Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன் அத்தானும் நான்தானே ......!   😁

  • Replies 2.9k
  • Views 246.8k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நிலாமதி
    நிலாமதி

    கண்ணனும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணம்போல் வந்து நின்றாடுதே

  • பால்வண்ணம் பருவம் கண்டு வேல்வண்ணம் விழிகள் கண்டு மான்வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்....!  💞 (எங்களது வெற்றிகரமான 35 வது திருமணநாள் இன்று).......!  🌹

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    படம்: அமுதா(1975) இசை: MSV  வரிகள் : கண்ணதாசன்  பாடியோர் : TMS 

  • கருத்துக்கள உறவுகள்

படம் : கண்ணன் என் காதலன்(1968)

வரிகள் : வாலி

இசை : M S விஸ்வநாதன்

பாடியோர் : P சுசீலா & T M சவுந்தரராஜன் .

கண்கள் இரண்டும் விடிவிளக்காகஅப்புறம்..
கட்டழகு மட்டும் வெட்ட வெளியாகஅப்புறம்..
கைகளிரண்டும் தொட்ட சுகமாகஹா....
கலந்திருப்போமே யுகம் யுகமாக..
கண்கள் இரண்டும் விடிவிளக்காகஅப்புறம்..
கட்டழகு மட்டும் வெட்ட வெளியாகஅப்புறம்..
கைகளிரண்டும் தொட்ட சுகமாகஹா....
கலந்திருப்போமே யுகம் யுகமாக..

மழைத்துளி விழ விழ முத்து விளையும்ஆஹா..
பனித்துளி விழ விழ மொட்டு மலரும்ஓஹோ..
தேன் துளி விழ விழ இதழ் சிவக்கும்
உண்ண உண்ண என்னென்னவோ இன்பம் பிறக்கும்
கனிச்சுமை கொண்டு வந்த கொடி வளையும்ஆஹ,..கன்னியிடை

அல்லித்தண்டு மெல்ல நெளியும்ஓஹோ..
மதுக்கிண்ணம் ததும்பிட மலர் சிரிக்கும்
புதுப்புது கலைகளில் துயில் மறக்கும்
கண்கள் இரண்டும் விடிவிளக்காகஅப்புறம்..
கட்டழகு மட்டும் வெட்ட வெளியாகஅப்புறம்..
கைகளிரண்டும் தொட்ட சுகமாகஹா....
கலந்திருப்போமே யுகம் யுகமாக..

முத்தம் என்ற புத்தகத்தில் எத்தனை பக்கம்
எண்ணி எண்ணிப் பார்த்தால் எத்தனை வெட்கம்
இருட்டிலும் படித்திடும் எழுத்தல்லவோ
சொல்லாமல் புரிகின்ற பொருள் அல்லவோ

சின்னம் கொண்ட கன்னங்களில் காயமிருக்கும்ம்ம்..
மன்னன் சொன்ன தீர்ப்பினில் நியாயமிருக்கும்
இலக்கணம் வகுப்பதும் இரவல்லவோ
பின்னோடு வருகின்ற உறவல்லவோ..

 

  • கருத்துக்கள உறவுகள்

பிடித்தமான பாடல் ஒன்று

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

பிடித்தமான பாடல் ஒன்று

எனக்குப் பிடித்த சோகப் பாடல்களில் இதுவும் ஒன்று.

இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் எனது மனதில் வருவது நாதன்.

1989 என்று நினைக்கிறேன். இந்திய ராணுவம் எமது தாயகத்தில் ஆக்கிரமித்து நின்ற காலம். நான் மட்டக்களப்பில் தங்கியிருந்த மாணவர் விடுதியில், சமையல் வேலைக்கு இருந்த அம்மா விற்கு கூட ஒத்தாசை புரிவதற்கென்று நாதன் எனும் இளைஞர் ஒருவரும் தங்கியிருந்தார். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். எப்போதும் அவர் முகத்தில் ஒரு புன்முறுவல் பூத்திருக்கும். சிறியதாக நாங்கள் விடும் பகிடிக்கும் சேட்டைகளுக்கும் விழுந்து விழுந்து சிரிப்பார். இதனாலேயே, அனைவருக்கும் அவர் நாதன் அண்ணாவாகிப் போனார்.

மட்டக்களப்புச் சந்தைக்குப் போய் விடுதிக்கும் மரக்கறி, மீன் இறைச்சி வாங்குவதிலிருந்து, விடுதி முகாமையாளருக்கு வீரகேசரி வாங்குவதுவரை நாதனே எல்லாம். இப்படி அடிக்கடி கடைகளுக்குப் போய்வந்துகொண்டிருந்த நாதனுக்கும் காதல் மலர்ந்தது. எமது விடுதிக்கு அருகில் இருந்த "தயா" கடை எனும் ஒரு சிறிய பலசரக்குக் கடைக்கு அடிக்கடி போக ஆரம்பித்திருந்தார். இவரை அடிக்கடி அந்தக் கடைப் பக்கம் கண்ட விடுதி மாணவர்கள் இதுபற்றிக் கேட்டபோது சிரித்தே சமாளித்து விடுவார். 

எமது விடுதியின் ஒரு ஓரத்தில் நாதனின் அறை இருந்தது. பத்திரிக்கை படிக்க, கதைப்புத்தகம் வாசிக்க, பாட்டுக் கேட்கவென்று எப்போதாவது அவரது அறைக்குப் போய்வருவேன்.  பழைய, பொத்தல் விழுந்த மரக் கட்டில். ஓட்டைப் பாய், பழைய அழுக்கேறிய தலையணை, கயிற்றுக் கொடியில் தொங்கும் நாதன் அண்ணாவின் இரு பழைய சேர்ட்டுக்களும், காற்சட்டைகளும். ஓரத்தில் இருந்த காகிதத்திலான சூட்கேஸ்..இவைதான் அவரது சொத்துக்கள். அமைதியும், ஏழ்மையும் குடிகொண்டிருந்த அவரது அறைக்குப் போகும்போதே மனதில் ஒருவித சோகம் சேர்ந்துவிடும். 

அப்படியொருநாள் நான் அங்கே சென்றபோது, நாதன் அழுதுகொண்டிருந்தார். ஏனென்று புரியவில்லை. சிறிது நேரம் அவரருகில் இருந்துவிட்டு எழுந்துவர எத்தனிக்கும்போது, அவரது காதல் பற்றிச் சொன்னார். தயா கடை உரிமையாளரின் மகள் மீதான தனது ஒருதலைக்  காதல் பற்றியும், தனது காதலை தனது ஏழ்மையைக் காரணம் காட்டி நிராகரித்தது பற்றியும் சொன்னார்.  அவரருகிலிருந்த ரேடியோவில் ஒரு பாட்டு....முதலாவது முறை கேட்டபோதே நெஞ்சை அள்ளிக் கொன்றுவிட்ட அந்தப்பாட்டு....

"ஆள்கடலில் தத்தளித்து நான் எடுத்த முத்து ஒன்றை விதியவன் பறித்தது ஏன்....."

பாடலைக் கேட்டவுடன் நாதன் அண்ணாவுக்காக அழவேண்டும் போல இருந்தது. எதுவும் பேசத் தோன்றாமல் எழுந்துவந்துவிட்டேன்.

சில மாதங்களில் இந்திய ராணுவத்தின் கூலிப்படைகளான த்ரீ ஸ்டார் காரர்கள் கட்டாய ஆட்சேர்ப்பில் நாதன் அண்ணாவை மட்டக்களப்பு சந்தையில் வைத்துப் பிடித்துச் சென்றார்கள். அதன்பின் அவரை நான் காணவில்லை. 1990 இல் ஒருநாள் எங்களைப் பார்க்க விடுதிக்கு வந்திருந்தார். நன்றாக உடுத்தி, மினுங்கும் சப்பாத்துடன் அவரைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.  இந்திய ராணுவ முகாமிலிருந்து அனுமதி கேட்டு வந்ததாகச் சொன்னார். "தயா கடைக்குப் போய் இன்று அவளைப் பார்த்துக் கேட்கப் போகிறேன், இன்று என்ன சொல்கிறாள் என்று பார்க்கலாம்" என்றுவிட்டுப் போய்விட்டார். அதன்பிறகு அவரை நிரந்தரமாகவே பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. 
சிறிது நாட்களில் அவரது காதலிக்கு வேறொருவருடன் திருமணம் முடிந்தது. 
இந்திய ராணுவம் வெளியேறத்தொடங்கியிருக்க, தமிழ்த் தேசிய ராணுவம் மீதான தாக்குதல்களைப் புலிகள் தொடங்கியிருந்தனர். அம்பாறை எல்லையிலிருந்த தமிழ்த் தேசிய ராணுவத்தின் முகாமைப் புலிகள் தாக்கிக் கைப்பற்றியதாகச் செய்திகள் படித்தேன், அப்போதுதான் நாதன் அண்ணாவும் அங்கேயிருப்பது நினைவிற்கு வந்தது. அவர் என்ன ஆனார் என்பதுபற்றி அன்று எவருக்கும் தெரிந்திருக்கவில்லை.

இன்றும் இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் நாதன் அண்ணாவின் அந்தச் சிரித்த முகம் மனதில் வந்துபோகும். காதலில் தோற்றவர்களுக்கும், ஒருதலையாகவே காதலித்து வாழ்பவர்களுக்கும் இப்பாடல் சமர்ப்பணம், நாதன் அண்ணா உற்பட !

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

"ஆள்கடலில் தத்தளித்து நான் எடுத்த முத்து ஒன்றை விதியவன் பறித்தது ஏன்....."

சில பாடல்கள் பலபேருடைய வாழ்க்கை அனுபவங்கள் இல்லையா?

மாலைப்பொழுதின் மயக்கத்திலே ...

பிடித்த வரிகள் “ தெளிவும் அறியாது..முடிவும் தெரியாது..மயங்குது எதிர்காலம்..”

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போகப் போகத் தெரியும்.....!   😁

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லாத்தான் நினைக்கிறேன் ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணோடு கண் கலந்தால் ......!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேன்சுவை மேவும் செந்தமிழ் கீதம் .......!   😄

  • கருத்துக்கள உறவுகள்

படம் : அன்னமிட்ட கை(1972)

வரிகள் : வாலி

இசை :K V மகாதேவன்

பாடியோர் :TMS &  S ஜானகி


அழகுக்கு மறுபெயர்
பெண்ணா?
அல்லி மலருக்கு மறுபெயர்
கண்ணா?

தமிழுக்கு மறுபெயர்
அமுதா? - அதைத்
தருகின்ற இதழ்
தங்கச் சிமிழா?

அழகுக்கு மறுபெயர் பெண்ணா...

நூறு கோடி பாடல் நெஞ்சில்
ஊறுகின்ற வேளையிது!
ஏடு போன்ற கன்னம் கண்டு
இதழ்களாலே எழுதுவது!

அந்திப் பொழுதில் தொடங்கும்!
அன்புக் கவிதை அரங்கம்!

இளமைக்குப் பொருள்
சொல்ல வரவா?
அந்தப் பொருளுக்கு
மறுபெயர் உறவா?

அழகுக்கு மறுபெயர் பெண்ணா...

நாடி நரம்பில் கோடி மின்னல்
ஓடிப் பாய்ந்து மறைவதென்ன?
கூந்தல் தொடங்கி பாதம் வரையில் கைகள் கொண்டு அளப்பதென்ன?

அது முதல் முதல் பாடம்!
அடுத்தது என்ன நேரும்?
எடுப்பதும் கொடுப்பதும் நடக்கும்!
அதில் இருவர்க்கும் சரிபங்கு கிடைக்கும்!

அழகுக்கு மறுபெயர் பெண்ணா...

ஆலிலை மேலே
கண்ணனைப் போலே
நூலிடை மேலே ஆடிடவோ?

ஆடும் போது கூடும் சுகத்தை
வார்த்தை கொண்டு கூறிடவோ?

பெண்மை மலர்ந்தே வழங்கும்!
தன்னை மறந்தே மயங்கும்!

விடிந்த பின் தெளிவது
தெளியும்!
அது தெளிந்த பின் நடந்தது
புரியும்!

அழகுக்கு மறுபெயர் பெண்ணா...

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன்னை ஊர் கொண்டு அழைக்க தேர் கொண்டு வருமாம் தென்றல்.....!  😄

  • கருத்துக்கள உறவுகள்

 

படம் : சாந்தி(1965)

இசை: விஸ்வநாதன் & ராமமூர்த்தி

வரிகள் :கண்ணதாசன்

பாடியவர்: P சுசீலா

செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்

செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்

கண்கள் இரண்டை வேலென
எடுத்து கையோடு கொண்டானடி
கண்கள் இரண்டை வேலென
எடுத்து கையோடு கொண்டானடி

கன்னி என் மனதில் காதல் கவிதை
சொல்லாமல் சொன்னானடி

செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்

ஊர்வலம் போனவன் ஓரிரு மாதம்
வாராமல் வந்தானடி
ஊர்வலம் போனவன் ஓரிரு மாதம்
வாராமல் வந்தானடி

வாராமல் வந்தவன் பாவை உடலை
சேராமல் சென்றானடி
சேராமல் சென்றானடி

செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்

நாளை வருவான் நாயகன் என்றே
நல்லோர்கள் சொன்னாரடி
 நாளை வருவான் நாயகன் என்றே
நல்லோர்கள் சொன்னாரடி
நாயகன் தானும் ஓலை வடிவில்
என்னோடு வந்தானடி

ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து
வாசலில் வருவேனடி
 ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து
வாசலில் வருவேனடி
ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து
வாசலில் வருவேனடி
மன்னவன் என்னை மார்பில் தழுவி
வாழ்கென சொல்வானடி
வாழ்கென சொல்வானடி

செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே .....!  😁

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்..கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்... என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்கு தெரியும்...

 

  • கருத்துக்கள உறவுகள்

படம்: மகனே நீ வாழ்க (1969)

வரிகள்: கண்ணதாசன்

இசை : TR பாப்பா.

பாடியோர் : TMS & P சுசீலா ..

ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி - நான்
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
முத்தமிடக் கூடாத திருமணமா
மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா - இந்த  
மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா

முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி நான்
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
முத்தமிடக் கூடாத திருமணமா
மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா
இந்த மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா

கள்ளோடு பூவிரண்டைக் கிள்ளி எடுத்து
திருக்கல்யாணக் கதைகளை சொல்லிக் கொடுத்து
உள்ளூர உள்ளூர எண்ணிக் களித்து
உள்ளூர உள்ளூர எண்ணிக் களித்து
நான் உறக்கத்தில் விழிப்பேன் உன்னை நினைத்து
நான் உறக்கத்தில் விழிப்பேன் உன்னை நினைத்து

கள்ளோடு பூவிரண்டைக் கிள்ளி எடுத்து
திருக்கல்யாணக் கதைகளை சொல்லிக் கொடுத்து
உள்ளூர உள்ளூர எண்ணிக் களித்து
உள்ளூர உள்ளூர எண்ணிக் களித்து
நான் உறக்கத்தில் விழிப்பேன் உன்னை நினைத்து
நான் உறக்கத்தில் விழிப்பேன் உன்னை நினைத்து
ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி நான்
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி

வெள்ளரிப் பழம் பிளந்த பிள்ளைச் சிரிப்பு
இன்று வேறோடு பூப்பறிக்க வந்த நினைப்பு
வெள்ளரிப் பழம் பிளந்த பிள்ளைச் சிரிப்பு
இன்று வேறோடு பூப்பறிக்க வந்த நினைப்பு
முள்ளிருக்கும் பூவுமுண்டு பெண்களிடத்தில்
முள்ளிருக்கும் பூவுமுண்டு பெண்களிடத்தில்
அதை முன்னாலே சொல்லிவிட்டேன் கண்களிடத்தில்
அதை முன்னாலே சொல்லிவிட்டேன் கண்களிடத்தில்

ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி நான்
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
முத்தமிடக் கூடாத திருமணமா
மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா
இந்த மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஊர் என்றவனே .....!   😁

  • கருத்துக்கள உறவுகள்

படம் : பயணம்(1976)

வரிகள்:கண்ணதாசன்

இசை:MS விஸ்வநாதன்

பாடியவர் : SP பாலசுப்ரமணியம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முத்தைத்தரு  பத்தித் திருநகை.....!   🌺

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென்றல் வரும்.......!   😄

  • கருத்துக்கள உறவுகள்

படம் : பாவை விளக்கு (1960)

இசை : KV மகாதேவன் 

பாடியோர் : CS ஜெயராமன் & LR ஈஸ்வரி

வரிகள் : மருதகாசி

பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்.
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்

அழகையெல்லாம் அவள் முகத்தில் கண்டேன்..
வெண்ணிலவின் அழகையெல்லம் அவளிடத்தில் கண்டேன்
விழி வீச்சின் மின்னலினால் சிலை மாறி நின்றேன்
வேல் விழி வீச்சின் மின்னலினால் சிலை மாறி நின்றேன்
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்.
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்

அன்னம் கூட அவளிடத்தில் வந்து நடை பயிலும்
ஆடல் கலை இலக்கணத்தை அறிய வரும் மயிலும்
அன்னம் கூட அவளிடத்தில் வந்து நடை பயிலும்
ஆடல் கலை இலக்கணத்தை அறிய வரும் மயிலும்
இன்னிசையை பாடம் கேட்க எண்ணி வரும் குயிலும்
இயற்கையெல்லாம் அவள் குரலின் இனிமையிலே துயிலுல்ம்
இயற்கையெல்லாம் அவள் குரலின் இனிமையிலே துயிலுல்ம்
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்.
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்

கன்னல் மொழி… ஈ..ஈ…. பேசி வரும்…
கன்னல் மிழி பேசி வரும் கன்னியரின் திலகம்
கமலம் என் கமலம் செங்கமலம்
கமலம் என் கமலம் செங்கமலம்
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்.
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்.....!   😁

  • கருத்துக்கள உறவுகள்

படம் : வைரம் (1974)

பாடியோர் : SPB & J ஜெயலலிதா

வரிகள் : கண்ணதாசன்

இசை : TR பாப்பா

இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஏங்குது மோகம்
மணி மாளிகை போல் ஒரு தேகம்
பாடுது ராகம்

கண்மணி ராஜா பொங்குது நாளும்
பார்த்தது போதும்
ஒ ஒ காளைக்கு யோகம்
மங்கள் மேளம் குங்குமக்கோலம்
மணவறை மகிமை
ஹஹ அதுவரை பொருமை
.
இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஏங்குது மோகம்
.
திரை மூடும் மேடையிலே நாடகம் பார்த்தேன்
அதில் ஓடும் ஜாடையிலே ஓடையையும் பார்த்தேன்
சிரிப்பாள் என்னை மாணிக்கப்பதுமை அழைப்பதை கண்டேன்

எதற்கோ உங்கள் கைகள் இரண்டும் துடிப்பதைக் கண்டேன்
இன்றே நான் பார்க்கவா இல்லை நாள் பார்க்கவா
ஓஓ அவசரம் என்ன
.
இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஏங்குது மோகம்
.
இது காதல் பூஜை என்றால் ஆரத்தி எங்கே
அதை காணும் வேண்டுமென்றால் அவளிடம் தந்தேன்
கடைக்கண் பேசும் கனிமொழி யாவும் பாலாபிஷேகம்
இடையெனும் பதுமை நடையெனும் தேரில் ஊர்வல கோலம்

மாலை பொண்மாலையா இல்லை பூ மாலையா
ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ கோவிலில் பார்த்தோம்
.
இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஏங்குது மோகம்
மணி மாளிகை போல் ஒரு தேகம்
பாடுது ராகம்
ஹொ ஹொ ஏங்குது மோகம்
ஹா ஹா பாடுது ராகம்
லா லா ஏங்குது மோகம்
ம்ம் ம்ம் பாடுது ராகம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கள்ளமலர் சிரிப்பிலே.....!  😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் காந்தி ஜேசு பிறந்தது பூமியில் எதற்காக .........!  😀

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.