Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சன்ரைசர்ஸ்சின் பான்ஸ் அந்தமாதிரி ஊக்கு விக்கிறார்கள்.....!  tw_blush:

Résultat de recherche d'images pour "boat racing in kerala moving gif"

  • Replies 592
  • Views 76.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஐபிஎல் வரலாற்றில் ஒரே வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ரகானே

தொடக்க வீரராக களம் இறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் அணியை பெற வைக்க முடியாத வீரர் என்ற மோசமான சாதனையை ரகானே படைத்துள்ளார். #IPL2018 #RR

 
 
ஐபிஎல் வரலாற்றில் ஒரே வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ரகானே
 
ஐபிஎல் தொடரின் 28-வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. பின்னர் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களம் இறங்கியது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நேர்த்தியான பந்து வீச்சு, பீல்டிங்கால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய ரகானே 53 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 65 ரன்கள் எடுத்தும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

201804301346552274_1_rahane001-s._L_styvpf.jpg

ஐபிஎல் தொடரில் இதற்கு முன்பு ஒரு முறையும் தொடக்க வீரராக களம் இறங்கி 50 ரன்களுக்கு மேல் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் நின்ற ரகானேயால் அணியை வெற்றி பெற வைக்க முடியாமல் போன சம்பவம் நடைபெற்றுள்ளது. நேற்றைய ஆட்டம் மூலம் 2-வது முறையாக ரகானேயால் வெற்றி பெற வைக்க முடியாமல் போகியுள்ளது.

இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு முறை தொடக்க வீரராக களம் இறங்கி, 50 ரன்களுக்கு மேல் ரன்குவித்து, கடைசி வரை அவுட்டாகாமல் அணியை வெற்றி பெற வைக்க முடியாத ஒரே வீரர் என்ன மோசமான சாதனையை ரகானே படைத்துள்ளார். #IPL2018 #RR #Rahane

https://www.maalaimalar.com/News/Sports/2018/04/30134655/1159911/IPL-2018-Rahane-became-the-first-opener-with-two-unbeaten.vpf

  • தொடங்கியவர்

வாட்சன், தோனி அதிரடி! டெல்லிக்கு 212 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சென்னை

 
 

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர்கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. 

வாட்சன் - தோனி

புனே மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ஃபீல்டிங் தேர்வு செய்தார். சென்னை அணியில் வேகப்பந்துவீச்சு கூட்டணி உள்பட 4 மாற்றங்களை கேப்டன் தோனி செய்திருந்தார். அதன்படி, இம்ரான் தாஹிர், சாம் பில்லிங்ஸ், தீபக் சஹார் மற்றும் ஸ்ரதுல் தாகுர் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதிலாக, தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி, கேரளாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசிஃப், சுழற்பந்துவீச்சாளர் கரண் சர்மா மற்றும் டூபிளஸி ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக தென்னாப்பிரிக்க வேகம் இங்கிடிக்கு இது முதல் ஐபிஎல் போட்டியாகும். 

 

சென்னை அணியின் இன்னிங்ஸை வாட்சன், டூபிளஸி ஜோடி தொடங்கியது. ஒருபுறம் டூபிளசி மெதுவாக ரன் குவித்தாலும், மறுமுனையில் வாட்சன் அதிரடி காட்டினார். முதல் விக்கெட்டுக்கு 10.5 ஓவர்களில் 102 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், 33 ரன்கள் எடுத்திருந்த டூபிளசி ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ரெய்னா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடி காட்டிய வாட்சன் 40 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அம்பாதி ராயுடு - தோனி கைகோத்தனர். டெல்லி பந்துவீச்சாளர்களைச் சோதித்த இந்த ஜோடி 15 - 18 இடைப்பட்ட 3 ஓவர்களில் அதிரடியாக ஆடி 50 ரன்களைக் குவித்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. கடைசி ஓவரில் அம்பாதி ராயுடு 41 ரன்களில் ஆட்டமிழந்தார். 22 பந்துகளைச் சந்தித்த தோனி 51 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி அணி தரப்பில் மேக்ஸ்வெல், விஜய் சங்கர் மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

https://www.vikatan.com/news/sports/123755-ipl-2018-csk-sets-212-runs-target-for-dd.html

  • தொடங்கியவர்

ஐ.பி.எல் கோப்பையில் எழுதப்பட்டிருக்கும் சம்ஸ்கிருத வார்த்தையைக் கவனித்திருக்கிறீர்களா?

 
 

உலகின் பிரபலமான கிரிக்கெட் லீக் தொடராகக் கருதப்படும் ஐ.பி.எல் தொடரின் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்படும் கோப்பையில் சம்ஸ்கிருத வாசகம் ஒன்று இடம்பெற்றிருக்கும். அதை எப்போதாவது கவனித்திருக்கீறீர்களா?

ஐ.பி.எல்

Photo: BCCI

ஐ.பி.எல் தொடரின் 11 வது சீஸனில் தற்போது லீக் போட்டியில் இரண்டாவது கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது வரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி முதலிடத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன. புள்ளிப்பட்டியலில் டெல்லி டேர் டெவில்ஸ் அணி 8 வது இடத்தில் உள்ளது. ஒவ்வோர் அணியும் எதிரணியுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலின் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறும். இதில், முதல் இரண்டு இடங்களில் உள்ள அணிகள் மோதும் போட்டியில் வெற்றிபெறும் அணி, நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். அதில், தோல்வியடையும் அணி 3 மற்றும் 4 வது இடங்களைப் பிடித்த அணிகள் மோதும் போட்டியில் வெற்றிபெற்ற அணியுடன் மோதும். அதில் வெற்றிபெறும் அணி, இரண்டாவதாக இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும். ஐ.பி.எல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு ரொக்கப் பரிசுத் தொகையுடன் கோப்பையும் வழங்கப்படும். 

தங்க நிறத்தில் ஜொலிக்கும் இந்தக் கோப்பையை வெல்லும் அணியிடம் ஒரு வருடம் இந்தக் கோப்பை இருக்கும். அடுத்த தொடர் தொடங்கும்போது மீண்டும் ஐ.பி.எல் நிர்வாகத்திடம் திருப்பி அளிக்கப்படும். இந்த சுழற்சிக் கோப்பையில் சம்ஸ்கிருதத்தில் வாசகம் ஒன்று இடம்பெற்றிருப்பதை ரசிகர்கள் கவனித்திருக்கலாம். 

 

அதில் ஆங்கிலத்தில், ''Yatra Pratibha Avsara Prapnotihi” என எழுதப்பட்டுள்ளது. சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ள அந்த வாசகத்துக்கு பொருள், ''திறமையும் வாய்ப்பும் சந்திக்கும் இடம்’’ என்பதாகும். இதுதான் ஐ.பி.எல் தொடரின் மோட்டோ ஆகும். பல இளம் வீரர்கள் சர்வதேச வீரர்களுடன் விளையாடும் வாய்ப்பு இங்கு உருவாக்கப்படுகிறது. ஐ.பி.எல் தொடர் பல இளம் வீரர்களை அடையாளம் காட்டியுள்ளது. நடப்புத் தொடரிலும், சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் தீபக் சஹார், மும்பை அணியின் மார்க்கண்டே, ராஜஸ்தான் அணியின் கிருஷ்ணப்பா எனப் பல இளம் வீரர்கள், சர்வதேச வீரர்களுக்குப் போட்டியாக விளையாடி வருகின்றனர். 

https://www.vikatan.com/news/sports/123726-have-you-noticed-sanskrit-sentence-in-ipl-trophy.html

  • தொடங்கியவர்

சென்னை அணி வெற்றி

டில்லி- 198 ரன் / 5 விக்கெட் (20 ஓவர்)

  • கருத்துக்கள உறவுகள்

Résultat de recherche d'images pour "csk dance in tamil moving gif"

  • தொடங்கியவர்

ஐபிஎல் 2018 - 13 ரன்னில் டெல்லியை வீழ்த்தி மீண்டும் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது சென்னை

வாட்சன், தோனி அதிரடியால் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது. #IPL2018 #CSKvDD

 
ஐபிஎல் 2018 - 13 ரன்னில் டெல்லியை வீழ்த்தி மீண்டும் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது சென்னை
 
புனே:
 
ஐபிஎல் தொடரின் 30-வது ஆட்டம் புனேயில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
 
டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சு தேர்வு செய்தார். சென்னை அணியின் ஷேன் வாட்சன், டு பிளிசிஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
 
இந்த ஜோடி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. இதனால் சென்னை அணியின் ஸ்கோர் 5.2 ஓவரில் 50 ரன்னைக் கடந்தது. 
9-வது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கி 25 பந்தில் அரைசதத்தை கடந்தார் வாட்சன். சென்னை அணி 10.2 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.
 
சென்னை அணி 102 ரன்கள் எடுத்திருந்த போது டு பிளிசிஸ் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரெய்னா 1 ரன்னில் அவுட்டானார்.
 
சிறப்பாக ஆடிய வாட்சன் 40 பந்தில் 4 பவுண்டரி, 7 சிக்சருடன் 78 ரன்னில் ஆட்டமிழந்தார். 
 
4-வது விக்கெட்டுக்கு அம்பதி ராயுடு உடன் கேப்டன் தோனி ஜோடி சேர்ந்தார். இருவரும் சிக்சர், பவுண்டரியுமாக அடித்தனர். இந்த ஜோடி 79 ரன்கள் சேர்த்த நிலையில் அம்பதி ராயுடு 24 பந்தில் 41 ரன்கள் எடுத்து ரன்அவுட் ஆனார். 
 
201804302346329441_1_chennai-2._L_styvpf.jpg
 
இறுதியில், சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. டோனி 22 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
 
டெல்லி அணி சார்பில் அமித் மிஸ்ரா, விஜய் சங்கர், மேக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
 
இதையடுத்து, 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, காலின் முன்ரோ இறங்கினர்.
 
பிரித்வி 9 ரன்னிலும், காலின் முன்ரோ 26 ரன்னிலும், ஷ்ரேயஸ் அய்யர் 13 ரன்னிலும், மேக்ஸ்வெல் 6 ரன்னிலும் அவுட்டாகினர்.
இதனால் டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்திருந்தது.
 
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், ரிஷப் பந்த் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவருக்கு விஜய் சங்கர் ஒத்துழைப்பு கொடுத்தார்.
 
இதனால் டெல்லி அணி 16 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்திருந்தது. பொறுப்பாக ஆடிய ரிஷப் பந்த் 45 பந்துகளில் 4 சிக்சர், 7 பவுண்டரியுடன் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விஜய் சங்கர் அரை சதமடித்து இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தார்.
 
இறுதியில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்தது. இதனால் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
சென்னை அணி சார்பில் ஆசிப் 2 விக்கெட்டும், நிகிடி, ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். #IPL2018 #CSKvDD #Tamilnews

https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/30234633/1160026/chennai-super-kings-beat-delhi-daredevils-by-13-runs.vpf

  • தொடங்கியவர்

தோனி, வாட்சன் பவர் பேட்டிங்கினால் வென்று சிஎஸ்கே முதலிடம்; தோனியைக் கடுப்பேத்திய ரிஷப் பண்ட், விஜய் சங்கரின் கலக்கல் அதிரடி

 

 
dhoni-watson

பேட்டிங் அதிரடி நாயகர்கள் தோனி, வாட்சன் களத்தில் .   -  படம். | கே.வி.எஸ். கிரி.

புனேயில் நடைபெற்ற ஐபிஎல் 2018-ன் 30வது போட்டியில் வாட்சன், தோனி ஆகியோர் பேட்டிங்கில் தீபங்களை ஏற்ற 211 ரன்கள் குவித்த சென்னை சூப்பர் கிங்ஸ் பிற்பாடு டெல்லியின் ரிஷப் பண்ட், விஜய் சங்கர் காட்டடியில் மிரண்டது, தோனி கடுப்பானார். கடைசியில் போராடி வென்று முதலிடம் பிடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

டாஸ் வென்ற ஷ்ரேயஸ் அய்யர் மவுட்டிகமாக சென்னையை முதலில் பேட் செய்ய அழைத்தார்.

   

சென்னை சூப்பர் கிங்ஸ் அதிரடி நாயகர்கள் வாட்சன், தோனிக்கு லைஃப்! உஷ்.. கண்டுக்காதீங்க!

ஷேன் வாட்சன் ஸ்ட்ரைக்கை எடுக்க, டெல்லி அணியின் ட்ரெண்ட் போல்ட் முதல் பந்தை வீசினார் மிக அருமையான ஒரு அக்ரம் ரக இன்ஸ்விங்கர் கால்காப்பில் நேராக வாங்கினார் ஷேன் வாட்சன், நடுவர் நாட் அவுட் என்று அடம் பிடிக்க, ஷ்ரேயஸ் அய்யர் ரிவியூ கேட்டார். முழங்காலுக்குக் கீழ் வாங்கினார், இது போல் அவர் தன் கிரிக்கெட் கரியரில் சிலபல முறை ஆட்டமிழந்துள்ளார்... ஆனால் நம் நடுவருக்கு இது நாட் அவுட். பால் ட்ராக்கரில் 3 சிகப்புகள் காண்பிக்கப்பட்டது. மூன்றாவது கண்ணுக்கும் அவுட்டாகத் தெரியவில்லை, பந்து முதலில் பேடில் பட்டதா பேட்டில் பட்டதா என்பதில் சந்தேகம் இருந்ததாகக் கூறப்படுகிறது, களநடுவருக்கு சந்தேகம் ஓகே. 3வது நடுவருக்கு எப்படி சந்தேகம் வரும். சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மெனுக்கு அளிப்பது கிரிக்கெட் மரபு எனலாம், ஆனால் சந்தேகத்தின் பலனை களநடுவருக்குச் சாதகமாக்கியது எப்படி? அப்படியென்றால் என்ன? உஷ்... கண்டுக்காதீங்க!

அதே போல் தோனி 19வது ஓவரின் முதல் பந்தில் கொடுத்த எளிதான கேட்சை கொலின் மன்ரோ கோட்டை விட்டார். ஆவேஷ் கான் வீசிய வேகப்பந்துக்கு தோனி புல்ஷாட்டை சரியாக ஆடவில்லை. இடது புறம் லேசாக நகர்ந்த மன்ரோ கேட்சை விட்டார். (உஷ் கண்டுக்காதீங்க!). தோனி அப்போது 31 ரன்களில் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடைசி ஓவர் 5வது பந்தில் மீண்டும் போல்ட் பந்தை தோனி மீண்டும் சரியாக புல் ஷாட் ஆடவில்லை கிளவ்வில் பட்டு ரிஷப் பண்ட்டிடம் சென்றது, இவரும் விட்டார். அந்தப் பந்தில்தான் ராயுடு தடதடவென ஓடி வந்து தோனியின் அருகில் நின்று ரன் அவுட் ஆனது வேறு கதை.

நாட் அவுட்டுக்குப் பிறகு வெளுத்துக் கட்டிய ஷேன் வாட்சன்

ராயுடு எந்த டவுனிலும் ஆடுகிறார் என்பதால் டுபிளெசிஸ், வாட்சன் இறங்கினர். நாட் அவுட் கொடுத்த பிறகு லியாம் பிளங்கெட் சிக்கினார் வாட்சனிடம், ஆஃப் ஸ்டம்புகு வெளியே சற்றே எகிறிய பந்தை குறுக்குசால் ஓட்டி மிட்விக்கெட்டில் அபாரமான சிக்ஸ் அடித்த வாட்சன், அடுத்த லெக் திசை ஓவர் பிட்ச் பந்தை ஹை பிளிக்கில் ஸ்கொயர் லெக் மேல் அடித்த சிக்ஸ் சச்சின் டெண்டுல்கரை நினைவூட்டிய ஷாட் ஆகும். அதே ஓவரில் டுபிளெசிஸ் மிக அருமையாக சகவீரர் டிவில்லியர்ஸ் போல் ஸ்கூப் செய்ய பைன் லெக்கில் ஒரு சிக்ஸ். 20 ரன்கள் கொடுத்தார் பிளெங்கெட். அடுத்து ஆவேஷ் கானை ஒரு லக்கி சிக்ஸ் அடித்தார் வாட்சன், அது கேட்ச் ஆகியிருக்கும் ஆனால் இந்தக் காலத்துப் பேட், காகிதத்தைச் சுருட்டி எறிந்தாலே சிக்ஸ் செல்லும் குறுகிய பவுண்டரி ஆகியவற்றினால் சிக்ஸ் ஆனது. மீண்டும் 7வது ஓவரில் பிளெங்கெட்டை 2 சிக்சர்கள் விளாசிய வாட்சன். தெவாட்டியாவை ஒரு சிக்ஸ் அடித்து 25 பந்துகளில் 53 என்று அரைசதம் வந்தார், பிறகு அதே ஓவரில் அரைசதத்தை இன்னொரு சிக்ஸ் மூலம் கொண்டாடினார். மொத்தம் 7 சிக்சர்கள் அடித்தார், பெரும்பாலும் லெக் திசை சிக்சர்கள். 10 ஒவர்களில் 96/0. எதிர்முனையில் டுபிளெசிஸ் நிதானத்துடன் 33 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார்.

watson%20sixjpg

வாட்சனின் ஹை பிளிக் சிக்ஸ். | ஏ.எஃப்.பி.

 

இருவரும் இணைந்து 102 ரன்கள் எடுத்த போது விஜய் சங்கர், டுபிளெசிஸ் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்த ஓவரில் கிளென் மேக்ஸ்வெல் சுரேஷ் ரெய்னாவை 1 ரன்னில் வீட்டுக்கு அனுப்பினார். 40 பந்துகளில் 78 ரன்கள் எடுத்த வாட்சன் அமித் மிஸ்ராவை வெளுக்க நினைத்து ஆட்டமிழந்தார். 14வது ஓவர் முடிவில் 130/3, என்று தோனிக்கு நல்ல நடைமேடை அமைத்துக் கொடுக்கப்பட்டது.

மீண்டும் சிக்சர்கள் வழிக்கு திரும்பிய தோனி

போல்ட் வந்தவுடனேயே தோனிக்கு ஷார்ட் பிட்ச் பந்து வீசினார், டோண்ட் பவுல் என்று தோனி அதனை அரக்க சிக்ஸ் அடித்தார். சரி ஃபுல் பந்து போடுகிறேன் என்றார் போல்ட் மீண்டும் தோனியின் பேட் ஸ்பீடுக்கு லாங் ஆனில் சிக்ஸ். சமீப காலங்களாக இந்தியாவுக்கு ஆடும் போது ஆடுவதை விட தற்போது தோனி நன்றாகவே ஆடுகிறார். இந்த ஓவரில் 21 ரன்கள். மேலும் 2 புல்டாஸ்களை தோனி சிக்சருக்குத் தூக்க 22 பந்துகளில் 5 சிக்சர்களுடன் அரைசதம் எடுத்தார்.

dhoni2jpg

தோனி. | ஏ.எப்.பி.

 

கொலின் மன்ரோ தோனி 31இல் இருக்கும் போது எளிதான கேட்சை விட்டார்..(உஷ்!). ராயுடு தோனி கூறியது போல் எந்த டவுனிலும் சிறப்பாக ஆடுபவர், அதனை மீண்டுமொரு முறை நிரூபித்தார். 24 பந்துகளில் 41 ரன்கள் எடுத்த அவர் இந்த ஐபிஎல்-ல் 370 ரன்கள் எடுத்து முதலிடம் வகிக்கிறார். கடைசி 5 ஓவர்களில் 74 ரன்கள். சூப்பர் கிங்ஸ் 3வது முறையாக 200க்கும் மேல் ரன் குவித்தது. மேக்ஸ்வெல் ஒரு ஓவரில் 5 ரன்களுக்கு 1 விக்கெட், நன்றாக வீசியவருக்கு ஏன் இன்னொரு ஓவர் கொடுக்கவில்லை? (இன்னொரு உஷ்...) அமித் மிஸ்ரா 4 ஓவர்களில் சிக்கனம் காட்டி 30 ரன்களுக்கு 1 விக்கெட். ஆவேஷ் கான் வேகம் வாட்சன், தோனி உட்பட அனைவரையுமே ஆட்டியது இவர் 4 ஓவர்களில் 28 ரன்கள், தோனி விக்கெட்டை வீழ்த்தியிருக்க வேண்டியது, பாவம், மன்ரோ கேட்சை விட்டார்.

தோனியின் அடிவயிற்றைக் கலக்கிய ரிஷப் பண்ட், விஜய் சங்கர் காட்டடி!

சிஎஸ்கே அணியின் புதிய வேகப்பந்து வீச்சாளர்கள் அருமையாக வீசினர். முதல் ஓவரிலேயே இங்கிடி, கொலின் மன்ரோவை சில பந்துகள் பீட் செய்து 1 ரன் தான் கொடுத்தார். கேரள வேகப்பந்து வீச்சாளர் ஆசிப்பை பிரிதிவி ஷா 2 பவுண்டரிகள் அடித்தார். ஆனால் ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை வீசி ஷாவை அவசரப்படுத்தி புல்ஷாட்டில் வெளியேற்றினார் ஆசிப், ஜடேஜா கேட்ச் எடுத்தார். அய்யர் இறங்கி ஒரு அருமையான பவுண்டரி அடித்தார், மன்ரோ, வாட்ச்ன் ஓவரை சிக்ஸ், பவுண்டரியுடன் வரவேற்றார். மீண்டும் ஆசிப்பை மன்ரோ வெளுத்து வாங்கி 2 பவுண்டரிகள் 1 சிக்சர் அடித்தார். ஆனால் பிரிதிவி ஷாவை வீழ்த்தியது போல் மீண்டும் மன்ரோவின் உடலுக்கு நேராக ஒரு பந்தை வீச ஷாட் சிக்காமல் கேட்ச் ஆனது. ஆசிப் 2 ஓவர்களில் 25 ரன்கள் என்றாலும் 2 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

பண்ட் இறங்கி முன் காலை விலக்கிக் கொண்டு வாட்சனை பளார் என்று ஒரு சிக்ஸருடன் எண்ணிக்கையைத் தொடங்கினார். அடுத்த பந்து கட் ஷாட்டில் பவுண்டரி. பவர் பிளே முடிவில் 59/2 என்று நன்றாகச் சென்று கொண்டிருக்கும் போதுதான் ஷ்ரேயஸ் 13 ரன்களில் வாட்சனிடம் ஷார்ட் கவரில் அடித்து இல்லாத சிங்கிளுக்கு ஓடி ரன் அவுட் ஆனார் (உஷ்.. கண்டுக்காதீங்க) மேக்ஸ்வெல், ஜடேஜா ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய பந்திற்கு தவறான லைனில் ஆடி பவுல்டு ஆனார். ஏன் இப்படி ஆட வேண்டும்? கேக்காதீங்க...

ஹர்பஜன், ஜடேஜா விறுவிறுவென சிக்கனமாக ஓவரை வீசினர். இருவரும் 6 ஓவர்களில் 38 ரன்களையே கொடுத்தனர். ஹர்பஜன் 3 ஓவர்களில் 13 ரன்களையே கொடுத்தவர் கடைசியில் பண்ட்டிடம் சிக்கி ஒரு சிக்ஸ் ஒரு பவுண்டரி கொடுத்தார். இதனால் ஒரு ஓவரில் 13 ரன்கள் கொடுத்து 4 ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்தார், ஜடேஜா, ஹர்பஜன இருவரும் கோட்டாவை முடிக்கும் போது 8 ஓவர்களில் இருவரும் 57 ரன்களையே கொடுத்திருந்தனர். ஆட்டத்தின் போக்கில் இது சிக்கனமான பந்து வீச்சே.

13 ஓவர்களில் 117/4, வெற்றிக்கு தேவைப்படும் ரன் விகிதம் 15.83. அப்போதுதான் பிராவோவை விஜய் சங்கர் இன்ஸ்விங்கரை லாங் ஆன் தலைக்கு மேல் சிக்ஸ்க்கு அனுப்பினார். ஆசிப் பந்தை தூக்கி அடித்து ராயுடுவின் மிஸ் பீல்டிங்கில் பவுண்டரி அடித்து 34 பந்துகளில் அரைசதம் கண்டார். அந்த ஓவரில் 2 பவுண்டரி 1 சிக்ஸ் 18 ரன்கள் வந்தது. பிறகு பிராவோ ஓவரில் 2 பவுண்டரிகள். 3 ஓவர்களில் 55 ரன்கள் தேவை. அப்போது 45 பந்துகளில் 7 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 79 ரன்கள் விளாசி தோனியின் வயிற்றில் புளியைக் கரைத்த ரிஷப் பண்ட், இங்கிடி பந்தை ஜடேஜாவிடம் கவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 12 பந்துகளில் 49 ரன்கள் தேவை.

அப்போதுதான் பிராவோ ஓவரில் விஜய் சங்கர் பொளந்தார். லாங் ஆனில் முதல் சிக்ஸ். மீண்டும் தவறான லெந்த், புல் ஷாட், மிட்விக்கெட்டில் சிக்ஸ். மீண்டும் லெந்த் பால் லாங் ஆனில் சிக்ஸ். தோனி டென்ஷனாகிவிட்டார். இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் அவரது தலைமையின் கீழ் 8-0 என்றும் பிறகு 3-1 என்றும் 2014-15 ஆஸி.தொடரில் உதை வாங்கிய போதும் அனைத்திற்கும் மேலாக வங்கதேசத்திடம் அங்கு போய் ஒருநாள் தொடரில் உதை வாங்கிய போதும் இந்திய அணிக்காக அவர் இப்படி டென்ஷனாகிப் பார்த்ததில்லை. இந்திய அணிக்குக் கூல், சென்னைக்கு ஹாட்!

6 பந்துகள் 28 ரன்கள் என்றவுடன் லேசாக தோனிக்கு வயிற்றில் மோட்டார் ஓடியிருக்கும். ஆனால் ஒரு சிக்சரைத்தான் விஜய் சங்கர் அடிக்க முடிந்தது 198/5 என்று இடைவெளியை 13 ரன்களாகக் குறைத்தார். விஜய் சங்கர் 31 பந்துகளில் 1 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 54 நாட் அவுட். ஏறக்குறைய வெற்றிக்கு அருகில் வந்தனர் என்றே கூற வேண்டும், சென்னை மீண்டும் கடைசி ஓவர்களில் சொதப்பி போராடித்தான் வென்றது, அல்லது பேட்டிங் பவரினால் வென்றது.

ஆட்ட நாயகன் வாட்சன்.

http://tamil.thehindu.com/sports/article23736072.ece

  • தொடங்கியவர்

சின்னசாமி மைதானத்தில் இன்று பெங்களூரு - மும்பை அணிகள் மோதல்: தோல்வியடையும் அணி சிக்கலை சந்திக்க நேரிடும்

 

Table-4%2030-04-2018col
01CHPMUROHITSHARMA

ரோஹித் சர்மா   -  THE HINDU

ஐபிஎல் தொடரில் இன்று இரவு பெங்களூரு சின்னசாமி கிரிக் கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

நடப்பு சாம்பியனான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 7 ஆட்டங்களில் 2 வெற்றி, 5 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் புத்துணர்ச்சியடைந்துள்ள மும்பை அணி விராட் கோலி, பிரண்டன் மெக்கலம், குயிண்டன் டி காக் என வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட பெங்களூரு அணியை நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறது.

அதேவேளையில் புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ள பெங்களூரு அணி அடுத்தடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளிடம் தோல்வியடைந்து துவண்டுள்ளது.

இரு அணிகளுமே தலா 4 புள்ளிகளே பெற்றுள்ள போதிலும் நெட் ரன் ரேட் அடிப்படையில் மும்பை அணி (+0.033) 6-வது இடம் வகிக்கிறது. பெங்களூரு அணியின் நெட் ரன் ரேட் (-0.447) ஆக உள்ளது. இன்றைய ஆட்டத்தில் தோல்வியை சந்திக்கும் அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பெறுவதில் அதிகப் படியான சிக்கலை சந்திக்கக்கூடும்.

இந்த சீசனில் இரு அணிகளும் மோதுவது இது 2-வது முறையாகும். கடந்த 17-ம் தேதி வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியை 46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியிருந்தது.

இந்த ஆட்டத்தில் ரோஹித் சர்மா 95 ரன்களும், எவீன் லீவிஸ் 65 ரன்களும் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்திருந்தனர். தொடக்க வீரரான சூர்யகுமார் யாதவ் 7 ஆட்டங்களில் 274 ரன்கள் குவித்து நல்ல பார்மில் உள்ளார். அவருடன் எவீன் லீவிஸூம் தனது அதிரடியால் பலம் சேர்ப்பவராக உள்ளார்.

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் வரிசையில் 3-வது வீரராக களமிறங்கி 56 ரன்கள் விளாசிய ரோஹித் சர்மா மீண்டும் பார்முக்கு திரும்பி உள்ளது அணியின் பேட்டிங் வரிசையை மேலும் வலுப்படுத்தி உள்ளது. அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். ஹர்திக் பாண்டியா, கிருனல் பாண்டியா ஆகியோர் பந்து வீச்சில் வழங்கும் பங்களிப்பை பேட்டிங்கில் வழங்கத் தவறுகின்றனர். 7 ஆட்டங்களில் ஹர்திக் பாண்டியா வெறும் 61 ரன்களும், கிருனல் பாண்டியா 113 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளனர். இத னால் மட்டையை சுழற்ற வேண் டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர் பாண்டியா சகோதரர்கள். கடந்த ஆட்டத்தில் கெய்ரன் பொலார்டுக்கு பதிலாக சேர்க்கப்பட்டிருந்த ஜேபி டுமினிக்கு பேட்டிங்கில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனால் இன்றைய ஆட்டத்திலும் டுமினி விளையாடும் லெவனில் இடம்பெறக்கூடும். மும்பை அணி பந்து வீச்சிலும் குழுவாக இணைந்து செயல்படுவதில் தடுமாற்றம் கண்டு வருகின்றனர். சுழற்பந்து வீச்சாளரான மயங் மார்க்கண்டே மட்டுமே எதிரணிக்கு சவால் கொடுத்து வருகிறார். 7 ஆட்டங்களில் 10 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள அவர், மீண்டும் ஒரு முறை பெங்களூரு பேட்டிங் வரிசைக்கு சவால் அளிக்கக்கூடும்.

கடந்த ஆட்டத்தில் நீக்கப்பட்ட முஸ்டாபிஸூர் ரஹ்மானுக்கு இன்று வாய்ப்பு வழங்கப்படக்கூடும் என கருதப்படுகிறது. பெங்களூரு அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் ஜஸ்பிரித் பும்ரா, முஸ்டாபிஸூர் ரஹ்மான் ஆகியோரிடம் இருந்து உயர்மட்ட செயல்திறன் வெளிப்பட வேண்டும்.

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் நெருக்கடியான சூழ்நிலையிலேயே இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது. காய்ச்சல் காரணமாக கடந்த ஆட்டத்தில் களமிறங்காத அதிரடி வீரரான டி வில்லியர்ஸ் இன்னும் முழுமையாக குணமடையவில்லை.

இதனால் அவர் களமிறங்குவது உறுதி செய்யப்படவில்லை. சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 30 பந்துகளில் 68 ரன்களும், டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 39 பந்துகளில் 90 ரன்களும் விளாசி டி வில்லியர்ஸ் மிரளச் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டி வில்லியர்ஸ் களமிறங்காத பட்சத்தில் பிரண்டன் மெக்கலம் தொடர்ந்து இடம்பெறக்கூடும். கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி பீல்டிங்கின் போது பல கேட்ச்களை கோட்டைவிட்டது. மேலும் கேப்டன் விராட் கோலி பீல்டிங் வியூகம் அமைப்பதிலும் பல் வேறு தவறுகளை செய்தார். இத னால் இந்த விஷயங்களில் அந்த அணி கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டத்தில் உள்ளது.

http://tamil.thehindu.com/sports/article23735910.ece

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சென்னை அதிரடித்தாலும், விரட்டி மிரட்டிய டெல்லி! #CSKvDD

 
 

இந்த ஐபிஎல்லில் சென்னையின் ஃபார்ம் வேறு லெவலில் இருக்கிறது. சென்னையில் இருந்து பூனேவுக்கு மைதானத்தை மாற்றினாலும், சென்னையின் வெற்றி பயணத்தில் மாற்றம் ஏதும் இல்லை. மும்பைக்கு எதிரான தோல்வியின் போது , இது போன்ற தொடர்களில் தோல்வியும் அவசியம் என்பதை நினைவூட்டினார் தோனி. நேற்று புள்ளிப் பட்டியலில் கீழ் இருக்கும் டெல்லி அணிக்கும், வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருக்கும் சென்னைக்கும் போட்டி. #CSKvDD

சென்ற போட்டியில் வென்றதால், டெல்லி அணியில் எந்த மாற்றமும் இல்லை. அதே அணியை மீண்டும் களமிறக்கினார் ஸ்ரேயாஸ் ஐயர். ஆம், கொல்கத்தா அணி கேப்டனாக இருந்த போது, தோனிக்கு எதிரான ஒவ்வொரு போட்டியிலும் தோனியை சுற்றி 9 பேரையும் நிற்க வைத்து அட்டாக்கிங் ஃபீல்ட் செட் செய்யும் கம்பீர் இந்த போட்டியிலும் விளையாடவில்லை. 

#CSKvDD

டாஸ் வென்ற ஸ்ரேயாஸ் சேஸிங் தேர்வு செய்தார். டெல்லி மாதிரியான அணிகளுக்கு எதிராக பென்ச் ஸ்டிரெந்த்தை பரிசோதனை செய்து பார்க்கலாம் என முடிவு செய்தார் தோனி. அதன்படி, இம்ரான் தாஹிர், சாம் பில்லிங்ஸ், தீபக் சஹார் மற்றும் ஸ்ரதுல் தாகுர் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதிலாக, தென்னாப்பிரிக்காவின் லுங்கி இங்கிடி, கேரளாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசிஃப், சுழற்பந்துவீச்சாளர் கரண் சர்மா மற்றும் டூபிளஸி ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக தென்னாப்பிரிக்க வேகம் இங்கிடிக்கு இது முதல் ஐபிஎல் போட்டியாகும். 

முதல் ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். முதல் பந்திலேயே அட்டகாசமான ஒரு இன்ஸ்விங்கர். ஒட்டுமொத்த டெல்லி அணியும் கதற, கூலாக நின்றார் அம்பயர். ஸ்ரேயாஸ் ஐயர் DRS ரிவ்யூ கேட்டார். DRS , கேமரா, மூன்றாவது அம்பயர், டிவியில் பார்க்கு ரசிகர்கள், நேரில் போட்டியை பார்க்கும் நபர்கள் என யார் பார்த்தாலும், பந்து முதலில் பேடில் பட்டதா இல்லை பேட்டில் பட்டதா என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை. பேட்டில் பட்டது என்பவர்கள் சென்னை ரசிகர்களாகவும், பேடில் பட்டது என்பவர்கள் சென்னை ஹேட்டர்ஸாகவும் பார்க்கப்பட்டனர். இறுதியில் டெக்னாலஜி சாலமன் பாப்பையாவைப் போல், கையைப் பிசைய, அம்பயர் தீர்ப்பே இறுதியானது என சொல்லி, நாட் அவுட் என்றது அரங்கில் இருக்கும் ஸ்கிரீன். அதற்குப் பின்னர் வாட்சன் நடத்தியது எல்லாம் அசுர வேட்டை. அடுத்த பந்தில் மீண்டும் ஒரு இன்ஸ்விங்கர், அதை அப்படியே ஸ்குயர் லெக் திசையில் பவுண்டரிக்கு விளாசினார் வாட்சன். 

#CSKvDD

அடுத்த ஓவரை 21 வயதான அவேஷ் கான் வீசினார். டூபிளஸி அந்த ஓவர் முழுக்கவே திணறினார். அந்த ஓவரில் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார் அவேஷ். ஐந்தாவது ஓவரில் வாட்சன் ' வாட்டோ' மோடுக்கு மாறினார். பஞ்சாபுக்கு எதிராக 3 மூன்று விக்கெட், கொல்கத்தாவுக்கு எதிராக 6 ரன்கள் எக்கானமி என இருந்த டெல்லியின் புதிய நம்பிக்கை பிளங்கட் தான் பந்து வீசினார். இந்தப் போட்டி அவர் மறக்க வேண்டிய ஒன்று என அப்போது பிளங்கட்டுக்கு தெரிந்திருக்காது. காலம் காலமாக ஷார்ட் பால்களில் ஊறிப்போன ஆஸ்திரேலிய வீரர் வாட்சனுக்கு ஷார்ட் பால் வீசினார் பிளங்கட். ஆட்டத்தின் முதல் சிக்ஸ். அடுத்த பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸ். ' டேய் டேய், நானும் ஒன்னு அடிச்சுக்கறேண்டா' என தடவிக் கொண்டிருந்த டூபிளஸியும் , ஷார்ட் ஃபைன் லெக் திசையில் ஒரு சிக்ஸ் அடிக்க, ஐந்தாவது ஓவரில் மட்டும் 20 ரன்கள் எடுத்தது சென்னை. பவர் பிளே இறுதியில், விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்திருந்தது சென்னை. 

#CSKvDD

மீண்டும் பிளங்கட்டை பந்து வீச அழைத்தார் ஸ்ரேயாஸ் ஐயர். ' ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம்ப்பா' என ஸ்ரேயாஸைப் பார்த்தனர் ரசிகர்கள். பந்தை வந்த வேகத்தில் அதே திசையில் ஒரு சிக்ஸ் அடித்தார் வாட்சன். அடுத்த பந்திலும் ஒரு சிக்ஸ். 25 பந்துகளில் அரைசதம் கடந்தார் வாட்சன். ராகுல் திவேதியா ஓவரில் மீண்டும் இரண்டு சிக்ஸ். இந்த முறை ஸ்குயர் லெக் திசையில் ஒன்று, மிட்விக்கெட் திசையில் ஒன்று. 10 ஓவர் முடிவில் 96 ரன்கள் எடுத்திருந்தது சென்னை. " 31 பந்துகளில் 64 ரன் எடுத்த வாட்சன் எங்க, 29 பந்தில் 30 ரன் எடுத்த டூபிளஸி எங்க " என அப்போதே சூரிய வம்சம் மீம் போடத் தொடங்கிவிட்டனர் நெட்டிசன்ஸ். 

 

#CSKvDD

விஜய் ஷங்கர் வீசிய 11 வது ஓவரின் எல்லாம் பந்தையும் அடிக்க ஆசைப்பட்டார் டூபிளஸி . அதிலும் ஒரு ஃப்ரீஹிட் வேறு  . வாட்சனால் கூட அதில் சிங்கிள் தான் அடிக்க முடிந்தது. இறுதியாக லாங்க் ஆஃபில் நின்று கொண்டிருந்த போல்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாரானார் டூபிளஸி . டெல்லி ரசிகர்களோடு, சென்னை ரசிகர்களும் துள்ளிக்குதித்தனர். காரணம் இன் - ஃபார்ம் ரெய்னா களமிறங்கினார். மேக்ஸ்வெல் பந்தில் ஒரு ரன்னுக்கு போல்ட் ஆனார் ரெய்னா. ஒவ்வொரு விக்கெட் இழப்பின் போதும், சென்னை அணி நம்பிக்கையை இழக்கவில்லை. ஏனெனில் அவர்களின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென் முழுக்க ஃபுல் பார்மில் இருந்தனர், இரண்டாண்டுகள் தடையில் இருந்தது காரணமோ என்னவோ, இந்த முறை கோப்பையை வெல்ல வேண்டிய முனைப்பில் இருந்தது சென்னை. 

இந்தத் தொடரில் அதிக ரன்களைக் குவித்த அம்பதி ராயுடு களமிறங்கினார். விஜய் ஷங்கர் இந்த ஓவரில் 15 ரன்களை வாரி வழங்கினார், இந்தப் போட்டியில், மிஷ்ராவின் பந்துகளில் மட்டுமே, நிதானமாக ஆடியது சென்னை அணி. மிஷ்ரா பந்துவீச்சீல் பிளங்கட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் வாட்சன்.  78 (40b 4x4 7x6)

#CSKvDD

இந்த சீசனில் முதல் சில போட்டிகளை தவிர்த்து விட்டுப் பார்த்தால், தோனி வெர்சன்  2.0வில் விளையாடுகிறார் என தோன்றியது. அதிக பந்துகளை சாப்பிட்டுவிட்டு, பின்னர் அதை சமாளிக்க டீசல் இஞ்சின் போல் வேகமெடுப்பார் தோனி. ஆனால், இந்த முறை நிலைமையே தலைகீழ். 37 வயதை நெருங்கும் தோனியை விட வேகமாக Running between the wicketsல் ஓட இன்னும் ஒருவர் கிரிக்கெட்டில் உருவாகவில்லை கட்டப்பா நிலை தான் இன்றுவரை.  எல்லோரும் திணறிய அமித் மிஷ்ரா பந்து வீச்சிலேயே , தன் முதல் சிக்ஸை அடித்தார் தோனி. 

' போல்ட்ட நான் பார்த்துக்கறேன், பிளங்கட்ட நீ பார்த்துக்க' மோடில் விளையாடினர் தோனியும், ராயுடுவும். 6 6 4 என அமர்க்களப்படுத்தினார் தோனி. போல்ட்டின் இந்த ஓவரில் 21 ரன்கள் எடுத்தது சென்னை. அடுத்து பிளங்கட்டின் பந்துவீச்சில் 4 6 4 அடித்து தன் பங்குக்கு அசரடித்தார் அம்பதி ராயுடு. 

19வது ஓவரை அவேஷ் கான் வீசினார். எளிதாக பிடிக்க வேண்டிய கேட்சை கோட்டைவிட்டார் முன்ரோ. ' இதெல்லாம், நாம தான திருப்பி அடிக்கணும், நம்ம பெர்பாமன்ஸ் வேற நல்லா இருக்காதேடா' மோடில் யோசித்துக்கொண்டிருந்தார் முன்ரோ. இறுதி ஓவரை வீசினார் போல்ட். மீண்டும் ஒரு சிக்ஸ். அடுத்து ஒரு பவுண்டரி. அடுத்த பந்தில் எல்லா காமெடிகளும் அரங்கேறியது. பந்து கீப்பர் பன்ட்டிடம் தான் இருந்தது. அதற்குள் என்ன நினைத்தாரோ, ராயுடு வேகமாக சிங்கிள் ஓட, ஸ்டிரைக்கர் எண்டுக்கு வந்துவிட்டார். தோனி கூலாக அங்கேயே நின்று கொண்டிருந்தார். சரி, மறுபடியும் வந்த இடத்துலேயே போய் நிப்போம் என ராயுடு ரிட்டர்ன் ரன்னுக்கு ஆயுத்தமாக , அவரை ரன் அவுட் செய்தார் போல்ட். 22 பந்துகளில் அரைசதம் கடந்தார் தோனி. அதில் ஐந்து சிக்ஸர்களும் அடக்கம்.

#CSKvDD

212 ரன்கள் எடுத்தால் வெற்றி என கடினமான இலக்குடன் களமிறங்கியது டெல்லி. சென்னை அணி முழுக்கவே சீனியர்கள் பட்டாளம் என்றால், டெல்லி முழுக்கவே கிட்ஸ் செக்சன் தான். பிருத்வி ஷா (18), ஸ்ரேயாஸ் ஐயர் (23 ), ரிஷப் பன்ட் (20), திவேதியா (24 ), அவேஷ் கான் (21 ) என பலரும் ஜூனியர்ஸ். 

முதல் ஓவரை தென் ஆப்பிரிக்காவின் இங்கிடி வீசினார். வெறும் ஒரு ரன். முதல் இரண்டு ஓவர்களிலும் , புதுமுகங்களை பரிசோதித்தது சென்னை. கேரளாவின் ஆசிஃப் இரண்டாவது ஓவரை வீசினார். இரண்டு பவுண்டரிகளை அடித்திருந்த ப்ருத்வி ஷா, ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். தேவைப்படும் ரன் ரேட் பத்துக்கும் மேல் என்பதால், விக்கெட்டுகளை இழந்தாலும் , விரட்டிபிடித்து ஆடியது டெல்லி.  வாட்சன் பந்தில் சிக்ஸ், பவுண்டரி; ஆசிஃப் பந்தில் ( 4 4 6 ) என அதிரடியாக ஆடினார் முன்ரோ. அடுத்த பந்தையும் அடிக்க ஆசைப்பட்ட முன்ரோ, ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து தன் விக்கெட்டை இழந்தார். 26 (16b 3x4 2x6). 

#CSKvDD

இந்த சீசனில் ரிஷப் பன்ட்டின் அதிரடி நேற்றும் தொடர்ந்தது. சந்தித்த முதல் பந்தையே லாங் ஆன் திசையில் சிக்ஸருக்கு அனுப்பினார் பன்ட். அடுத்த பந்தில் ஒரு பவுண்டரி. மிகவும் முக்கியமான போட்டியில், ஸ்ரேயாஸ் ஐயரும் ரன் அவுட் ஆகிவிட, களமிறங்கினார் மேக்ஸ்வெல். " நாம யாரு , நம்மள எதுக்கு ஒவ்வொரு அணியும் இவ்வளவு காசு கொடுத்து எடுக்குது " என எதுவும் புரியாமலேயே தொடர்ந்து ஆடிவருகிறார் மேக்ஸ்வெல். ரோஹித் ஷ்ரமாவை 'நோ' ஹிட் ஷர்மா என அழைத்தது போல், மேக்ஸ்வெல்லை மேக்ஸ்'நாட்' வெல் என்று தன் இனி அழைக்க வேண்டும் போல. நேற்றும் ஆறு ரன்கள் எடுத்துவிட்டு, பொறுப்பின்றி ஜடேஜா பந்தில் போல்டானார். 9 ஓவர் முடிவில் 74 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து, தனது டிரேட்மார்க் தோல்வி மோடுக்கு தயாரானது டெல்லி. அடுத்து களமிறங்கியது விஜய் ஷங்கர். அப்போதே, போட்டி முடிந்தது என பலரும் நினைத்தனர்.

#CSKvDD

நேற்றைய போட்டியின் சைலன்ட் ஹீரோ விஜய் ஷங்கர் தான். பங்களாதேஷுக்கு எதிராக டி20 இறுதி போட்டியில், இந்தியாவின் வெற்றியை பறிக்க முயற்சி செய்தவர் என்பது தான் விஜய் ஷங்கருக்கு இருக்கும் ஒரே வரலாறு. அந்த 17 ரன்களை எடுக்க, அவர் அன்று எடுத்துக்கொண்ட 19 பந்துகளும், பந்தைத் தொடக்கூட முடியாமல் திணறியதும், போட்டியைக் கண்ட அனைவருமே அறிவர். ஒட்டு மொத்த இணையத்தில் பேச்சுக்கு ஆளானார் விஜய் ஷங்கர். இந்த ஐபிஎல்லில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்ட போதும், பெரிதாக சோபிக்கவில்லை. ஆனால் நேற்றைய நிலைமையே வேறு.   தேவையான ரன்ரேட் 15ஐக் கடந்தது. ஜடேஜா பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ். மீண்டும் ஹர்பஜன் பந்தில் ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸ் என பன்ட் அடித்தாலும், அது வெற்றிக்கு போதவில்லை என்பது தான் உண்மை. ஆச்ஃப் வீசிய ஓவரில் வெறி கொண்டு ஆடினார் பன்ட். அந்த ஓவரின் இறுதியில் 18 ரன்கள். 37 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார் பன்ட். ஒற்றை ஆளாக போராடிய பன்ட் இறுதியில் இங்கிடி பந்துவீச்சில் அவுட்டானார் 79 (45b 7x4 4x6). 

அப்புறமென்ன, ஆகற வேலையைப் பார்ப்போம் என ஜாலியாக பந்து வீச வந்தார் பிரேவோ. லாங் ஆனில் இரண்டு சிக்ஸ், டீப் மிட் விக்கெட் திசையில் ஒரு சிக்ஸ் என அடித்தார் விஜய் ஷங்கர். " இந்தப் பையனுக்குள்ளயும் என்னமோ இருந்திருக்கு பாரேன் " என கிளாப் தட்டினர் ரசிகர்கள். ஆனால், இதை முன்பே செய்திருக்க வேண்டுமே. கடைசி ஓவரில் 28 ரன்கள் தேவைப்பட, இங்கிடி பந்துவீச வந்தார். அதில் விஜயால் ஒரு சிக்ஸ் மட்டுமே அடிக்க முடிந்தது. 

#CSKvDD

இமாலய வெற்றி பெறும் என எதிர்பார்த்த சென்னை, டெல்லியின் அதிரடி ஆட்டத்தால், 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது சென்னை. 40 பந்துகளில் 78 ரன்கள் விளாசிய வாட்சன் , மேன் ஆஃப் தி மேட்ச் விருது பெற்றார்.

 

#CSKvDD

 

https://www.vikatan.com/news/sports/123794-delhi-chases-steady-but-slow-csk-returns-to-top-position.html

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: நீங்க வேற டீமுக்கு போய்டுங்க கோலி

 

 
jnklpng

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்பிசி வீரர்களின் மோசமான பீல்டீங் காரணமாக  பெங்களூரு நிர்ணயித்த 176 ரன்கள் வெற்றி இலக்கை கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எடுத்தது. ஆர்சிபி மீண்டும் தோல்வியைத் தழுவியது.

 தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை கோலி அவரது அணிக்கு வழங்கியபோதும் அணி சிறப்பாக செயல்படாததால் அந்த அணி தொடர்ந்து தோல்வியைத் தழுவி வருகிறது.  இதுகுறித்து நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள் அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன்  நோட்ஸில்...

RCB சனியன் சகடை

‏மொக்கை பார்ம்ல இருக்க பயலுவளெல்லாம் அடிச்சு பழகுறது என்னம்மோ RCB  கிட்ட தான்

வாழவந்தார்

‏ஆட தெரியாதவன் தெருக்கோணல்னானாம், ஆர்சிபிலாம் இனி ப்ளேஆப் வர்றதெல்லாம் நடக்காத காரியம், மிச்சம் இருக்கிற சொச்சம்பேரும் ஒழுங்கா தாய் கழகம் வந்திடுங்க, நல்ல பதவியாக வாங்கி தர்றேன்

ஜானி

‏தோனி ரிட்டையர்ட் ஆகிப்போகும்போது கோலி சென்னை டீம் கேப்டனாயிரலாம். செமயா இருக்கும்.

RCB Lee Chandler

‏கோலிய வேற எதுனா டீம் தத்தெடுத்துக்கோங்கடா

arun

நீங்க வேற டீமுக்கு போய்டுங்க கோலி...

சிலிக்கான் செயலு

‏அமைதியோ அமைதி மயான அமைதி

விராட் மட்டும் கெத்து

#RCB'னா வெத்து

வினோத் முனியசாமி

‏கோலி ஒரு தலைசிறந்த பேட்ஸ்மேன் ஆனால் கண்டிப்பாக அவர் ஒரு நல்ல கேப்டன் இல்லை

Joseph Thalapathy

‏நல்லதான் ஸ்கோர் பண்றான்

இருந்தும்....

பாவம் virat kohli

nhbgpng

MI சமரன்

‏உமேஷ் டூ கோஹ்லி

பாஸ் நீங்க சீப்பா போட்ட பிளான நான் எப்டி சீப்ப வச்சு முடிச்சேன் பார்த்தீங்களா மொமண்ட்

ஒரு ரெண்டு பாலாவது டப் கொடுக்க வேணாமாடா

HBD Mr.200

‏செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா வீரா !

mi

ப்ளேயர்ஸெல்லாம் நல்லாதான் இருக்காங்க. ஆனா டீமா செட்டாக மாட்டேங்குது

jason

கோலி கிளவுஸ் மாட்டிக்கிட்டு கிரவுண்ட்ல இறங்குறது எங்களுக்கு அழகர் ஆத்துல இறங்குற மாதிரி

jklpng
 

மதுராந்தகன்

‏அடுத்த வருஷமாவது இந்த கோலிய வேற அணிக்கு ஏலத்திற்கு  விடுங்கடா பாவம் அவன் மட்டுமே தனியா விளையாடுறான்

CSK

‏கோலி கமிட்மென்ட்ல் பாதி இவன் டீம் மேட்ஸ்கிட்ட இருந்தாகூட ஜெயிச்சுடலாம்டா

hjhupng

கடவுள்

நீ என்னதான் விராட் கோலி மாதிரி உழைச்சாலும் உன் வாழ்க்கை ஆர்சிபி மாதிரிதான் விளையாடும்

CSK Being Human

விராட் கோலி அடுத்த சீசன்ல வேற டீமுக்கு மாறிப் போகலாம். ஒவ்வொரு மேட்ச்சும் தோத்துட்டு தலைய தொங்கப்போட்டு நடக்கறத பாக்கும்போது தோனி ரசிகனான நமக்கே ரொம்ப சங்கடமா இருக்கு.

http://tamil.thehindu.com/

  • கருத்துக்கள உறவுகள்

நான் மும்பைக்குத்தான் சப்போர்ட் .....ஆனால் கோலியின் நிலைமையை பார்க்கும்போது,பாவம் அனுஷ்கா வேற  அழப்போகுது இம்முறை பெங்களூர் பொங்கினாலும் பரவாயில்லை என்று நினைக்கிறன்.....!  ? 

Image associée

  • தொடங்கியவர்

ரஞ்சி முதல் ஐபிஎல் வரை... யார் இந்த ரிஷப் பன்ட்?

 
 

ஒரு போர்வீரனின் அடிப்படை குணமே, தோல்வி உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையிலும், தன் நாட்டிற்காக இறுதி வரை வெற்றி , தோல்விகளைக் கடந்து உறுதியுடன் போராடுவது. தோல்வியை முடிந்தவரையிலும் நெருங்கவிடாமல் எல்லைக்கு அப்பால் விரட்டி அடிக்க முயற்சிப்பது தான். நேற்றைய ஆட்டத்தில் ரிஷப் பன்ட்டும், விஜய் ஷங்கரும் இதை தான் செய்ய முயற்சித்தனர். 

கேப்டன் தோனி ரொம்பவே கூல் . எந்த சூழலிலும் நிதானத்தை இழந்து பதற்றப்பட மாட்டார். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் தோனி அப்படியில்லை.ஆட்டத்தின் கடைசி ஓவர் வரை 4 பந்துகளுக்கு 20 ரன் அடித்தால் என்ற நிலை வரும் வரை தோனி சற்று பதற்றமாகவே காணப்பட்டார். தோனி மட்டுமல்ல, அம்பத்தி ராயுடு, பிராவோ என சென்னை அணியில் அனைவருமே ஒருவித பதற்றத்துடனே காணப்பட்டனர். சென்னை ரசிகர்களுமே ஒருவித பதற்றத்துடனேயே அமர்திருந்தனர். அந்தப் பதற்றத்திற்கு வித்திட்டது ரிஷப் பன்ட் என்ற 20 வயது இளைஞன். உத்தர்காண்டைச் சேர்ந்த ரிஷப் பன்ட். கிரிக்கெட்டில்  பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய இளைஞன். ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் 300 கடந்த இளம் வீரர்களுள் ஒருவர். ரஞ்சிக் கோப்பையில் ரிஷப் பன்ட் அடித்த சாதனை சதமும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

ரிஷப் பன்ட்

 2016 ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 18 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தியவர்.  அதே தொடரில்   சதமடித்தும் அசத்தினார். அவர் சதமடித்த அதே நாளில் தான் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக 1.9 கோடி ரூபாய்க்காக ஏலம் எடுக்கப்பட்டார். 19 வயதில் இங்கிலாந்திற்கு எதிரான டி-20 தொடரில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் களமிறங்கினார். 2017 ஐ.பி.எல்லில் 14 போட்டிகளில் 366 ரன்களை குவித்த ரிஷப் பன்ட் இந்த முறை 8 போட்களிலேயே 306 ரன்கள் விளாசியிருக்கிறார். இந்த ஐ.பி.எல்லில் ஆர்.சி.பி க்கு எதிரான போட்டியில் 85 ரன்கள் விளாசி டெல்லி அணியின் ஸ்டார் ப்ளேயராக மாறியுள்ளார் ரிஷப் பன்ட்.இந்திய அணிக்காக டி-20 தொடர்களில் கலக்கவுள்ள ரிஷப் பன்ட் நேற்றைய ஆட்டத்தில் ஒரு புதிய நம்பிக்கையை பாய்ச்சி இருக்கிறார்.  

ரிஷப்

தான் விளையாடும் அணி தொடர் தோல்விகளால் அடிபட்டு கிடக்கிறது. கேப்டன் கம்பீர் தனக்கு கேப்டன்ஷிப் வேண்டாமென வெளியேறுகிறார். அணிக்கு புதிய கேப்டனாக அனுபவமில்லாத ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பேற்கிறார். இப்படிப் பல்வேறு சொதப்பல்களுக்கிடையே தனது அணி நேற்று களளமிறங்குகிறது.  எதிரணியோ பலம் வாய்ந்த அணி.  இந்த வருட கம் -பேக்கிற்கு பின் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன், தொடர் வெற்றிகளை குவித்து வரும் அணி.இப்படி எவ்வித அச்சமும் இல்லாமல் கோடையின் ஒட்டுமொத்த உஷ்னத்தையும் வெளிப்படுத்தினார் ரிஷப் பன்ட்.

டாஸ் ஜெயித்து பவுலிங்கை செலக்ட் செய்த டெல்லி அணியின் பவுலிங்கை வெரட்டி, வெரட்டி வெளுத்து வாங்கியது சென்னை அணி. 212 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய டெல்லி அணி முதல் ஓவரிலேயே திணற ஆரம்பித்தது. சிறிய தடுமாற்றத்திற்குப் பின் கோலின் முன்ரோ 2 சிக்சர் அடித்து ஆட்டத்தை சூடுபிடிக்க வைத்தார். ஆனால் சிறிது நேரத்திலயே ஆட்டமிழந்து டெல்லி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தார். அதன் பிறகு களமிறங்கிய ரிஷப் பன்ட் சிக்ஸருடன் தனது  வருகையை பதிவு செய்தார். அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டி டெல்லி பேன்சை சற்று நம்பிக்கையுடன் அமர வைத்தார். சில நிமிடங்களிலேயே சொதப்பலான ரன் அவுட் மூலம் ஸ்ரோயஸ் ஐயரும் வெளியேறினார்.அவரைத் தொடர்ந்து மேக்ஸ்வெல்லை நம்பிய டெல்லி பேன்ஸ்க்கும் அதிர்ச்சியே காத்திருந்தது.

ரிஷப்

8.5 ஓவர்களில் 74 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தோல்வியின் பாதையில் பயணிக்க ஆரம்பித்திருந்தது டெல்லி அணி. பவுண்டரி லைன்களுக்கு வெளியே அமர்ந்திருந்த டெல்லி ப்ளேயர்ஸ் சோர்வாக அமர்ந்திருந்தனர். டெல்லி கொடியை கையில் வைத்திருந்த டெல்லி பேன்ஸ் எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக இருந்தனர். ஹர்பஜன் வீசிய 10 வது ஓவரிலும் ஷாட்கள் தேறவில்லை.

ஜடேஜா வீசிய 11 வது ஓவரில் ஒரு பவுண்டரி , ஒரு சிக்சர் என பாண்ட் கணக்கைத் தொடங்கினார். டெல்லி ப்ளேயர்கள்  கைகளைத் தட்டி உற்சாகமாகினர். மடக்கி வைத்திருந்த டெல்லி டேர்டெவில்ஸ் கொடிகள் ரசிகர்களின் கைகளில் கம்பீரமாக ஆடத் தொடங்கியது. தங்களால் முடிந்தவரை விஜய் சங்கரும், ரிஷப் பன்ட்டும் அடிக்க ஆரம்பித்தனர். சென்னை அணியின் அசத்தலான பீல்டிங்கையும் மீறி துளிகளாக ரன் சேர்த்தனர். ரிஷப் பன்ட் ஒவ்வொரு ஷாட்டிலும் கீழே விழுகிறார். ஷாட்களுக்காக முயற்சி செய்கிறார். ஒரு பெரும் யானைப் படையுடன் எளிய போர்வீரன் ஒருவன் ஒற்றை ஆளாக போர் புரிவது போலக் காட்சி  அளித்தது ரிஷப் பன்ட்டின் ஆட்டம். 

கே. எம். ஆசிப் வீசிய 16 ஆவது ஓவரில் இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடித்து ஐம்பது ரன்களைக் கடந்த ரிஷப் பன்ட் தன் கைகளை உயர்த்தி தன் அணியினருக்கு 'தம்ஸ் அப்' காட்டினார். இருள் அடர்ந்த காட்டில் ஒரு சிறு மின்மினிப் பூச்சி தன் ஒளியைப் பாய்ச்சிய நம்பிக்கைத் தருணங்கள் அவை. பிராவோ வீசிய 17 ஆவது ஓவரிலும் இரண்டு பவுண்டரிகளை விளாசினார் பன்ட். 

விஜய் ஷங்கர்

 
 

18 பந்துகளில் 55 ரன்கள் தேவை என்ற மிகக் கடினமாக இலக்கில் லுங்கி நிகிடி வீசிய 18 வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார் பன்ட். அந்த ஓவரின் நான்காவது பந்து டெல்லி அணியின் நம்பிக்கையை தகர்த்தது. அவுட் சைடு ஆப் ஸ்டம்ப்பை நோக்கி வந்த ஸ்லோ டெலிவரியை பன்ட் விளாச அதை கவர் திசையில் ஜடேஜா கேட்ச் பிடித்தார். சென்னை அணி வீரர்கள் அத்தனை பேரின் முகத்திலும் அவ்வளவு நிம்மதி. 45 பந்துகளில் 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிஷப் பன்ட் வெளியேறினார். தன் அணியினை தோல்வியிலிருந்து மீட்க முடியவில்லை என்ற ஏக்கம் முகமெல்லாம் பரவ பெவிலியன் நோக்கித் திரும்பினான் அந்த அசகாய வீரன். ஒரு விளையாட்டு வீரனின் போர்குணம், நம்பிக்கையான ஆட்டம் சக வீரனுக்குள்ளும் ஒரு உத்வகத்தை உண்டாக்கும். பிராவோ வீசிய 19 வது ஓவரில் விஜய் சங்கர் அடித்த மூன்று சிக்சர்கள் அந்த நம்பிக்கையினால் ஏற்பட்ட உத்வேகம் போன்றே தோன்றியது. அந்த இரண்டு வீரர்களும் தன் அணியினை தோல்வியிலிருந்து மீட்க நடத்திய போராட்டம் பாராட்ட வேண்டியது. நேற்றைய போட்டியில் ஒருவேளை டெல்லி வெற்றி பெற்றிருந்தால் ரிஷப் பன்ட்டும், விஜய் ஷங்கரும் இன்றைய தினத்தின் பேசு பொருளாக மாறியிருப்பார்கள். எப்போதுமே போராட்டத்தைவிட வெற்றிக்கு தான் கவன ஈர்ப்பு அதிகமாக கிடைக்கும். ஆனால் வரலாறு வெற்றி, தோல்விகளைத் தாண்டி போராட்டத்தையும் ஞாபகம் வைத்திருக்கும். வரும் தலைமுறையின் நம்பிக்கைக்காக அதை சுமந்து நிற்கும். அந்த நம்பிக்கைக்குரிய டேர் டெவில்ஸ்களாக ரிஷப் பன்ட்டும், விஜய் ஷங்கரும் இருப்பார்கள்.

https://www.vikatan.com/news/sports/123808-article-about-delhi-daredevils-team-player-rishabh-pant.html

  • தொடங்கியவர்

2-வது இடத்தில் சிஎஸ்கே, கம்பீரை பின்னுக்குத் தள்ளி தோனி சாதனை : சில சுவாரஸ்ய தகவல்கள்

 

 
dhoni

11-வது ஐபிஎல் சீசன் போட்டியில் புனேயில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அதன் கேப்டன் தோனியும் பல்வேறு குறிப்பிடத்தகுந்த சாதனைகள் புரிந்துள்ளனர்.

புனேயில் நேற்று ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டம் நடந்தது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்தப் போட்டியில் அதிரடியாக பேட் செய்த தோனி, 22 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும்.

கேப்டனாக அதிக ரன்கள்

இதற்கு முன் ஐபிஎல் போட்டிகளில் கேப்டன் பொறுப்பில் இருந்து கவுதம் கம்பீர் 3,518 ரன்கள் சேர்த்திருந்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை உடைத்த தோனி, அவரைக் காட்டிலும், 38 ரன்கள் அதிகமாக சேர்த்து கேப்டன் பதவி வகித்து அதிகமான ரன் குவித்த வீரர் எனும் பெருமையை தோனி (3,556)பெற்றார்.

அதிவேக அரைசதம்

அதுமட்டுமல்லாமல் இதுவரை அதிவேகமாக தோனி அரை சத்தை 20 பந்துகளில் அடித்துள்ளார். கடந்த 2012-ம்ஆண்டு, பெங்களூரில் நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 20 பந்துகளில் அரை சதம் அடித்தார். அதற்குப் பின் இந்தப் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக 22 பந்துகளில் அரை சதம் அடித்துள்ளார் தோனி.

100-வது வெற்றி

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்ற பெற்றி டி20 போட்டிகளில் அந்த அணி பெறும் 100-வது வெற்றியாகவும், மறக்கமுடியாத தருணமாகவும் அமைந்தது.

டி20 போட்டிகளில் 100 வெற்றிகள், அல்லது அதற்கு அதிகமாக பெற்றி அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2-வது அணியாகும். 104 வெற்றிகளுடன் மும்பை இந்தியன்ஸ் அணி முதலாவது இடத்தில் இருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 164 போட்டிகளில் விளையாடி 100 வெற்றிகளும், 61 தோல்விகளையும் அடைந்துள்ளது, ஒருபோட்டியில் முடிவு கிடைக்கவில்லை.

மும்பை இந்தியன்ஸ் அணி 186 போட்டிகளில் விளையாடி 103 வெற்றிகளும், 79 தோல்விகளும், 2 ஆட்டங்களில் முடிவு இல்லாமலும் உள்ளது.

இதில் சென்னை அணி அதிகபட்சமாக பெங்களூரு அணிக்கு எதிராக 14 வெற்றிகளையும், டெல்லி அணிக்கு எதிராக 12 வெற்றிகளையும், கொல்கத்தா, மும்பை, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு எதிராக11வெற்றிகளையும் பெற்றுள்ளது.

இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 172 போட்டிகளில் விளையாடி 90 வெற்றிகள், 79 தோல்விகள், ஒரு போட்டியில் முடிவு இல்லாமல் உள்ளது.

சில சுவாரஸ்யமான தகவல்கள்

1. புனேயில் நேற்று நடந்த டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வாட்ஸன், டூபிளசிஸ் முதல் விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்ததை டெல்லி அணிக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு சேர்க்கப்பட்ட முதல் சதமாகும்.

2. சென்னை அணி 200 ரன்களுக்கு மேல் ஐபிஎல் போட்டியில் குவிப்பது நேற்றைய போட்டியோடு 16 முறையாகும்.

3. டெல்லி அணிக்கு எதிராக நேற்றைய போட்டியில் கடைசி 5 ஓவர்களில் தோனியின் ஸ்டிரைக் ரேட் 228.37 ஆகும். தோனியின் டி20 ஸ்டிரைக் ரேட் 176 என்று இருக்கும் நிலையில் நேற்று அதைக்காட்டிலும் கடந்தது.

4. டெல்லி அணி வீரர் லியாம் பிளங்கெட் நேற்று தான் வீசிய 3 ஓவர்களிலும் 6 சிக்ஸர்கள் அடிக்க விட்டுக்கொடுத்தார். இதற்கு முந்தைய போட்டியில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க அனுமதித்திருந்தார்.

5. சென்னை வீரர் அம்பதி ராயுடு நேற்றைய போட்டியில் ரன் அவுட் ஆவது இந்த ஐபிஎல் சீசனில் 4-வது முறையாகும்.

6. இந்த ஐபிஎல் சீசனில் விக்கெட் கீப்பராக இருந்து அதிக ரன்கள் குவித்த வீரர்களில் டெல்லி வீரர் ரிஸ்பா பிந்த் 306 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். தோனி 286 ரன்களுடன் 2-ம் இடத்தில் உள்ளார்

http://tamil.thehindu.com/sports/article23739400.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஐபிஎல் 2018- மும்பை இந்தியன்ஸ்க்கு 168 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஆர்சிபி

 

பெங்கரூருவில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு 168 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். #IPL2018 #RCBvMI

 
ஐபிஎல் 2018- மும்பை இந்தியன்ஸ்க்கு 168 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஆர்சிபி
 
ஐபிஎல் தொடரின் 31-வது ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பேட்டிங் செய்தது. குயின்டான் டி காக் - மனன் வோரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

முதல் மூன்று ஓவரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 11 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 4-வது ஓவரை டுமினி வீசினார். இந்த ஓவரில் வோரா 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். இந்த ஓவரில் மட்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு 22 ரன்கள் கிடைத்தது. அடுத்த ஓவரை மெக்கிளேனகன் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் டி காக் ஆட்டமிழந்தார். அவர் 13 பந்தில் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

2-வது விக்கெட்டுக்கு வோரா உடன் மெக்கல்லம் ஜோடி சேர்ந்தார். வோரா 31 பந்தில் 45 ரன்கள் எடுத்த நிலையில் மார்கண்டே பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். 3-வது விக்கெட்டுக்கு மெக்கல்லம் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 9 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்திருந்தது.

201805012142549346_1_RCBvMI002-s._L_styvpf.jpg

மெக்கல்லம் - விராட் கோலி ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ரன் மளமளவென உயர்ந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 14.3 ஓவரில் 121 ரன்கள் எடுத்திருக்கும்போது மெக்கல்லம் 25 பந்தில் 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன்அவுட் ஆனார். மெக்கல்லம் - விராட் கோலி ஜோடி 5.5 ஓவரில் 60 ரன்கள் குவித்தது. மெக்கல்லம் ஆட்டத்திற்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஸ்கோர் சரிய ஆரம்பித்தது.

18-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். இந்த ஓவரில் மந்தீப் சிங் (14), விராட் கோலி (32), வாஷிங்டன் சுந்தர் (1) ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணியின் ஸ்கோர் 150 ரன்னை எட்டுவதற்கே திணறியது. 19-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் 1 விக்கெட்டுடன் இரண்டு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

201805012142549346_2_RCBvMI001-s._L_styvpf.jpg

கடைசி ஓவரை மெக்கிளேனகன் வீசினார். இந்த ஓவரில் கொலின் டி கிராண்ட்ஹோம் மூன்று சிக்சர்கள் விளாச ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 24 ரன்கள் எடுக்க 20 ஓவரில் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்துள்ளது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 168 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/01214255/1160164/IPL-2018-royal-challengers-bangalore-168-runs-targets.vpf

7/1 * (1.2/20 ov, target 168)
  • தொடங்கியவர்

ஐபிஎல் ப்ளே-ஆப் சுற்றுக்கு டெல்லி, மும்பை, பெங்களூரு அணிகள் தகுதி பெற முடியுமா?- சிஎஸ்கே நிலை என்ன?

 

 
IPLTROPHY

ஐபிஎல் கோப்பை : கோப்புப்படம்

 11-வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் போட்டியில் 2-ம் கட்ட நகர்வுக்கு அனைத்து அணிகளும் தயாராகிவிட்டன. இதில் முக்கியக் கட்டமாக ப்ளே –ஆப் சுற்றுக்கு எந்தெந்த அணிகள் முன்னேறப் போகிறது என்பதை கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்

ஐபிஎல் போட்டியில் ஒவ்வொரு அணியும் முதல் பாதியில் 7 போட்டிகளிலும், 2-ம் பாதியில் 7 போட்டிகளிலும் விளையாட வேண்டும். அந்த வகையில் 8 அணிகளும் முதல்பாதியை முடித்துவிட்டன.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் 2 தோல்வி, 6 வெற்றி, 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 2-வதாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 போட்டிகளில் 6 வெற்றி, 2 தோல்வி 12 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் உள்ளது.

இந்த இரு அணிகளும் ப்ளே ஆப் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளன. தொடக்கத்தில் இருந்தே வெற்றிகளை பெற்று வந்த இரு அணிகளும் இன்னும் 3 போட்டிகள் வெற்றிகளைப் பெற்றாலே ஏறக்குறைய ப்ளேஆப் சுற்றை உறுதி செய்துவிடும்.

அதேசமயம், டெல்லி டேர்டெவில்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தொடக்கத்தில் இருந்து தோல்விகளைச் சந்தித்து தற்போதுதான் வெற்றிகளைப் பெறத் தொடங்கியுள்ளன. இந்த 3 அணிகளும் தலா 4 புள்ளிகளைப் பெற்று சமநிலையில் இருக்கின்றன.

இதில் டெல்லி அணி 8 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் இன்னும் 6 ஆட்டங்கள் உள்ளன. இதில் அனைத்திலுமே வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி இருக்கிறது. ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால்கூட ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதியாகாது.

அடுத்ததாக இன்று பெங்களூரு நகரில் பெங்களூரு அணிக்கும், மும்பை அணிக்கும் நடக்கும் போட்டி அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாகும். ப்ளே-ஆப் சுற்றில் முதல் 4 இடங்களில் இடம் பிடிக்க இரு அணிகளுக்கும் இந்தப் போட்டி முக்கியமானதாகும். இந்தப் போட்டியில் தோல்வி அடையும் அணி ப்ளே ஆப் சுற்றை மறந்துவிட வேண்டியது இருக்கும்.

-qualjpg
 

4 புள்ளிகளுடன் 7-ம் இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் அடுத்து வரும் 7 போட்டிகளில் 6 போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் இருக்கின்றன.

ப்ளே-ஆப் சுற்றுக்கு 4 அணிகள் முன்னேற வேண்டிய நிலையில், சென்னை அணியும், ஹைதராபாத் அணியும் ஏறக்குறைய தங்கள் வாய்ப்புகளை பிரகாசப்படுத்திக் கொண்டுவிட்டன. அடுத்த இரு இடங்களுக்குத்தான் கடும் போட்டி நிலவுகிறது.

பஞ்சாப் அணி 7 போட்டிகளில் 2 தோல்வி, 5 வெற்றி என 10 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி 8 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகள், 4 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 4-ம் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 7 போட்டிகளில் 3 வெற்றிகள், 4 தோல்வி உள்ளிட்ட 6 புள்ளிகளுடன் 5-ம் இடத்தில் உள்ளது.

இந்த மூன்று அணிகளுக்கு இடையேயும் கடுமையான போட்டி இருக்கிறது. இந்த 3 அணிகளைக் கடந்து மும்பை, பெங்களூரு, டெல்லி அணிகள் வருவது என்பது அடுத்து வரும் போட்டிகளில் வெறும் பெற்றிகளைப் பொறுத்தே அமையும்.

http://tamil.thehindu.com/sports/article23739697.ece?homepage=true

6 hours ago, suvy said:

நான் மும்பைக்குத்தான் சப்போர்ட் .....ஆனால் கோலியின் நிலைமையை பார்க்கும்போது,பாவம் அனுஷ்கா வேற  அழப்போகுது இம்முறை பெங்களூர் பொங்கினாலும் பரவாயில்லை என்று நினைக்கிறன்.....!  ? 

Image associée

உங்கள் ஆசை நிறைவேறும் போல இன்று.

40/3 * (6/20 ov, target 168)

அனுஷ்காவின் பிறந்தநாள் வேறு இன்று.

 

  • தொடங்கியவர்

மூடிய கதவுகளின் பின்னால் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது- கிறிஸ் கெய்ல்

 

 
 

மூடிய கதவுகளின் பின்னால் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது- கிறிஸ் கெய்ல்

சர்வதேச லீக் போட்டிகளில் நான் சிறப்பாக விளையாடிய போதிலும் ஐபிஎல் போட்டிகளிற்காக இம்முறை என்னை தெரிவு செய்யாதது குறித்து நான் ஆச்சரியமடைந்தேன் என கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்

பெங்களுர் ரோயல் சலஞ்சர்ஸ் அணியின் முக்கிய வீரனாக நானே விளங்கிளேன் அவர்கள் என்னுடன் தொடர்புகொண்டு நான் தங்கள் அணியில் விளையாடவேணடும் என தெரிவித்தனர் என கிறிஸ்கெயில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் என்னுடன் மீண்டும் தொடர்புகொள்வதாக பெங்களுர் அணியினர் தெரிவித்திரு;ந்தனர் ஆனால் அதன் பின்னர் அவர்கள் என்னுடன் தொடர்புகொள்ளவில்லை இதன் காரணமாக அவர்களிற்கு நான் தேவையில்லை என நான் நினைத்தேன் எனவும் கெய்ல் தெரிவித்துள்ளார்.
அவர்களின் கணிப்பு பிழையானது என்பதை நான் நிரூபித்துவிட்டேனா என்பது எனக்கு தெரியாது,சந்தேகப்படுபவர்கள் எப்போதும் இருப்பார்கள் ஆனால் அதேவேளை நான் யாருக்கும் என்னை நிரூபிக்கவேண்டியதில்லை எனவும் கெய்ல் குறிப்பிட்டுள்ளார்.
ஏலத்தின் இறுதி கட்டத்தில் நான் தெரிவு செய்யப்பட்டபோதிலும் அது குறித்து நான் கவலையடையவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதுவே இறுதி ஐபிஎல்லாகயிருந்திருந்தால் அதற்குபின்னரும் வாழ்க்கை இருந்திருக்கும் ஏதோ ஒரு கட்டத்தில் ஐபிஎல் உட்பட அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் நீங்கள் ஓய்வுபெறவேண்டியிருக்கும் எனவும் கிறிஸ்கெயில் தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய மற்றும் பங்களாதேஸ் லீக் போட்டிகளில் நான் மிகச்சிறப்பாக விளையாடினேன் பங்களாதேஸ் லீக்போட்டியில் இரண்டு சதங்களை பெற்றேன் எனவும்; அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் ஐபிஎல் போட்டிகளில் எந்த அணியும் என்னை தெரிவு செய்யாதது எனக்கு ஆச்சரியம் அளித்தது எனவும் கெயில் தெரிவித்துள்ளார்.

மூடிய கதவுகளின் பின்னால் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது ஆனால் இவ்வாறான விடயங்கள் இடம்பெறும் என்பதை நான் புரிந்துகொண்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப்; அணிக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது பெரிய விடயம் இதுவரை நான் மகிழ்;ச்சியாக உள்ளேன் எனவும் கெய்ல் தெரிவித்துள்ளார்

http://www.samakalam.com/செய்திகள்/மூடிய-கதவுகளின்-பின்னால்/

  • தொடங்கியவர்

ஐபிஎல் 2018- பரபரப்பான ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தியது ஆர்சிபி

 
அ-அ+

பெங்கரூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. #IPL2018 #RCBvMI #VIVOIPL

 
 
 
 
ஐபிஎல் 2018- பரபரப்பான ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தியது ஆர்சிபி
 
 
பெங்களூரு:
 
ஐபிஎல் தொடரின் 31-வது ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பேட்டிங் செய்தது. குயின்டான் டி காக் - மனன் வோரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
 
201805012341049404_1_ipl0105-virat._L_styvpf.jpg
 
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 20 ஓவரில் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 168 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. பெங்களூர் அணியில் மனம் வோரா 45 ரன்களும், மெக்கல்லம் 37 ரன்களும், விராட் கோலி 32 ரன்களும் எடுத்தனர். மும்பை அணி பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.
 
201805012341049404_2_ipl0105-hardik._L_styvpf.jpg
 
இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் ஆகியோர் களமிறங்கினர். இஷான் கிஷான் சவுத்தி ஓவரில் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். அதன்பின் டுமினி களமிறங்கினார். சூர்யகுமார் யாதவ் 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
 
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா உமேஷ் யாதவ் பந்தில் டக் அவுட் ஆனார். அதன்பின் பொலார்ட் களமிறங்கினார். அவர் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடி வந்த டுமினி 23 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது மும்பை அணி 12 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் ஹர்திக் பாண்டியா - குருணல் பாண்டியா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். 
 
201805012341049404_3_ipl0105-umesh._L_styvpf.jpg
 
இருவரும் பொறுப்புடன் விளையாடினர். குருணல் பாண்டியா 23 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்டியா அரைசதம் அடித்தார். கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தார். 
 
மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பெங்களூரு அணி ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி பந்துவீச்சில் சவுத்தி, உமேஷ் யாதவ், சிராஞ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
 

https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/01234105/1160169/IPL-2018-Royal-Challengers-Bamgalore-beat-Mumbai-Indians.vpf

  • தொடங்கியவர்

வெற்றியில் சதம் அடித்த சென்னை சூப்பர் கிங்ஸ்

 

 
DHONIjpg

11-வது ஐபிஎல் சீசன் போட்டியில் புனேயில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேப்டன் தோனியும் பல்வேறு குறிப்பிடத்தகுந்த சாதனைகள் புரிந்துள்ளனர்.

ஐபிஎல் தொடரில் நேற்றுமுன்தினம் புனேயில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்தப் போட்டியில் அதிரடியாக பேட் செய்த தோனி 22 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும்.

 

கேப்டனாக அதிக ரன்கள்

இதற்கு முன் ஐபிஎல் போட்டிகளில் கேப்டன் பொறுப்பில் இருந்து கவுதம் காம்பீர் 3,518 ரன்கள் சேர்த்திருந்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை உடைத்த தோனி, அவரைக் காட்டிலும், 38 ரன்கள் அதிகமாக சேர்த்து கேப்டன் பதவியில் அதிகமான ரன் (3,556) குவித்த வீரர் எனும் பெருமையை பெற்றார்.

 

அதிவேக அரைசதம்

அதிவேகமாக அரை சதத்தை தோனி 2-வது முறையாக அடித்துள்ளார். கடந்த 2012-ம்ஆண்டு, பெங்களூரில் நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 20 பந்துகளில் அரை சதம் அடித்தார். அதற்குப் பின் இந்தப் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக 22 பந்துகளில் அரை சதம் அடித்துள்ளார் தோனி.

 

100-வது வெற்றி

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்ற வெற்றி டி20 போட்டிகளில் அந்த அணி பெறும் 100-வது வெற்றியாகவும், மறக்கமுடியாத தருணமாகவும் அமைந்தது. டி20 போட்டிகளில் 100 வெற்றிகள், அல்லது அதற்கு அதிகமாக பெற்ற அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2-வது அணியாகும். 104 வெற்றிகளுடன் மும்பை இந்தியன்ஸ் அணி முதலாவது இடத்தில் இருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 164 போட்டிகளில் விளையாடி 100 வெற்றிகளும், 61 தோல்விகளையும் அடைந்துள்ளது, ஒருபோட்டியில் முடிவு கிடைக்கவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணி 186 போட்டிகளில் விளையாடி 103 வெற்றிகளும், 79 தோல்விகளும், 2 ஆட்டங்களில் முடிவு இல்லாமலும் உள்ளது.

இதில் சென்னை அணி அதிகபட்சமாக பெங்களூரு அணிக்கு எதிராக 14 வெற்றிகளையும், டெல்லி அணிக்கு எதிராக 12 வெற்றிகளையும், கொல்கத்தா, மும்பை, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு எதிராக11வெற்றிகளையும் பெற்றுள்ளது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 172 போட்டிகளில் விளையாடி 90 வெற்றிகள், 79 தோல்விகள், ஒரு போட்டியில் முடிவு இல்லாமல் உள்ளது.

http://tamil.thehindu.com/sports/article23743857.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடர்: வெற்றிப் பாதைக்கு திரும்புமா ராஜஸ்தான் ராயல்ஸ் அணி; டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் இன்று பலப்பரீட்சை

 

02CHPMUSHREYASIYER

ஸ்ரேயஸ் ஐயர்   -  PTI

02CHPMUAJINKYARAHANE

அஜிங்க்ய ரஹானே   -  AFP

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

தொடர் தோல்விகள் காரணமாக டெல்லி அணியின் கேப்டன் பதவியில் கவுதம் காம்பீர் விலகிய நிலையில் புதிய கேப்டனான ஸ்ரேயஸ் ஐயர் தான் பொறுப்பேற்ற முதல் ஆட்டத்தில் (கொல்கத்தாவுக்கு எதிராக) 55 ரன்கள் வித்தியாசத்தில் அணியை வெற்றி பெறச் செய்திருந்தார். அந்த ஆட்டத்தில் அவர் 40 பந்துகளில் 93 ரன்கள் விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். தோல்விகளால் துவண்டிருந்த அந்த அணிக்கு இந்த வெற்றி நம்பிக்கையை கொடுத்திருந்தது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்றுமுன்தினம் 13 ரன்கள் வித்தியாசத்தில் அடைந்த தோல்வியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை ஏறக்குறைய இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது டெல்லி அணி.

8 ஆட்டங்களில் விளையாடி உள்ள டெல்லி அணி 2 வெற்றி, 6 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள 6 ஆட்டங்களிலும் அந்த அணி வெற்றி பெற்றாலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு குறைவுதான். ஏனெனில் முதலிடத்தில் உள்ள சென்னை (12 புள்ளிகள்), 2-வது இடத்தில் உள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (12), 3-வது இடத்தில் உள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் (10), 4-வது இடத்தில் உள்ள கொல்கத்தா (8) ஆகிய அணிகள் தற்போதே வலுவாக உள்ளன. இதில் பஞ்சாப் அணிக்கு 7 ஆட்டங்களும் மற்ற 3 அணிகளுக்கும் தலா 6 ஆட்டங்களும் எஞ்சியுள்ளன.

எனவே டெல்லி அணி ஒரு ஆட்டத்தில் தோல்வியடைந்தால் கூட தொடரில் இருந்து மூட்டை கட்ட வேண்டியதுதான். இதனால் ஸ்ரேயஸ் ஐயர் சக வீரர்களிடம் நம்பிக்கை விதைத்து சிறப்பான பங்களிப்பை வெளிக்கொண்டுவர வேண்டிய பணியை செய்ய வேண்டிய கட்டத்தில் உள்ளார்.

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி கடைசி வரை போராடியே தோல்வியை சந்தித்தது. 212 ரன்கள் இலக்கை துரத்திய நிலையில் ரிஷப் பந்த் 45 பந்துகளில் 79 ரன்களும், விஜய் சங்கர் 31 பந்துகளில், 54 ரன்களும் விளாசி வெற்றிக்காக போராடியது சற்று தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த சீசனில் ரிஷப் பந்த் 306 ரன்கள் விளாசி அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் 4-வது இடத்திலும், ஸ்ரேயஸ் ஐயர் 257 ரன்கள் சேர்த்து 11-வது இடத்திலும் உள்ளனர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். பந்து வீச்சில் டிரென்ட் போல்ட் மட்டுமே தொடர்ச்சியாக சிறந்த பங்களிப்பை வழங்கி வருகிறார். இதுவரை 11 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள அவருக்கு மற்ற பந்து வீச்சாளர்களிடம் எந்தவித உறுதுணையும் கிடைக்காமல் இருப்பது பெரிய பலவீனமாக உள்ளது.

ராஜஸ்தான் அணி 7 ஆட்டங்களில், 3 வெற்றி, 4 தோல்விகளுடன் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. அஜிங்க்ய ரஹானே தலைமையிலான அந்த அணி இந்த சீசனில் சீரற்ற நிலையில் உள்ளது. பெரும்பாலும் அந்த ஒரு ஆட்டத்தில் வெற்றி, அடுத்த ஆட்டத்தில் தோல்வி என்ற பாதையில் பயணித்து வருகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் சீரான வெற்றிகளை குவிப்பதற்கான வழிகளை கண்டறிய வேண்டிய நிலையில் ராஜஸ்தான் அணி உள்ளது. கடைசியாக ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 152 ரன்கள் இலக்கை விரட்டி பிடிக்க முடியாமல் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது ராஜஸ்தான் அணி.

அந்த ஆட்டத்தில் ரஹானே 65, சஞ்சு சாம்சன் 40 ரன்கள் சேர்த்த போதிலும் மற்ற பேட்ஸ்மேன்களிடம் இருந்து எந்தவித ஆதரவும் கிடைக்கவில்லை.

இந்த சீசனில் இவர்கள் இருவர் மட்டுமே ராஜஸ்தான் அணிக்காக சீராக ரன்கள் சேர்த்து வருகின்றனர். பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர் ஆகியோரது சீரற்ற பேட்டிங் அணியின் திறனை வெகுவாக பாதித்துள்ளது. பந்து வீச்சில் 2 ஆட்டங்களில் 6 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள ஜோப்ரா ஆர்ச்சர் நம்பிக்கை அளிப்பவராக உள்ளார். சுழற்பந்து வீச்சாளர்களான ஸ்ரேயஸ் கோபால், கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோர் எதிர்பார்ப்புக்கு தகுந்தபடியிலான திறனை வெளிப்படுத்தாதது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

http://tamil.thehindu.com/sports/article23743836.ece

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

''நாங்க மோசமா ஆடுவோம்... அவங்க எங்களைவிட மோசமா ஆடுவாங்க!'' - கோலி Vs ரோஹித் #RCBvMI

 
 


2018 ஐபிஎல் கிரிக்கெட்டின் இரண்டு சொதப்பல் கேப்டன்கள் இருவரும் சந்தித்துக்கொண்டபோது.... அவர்கள் கையில் எதுவும் இல்லை... ஏதோ உருளுதாம்... மிரளுதாம் என்பதுபோல  அப்படி இப்படி விளையாடி... என்னென்னவோ செய்து, ஏதேதோ நடந்து... இறுதியில் இருவரில் யாரோ ஒருவர் வெற்றிபெறுவாரே அதுதான் நேற்று நடந்தது!
 

RCBVSMI


கோலி தன்னுடைய பெளலர்களைவிட ஜேபி டுமினி, ஹர்திக் பாண்ட்யா, மெக்ளீனிகன் என்கிற இந்த மூன்று மும்பை பெளலர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். இந்த மூவர் வீசிய மூன்றே ஓவர்களில் 66 ரன்களை அப்படியே அல்வா போல பெங்களூரு அணிக்கு ஊட்டிவிட்டார்கள். 

கேப்டன், வைஸ் கேப்டனின் அதிரடி வியூகங்கள்?!

வியூகங்களோ, அதிரடி கேம் பிளான்களோ எதுவும் கிடையாது. 7 போட்டிகளில் 5-ல் தோல்வியடைந்துவிட்டோம் என்பதற்காகவே வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்கிற போட்டியில் சின்னச் சின்ன மாற்றங்கள் செய்திருந்தார்கள் இந்திய கிரிக்கெட்டின் கேப்டனும், துணை கேப்டனும். 
டீமில் பெரிய மாற்றங்களைச் செய்ய வேண்டிய இரண்டு கேப்டன்களுமே பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ரோஹித் ஷர்மா ஏன் போன மேட்சில் பொலார்டை நீக்கினார் எனத் தெரியாது. அதேபோல் கோலி ஏன் கடந்த போட்டியில் வாஷிங்டன் சுந்தரை உட்காரவைத்தார் எனத் தெரியாது. ஆனால், இருவரையுமே மீண்டும் தங்கள் அணிகளுக்குள் கொண்டுவந்திருந்தார்கள் இரண்டு கேப்டன்களும்! இன்னொரு எக்ஸ்ட்ரா ஸ்பின்னர் தேவை என்கிற நிலையிலும், போன மேட்சில் சிறப்பாகப் பந்துவீசிய முருகன் அஷ்வினை அணியில் சேர்க்கவில்லை கோலி. 


வாரி வழங்குவோம் பெளலிங்!

டாஸ் வென்ற ரோஹித் ஷர்மா கோலி டீமை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். ஆஃப் ஸ்பின்னரான ஜேபி டுமினியைவைத்து முதல் ஓவரைத் தொடங்கினார் ரோஹித் ஷர்மா. கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியிலுமே ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை மாற்றிக்கொண்டேவரும் கோலி, இன்றைய போட்டியில் டிகாக்குடன் ஓப்பனிங் பேட்ஸ்மென்னாக இறக்கியது மன்னன் வோரா. டுமினியின் இரண்டாவது பந்தையே சிக்ஸருக்கு அடித்து பெங்களூருவின் இன்னிங்ஸை சிக்ஸருடன் தொடங்கினார் வோரா. ஆனால், அடுத்த நான்கு பந்துகளும் டாட் பால்ஸ். 
இரண்டாவது ஓவர் மெக்ளீனிகன் வீச, இரண்டு ரன் மட்டுமே. இரண்டு ஓவர்களில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தது பெங்களூரு. மூன்றாவது ஓவர் வீசியவர் பும்ரா. இந்த ஓவரில் மூன்று ரன்கள் மட்டுமே எடுத்தது பெங்களூரு. ஆனால், மூன்று ஓவர்களுக்கும் சேர்த்து நான்காவது ஓவரில் 'இந்தா எடுத்துக்கோ' எனப்போட்டுக்கொடுத்தார் ஜேபி டுமினி. 
முதல் பந்தில் மிட் ஆனில் ஒரு பவுண்டரி. அடுத்தப்பந்தில் மிட் ஆஃபில் ஒரு சிக்ஸர். இரண்டு பந்துகளும் அடிக்கப்பட லைன் அண்ட் லெங்க்தை மறந்த டுமினி ஸ்டம்புகளுக்கு வெளியே மூன்றாவது பந்தை வீச, மூன்றாவது பாலிலும் பவுண்டரி. நான்காவது பந்தில் எக்ஸ்ட்ரா கவர் பக்கம் ஒரு சிக்ஸர். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்ஸர், இரண்டு சிங்கிள் என  22 ரன்கள் அடித்தது பெங்களூரு. 

RCBVSMI


ஐந்தாவது ஓவருக்கு வந்தவர் மெக்ளீனிகன். இந்த ஓவரின் ஆறு பந்துகளையும் சந்தித்த டிகாக் நான்காவது பந்தில் பவுண்டரி அடித்தார். கடைசிப்பந்தில் அவுட் ஆனார். ஷார்ட் மிட் விக்கெட்டில் நின்றுகொண்டிருந்த ரோஹித் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் டிகாக். 1 டவுன் பேட்ஸ்மெனாக கோலிக்குப் பதில் வந்தவர் பிரண்டன் மெக்கல்லம். பவர் ப்ளேவின் கடைசி ஓவரை வீசியவர் மார்க்கண்டே. 6 ஓவர்களின் முடிவில் 50 ரன்கள் எடுத்திருந்தது பெங்களூரு!

ஹர்திக் பாண்டியாவின் அன்புப் பரிசு!

அதிரடியாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட பிரண்டன் மெக்கல்லம் அப்படி ஆடவில்லை. மாறாக வோரா அடிக்க ஆரம்பித்தார். மார்க்கண்டேவின் ஓவரிலும் வோரா மேஜிக்கை நிகழ்த்தத் துடிக்க ஒரு சிக்ஸர் கிடைத்தது. ஆனால், அடுத்தப்பந்திலேயே வோரா, எல்பிடபிள்யு முறையில் அவுட். 
சாதுவாக இருந்த மெக்கல்லத்தை உசுப்பேற்ற வந்தார் பாண்டியா. 10-வது ஓவரை வீசிய பாண்டியா மெக்கல்லத்தின் பேட்டுக்கு உயிர்கொடுத்தார். மார்புக்கு மேல் ஃபுல் டாஸாக வந்தப் பந்தை மெக்கல்லம் தூக்கியடிக்க, அது சிக்ஸர். அடுத்த ஃப்ரீ ஹிட் பாலை தனது வழக்கமான ஷாட்டான கீப்பர் தலைக்குப்பின்னால் திருப்பி அடித்தார் மெக்கல்லம். பாண்டியாவுக்கு வந்த சோதனை இரண்டு சிக்ஸர்களோடு முடியவில்லை. நான்காவது பந்தில் மீண்டும் ஒரு பவுண்டரி என 10-வது ஓவரில் 20 ரன்கள் அடித்தது பெங்களூரு. 
12 ஓவரில் மார்க்கண்டேவும் வெளுக்கப்பட்டார். கோலி ஒரு பவுண்டரி அடிக்க, மெக்கல்லம் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகள் அடித்து 104 ரன்களுடன் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்தது பெங்களூரு. ஆனால் 15-வது ஓவரில் ஆரம்பித்தது சோதனை. 

கோலி

கோலி அவுட்!

மெக்ளீனிகனின் ஓவரில் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார் மெக்கல்லம். ரன் ரேட் இறங்க ஆரம்பித்து. 17 ஓவர்களின் முடிவில் 139 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது பெங்களூரு. கடைசி மூன்று ஓவர்களில் 'கோலி வில் பி பேக்' என ரசிகர்கள் எதிர்பார்க்க, பாண்டியா வீசிய முதல் பந்தில் மந்தீப் சிங் அவுட். அடுத்தப் பந்தில் கோலி பேக் டு பெவிலியன். இந்த ஓவரின் கடைசிப் பந்தில் வாஷிங்டன் சுந்தர் அவுட் என ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை எடுத்து பெங்களூரை தத்தளிக்கவைத்தார் பாண்டியா. 
ஆனால், கோலிக்கு கடவுள் இறக்கம் காட்டினார். முதல் மூன்று ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே கொடுத்து விக்கெட்டையும் எடுத்திருந்த மெக்ளீனிகனுக்கு கடைசி ஓவரில் மரண அடி காத்திருந்தது. நான்காவது பந்தில் ஆரம்பித்தது அந்த சிக்ஸர் புயல். காலின் டி கிராண்ட்ஹோம்க்கு ஸ்லோ ஆஃப்கட்டர் போட, அதை மிட்விக்கெட் திசையில் தூக்கியடித்து சிக்ஸர் ஆக்கினார் கிராண்ட்ஹோம். ஐந்தாவது பந்தில் இரண்டு ரன்கள் அடித்தார் . கடைசிப்பந்தை வயிற்றுக்கு மேல் ஃபுல் டாஸாகப் போட்டார் மெக்ளீனிகன். ஸ்கொயர் லெக் திசையில் இதைத் தூக்கி சிக்ஸர் அடித்தார் கிராண்ட்ஹோம். வயிற்றுக்கு மேல் வந்ததால் நோ பால் அறிவிக்கப்பட, கடைசிப் பந்து ஃப்ரீ ஹிட். யாருக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பு? மீண்டும் சிக்ஸர் விளாசினார் கிராண்ட்ஹோம். இந்த ஓவரில் மட்டும் 24 ரன்கள் அடித்தது பெங்களூரு. 167 ரன்கள்  என டார்கெட்டை செட் செய்தது கோலியின் டீம்!


பெளலிங் பிளான்!

''நேத்து என்னப் பண்ணோமோ அதுதான் இன்னைக்கும்'' என்பதுபோலவே கூல் கேப்டனாக தனது பெளலர்களை இறக்கினார் கோலி. டிம் சவுத்திக்கு முதல் ஓவர். இஷாந்த் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஓப்பனிங் இறங்கினர். முதல் ஓவரில் யாதவ் ஒரு பவுண்டரி அடிக்க, மும்பை பவுண்டரியுடன் இன்னிங்ஸைத் தொடங்கியது. ஆனால், முதல் ஓவரின் கடைசிப்பந்திலேயே விக்கெட். போல்டானார் கிஷன். இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியிருக்கும் ஜார்க்கண்ட் வீரரான இஷாந்த் கிஷனின் மூன்றாவது டக் அவுட் இது. 
1 டவுன் வந்தவர் ரோஹித் இல்லை. ரோஹித்தின் புதிய நம்பிக்கை ஜேபி டுமினி. இரண்டாவது ஓவரை வழக்கம்போல உமேஷ் யாதவுக்கே கொடுத்தார் கோலி. டுமினி ஒரு பவுண்டரி, யாதவ் ஒரு பவுண்டரி என மொத்தம் 11 ரன்கள் இந்த ஓவரில் மும்பைக்கு கிடைத்தது. மூன்றாவது ஓவரை மீண்டும் டிம் சவுத்தி வீசி வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். நான்காவது ஓவர் மீண்டும் உமேஷ் யாதவ் கையில். கோலியே எதிர்பார்க்காத அதிசயம்... ஏன் உமேஷ் யாதவே எதிர்பார்க்காத அதிசயம் நிகழ்ந்தது. சூர்யகுமார் முதல் பாலில் எல்பிடபிள்யு ஆகி அவுட் ஆக, அடுத்தப்பந்தில் ரோஹித் ஷர்மா அவுட். பேட்டில் லைட்டாக உரசியப் பந்து விக்கெட் கீப்பரிடம் போனது. உமேஷ் யாதவ் பெரிதாக அப்பீல் செய்யாத நிலையில் கீப்பர் டிகாக் கான்ஃபிடன்ட்டாக இருந்தார். நடுவர் அவுட் கொடுக்கவில்லை. ஆனால், டிகாக்கை நம்பினார் கோலி. ரிவியூ கேட்க அது க்ளீன் கேட்ச் எனத் தெரிந்தது. ரோஹித் டக் அவுட்.
நான்கு ஓவர்களின் முடிவில் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து வெறும் 24 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது மும்பை. உமேஷ் யாதவின் இரண்டு விக்கெட்டுகளை எதிர்பார்க்காத கோலி பவர் ப்ளேவின் ஆறாவது ஓவரையும் மீண்டும் உமேஷிடமே கொடுத்தார். இந்த ஓவரின் முதல் பந்தில் பொலார்டு ஒரு பவுண்டரி அடிக்க, கடைசிப்பந்தில் இன்னொரு நான்கு ரன்களை இலவசமாக வழங்கியது பெங்களூரு. சிங்கிள் ரன்னோடு முடிந்திருக்கவேண்டியது, ஓவர் த்ரோ ஆனாதால் 5 ரன்கள் போனது.

RCBVSMI
 

பொலார்ட்டுக்கு டாட்டா!

பவர்ப்ளேக்குப் பிறகுதான் ஸ்பின்னர்கள். ஏழாவது ஓவர் சாஹல் கையில்! பந்து கன்னாபின்னாவென ஸ்பின் ஆக அரண்டுபோனார் பொலார்டு. அதில் ஒரு பந்து ஸ்பின்னாகி,  வைடாகி பவுண்டரிக்கே போனது. மொகமது சிராஜின் எட்டாவது ஓவரில் மீண்டும் ஒரு விக்கெட். பொலார்டு அவுட். 10-வது ஓவர் வாஷிங்டன் சுந்தர் கையில் வந்தது. ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என மொத்தம் 15 ரன்கள் இந்த ஓவரில் கொடுத்தார் சுந்தர். அவ்வளவுதான் இனிமேல் சுந்தருக்கு பெளலிங் வாய்ப்பு கிடைக்காது என கணித்ததுபோலவே நடந்தது. கோலி அதன்பிறகு சுந்தருக்கு வாய்ப்புத்தரவில்லை. 

பெங்களூருவை காப்பாற்றிய பாண்டியா பிரதர்ஸ்!

நிதானமாக ஆடிக்கொண்டிருந்த ஜேபி டுமினி 12-வது ஓவரில் ரன் அவுட் ஆனார். 29 பந்துகளில் 23 ரன்கள் அடித்திருந்தார் டுமினி. அதன்பிறகு ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா என இரண்டு சகோதரர்களின் பார்ட்னர்ஷிப்பில் எந்த அதிரடியும் இல்லை. கடைசி  5 ஓவர்களில் 62 ரன்கள் அடிக்கவேண்டும் என்கிற நிலை. கிராண்ட்ஹோமியை அடிக்க ஆரம்பித்தார் க்ருணால் பாண்டியா. க்ருணால் ஒரு சிக்ஸர் அடிக்க, ஓவரின் முடிவில் இரண்டு பவுண்டரிகள் அடித்தார் ஹர்திக். இந்த ஓவரில் மட்டும் மும்பைக்கு 17 ரன்கள். 
24 பந்துகளில் 45 ரன்கள் தேவை என்கிற நிலை. மொகமது சிராஜிடம் ஓவரைக் கொடுத்தார் கோலி. 10 ரன்கள் போனாலும் மிகச்சிறப்பாகவே பந்துவீசினார் சிராஜ். டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டான டிம் சவுத்தியிடம் 18-வது ஓவர் வந்தது. 18 பந்துகளில் 35 ரன்கள் தேவை என்கிற நிலை. களத்தில் இருப்பவர்கள் இருவருமே மிகச்சிறந்த 20/20 பேட்ஸ்மேன்கள். ஆனால், ரன்கள்தான் எடுக்கமுடியவில்லை. இந்த ஓவரில் 5 சிங்கள்கள் மட்டுமே. 12 பந்துகளில் 30 ரன்கள் தேவை என இலக்கை இன்னும் கடுமையாக்கிவிட்டுப் போனார் சவுத்தி.
சிராஜிடம் 19-வது ஓவர். க்ருணால் பாண்டியா அவுட். இந்த ஓவரிலும் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்தது மும்பை. கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவை என்கிற நிலையில் மீண்டும் சவுத்தி. முதல் பந்திலேயே ஹர்திக் பாண்டியா அவுட். இந்த ஓவரில் கட்டிங் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்தாலும் டார்க்கெட்டை முடிக்கமுடியவில்லை. மும்பைக்கு 6-வது தோல்வி. 

 


அம்பானியின் கனவு!

இந்தத் தோல்வியுடன் கிட்டத்தட்ட 2018 ஐபிஎல்லை விட்டு வெளியேறும் நிலைக்கு வந்துவிட்டது நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ். இனிவரும் 6 ஆட்டங்களிலும் வெற்றிபெற்றே ஆக வேண்டும். அந்த அதிசயம் நிகழ்ந்து, மற்ற அணிகள் எல்லாம் தோற்றால் மும்பைக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், மும்பை அடுத்து சந்திக்க இருப்பது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை. 
ஃபார்மில் இல்லாத ரோஹித் அணி, பயங்கர ஃபார்மில் இருக்கும் பஞ்சாபை வெல்வது என்பது அம்பானியின் கனவில் வேண்டுமானால் நிகழலாம். நிஜத்தில் நிகழ்ந்தால் அது வரலாறு!

https://www.vikatan.com/news/sports/123878-mumbai-indians-defeated-again-this-time-by-kohli.html

  • தொடங்கியவர்

‘வாழ்வு பெற்றது’ விராட் அணி: ‘நடையைக் கட்டிய’ நடப்பு சாம்பியன் மும்பை

 

 
virat

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட்கோலி   -  படம் உதவி: பிசிசிஐ ட்விட்டர்

டிம் சவுதி, உமேஷ் யாதவ், சிராஜ் ஆகியோரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு மூலம் பெங்களூரில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 31-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 13 ரன்களில் தோற்கடித்தது விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி.

ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு யாருக்கு வாய்ப்பு என்பதை அறியும் கத்திமேல் நிற்கும் போட்டியாக இது அமைந்திருந்தது. எதிரணி எட்டக்கூடிய ஸ்கோரை பெங்களூரு அணி அடித்திருந்த போதிலும், அந்த அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு, பீல்டிங் ஆகியவை வெற்றியைப் பெற்றுக்கொடுத்தது.

அடுத்து வரும் போட்டிகளில் தொடர் வெற்றிகளைப் பெறுவதன் மூலம் பெங்களூரு அணியின் ப்ளே ஆப் கனவு நனவாகலாம். தொடக்கத்திலேயே மும்பை அணியின் பேட்டிங் சீர்குலைவுக்கு காரணமான டிம் சவுதிக்கு ஆட்ட நாயன் விருது வழங்கப்பட்டது.

நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் நிலை, அடுத்த சீசனிலேயே இந்த அளவுக்கு மோசமாகும் என எதிர்பார்க்கவில்லை. ஏறக்குறைய அந்த அணியின் ப்ளே ஆப் சுற்றுக்கனவு முடிந்துவிட்டது என்றே கூறிவிடலாம். இனிமேல் தொடர் வெற்றிகள் பெற்றாலும் ப்ளே ஆப் சுற்றுக்கு மும்பை முன்னேறுவது இயலாது. இனிமேல் மும்பை மோதும் ஆட்டங்களில் போராடி பெறும் வெற்றி விழலுக்கு இறைத்த நீர் போலத்தான் அமையும்.

தென் ஆப்பிரிக்கத் தொடரில் இருந்தே பேட்டிங்கில் ஃபார்மில் இல்லாமல் சொதப்பி வந்த ரோகித் சர்மா ஐபில் தொடரில் தேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலும் அவரின் மந்தமான ஆட்டம் அவரின் தகுதிக்கும், அணியின் தோல்விக்கும் காரணமாக அமைந்துவிட்டது.

இனி வரும் போட்டிகளில் அவர் சதமடித்தாலும் அணிக்கு எந்தவிதமான பயனும் இல்லை. ரோகித் சர்மாவின் ஆட்டம் இந்த சீசனில் இந்த அளவுக்கு மோசமாக இருக்கும் என எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். 2 போட்டிகளைத் தவிர மற்ற போட்டிகள் அனைத்திலும் 15 ரன்களைக் கூட கடந்திருக்கமாட்டார்.

பெங்களூரு அணி 8 போட்டிகளில் 5 தோல்வி, 3 வெற்றி, என 6 புள்ளிகளுடன் 5-ம் இடத்தில் இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி 8 போட்டிகளில் 6 தோல்வி 2 வெற்றி என 4 புள்ளிகளுடன்7-ம் இடத்தில் இருக்கிறது.

டாஸ்வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்தது. 168 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் மட்டுமே சேர்த்துதோல்வி அடைந்தது.

டீ காக்,வோரா ஆட்டத்தை தொடங்கினார்கள். 2 ஓவர்கள் பொறுமை வோரா பொறுமை காத்தார். டுமினி வீசிய 3-வது ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடித்து வோரா மிரட்டினார்.

டீகாக் 7 ரன்கள் சேர்த்த நிலையில் மெக்லனகன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த மெக்குலம், வோராவும் ஓரளவு அடித்து ஆடி ரன்களைச் சேர்த்தனர். பவர்ப்ளே ஓவரில் 40 ரன்கள் சேர்த்தது பெங்களூரு அணி.

மார்கண்டே வீசிய 9-வது ஓவரில் 45 ரன்கள் சேர்த்த நிலையில் வோரா விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த கோலி, மெக்குலத்துடன் இணைந்தார். இருவரும் வழக்கத்துக்கு மாறாக நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி பவுண்டரிகள் மட்டுமே அடித்தனர். ஹர்திக் பாண்டியா வீசிய 10-வது ஓவரில் மெக்குலம் ஒரு பவுண்டரி, சிக்ஸர் அடித்தார். மார்கண்டே வீசிய 12-வது ஓவரில் மெக்குலம் 3 பவுண்டரிகள் அடித்து ரன்ரேட்டை வேகப்படுத்தினார்.

மெக்குலம் 37 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட் ஆகினார். அதன்பின் பெங்களூரு அணிக்கு சரிவு தொடங்கியது. ஹர்திக் பாண்டியா வீசிய 18-வது ஓவரில் மன்தீப் சிங் 14 ரன்களிலும், விராட் கோலி 32 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி பந்தில் வாஷிங்டன் சுந்தர் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். இந்த ஒவரில் மட்டும் 3 விக்கெட்டுகள் பறிபோனது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்தது. 121 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்த பெங்களூரு, அடுத்த 22 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.

மும்பை அணித் தரப்பில் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

168 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. ஆனால், தொடக்கத்திலேயே டிம் சவூதி, உமேஷ் யாதவ், சிராஜ் ஆகியோரின் கூட்டணிப் பந்துவீச்சு மும்பை அணியின் பேட்டிங்வரிசையை சீர்குலைத்தது.

sihanjpg

டிம் சவூதி பந்துவீச்சில் க்ளீன் போல்டாகிய மும்பை அணி வீரர் இஷான் கிஷான்

 

முதல் ஓவரிலேயே இஷான் கிஷானின் ஸ்டெம்புகளை தெறிக்கவிட்டார் சவூதி. 3-வது ஓவரை வீசிய உமேஷ் யாதவ் 9 ரன்களில் சூரியகுமார் யாதவையும், ரோகித் சர்மாவையும் அடுத்தடுத்து வெளியேற்றினார். 13 ரன்களில் பொலார்டை பெவிலியன் அனுப்பினார் சிராஜ்.

விரைவாக 4 விக்கெட்டுகளை பறிகொடுத்ததால், மும்பை அணியின் பேட்டிங் ஆடிப்போய் இருந்தது. டுமினி 23 ரன்களில் வெளியேறிய பின், பாண்டியா சகோதரர்கள் இருவரும் பொறுப்புடன் ஆடி ரன்களைச் சேர்த்தனர். 23 ரன்கள் சேர்த்த நிலையில் குர்னல் பாண்டியாவை வெளியேற்றினார் முகமது சிராஜ்.

ஹர்திக் பாண்டியா நிதானமாக பேட் செய்து அரைசதம் அடித்து 50 ரன்களில் ஆட்டமிழந்தார். 17 –வது ஓவரில் இருந்து முகமது சிராஜும், சவூதியும் பந்துவீசி கடும்நெருக்கடி கொடுத்து ரன்களைக் கட்டுப்படுத்தினர். இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி ரன் சேர்க்க முடியாமல் திணறியது.

கட்டிங் 12 ரன்களிலும், மெக்லனகன் ரன் ஏதும் எடுக்காமலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். பெங்களூரு அணித் தரப்பில் சவுதி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்

http://tamil.thehindu.com/sports/article23745854.ece

  • தொடங்கியவர்

இக்கட்டான தருணத்தில் கிடைத்த அதிமுக்கியமான வெற்றி; என் மனைவிக்கான பிறந்தநாள் பரிசு: கோலி பெருமிதம்

 

anushjpg
virat-kohli7591

விராட் கோலி: கோப்புப்படம்   -  படம் உதவி: ஐபிஎல் ட்விட்டர்

 
 

 மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக எங்களுக்கு கிடைத்த வெற்றி, இக்கட்டான தருணத்தில் கிடைத்த அதிமுக்கியமான வெற்றியாகும் என்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் நேற்று ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டம் நடந்தது. ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணியைத் தீர்மானிக்கும் முக்கியமான இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி. இதன் மூலம் பெங்களூரு அணி 8 போட்டிகளில் 3 வெற்றி, 5 தோல்வி, 6 புள்ளிகளுடன் 5-ம் இடத்தில் இருக்கிறது.

இந்த வெற்றி குறித்து பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''நாங்கள் மிகவும் இக்கட்டான தருணத்தில் இருந்தபோது, எங்களுக்கு இந்தப் போட்டியில் கிடைத்த வெற்றி மிகப்பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது. இந்த நேரத்தில் வெற்றி மிக முக்கியமானது. கடந்த 2 போட்டிகளில் இருந்து நாங்கள் ஊக்கம் பெற்று வந்தாலும், இந்தப் போட்டியில் கிடைத்த வெற்றி அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்ல உதவும்.

எங்கள் அணி வீரர்களின் ஒட்டுமொத்த உழைப்பே வெற்றிக்கு காரணமாகும். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் சிறப்பான பணியைச் செய்து இருக்கிறார்கள். எந்த வெற்றியை நாங்கள் உத்வேகத்துக்காக எடுத்துக்கொண்டு, முன்னேறிச் செல்வோம். இந்த வெற்றி நிச்சயம் எங்களுக்கு நம்பிக்கையை அளிக்கும்.

anushjpg

மனைவி அனுஷ்கா சர்மாவுடன் பிறந்தநாள் கொண்டாடிய விராட் கோலி

 

இந்த மிகச்சிறப்பான வெற்றியை எனது மனைவி அனுஷ்காவுக்கு பிறந்தநாள் பரிசாக அளிக்கிறேன்.''

இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/sports/article23749601.ece

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மழையால் தாமதம்! - 18 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட டெல்லி - ராஜஸ்தான் போட்டி #DDvsRR

 
 

டெல்லி - ராஜஸ்தான் அணிகள் இடையிலான ஐபிஎல் போட்டி மழையால் தாமதமாகத் தொடங்கப்பட்டதால், 18 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. 

டெல்லி பெரோஷா கோட்லா மைதானம்

Photo: Twitter/IPL

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரஹானே, ஃபீல்டிங் தேர்வு செய்தார். டாஸுக்குப் பின்னர் மழைப்பொழிவு தொடங்கியதால், குறிப்பிட்ட நேரத்துக்குப் போட்டியைத் தொடங்க முடியவில்லை. தொடர்ந்து மழை பெய்து வந்ததால், போட்டி நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்தநிலையில், 9 மணிக்குப் பிறகு மழை குறையத் தொடங்கி, முற்றிலுமாக நின்றது. இதையடுத்து மைதானத்தைப் பரிசோதித்த நடுவர்கள் போட்டி 9.30 மணிக்குத் தொடங்கும் என்றும், தலா 18 ஓவர்கள் கொண்டதாகப் போட்டி இருக்கும் என்றும் அறிவித்தனர். 

 

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியின் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனர். சோதி மற்றும் மஹிபால் லாம்ரோர் ஆகியோருக்குப் பதிலாக டிஆர்கி ஷார்ட் மற்றும் ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல், டெல்லி அணியில் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் டீவாட்டியாவுக்குப் பதிலாக ஷாபாஸ் நதீம் சேர்க்கப்பட்டுள்ளார். 

https://www.vikatan.com/news/sports/123931-ipl-2018-ddvsrr-match-reduced-to-18-overs-perside-after-rain-delay.html

  • தொடங்கியவர்

'யங் மென்' ஷோ காண்பித்த டெல்லி - ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 151 ரன்கள் இலக்கு!

 
 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு  டெல்லி டேர்டெவில்ஸ் அணி 151 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.  

92_23304.jpg

photo credit: twitter/ipl

ஐ.பி.எல் 32வது லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியின் தொடக்கத்திலேயே மழை பெய்ததால் போட்டி தாமதமாக்க தொடங்கப்பட்டதுடன், 18 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. ஓவர்கள் குறைக்கப்பட்டதால், பவர் ப்ளே ஓவர்களும் 6-லிருந்து 5ஆகக் குறைக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய டெல்லி அணிக்கு இந்த முறை கோலின் முன்ரோ ஏமாற்றம் தந்தார். முதல் ஓவரிலேயே அவர் டக் அவுட் ஆகி அதிர்ச்சி தந்தார். பின்னர் இணைந்த பிருத்வி ஷா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இணை ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தனர். 25 பந்துகளில் 4 சிக்கர்ஸ், 4 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் குவித்தபோது, ஸ்ரேயாஸ் கோபாலிடம் கேட்ச் கொடுத்து பிருத்வி ஷா வெளியேறினார். 

 

இதனையடுத்து வந்த இளம் வீரர் ரிஷப் பாண்ட் ஸ்ரேயாஸ் ஐயருடன் கூட்டணி அமைத்தார். இருவரும் சேர்ந்து ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். குறிப்பாக பாண்ட்  ராஜஸ்தான் பவுலர்களை சோதித்தார். இருவரும் ரன்ரேட்டை 9 ரன்களுக்கு  குறையாமல் பார்த்துக்கொண்டனர். அரை சதம் அடித்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயரும், 69 ரன்கள் எடுத்தநிலையில் ரிஷப்பும் அவுட் ஆகினர். 17.1 ஓவர்களில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 12 ஓவர்களில் 151 எடுத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி என்ற இலக்கை நோக்கிக் களமிறங்கவுள்ளது. இளம்வீரர்கள் கூட்டணியால் டெல்லி அணி இமாலய இலக்கை நிர்ணயித்தது. ராஜஸ்தான்  தரப்பில் ஜெயதேவ் உனட்கட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

https://www.vikatan.com/news/sports/123935-rajasthan-royals-to-chase-151-runs-against-delhi.html

92/1 * (7.6/12 ov, target 151)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.