Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பணம் அபிவிருத்திக்கானதே தவிர இலஞ்சமல்ல – சம்மந்தன்..

Featured Replies

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பணம் அபிவிருத்திக்கானதே தவிர இலஞ்சமல்ல – சம்மந்தன்..

Sambantthar-_1053.jpg?resize=748%2C499

 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்திக்கான நிதிபோன்றே எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டது. இது எப்படி இலஞ்சமாக இருக்க முடியும் என எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்மந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று(27) கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பல்வேறு காரணிகளால் நாட்டில் உருவாக்கப்படுகின்ற அரசியல் சாசனம், பல சர்வதேச தீர்மானங்களும், அழுத்தங்களும், கடும் போர்காலங்களின் நிலைமைகள் , தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் , சர்வதேச சமூகத்தின் கூடுதலான அக்கறை போன்றன காரணமாக சாதாரண உள்ளுராட்சி சபைத் தேர்தலிலும் பார்க்க முக்கியத்துவம் பெறுகிறது.

நீங்கள் அவதானிக்கலாம் நாட்டினுடைய தேசியத் தலைவர்கள் அனைவரும் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவா்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவா்கள், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவா்கள் வேறு பல அரசியல் தலைவா்கள் இந்த தேர்தலில் தீவிரமாக ஈடு;பட்டு வருவதுடன் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றார்கள். நடைபெற்ற ஊழல் விவகாரங்களும் தேர்தல் பிரச்சாரங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது.

ஒற்றையாட்சி தொடருமா அல்லது தமிழீழம் மலருமா என்பதை இந்த தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும் என மகிந்த ராஜபக்ஸ தெரிவித்து வருகின்றார். இந்த தேர்தலில் தான் கணிசமான ஆசனங்களை பெற்றுவிட்டால் தேசிய பிரச்சினைக்கு தீர்வு கானவேண்டிய விடயத்தை இல்லாமல் செய்துவிடலாம் என அவா் நினைக்கின்றார். இவ்வாறு பல்வேறு காரணங்களின் நிமித்தம் இந்தத் தேர்தல் எங்களுக்கு முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழ் மக்கள் இந்த நாட்டில் சம அந்தஸ்த்துடன் வாழ்வதற்கான முப்பது வருடகால ஆயுதப் போராட்டம் 2009 இல் முடிவுக்கு வந்த பின்னர் எமது இராஜதந்திர போராட்டம் தொடர்கிறது. பல கருமங்கள் நிறைவேற்றப்பட்டு, சர்வதேச ரீதியான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு எமது பணிகள் தொடர்கிறது.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்த அரசாங்கத்திற்கு செய்வதற்கு விருப்பம் இருந்தாலும், மந்த கதியில் செய்து வருகின்றார்கள். காரணம் என்னவென்றால் முன்னைய அரசின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ சிங்கள மக்கள்மத்தியில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு யுத்தவெற்றியை பெற்றுத்தந்த இராணுவ வீரர்களுக்கு இந்த அரசு துரோகம் செய்யப் போகின்றது எனத் தெரிவித்து வருகின்றமையினால். ஆனாலும் இதனை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருகின்றோம் எனத் சம்மந்தன் தெரிவித்தார்.

மேலும் ஏற்படுத்தப்படவுள்ள அரசியல் தீர்வு எமது மக்களின் இறையாண்மை மதிக்கப்படவேண்டும், எமது மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையை மதிப்பதாக அமைய வேண்டும், எமது சமூக கலாச்சார விடயங்களில் நாங்கள் அதிகாரத்தை செலுத்துக் கூடிய வகையில் தீர்வு அமைய வேண்டும். ராஜபக்ஸ காலத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ இடம்பெறாத பலவிடயங்கள் தற்போது இடம்பெற்று வருகிறது.

எனவே மக்களே இதுவொரு சாதாரணமான தேர்தல் அல்ல இதுவொரு முக்கியமான தேர்தல். தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஆதரித்து அமோக வெற்றியை கொடுத்தால் தமிழ் மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள் என்பதையும் மக்கள் ஜனநாயக ரீதியாக உறுதியாக இருக்கின்றார்கள் என்பதையும் வெளிப்படுத்தும்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மீது முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்களி்ல் ஒன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தை ஆதரிக்கின்றது என்பதாகும.; இதற்கு நான் பதில் அளிக்க வேண்டும்.

நாங்கள் எதிர்க் கட்சியில்தான் இருக்கின்றோம், தொடர்ந்தும் எதிர்க் கட்சியில்தான் இருப்போம், நாங்கள் ஏற்றுக்கொள்ள கூடிய ஒரு அரசியல் தீர்வு ஏற்படும் வரையில் நாங்கள் அரசாங்கத்தில் பங்காளிகளாக இருக்கமாட்டோம.; அதுதான் தந்தை செல்வாவின் கொள்கை. 1965 க்கும் 70 க்கும் இடையில் அமரர் திருச்செல்வம் அவர்கள் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார.; அவர் சில கருமங்களை நிறைவேற்றுவதற்காக ஒரு நோக்கத்திற்காக அமைச்சராக இருந்தார். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி அல்ல , செனட் சபை உறுப்பினராக இருந்தவர். அதனை தவிர வேறு எந்த காலத்திலும்,தமிழரசு கட்சியை சார்ந்தவர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணியை சார்ந்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்தவர்கள் அமைச்சா்களாக இருக்கவில்லை.

தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றவர்களில் கூடுதலாக எதிர்க்கட்சி உறுப்பினராக இருக்கின்றவன் நான். எங்களுடை பதவிகளை துறக்க கூட நாங்கள் பின் நிற்கவில்லை எமக்கு பதவி முக்கியமல்ல.

ஆனபடியால் நாங்கள் அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். இந்த அரசாங்கத்தை நாம் ஆதரிக்கின்றோம் என்பதனை நான் மறுக்கவில்லை, இந்த அரசாங்கம் விலகக்கூடாது. சில கருமங்களை நிறைவேற்ற வேண்டும், இன்றைய ஜனாதிபதியும் பிரதமரும் எவ்விதமான பிரச்சினைகள் இருந்தாலும் தொடர்ந்தும் அரசாங்கத்தை நடத்திக்கொண்டிருக்கின்றார்கள், நடத்தவேண்டிய ஒரு கட்டாயத் தேவை அவர்களுக்கு இருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தை நாங்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

வரவு செலவுத்திட்டத்திற்கு சாதகமாக வாக்களிக்கின்றோம் ஏன்?

பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கின்றது. அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் முகமாக நாங்கள் ஆதரித்து வாக்களகின்றோம் . அந்த தேவை அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்படும் போது அது மூன்றில் இரண்டு பெரும்பான்மையாக நிறைவேற்றப்படவேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசாங்கத்திற்கு இருக்கிறது, மூன்றில் இரண்டு பெரும்பான்மைய அரசாங்கம் அடையலாம், அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசியல் சாசனம் நிறைவேற்றப்படலாம் என்பதை அரசாங்கத்திற்கும், நாட்டிற்கும் தெரிவிப்பதற்காக நாங்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயறபடுகின்றோம். இந்த கருமங்களை பற்றி நாங்கள் பகிரங்கமாக பேசக் கூடாது ஆனால் சில விமர்சனங்கள் வருகின்ற போது பேசாமலும் இருக்க முடியாது.

சமீபத்தில் எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர் 15 பாராளுமன்ற உறுப்பினர் இலஞ்சம் வாங்கியிருக்கின்றார்கள் என ஒரு அறிக்கையை வெளிவிட்டிருகின்றார்.

எமது கட்சியின் பெயரில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஒருவர் அவ்விதமாக ஒரு அறிக்கையை விடுவது ஒரு மிகவும் தரம் குறைந்த செயல் என்று நான் கருதுகிறேன். நாம் செயற்படுகின்ற போது கேவலமான முறையில் செயற்படக்கூடாது இந்த பாராளுமன்ற உறுப்பினர் கொஞ்சக் காலமாக எங்களுடைய கட்சியினுடை செயற்பாடுகளிலிருந்து விலகியிருக்கின்றார்.

இடைக்கால அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு ஒரு சனியும் ஞாயிறும் அது தொடர்பில் ஆராய்ந்தோம். அதன் இறுதியில் ஒரு தீர்மானம் மேற்கொண்டோம். இடைக்கால அறிக்கையில் சில முன்னேற்றகரமான கருமங்கள் உள்ளன பல கருமங்கள் முன்னோக்கி செல்ல வேண்டிய இருக்கிறது. எனவே இந்த விவாதத்தில் அவா் கலந்துகொள்ளாமையினால் எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு விவாதத்தில் உரையாற்ற அனுமதி வழங்குவது இல்லை என ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள.; இதன் பின்னரே அவா் இவ்வாறு செயல்பட்டு வருகின்றார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சில அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு விசேடமாக நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது. ஜதேகட்சி உறுப்பினர்கள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பெற்றது போன்றே எங்களுடை பாராளுமன்ற உறுப்பினர்களும் சில அபிவிருத்தி முன்மொழிவுகளை வழங்கி அந்த நிதியை பெற்றார்கள். இது எப்படி இலஞ்சமாக அமைய முடியும்? எனவே இவ்வாறான கருத்துக்கள் மூலம் ஒருவர் தனது தரத்தை குறைத்துக்கொள்ளலாமே தவிர மற்றவர்களின் தரத்தை குறைத்துக் கொள்ள முடியாது அதனை அவர்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்

அரசாங்கத்தினால் பணம் ஒதுக்கப்படுகின்ற போது குறிப்பிட்ட வேலைகளுக்காக அதனை எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களும் பயன்படுத்துப்படுகின்றேபோது அதனை ஏன் எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு நியாயமான அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச சமூகத்தின் பார்வையின் கீழ் நாங்கள் நிதானமாக பக்குவமாக செயற்படுவோம.; அவ்வாறு ஒரு தீர்வு நிறைவேற்றாமல் விட்டால் அது எமது பிழையாக அமையக் கூடாது அந்தப் பிழை வேறிடத்தில் இருக்க வேண்டும் எனவும் இரா சம்பந்தன் குறிப்பிட்டார்

 

http://globaltamilnews.net/2018/63759/

  • தொடங்கியவர்

எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டம் பரந்தனில்

  • கருத்துக்கள உறவுகள்

சரி அந்த 15 பேரும் சமர்பித்த திட்டங்கள் என்ன, அந்த நிதிக்கு என்ன நடந்தது? இதை ஏன் மக்களுக்கு முன்னரே கூறவில்லை, எப்படி எல்லோருக்கும் சமமான அளவில் நிதி வழங்கப்பட்டது?

ஏன் 15 பேருக்கு மட்டும் வழங்கப்பட்டது? 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, MEERA said:

சரி அந்த 15 பேரும் சமர்பித்த திட்டங்கள் என்ன, அந்த நிதிக்கு என்ன நடந்தது? இதை ஏன் மக்களுக்கு முன்னரே கூறவில்லை, எப்படி எல்லோருக்கும் சமமான அளவில் நிதி வழங்கப்பட்டது?

ஏன் 15 பேருக்கு மட்டும் வழங்கப்பட்டது? 

இப்பதானே ஐயா  கொஞ்சம் வாய்திறக்க வெளிக்கிட்டிருக்கிறார் அதற்கிடையில்நீங்கள்    இவ்வளவு அவசரப்பட்டால் ....... ?அடுத்து வெளி  வரும் ஆட்சேபனையைத் தொடர்ந்து உங்கள் கேள்விக்கான பதில் வரும். பொறுமை,...... பொறுமை. 

 

9 hours ago, நவீனன் said:

எமது கட்சியின் பெயரில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஒருவர் அவ்விதமாக ஒரு அறிக்கையை விடுவது ஒரு மிகவும் தரம் குறைந்த செயல் என்று நான் கருதுகிறேன்.

 முதலமைச்சரைப் பற்றிமட்டும் யாரும் எப்படியும் அறிக்கை விடலாம்   பேசலாம். அதை மட்டும் ஐயா கேட்டுக் கேள்வி இல்லாமல் தட்டி கொடுப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

26992675_1579045578809606_72789050501659

 

27459174_1831769170190287_77277405234746

சம்பந்தா உனக்குப் பால் தந்தது யார்? சம்பந்தா 2 கோடி ரூபாயை வழங்கியது யார்?
 
15976.jpg
அன்று சீர்காழியில் நடந்த சம்பவம் இது. சிவபாதவிருதையர் சம்பந்தக் குழந்தையை கேணிக்கட்டில் இருத்திவிட்டு நீராடச் செல்கிறார்.
தந்தையைக் காணாத குழந்தை அம்மையே அப்பா என்று அழுகிறது. குழந்தையின் அழு குரல் கேட்டு அம்மையும் அப்பனும் எருதேறி வருகின்றனர்.
 
தமிழினம் வாழ, தமிழ் வாழ, சைவம் தழைத் தோங்க பார்வதி அம்மையார் சம்பந்தக் குழந் தைக்கு ஞானப் பால் கொடுக்கிறார்.
சம்பவம் நடந்து முடிந்த கையோடு சிவபாத விருதையர் கரையேறி வருகிறார். சம்பந்தக் குழந்தையின் கடைவாயில் பால் வழிந்திருக் கிறது. 
 
அந்தோ! அபத்தம் அபத்தம். வேதம் ஓதும் வேதியர்களாகிய யாம் பிறரிடம் அன்னம் ஆகா ரம் அருந்தக் கூடாதன்றோ! என் குழந்தைக்கு யாரோ பால் கொடுத்துள்ளனர்.
அபச்சாரம் அபச்சாரம் என்று குழம்பிய சிவ பாதவிருதையர் கோபம் கொண்டு குழந்தையை அதட்டுகிறார். சம்பந்தா உனக்குப் பால் தந்தது யார் சொல்? பால் தந்தது யார் சொல்? தந்தை யின் அதட்டலுக்குப் பதலளிக்கிறது குழந்தை. 
 
வானத்தை நோக்கி தோடுடைய செவியன் விடை ஏறியோர்... என்று பாடல் வரிகளால் தனக்குப் பால் தந்த பார்வதி பரமேஸ்வரனை அடையாளப்படுத்துகிறது.
அம்மையும் அப்பனும் எருதேறி வந்து தன் குழந்தைக்கு ஞானப்பால் கொடுத்தருளியதை உணர்ந்த சிவபாதவிருதயர் தோணிபுரத்து அம்மை அப்பனை வீழ்ந்து வணங்குகிறார். இது அன்று நடந்த கதை.
 
இன்று இங்கு நடப்பது என்ன? இதோ கதை ஆரம்பமாகிறது.
சம்பந்தர் தலைமையிலான சிலரை தமிழ் மக்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்புகின்றனர்.
அவர்கள் அனைத்தையும் பார்ப்பார்கள், எங்கள் பொறுப்பு முடிந்து விட்டது என்ற நினைப் பில் தமிழ் மக்கள் தங்கள் பாட்டைப் பார்க் கின்றனர். மீண்டும் தேர்தல் பேரிகை முழங்கு கிறது. மக்கள் விழித்து எழுகின்றனர்.
அதோ பாராளுமன்றத்துக்குச் சென்றவர் களில் சிலர் இரண்டு கோடி ரூபாயை வாங்கி யுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.
 
இஃதென்ன கொடுமை, எங்கள் பிள்ளை களைப் போரில்  பலிகொடுத்துவிட்டு கண்ணீ ரும் கம்பலையுமாக நாங்கள் அலைகின் றோம்; காணாமல்போன எங்கள் உறவுகளைத் தேடி ஊண் உறக்கம் மறந்து வாழுகிறோம்; 
சிறைகளில் வாடும் எங்கள் பிள்ளைகளின் விடுதலைக்காக ஏங்கி ஏங்கி விழித்திருக்கி றோம்.
 
ஆனால் இங்கு எங்கள் பிரதிநிதிகள் என்றி ருப்போரில் சிலர் அரசாங்கத்திடமிருந்து இர ண்டு கோடி ரூபாய் இலஞ்சமாக வாங்கியுள்ள தாகக் கூறுகின்றார்கள்.
எங்கே? சம்பந்தர் ஐயாவே சொல்லுங்கள், நீங்கள் இரண்டு கோடி ரூபாய் வாங்கினீர் களா? உங்களுக்கு இரண்டு கோடி ரூபாயைத் தந்தது யார்? ஏன் தந்தார்கள்? சொல்லுங்கள் சொல்லுங்கள். அதை என்ன செய்தீர்கள் சொல்லுங்கள்?
அட, தோடுடைய செவியன் பாடல் போல் எதையும் சம்பந்தர் பாடவில்லை. ஆனால் எல் லாம் அபிவிருத்திக்கே என்ற அசரீரி கேட்கிறது.
என் செய்வோம். அன்று ஞானப்பால்; இன்று இரண்டு கோடி ரூபாய். அவ்வளவுதான். 
 
  • தொடங்கியவர்
  • தீர்வு கிடைக்­கும்­ வரை – அர­சு­டன் ஒட்டு இல்லை!!
sampa-720x480-720x400.jpg

தீர்வு கிடைக்­கும்­ வரை – அர­சு­டன் ஒட்டு இல்லை!!

 

ஏற்­றுக்­கொள்­ளக் கூடிய ஒரு அர­சி­யல் தீர்வு ஏற்­ப­டும் வரை­யில் நாங்­கள் அர­சின் பங்­கா­ளி­க­ளாக இருக்­க­மாட்­டோம், தொடர்ந்­தும் எதிர்க் கட்­சி­யில்­தான் இருப்­போம்.

இவ்­வாறு தெரி­வித்­தார், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்­தன்.

பரந்­த­னில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பரப்­பு­ரைக் கூட்­டம் நேற்­று­மாலை இடம்­பெற்­றது. உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் போட்­டி­யி­டும் வேட்­பா­ளர்­க­ளுக்கு வலுச்­சேர்க்­கும் முக­மாக இந்­தப் பரப்­பு­ரைக் கூட்­டம் இடம்­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு சம்­பந்­தன் உரை­யாற்­றி­ய­போதே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார். அங்கு அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

அர­சி­யல் தீர்வு மக்­க­ளின் இறை­யான்மை மதிப்­ப­தாக, எமது மக்­க­ளின் உள்­ளக சுய­நிர்­ணய உரி­மையை மதிப்­ப­தாக அமைய வேண்­டும்.அது­தான் தந்தை செல்­வா­வின் கொள்கை.

 
 

எமது சமூக கலாச்­சார விட­யங்­க­ளில் நாங்­கள் அதி­கா­ரத்­தைச் செலுத்­துக் கூடிய வகை­யில் தீர்வு அமைய வேண்­டும். ராஜ­பக்ஸ காலத்­திலோ அல்­லது அதற்கு முன்­ன­தா­கவோ இடம்­பெ­றாத பல­வி­ட­யங்­கள் தற்­போது இடம்­பெற்று வரு­கி­றன.

தமிழ்த்­தே­சி­யக் கூட்­ட­மைப்பு மீது முன்­வைக்­கப்­ப­டு­கின்ற விமர்­ச­னங்­க­ளில் ஒன்று, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அரசை ஆத­ரிக்­கின்­றது என்­ப­தா­கும். இதற்கு நான் பதில் அளிக்க வேண்­டும்.

1965 க்கும் 70 க்கும் இடை­யில் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான அம­ரர் திருச்­செல்­வம் அர­சில் அமைச்­ச­ராக இருந்­தார். அவர் சில கரு­மங்­களை நிறை­வேற்­று­வ­தற்­காக, ஒரு நோக்­கத்­துக்­காக அவ்­வாறு இருந்­தார்.

அவர் மக்­க­ளால் தெரிவு செய்­யப்­பட்ட பிர­தி­நிதி அல்ல, செனட் சபை உறுப்­பி­ன­ராக இருந்­த­வர். அத­னைத் தவிர வேறு எந்­தக் காலத்­தி­லும்,தமிழ் அர­சுக் கட்­சி­யைச் சார்ந்­த­வர்­கள், தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யைச் சார்ந்­த­வர்­கள் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பைச் சார்ந்­த­வர்­கள் அமைச்­சா்­க­ளாக இருக்­க­வில்லை.

தமிழ் மக்­கள் இந்த நாட்­டில் சம அந்­தஸ்த்­து­டன் வாழ்­வ­தற்­கான முப்­பது வரு­ட­கால ஆயு­தப் போராட்­டம் 2009 இல் முடி­வுக்கு வந்­த­தி­லி­ருந்து எமது இரா­ஜ­தந்­தி­ரப் போராட்­டம் தொடர்­கி­றது. பல கரு­மங்­கள் நிறை­வேற்­றப்­பட்டு, பன்­னாட்டு ரீதி­யான பல தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப்­பட்டு எமது பணி­கள் தொடர்­கின்­றன.

மறுக்­க­வில்லை

நாங்­கள் அரசை ஆத­ரிப்­ப­தற்கு ஒரு கார­ணம் இருக்க வேண்­டும். இந்த அரசை நாம் ஆத­ரிக்­கின்­றோம், மறுக்­க­வில்லை, இந்த அரசு வில­கக்­கூ­டாது. சில கரு­மங்­களை நிறை­வேற்ற வேண்­டி­யுள்­ளன. இன்­றைய அரச தலை­வ­ரும் தலை­மைச் செய­ல­ரும் எந்­த­வி­த­மான பிரச்­சி­னை­கள் இருந்­தா­லும் தொடர்ந்­தும் அரசை நடத்­திக்­கொண்­டி­ருக்­கின்­றார்­கள்.

முக்­கிய தேர்­தல்

நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் பல்­வேறு கார­ணி­க­ளால் முக்­கி­யத்­து­வம் பெறு­கின்­றன. நாட்­டில் உரு­வாக்­கப்­ப­டு­கின்ற அர­சி­யல் சாச­னம், பல பன்­னாட்­டும் தீர்­மா­னங்­கள், அழுத்­தங்­கள், கடும் போர்க்­கா­லங்­க­ளின் நிலை­மை­கள், தற்­போ­தைய அர­சின் கொள்­கை­கள் கார­ண­மாக, பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் கூடு­த­லான அக்­கறை போன்ற கார­ணங்­க­ளால் இந்­தத் தேர்­தல் முக்­கி­யத்­து­வம் பெறு­கி­றது.

எனவே இது சாதா­ர­ண­மான தேர்­தல் அல்ல என்­ப­த­னைப் பொது­மக்­கள் உண­ர­வேண்­டும். தமிழ் மக்­கள் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு ஆத­ர­வ­ளித்து அமோக வெற்­றி­யைக் கொடுத்­தால் தமிழ் மக்­கள் தெளி­வாக இருக்­கின்­றார்­கள் என்­பதை, ஜன­நா­யக ரீதி­யாக உறு­தி­யாக இருக்­கின்­றார்­கள் என்­பதை வெளிப்­ப­டுத்­தும்.

அரசு மந்­த­கதி

தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளைத் தீர்ப்­ப­தற்கு இந்த அர­சுக்கு விருப்­பம் இருந்­தா­லும், மந்த கதி­யில் செய்து வரு­கின்­றார்­கள். கார­ணம், போர் வெற்­றி­யைப் பெற்­றுத் தந்த இரா­ணுவ வீரர்­க­ளுக்கு இந்த அரசு துரோ­கம் செய்­ய­போ­கின்­றது என்று மகிந்த பரப்­பு­ரை­க­ளில் கூறி வரு­கின்­ற­மையே – என்­றார்.

இந்­தப் பரப்­பு­ரை­யில், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சி.சிறி­த­ரன் சாள்ஸ் நிர்­ம­ல­நா­தன், மாகாண சபை உறுப்­பி­ன­க­ளான பசு­ப­திப்­பிள்ளை, குரு­கு­ல­ராஜா, அரி­ய­ரத்­தி­னம், கட்­சி­யின் வட்­டார வேட்ப்­பா­ளர்­கள் மற்­றும் பொது­மக்­கள் என்று பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.

http://newuthayan.com/story/65120.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.