Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீட்டுக்குள் ஆயுதங்கள் எப்படி வந்ததென்றே தெரியாது: சந்தேக நபர்!

Featured Replies

வீட்டுக்குள் ஆயுதங்கள் எப்படி வந்ததென்றே தெரியாது: சந்தேக நபர்!

 

வீட்டுக்குள் ஆயுதங்கள் எப்படி வந்ததென்றே தெரியாது: சந்தேக நபர்!

யாழில் அண்மையில் ஆயுதங்களுடன் கைதாகிய சந்தேக நபர் ஒருவர் புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் தங்கியிருந்த வீட்டில் ஆயுதங்கள் மீட்கப்பட்டமை உண்மைதான். ஆனால் அவை எவ்வாறு அவரது வீட்டுக்குள் வந்தன என சந்தேகநபருக்கு அறவே தெரியாது. அது தொடர்பில் தேசிய புலனாய்வுப் பிரிவின் அறிக்கையை நீதிமன்று பெறவேண்டும்"  இவ்வாறு சந்தேகநபர் சார்பில் முன்னணிலையான ஜனாதிபதி சட்டத்தரணி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விண்ணப்பம் செய்தார்.

புளொட்டின் முன்னாள் உறுப்பினர் எனச் சந்தேகிக்கப்படும் மானிப்பாயைச் சேரந்த சிவகுமார் (வயது 55) என்பவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்தார். அந்த வீட்டில் முன்னர் புளொட் அலுவலகம் இருந்தது. அந்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ளார். அவரது வீட்டில் புளொட்டின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் வசித்து வந்தார். அவர் அங்கிருந்து வெளியேற மறுப்புத் தெரிவித்துள்ளார். வீட்டு உரிமையாளர் தனது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார்.

நீதிமன்றின் கட்டளையின் அடிப்படையில் கடந்த 19ஆம் திகதி அந்த வீட்டிலிருந்தவரை வெளியேற்ற யாழ். மாவட்ட நீதிமன்றப் பதிவாளருடன் யாழ்ப்பாணம் பொலிஸார் சென்றனர். அங்குள்ள பொருள்களை வெளியேற்றும் பணியில் பொலிஸார் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த அலுமாரி ஒன்றுக்குள் துப்பாக்கிகள் காணப்பட்டன. பயன்படுத்தத்தக்க ஏகே47 துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தப்படும் கோல்ட்ஸர் 2, ரவைகள் 396, கைத்துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தும் மகஸின்கள் 3, வோக்கிகள் 2 மற்றும் 2 வாள்கள் மீட்கப்பட்டன.

அதனையடுத்து புளொட்டின் முன்னாள் உறுப்பினர்  கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கட்டளையில் ஜனவரி 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இந்த நிலையில் சந்தேகநபர் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். சந்தேகநபர் சார்பில் பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி மன்றில் முன்னிலையானார்.

"சந்தேகநபர் வசித்த வீட்டில் பொலிஸாரால் மீட்கபட்ட ஆயுதங்கள் இருந்தமை உண்மைதான். எனினும் அவை எவ்வாறு அந்த அலுமாரிக்குள் வந்தன என்பது சந்தேநபருக்கு அறவே தெரியாது. ஆயுதங்கள் சந்தேநபரின் வீட்டுக்குள் எவ்வாறு வந்தன என்ற விவரத்தை ஆராய்ந்து தேசிய புலனாய்வுப் பிரிவினரிடம் ( என்ஐபி) அறிக்கையைப் பெற நீதிமன்று உத்தரவிடவேண்டும்" என்று ஜனாதிபதி சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்தார். இந்த நிலையில் சந்தேகநபரின் விளக்கமறியலை ஜனவரி 15ஆம் திகதிவரை நீடித்த நீதிவான் சி.சதீஸ்தரன், அன்றுவரை வழக்கை ஒத்திவைத்தார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/jaffna-jan4

  • கருத்துக்கள உறவுகள்

இதையே ஒரு சாதாரண குடிமகனும் சொல்லலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நவீனன் said:

சந்தேகநபர் சார்பில் பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி மன்றில் முன்னிலையானார்.

 

10 hours ago, ஈழப்பிரியன் said:

இதையே ஒரு சாதாரண குடிமகனும் சொல்லலாமா?

பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி 

On 1/4/2018 at 11:36 PM, நவீனன் said:

ஆயுதங்கள் மீட்கப்பட்டமை உண்மைதான். ஆனால் அவை எவ்வாறு அவரது வீட்டுக்குள் வந்தன என சந்தேகநபருக்கு அறவே தெரியாது. அது தொடர்பில் தேசிய புலனாய்வுப் பிரிவின் அறிக்கையை நீதிமன்று பெறவேண்டும்"  இவ்வாறு சந்தேகநபர் சார்பில் முன்னணிலையான ஜனாதிபதி சட்டத்தரணி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விண்ணப்பம் செய்தார்.

இவர் முன்னர் தன்னிடம் ஆயுதங்கள் இருப்பது சிங்கள-பௌத்த பாதுகாப்பு அமைச்சுப் பயங்கரவாதிகளுக்கு தெரியும் என்று கூறியிருந்தார்.

ரணில்-மைத்திரியின் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் வாள்வெட்டு நடவடிக்கைகளை மறைப்பதற்கு சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் நீதித்துறை இப்போது முயல்கிறது.

நடுநிலையான சர்வதேச நீதிவிசாரணைகள் மூலமே  தமிழ் மக்களுக்கு நீதியை பெறும் சந்தர்ப்பத்தை உருவாக்க முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.