Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மண மாக்கட்

Featured Replies

"திருமணத்திற்கு" வரைவிலக்கணம் கூறும்போது "தனித்து வாழக் கூடிய தன்மை கொண்ட இருவர் சேர்ந்து வாழ்வது" என்று சொல்வார்கள். ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் மேற்கூறிய விடயம் எத்தனை பேருக்குப் பொருத்தமாக இருக்கும் என்று தெரியவில்லை. எத்தனைபேர் எவ்வளவோ சிக்கல்கள் இருந்தும் இது எனது குடும்பம் என்று வாழ்ந்து வருகிறார்கள். அதைவிட எத்தனைபேர் உள, உடல் ரீதியாக தொடர்ந்து சித்திரவதைக்கு உள்ளாக்கப் பட்டும், தொடர்ந்து குடும்பமாக சந்தோசமாக இருப்பதுபோல் காட்டிக் கொள்கிறார்கள். இப்போ சொல்லப்பட்ட விடயம் அனைத்தும் இரு பாலாருக்கும் பொதுவானதே.

என்னடா இவன் குடும்பத்தைக் குலைக்கிறதற்கு வழி கோலுறான் என்று சிலர் இல்லை பலர் நினைப்பீர்கள். எனது நோக்கம் அதுவல்ல அதைவிட தமிழ்க் குடும்பத்தினைக் குலைப்பது என்பது எளிதில் இயலாத காரியம் (?) . ஆனால் அதுவெல்லாம் இப்போ அக்கறைப் படத்தேவை இல்லாத விடயம்.

அதைவிட மேல் எழுதியவற்றிற்கும் இனி வரப் போவதற்கும் சம்பந்தமே இல்லை. "பிறகேன் எழுதுகிறாய்'' என்று கேட்பீர்கள். வேறொன்றும் இல்லை "எங்கள்" திருமணம் குறித்து மிகவும் குளம்பிப்போய் உள்ளதால் உங்களையும் ஒரு "குளப்பு" குளப்பி விடுவோமே என்பதே என் நோக்கம். குளப்பம் என்னவெனில் எங்கள் திருமணங்கள் "மலிவானதாகப்" போய்க்கொண்டு இருக்கிறதா என்பதுதான்.

திருமணம் என்பது இரண்டு முறைகளின் ஊடாகத்தான் நடைபெறுகிறது. முதலாவது காதல் இரண்டாவது காதல் அல்லாதது (டேய். . .டேய். . . ) காதல்த் திருமணங்கள் அவ்வளவு சிக்கல்களினை ஏற்படுத்துவதில்லை. (ஒன்று இரண்டினைத் தவிர) காதல் அல்லாத திருமணங்கள் இருக்கிறதல்லவா அதில் தான் பெரும் சிக்கல் இருக்கிறது. அதாவது மாப்பிள்ளையினைத் தெரிவு செய்யும் முறை அல்லது பொம்பிளையை தெரிவு செய்யும் முறை. இதில் அனேகமாக பெற்றோரினது தலையீடு மட்டுமே காணப்படும் ஆனால் பிள்ளைக்கு புகைப்படம் காண்பிக்கப் படும் வாய்ப்பும் உண்டு.

மாப்பிள்ளை வெளிநாடா, உள்ளுரா, என்ன வேலை செய்கிறார் என்பதுதான் முதற் கட்டக் கேள்விகளாக இருக்கும். பின் பெற்றோர் யார்? என்ன சாதி? என்ன செய்யினம்? இப்படிக் கேள்விகள் வரும்.

ஆக குறிப்பிட்ட வயது வர ஒன்றைப் பிடித்துக் கட்டிக் கொடுத்து அவர்கள் தார்மீகக் கடமைகளை முடித்து விடவேண்டும். என்பதில் தான் அக்கறை உண்டு அவர்களுக்கு. தனிப்பட்ட அந்த இருவர் தொடர்பான அக்கறை இன்றி, சரி பேசினோம், கட்டிக் கொடுத்தோம் என்ற போக்கில் இப்போ பல திருமணங்கள் நடந்தேறுகின்றன.

எனக்குத் தெரிய திருமண நாள்வரை மாப்பிள்ளையின் முகம் தெரியாது இருந்த ஒரு பெண்ணும் இருக்கிறாள். (இப்படியானவர்கள் மிக அரிதுதான்) ஏன் என்று திருமணப் பேச்சு வார்த்தைக் காலத்திலேயே பெண்ணின் தந்தையிடம் கேட்டேன். ( பெண் நாட்டில் இருந்தவேளை) அவள் "நீங்கள் பாருங்கோ அப்பா! நான் இல்லை எண்டோ சொல்லப் போறன்'' என்று சொன்னதாகச் சொல்லி மகளைக் குறித்துப் பெருமைப்பட்டார். நான் கவலைப்பட்டேன்.

இன்று எத்தனைபேர் திருமணம் குறித்து "அக்கறையாக'' இருக்கிறார்கள். போன வாரம் ஒருவர் என்னிடம் இப்படிச் சொன்னார். "இஞ்ச! ஊரில ஒரு பிள்ளை இருக்கிது எக்கவுன்ஸ் டிபாற்மென்ட் ஒண்டில வேலை செய்யுது. ஆரும் கேட்டாச் சொல்லும், இங்க வந்தாலும் வேலை செய்யிறதுக்குப் பிரச்சனை இருக்காது" என்று.

இதை அவர் சொன்னபோது நான் ஏதோ கார் ஒன்று விற்பனைக்கு வந்துவிட்டது போலத்தான் உணர்ந்தேன். அதனால் "எப்பயாவது Offerல வரேக்க சொல்லுங்கோ அப்ப பாக்கிறன்'' என்று சிரித்து விட்டு வந்தேன் (அந்தப் பெண் அவருக்கு மூன்றாவது நபராக இருந்தபடியால் நான் அப்படிப் பேசியது கோபத்தினை ஏற்படுத்தவில்லை). அவர் எனக்குப் பின்னால் வந்தவரிடம் இது பற்றிப்பேசிக் கொண்டு இருந்தார். அவர் இப்படி வருவோர் போவோரிடம் எல்லாம் கேட்டுக் கொண்டிருப்பது சரியா, தவறா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஏதோ விதத்தில் ஒரு சங்கடத்தினை எனக்கு அது ஏற்படுத்தியது.

பெண்ணோ ஆணோ ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட உணர்வுகள் இருக்கும் அல்லவா அந்த உணர்வுகள் ஒன்று சேர இருக்கும் இருவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் ஒத்துப்போக வேண்டும் அல்லவா! இதை எல்லாம் குறித்து அக்கறைப் படாமல், வெறுமனே லண்டன் என்று திருமணத்திற்காக ஒரு பெண் அல்லது ஆண் இங்கு வருகிறார் ஆயின், அவர் காதல் யார் மீது? எனக்கேதோ லண்டன் மீது என்றே படுகிறது.

வாழ்க்கை வியாபாரம் ஆக்கப்பட்டு விட்டதா?

மனித உணர்வுகளுக்கு இருந்த மரியாதை மரணித்து விட்டதா?

இல்லை இதுதான் நடைமுறை வாழ்க்கையா?

இது எங்களுக்கு மட்டும்தானா?

இது எங்கள் கலாசாரம் சம்பந்தப்பட்டதா?

இதற்கெல்லாம் பதில் தேடி அலைந்து கொண்டு இருக்கிறேன். அதுவரைக்கும் நீங்களும் நான் இவ்வளவு நேரமும் கூறிய அனைத்துப் பிரச்சனைகள் குறித்து கொஞ்சம் யோசிங்க! முடிந்தால் எனக்கும் ஏதாவது உதவி செய்யுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் பற்றி நீங்கள் தாயகத்தைப்பற்றி கேட்கிறீங்களா?

அல்லது வெளிநாடுகளில் வாழும் மக்களைப்பற்றி கேட்கிறீங்களா?

வெளிநாடுகளில் கூடுதலாக காதல் கலியாணம் தான் நடக்குது.

பேசிச் செய்தால்தான் அதிகம் வியாபார நோக்கில் நடக்கும்

வெளிநாடுகளில் காதல் வேறு கலியாணம் வேறு கடுப்பி அக்கா..!

காதலிப்பினம் பலரை.. கலியாணம் முடிப்பினம் சிலரை.. நீங்கள் அதையெல்லாம் காதல் கலியாணம் என்றது எந்த வகைல கடுப்பி அக்கா..!

ஊரில கட்டினா காதலும் அதுதான் கலியாணமும் அதுதான். அதுதான் காதற் கலியாணம். வெளிநாட்டில நடக்கிறதுகள் காதலும் இல்ல கலியாணமும் இல்ல..! அதாலதான் காதலிச்சிட்டு ஓடியும் ஒளிக்குதுகள்.. கலியாணம் முடிச்சிட்டு விவாகரத்துக்கும் வாங்கினம்.. வெகு துணிவா..! இதால யார் வாழ்விலும் நிம்மதி இல்லாத நிலைதான்..! :D

வெளிநாடுகளில் காதல் வேறு கலியாணம் வேறு கடுப்பி அக்கா..!

காதலிப்பினம் பலரை.. கலியாணம் முடிப்பினம் சிலரை.. நீங்கள் அதையெல்லாம் காதல் கலியாணம் என்றது எந்த வகைல கடுப்பி அக்கா..!

ஊரில கட்டினா காதலும் அதுதான் கலியாணமும் அதுதான். அதுதான் காதற் கலியாணம். வெளிநாட்டில நடக்கிறதுகள் காதலும் இல்ல கலியாணமும் இல்ல..! அதாலதான் காதலிச்சிட்டு ஓடியும் ஒளிக்குதுகள்.. கலியாணம் முடிச்சிட்டு விவாகரத்துக்கும் வாங்கினம்.. வெகு துணிவா..! இதால யார் வாழ்விலும் நிம்மதி இல்லாத நிலைதான்..! :lol:

:lol::lol:

நல்ல நகைச்ச்சுவையாக கதைக்கிறீர்கள்!!! நீங்கள் தாயகத்தில் இருந்த காலம் குறைவு போல :lol: :angry: தாயகத்தில் எத்தனியோ பேரை நான் கண்டிருக்கேன் வேறு காதல்...வேறு கல்யாணம்..தானும் கஷ்டப்பட்டு, கூட இருப்பவரையும் கஷ்டப்படுத்திக்கிட்டு இருப்பினம்!

வெளிநாட்டில நடக்குது இல்லை என்றில்லை..ஆனால் ஊரை விட மோசம் என்று சொல்வது சுத்த மடத்தனம்! இங்கு காதலிப்பவர்கள் துணிவா முடிவு எடுக்கிறார்கள்..வீட்டை விட்டும் போகிறார்கள்..ஆனால் இது ஊரில் நடக்கவில்லையா??விவாகரத்து ஊரில் நடக்கலையா?

இல்லை இதுதான் நடைமுறை வாழ்க்கையா?

அடிக்கடி செய்து வருவதால்..நடை முறையாக்கப்பட்டு வருகின்றது.

செய்வதை குறைத்தால் அதில்லாமல் போகும் தானே..இல்லையா?

இது எங்களுக்கு மட்டும்தானா?

இல்லை..ஆப்கானிஸ்தான், சோமாலியா அப்பிடியான நாட்டை சேர்ந்தவர்களும்

இப்படி செய்வதை கண்டிருக்கேன்.

இது எங்கள் கலாசாரம் சம்பந்தப்பட்டதா?

கொஞ்சம் அடக்கு முறை கொண்ட கலாச்சாரங்கள், மதங்களிலேயே இப்படியானவை நடை பெறுகின்றன...அப்போ நம்ம காலாச்சாரம்? :lol:

காதல்த் திருமணங்கள் அவ்வளவு சிக்கல்களினை ஏற்படுத்துவதில்லை. (ஒன்று இரண்டினைத் தவிர)

ம்ம் இது உண்மைதான். கண்டதும் காதல் அப்புறம் உடனே கல்யாணம் எண்டு கட்டுறவைக்குத்தான் இப்படியான பிரச்சனை வரும் எண்டு நினைக்கிறன் . ஒருத்தரை ஒருத்தர் ஒழுங்கா புரிந்து கொள்ளாமல் , அவர் எப்படியானவர் எண்டு தெரிந்து கொள்ளாமல் காதலிக்கிறது , அப்புறம் கல்யாணம் கட்டின பிறகு அவருடைய குணம் பிடிக்காமல் போக உடனே டைவர்ஸ் அபப்டி இப்படி நடக்கிறது.

ஒரு 3-4 வருசமாவது லவ் பண்ணி ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிந்து கொண்டு அப்புறம் அம்மா அப்பாவின் சம்மதத்துடன் கல்யாணம் கட்டலாம் .... ! அந்த 3-4 வருசத்துக்குள்ள பிரச்சனையில்லாமல் போகனும் அப்படி இல்லாட்டி ஒரே பிரச்சனையாக இருந்தால் .. ஒத்துப்போகாமல் இருந்தால் ஒருவரை ஒருவர் சொல்லிட்டி பிரிந்து கொள்ளலாம் எண்டு நினைக்கிறன்.பிறகு கல்யாணம் கட்டி ஒத்துப்போகாம ஏன் வீண் பிரச்சனை ?

வெளிநாடுகளில் காதல் வேறு கலியாணம் வேறு கடுப்பி அக்கா..!

காதலிப்பினம் பலரை.. கலியாணம் முடிப்பினம் சிலரை.. நீங்கள் அதையெல்லாம் காதல் கலியாணம் என்றது எந்த வகைல கடுப்பி அக்கா..!

ஊரில கட்டினா காதலும் அதுதான் கலியாணமும் அதுதான். அதுதான் காதற் கலியாணம். வெளிநாட்டில நடக்கிறதுகள் காதலும் இல்ல கலியாணமும் இல்ல..! அதாலதான் காதலிச்சிட்டு ஓடியும் ஒளிக்குதுகள்.. கலியாணம் முடிச்சிட்டு விவாகரத்துக்கும் வாங்கினம்.. வெகு துணிவா..! இதால யார் வாழ்விலும் நிம்மதி இல்லாத நிலைதான்..!

அப்ப ஊரில காதல் தோல்வியே இலலை எண்டு சொல்லுறீங்கள். காதலிச்சவர்களையே கல்யாணம் கட்டினம் அப்படித்தான் விளங்குது உங்க கருத்து.... நான் நினைக்கிறன் அது உங்கட காலத்தில் (பழைய காலத்தில் ) இருந்திருக்கும்.

நிறைய பேர் ஊர்ல இருந்து வந்தவை சொல்லிக் கேட்டிருக்கன் . அவங்க பழைய காதலை வடிவா சொல்லுவாங்க அதுவும் அவங்க வைவ் பக்கத்தில் இருந்து சிரிச்சி கேட்டுக் கொண்டிருபாங்க :lol: அப்படி ஊர்காதலைப் பற்றி நிறைய சொல்லலாம். ஆனால் நீங்கள் எப்ப பார்த்தாலும் புலத்துல உள்ள ஆக்களை ,(பெண்களையும்) குறை சொன்னபடியே இருக்குறீர்கள் . எப்பத்தான் மாறுவீங்களோ தெரியல. :lol: B)

Edited by அனிதா

  • கருத்துக்கள உறவுகள்

இங்க தான் பிழைவிடுறீனம். பெஜில் விடப் போறன் என்று கொண்டு எவரும் சோதனைக்குப் படிப்பதோ அல்லது சோதனை எழுதுவதோ அல்ல. ஒருக்கா பெஜில் விட்டிட்டன் என்றதுக்காக படிப்புக்கே முழுக்குப் போடுறதும் இல்லை. சோதனை எழுதலாம் என்றதுக்கா பல தரம் எழுதலாம் தானே என்ற சிந்தனையில படிச்சா எப்படி... பாசகிறது. இந்தக் காதல் என்று கணக்க அளக்க முதல் ஒருத்தரை அல்லது ஒருத்தியைக் காதலிச்சு அவரைப் முழுசாப் புரிஞ்சுக்க முற்பட முதலே அடுத்த காதலுக்க தாவுற எண்ணம் உள்ளவை மத்தியில் எப்படி புரிந்துணர மனசும் முயற்சியும் வரும்..!

அனித்தா மேம் சும்மா கதையளக்காதேங்கோ 4 - 5 வருசம் காதலிச்சு பார்த்திட்டு அப்புறம் கலியாணம் முடிப்பமென்று.. இல்லைன்னா ஒரு சாட்டைச் சொல்லி காய் வெட்டிட்டு அடுத்ததை 4 - 5 வருசத்துக்கு காதலிச்சு அதுவும் சரிவரல்லைன்னா.. பேசாம சன்னியாசம் போகலாம் என்டுவியள் போல இருக்கே..! உதுதான் இப்ப முற்போக்கு... வேற.. நாய் வாழ்விலும் கேடு..!

நமக்கு அம்மா அப்பா பிடிக்கல்லை என்றா ஏன் இன்னொரு அப்பா அம்மாட்டப் போகிறமில்லை. அங்க கட்டுப்பாடு போட்டு மனசை வைச்சிருக்கிறமா இல்லையா. இன்னொரு அம்மா அப்பாட்டப் போகவும் அவர்கள் கவனிக்கவும் அன்புகாட்டவும் என்று இருந்தா நிச்சயம் நீங்கள் போவீர்கள். பட் நாங்கள் சொல்லுறம் எவ்வளவுதான் கொடுமை செய்தாலும் அம்மா அப்பாவைப் புரிஞ்சு கொண்டு அவர்கள் புரிஞ்சும் படி எங்களையும் மாற்றிக் கொண்டு வாழ வேண்டும் என்று.

புரிந்துணர்வு என்பது விட்டுக்கொடுப்புக்களின் மூலமும் மன்னிப்புக்களின் மூலமும் ஒரு நிரத்தரத்தன்மையான உறவுநிலைக்கான மனநிலையும் உள்ள போது மட்டுமே வரும். 3 வருசம் ஜஸ்ட் பழகுவம்.. பிடிக்குதோ பாப்பம் என்றால் அங்க பிடிக்காமல் இருக்க பலது முளைக்க வைக்கப்படும். அந்த 3 வருசத்துக்குள்ள நிலையில்லாத மனசுள்ளவங்க அடிக்கடி மாறிட்டா... எல்லாம் அம்போ. ஆக ஒன்றோட அர்ப்பணிப்போட வாழ நினைக்கிறதுதான் எல்லாத்துக்கும் உறுதுணையாகும். வாழ்கையும் அர்த்தப்படும். சுவையாகும். சலனம் கலக்கம் கபடம் இல்லாததாய் இருக்கும். இது 5 கூடப் பழகிட்டு ஒவ்வொன்றையும் நினைச்சு வாழ்க்கையை நரகமாக்கிறதுதான் மிச்சம்..! மனதின் வடுக்களை மறைக்கலாம்.. மறக்க முடியாது..!

தாயகத்தோட ஒப்பிடேக்க விவாகரத்து காதல் கள்ளக் காதல் எல்லாமே புகலிடத்தில அதிகம்..! :P :lol:

Edited by nedukkalapoovan

வெளிநாடுகளில் காதல் வேறு கலியாணம் வேறு கடுப்பி அக்கா..!

காதலிப்பினம் பலரை.. கலியாணம் முடிப்பினம் சிலரை.. நீங்கள் அதையெல்லாம் காதல் கலியாணம் என்றது எந்த வகைல கடுப்பி அக்கா..!

ஊரில கட்டினா காதலும் அதுதான் கலியாணமும் அதுதான். அதுதான் காதற் கலியாணம். வெளிநாட்டில நடக்கிறதுகள் காதலும் இல்ல கலியாணமும் இல்ல..! அதாலதான் காதலிச்சிட்டு ஓடியும் ஒளிக்குதுகள்.. கலியாணம் முடிச்சிட்டு விவாகரத்துக்கும் வாங்கினம்.. வெகு துணிவா..! இதால யார் வாழ்விலும் நிம்மதி இல்லாத நிலைதான்..! :lol:

நெடுக்ஸ் நீங்க தவறான அணுகு முறைல அணுகுறீங்க, நீங்க சொல்லுறது போல இங்கே எல்லரும் இல்லை வேணுமென்றால் உம்மைப் போல சிலர் இருக்கலாம் அப்படி ஆனல் எல்லோரும் அப்படியில்லை, ஊரில் எவருமே கதல் பண்ணி கல்யாணம் பண்ணினதில்லைய்யா.....? இல்லை கருத்து வேறு பாட்டால் பிரிந்த்ததில்லையா...........? ஊரில் யாருமே ஓடினதில்லையா..........? நான் அறிந்தே பலர் ஓடியிருக்கிறார்கள், இங்கேயும் ஓடுகிறார்கள்தான் இல்லை என்று சொல்லவில்லை, உண்மையாக காதலிக்குறார்கள் ஓடுகிறார்கள், நீரே உமது கூற்றில் தடுமாறுகிறீர் உண்மையான காதல் இல்லை என்கின்றீர், அப்புறம் காதல் கல்யாணம் இல்லை என்கிண்றீர், உண்மையாக காதலிக்காமல் எப்படி கல்யாணம் பண்ணுகின்றார்கள்........? காதல் கல்யாணம் பண்ணுகின்ற எல்லாருமே விவாகரத்க்து வாங்குகிறார்களா.......? நூறில் என்பது கல்யாணம் காதல் கல்யாணம்தான், உமது கூற்றுப் படிப் பார்த்தால் 80% ஆனோர் விவாகரத்து வாங்குகிரார்கள் என்றல்லவா தோண்றுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமக்கு அம்மா அப்பா பிடிக்கல்லை என்றா ஏன் இன்னொரு அப்பா அம்மாட்டப் போகிறமில்லை. அங்க கட்டுப்பாடு போட்டு மனசை வைச்சிருக்கிறமா இல்லையா. இன்னொரு அம்மா அப்பாட்டப் போகவும் அவர்கள் கவனிக்கவும் அன்புகாட்டவும் என்று இருந்தா நிச்சயம் நீங்கள் போவீர்கள். பட் நாங்கள் சொல்லுறம் எவ்வளவுதான் கொடுமை செய்தாலும் அம்மா அப்பாவைப் புரிஞ்சு கொண்டு அவர்கள் புரிஞ்சும் படி எங்களையும் மாற்றிக் கொண்டு வாழ வேண்டும் என்று.

புரிந்துணர்வு என்பது விட்டுக்கொடுப்புக்களின் மூலமும் மன்னிப்புக்களின் மூலமும் ஒரு நிரத்தரத்தன்மையான உறவுநிலைக்கான மனநிலையும் உள்ள போது மட்டுமே வரும்.

நெடுக்ஸ் அம்மா அப்பாவை விட்டு ஏன் பிரிய முடியவில்லை காதலர்கள் ஏன் பிரிந்து போகிறார்கள் , அனுசரித்துப் போகமுடியாதா என்னும் உங்கள் கேள்வி எவ்வகையில் யதார்த்தமானது என்று புரியவில்லை. தாய் தந்தையானவர்கள் ஒரு பிள்ளையின் அறியாப் பருவம் முதலே அப்பிள்ளையுடன் கூடஇருந்து அப்பிள்ளையின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுத்து வருபவர்கள். இன்று கூட எமது தாயகத்தில் பார்த்தீர்களேயானால் ஏதோ காரணத்தினால் பேரன் பேத்திகளிடம் வளரும் குழந்தைகள் வளர்ந்த பின்னரும் தாய் தந்தையரில் வைத்திருக்கும் அன்பைவிட தம்மை வளர்த்து வந்த பேரன் பேத்திகளில் அதிக அன்பு செலுத்துவதையே அல்லது அவர்கள் சொல்வதைச் செய்வதையே காணலாம். இவ்வாறு அறியாப் பருவம் முதலே தொடரும் ஓர் உறவை காதலன் காதலியுடன் எவ்வகையில் இணைத்துப் பார்க்க முடியும்.

புரிந்துணர்வு என்பது விட்டுக்கொடுப்புக்களின் மூலமும் மன்னிப்புக்களின் மூலமும் ஒரு நிரத்தரத்தன்மையான உறவுநிலைக்கான மனநிலையும் உள்ள போது மட்டுமே வரும் என்பது சரி. அது அதில் பங்காளியாக இருக்கும் இரு தரப்பிடம் இருந்தும் வரவேண்டும். ஒருவர் மட்டுமே எதற்கும் விட்டுக்கொடுத்து மன்னித்துப் போவது என்பது நடைமுறை வாழ்க்கையில் சரிப்பட்டு வரமுடியாத ஒரு விடயம். காதலர்கள் பழகிப் பின்னர் தம்மிடையே புரிந்துணர்வுடனோ விட்டுக்கொடுப்புடனோ இருக்க முடியாது என தெரிந்தபின் அவர்கள் பிரிந்து செல்வதில் எத்தவறும் இல்லையே. அவ்வாறில்லாது கட்டாயமாக இருவரையும் இணைத்து வைத்து அவர்கள் தமக்கிடையே புரிந்துணர்வையோ அல்லது விட்டுக்கொடுப்பையோ செய்யமுடியாதவிடத்து பாதிக்கப்படப் போவது அவ்விருவர் மட்டுமல்ல. அவர்கள் அவர்களது, குழந்தைகள் அவர்களது பெற்றோர்கள் எனப் பலர் இதில் பாதிக்கப்படுவார்கள்.

தாயகத்துடன் ஒப்பிடும் போது விவாகரத்து கள்ளக்காதல் அதிகம் என்று எத்தகைய தரவுகளைக் கொண்டு நீங்கள் கணிக்கிறீர்கள் எனத் தெரியவில்லை. எவ்வாறிருப்பினும், தாயகத்து எமது சமூகச் சூழலானது ஒருவித இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்டது. பெண்கள் தமது குரல்களை ஒருகட்டத்துக்கு மேல் எழுப்பமுடியாத சூழல். பெற்றோரிடம் கூறினும் சமூகத்தில் தமது கெளரவம் குறைந்து போய்விடும் என்று ஒருவரின் வாழ்வைப் பாக்காது தமது கெளரவத்தை மட்டுமே பார்க்கும் சமூகம். இவ்வாறான நிலையில் அங்கு நடைபெறும் கள்ளக்காதல் சம்பவங்கள் மறைக்கப்படுகின்றன. புலம்பெயர்ந்து வாழும் நாட்டில் அவற்றை வெளிக்கொண்டு வருவதற்கான வசதிகள் இருப்பதனால் அவை வெளியே கொண்டுவரப்படுகின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்க தான் பிழைவிடுறீனம். பெஜில் விடப் போறன் என்று கொண்டு எவரும் சோதனைக்குப் படிப்பதோ அல்லது சோதனை எழுதுவதோ அல்ல. ஒருக்கா பெஜில் விட்டிட்டன் என்றதுக்காக படிப்புக்கே முழுக்குப் போடுறதும் இல்லை. சோதனை எழுதலாம் என்றதுக்கா பல தரம் எழுதலாம் தானே என்ற சிந்தனையில படிச்சா எப்படி... பாசகிறது. இந்தக் காதல் என்று கணக்க அளக்க முதல் ஒருத்தரை அல்லது ஒருத்தியைக் காதலிச்சு அவரைப் முழுசாப் புரிஞ்சுக்க முற்பட முதலே அடுத்த காதலுக்க தாவுற எண்ணம் உள்ளவை மத்தியில் எப்படி புரிந்துணர மனசும் முயற்சியும் வரும்..!

ஐயோ நானும் பாருங்க கஸ்டப்பட்டு: தான் சோதனைக்கு படிச்சனான் ஆனால் வந்த ரிசேல்ட்டு என்ன தெரியுமே, ஓல் ஏஃப. என்ன செய்ய. நான் சத்தியமாய், பெயிலாகனும் என்று படிக்கல்ல. கண்டிப்ப வெற்றி பெறுவன் என்டு தான் நினைச்சம் என்ன செய்ய. எல்லாம் எங்கட கையிலில்லை தானே. அதை விடுவம், காதல் ஒரு பரீட்சை இல்லை அதை முதலில்ல தெரிஞ்சுக்கனும். அதை விட காதல் பிரிவுகளுக்கு காதலர்களை விட மூன்றாவது சக்தியே அதிக காரணமாக. இருக்கு என்றதையும் மறக்க கூடாது. அந்த பிரிவை காதலர்கள் தலையில் கட்டி விட்டு அதற்க்கு உவமானம் உவமேயம் கொடுக்கிறததில அர்த்தமில்லை. வெள்ளைக்கார நாகரீகம், நவீனத்துவம், வளர்ச்சி நிலை என்று கொக்கரிக்கிறது மட்டும் பத்தாது கண்டியளோ, கொஞ்சம், அறிவு பூர்வமாக யோசிக்கனும். இன்னும் ஒன்று உங்கள்ல அக்கறை உள்ளதுகளாய் பறவைகள் சொல்லுது என்ன என்றா, ரைப் பண்ணும் போது நீங்க, வாயில வாறதெல்லாத்தை ரைப் பண்ணாதீங்க, கொஞ்சம் நிதானமா யோசிச்சு ரைப்பண்ணுங்க. அப்ப தான் என்ன எழுதுறம் என்று புரியும்.

அனித்தா மேம் சும்மா கதையளக்காதேங்கோ 4 - 5 வருசம் காதலிச்சு பார்த்திட்டு அப்புறம் கலியாணம் முடிப்பமென்று.. இல்லைன்னா ஒரு சாட்டைச் சொல்லி காய் வெட்டிட்டு அடுத்ததை 4 - 5 வருசத்துக்கு காதலிச்சு அதுவும் சரிவரல்லைன்னா.. பேசாம சன்னியாசம் போகலாம் என்டுவியள் போல இருக்கே..! உதுதான் இப்ப முற்போக்கு... வேற.. நாய் வாழ்விலும் கேடு..!

நெடுக்ஸ் சார் ஒன்று கேக்கிறன் கோவிக்காதீங்க. ஒரு பெண் உங்களை லவ் பண்ணிறா என்று வைப்பம் ( பாவம் அந்த பொண்ணு :lol: ) நீங்கள் ஒரு கஞ்சா அடி காரன் அல்லாட்டி, நம்பர் குடுத்து அலையிறதுகளில் ஒன்று எண்டு அவள் கண்டு பிடிச்சிட்டாள். அதுவும், 3,4 வருசத்துக்கு பிறகு அதுக்கப்புறம் அந்த பொண்ணு உங்க கூட வாழுமோ? நீங்கள் என்ன எழுத போறீங்கள் என்று புரியுது, ஏன் முதல்லையே அறிஞ்சுக்கல்ல என்று தானே, அப்பிடி முதல்ல அறிய வெளிக்கிட்டா, ஐயோ .இவள் பாவிக்கு 1 வருடமாகக கிடையில சந்தேகம் என்று நீங்கள் பிரட்டி கதைப்பீங்க. சோ இப்பிடிப்பட்ட சம்பவங்களுக்கு என்ன முடிவு? புகலிடத்தில காதல்ல பிரச்சினை வர இதான் காரணம். ஒரு பையன், நாலு பெட்டைகூட கதைப்பான் (தமிழ் பெட்டையள் என்றா தானே தெரிய வரும் என்ற நம்பிக்கை) ஆனால் அந்த பொண்ணு, ஒரு பையனோட பேசினா மட்டும் கோவம் வந்திடுமில்ல. என்னய்யா நியாயம்? இவங்களோட எல்லாம் எப்பிடி வாழுறது. பிடிக்காதத மாத்திறது தப்பில்லை. அது. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் , புளுடா எல்லாம் இங்க வேகாது.

நமக்கு அம்மா அப்பா பிடிக்கல்லை என்றா ஏன் இன்னொரு அப்பா அம்மாட்டப் போகிறமில்லை. அங்க கட்டுப்பாடு போட்டு மனசை வைச்சிருக்கிறமா இல்லையா. இன்னொரு அம்மா அப்பாட்டப் போகவும் அவர்கள் கவனிக்கவும் அன்புகாட்டவும் என்று இருந்தா நிச்சயம் நீங்கள் போவீர்கள். பட் நாங்கள் சொல்லுறம் எவ்வளவுதான் கொடுமை செய்தாலும் அம்மா அப்பாவைப் புரிஞ்சு கொண்டு அவர்கள் புரிஞ்சும் படி எங்களையும் மாற்றிக் கொண்டு வாழ வேண்டும் என்று
.

ஒரு விசயத்தை ஒப்பீடு செய்யும் போது பொருத்தமானதை ஒப்பீடு செய்யனும். நெடுக்ஸ்சும், குறுக்ஸ் என்று ஒப்பீடு செய்யலாம் பட் அம்மா, அப்பா, மேல இருக்கிற பாசத்தையும், காதலர்கள் இடையே உள்ள பாசத்தையும் ஒப்பீடு செய்ய முடியாது. அம்மா, அப்பா பாசம் என்றது வேற, அவர்கள் என்ன செய்தாலும் பொறுத்திட்டு இருக்க தான் வெணும் நீங்கள் நு{று வீதம் சரி பட், காதல் என்ற பெயரில் அளவுக்கதிமான, உரிமைகளை வழங்க முடியாது. சிலரின் ஆசா பாசங்களை தெரிந்து விலகுதல், உங்கள் கண்னுக்கு தவறாக பட்டிருக்கு. இது நல்லாவா இருக்கு? நீங்களே சொல்லுங்க நீங்க ஒருத்தியை லவ் பண்ணி அவள் ஏதாவது விடையத்தில் தவறு செய்தால் மன்னச்சு விட்டிடுவியளோ? அதுவும் ஏதாவது உங்கள் வாழ்கை பாதிக்க கூடிய விடையம் என்றால்? சும்மா எழுத கூடாது கொஞ்சம் ஜேனரல் நோலேஜ் வேணும். அது உங்க கிட்ட நிறையவே இருக்கனும் பட் என்ன அதை யூஸ் பண்ண மாட்டேன்கிறீங்க.

புரிந்துணர்வு என்பது விட்டுக்கொடுப்புக்களின் மூலமும் மன்னிப்புக்களின் மூலமும் ஒரு நிரத்தரத்தன்மையான உறவுநிலைக்கான மனநிலையும் உள்ள போது மட்டுமே வரும். 3 வருசம் ஜஸ்ட் பழகுவம்.. பிடிக்குதோ பாப்பம் என்றால் அங்க பிடிக்காமல் இருக்க பலது முளைக்க வைக்கப்படும். அந்த 3 வருசத்துக்குள்ள நிலையில்லாத மனசுள்ளவங்க அடிக்கடி மாறிட்டா... எல்லாம் அம்போ. ஆக ஒன்றோட அர்ப்பணிப்போட வாழ நினைக்கிறதுதான் எல்லாத்துக்கும் உறுதுணையாகும். வாழ்கையும் அர்த்தப்படும். சுவையாகும். சலனம் கலக்கம் கபடம் இல்லாததாய் இருக்கும். இது 5 கூடப் பழகிட்டு ஒவ்வொன்றையும் நினைச்சு வாழ்க்கையை நரகமாக்கிறதுதான் மிச்சம்..! மனதின் வடுக்களை மறைக்கலாம்.. மறக்க முடியாது..!

நீங்கள் சொல்லறது கி.முக்கு காலம். எல்லாவற்றையும் சகித்து வாழுதல் என்றதுக்கு நீங்கள் " அர்ப்பணிப்பு" என்று புதுப் பதத்தை பாவித்திருக்கிறீங்களே தவிர அடிப்படையில இரண்டுக்கும் வேறு பாடில்லை. நீங்கள், கொலை செய்தாலும், ஒருத்தி உங்க கூட வாழனும் என்றா, அது நடைமுறைச்சாத்தியமற்றது. ஒருத்தி உங்களை கொலை செய்யுமளவுக்கு வந்தாலும் அதை நீங்கள் சகிச்சுக்கிட்டு வாழுவீங்களா? என்பது சந்தேகமே ஏன் என்றா, எல்லாவற்றுக்கு முதல் சுயநலமே மனிதப்பண்பு.

தாயகத்தோட ஒப்பிடேக்க விவாகரத்து காதல் கள்ளக் காதல் எல்லாமே புகலிடத்தில அதிகம்..! :P :lol:

ஒரு சின்ன திருத்தம் நெடுக்ஸ், தாயகத்தில பாத்தீங்கள் என்டா, விவாகரத்து பெறாமல் குடும்பங்கள் பிரிஞ்சிருக்க, ஆனால் இங்க எல்லாத்துக்கும் சட்டம் தேவைப்படுறதால உங்கட கண்ணுக்கு தெரியுது. கள்ளக்காதல் என்றா என்ன அது? இப்ப ஒரு ஆணும் பெண்ணும் பேசினாலே காதல் என்று கதைக்கிறதா? இல்லாட்டி தனது பழைய நண்பர்களோடு, ஏதாவது நிகழ்வில் பங்கு பற்றுவதா? ஏனெனில் நீங்கள் சொல்லும் விடையங்கள் தவிர, புகலிடத்தில், தூற்றுதல், என்பதும் அதிகம். அவளை அங்கே கண்டேன், அவனை அந்த பாரில் அவளோடு பாத்தேன், இது இங்கே தான் அதிகம்.

அனித்தா மேம் சும்மா கதையளக்காதேங்கோ 4 - 5 வருசம் காதலிச்சு பார்த்திட்டு அப்புறம் கலியாணம் முடிப்பமென்று.. இல்லைன்னா ஒரு சாட்டைச் சொல்லி காய் வெட்டிட்டு அடுத்ததை 4 - 5 வருசத்துக்கு காதலிச்சு அதுவும் சரிவரல்லைன்னா.. பேசாம சன்னியாசம் போகலாம் என்டுவியள் போல இருக்கே..! உதுதான் இப்ப முற்போக்கு... வேற.. நாய் வாழ்விலும் கேடு..!

எல்லாத்தையும் நம்ம தலை விதி அது இது என்று சகிச்சுக்கிட்டு நிம்மதி இல்லாமல் வாழுவதை (ஊரில் பல பெண்கள், ஆண்களை போல) இப்படி சில காலத்திற்க்கு பின் சரி வரலை என்று பிரிந்து...வாழ்வது எவ்ளோ நல்லது. அதை தப்பு..கலாச்சார இழிவு என்று நினைத்தால்..மனுசன் வாழுறது ஒரு ஜென்மம்..அதிலும் பிடிக்காத ஒருவரோட கஷ்டப்பட்டு வாழுறது மனிசனோட வாழ்வுக்கே வாற இழிவு!!!!!!!

வெளிநாட்டில பசங்களுக்கு நல்ல வாய்ப்பு..வெளிநாட்டு பெண்கள் பிரீயாக பழகுவார்கள். ஒரு கையில் டெலிபோனில் தமிழ் கேர்ள் ப்ரெண்டோட கதைச்சுக்கிட்டு மற்ற கையை வெள்ளைக்காரிண்ட தோளில போட்டு க்கிட்டு உல்லாசமா இருக்காங்க. திருமணம் என்றதும் அந்த ஒண்டும் அறிய பொண்ணு இருக்கா..தமிழ் பொண்ணு! இல்லை அவா புரிஞ்சுக்கிட்டு விலகிட்டாவா..இருக்கவே இருக்கு வெளிநாட்டை பற்றி அறியாநம்ம ஊரு அப்பாவி தமிழ் பொண்ணுங்க..

இப்படியான ஆக்கள் இருக்கையில் அனி சொன்னது போல 4,5 வருடங்களே காணாது 10 வருசம் வேணும் புரிஞ்சுக்க.

அதுவும் செய்து பழகியதில்...எப்படி எப்படி எல்லம் கதைக்கணும், மறைக்கணும் என்று நன்றாக அறிஞ்சு வைச்சிருக்கினம். இவர்களோடு அப்பா,அம்மாவை அட்யஸ்ட் பண்ணுவது போல பண்ணி வாழணும் என்று நீங்கள் சொல்கிறீர்கள்..........

ஆனாலும் சிலர் இதுக்கு விதி விலக்காக இருக்கிறார்களில்லை என்று சொல்லவில்லை. பெண்களும் சில தவறாக செய்கிறார்கள். ஆனால் ஆண்களே அதிகம்..கலாச்சாரத்தை பற்றி பீத்திக்கிறதும் அவர்களே அதிகம்!!!!

Edited by ப்ரியசகி

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அம்மா அப்பாவை விட்டு ஏன் பிரிய முடியவில்லை காதலர்கள் ஏன் பிரிந்து போகிறார்கள் , அனுசரித்துப் போகமுடியாதா என்னும் உங்கள் கேள்வி எவ்வகையில் யதார்த்தமானது என்று புரியவில்லை. தாய் தந்தையானவர்கள் ஒரு பிள்ளையின் அறியாப் பருவம் முதலே அப்பிள்ளையுடன் கூடஇருந்து அப்பிள்ளையின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுத்து வருபவர்கள். இன்று கூட எமது தாயகத்தில் பார்த்தீர்களேயானால் ஏதோ காரணத்தினால் பேரன் பேத்திகளிடம் வளரும் குழந்தைகள் வளர்ந்த பின்னரும் தாய் தந்தையரில் வைத்திருக்கும் அன்பைவிட தம்மை வளர்த்து வந்த பேரன் பேத்திகளில் அதிக அன்பு செலுத்துவதையே அல்லது அவர்கள் சொல்வதைச் செய்வதையே காணலாம். இவ்வாறு அறியாப் பருவம் முதலே தொடரும் ஓர் உறவை காதலன் காதலியுடன் எவ்வகையில் இணைத்துப் பார்க்க முடியும்.

புரிந்துணர்வு என்பது விட்டுக்கொடுப்புக்களின் மூலமும் மன்னிப்புக்களின் மூலமும் ஒரு நிரத்தரத்தன்மையான உறவுநிலைக்கான மனநிலையும் உள்ள போது மட்டுமே வரும் என்பது சரி. அது அதில் பங்காளியாக இருக்கும் இரு தரப்பிடம் இருந்தும் வரவேண்டும். ஒருவர் மட்டுமே எதற்கும் விட்டுக்கொடுத்து மன்னித்துப் போவது என்பது நடைமுறை வாழ்க்கையில் சரிப்பட்டு வரமுடியாத ஒரு விடயம். காதலர்கள் பழகிப் பின்னர் தம்மிடையே புரிந்துணர்வுடனோ விட்டுக்கொடுப்புடனோ இருக்க முடியாது என தெரிந்தபின் அவர்கள் பிரிந்து செல்வதில் எத்தவறும் இல்லையே. அவ்வாறில்லாது கட்டாயமாக இருவரையும் இணைத்து வைத்து அவர்கள் தமக்கிடையே புரிந்துணர்வையோ அல்லது விட்டுக்கொடுப்பையோ செய்யமுடியாதவிடத்து பாதிக்கப்படப் போவது அவ்விருவர் மட்டுமல்ல. அவர்கள் அவர்களது, குழந்தைகள் அவர்களது பெற்றோர்கள் எனப் பலர் இதில் பாதிக்கப்படுவார்கள்.

தாயகத்துடன் ஒப்பிடும் போது விவாகரத்து கள்ளக்காதல் அதிகம் என்று எத்தகைய தரவுகளைக் கொண்டு நீங்கள் கணிக்கிறீர்கள் எனத் தெரியவில்லை. எவ்வாறிருப்பினும், தாயகத்து எமது சமூகச் சூழலானது ஒருவித இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்டது. பெண்கள் தமது குரல்களை ஒருகட்டத்துக்கு மேல் எழுப்பமுடியாத சூழல். பெற்றோரிடம் கூறினும் சமூகத்தில் தமது கெளரவம் குறைந்து போய்விடும் என்று ஒருவரின் வாழ்வைப் பாக்காது தமது கெளரவத்தை மட்டுமே பார்க்கும் சமூகம். இவ்வாறான நிலையில் அங்கு நடைபெறும் கள்ளக்காதல் சம்பவங்கள் மறைக்கப்படுகின்றன. புலம்பெயர்ந்து வாழும் நாட்டில் அவற்றை வெளிக்கொண்டு வருவதற்கான வசதிகள் இருப்பதனால் அவை வெளியே கொண்டுவரப்படுகின்றன.

நீங்கள் ஒரு விடயத்தை ஒத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதாவது அன்பு செலுத்தப்படும் போது உறவுகள் பலமடைகின்றன என்று. பிறக்கும் போது பிள்ளை தாய் தந்தை சகோதரம் என்ற பாசம் அன்பு அறிஞ்சு பிறக்கிறதில்லை. வாழும் சூழல் காட்டும் உணர்வுகளையே அவை பிரதிபலிக்கின்றன. காதலும் அப்படித்தான். முதற்காதல் தோன்றும் போது அவனும் அவளும் மனதளவில் குறித்த உணர்வளவில் குழந்தைகள் தான். அந்தக் குழந்தைக்கு சரியான உணர்வுகளை களங்கமின்றி கபடத்தனமின்றி வழங்க வேண்டியவர்களே இன்று காதல் என்ற போர்வையில் ஆள் தேர்வு செய்கின்ற இழிநிலை அடைந்துள்ளனர். இந்த ஆட்தேர்வுக்கு போலி அன்பும் போலி நடத்தைகளும் வெளிப்படுத்தப்படுகின்றன. அதுவல்ல தேவை. ஒருவரை ஒருவர் ஈடுபாட்டோடு புரிந்து கொள்ளவும் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப விட்டுக்கொடுக்கவும் எதிர்பார்ப்பில்லாத அன்பு வழங்கவும் ஆணும் பெண்ணும் விளைகின்ற போது காதல் என்பது நிச்சயம் கடைகளில் பொருள் தெரிவு செய்வது போல் ஆள் மாற்றி தெரிவு செய்யும் போலித்தனமானதாக இருக்காமல் வலுவான மனிதனை உணர்வளவில் வலுப்படுத்தும் ஒரு உன்னத உணர்வாக இருக்கும்..!

தாயகத்தைப் பொறுத்தவரை இறுக்கமான சமூக அமைப்பும் குடும்ப அமைப்புக்களும் மேற்கூறிய நிலைக்கு பிள்ளைகளை சிந்திக்க வைத்தன. புகலிடத்தில் வழங்கப்பட்டுள்ள கட்டுபாடற்ற சூழல் பிள்ளைகள் சிந்திக முதல் உணர்வுக்கு வடிகால் தேட முனைய இடமளிக்கிறது.

அண்மையில் ஈராக் போர்முனைக்கு அனுப்பட்ட பிரிட்டிஷ் இளவரசர் கரி எதிர்கொண்ட பிரச்சனை என்பது அவர் நினைத்தது போல வார இறுதிநாட்களில் கூத்தடிக்க பப்பும் கிளப்பும் நண்பிகளும் நண்பர்களும் சூழ்ந்த இடமாக அன்றி போர்களம் மோட்டார் எறிகணைகளின் தாக்குதலோடு புளுதியும் வெப்பமும் கூடிய அவர் தரிச்சித்தே அறியாத சூழலை கொண்டிருந்ததாம். அந்தச் சூழலுக்கு அவர் பழக்கப்பட வேண்டியது அவர் கடமை என்று அறிவுறுத்தப்பட்டதாம். இல்ல அதற்குப் நான் வீட்ட போப்போறன் இல்ல எனக்கு பப் கட்டு கிளப் திற என்று அவர் ஓடர் போட முடியாது. அதுபோலவேதான் வாழ்க்கைக் களமும். அது பல முனைகளைக் கொண்டது. சில எதிர்பார்க்கப்பட்ட முனைகளைக் கொண்டிருக்கும். சில எதிர்பார்க்கப்படாத முனைகளைக் கொண்டிருக்கும். நாம் தான் எம்மை அதற்கு ஏற்ப தயார்படுத்த வேண்டுமே தவிர ஆளை அடிக்கடி மாற்றுவதால் அல்ல.

மனித உறவுகள் என்பது ஆடை மாற்றுவது போன்று இலகுவான விடயமல்ல. நேற்றுவரை பிடித்திருந்தவள் இன்று பிடிக்கவில்லை. ஏன் நேற்றுவரை பிடிக்க இருந்ததற்கான காரணிகளை அவளிடத்தில் எடுத்துச் சொல்லக் கூடாது. அதை குறிப்பிட்டவரின் மனதில் பதிய வைக்கக் கூடாது. சிலர் எடுத்துச் சொல்லவே சந்தர்ப்பம் அளிப்பதில்லை. அப்படியான பெண்களும் உலகில் உள்ளனர். அவர்கள் மனிதர்களாக இருக்க முடிமோ தெரியவில்லை. அவர்களை விட்டுவிட்டு சாதாரண மனிதர்களை நோக்குங்கள்..!

மனித உறவுகள் பலப்படும் போதே குடும்பங்கள் பலப்படும். குடும்பங்கள் பலப்படும் போதே வளமான சந்ததிகள் உருவாகும். அப்பா அம்மா வெறும் ஆண் பெண் உறவு நிலையில் வெளிப்பாடல்ல. அவர்கள் குழந்தைகளுக்கான வழிகாட்டல்கள். காதல் திருமணம் என்பவையெல்லாம் வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே. அந்தப் பகுதி வாழ்வின் ஒரு அத்தியாயத்துக்கான பலமான அடிப்படையும் ஆகுகின்றன. காதல் திருமணம் என்ற அடிப்படையே குழம்பிப் போய்க் கிடக்கும் மனங்களுக்குள் எப்படி வாழ்க்ககயை சீராக கொண்டு செல்ல முடியும். ஒருவனை ஏதோ ஒரு காரணத்துக்காக உதாசீனம் செய்பவருக்கு இன்னொருத்தனை இன்னொரு காரணத்தை காட்டி உதாசீனம் செய்ய அதிக நேரம் எடுக்காது.

இன்று காதலுக்கான ஆண் - பெண் தேர்வு என்பது பெண்களைப் பொறுத்தவரை புடவைக்கடையில் நவீன வடிவமைப்புக்களோடு புடவை தேர்வு செய்வது போன்றது. இந்த மனநிலையில் ஆண்களும் இன்று உருவாக்கப்பட்டு வருகின்றனர். ஆணும் பெண்ணும் பாலியல் தேவைகளுக்காக மட்டுமே இன்று காதலை அதிகம் பாவிக்க முற்படுகின்றன. அது அலுத்துப் போனதும் மீண்டும் இன்னொருவனுடன் அல்லது ஒருத்தியிடன் அது தொடர்கிறது. ஆக அங்கு ஒரு கட்டுப்பாடற்ற நிலையை அவர்கள் சுதந்திரம் என்ற பெயரில் நிறுவ நிற்கின்றனர். இதன் விளைவு...

1. பாலியல் பாதிப்படையும் பெண்கள். தாயகத்தில் திருமணத்துக்கு முன்னான பாலுறவு வைத்துக் கொண்ட பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. புகலிடத்தில் இந்த நிலை 10 பெண்களில் எட்டு என்ற நிலையில் இருக்கிறது (பிரித்தானியா பல்கலைக்கழக மாணவிகளை அடிப்படையாகக் கொண்ட தரவு)

2. இளம் வயதினரை ஆட்டிப்படைக்கும் மன அழுத்தங்கள்.

3. பெற்றோர் அறியாமல் பிறக்கும் பிள்ளைகள்.

4. கருக்கலைப்புக்களின் அதீத அதிகரிப்பு.

5. எயிட்ஸ் போன்ற தொற்று நோய்களின் பெருக்கம்.

6. அமைதியற்ற குடும்பங்களும் தெருவுக்கு வரும் பிள்ளைகளும்.

7. தெரு வன்முறைகளில் கொலைகளில் குற்றங்களில் ஈடுபடும் பெற்றோர் கவனிப்பற்ற பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை.

8. பாதிக்கப்படும் பெண்கள் விபச்சாரம் போன்ற இழிதொழில்களை நோக்கி செல்லுதல்.

9. பெண்கள் தங்களின் உடலை தகுதியாக்கி வாழ முற்படுதல்.

10. பெண்கள் மத்தியில் சமூக ஒழுக்கமற்ற நிலை உயர்வடைதல். இதன் மூலம் ஆண்களும் சமூகம் ஒழுக்கமற்ற நிலைக்கு இட்டுவரப்படுதல்...!

இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம். தாயகத்தில் இன்றும் விடுதலைப் புலிகள் சமூக விடுதலை என்பதற்கு தெளிவான வரையறை வைத்துக் கொண்டுதான் செயற்படுகின்றன. புகலிடத்தில் போல பள்ளியில நாலு காதல் அப்புறம் யுனில இருக்கேக்க 5 காதல் அப்புறம் வேலைக்குப் போற இடத்தில 8 காதல் அப்புறம் திருமணம் முடிச்ச பிறகு 10 காதல் என்று மொத்தம் 30 காதலோடு வாழ்க்கையை காதல் என்ற பெயரில் சீரழிக்க சொல்லவில்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டியல் என்பது இயல்பாகவே மிருக சிந்தனையுள்ள மனித மனத்தை கடிவாளமிட்டு வரையறைக்குள் வாழ விடுகிறது. அந்த வாழ்கை வெற்றியடையும் போது அந்த மனிதன் குடும்பவியலிலும் வெற்றி பெறுகின்றான். மனித மனநிலை என்பது பொலிகமி நிலைக்குரியதல்ல. மொனோகமிக்குரியதாக உள்ளதால் அந்த நிலையை மனிதன் ஒழுக்கமாக தன்னை பூரணப்படுத்தும் புனித்தப்படுத்தும் அம்சமாக மனதில் ஆளப்பதிப்பித்துக் கொண்டு அர்பணிப்போட வாழ முற்படுவதால் நிறையவே தியாகங்களை செய்யவும் கற்றுக் கொள்கின்றான்.

அர்ப்பணிப்பு என்பதை கிமு என்று ஒரு அறிவாளி சொன்னார். ஒரு காதலிலேயே நிலையாக நிற்க வக்கில்லாத இந்தப் புலம்பெயர்ந்த இளையவர் கூட்டம் தாயகத்தில் கொண்ட கொள்கைக்காக அந்த ஒரே இலட்சியத்துக்காக உடலில் வெடிமருந்து கட்டி சாக நேரம் குறித்து கொள்கைக்காக இறக்கும் மனிதர்களை கிமு காலத்தவர்கள் என்றும் அவர்கள் பிழைக்கத்தெரியாத கோழைகள் என்றுமா கருதுகின்றனர். அறிவிலித்தனமான சிந்தனைகளை விதைப்பதையும் கட்டுப்பாடற்ற ஒழுக்கமற்ற வாழ்வியலால் கிடைக்கும் மனித மன அலைவு வாழ்வுக்கு அடிமைப்பட்டு வாழ விரும்பி உள்ள தற்கால மிருக குணம் மிகுந்த இளையவர்கள் சிந்திக்க நிறையவே இருக்கிறது.

தற்காக ஜனநாயக முதலாளித்துவ கொள்கை வகுப்பாளர்கள் தங்கள் தேவைக்காக கட்டவிழ்த்துவிட்டுள்ள வலைகளுக்குள் சிக்குண்டு வாழ்வைத் தொலைக்கும் இந்த சிந்தனையற்ற சில்வண்டுகளே வாழ்க்கை என்பதற்கான அர்த்தம் கொண்டா வாழ்கிறீர்கள் என்று ஒரு தடவை உங்களைப் பார்த்து நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்வில் இலக்கு என்ன.. மரணத்துக்கு முன்னாள் நீங்கள் இந்த உலகுக்கு செய்த நன்மை என்ன செய்யப் போகும் நன்மை என்ன கடைப்பிடித்த மனித ஒழுக்கம் என்ன என்று கேட்டுக் கொள்ளுங்கள்.

மனித மனம் குதிரை போன்றது. அடக்காதவரை அது எகிறித்தான் திக்கற்று ஓடும். அறிவை பகுத்தறிவை சமூக அறிவைக் கொண்டு அதைக் கடிவாளமிட வேண்டியது தனிமனிதர்களே அன்றி நாம் அதை உங்களில் செய்ய முடியாது.

ஒன்றைச் சொல்லிக்கொள்ளலாம் தாயகத்தில் அந்த மனக்குதிரைக்கு கடிவாளமிட சமூகத்துக்கு கொஞ்சம் என்றாலும் இருக்கும் உரிமை மேற்குலக வாழ்வியலில் இல்லை. அதனால் தான் அது திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவ சுரண்டல் பொருளாதாரம் வீழ்சியடையும் போது இந்த கட்டுப்பாடற்ற மனித வாழ்வின் விளைவுகளை இந்த உலகம் தரிசிக்கும். தற்போதே அதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டதை அண்மைய யுனிசெவ் அறிக்கை தெட்டத் தெளிவாக்கிக் காட்டியது. யுத்த சூழல்கள் இன்றியும் உலகில் அதிக வன்முறைகள் நடக்கும் நகரங்களை கொண்டதாக மேற்குலக நகரங்கள் விளங்குவது ஒன்றே போதும் இவற்றை எடுத்துச் சொல்ல.

கொழுவி மேம் தாயக மக்களை மேற்குலகம் நோக்கி சுயநலத்துக்காக ஓடி வந்த தமிழர்களோடும் அவர்களின் வாரிசுகளோடும் ஒப்பிடுவதே தவறு. இருந்தாலும் ஓடிவந்த தமிழர்கள் போலன்றி தாயக மக்கள் இன்னும் கனமான சமூகக்கட்டுப்பாடுகளோடு மனித மனங்களுக்கு வரையறையிட்டு வாழவும் வாழ்வை சீராக வடிவமைக்கவும் கற்றுக் கொண்டுள்ளனர் என்பதை நிறுவவும் நாம் கூறியவற்றிற்கு ஆதாரம் காட்டவும் எம்மிடம் நிறையவே தரவுகள் உண்டு. உதாரணத்துக்கு லண்டன் மாநகரில் மதுபானம் குடிக்கும் புலம்பெயர் தமிழர்களின் பெண் வாரிசுகள் குவியும் பப்.. கிளப் விபரங்கள் குறித்து கேட்டறிந்து உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.

தாயகத்திலும் பெண்கள் குடிப்பார்கள்.. புகைப்பார்கள்.. ஆனால் அது எண்ணிக்கையில் மிகக் குறைவு..!

பள்ளி போகும் மாணவரையே தகாத உறவுக்கு அழைக்கும் தமிழ் பெண்கள் லண்டன் மாநகரில் வாழ்கின்றனர் என்று எண்ணும் போது.. கேலவம் இந்த Bitch களுக்கு எல்லாம் ஒரு வாழ்வு அவசியமா.. அதுவும் தமிழர்கள் என்று கொண்டு.. என்று கேட்க தோன்றினாலும் கட்டுப்பாடற்ற தெருவில் எந்த நாய் தான் எப்படிப் போனால் என்ன என்று போய்க்கிட்டிருக்க வேண்டியதுதான்...! சிந்தியுங்கள்... சுய புத்தி இருந்தால்..! :lol::lol:

இஞ்ச எனக்குத் தெரிந்த தறுதலை ஒன்று ஒரு வெள்ளையைக் காதலிக்குது. பரவாயில்லை, ஆனால் தனியா வாடகை வீடெடுத்து இரண்டு பேரும் ஒண்டா இருக்கினம். இது டமிலில எனக்குச் சொல்லுது, தாங்கள் ஒண்டா சீவிச்சுப் பாக்கினமாம் சரிவந்தா கலியாணம் முடிப்பினமாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ நானும் பாருங்க கஸ்டப்பட்டு: தான் சோதனைக்கு படிச்சனான் ஆனால் வந்த ரிசேல்ட்டு என்ன தெரியுமே, ஓல் ஏஃப. என்ன செய்ய. நான் சத்தியமாய், பெயிலாகனும் என்று படிக்கல்ல. கண்டிப்ப வெற்றி பெறுவன் என்டு தான் நினைச்சம் என்ன செய்ய. எல்லாம் எங்கட கையிலில்லை தானே. அதை விடுவம், காதல் ஒரு பரீட்சை இல்லை அதை முதலில்ல தெரிஞ்சுக்கனும். அதை விட காதல் பிரிவுகளுக்கு காதலர்களை விட மூன்றாவது சக்தியே அதிக காரணமாக. இருக்கு என்றதையும் மறக்க கூடாது. அந்த பிரிவை காதலர்கள் தலையில் கட்டி விட்டு அதற்க்கு உவமானம் உவமேயம் கொடுக்கிறததில அர்த்தமில்லை. வெள்ளைக்கார நாகரீகம், நவீனத்துவம், வளர்ச்சி நிலை என்று கொக்கரிக்கிறது மட்டும் பத்தாது கண்டியளோ, கொஞ்சம், அறிவு பூர்வமாக யோசிக்கனும். இன்னும் ஒன்று உங்கள்ல அக்கறை உள்ளதுகளாய் பறவைகள் சொல்லுது என்ன என்றா, ரைப் பண்ணும் போது நீங்க, வாயில வாறதெல்லாத்தை ரைப் பண்ணாதீங்க, கொஞ்சம் நிதானமா யோசிச்சு ரைப்பண்ணுங்க. அப்ப தான் என்ன எழுதுறம் என்று புரியும்.

சாதாரணமான விடயங்களுக்கு அளவோடு யோசிச்சு தட்டினாப் போதும் சார்.

அப்புறம் விடயத்துக்கு வந்தால் நீங்கள் எழுத சோதனையை நாங்களும் தான் எழுதினம் நீங்கள் படிச்ச ஸ்கூலில தான் நாங்களும் படிச்சம் ஆனா நாங்க பாஸ் பண்ணிட்டமே. காரணம் நாம் அதை வாழ்க்கையில் ஒரு தரமான சந்தர்ப்பம் என்று உணர வைச்சு அதை வெற்றியடைய மனசளவில உறுதி வைச்சு செயற்பட்டதுதான். அந்த மன உறுதியில தளம்பல் இருந்திருந்தா உங்களைப் போலவே பெயில் விட்டிருப்பம். அதுபோலத்தான் கொண்ட காதல் ஒருத்தி கூடத்தான் அவள் தான் அல்லது அவன் தான் வாழ்க்கை என்று வாழ உறுதி பூணும் போது செயற்பாடுகளும் உணர்வுகளும் இயல்பாக பரிமாறப்படும். அதைவிடுத்து மனசுக்க இன்னும் 3 வருசத்தில கழற்றிவிடக் கூடியதுதானே அவன் கிடந்தான் என்று பழகும் போது புரிந்துணர்வும் வராது உண்மையான உறவுநிலையும் எழாது.. மொத்தத்தில் அது வேஸ்ட் இன் லைவ்..!

நெடுக்ஸ் சார் ஒன்று கேக்கிறன் கோவிக்காதீங்க. ஒரு பெண் உங்களை லவ் பண்ணிறா என்று வைப்பம் ( பாவம் அந்த பொண்ணு :lol: ) நீங்கள் ஒரு கஞ்சா அடி காரன் அல்லாட்டி, நம்பர் குடுத்து அலையிறதுகளில் ஒன்று எண்டு அவள் கண்டு பிடிச்சிட்டாள். அதுவும், 3,4 வருசத்துக்கு பிறகு அதுக்கப்புறம் அந்த பொண்ணு உங்க கூட வாழுமோ? நீங்கள் என்ன எழுத போறீங்கள் என்று புரியுது, ஏன் முதல்லையே அறிஞ்சுக்கல்ல என்று தானே, அப்பிடி முதல்ல அறிய வெளிக்கிட்டா, ஐயோ .இவள் பாவிக்கு 1 வருடமாகக கிடையில சந்தேகம் என்று நீங்கள் பிரட்டி கதைப்பீங்க. சோ இப்பிடிப்பட்ட சம்பவங்களுக்கு என்ன முடிவு? புகலிடத்தில காதல்ல பிரச்சினை வர இதான் காரணம். ஒரு பையன், நாலு பெட்டைகூட கதைப்பான் (தமிழ் பெட்டையள் என்றா தானே தெரிய வரும் என்ற நம்பிக்கை) ஆனால் அந்த பொண்ணு, ஒரு பையனோட பேசினா மட்டும் கோவம் வந்திடுமில்ல. என்னய்யா நியாயம்? இவங்களோட எல்லாம் எப்பிடி வாழுறது. பிடிக்காதத மாத்திறது தப்பில்லை. அது. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் , புளுடா எல்லாம் இங்க வேகாது.

நாங்க கஞ்சா அடிக்கிறம் என்று தெரிஞ்சா.. . போடா காஞ்சா பாட்டி என்று தூக்கி எறிஞ்சிட்டுப் போய் இன்னொரு கஞ்சா அடிக்காத நல்லவரா வாய் மூக்கை கையை இரத்ததை மணந்து பார்த்து இன்னொன்று தேடச் சொல்லுறது உங்கள் முற்போக்கு.கிபி 2007 கருத்து. அந்த கஞ்சா அடிக்காத மனித மனசுக்குள்ள உள்ள அழுக்குகளை எப்படி சார் இனங்காட்டுவீங்க. பழகும் போதும் நடிக்கும் பெண்களுமுளர். ஆண்களும் உளர். நாங்கள் சொல்லுறம் அவன் கஞ்சா அடிக்கிறவனா இருக்கலாம். குறித்த பெண்ணின் மீது அவனுக்கும் அவன் மீது அவளுக்கும் உண்மையான ஈடுபாடுள்ள காதல் இருக்கும் என்றால் கஞ்சா அடிக்கிறது மறைக்கப்பட்டிருந்தாலும் அதை மன்னிச்சிட்டு அவன் மீது அன்பும் ஆறுதலும் காட்டி அவனை அந்த தீய பழக்கத்தில் இருந்து மீட்டு தன் வாழ்க்கையை அவனுக்காகவும் அவன் வாழ்க்கையை தனக்காகவும் பகிரக் கூடிய நிலை பெற வேண்டும். அந்த இடத்தில் ஒரு பெண்ணிருந்தாலும் அதைத்தான் நாம் என்றால் செய்யச் சொல்லுவம். உண்மையான ஈடுபாட்டுடனான காதல் இருக்குமென்றால். அதைவிடுத்து ஏதோ கழற்றிவிட காரணம் தேடிக் கொண்டிருக்கும் காதலர்கள் போல கஞ்சாவை ஐயோ மறைச்சுப் போட்டியே என்று அதையே காட்டி கழற்றிவிடுறது அவனை மேலும் மேலும் வாழ்வில் பாதிப்படையப் பண்ணுமே தவிர வாழ்வில் பற்றுதலை அளிக்காது. இப்ப எல்லாம் ஆண்கள் பெண்களைக் கவர தங்களை நல்ல பிள்ளைக்கு காட்டிக்குவாங்க. நல்லாவே நடிக்கிறாங்க. அவங்களை விட இவன் பறுவாயில்லை காதலிலையாவது நடிக்காம இருக்கான் என்றால். மறைச்சிட்டானே என்று கோவிக்கிறது அர்த்தமில்லை. அதை பெரிசா தூக்கிப் பிடிக்கிறதும் சரியல்ல. நீங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவர் என்றால் அவன் சொல்லி இருப்பான். அவன் மறைச்சான் என்றால் அதற்கு அவள் மீதுள்ள காதல் தான் காரணம். உண்மையில் அதுதான் காரணம் என்றால் அவன் மன்னிக்கப்பட வேண்டியவனே..! வாழ்க்கையில் பிறந்தது முதல் எத்தனை பொய்களை மறைப்புக்களை நீங்கள் உங்கள் பெற்றோருக்கு செய்திருப்பீர்கள்..! அவர்கள் மன்னிக்கவில்லையா..??! ஏன் அவனை மட்டும் தண்டிக்க கங்கணம் கட்டி நிற்கிறீர்கள். காரணம் உங்களுக்கு அடுத்த தேர்வுக்கு இன்னொருத்தன் வாயால் வீணி வடிய காத்திருப்பான் என்ற நிலை உள்ளதால் தானே... அதைத்தான் மேற்குல கட்டுப்பாடற்ற நிலை போதிக்கிறது. மனிதனிடம் சகிப்புத்தன்மையை அகற்றி ஒருவரின் சிறிய தவறுகளை பெரிதாக்கி மனிதாபிமானம் அற்று சிந்தித்து தெரிவுகளை அதிகம் வழங்கி மனித வாழ்வை சீப்பாக்கி மலினப்படுத்துகிறது. அதுதான் மனித உயிர்களும் மனிதமும் மதிப்பற்றுப் போயுள்ளன. எங்கும் போலிகளும்.. தெரிவுகளும்.. கூத்தடிப்புகளும்.. குற்றங்களும்.. வாழ்வில் படிப்பற்ற நடத்தைகளும்.. ஒழுக்கமற்ற வாழ்வியலும்.. என்று சீரழிவுகள் தொடர்கின்றன.

ஒரு விசயத்தை ஒப்பீடு செய்யும் போது பொருத்தமானதை ஒப்பீடு செய்யனும். நெடுக்ஸ்சும், குறுக்ஸ் என்று ஒப்பீடு செய்யலாம் பட் அம்மா, அப்பா, மேல இருக்கிற பாசத்தையும், காதலர்கள் இடையே உள்ள பாசத்தையும் ஒப்பீடு செய்ய முடியாது. அம்மா, அப்பா பாசம் என்றது வேற, அவர்கள் என்ன செய்தாலும் பொறுத்திட்டு இருக்க தான் வெணும் நீங்கள் நு{று வீதம் சரி பட், காதல் என்ற பெயரில் அளவுக்கதிமான, உரிமைகளை வழங்க முடியாது. சிலரின் ஆசா பாசங்களை தெரிந்து விலகுதல், உங்கள் கண்னுக்கு தவறாக பட்டிருக்கு. இது நல்லாவா இருக்கு? நீங்களே சொல்லுங்க நீங்க ஒருத்தியை லவ் பண்ணி அவள் ஏதாவது விடையத்தில் தவறு செய்தால் மன்னச்சு விட்டிடுவியளோ? அதுவும் ஏதாவது உங்கள் வாழ்கை பாதிக்க கூடிய விடையம் என்றால்? சும்மா எழுத கூடாது கொஞ்சம் ஜேனரல் நோலேஜ் வேணும். அது உங்க கிட்ட நிறையவே இருக்கனும் பட் என்ன அதை யூஸ் பண்ண மாட்டேன்கிறீங்க.

நீங்கள் சொல்லறது கி.முக்கு காலம். எல்லாவற்றையும் சகித்து வாழுதல் என்றதுக்கு நீங்கள் " அர்ப்பணிப்பு" என்று புதுப் பதத்தை பாவித்திருக்கிறீங்களே தவிர அடிப்படையில இரண்டுக்கும் வேறு பாடில்லை. நீங்கள், கொலை செய்தாலும், ஒருத்தி உங்க கூட வாழனும் என்றா, அது நடைமுறைச்சாத்தியமற்றது. ஒருத்தி உங்களை கொலை செய்யுமளவுக்கு வந்தாலும் அதை நீங்கள் சகிச்சுக்கிட்டு வாழுவீங்களா? என்பது சந்தேகமே ஏன் என்றா, எல்லாவற்றுக்கு முதல் சுயநலமே மனிதப்பண்பு.

கொலை செய்யும் அளவுக்கு பெண்ணோ ஆணோ இருந்தால் அது மனித இயல்பற்ற நிலை. மிருகங்களோடு மனிதன் வாழ முடியாது. நாங்கள் இங்கே மனிதர்கள் என்று வரையறுக்கக் கூடிய நடத்தைகளை காண்பிப்பவர்கள் பற்றிக் கதைக்கிறம் பறவைகள். சுயநலமற்ற நிலை காதலர்கள் மத்தியில் வேண்டும் என்பதைத்தானே வலியுறுத்திக் கொண்டிருக்கிறம். சுயநலம் பூர்தியாகும் வரை பலப்பல காதலர்களை காலத்துக்கு காலம் தேர்வு செய்ய வேண்டும் என்பதுதான் சுயநலத்தை நிலைநாட்டுகிறது.

உங்கள் கிமு அர்ப்பணிப்புக்கு விளக்கம் மேல முன்னைய கருத்தில் இருக்கு..!

ஒரு சின்ன திருத்தம் நெடுக்ஸ், தாயகத்தில பாத்தீங்கள் என்டா, விவாகரத்து பெறாமல் குடும்பங்கள் பிரிஞ்சிருக்க, ஆனால் இங்க எல்லாத்துக்கும் சட்டம் தேவைப்படுறதால உங்கட கண்ணுக்கு தெரியுது. கள்ளக்காதல் என்றா என்ன அது? இப்ப ஒரு ஆணும் பெண்ணும் பேசினாலே காதல் என்று கதைக்கிறதா? இல்லாட்டி தனது பழைய நண்பர்களோடு, ஏதாவது நிகழ்வில் பங்கு பற்றுவதா? ஏனெனில் நீங்கள் சொல்லும் விடையங்கள் தவிர, புகலிடத்தில், தூற்றுதல், என்பதும் அதிகம். அவளை அங்கே கண்டேன், அவனை அந்த பாரில் அவளோடு பாத்தேன், இது இங்கே தான் அதிகம்.

ஏன் இங்க மட்டும் விவாகரத்து எடுக்காம பிரியல்லையோ.. புகலிடத்தில் எல்லாமே அளவுக்கு அதிகமாகவே போயிட்டிருக்கு என்று சர்வதேச நிறுவனங்களே எச்சரிக்கும் போது நீங்க என்னடாண்னா... தாயகத்தையே பழிக்க நினைக்கிறீர்கள்.. செவிலிநாட்டுக்காக..!

சில ஆண்களுக்கு பல பெண்கள் போல ஒன்றோட மனசு திருப்திப்படுறதில்லைப் போல. அதுதான் புறணி சொல்லியே பெண்களின் மனசில ஐஸ் கட்டி வைச்சு.. இடம் பிடிக்க நினைக்கிறாங்க போல. இப்ப பாருங்க காதலிக்கிறவங்க.. நீங்க என்ன செய்யுறீங்க என்ன படிச்சிருக்கீங்க எங்க இருக்கீங்க என்று தான் கேப்பினம். காதலுக்கும் படிப்புக்கும் தொழிலுக்கும் இருக்கிற நிலைக்கும் என்ன இருக்கு..??!

ஆக தேவையோட தேர்வு செய்ய காதல் என்றதை நிறையவே நயவஞ்சக மன வலைகளில் வைச்சுக் கொண்டு பெண்கள் பலரும் ஆண்கள் சிலரும் அலையுறது.. முற்போக்கு.. அதாவது கட்டுப்பாடற்ற ஆண் பெண் தேர்வுக்கு.. அவசியம்..! வந்திட்டாங்கையா.. புறணி சொல்லி ஆட்தேர்வு செய்யுற அலைவுக் கூட்டங்களுக்கு அங்கீகாரம் வாங்க..!

இங்க தான் பிழைவிடுறீனம். பெஜில் விடப் போறன் என்று கொண்டு எவரும் சோதனைக்குப் படிப்பதோ அல்லது சோதனை எழுதுவதோ அல்ல. ஒருக்கா பெஜில் விட்டிட்டன் என்றதுக்காக படிப்புக்கே முழுக்குப் போடுறதும் இல்லை. சோதனை எழுதலாம் என்றதுக்கா பல தரம் எழுதலாம் தானே என்ற சிந்தனையில படிச்சா எப்படி... பாசகிறது. இந்தக் காதல் என்று கணக்க அளக்க முதல் ஒருத்தரை அல்லது ஒருத்தியைக் காதலிச்சு அவரைப் முழுசாப் புரிஞ்சுக்க முற்பட முதலே அடுத்த காதலுக்க தாவுற எண்ணம் உள்ளவை மத்தியில் எப்படி புரிந்துணர மனசும் முயற்சியும் வரும்..!

எவரும் அடுத்த சோதனை எழுதலாம் எண்டு நினைச்சு,வேணும் எண்டு சோதனையில் பெயில் விடுறதில்லை, . அது மாதிரி தான் காதலும் ,, யாருமே தோல்வியடையனும் எண்டு நினைச்சு காதலிப்பதில்லை,... காதல் கல்யாணத்தில் முடியனும் எண்டுதான் காதலிக்கினம்.

அனித்தா மேம் சும்மா கதையளக்காதேங்கோ 4 - 5 வருசம் காதலிச்சு பார்த்திட்டு அப்புறம் கலியாணம் முடிப்பமென்று.. இல்லைன்னா ஒரு சாட்டைச் சொல்லி காய் வெட்டிட்டு அடுத்ததை 4 - 5 வருசத்துக்கு காதலிச்சு அதுவும் சரிவரல்லைன்னா.. பேசாம சன்னியாசம் போகலாம் என்டுவியள் போல இருக்கே..! உதுதான் இப்ப முற்போக்கு... வேற.. நாய் வாழ்விலும் கேடு..!

ஹா ஹா ... அப்படி காய் வெட்டிட்டு போறத்துக்கு ...ஏன் இந்த 4-5 வருசம் ..... ? அப்படியான காய் வெட்டுற காதல் எண்டால் உண்மையா 4-5 வருசம் காதலிக்கமாட்டினம். அது ஒரு... ஒரு மாதமோ 1 வருசமோ இருக்கும் . உண்மையான காதலாயிருந்தால் 4-5 வருசம் வரையும் போகும் . உண்மையாக் காதலிக்கிறவை எவருமே அப்படித்தான். . 3-4 வருசம் காதலிச்சு கல்யாணம் கட்டுறைவையிண்ட லைவ் நல்லாயிருக்கும் எண்டது என்னுடைய கருத்து. :)

நமக்கு அம்மா அப்பா பிடிக்கல்லை என்றா ஏன் இன்னொரு அப்பா அம்மாட்டப் போகிறமில்லை. அங்க கட்டுப்பாடு போட்டு மனசை வைச்சிருக்கிறமா இல்லையா. இன்னொரு அம்மா அப்பாட்டப் போகவும் அவர்கள் கவனிக்கவும் அன்புகாட்டவும் என்று இருந்தா நிச்சயம் நீங்கள் போவீர்கள். பட் நாங்கள் சொல்லுறம் எவ்வளவுதான் கொடுமை செய்தாலும் அம்மா அப்பாவைப் புரிஞ்சு கொண்டு அவர்கள் புரிஞ்சும் படி எங்களையும் மாற்றிக் கொண்டு வாழ வேண்டும் என்று.

இது என்னது, யாரும் அம்மா அப்பா அடிக்கினம், கட்டுப்பாடு போடினம் எண்டதுக்காக அடுத்த அம்மாவைத் தேடுவினமா.? யாராவது நம்மட ஆக்கள் செய்து கேள்விப்பட்டிருக்குறீங்களா? அம்மா அபபா 20 வருசமா நம்ம கூட இருக்கினம் , அவையளப் பத்தி நமக்கு தெரியும் அவையேன் எங்களுக்கு இப்படிச் சொல்லினம் எண்டு.

ஆக எவ்வளவுதான் காத(லி)லன் கூடாவதவராக இருந்தாலும் , காதலிச்ச குற்றத்திற்காக கல்யாணம் கட்டனும் .. காதலைச் சொல்லும் வரை ,நல்லவராக நடந்து, பொய் எல்லாம் சொல்லுவினம், காதலைச் சொன்னதும் ஏமாத்துவினம் ,அவையை புரிஞ்சு எங்களை நாங்கள் மாற்றிக் கொண்டு வாழனும் எண்டு சொல்லுறீங்க. இது என்ன நியாயம் ??? அது எல்லாம் ஊர்ல நடந்திருக்கலாம் காதலன் எப்படியானவர் எண்டு தெரிந்தும் அவரை கல்யாணம் கட்டிருக்கலாம். அதுதான் ஊர்ல காதல் தோல்வி இல்லையெண்டுறீங்களோ ??? B)

புரிந்துணர்வு என்பது விட்டுக்கொடுப்புக்களின் மூலமும் மன்னிப்புக்களின் மூலமும் ஒரு நிரத்தரத்தன்மையான உறவுநிலைக்கான மனநிலையும் உள்ள போது மட்டுமே வரும். 3 வருசம் ஜஸ்ட் பழகுவம்.. பிடிக்குதோ பாப்பம் என்றால் அங்க பிடிக்காமல் இருக்க பலது முளைக்க வைக்கப்படும். அந்த 3 வருசத்துக்குள்ள நிலையில்லாத மனசுள்ளவங்க அடிக்கடி மாறிட்டா... எல்லாம் அம்போ. ஆக ஒன்றோட அர்ப்பணிப்போட வாழ நினைக்கிறதுதான் எல்லாத்துக்கும் உறுதுணையாகும். வாழ்கையும் அர்த்தப்படும். சுவையாகும். சலனம் கலக்கம் கபடம் இல்லாததாய் இருக்கும். இது 5 கூடப் பழகிட்டு ஒவ்வொன்றையும் நினைச்சு வாழ்க்கையை நரகமாக்கிறதுதான் மிச்சம்..! மனதின் வடுக்களை மறைக்கலாம்.. மறக்க முடியாது..!

அப்ப புலத்தில் 3 வருசம் பழகி கல்யாணம் கட்டின ஒருவரையும் பார்க்கயில்லையோ ..... நீங்கள் புலத்திலா இருக்கிறீங்கள். ?

உங்களை யாரு 5 பேர் கூட பழகிட்டு ஒவ்வொன்றையும் நினைச்சு வாழ சொன்னது. யாருக்கு நேரம் இருக்கு அப்படி பழக ஹா ஹா. :lol:

எல்லாருக்கும் காதல் இப்படி ஆவத்தில்லை தானே. எல்லாரும் நினைக்கிறது தான் ஒருத்தரையே காதலிக்கனும் அவரையே கல்யாணம் முடிக்கனும் எண்டு... அப்படித்தான் நாங்களும் நினைக்கிறம். காதலிக்கின்றவர் நல்லராக இருந்தால் முடிந்தவரை முயற்சி செய்து அவரையே கல்யாணம் கட்டனும். அம்மா அப்பா சம்மதிக்காட்டியும் , "சம்மதம்" என்று சொல்ல வைக்க வேண்டியதும் நம்மட முயற்சியே . அம்மா அப்பா சம்மதிக்கினம் இல்லை எண்டுட்டு காதலை விட முடியாது. எல்லாம் முயற்சியே.... அதாவது நான் சொல்லுறது ஒருத்தரையொருத்தர் புரிந்து கொண்ட உண்மையான காதலர்களுக்கு.

இப்ப எல்லாரும் சந்தியா,ஐசு,ஸ்ரேயா ,பாவனா எண்டு எல்லாரையும் காதலிக்கினம் அவைக்கு தெரியுமா நீங்களெல்லாம் காதலிக்கிறது பிறகு சொல்லுறது சந்தியா என்ன எமாத்திட்டா ... ஐசு என்னை விட்டுட்டா... எண்டு கத்தி என்ன பிரியோசனம்...!பிறகு கத்திப் போட்டு நீங்க வேற யாரையும் கல்யாணம் கட்டத்தான் போறீங்கள் ... ! ;)

தாயகத்தோட ஒப்பிடேக்க விவாகரத்து காதல் கள்ளக் காதல் எல்லாமே புகலிடத்தில அதிகம்..!

இது எல்லா நாட்டிலும் இருக்கு. இந்தியால கூட , புலத்தில் உள்ளவையை மட்டும் குறை காணாதீங்கள்.

எங்களுக்கு தெரிஞ்ச ஒரு ஆக்கள். அவங்க 3 பெண் பிள்ளைகளை தாயகத்தில் விட்டுட்டு அவா வேலைக்காக வெளி நாட்டுக்கு வந்துட்டா . அவாவின் கணவர், பிள்ளைகளை கவனிப்பது குறைவு, பிள்ளைகள் கவனிப்பார் இல்லாமல் வளந்திருக்கு,சண்டையால் எல்லாரும் இடம்பெயர்ந்து போயிருக்கினம் ,,,,

இடம் பெயர்த இடத்திலயே அங்கயே உள்ள Boys யை காதலிச்சு கல்யாணம் கட்டிட்டிதுகள் .... வயதோ,,, குறைவு அந்த பிள்ளைகளுக்கு எப்படியும் 15 -16 தான் இருக்கும் அந்த 3 பெண் பிள்ளைகளும் சின்ன வயதிலே கல்யாணம் கட்டிட்டினம்.அதுல மூத்த பிள்ளையில் கணவர் விட்டிட்டுப் போய்ட்டாராம் ..... அவுங்க அம்மா டெலிபோன் எடுத்து எங்க அம்மாவிடம் சொல்லி கவலைப்பட்டாங்க .கவலையா இருந்தது.சோ கூட அங்க சின்ன வயதில் அம்மா அப்பாவக் கேக்காமல் கல்யாணம் எல்லாம் நடக்குது. இப்ப கூடுதலா அப்படித்தான் அங்க நடக்கிறதா சொல்லுறாங்க. பாவம் எல்லாம் இந்த இடம்பெயர்வால் .. ஓவ்வொருத்தரின் வாழ்வு இப்படியாக போகுது ! :(

என்னும் கொஞ்ச நாளில் சொல்லுங்க புலத்தில் உள்ள ஆக்களைப் பார்த்துத்தான் தாயகத்தில் உள்ளவர்கள் பழகினவை எண்டு...! :lol:

Edited by அனிதா

  • கருத்துக்கள உறவுகள்

அனித்தா மேம் சும்மா கதையளக்காதேங்கோ 4 - 5 வருசம் காதலிச்சு பார்த்திட்டு அப்புறம் கலியாணம் முடிப்பமென்று.. இல்லைன்னா ஒரு சாட்டைச் சொல்லி காய் வெட்டிட்டு அடுத்ததை 4 - 5 வருசத்துக்கு காதலிச்சு அதுவும் சரிவரல்லைன்னா.. பேசாம சன்னியாசம் போகலாம் என்டுவியள் போல இருக்கே..! உதுதான் இப்ப முற்போக்கு... வேற.. நாய் வாழ்விலும் கேடு..!

எல்லாத்தையும் நம்ம தலை விதி அது இது என்று சகிச்சுக்கிட்டு நிம்மதி இல்லாமல் வாழுவதை (ஊரில் பல பெண்கள், ஆண்களை போல) இப்படி சில காலத்திற்க்கு பின் சரி வரலை என்று பிரிந்து...வாழ்வது எவ்ளோ நல்லது. அதை தப்பு..கலாச்சார இழிவு என்று நினைத்தால்..மனுசன் வாழுறது ஒரு ஜென்மம்..அதிலும் பிடிக்காத ஒருவரோட கஷ்டப்பட்டு வாழுறது மனிசனோட வாழ்வுக்கே வாற இழிவு!!!!!!!

வெளிநாட்டில பசங்களுக்கு நல்ல வாய்ப்பு..வெளிநாட்டு பெண்கள் பிரீயாக பழகுவார்கள். ஒரு கையில் டெலிபோனில் தமிழ் கேர்ள் ப்ரெண்டோட கதைச்சுக்கிட்டு மற்ற கையை வெள்ளைக்காரிண்ட தோளில போட்டு க்கிட்டு உல்லாசமா இருக்காங்க. திருமணம் என்றதும் அந்த ஒண்டும் அறிய பொண்ணு இருக்கா..தமிழ் பொண்ணு! இல்லை அவா புரிஞ்சுக்கிட்டு விலகிட்டாவா..இருக்கவே இருக்கு வெளிநாட்டை பற்றி அறியாநம்ம ஊரு அப்பாவி தமிழ் பொண்ணுங்க..

இப்படியான ஆக்கள் இருக்கையில் அனி சொன்னது போல 4,5 வருடங்களே காணாது 10 வருசம் வேணும் புரிஞ்சுக்க.

அதுவும் செய்து பழகியதில்...எப்படி எப்படி எல்லம் கதைக்கணும், மறைக்கணும் என்று நன்றாக அறிஞ்சு வைச்சிருக்கினம். இவர்களோடு அப்பா,அம்மாவை அட்யஸ்ட் பண்ணுவது போல பண்ணி வாழணும் என்று நீங்கள் சொல்கிறீர்கள்..........

ஆனாலும் சிலர் இதுக்கு விதி விலக்காக இருக்கிறார்களில்லை என்று சொல்லவில்லை. பெண்களும் சில தவறாக செய்கிறார்கள். ஆனால் ஆண்களே அதிகம்..கலாச்சாரத்தை பற்றி பீத்திக்கிறதும் அவர்களே அதிகம்!!!!

ப்ரியசகி உங்களுக்கு கொஞ்சம் என்றாலும் ஒழுக்கமா இருக்கனும் வாழ்க்கை என்ற சிந்தனை இருக்குது. உங்கட அப்பா அம்மாவைத்தான் அதுக்காக பாராட்ட வேணும். இருந்தாலும் இந்த கட்டுப்பாடற்ற மன நிலையில உள்ளவர்களோட சேர்தால என்னவோ கொஞ்சம் தளம்பல்கள் இருக்கு..!

சுயமா உள்ள பகுத்தறிவை யூஸ் பண்ணி தெளிஞ்சுக்கோங்கோ. எப்பவும் மனிதாபிமானம்.. அடுத்தவரை மனக்கஸ்டத்தில விடுறது.. தனிமைக்குள்ள தள்ளுறது.. விரக்தியில வீழ்த்திற இப்படி வேலைகளை செய்யேக்க மனதளவில் குற்ற உணர்வை உணரக் கற்றுக் கொள்ளுங்கள். இப்ப எல்லாம் பெண்கள் லவ் பண்ணிக்கிறாங்க அப்புறம் சிம்பிள் ரீசன் சொல்லுவாங்க ஐ டோண்ட் லைக் யூ.. அப்படின்னுட்டு எந்தக் காரணும் இல்லாமல்.. எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் அடுத்தவன் கூட ரெஸ்ரோரண்டில திண்டிட்டு இருக்காங்க. இல்ல பப்பில கிளப்பில கை கோர்த்திட்டு ஆடிக்கிறாங்க. வேணாம் நமக்கு இந்தச் சுதந்திரம். நம்ம தமிழர்களுக்கு என்று வாழ்வியல் விழுமியம் இருக்கு. அதை தெரியவும் காக்கும் படி வாழவும் விளைவோம்..! என்பதுதான் நாம் வலியுறுத்துவது.

இந்தக் மனித மனக் கட்டுப்பாடுகள் அற்ற நரகங்களை நாகரிகம் என்று தாயகத்துக்கு ஏற்றுமதி செய்ய நினைச்சீங்க.. அது ரெம்பவே நம்மை சீண்டிற விசயமாகிடும்..! ஜாக்கிரதை. இப்பவே போனது.. நல்ல காலம் இந்த சமருக்க பாதை திறக்கான் ஆமிக்காரன் சோ.. இரண்டு பக்கத்தால சீரழி இருந்தது இப்ப ஒரு பக்கத்தாலதான் என்று அமைதிப்பட முடியுது. உந்தக் கூத்துக்களோட வன்னிக்கு தாராளமாப் போயிட்டு வாங்க. மிச்சம் அவங்க பாத்துக்குவாங்க..! :lol::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எவரும் அடுத்த சோதனை எழுதலாம் எண்டு நினைச்சு,வேணும் எண்டு சோதனையில் பெயில் விடுறதில்லை, . அது மாதிரி தான் காதலும் ,, யாருமே தோல்வியடையனும் எண்டு நினைச்சு காதலிப்பதில்லை,... காதல் கல்யாணத்தில் முடியனும் எண்டுதான் காதலிக்கினம்.

நினைக்கக் கூடாது.. காதலிக்கும் போதே கலியாணமும் ஆகிடுது என்பதுதான் யதார்த்தமே. கலியாணம் என்பது சமூகச் சடங்கு. சமூக அங்கீகாரத்தை பெறுவதற்கானது. ஆனால் குறித்த ஆணும் பெண்ணும் காதலிக்கும் போதே கலியாணம் ஆகிடும். அதுதான் உண்மை.. அதுமட்டுமில்ல அங்கால சிலது சாந்தி முகூர்த்தமும் முடிச்சிட்டு கலியாணம் வேணாம் என்று காதலை கட் பண்ணுதாம்.. என்னமா இருக்கு உலகத்தில ஆக்களை ஏமாற்ற ஒவ்வொரு காரணங்கள் காட்டுறது.. இப்ப Love is Joy from Multi Choice என்றாச்சு..!

ஹா ஹா ... அப்படி காய் வெட்டிட்டு போறத்துக்கு ...ஏன் இந்த 4-5 வருசம் ..... ? அப்படியான காய் வெட்டுற காதல் எண்டால் உண்மையா 4-5 வருசம் காதலிக்கமாட்டினம். அது ஒரு... ஒரு மாதமோ 1 வருசமோ இருக்கும் . உண்மையான காதலாயிருந்தால் 4-5 வருசம் வரையும் போகும் . உண்மையாக் காதலிக்கிறவை எவருமே அப்படித்தான். . 3-4 வருசம் காதலிச்சு கல்யாணம் கட்டுறைவையிண்ட லைவ் நல்லாயிருக்கும் எண்டது என்னுடைய கருத்து. :)

இந்தக் கால அளவு ஆளாளுக்கு வேறுபடும். சிலது ஒரு மாசத்திலேயே அடுத்தது பார்த்திடும்.. சிலது 1 வருசம் எடுக்கும்.. சிலதுக்கு 3 , 4 வருசமும் எடுக்கும். கழற்ற வேணும் என்று நினைச்சு வாழறவைக்கு கழற்ற நேரம் காலமா தேவை. கலியாணதுக்கு அப்புறமும் கழற்றிடலாம் தானே..! அங்க மட்டும் என்ன குறைச்சலா..!

இது என்னது, யாரும் அம்மா அப்பா அடிக்கினம், கட்டுப்பாடு போடினம் எண்டதுக்காக அடுத்த அம்மாவைத் தேடுவினமா.? யாராவது நம்மட ஆக்கள் செய்து கேள்விப்பட்டிருக்குறீங்களா? அம்மா அபபா 20 வருசமா நம்ம கூட இருக்கினம் , அவையளப் பத்தி நமக்கு தெரியும் அவையேன் எங்களுக்கு இப்படிச் சொல்லினம் எண்டு.

ஆக எவ்வளவுதான் காத(லி)லன் கூடாவதவராக இருந்தாலும் , காதலிச்ச குற்றத்திற்காக கல்யாணம் கட்டனும் .. காதலைச் சொல்லும் வரை ,நல்லவராக நடந்து, பொய் எல்லாம் சொல்லுவினம், காதலைச் சொன்னதும் ஏமாத்துவினம் ,அவையை புரிஞ்சு எங்களை நாங்கள் மாற்றிக் கொண்டு வாழனும் எண்டு சொல்லுறீங்க. இது என்ன நியாயம் ??? அது எல்லாம் ஊர்ல நடந்திருக்கலாம் காதலன் எப்படியானவர் எண்டு தெரிந்தும் அவரை கல்யாணம் கட்டிருக்கலாம். அதுதான் ஊர்ல காதல் தோல்வி இல்லையெண்டுறீங்களோ ??? B)

ஊரில ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கலியாணத்தைக் கட்டு என்று சொல்லுவினம். அது அநியாயம். இங்க கிரடிட் காட் இருக்கு என்று ஒரு பொய் சொன்னாலே போதுமாமே..! யார் தான் பொய் சொல்லேல்ல உலகில. காதலிக்கும் போது அப்பா அம்மாக்கு மறைச்சு சொல்லாமல் தானே காதலிக்கிறீங்க. 20 வருசம் வளர்த்தவங்களுக்கே பொய் மறைப்புச் செய்யேக்க நீங்கள் உணராத குற்றத்தை உங்களுக்கு இன்னொருத்தர் செய்யுறது எண்டதும் ஏன் தூக்கிப் பிடிக்கிறீங்க. காரணம் நீங்கள் அதைக் குற்றமாக்கி குறிப்பிட்டவரை கழற்றி விடுறதுக்கு அதை வாய்ப்பாக்க முனையுறீங்க என்பதாலதான். நீங்க அப்பா அம்மாவுக்கு மறைச்சதுகளுக்கு பொய் சொன்னதுகளுக்காக அவங்க தண்டிச்சா...?? தினமும் தண்டனை தன் வாழ்வாகவும் கூடும்.

ஆக பொய் மறைப்பு அவற்றின் தன்மையைப் பொறுத்து அதை பரிசீலிச்சு அதற்காக காரணங்களை பகிர்ந்து பேசி விலக்கிக் கொண்டு காதலில உறுதியா இருக்க வேணுமே தவிர அதைக் காட்டி காதலை வெட்டுறது எப்படா பொய் சொல்லுவாங்க கழற்றிவிடுவம் என்று நினைச்சுக் காதலிக்கிறது போல எல்லோ இருக்கு..! இது தாயகத்தில ரெம்பக் குறைவு. புகலிடத்தில அதுவும் இணைய உலகில அடிக்கடி நிகழுது..!

அப்ப புலத்தில் 3 வருசம் பழகி கல்யாணம் கட்டின ஒருவரையும் பார்க்கயில்லையோ ..... நீங்கள் புலத்திலா இருக்கிறீங்கள். ?

உங்களை யாரு 5 பேர் கூட பழகிட்டு ஒவ்வொன்றையும் நினைச்சு வாழ சொன்னது. யாருக்கு நேரம் இருக்கு அப்படி பழக ஹா ஹா. :)

புகலிடத்தில 3 என்ன 8/ 10 வருசம் பழகிட்டு கழற்றிவிட்டதைத்தான் கண்டிருக்கிறம்..!

5 குறைச்சுச் சொல்லிட்டமே என்று கவலைப்படுறீங்க போல. உண்மைதான் யுனில செமிஸ்ரருக்கு ஒன்று என்று காதலிக்கேக்கவே 12 வந்திடும்.. அதுக்கு முன்னாடி பின்னாடி.. ம்ம்ம்.. கிட்டத்தட்ட 30.

எப்படி அந்த 30 யையும் மறந்திட்டு கலியாணம் கட்டி ஒருத்தர் கூட..... வாழினம்.. புகலிடத்தில் பெண்கள் பலே கில்லாடிகள் போல இருக்கே..! :(

எல்லாருக்கும் காதல் இப்படி ஆவத்தில்லை தானே. எல்லாரும் நினைக்கிறது தான் ஒருத்தரையே காதலிக்கனும் அவரையே கல்யாணம் முடிக்கனும் எண்டு... அப்படித்தான் நாங்களும் நினைக்கிறம். காதலிக்கின்றவர் நல்லராக இருந்தால் முடிந்தவரை முயற்சி செய்து அவரையே கல்யாணம் கட்டனும். அம்மா அப்பா சம்மதிக்காட்டியும் , "சம்மதம்" என்று சொல்ல வைக்க வேண்டியதும் நம்மட முயற்சியே . அம்மா அப்பா சம்மதிக்கினம் இல்லை எண்டுட்டு காதலை விட முடியாது. எல்லாம் முயற்சியே.... அதாவது நான் சொல்லுறது ஒருத்தரையொருத்தர் புரிந்து கொண்ட உண்மையான காதலர்களுக்கு.

கடைசியில என்றாலும் சொந்த உணர்வைச் சொன்னீங்களே. இதுதான் பல ஆண்களின் எதிர்பார்ப்பும். அவங்களும் தானும் தனக்கு என்று ஒருத்தியும் என்றுதான் வாழ விரும்பினம். குறிப்பா தமிழ் விழுமியங்களை மதிக்கிற ஆண்கள்..! புகலிடத்தில இந்த நிலை அறுந்து கொண்டிருக்குது. வெள்ளையர்களிடத்தில் கூட வன் அண்ட் ஓன்லி லவ் என்ற நிலை இருக்கு..!

இப்ப எல்லாரும் சந்தியா,ஐசு,ஸ்ரேயா ,பாவனா எண்டு எல்லாரையும் காதலிக்கினம் அவைக்கு தெரியுமா நீங்களெல்லாம் காதலிக்கிறது பிறகு சொல்லுறது சந்தியா என்ன எமாத்திட்டா ... ஐசு என்னை விட்டுட்டா... எண்டு கத்தி என்ன பிரியோசனம்...!பிறகு கத்திப் போட்டு நீங்க வேற யாரையும் கல்யாணம் கட்டத்தான் போறீங்கள் ... ! ;)

அது காதல் அல்ல. அழகுக் கவர்சி. அவங்க போட்டிருக்கிற மேக்கப்பில கவரப்பட்டு அப்படி பிதட்டிக்கிறாங்க. மேக்கப் கலையேக்க அதுவும் கலைஞ்சிடும். டோண்ட் வொறி.

இது எல்லா நாட்டிலும் இருக்கு. இந்தியால கூட , புலத்தில் உள்ளவையை மட்டும் குறை காணாதீங்கள்.

குறைச்சு மதிப்பீடேல்ல. ரெம்பவே குறைகளை மதிப்பிட முடியுது புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில. அதை அவங்க களைய சிந்திக்க வேணும். இந்தக் குறைகளை தாயகத்துக்கு காவுறதை ஸ்ரொப் பண்ண வேணும். :lol:

எங்களுக்கு தெரிஞ்ச ஒரு ஆக்கள். அவங்க 3 பெண் பிள்ளைகளை தாயகத்தில் விட்டுட்டு அவா வேலைக்காக வெளி நாட்டுக்கு வந்துட்டா . அவாவின் கணவர், பிள்ளைகளை கவனிப்பது குறைவு, பிள்ளைகள் கவனிப்பார் இல்லாமல் வளந்திருக்கு,சண்டையால் எல்லாரும் இடம்பெயர்ந்து போயிருக்கினம் ,,,,

இடம் பெயர்த இடத்திலயே அங்கயே உள்ள Boys யை காதலிச்சு கல்யாணம் கட்டிட்டிதுகள் .... வயதோ,,, குறைவு அந்த பிள்ளைகளுக்கு எப்படியும் 15 -16 தான் இருக்கும் அந்த 3 பெண் பிள்ளைகளும் சின்ன வயதிலே கல்யாணம் கட்டிட்டினம்.அதுல மூத்த பிள்ளையில் கணவர் விட்டிட்டுப் போய்ட்டாராம் ..... அவுங்க அம்மா டெலிபோன் எடுத்து எங்க அம்மாவிடம் சொல்லி கவலைப்பட்டாங்க .கவலையா இருந்தது.சோ கூட அங்க சின்ன வயதில் அம்மா அப்பாவக் கேக்காமல் கல்யாணம் எல்லாம் நடக்குது. இப்ப கூடுதலா அப்படித்தான் அங்க நடக்கிறதா சொல்லுறாங்க. பாவம் எல்லாம் இந்த இடம்பெயர்வால் .. ஓவ்வொருத்தரின் வாழ்வு இப்படியாக போகுது ! :(

அவர்கள் உள்ளூருக்க இடம்பெயர்ந்து அப்படி.. உங்க வெளிநாட்டுக்கு இடம்பெயர்ந்து நடக்கிறதோ.. அந்தோ பரிதாபம். 54 வயசில விவாவகரத்து வாங்கி 3 பிள்ளைகளை தவிக்க விட்டிட்டு இன்னொரு ஆண் கூட வாழப் போன தமிழ் பெண்ணும் இருக்குங்க. அதுக்கு என்ன தண்டனை கொடுக்கப் போறீங்க.

இன்னொரு பெண். கணவரும் பிள்ளைகளும் ஜேர்மனியில். அவா லண்டனுக்கு வந்து இன்னொருவரோட குடும்பம் நடத்தல்..! சில வேளை இந்தச் செய்தியை சம்பந்தப்பட்டவர்கள் கூட வாசிக்க முடியும். அவர்களுக்கு அவர்களின் தவறை சுட்டிக்காட்டவே இதை இங்க குறிப்பிடுறம். பழிப்புக்கல்ல..!

என்னும் கொஞ்ச நாளில் சொல்லுங்க புலத்தில் உள்ள ஆக்களைப் பார்த்துத்தான் தாயகத்தில் உள்ளவர்கள் பழகினவை எண்டு...! :lol:

இன்னும் கொஞ்ச நாளில அல்ல ஏலவே தொடங்கிட்டுது..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் நீங்க தவறான அணுகு முறைல அணுகுறீங்க, நீங்க சொல்லுறது போல இங்கே எல்லரும் இல்லை வேணுமென்றால் உம்மைப் போல சிலர் இருக்கலாம் அப்படி ஆனல் எல்லோரும் அப்படியில்லை, ஊரில் எவருமே கதல் பண்ணி கல்யாணம் பண்ணினதில்லைய்யா.....? இல்லை கருத்து வேறு பாட்டால் பிரிந்த்ததில்லையா...........? ஊரில் யாருமே ஓடினதில்லையா..........? நான் அறிந்தே பலர் ஓடியிருக்கிறார்கள், இங்கேயும் ஓடுகிறார்கள்தான் இல்லை என்று சொல்லவில்லை, உண்மையாக காதலிக்குறார்கள் ஓடுகிறார்கள், நீரே உமது கூற்றில் தடுமாறுகிறீர் உண்மையான காதல் இல்லை என்கின்றீர், அப்புறம் காதல் கல்யாணம் இல்லை என்கிண்றீர், உண்மையாக காதலிக்காமல் எப்படி கல்யாணம் பண்ணுகின்றார்கள்........? காதல் கல்யாணம் பண்ணுகின்ற எல்லாருமே விவாகரத்க்து வாங்குகிறார்களா.......? நூறில் என்பது கல்யாணம் காதல் கல்யாணம்தான், உமது கூற்றுப் படிப் பார்த்தால் 80% ஆனோர் விவாகரத்து வாங்குகிரார்கள் என்றல்லவா தோண்றுகிறது.

சார் சும்மா வாதம் எழுதாதேங்க சார். உலகத்தை உற்று நோக்குங்க. காதல் என்பது காதலாவா புகலிடத்தில இருக்குது...??! தாயகத்தில 2% நடந்த அநியாயங்கலெல்லாம் புகலிடத்தில 40% நடக்குது..! அதையாவது ஏற்றுக்கிறீங்களா..! இல்ல இன்னும் கண்ணை மூடிட்டு உலகம் இருட்டு என்றப் போறியளா..! :lol:

இந்தப் புள்ளிவிபரத்தை எங்கிருந்து பெற்றீர்கள் என்று அறியமுடியுமா?

எல்லாம் சொந்த அனுபவம் போல எருக்கு தூயவன் :lol:

எல்லாம் புலம்பெயர்ந்து உள்ளாக்களை வைச்சுத்தான் எடுத்தது..! அவர்களிட்டத்தானே எதுக்கும் புள்ளிவிபரமே இல்லையே..! அளவு கணக்கிருந்தா எல்லாம் வெளிப்பட்டிடுமில்ல. குத்துமதிப்பா இது. உண்மைல இந்த அளவு கூடத்தான் இருக்கும்..! :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சொந்த அனுபவம் போல எருக்கு தூயவன் :lol:

என்ன புள்ளிவிபரம் ரெக்கோட்டில இல்லை என்ற துணிச்சல் போல. புலம்பெயர்ந்த டமிழர்கள் மத்தியில் நடக்கிற எதுவுக்கும் உருப்படியான புள்ளிவிபரம் இல்லை. தாயகத்திலும் இப்ப அதுதான் நிலை. ஆனால் விடுதலைப்புலிகள் மற்றும் மகளிர் அமைப்பு தரவுகளின் படி சனத்தொகை வீதாசாரப்படி 10%க்கு உள்ள இருந்த விவாகரத்துக்கு புகலிடத்தில் பல மடங்கு அதிகம்..! அதை கவுண்சில் கிளைம் எடுக்க்க வரும் தமிழர்களின் எண்ணிக்கையை வைச்சே கணிக்கக் கூடியதாக இருக்கிறது..! :lol:

யாழ் களத்தில் திருமணப் பொருத்தம் பார்த்தல், மணமகன் தேவை, மணமகள் தேவை, டேட்டிங் போன்ற பகுதிகளையும் தொடங்கினால் சூப்பராக இருக்கும்.

நாங்கள் யாழ் களத்தின் மூலமே கருத்தாடி மணமகனை அல்லது மணப்பெண்ணை கண்டுபிடித்து கலியாணம் செய்தபின், ஏதாவது குடும்பத்தில் பிணக்கு வந்தால் மீண்டும் யாழ் களத்திலேயே வந்து விவாதமும் செய்து தீர்வும் காணலாம்.

மேலும், குடும்பத்தில் பிரச்சனை முற்றிவிட்டால் யாழ் களத்திலேயே திரும்பவும் வந்து கருத்தாடி விவாகரத்தும் செய்துவிடலாம்!

இதற்கு புள்ளிவிபரக் கணக்கு ஒன்றும் தேவைப்படாது. வேண்டுமானால் எமது கலியாணத்தை/விவாகரத்தை/டேட்டிங்கை நீங்கள் ஆதரிக்கிறீர்களா அல்லது இல்லையா என யாழ் களத்தில் வாக்கெடுப்புக்கள் நடாத்தலாம்!

ஆனால், பொய்யான ஐடீக்களுடன் வருபவர்களுடனும், வயசு போன காலத்தில் ஜொள்ளு அடித்துக் கொண்டு திரிபவர்களையும் பற்றி சிறிது அவதானமாக இருக்க வேண்டும். இவர்கள் இந்த யாழ் களத்தின் அருமையான மண மார்க்கட்டில் பல பிரச்சனைகளையும், குழப்பங்களையும் கொண்டு வரக்கூடும். :P :P :lol:

அப்படியே யாழ் களம் கலியாணச் செலவையும் சாந்தி முகூர்த்த ஏற்பாடுகளையும் பிள்ளைகுட்டிகளை பராமரிக்கிற பொறுப்பையும் எடுத்திட்டா இன்னும் லாவகமா இருக்கும். யாழ் மணமார்க்கட் நிரம்பி வழிய வாய்ப்பிருக்கிறது. பெரிசா விளம்பரம் பண்ணுங்கோ.. நிச்சயம் வெற்றி கிடைக்கும்..! :lol:

வயசு போன காலத்தில் ஜொள்ளு என்று நெடுக்காலபோவன் (95) போன்ற எம்மவர்களை அவமதிக்கிறது போல இருக்கு. நாங்க தான் ஏற்கனவே பகிரங்கமா சொல்லிட்டமில்ல வயசும்.. கலியாணம் கட்டி ஊருக்கு ஊர் ஒரு பாட்டியும் வீட்டுக்கு வீடு ஒரு பிள்ளையும் இருக்கு என்று..! தெரியாட்டி தெரிஞ்சுக்கோங்க..! :)

Edited by nedukkalapoovan

யாழ் களத்தில் திருமணப் பொருத்தம் பார்த்தல், மணமகன் தேவை, மணமகள் தேவை, டேட்டிங் போன்ற பகுதிகளையும் தொடங்கினால் சூப்பராக இருக்கும்.

நாங்கள் யாழ் களத்தின் மூலமே கருத்தாடி மணமகனை அல்லது மணப்பெண்ணை கண்டுபிடித்து கலியாணம் செய்தபின், ஏதாவது குடும்பத்தில் பிணக்கு வந்தால் மீண்டும் யாழ் களத்திலேயே வந்து விவாதமும் செய்து தீர்வும் காணலாம்.

மேலும், குடும்பத்தில் பிரச்சனை முற்றிவிட்டால் யாழ் களத்திலேயே திரும்பவும் வந்து கருத்தாடி விவாகரத்தும் செய்துவிடலாம்!

இதற்கு புள்ளிவிபரக் கணக்கு ஒன்றும் தேவைப்படாது. வேண்டுமானால் எமது கலியாணத்தை/விவாகரத்தை/டேட்டிங்கை நீங்கள் ஆதரிக்கிறீர்களா அல்லது இல்லையா என யாழ் களத்தில் வாக்கெடுப்புக்கள் நடாத்தலாம்!

ஆனால், பொய்யான ஐடீக்களுடன் வருபவர்களுடனும், வயசு போன காலத்தில் ஜொள்ளு அடித்துக் கொண்டு திரிபவர்களையும் பற்றி சிறிது அவதானமாக இருக்க வேண்டும். இவர்கள் இந்த யாழ் களத்தின் அருமையான மண மார்க்கட்டில் பல பிரச்சனைகளையும், குழப்பங்களையும் கொண்டு வரக்கூடும். :P :P :lol:

ஆகா மாப்ஸ் எப்படி உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் ஐடியாவா கொட்டுது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.