்கிறது.

துபாயில் வேலை Image captionதுபாயில் தொழிலாளர்களின் முகாம்

சுத்தமான அறைகள், சமையலறை, கழிவறைகள்

முகாமிற்குள் சென்ற நான் அங்கிருந்த அறைகளையும், சமையலறையையும் பார்த்து வியப்படைந்தேன். காரணம் அவை நேர்த்தியாகவும் சுத்தமாகவும் பராமரிக்கப்பட்டிருந்தது. ஏனெனில் கத்தாரில் தொழிலாளர் முகாம்கள் மிகவும் மோசமாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

இந்த நான்கு மாடி கட்டடத்தில் 304 அறைகள் உள்ளன. ஓர் அறையில் மூன்று அல்லது நான்கு தொழிலாளர்கள் தங்கியிருக்கின்றனர்.

ரயில்களில் காணப்படும் படுக்கை வசதியைப் (பெர்த்) போலவே, அவர்களது படுக்கைகளும் அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளன.

துபாயில் வேலை Image captionதொழிலாளர் முகாமில் இருக்கும் ஒரு அறையில் மூன்று பேர் தங்கலாம்

தொழிலாளர் முகாமில் இருக்கும் அறைகளைப் பார்த்தால் மாணவர் விடுதியில் இருக்கும் அறைகளைப் போலவே காணப்படுகின்றன. அங்குள்ள சமையலறை, கழிவறை போன்றவை மிகவும் சுத்தமாக காணப்படுகிறது.

அங்கிருக்கும் சில தொழிலாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் இருவர் பிஹார் மாநிலம் சீவான் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

இருவரும் கடன் வாங்கி, ஏஜெண்டுகளுக்கு பணம் கொடுத்து வேலை வாங்கியவர்கள். அதில் ஒருவர் 60 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். மாதம் 10 ஆயிரமாக ஆறு மாதங்களில் கடனை அடைத்துவிட்டதாக அவர் கூறினார்.

துபாய் Image captionஉலகில் இருக்கும் கிரேன்களில் 30 சதவிகிதம் துபாயில் இருக்கின்றன

ஊதியம்- தொழிலாளருக்கு 36 ஆயிரம் ரூபாய், வாகன ஓட்டுனருக்கு 54 ஆயிரம் ரூபாய்

சீவான் மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு தொழிலாளி சோனு யாதவுக்கு துபாயில் வசிக்க பிடிக்கவில்லை, ஆனால் வேறு வழியில்லாமல் இங்கு பணிபுரிகிறார்.

இருந்தாலும், பத்து பேர் வசதியாக வாழ ஒருவர் கஷ்டப்பட்டால் பரவாயில்லை என்று சொல்கிறார் அவர்.

குடும்பத்திற்கு மாதந்தோறும் பணம் அனுப்புவது மகிழ்ச்சி அளிப்பதாக இருவரும் சொல்கின்றனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் இதுபோன்ற பல முகாம்களில் லட்சக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் வசிக்கின்றனர்.

வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ள புள்ளி விவரங்களின்படி இந்தியாவை சேர்ந்த 28 லட்சம் பேர் இங்கு வசிக்கின்றனர். அதில் தொழிலாளர்களின் எண்ணிக்கை மட்டும் 20 லட்சம். அதில் பத்து லட்சம் பேர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் தகவல்.

கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மாதம் 2000 திர்ஹம் அதாவது இந்திய மதிப்பில் 36 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது.

அதில் 15 முதல் 20 ஆயிரம் ரூபாயை வீட்டிற்கு அனுப்புகின்றனர். வாகன ஓட்டுனர்களின் சம்பளம் மூன்றாயிரம் திர்ஹம் அதாவது இந்திய மதிப்பில் 54 ஆயிரம் ரூபாய்.

துபாய் Image captionதுபாயில் எங்கு பார்த்தாலும் வானளாவிய கட்டடங்களை பார்க்கலாம்

நடுத்தர வர்க்க மக்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு

ஆனால் தற்போது நடுத்தர வர்க்க மக்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

கட்டுமானப் பணியில் இந்தியத் தொழிலாளர்கள் மட்டுமல்ல, பொறியாளர்களும் பணிபுரிகின்றனர்.

மாதம் பத்தாயிரம் திர்ஹம் (180,000 ரூபாய்) ஊதியம் கிடைக்கும் வேலை என்பது நடுத்தர வர்க்க மக்களிடையே சிறந்த வேலையாக பார்க்கப்படுகிறது.

ஆனால் இங்கு வீட்டு வாடகை மிகவும் அதிகம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். சம்பளத்தில் பாதிக்கும் மேற்பட்ட தொகையை வீட்டு வாடகையாகவே செலவளிக்க நேரலாம்.

வீடியோ பிளாகிங் (video blogging) மூலம் துபாயில் இருக்கும் வேலைவாய்ப்புகள் பற்றி தகவல் அளிக்கும் அஜ்ஹர் நவீத் ஆவானின் கருத்துப்படி, உலகில் இருக்கும் மொத்த கிரேன்களில் 30 சதவிகிதம் துபாயில் உள்ளது.

அதாவது, இங்கு கட்டுமான பணியாளர்களின் தேவை மட்டுமின்றி, பொறியாளர்கள் அதிலும் குறிப்பாக சிவில் பொறியாளர்களின் தேவையும் அதிகம்.

துபாயில் வேலை Image captionவேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் அளிக்கும் நவீத், ஆவான் மற்றும் ஃபாதிமா

'பயோடேடா' தயாரிப்பதில் கவனம் தேவை

நவீத் கூறுகிறார், "என்னிடம் வருபவர்களில் பெரும்பாலானோர் சிவில் எஞ்சினியர்கள்தான். அதிலும் இந்தியாவிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். கட்டுமான நிறுவனங்களுக்கு சென்றால் உயர்நிலையில் இருந்து கீழ்நிலைவரை பல்வேறு மட்டங்களிலும் இந்தியர்கள் பணிபுரிவதைக் காணலாம்.

துபாயில் வேலை தேடும் இந்தியர்களுக்கு நவீத் கூறும் ஆலோசனை இது. 'பயோடேடா தயாரிக்கும்போது கவனமாக இருங்கள். சுயவிவர குறிப்புகளை உரிய முறையில் தயாரிப்பதில் பலர் கவனம் செலுத்துவதில்லை, அதனால்தான் பலருக்கு வேலை கிடைப்பதில்லை'.

பெண்களுக்கு அதிக பாதுகாப்பு

அவருடைய சக பணியாளர் ஃபாத்திமாவின் கருத்துப்படி, இந்தியாவில் இருந்து வேலைக்கு வரும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகம். பெண்களுக்கு உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகமும் ஒன்று'.

பெண்கள் தனியாகக்கூட வாழமுடியும், அவ்வளவு பாதுகாப்பான ஊர் துபாய் என்று உறுதியளிக்கிறார் ஃபாத்திமா.

ஐக்கிய அரபு அமீரகம் நல்ல வளர்ச்சி அடைந்துவிட்டாலும், இன்றும் அங்கு பல கட்டுமானப் பணிகள் நடைபெறுவதைக் காணலாம்.

துபாயில் கட்டுமானம் நடைபெறும் ஒரு இடத்திற்கு சென்றேன். அங்கு டஜனுக்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளாக இங்கு சிறப்பான வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும், இப்போதும் வளர்ச்சியின் பாதையில் பீடுநடை போடுகிறது ஐக்கிய அரபு அமீரகம்.

துபாயில் வேலை Image captionஉலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகமும் ஒன்று என்று சொல்லும் ஃபாதிமா

இந்தியர்களுக்கான வேலைவாய்ப்பு

துபாயில் சிடி டவர்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவரான தெளசீஃப் கான், இந்தியர்களுக்கு இங்கு வேலைவாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறுகிறார், "இந்தியாவில் வேலைவாய்ப்புகள் இருந்தாலும், ஜி.எஸ்.டி, பணவிலக்க நடவடிக்கை போன்றவற்றால் வேலைவாய்ப்புகள் குறைந்துவிட்டன. ஆனால் இங்கு வேலைக்கு பாதுகாப்பு இருக்கிறது. ஒருவர் வேலை செய்யும் நிலையில் இருக்கும்வரை வேலைக்கு பாதுகாப்பு உள்ளது, சம்பளமும் உறுதியாக கிடைக்கும்."

துபாயில் ஏற்கனவே வளர்ச்சியடைந்த இடங்களைத் தவிர, வேறு பல புதிய இடங்களும் மேம்படுத்தப்படுகின்றன. அங்கு கட்டுமானப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. எனவே இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்தியர்களுக்கு இங்கு வேலைவாய்ப்பு உறுதி என்பதை அறுதியிட்டுச் சொல்லலாம்.

http://www.bbc.com/tamil/global-42224800

  • கருத்துக்கள உறவுகள்

கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு ஐக்கிய அரபு அமீரகமோ, வேறு எங்காவது வேலை கிடைத்துவிட்டால் போதும் அவர் தனது குடும்பத்தவர்கள்,  நண்பர்கள், தெரிந்தவர்கள் என தனது இனத்தில் உள்ளவர்களை அங்கு எப்படியோ அழைத்து வேலையும் பெற்றுக் கொடுத்துவிடுவார்கள் என்பதை அறிந்துள்ளேன்.
 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Paanch said:

கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு ஐக்கிய அரபு அமீரகமோ, வேறு எங்காவது வேலை கிடைத்துவிட்டால் போதும் அவர் தனது குடும்பத்தவர்கள்,  நண்பர்கள், தெரிந்தவர்கள் என தனது இனத்தில் உள்ளவர்களை அங்கு எப்படியோ அழைத்து வேலையும் பெற்றுக் கொடுத்துவிடுவார்கள் என்பதை அறிந்துள்ளேன்.
 

மத்திய கிழக்கை ஆழ்வது மலையாளிகள் தான் பாஞ்ச் துபாய் அனுபவம் இப்பவும் ராஜ வன்னியர் இருக்குறார் அதேபோல  இலங்கை  வங்க தேசம் , நேபாளம், பிலிபைன்ஸ் ( ஆந்திரா, கன்னடம் , இன்னும் பல் மாநிலங்களத்தாரின் ) சம்பள சுரண்டல்களையும் வேலைகளையும் நேரத்துக்கு அதிகமாக வாங்குவது இவர்கள் தான்  அதாவது அரபிக்கு தெரியாது இவர்களிடம் கம்பனிகளை கொடுத்து    பராமரிக்கிறார்கள் அவர்கள் பல சோலிகள் பார்த்து திரிவதால். துபாய் ஓர்  குட்டி கேரளா போலவும் குவைத்தும் அடங்கும்  என நினைக்கிறன் மற்ற நாடுகளிலும் அதிகம் உள்ளனர் இவர்களின் படிட்ட்பு வீதத்தை பாராட்டலாம் 

தற்போது கேரளாவை பார்த்தால் உல்லாச கைத்தொழ்லில் துறையில் பாரிய வளர்ச்சிய்டைந்து வருகிறது அம்மாநில அரசும் கூட நன்றாக செயற்படுது 

Edited by தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 5.12.2017 at 6:13 AM, நவீனன் said:

கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மாதம் 2000 திர்ஹம் அதாவது இந்திய மதிப்பில் 36 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது.

இதே தொழிலை இந்தியாவில் செய்தால் எவ்வளவு சம்பளம் கிடைக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்

'மல்லூஸ்'களிடம் மிக மிக அவதானமாக பழகவேண்டும்.. உங்களுக்கு தெரியாமலேயே நீங்கள் அசரும் நேரம் பார்த்து காலைவாரி அந்த இடத்தில் இன்னொரு மல்லுவை கொண்டுவர தயாராக அவர்களின் பயோடேட்டா இருக்கும்..ஒவ்வொரு மல்லுவின் மேசையினுள்ளே அவர்களின் உறவினர், நண்பரகளின் பயோடேட்டா நிறையவே தயாராக வைத்திருப்பார்கள்..

அவர்களின் நடுவே வேலை செய்வதென்றால் உங்களின் தொழிற்திறன், மற்றும் தகுதி அவர்களை விட நிச்சயம் அதிகமாக இருக்க வேண்டும்.. அவர்களின் 'ஆயில்' அப்படி..!

மொத்தத்தில் நாங்கள் அவர்களை அழைப்பது "காக்கா கூட்டம்". அல்லது சுருக்கமாக 'யு.கே' (UK - United Kerala)

திருமண சந்தையில் தமிழ்நாட்டில் மத்தியகிழக்கு நாடுகளில் பையன் வேலை செய்கிறார் என்றால் யாரும் பெண் கொடுக்க தயங்குவார்கள்:..

ஆனால் கேரளாவில் நிலைமை தலைகீழ்.. அவர்களுக்கு பையன் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்கிரார் என்றால் அவருக்கு கிராக்கி மிக அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ராசவன்னியன் said:

அவர்களின் நடுவே வேலை செய்வதென்றால் உங்களின் தொழிற்திறன், மற்றும் தகுதி அவர்களை விட நிச்சயம் அதிகமாக இருக்க வேண்டும்.. அவர்களின் 'ஆயில்' அப்படி..!

கம்யூனிச சித்தாந்தங்களில், கேரள மாநிலமக்களும், அரசும்  ஊறிவளர்ந்தது. அதனால் செல்வந்தர், உயர்குடி என்றில்லாது பாமர மக்களும் கல்வி அறிவைப்பெறும் வாய்ப்பு அங்கு உருவானது. அந்த வாய்ப்பு ஏனைய இந்திய மாநிலங்களை விடவும் அவர்கள் திறனை அதிகரிக்க உதவியுள்ளது.
 

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Paanch said:

கம்யூனிச சித்தாந்தங்களில், கேரள மாநிலமக்களும், அரசும்  ஊறிவளர்ந்தது. அதனால் செல்வந்தர், உயர்குடி என்றில்லாது பாமர மக்களும் கல்வி அறிவைப்பெறும் வாய்ப்பு அங்கு உருவானது. அந்த வாய்ப்பு ஏனைய இந்திய மாநிலங்களை விடவும் அவர்கள் திறனை அதிகரிக்க உதவியுள்ளது.

பாமர மக்களுக்கும் கல்வியறிவு வாய்ப்பு கிடைக்கிறது என்பது உண்மைதான்.. ஆனால் அதைவிட அவர்கள் தங்கள் 'இலக்கை'அடைய சுய கெளரவம், தன்மானத்தை இழக்க தயங்குவதில்லை.

'சொம்பு' என கொச்சையாக சொல்லலாம்..! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.