Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசியமும் கோடம்பாக்க மாயையும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவர் தன் உணர்வுகளை எழுத்துமூலம் கொண்டு வருபவருக்கு நல்ல மொழி ஆழுமையும், (நல்ல தமிழ்) சொல்லும் நேர்த்தியும் இருந்தால் போதும்....!

உங்களைப் பொறுத்தவரை "உணர்வுகளை வெளிக்கொணர்வது" தான் படைப்பாக இருந்தால் உங்களுக்குச் சொல்ல என்னிடம் நிறையச் சேதி இருக்கிறது.

மேலைத் தேய நாடுகளில் இன்று எவ்வாறு ஒரு கதை எழுதுகிறார்கள்?

முதலாவது எந்த வகையினரான மக்கட் கூட்டத்தினருக்கு தமது கதையை எழுதுகிறோம் என்பதனை முடிவெடுக்கிறார்கள். பிறகு கதை என்ன, கதை எப்படிப் போகவேண்டும் எவ்வாறான திருப்பங்கள் எல்லாம் வரவேண்டும் என்று ஒரு அறிஞர் குழுமம் விவாதித்து முடிவெடுக்கிறார்கள். பிறகு ஒரு நல்ல எழுத்துத் திறமை கொண்ட ஒருவரை அமர்த்தி அதை எழுதுவிக்கிறார்கள். இவ்வாறு கதை எழுதினவர் தான் அண்மையில் (-) உலகப்புகழ் பெற்ற காவ்யா விசுவநாதன், காவார்ட் பல்கலைகழக மாணவி. அவர் அதைக்கூட எழுதத்தெரியாமல் கொப்பியடித்து தன் கவுரவத்தைக் கெடுத்தது வேறு கதை.

கரி போட்டர் நாவல் எழுதிய ஜே. கே. ரௌலிங்கு தனியத் தானே எழுதினவர் என்று நீங்கள் நினைக்கலாம். அவர் தனது முதலாவது கதையை அவ்வாறு எழுதியிருக்கலாம். ஆனால்

அவரின் தொடர் வெற்றிக்குப் பின்னால் இவ்வாறான திட்டமிடல்களும் நிறுவனமயப் படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவரின் வெற்றிக்குப் பின்னால் ஓவியர், பாடகர், இசை இயக்குனர், திரைப்பட இயக்குனர் என எல்லாரும் இருக்கினம். இவர்களின் வளர்ச்சியானது அந்த அந்தத் துறைகளில் கல்வியுடன் சமாந்தரமாகப் பயணிக்கிறது.

ஆக இங்கு நான் சொல்ல வருவது நாங்கள் ஒரு குறிப்பிட்ட மாற்றத்தை, தாக்கத்தை (தமிழ் தேசிய விழிப்புணர்வு!) மக்களிடம் உருவாக்க விரும்பினால் அதை மேற்குலகின் பாணியிலேயே தான் போய் செய்யமுடியும். ஏனென்றால் எமது மக்கள் கூட்டம் மேற்குலகில் தான் வாழ்கிறார்கள். எனவே எமது படைப்பாளிகள் நிறுவனமயப் பட்டு சரியான திட்டமிடலுடன் தான் இவற்றை அணுகவேண்டும். அந்த வகையில் கல்வி ஆராய்ச்சி என்பவற்றிலெமது முன்னேற்றம் சமாந்தரமாக இருக்கவேண்டும்.

பல சமயங்களில் நீங்கள் உங்கள் "உணர்வுகளை வெளிக்கொண்டு வர"அதற்கு தமிழ் மக்கள் எல்லாரும் சேர்ந்து விலை கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதனையும் மறக்க வேண்டாம்.

உலகம் எங்கேயோ போட்டுது,நீங்கள் எண்ணங்களை வெளிக்கொணருவது தான் படைப்பு எண்டு கற்காலத்திலேயே நிற்கிறியள். இல்லை இப்படித் தான் செய்வோம் ஒண்டையும் விளங்க முயற்சிக்க மாட்டோம் விளங்கினாலும் விளங்காதமாதிரி நடிப்போம் என்றால் அது உங்கள் விருப்பம். எண்ணங்களை வெளிக்கொண்டு வாங்கோ! இப்ப இப்ப செய்தித் தளங்களில கூட எண்ணங்களைப் போடுகிறார்கள். செய்திகளை உருவாக்கிப் போடுகிறார்கள். நீங்களும் புகுந்து விளையாடுங்கோ!!

  • Replies 67
  • Views 11k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புள்ள நண்பர் பண்டிதருக்கு

கோடம்பாக்க மாயைக்குள் மூழ்கியிருப்பவர்களுக்கு எதைச் சொன்னாலும் புரியப் போவதில்லை.ஒரே ஒரு கைத்துப்பாக்கியுடன் விடுதலைப் போராட்டை ஆரம்பித்த தேசியத் தலைவர் இன்றைக்கு ஒரு விமானப்படையையே உருவாக்கும் அளவுக்கு அதை வளர்த்தெடுத்திருக்கிறார் என்றால் எதைச் செய்ய வேண்டும் எதைச் செய்யக் கூடாது எது எமது விடுதலைக்கு தேவையானது எது தேவையற்றது என்பதை முதலில் சரியாக வரையறுத்தார்.பம்மாத்து அரசியல் நடத்த மாட்டேன் மக்களுக்கு போலி வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்ற மாட்டேன் என்று அவர் தனக்குத்தானே உறுதியெடுத்துக் கொண்டு இன்றுவரை அதை கடைப்பிடித்துவருகிறார்.இது தான் எமது போராட்டத்தின் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் காரணமாகும்.

தேசியத் தலைவரது இந்த முன்மாதிரியை மக்களுக்குஎடுத்துச் சொல்லி புரியவைத்த மக்களை அந்த திசையில் அணி திரட்ட வேண்டும் என்றால் உதெல்லாம் சாத்தியமில்லை விஜய் அஜித் அசின் நயன்தாரா வகையறாக்கறைகாட்டித்தான் மக்களை அணி திரட்டமுடியும் என்று அடம்பிடிக்கின்ற கூட்டத்தை என்ன செய்யமுடியும்?விடுதலைக்கு போராடுகின்ற ஒரு இனத்தின் தளத்திலே இயங்குகின்ற ஒரு ஊடகம் மக்களை பங்களார்களாக செயற்பாட்டாளர்களாக மாற்றுகின்ற வேலையைத்தான் செய்ய வேண்டுமேயன்றி அவர்களை பார்வையாளர்களாக இரசிகர்களாக வைத்திருக்கக்கூடாது.

தேசியத் தலைவருடைய முன் மாதிரியையும் எமது விடுதலைப் போராட்டத்தையும் மாவீரர்களடைய தியாகங்களையும் சரியான முறையில் திட்டமிட்ட ஊடக வடிவங்களுக்கு ஊடாக மக்கள் மத்தியல் எடுத்துச் செல்வதன் மூலம் மக்களை அணி திரட்ட முடியும் என்ற நம்பிக்கை புலம்பெயர்ந்த ஊடகங்களை இயக்குபவர்களுக்கு இல்லாதபடியினால் தான் அவர்கள் கோடம்பாக்கத்தை நோக்கி ஓடுகிறார்கள்.கோடம்பாக்கம் என்று நான் குறிப்பிடுவது தமிழ் சமூகத் தளத்தை சீரழிக்கும் கருத்துருவாகக்த்தின் குறியீட்டையே ஆகும்.

புலம்பெயர்ந்த அனைத்து தமிழ் மக்களுக்குள்ளும் தாயகம் மீதான அக்கறை இருகக்pறது. ஒரு சில துரோகிகளைத் தவிர மற்ற அனைத்து மக்களையுமே ‘தாயக விடுதலை தமிழ் கருத்தில்- தமிழ் அடையாளம் என்ற தளத்தில் வைத்து ஒன்றிணைக்க முடியும்.தாயகம் என்பது புலம் பெயர்ந்த ஒவ்வாரு தமிழரினதும் உணர்வில் கலந்த விடயமாகும். இதற்கு நான் சொல்லக் கூடிய தீர்வு ‘தலைவராவது விடுதலைப்போராட்டமாவது ..உதையெல்லாம் விட்டுவிட்டு புது சினிமாவையும் சின்னத்திரை தொடரையும் காட்டினால் தான் மக்களை அணி திரட்ட முடியும்’ என்ற கருத்தியலாளர்களின் பிடியில் இருந்து நமது ஊடகங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதேயாகும்.

-சிவா சின்னப்பொடி

சிவா சின்னப்பொடி அவர்களே,

உங்களுக்கு கோடம்பாக்கத்துடன் அப்படி என்ன கோபமோ எனக்குத்தெரியாது. நல்லது கெட்டதுகள் எல்லா இடமும் இருக்கு. தீயதை விடுத்து நல்லதை அள்ளுவது அவரவர் பொறுப்பு. இன்றைக்கு அமெரிக்கா போன்ற நாடுகளெல்லாம் இந்தியாவை தமது தேவைகளுக்காக அணுகிக்கொண்டிருக்க நாங்கள் விட்டு ஓட அந்தரப்படுவது ஏனோ? கோடம்பாக்கத்து வளங்களை எங்களின் தேவைக்கு எவ்வாறஎல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சிந்திக்கவேண்டியதே இன்றைய காலத்தின் தேவை.

கோடம்பாக்கத்திலிருந்து வரும் எல்லாவற்றையும் நல்லவை என்று கூறமுடியாது தான். எங்களது தேவைக்கேற்றமாதிரி தணிக்கை செய்வதன் மூலம் தீயவிளைவுகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவேண்டும். அதை நிறைவேற்ற நான் முன்பு கூறியது போல நாம் நிறுவன மயப்பட வேண்டும்.

முன்பொரு காலத்தில் சிங்களநாட்டில் கிந்திப் பாட்டை மட்டும் தான் ஒலிபரப்பினார்கள். பின்னர் தங்கள் சிங்களக் கலைஞர்களை வளர்த்துவிடவென்று சொல்லி முற்றுமுழுதாக கிந்திப் பாடல்களை நிப்பாட்டி சிங்களப்பாடல்களை ஒலிபரப்பினார்கள். அதனால் சிங்களக்கலைஞர்களும் வளர்ந்தார்கள். கிந்தியும் ஒழிந்தது. நீங்கள் அந்தக் காலமனோநிலையில் இருப்பது போல தெரிகிறது. அது இந்தக்காலத்துக்குப் பொருந்தாது. அதுவும் நாங்கள் இருக்கும் முதலாளித்துவ தேசத்தில் பொருந்தவே பொருந்தாது. உங்கள் நிகழ்ச்சிகள் குப்பை கொட்டினால் மக்கள் சற்றலைற்றில் சன்ரீவி எடுத்துப் பார்ப்பார்கள். எனவே எமது நிகழ்ச்சிகளை இந்தியத் தரத்தில் தருவது எவ்வாறு என்று முதலில் சிந்திக்கவேண்டும்.

ஒரு உதாரத்துக்கு இலங்கைக் கிரிக்கற் அணியை எடுங்கள். ஒரு காலத்தில் மிகக் கேவலமான அணியாக இருந்தவர்கள். பிறகு என்ன நடந்தது? வெளிநாட்டிலிருந்து (இங்கிலாந்து) பயிற்சியாளரை தருவித்தார்கள். சர்வதேச தரத்தில் பயிற்சி பெற்றார்கள், சர்வதேச தரத்துக்கு வந்தார்கள். இங்கிலாந்தையே வென்றார்கள்.

அதுபோல நமது தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இந்தியாவிலிருந்து ஒரு இயக்குனரை (program manager) வேலைக்கமர்த்துங்கள். எங்கள் தாயாரிப்புக்களையும் இந்தியத் தரத்துக்குப் போட்டியாக தரத்தில் உயர்ந்ததாக மாற்றுங்கள். அதன்பிறகு வேண்டுமானால் கோடம்பாக்கத்தைப் பற்றிக் கதையுங்கள். சும்மா ஒன்றுமில்லாமல் இருந்துகொண்டு கோடம்பாக்கத்தைத் தாக்கியழிப்பதைப் பற்றி கனவு காணாதீர்கள். அது எதிர்வினைப் பலனையே தரும். அதே போல கோடம்பாக்கத்துக்கு உங்கள் கலைஞர்களை அனுப்பி பயிற்சி கொடுங்கள். அல்லது கோடம்பாக்கத்தில் ஒரு வெளியீட்டு நிறுவனத்தைத் தொடங்கி எங்கள் நிகழ்ச்சிகளை அவர்களின் உதவியுடன் தரமாக தயாரியுங்கள். அவ்வாறான நடைமுறைகளின்மூலம் நாங்கள் விரைவில் அவர்களின் தரத்தை அடையலாம்.

கோடம்பாக்கத்திலிருந்து நாம் எவ்வாறு உச்சப்பயன்பாட்டைப் பெறுவது என்று சிந்திக்கவேண்டிய நேரமிது. நீங்கள் எதிர் வழியில் சிந்திக்கிறீர்கள். இன்று நாங்கள் வாழும் உலக நடைமுறைக்கேற்ப எம்மை மாற்றிக்கொள்ளாவிட்டால் காலத்தின் தீர்ப்பை ஏற்று வாபஸ்வாங்கவேண்டி வரும் என்பதை மறக்கவேண்டாம்.

எமது ஈழத்துப் படைப்பாளிகளுக்கு வாய்ப்பு திறமை அடிப்படையில் வழங்கப்பட வேண்டுமே தவிர கருணை அடிப்படையில் அல்ல. இதுவே வளர்ச்சிப்போக்காக இருக்க முடியும்.

Edited by பண்டிதர்

  • கருத்துக்கள உறவுகள்

பண்டிதர் அவர்களே நீங்கள் சொன்ன கருத்து முற்று முழுக்க உண்மை. இது தெரிந்திருந்தும் வேண்டா விவாதம் செய்கிறவர்கள் தான் இங்கு அதிகம், அவர்கள் போக்கிலும் இதை விட்டு விட முடியாது இயன்றளவு முயற்சி செய்யுங்கள் வெற்றி உண்மையின் பக்கம் தான்.

வணக்கம் பண்டிதர்

கோடம்பாக்கம் எனறு நான் குறிப்பிட்டது தமிழ் சமூகத்தின் கருத்தியல் தளத்தை சீரழிக்கும் கருத்துருவாக்கத்தின் குறியீட்டை மட்டுமே.அந்த கருத்துருவாக்கத்தளம் தமிழர் விரோத சக்தி;களால் தான் கட்டுப்படுத்தப்பட்டு ஆளுமை செய்யப்பட்டு வருகிறது.அந்தத் தளத்திலே மாற்றுச் சினிமா முற்போக்கு சிந்தனை மற்றும் தமிழ் தேசிய ஆதரவு என்பவற்றைக் கொணட பலர் இருக்கிறார்கள்.ஒருசிலர் இந்த ஆதிக்க சக்திகளுடன் சமரசம் செய்து கொண்டு இருப்பை தக்க வைத்துக் கொள்ள முயல்கிறார்கள்.அதை விரும்பாதவர்கள் தங்களது திறமையை கனவுகளை வெளிக்காட்ட முடியாமல் முடங்கிப் போய் உள்ளார்கள்.

ஓரளவுக்கு தமிழ் தேசிய ஆதரவு தளத்தில் செயற்படும் தங்கர் பச்சான் நடிகைகளின் செயற்பாட்டை கண்டித்ததற்காக அவர்களது காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட வைக்கப்பட்டதை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.அடுத்து இந்தக் கோடம்பாக்கத்து கருத்துருவாக்கத்தளம் ‘ரோ’ எனப்படும் இந்திய புலனாய்வுத்துறையினாலும் மத்திய கொள்கை வகுப்பு பிரிவினராலும் கட்டுப்படுத்தப் படுகிறது. முதலிட்டாளர்கள் தணிக்கை சபை உறுப்பினர்கள் மற்றும் நான் இங்கே பெயர் குறிப்பிட விரும்பாத சில பெரும் நடிகர்கள் தயாரிப்பாளர்கள் மூலமாக இந்த ஆளுமை செலுத்தப்படுகிறது.தமிழ் கருத்தியல் தமிழ் தேசிய உணர்வு என்பன இந்த சினிமா என்ற ஊடகத்தினுடாக மக்கள் மத்தில் பரப்பப்பட்டு விடக் கூடாது என்பதில் இந்திய புலனாய்வுத்துறையினரும் மத்திய கொள்கை வகுப்பு பிரிவினரும் மிகக் கவனமாக இருக்கிறார்கள்.1985 க்கும் அதற்கு பின்பும்(அதாவது எமது போராட்டம கூர்மையடைவதற்கு முன்னர்) வெளிவந்த தமிழ் திரைபடங்களை எடுத்து ஆய்வுக்குள்ளாக்கினால் இந்த உண்மை உங்களுக்குப் புரியும்.

நான் இதை ஊகத்தின் அடிப்படையில் சொல்வதாக நினைக்க வேண்டாம். விடுதலைச் செயற்பாடுகளுக்காக (1982லிருந்து 87 வரை ) தமிழகத்தில் தங்கியிருந்த காலத்தில் கோடம்பாக்கத்தின் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் பலருடன் நேரடித் தொடர்பு இருந்ததன் அடிப்படையிலேயே இதை சொல்கிறேன். 1985 ம் ஆண்டு எமது 1983 இனக்கலவரத்தை படமாக எடுக்க முயன்ற ஒரு பிரபல இயக்குனர் ரோ அதிகாரிகளால் நேரடியாக எச்சரிக்கப்பட்டதை அடுத்த தனது முயற்சியை கைவிட்டார்.; அடுத்து அவர் இயக்க முயன்ற படங்களுக்கு எவரும் முதலீடு செய்ய முன்வரவில்லை.ஆர்.கே.செல்வமணி விஜயகாந்தை வைத்து தயாரித்த குற்றப்பத்திரிகை படம் எந்த விதத்திலும் தமிழ்தேசிய ஆதரவு நிலைப்பாட்டை கொண்டிருக்காத போதிலும் அரசியல் காரணங்களுக்காக அதற்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.இப்போது ‘சாதியம்’ ‘றவடீசம்’ ‘போராளிகளும் தற்கொலைப் போராளிகளும் மூளைச் சலவை செய்யப்பட்ட பயங்கரவாதிகள்’ ‘மக்களின் உரிமைப் போராட்டங்களை அடக்கி ஒடக்கும் காவல்துறையினர்; மேலானவர்கள்’ என்கின்ற கருத்தியல்கள் தான் கோடப்பாக்க சினிமாவின்

அடிப்படை கருத்தியலாக இருக்கிறது.விதி விலக்காக ஒன்று இரண்டு நல்ல படங்கள் வெளி வந்தாலும் அவற்றை இந்த கோடம்பாகக் மேலாதிக்க கருத்தியலை தாண்டி வெளிக் கொண்டுவருவதற்கு அவற்றின் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் பட்டபாடு வெளியே தெரிவதில்லை.

என்னுடைய கோரிக்கை ரோவினால் வழி நடத்தப்படும் கோடம்பாக்க ஆதிக்க சினிமாவை சீரழிவு சினிமாக்களை நிராத்து அந்தத் தளத்திலிருந்ர மிகப்பெரிய போராட்டத்தின் மத்தியில் வெளிவரத்துடிக்கும் மாற்றுச் சினிமாவுக்கும் மாற்றுச் சினிமா இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களும் ஊடகங்களும் ஊக்கமளிக்க வேண்டும் என்பதேயாகும். இதைத் தான் நான் ஆரம்பத்தில் இருந்து வலியுறுத்தி வருகிறேன்.

இன்றைக்கு புலம் பெயர்ந்த தமிழ் சமூகம் கோடம்பாக்க தமிழ்சினிமாவின் சந்தையை ஓரு குறிப்பிட்ட அளவுக்கு தீர்மானிக்கின்ற சக்தியாக இருக்கிறது. இதை தொலை நோக்குப் பார்வையோடு அணுகி தமிழ் தேசிய ஆதரவையும் மாற்றுச் சினிமா பார்வையையும் கொண்ட தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் தங்கள் படைப்புக்களை வெளிக் கொண்டவருவதற்கு உதவ வேண்டும் என்பதே எனது வேண்டுகோளாகும்.

இன்றைக்கு பாரிஸ் இலண்டன் போன்ற பெரு நகரங்களில் வன்முறையில் ஈடுபடும் இளைஞர் குழுக்களுக்கு கில்லி விஜயின் பாணிதான் முன் மாதிரியாக இருக்கிறது.

இன்றைக்கு புலம் பெயர்ந்த தமிழ் சமூகம் எப்படி இருக்கிறது? பாரிஸ் போன்ற பெரு நகரங்களில் 5 திருமணங்களில் 3 திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன.10 க்கு 8 பெற்றோர் வயது வந்த தங்களது பிள்ளைகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள்.10 க்கு 6 இளைஞர்கள் திசை மாறி தெருவுக்கு வருகிறார்கள்.10 க்கு 2 முதியவர்கள் பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் முதியோர் இல்லங்களுக்கு செல்லும் நிலையில் இருக்கிறார்கள்.100 க்கு ஒருவர் அடையாளம் இழந்து 24 மணிநேரக் குடிகாரர்களாகி தெருவுக்கு வருகிறார்கள்.

இந்தக் கோடம்பாக்க கழிசடை சினிமாவை தூக்கிப் பிடிப்பவர்களைப் பார்த்து அதை காட்டித்தான் மக்களை அணி திரட்ட முடியும் என்பதைப் பார்த்து எனக்கு அளவுக்கதிகமாக கோபம் வருகிறது என்றால் என் வாழ்க்கையின் பெரும் பகுதியை சாவு இரத்தம் அவலம் என்பவற்றை களத்தில் நின்று அனுபவித்தவன். நாங்கள் இங்கே எங்கள் கடமையை சரிவர செய்யத் தவறும் ஒவ்வொரு நாளும் அங்கே தாயகத்திலே ஒவ்வாரு போராளியின் மக்களின் உயிர்கள் போய்க் கொண்டிருக்கிறதே என்று துடிப்பதேயாகும்.

2003 ம் அண்டு நான் வன்னிப் பெரு நிலப் பரப்புக்குச் சென்ற போது கரிப்பட்டமுறிப்பு பகுதியில் ஒரு இடத்தை எனக்கு கூட்டிக்கொண்டு சென்று காட்டினார்கள்.

அந்த இடத்தின் முக்கியத்துவம் என்ன வென்றால் ஏ9 நெடுஞ்சாலை மீட்புச் சமரின் போது வாழ்வா சாவா என்ற ரீதியில் அங்கே சிறீலங்காவின் அக்கிரமிப்பு படைகளுக்கும் எமது போராளிகளுக்கம் இடையில் நேரடிச் சமர் நடந்தது.

பெண் போராளிகள் அணி ஒன்று எதிரியின் ஆக்கிரமிப்பு வியூகத்தை உடைப்பதற்காக எதிரிக்கு மிக சமீபமாக நின்று மோட்டார் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. எதிரியோ எறிகணைகளை மழையாகப் பொழிந்து கொண்டிருக்கிறான்.எமது போராளிகள் எண்ணி எண்ணி எதிரியின் இலக்குகளை நோக்கி தங்களிடம் அந்தக்கள முனையில் இருந்த ஒரே ஒரு மோட்டார் மூலம் எதிர் தாக்குதல் நடத்துகிறார்கள். அந்தப் பெண் போராளிகள் அணி அந்த களமுனையை உடைத்தால் தான் பின்னால் வரும் போராளிகள் அணி எதிரிகளை அழித்து அந்தப்பகுதியை மீட்கமுடியம் என்ற நிலை.அந்தப்பெண் போராளிகள் தோற்றுப் போய்விட்டால் பின்னால் வரும் போராளிகள் அணி அழிக்கப்படுவதோடு ஏ9 நெடுஞ்சாலை உட்பட வன்னிப் பெருநிலப்பரப்பின் பெரும்பகுதி சிறீலங்கா படைகளின் ஆக்கிரமிப்பக்கு உள்ளாகும் நிலை ஏற்படும்.

இந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட பெண் போராளிகள் மோட்டரை வைத்திருந்த இடத்தை நோக்கி எதிரியின் எறிகணை ஒன்று மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது. அந்த எறிகணை அந்த இடத்தில் விழுந்து வெடிக்கும் போது அந்த மோட்டார் அழிக்கப்பட்டுவிடம் அல்லது சேதப்படுத்தப்பட்டுவிடும்.அந

சினிமாவையும், திரை நாடகங்களையும் எங்களுக்கு பயன் படுத்த முடியவில்லை இல்லை தெரியவில்லை எண்று சொல்பவராக இருந்தால்.... அந்த பக்கம் நீங்கள் தலைவைத்து படுக்காமல் இருப்பது நல்லது...!

சினிமாவையும், திரை நாடகங்களையும் எங்களுக்கு பயன் படுத்த முடியவில்லை இல்லை தெரியவில்லை எண்று சொல்பவராக இருந்தால்.... அந்த பக்கம் நீங்கள் தலைவைத்து படுக்காமல் இருப்பது நல்லது...!

போராட்ட வாழ்க்கைகள் எப்படிப் படமாக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிய விரும்புபவர்கள் இந்த வலை தளத்துக்குச் சென்று எல்சல்வடோர் புரட்சியை பாருங்கள். பிடிஎஃப் வடிவத்தில் இருக்கும் இந்த பழைய தொகுப்பை சுட்டியை அதன் மேல் வைத்து பெரிதாக்கி பார்க்க முடியும

http://blackboards.blogspot.com/2007/04/blog-post_10.html

சினிமா என்ற மகத்தான ஊடகத்தை மக்கள் ஊடகமாக மாற்றவேண்டும் என்ற அக்கறையுள்ளவர்கள் இந்த வலைப் பதிவில் http://ayyanaarv.blogspot.com/2007/03/blog-post_13.html மொழியப்பட்டிருக்கும் (1) The King Of Masks (1996)(2) The Road Home ( 1999) (3) The Way Home (2002)என்ற மூன்று படங்களையும் தயவு செய்து தேடி எடுத்துப் பாருங்கள்.வாழ்க்கையை இப்படியும் அழகாக படம் பிடிக்கலாமா? என்று ஆச்சரியப்படுவீர்கள

A BLOG FOR INFORMATION ON GOOD INDIAN MOVIES WITH FOCUS ON PARALLEL CINEMA

http://parallelcinema.blogspot.com/

உங்களைப் பொறுத்தவரை "உணர்வுகளை வெளிக்கொணர்வது" தான் படைப்பாக இருந்தால் உங்களுக்குச் சொல்ல என்னிடம் நிறையச் சேதி இருக்கிறது.

மேலைத் தேய நாடுகளில் இன்று எவ்வாறு ஒரு கதை எழுதுகிறார்கள்?

முதலாவது எந்த வகையினரான மக்கட் கூட்டத்தினருக்கு தமது கதையை எழுதுகிறோம் என்பதனை முடிவெடுக்கிறார்கள். பிறகு கதை என்ன, கதை எப்படிப் போகவேண்டும் எவ்வாறான திருப்பங்கள் எல்லாம் வரவேண்டும் என்று ஒரு அறிஞர் குழுமம் விவாதித்து முடிவெடுக்கிறார்கள். பிறகு ஒரு நல்ல எழுத்துத் திறமை கொண்ட ஒருவரை அமர்த்தி அதை எழுதுவிக்கிறார்கள். இவ்வாறு கதை எழுதினவர் தான் அண்மையில் (-) உலகப்புகழ் பெற்ற காவ்யா விசுவநாதன், காவார்ட் பல்கலைகழக மாணவி.

:P :P :P

சரி நீங்கள் சொன்னது போல இருக்கலாம் காவ்யா விஸ்வநாதன் என்பவரை படித்தவர் எண்ற அடிப்படையில்தான் கதை எழுத அந்த குழு தீர்மானித்து இருக்கும் என்கிறீர்களா...??? பணத்துக்காக செய்யப்பட்ட கதைபுனையும் வேலையில் கதையை அவர்கள் எழுதி இருக்கலாம்தானே...?? இல்லை அத்தியாயத்துக்கு ஒருவர் எண்ட விகிதத்தில் எழுதி இருக்கலாம் அது ஏன் நடக்க வில்லை...??? நீங்கள் சொல்வது மாதிரித்தான் கதைகள் புனைபவர்கள் இருக்க வேண்டுமாக இருந்தால் உங்களுக்கு இராமாயணமும் கிடைத்திருக்காது, மகா பாரதமும் கிடைத்து இருக்காது...! ஏன் மணிமேகலை, குண்டலகேசி , சீவக சிந்தாமணி, வலையாபதி, சிலப்பதிகாரம் எழுதியவர்கள் எல்லாம் உங்களுக்கு விரும்பாத மாதிரியா எழுதி இருக்கிறார்கள் என்கிறீர்கள்..??? அதை எழுதியவர்கள் எவரும் அது சம்பந்தமாக கற்கை ஏதாவது கற்கும் பாடத்திட்டம் அந்த காலத்தில் இருந்து இருந்தால் ஒருவேளை இன்னும் நிறையப்பேர் இதிகாசங்களை எழுதி இருப்பார்கள் என்கிறீர்களா..???

இருக்கட்டும் "Art of teaching" என்பது பற்றி கேள்வி பட்டு இருக்கிறீர்களா...?? அது ஒரு கலை தனக்கு தெரிந்த்தை மற்றவருக்கு புரியவைக்கும் கலை... படித்த எல்லா ஆசிரியராலும் மாணவருக்கு புரியுமாறு விளங்க வைக்க முடியாதவர்களாக இருப்பதுக்கும் இது இல்லாமை தான் காரணம்...

அது போலத்தான் ஊடகமும் படித்தால் மட்டும் போதாது அதையும் தாண்டிய திறமை வேண்டும்... நீங்கள் சொல்லும் செய்தியை வெறும் அட்டவணை படுத்தல் மூலம் இந்த இயந்திர உலகை நிறுத்தி ...

ஒரு வைத்தியர் விஞான ஆராச்சி கட்டுரை வாரைய முடியும் தனக்கு தெரிந்ததை மற்றவருக்கும் விளங்கும் முறையில் அவர் அதை எழுதவும் முடியும். அப்போ அவரும் ஒரு ஊடகவியலாளர்தான்... அது அவரது தனிப்பட்ட திறமை... அது போலத்தால் எல்லாத்துறையினராலும் எழுத முடியும்... மற்றவருக்கு விளங்கும் வகையில். அபப்டியானால் அவர்கள் ஊடகவியலாளர் எண்று ஒத்து கொள்வீர்களா இல்லயா..??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:P :P :P

...................

படித்துப் பட்டம் பெற்றவர்கள் தான் எழுதவரவேண்டுமென்று யாரும் சொல்லவில்லை. ஏற்கனவே படைப்புத் துறையிலுள்ளவர்கள் / மற்றும் படைப்பு/ஊடக துறைக்குள் வருபவர்கள் கல்வி மற்றும் அறிவியல் ரீதியில் இத்துறைகள் அடைந்துவரும் வளர்ச்சியை உள்வாங்க வேண்டும் என்பதே கோரிக்கை. இது உணரப்பட்டதால் தான் தாயகத்தில் இதற்கான செயற்பாடுகள் தொடங்கியுள்ளன. கம்பராமாயணக்காலத்தில் குருகுலவாச மனோநிலையில் இருக்கும் உங்களை யதார்த்த உலகிற்குள் இழுத்து வரமுடியுமா தெரியவில்லை. உங்களுக்கு பட்டுத் தான் தெளியவேண்டும் என்று இருந்தால் யார் தடுக்கமுடியும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவா சின்னப்பொடி அவர்களே,

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

சினிமா என்ற மக்கள் தொடர்பு சாதனம் பிறந்த இடம் பாரிஸ். உலகப் புகழ்பெற்ற உலகளவில் சாதனை படைத்த பல சினிமா இயக்குனர்கள் பாரிசிலுள்ள சினிமா கல்லூரிகளில் தானே தமது கல்வியை கற்றிருந்தார்கள்.3 முதல் 5 வருடங்கள் கொண்ட அந்தப்படிப்பை எங்களது இளைதலைமுறை படிப்பதற்கு எமது ஊடகங்கள் ஊக்கவிக்க வேண்டும் பொருளாதார ரீதியாக உதவவேண்டு என்பது தானே எனது கோரிக்கை.எதுவும் தெரியாமல் எல்லாம் தெரியும் என்று பாசாங்கு செய்கின்ற போக்குத் தானே எமது ஊடகங்களில் நிறைந்திருக்கிறது.

இன்று இங்கு ஆர்வமுள்ளவர் ஊடகத்துறையில் படிக்க விரும்பினால் அந்தந்த நாட்டு அரசுகளே கடன் அடிப்படையில் பண உதவி செய்கின்றன. எனவே அவர்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் வழிகாட்டலும் ஊக்கமும் தான். எம்மவரும் சர்வதேச தமிழ் ஊடகவியாலளர் சங்கம் என்று ஏதோ வைத்திருக்கிறார்களாமே? அதன் செயற்பாடுகள் என்ன என்று யாருக்குமாவது தெரியுமா?

இவர்கள் முன் வந்தால் ஊடகத் துறை சம்பந்தமாக ஒரு இணையம்/மாத இதழ் போன்றவற்றை வெளியிடலாம் தானே? மேலும் எமது இளம் ஊடகவியலாளருக்காக தொழில் முறை உதவிகள் வழங்க முன்வரலாம். இப்படி ஏதாவது நடக்கிறதா? நான் அறியேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் ஊடக மற்றும் எழுத்தளர்கள் ஒன்றியம் எண்டு ஒண்டு இருக்காம். அது பற்றி சாத்திரி அவர்கள் முன்பு எழுதியது:

http://www.yarl.com/forum/lofiversion/inde.../t5151-300.html

இன்று புலம் பெயர் நாடுகளில் பல ஊடகங்கள் மற்றும் பத்திரிகை வார மாத இதழ்கள் என்று பலவும் புலம்பெயர் தமிழர்களால் நடாத்தபடுகின்றது அதே போல இன்றைய தொழில் நு.ட்ப புரட்சியின் ஒரு உன்னத கண்டுபிடிப்பால் இன்று இணைய பத்திரிகைகளும் நாளுக்கு நாள் ஒவ்வொன்றாக அறிமுகமாகி கொண்டிருக்கின்றன ஒரு சில

வேண்டாத சம்பவங்களை தவிர்த்து பார்த்தால் புலத்து தமிழரின் இந்த முயற்சிகள்

பாராட்டபட வேண்டியவை.

பாராட்டுவோம். இவை இப்படியிருக்க இங்கு இந்த தமிழ் ஊடக மற்றும் எழுத்தளர்கள் ஒன்றியம்

என்று ஒண்டு உண்டு அதற்கு தலைவர்என்றும் ஒருவர் உள்ளார். இது எத்தனை

பேருக்கு தெரியும்? இப்படி ஒரு அமைப்பு இருப்பதாக ஒரு ஆறு மாதங்களிற்கு முன்னர் நான் கேள்விப்பட்டபோது உங்களை மாதிரித்தான் நானும் முழித்தேன்.

காரணம் இப்படியொரு அமைப்பு இயங்குவதாக வாசகர்களிற்கு தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லாவிட்டாலும் புலம் பெயர் எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள்

எத்தனை பேருக்கு இந்த அமைப்பை பற்றி தெரியும்? எத்தனை பேர் இதனுடன் இணைந்து செயல்படுபவர்களாகவோ

அல்லது அங்கத்தவராகவோ இருக்கிறார் என்று முயன்றவரை முயற்சி பண்ணி விசாரித்ததில் பெரிய ஊடககங்களிற்கோ

ஏன் புலத்தில் பெயர் சொன்னால் தெரிய கூடிய எழுத்தாளர்களிற்கோ இப்படி ஒரு ஒன்றியம் ஒன்று இருப்பது தெரியாது.

காரணம் அந்த ஒன்றியத்தின் செயல் வேகமாகவோ விவேகமாகவோ செயற்பட்டு தமிழ் ஊடகவியலாளர்களையோ அல்லது

எழுத்தாளர்களையோ உள்வாங்கவில்லையென்பதே. இன்று புலத்தில் தமிழ் எழுத்தாளர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் அடித்த தேங்காய் போல் சிதறி ஆளுக்கு ஒரு இலக்கிய வட்டம்இ இலக்கண வட்டம் என்று வட்டங்கள் அமைத்து அந்த வட்டத்திற்குள்ளேயே கட்டம் கட்டமாக பிரிந்து போய் வருடத்தில் ஒருமுறை எங்காவது ஒரு மண்டபத்திலோ அல்லது

ஒரு வீட்டிலோ கூடி சில தீர்மானங்கள் அல்லது கண்டனங்களை ஞஉறைவேற்றி விட்டு கலைந்துஇ கரைந்து காலப்போக்கில் காணாமல் போய் விடுகிறார்கள். இப்படி இவர்களது அறிவு ஆற்றல் எல்லாம் வீணே விழலுக்கிறைத்த நீராய் வீணாகாமல் அதை அணைகட்டி ஒருங்கிணைத்து ஒரே பாதையில் எமது தமிழ் தேசியத்தின் பலத்திற்காகவும் இவர்களை கொண்டே புலத்தின் எமது இளம் சந்ததியின் சக்திகளையும் அறிவாற்றலையும் எமது தாயகம் நோக்கியதாய் திருப்ப வேண்டியது இந்த புலம்பெயர் ஊடக மற்றும் எழுத்தாளர் ஒன்றியத்திற்கு முன் உள்ள பாரிய கடமையாகும். ஆனால் அந்த ஒன்றியம் என்ன செய்து கொண்டிருக்கிறதென்றால் தனது இருப்பை காட்டி கொள்ள அவ்வப்போது ஒரு அறிக்கை. அதாவது பலரையும் போய் சென்றடைய கூடிய பத்திரிகைகளில் கூட இல்லை தங்களிற்கு தெரிந்த ஒருசில இணைய தளங்களிற்கு எழுதி அனுப்பி விட்டு மறக்காமல் தலைமை தன்னுடையை பெயரை மட்டும் போட்டு விடுவார்.

அப்படித்தான் அண்மையில் மறைந்த மாமனிதர் யோசப் பரராயசிங்கத்தின் படுகொலைக்கும் அந்த ஒன்றியத்தின் தலைவர் ஏதோ தான் வள்ளுவரின் வம்சாவழி வந்தவர் போல இரண்டே இரண்டு வரியில் இரண்டு கண்டன அறிக்கைகளை விட்டார் அதுவும் ஒரேயொரு இணையதளத்தில் பார்க்க முடிந்தது. கீழே மறக்காமல் வழமை போல தனது பெயர் இட்டுருந்தார். காரணம் அதை போடாவிட்டால்இவரையாரென்று எவருக்கும் தெரியாது. (போட்டாலும் தெரியாது) ஏன் மற்றைய ஊடகங்களிற்கு இவர் அனுப்பவில்லையா? அல்லது அனுப்பியும் அந்த ஊடகங்கள் இவரது இரண்டு வரி கண்டனத்தை பார்த்து இதெல்லாம் ஒரு கண்டனமா? என்று பிரசுரிக்கவில்லையா தெரியவில்லை. இதற்கு முதலும் பெல்ஜியத்தில் அய்ரொப்பிய ஒன்றியத்தின் புலிகள் மீதான சில கட்டுப்பாடுகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து புலம் பெயர் அய்ரோப்பிய தமிழர்களால்

நடாத்த பட்ட மாபெரும் கண்டன பேரணி பற்றிய விபரங்களை மற்றைய அய்ரோப்பிய ஊடகங்கள் மூலம் அய்ரோப்பிர்களிற்கும் எடுத்து சென்று அந்த ஊர்வலத்தின் சரியான பலாபலனை அறுவடை செய்ய தவறியதற்காகவும் இந்த ஒன்றியத்தின் மீதும் அதன் தலைமை மீதும் பலரின் கண்டனங்கள் எழுந்ததும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்று சாதாரணமாக பொழுது போக்குவதற்காகவே பலர்தங்களிற்கு என்று இணையத் தளங்களை உருவாக்குகின்ற காலமிது இந்த காலத்தில் இப்படியான ஒரு பொறுப்புவாய்ந் ஒரு அமைப்புதனக்கென்று ஒரு இணைய தகவல் தளம்ஒன்றை கூட இதுரை அமைக்கவில்லை. நமதுஇலக்கு என்று ஒரு பத்திகை மட்டும்மாதாந்ம்வெளிவருகிறத

படித்துப் பட்டம் பெற்றவர்கள் தான் எழுதவரவேண்டுமென்று யாரும் சொல்லவில்லை. ஏற்கனவே படைப்புத் துறையிலுள்ளவர்கள் / மற்றும் படைப்பு/ஊடக துறைக்குள் வருபவர்கள் கல்வி மற்றும் அறிவியல் ரீதியில் இத்துறைகள் அடைந்துவரும் வளர்ச்சியை உள்வாங்க வேண்டும் என்பதே கோரிக்கை. இது உணரப்பட்டதால் தான் தாயகத்தில் இதற்கான செயற்பாடுகள் தொடங்கியுள்ளன. கம்பராமாயணக்காலத்தில் குருகுலவாச மனோநிலையில் இருக்கும் உங்களை யதார்த்த உலகிற்குள் இழுத்து வரமுடியுமா தெரியவில்லை. உங்களுக்கு பட்டுத் தான் தெளியவேண்டும் என்று இருந்தால் யார் தடுக்கமுடியும்?

உங்களின் இயலாமை...! அதை எதை சொல்லியாவது ஆற்ற முயலுகிறீர்கள்...!

சந்தர்ப்பம் கிடைக்காது படிக்க முடியாத பல வல்லவர்கள் உலகத்தில் இருக்கிறார்கள்....! கல்வி என்பதும் திறமை என்பதும் வேறு வேறான திசையில் உள்ளவை... "திறமை உள்ளவர்களை" இன்னும் வளர்த்து விடுவதில் மேற்கு நாடுகள் பல நடவடிக்கைகளை எடுக்கிறது...! அதில் பாடத்திட்டம் பரீட்சை என்பது ஒரு கட்டம் மட்டும்தான்... ஒப்படை எனப்படும் செயற்பாடுகளை கொண்டு அவர்களை புடம் போடும் கல்வியகங்கள் பல இருக்கின்றன...!

படித்த பின்னர் தான் ஒருவர் வேலைக்கு வர முடியும் என்னும் உங்களுக்கு திறமை உள்ள ஒருவர் அத்துறையில் வேலை செய்தவாறே வேண்டுமானால் படிக்கலாம் என்பதை நீங்கள் அறியவில்லை எண்று தெரிகிறது...

சினிமா என்பது அவ்வளவு துல்லியமாக உணர்வுகளையும், அவலங்களையும், நிலைமைகளையும் அப்படியே கொண்டு செல்ல கூடியது... ஒரு திரைப்படம், தொலைக்காட்ச்சி நாடகம், மேடை நாடகம், தெருநாடகம் ஏற்ப்படுத்தாத தாக்கத்தினை எதனாலும் ஏற்ப்படுத்த முடியாது.... உங்களின் பிரச்சார நடவடிக்கைகளுக்கு இவற்றை எப்படி பயன் படுத்த முடியும் எண்று யோசியுங்கள் சிறப்பாக இருக்கும்...

முடிந்தால் அஜீவன் அண்ணா போண்ற எங்களின் கலைஞர்களை வளர்த்து விட முடியுமா எண்று சிந்தியுங்கள்... இன்னும் சிறப்பாக இருக்கும்... இல்லை தென்னிந்தியாவில் ஏற்பட்டு இருக்கும் மாற்றங்களை கொண்டு ஈழத்தின் அவலங்களியும் திரைப்படங்களின் பிரதிபலிக்க செய்யுங்கள், அப்படியான படங்களுக்கு புலம்பெயர் மக்களின் ஆதரவு முழுமையான நல்ல படங்களை கொண்டுவர அடிக்கல்லாக இருக்கும்

அதை எல்லாம் விடுத்து சினிமாவையும், திரை நாடகங்களையும் எங்களுக்கு பயன் படுத்த முடியவில்லை இல்லை தெரியவில்லை எண்று சொல்பவராக இருந்தால்.... அந்த பக்கம் நீங்கள் தலைவைத்து படுக்காமல் இருப்பது நல்லது...!

சினிமாவையும், திரை நாடகங்களையும் எங்களுக்கு பயன் படுத்த முடியவில்லை இல்லை தெரியவில்லை எண்று சொல்பவராக இருந்தால்.... அந்த பக்கம் நீங்கள் தலைவைத்து படுக்காமல் இருப்பது நல்லது...!

ஐயா சினிமா சின்னத்திரை மற்றும் தொலைக்காட்சி பதிவுகளுக்கான அடிப்படை இலக்கணம் இது. எனக்கு சினிமாவை பற்றி தெரியாது என்ற சொல்லவரும் தாங்கள் இது பற்றி என்னுடன் ஆக்க பூர்வமாக விவாதிக்க விரும்பினால் நான் விவாதிக்கத் தயாராக இரக்கிறேன்

இங்கு விவாதிக்க படுவது ஈழத்தமிழருக்காக (எங்களுக்காக) கேடுவிளைவிக்கு தமிழக சினிமாவை பயன் படுத்துவது எப்படி என்பது பற்றி எண்று தவறாக நினைத்து மேலே அப்படி எழுதி விட்டேன்....

இப்போதான் தெரிக்கிறது சினிமாவும் நாடக கலையும் எப்படி பட்டது என்பதை பற்றி விவாதிக்கிறீர்கள் எண்டு... தவறுக்கு வருந்துகிறேன் ...!

தமிழ் ஊடக மற்றும் எழுத்தளர்கள் ஒன்றியம் எண்டு ஒண்டு இருக்காம். அது பற்றி சாத்திரி அவர்கள் முன்பு எழுதியது:

http://www.yarl.com/forum/lofiversion/inde.../t5151-300.html

படைப்பாளிகள் கழகம் எண்டும் ஒண்டு இருக்கு அதுக்கும் ஊடகவியளாளர் களகத்துக்கும் உள்ள புடுங்கு பாட்டையும் எழுதியிருக்கிறார் தேடி பயன் பெறுங்கள்...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திறமை உள்ள ஒருவர் அத்துறையில் வேலை செய்தவாறே வேண்டுமானால் படிக்கலாம்

செயலில் நடப்பதாக தெரியவில்லை. அதை செய்து காட்டுங்கள் என்பதே நமது கோரிக்கை.

Edited by பண்டிதர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படைப்பாளிகள் கழகம் எண்டும் ஒண்டு இருக்கு அதுக்கும் ஊடகவியளாளர் களகத்துக்கும் உள்ள புடுங்கு பாட்டையும் எழுதியிருக்கிறார் தேடி பயன் பெறுங்கள்...!

அடுத்தவன்ரை பொட்டுக்கேடுகளை அம்பலப்படுத்துவதைத் தவிர வேறு ஏதாவது உருப்படியாக நீங்கள் செய்திருந்தால் அதைப் பற்றியும் படித்துப் பயனடைய ஆவலாயுள்ளேன் :P :P :P

ஊடகவியல் என்றதும் அது தமிழில் இல்லாத ஒரு துறை. தமிழர்களுக்கு அது புதியது. ‘ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட-உருவாக்கப்பட்ட ஒரு நவீன துறை’ என்ற எண்ணம் நம்மவர்கள் பலரிடம் இருக்கிறது.

அது இதழியலாக இருந்தாலும் இலத்திரனியல் சார்ந்த ஒலி ஒளி வடிவங்களாக இருந்தாலும் அதற்கு மேற்குலகத்தினரே சொந்தக்காரர்கள் என்றும் அவர்கள் உருவாக்கிய வழி முறைகளே சிறந்தது என்றும் அதை நாம் அப்படியே பின்பற்றுவது தான் நம்முடைய ஊடகத்துறையை வளர்பதற்கு சிறந்த வழி என்றும் கருதுகின்ற நிலைப்பாடுதான் இன்னும் நம்மிடையே இருக்கிறது.

இன்றும் கூட தமிழ் சமூகத்திலுள்ள அறிவு சார்ந்த பிரிவினரிடையே ஐரோப்பிய ஆங்கில வானொலிகளும் தெலைக்காட்சிகளும் சொல்வது தான் செய்தி என்றும் அவற்றில் ஒரு செய்தி சொல்லப்பட்டால் அது உண்மை என்றும் கண்மூடித்தனமாக நம்புகிற போக்கு எம்மிடையே காணப்படுகிறது.

இந்த வானொலிகளும் தொலைக்காட்சிகளும் செய்தியை சொல்லுகின்ற முறைதான் ஊடகத்துறையின் உச்சம் என்றும் தாங்களும் நம்பி மற்றவர்களையும் நம்பச் சொல்கின்ற போக்குத் தான் இன்னமும் நம்மவர்களிடத்திலே இருக்கிறது.இதழியல், சினிமா, சின்னத்திரையில் கூட மேற்குலக முன்மாதிரியை அச்சொட்டாக பின்பற்றுவதன் மூலம் தரமான சிறந்த படைப்புக்களை தர முடியும் என்று தான் இன்றுவரை பலர் நம்புகிறார்கள்.

இந்த காலணித்துவ அடிமை மனோபாவமும் அடிமைச் சிந்தனையும் தான் தமிழ் தேசிய ஊடகக் கருத்தியல் ஒன்று இதுவரை உருவாகமல் போனதற்கும் தமிழ் ஊடகத்துறை தனக்கென்று ஒரு தனித்துவமான அடையாளத்தை கட்டமைக்கத் தவறியதற்கும் காரணம் என்பதை நாம் உணரவேண்டும்.

நாம் நாமாக எமது சுயத்தை இழந்துவிடாமல் இருந்துகொண்டு எமது அனுபவங்களின் அடிப்படையில் எங்களுக்கென்று ஒரு தளத்தை உருவாக்கிக் கொண்டு அதன் பின்னர் மற்றவர்களுடைய அனுபவங்களை அதனுடன் இணைப்பதன் மூலமே எங்களுடைய அடையாளத்தை நாங்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு எங்களுடைய அனுபங்களை குறைத்து மதிப்பீடு செய்து கொண்டு அடுத்தவர்களுடைய அனுபங்களையும் அடையாளங்களையும் நாம் பின்பற்ற முற்பட்டால் நாம் எமது சுயத்தையும் சொந்த அடையாளத்தையும் தொலைத்து விடுவோம்; என்பதையும் உணர வேண்டும்.

ஊடகவியல் என்பது ஒரு இனத்தின் சமூகத்தின் கருத்தியல் தளத்தில் காத்திரமான- தீர்மானகரமான பாத்திரத்தை வகிக்கின்ற ஒன்றாகும். இந்தத் தளத்தை ஒரு தேசிய இனம் தனது சுய அடையாளங்களின் அடிப்படையில் கட்டியெழுப்பத் தவறுமாக இருந்தால் இந்தத் தளத்துக்குள் ஊடுருவல்களையும், ஆக்கிரமிப்புக்களையும் அனுமதிக்குமாக இருந்தால்அந்த இனம் படிப்படியாக தனது சுயத்தையும் அடையாளத்தையும் இழக்கும்.

சிறுகச் சிறுகச் கொல்லும் விசத்தைப் போல ஒரு தேசிய இனத்தின் கருத்தியல் தளத்துக்குள் புகுந்துகொள்ளும் ஆக்கிரமிப்புக் கருத்தியலும் படிப்படியாக அந்த இனத்தின் பண்பாட்டுத் தளத்தை சிதைத்து கடைசியில் அந்த இனத்தின் இருப்பையும் அடையாளத்தையும் அழித்துவிடும்.

உலகமயமாதல் சூழலில் மனிதர்களையே சந்தைப் பொருட்களாக மாற்றுவதற்காக தேசங்களினதும் தேசிய இனங்களினதும் வரலாற்றiயும் பண்பாட்டையும் கலை கலாச்சார விழுமியங்களையும்; அழிக்கின்ற, மழுங்கடிக்கின்ற கைங்கரியத்தை செய்வதில் ஊடகவியல் மிக முக்கியமான பங்களிப்பை செய்கின்றது.

ஊடகத்துறை என்பது மக்களுக்கான தகவல்களைச் சொல்கின்ற, அறிவூட்டுகின்ற, மகிழ்வுட்டுகின்ற பணியைச் செய்வதாகச் சொல்லிக் கொண்டாலும் அடிப்படையில் மக்கள் மீது கருத்தை திணிக்கின்ற- சந்தைப் பொருளாதார வலைப்பின்னல்களுக்குள் அவர்களைச் சிக்க வைக்கின்ற பணியைத் தான் பல ஊடகங்கள் குறிப்பாக உலக மேலதிக்க ஊடகங்கள் திட்டமிட்டுச் செய்துவருகின்றன.

உலகில் நிமிடத்துக்கு நிமிடம் , விநாடிக்கு விநாடி எத்தனையோ ஆயிரக்கணக்கான சம்பவங்களும் செயல்களும் நிகழ்ந்தாலும் எவை செய்தியாக்கப்பட வேண்டும், எப்படிப்பட்ட செய்திகளாக அவை ஆக்கப்படவேண்டும், என்ன கருத்துக்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதை விரல்விட்டு எண்ணக் கூடிய இந்த மேலாதிக்க ஊடகங்கள் தான் தீர்மானிக்கின்றன.

அரசபயங்கரவாதச் செயற்பாடுகளை ஜனநாயகச் செயற்பாடுகளாகவும், தேசிய விடுதலைப்போராட்டங்களை பயங்கரவாதச் செயற்பாடுகளாகவும் இந்த மேலாதிக்க ஊடகங்கள் கட்டமைத்துக் கதை சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஊடகங்களையும் இவற்றின் ஊடகக் கோட்பாடுகளையும் தமிழ் தேசிய இனம் தன்னுடைய ஊடகக் கருத்தியலை திர்மானிப்பதற்கான வழிகாட்டியாகவும் முன் மாதிரியாகவும் கொள்ள வேண்டுமா? என்ற கேள்வி முக்கியமாக கேட்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

http://sivasinnapodi1955.blogspot.com/2006...og-post_08.html

Edited by navam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் நாமாக எமது சுயத்தை இழந்துவிடாமல் இருந்துகொண்டு எமது அனுபவங்களின் அடிப்படையில் எங்களுக்கென்று ஒரு தளத்தை உருவாக்கிக் கொண்டு அதன் பின்னர் மற்றவர்களுடைய அனுபவங்களை அதனுடன் இணைப்பதன் மூலமே எங்களுடைய அடையாளத்தை நாங்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு எங்களுடைய அனுபங்களை குறைத்து மதிப்பீடு செய்து கொண்டு அடுத்தவர்களுடைய அனுபங்களையும் அடையாளங்களையும் நாம் பின்பற்ற முற்பட்டால் நாம் எமது சுயத்தையும் சொந்த அடையாளத்தையும் தொலைத்து விடுவோம்; என்பதையும் உணர வேண்டும்.

வணக்கம் சிவா சின்னப்பொடி அவர்களே.

தமிழீழத்திலிருந்து மேற்கிற்கு தப்பி ஓடி வந்தவர்கள் நாங்கள். எங்களுக்கு இதைப் பற்றி எல்லாம் கதைக்க எவ்வளவு தகுதி இருக்கிறது என்பது கேள்விக்குரிய ஒன்று.

அடுத்தது, சிங்களவனின் ஆயுதத்தையே பறித்தெடுத்து அவனை துரத்தியடித்தது தான் எங்களின் வரலாறு. இப்படி பல உதாரணங்களினை அடுக்க முடியும்.

எமது இன்றைய எதிரி இந்த மேலாதிக்க ஊடகங்கள். அவர்களை அவர்களின் வழியிலேயே சென்று வெற்றி கொள்ள வேண்டியதே இன்றைய தேவை. அது பற்றி மட்டும் கலந்தாடுவோம். அதுவே இன்றைய காலத்தின் தேவை.

செயலில் நடப்பதாக தெரியவில்லை. அதை செய்து காட்டுங்கள் என்பதே நமது கோரிக்கை.

படிக்கலாம் என்பது படிப்பது கட்டாயமில்லை...! ஒருவர் வேலை செய்கிறார் எண்றாலே அவருக்கு அந்த துறையில் கொண்ட திரைமையினால் அது அனுபவத்தில் வந்துவிட்டது... பிறகு படித்து பெறும் பட்டம் எனும் கடதாசி என்ன மாற்றத்தை கொண்டு வந்துவிடும்..??? வேன்டுமானால் அவர் உங்களை போண்றவர்கள் படிக்க பாடத்திட்டதை உருவாக்க முடியும்...!

அடுத்தவன்ரை பொட்டுக்கேடுகளை அம்பலப்படுத்துவதைத் தவிர வேறு ஏதாவது உருப்படியாக நீங்கள் செய்திருந்தால் அதைப் பற்றியும் படித்துப் பயனடைய ஆவலாயுள்ளேன் :P :P :P

அறிவி(ல்)லை கற்பூரம் ஐயா நீங்கள்.... !

போய் படியும் எண்டால் நான் எழுதினதை எண்டு அர்த்தம் கொள்ளும் வகையா நீங்கள்...? நல்லது யாழ் உருப்படும்.. நீர் என்னை கேவலப்படுத்துறது எண்டு எழுதின சாத்திரியாரை போட்டு தாக்குறீர்...! கருத்துக்களை கருத்துக்களால் வெல்லும் தகுதியை நண்றாகவே கொண்டு இருக்கிறீர்...!

Edited by தயா

அரசபயங்கரவாதச் செயற்பாடுகளை ஜனநாயகச் செயற்பாடுகளாகவும், தேசிய விடுதலைப்போராட்டங்களை பயங்கரவாதச் செயற்பாடுகளாகவும் இந்த மேலாதிக்க ஊடகங்கள் கட்டமைத்துக் கதை சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஊடகங்களையும் இவற்றின் ஊடகக் கோட்பாடுகளையும் தமிழ் தேசிய இனம் தன்னுடைய ஊடகக் கருத்தியலை திர்மானிப்பதற்கான வழிகாட்டியாகவும் முன் மாதிரியாகவும் கொள்ள வேண்டுமா? என்ற கேள்வி முக்கியமாக கேட்கப்பட வேண்டிய ஒன்றாகும்

மேற்குலகை எப்படி சமாளிக்க முடியும் என்பதை உங்களின் சொந்த அனுபவத்தின் மூலம் அடைய நினைகாமல் மற்றயோரின் ( உங்களின் எண்று சொன்னது தமிழ் மக்களை) அனுபவத்தையும் கொண்டு செயற்படுத்துங்கள்... உதாரணமாய் ஈராக், ஆப்கான் போண்ற நாடுகள் மேற்குலகு போருக்கு போனது தவறு எண்று மேற்குலகை சிந்திக்க வைத்தார்கள்..... அமெரிக்க மக்கள் ஏன் ஈராக்கில் இருந்து தங்களின் இராணுவம் வெளியேற வேண்டும் என்கிறார்கள் என்பவற்றை எல்லாம் சிந்தித்து செயலாற்றுங்கள்... (அதுக்காக மக்களுக்கிடையில் குண்டு வெடிக்க வைக்க வேணும் எண்று நான் சொல்வதாக அர்த்தப்படுத்தி கொள்ளும் அறிவாளியாக நீங்கள் இருக்க மாட்டீர்கள் எண்று நம்புக்லிறேன்..)

ஊடகதன்மையில் பரப்புரை என்பது ஒரு அம்சம்... அது மேற்குலக வகையை அண்டி இருப்பதை ஏன் நீங்கள் அவர்கள் புரிந்து கொள்ள வசதியாக இருப்பதுக்காக எண்று அர்த்தப்படுத்த முயலுகிறீர்கள் இல்லை...???

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படிக்கலாம் என்பது படிப்பது கட்டாயமில்லை...! ஒருவர் வேலை செய்கிறார் எண்றாலே அவருக்கு அந்த துறையில் கொண்ட திரைமையினால் அது அனுபவத்தில் வந்துவிட்டது... பிறகு படித்து பெறும் பட்டம் எனும் கடதாசி என்ன மாற்றத்தை கொண்டு வந்துவிடும்..??? வேன்டுமானால் அவர் உங்களை போண்றவர்கள் படிக்க பாடத்திட்டதை உருவாக்க முடியும்...!

அறிவி(ல்)லை கற்பூரம் ஐயா நீங்கள்.... !

கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்....!

ஐயா! அப்படி ஒரு பாடத்திட்டத்தை நீங்கள் உருவாக்கி ஒரு மீடியா கல்வி நிறுவனத்தை தொடங்கினால் நான் நேரடியாகவோ அன்றி தபால் மூலமாகவோ படித்து பட்டம்பெற தயாராக இருக்கிறேன். என்னைப்போல இன்னும் பலர் இருப்பார்கள். :):o:blink:

ஆனால் ஒன்று, பாடத்திட்டம் உருவாக்குவதும் ஒரு கல்வி நிறுவனம் தொடங்குவதும் நீங்கள் நினைப்பது போல ஈசியான விடயம் அல்ல. ஒரு பலசரக்குக் கடை வைப்பது போன்றதல்ல ஒரு கல்வி நிறுவனம் தொடங்குவது. ஒரு நாலு எழுத்து எழுதிப்போட்டு வைரமுத்துவுக்கே சவுண்டு விடுறது இப்ப வாடிக்கையாப்போச்சு.

போய் படியும் எண்டால் நான் எழுதினதை எண்டு அர்த்தம் கொள்ளும் வகையா நீங்கள்...? நல்லது யாழ் உருப்படும்.. நீர் என்னை கேவலப்படுத்துறது எண்டு எழுதின சாத்திரியாரை போட்டு தாக்குறீர்...! கருத்துக்களை கருத்துக்களால் வெல்லும் தகுதியை நண்றாகவே கொண்டு இருக்கிறீர்...!

யாரையும் கேவலப்படுத்துவது எனது நோக்கமல்ல. முக்கியமாக சாத்திரியாரை இதுக்குள்ள ஏன் இழுக்கிறியள் எண்டு எனக்கு விளங்கவில்ல. இங்கு தனிநபர்களை பற்றி விவாதம் நடக்கவில்லை. தமிழர் ஊடகத் துறை நண்பர்கள் காலத்துக்கேற்றவாறு தங்களின் கல்வி மற்றும் அறிவியல் தரத்தை உலகத் தரத்துக்கு பெற்றுக்கொள்ள முன்வரவேண்டும் என்பது எனது வாதம். இல்லை அவர்கள் ஏற்கனவே பெரும் கல்வி மற்றும் அறிவியல் தரத்தில் மிளிர்கிறார்கள். உலகத் தரத்தில் இருக்கிறார்கள். வேண்டுமானால் கல்வி நிறுவனம் தொடங்கி (அதிலயும் ஏதாவது காசு பாக்கலாமா என்ற அங்கலாய்ப்பில்) மற்றவர்களுக்கு படிப்பிக்கத் தயாரே தவிர தாங்கள் கல்வியறிவு பெறுவது தேவையில்லை என்பது உங்களின் வாதம். அந்த வகையில் "நீங்கள்" என நான் குறிப்பது உங்கள் கட்சிக்காரரை ஆகும்.

Edited by பண்டிதர்

யாழில் பொதுவாக, கருத்தெழுதும் அனைவரும் தமெக்கென யாழ் கள அங்கத்துவத்தைப் பெற்று யாழ் கள விதிமுறைகளிற்குக் கட்டுப்பட்டுத் தான்

கருத்தெழுதுகிறார்கள். ஆனால், நான் பார்த்தவரை சிவா சின்னப் பொடி என்பவர்

மட்டும் இதுக்கு விதி விலக்காக உள்ளார். ஒன்றில் மோகன் ஊடாக அல்லது நவம் ஊடாக மட்டுமே சிவா கருத்தெழுதுகிறார். முதலில் நினைத்தேன் அவர் தனது வலைப்பதிவில் இடுவதை யாழ் அங்கத்தவர்கள் வெட்டி ஒட்டுகிறார்களாக்கும் அதானல் தான் அவர் இங்கு வருவதில்லை என்று. ஆனால் சில பதிவுகளில் நேரடியாக யாழ் உறுப்பினார்களிற்கும் சிவா கருத்தெழுதுகிறார். இது பற்றி முன்னர் விளக்கம் தரப்பட்டிருந்தால் திருப்பக் கேட்பதற்கு மன்னிக்கவும். சிவாவிற்கு மட்டும் ஏன் இந்த விசேட சலுகை என யாரேனும் அறியத் தர முடியுமம?

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஏன் என்ற விளக்கம் முன்னர் அளிக்கப்பட்டிருந்தால் மீண்டும் கேட்பதற்கு மன்னிக்கவும். ஏன் இந்த விசேட முறை சிவாவிற்கு மட்டும் என ஆராவது அறியத் தர முடியுமா?

இதுவரை அப்படி ஒரு விளக்கம் அளிக்கப்படவில்லை.

இந்தப் பகுதிக்குள் வெகு காலத்துக்கு பின்னர் வரக் கிடைத்தது.

பார்த்ததும் விவாதம் சுவாரஸ்யமாகப் போயிருக்கிறது என படித்ததும் தெரிந்தது.

புலம் பெயர் ஊடகங்களில் இருந்து கொண்டு பேசுவதை தவிர்த்து

செயல்பட முயலுங்கள்.........

அது உங்களுக்கு புண்ணியமாகப் போகும்.

ஊருக்குத்தான் உபதேசம் எனக்கில்லை என்கிறவர்களுக்கு

இதுக்கு மேல என்ன சொல்ல.............?

இதை விட நீங்கள் செய்ய எதுவுமில்லை.

நான் ஐரோப்பிய அனைத்து தமிழ் ஊடகங்களுக்கும் சென்றிருக்கிறேன்.

நான் அங்கே பார்த்தவை

பேசியதில் கிடைத்தவை என்னை அதிர்ச்சி அடையவே வைத்தன.

ஐரோப்பாவில் ஆரம்பித்த முதல் தமிழ் வானோலி தொலைக் காட்சி ஒன்றுக்காக

நம்முடைய ஊடகமொன்று என

ஆசைப்பட்டு பணிபுரிந்தேன்.

வாரம் ஒரு நாள் ஒளிபரப்புக்காக நிகழ்ச்சிகளைத் தயாரித்து

ஒளிப்பதிவு செய்து : தொகுத்து : தபாலில் அனுப்பினேன்.

கெசட் கூட எனது பணத்தில்தான்...................?

எனக்கு கிடைத்தது அந்த தொலைக் காட்சியை பார்க்கக் கிடைத்த இலவச காட் மட்டுமே!

என்னோடு வேலை செய்தவர்கள்

சொன்னதை எழுதினால் இங்கு உங்களால் படிக்க முடியாது.

ஒரு முறை நான் ஒளிப்பதிவு செய்து அனுப்பிய ஒரு நிகழ்ச்்சி

ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த போது திடீரென நிறுத்தப்பட்டு

பாடல்கள் ஒளிபரப்பப் பட்டது.

தொலைபேசியில் அழைத்து என்ன விடயம் என்று கேட்ட போது

அவர்களை வளர விடக் கூடாது என்றதும்

என்னால் லூசன் என்று சொல்வதை விட

வேறு எதுவும் சொல்ல முடியவில்லை.

அரை குறையாகப் பார்த்தவர் மன நிலை எப்படி இருந்திருக்கும்?

நான் எப்படி அவர்கள் முகத்தில் முழிப்பது?

ஒளிபரப்ப முதல் பார்த்து விட்டு போடாமல் இருந்திருந்தால் கூட பரவாயில்லை.

அதோடு அந்த ஊடகத்தோடு தொடர்பை துண்டித்துக் கொண்டேன்.

அதன் பின்னர் வெகு காலம் போகு முன்னமே அவர்களது ஊடகத்துள் குளறுபடி.............?

இல்லாமல் போனார்கள்.............

இன்னொரு ஊடகத்துக்கு போன போது

பொறுப்பிலிருந்தவர்களில் பாதிப் பேர்

அது தொடர்பான எதுவுமே தெரியாதவர்கள்.

ஆனால் எதையும் சமாளித்து பேச மட்டும் தெரிகிறது என்பதை மட்டும் புரிந்து கொண்டேன்.

அதுவே தகுதி..............

நான் பொறுப்பாயிருந்தவரிடம் சொன்னேன்

ஐரோப்பாவில் உள்ள இளைஞர்களிடம் தகுதியும் திறமையுமிருக்கிறது.

அவர்கள் தரும் படைப்புகளுக்கு சன்மானம் அல்லது இதுதான் முடியும் என ஒரு தொகையை கொடுங்கள்

அது அவர்களை ஊக்கப்படுத்தும்

நீங்களும் வளருவீர்கள் என்றேன்.

சண்டீவியே ஆக்களுக்கு பணம் கொடுக்கிறதில்லை தெரியுமா?

என்றாரே பார்க்கலாம்!

அதுக்கு மேல் பேசுவது முட்டாள்தனம் என மெளனமானேன்.

என்ன பேச்சே இல்லை என்றார்.

எனக்கு இந்தியாவைப் பற்றித் தெரியுமப்பா.

பைசா இல்லை என்றால் எவனுமே மூச்சுக் கூட விட மாட்டான்.

நான் அங்கேதான் இருந்தேன்.

ரஜனிகாந்தை ஆட்டோவில ஏதத்தினாலும்

தலைவா மீட்டருக்கு மேல போட்டுக் குடு சார்

என்று துட்டு வாங்காம போக மாட்டாங்க.

இப்பிடியே போனா நாமதான் நம்ம டீவியை பார்க்க வேண்டி வரும் என்றேன்.

(நம் மக்களது புலம் பெயர் டீவியை.........உண்மையை சொன்னா கோபப் படாதீங்க.

அதிகமான நம் புலம் பெயர் குழந்தைகள் நம் தொலைக் காட்சியை பார்ப்பதில்லை.)

அதுக்குப் பிறகு அவர் தொலை பேசியில் கூட பேசவில்லை.

இன்னொரு தொலைக் காட்சிக்கு போயிருந்தேன்.

அதன் பொறுப்பாளரை பார்த்ததும் வேலை செய்வோர் அலறுவார்கள்.

இன்டர்வியூ ஒன்று ஒளிப்பதிவாகிக் கொண்டிருந்தது.

ஒளிப்பதிவில 3 கமராக்கள் இருந்தன.

ஆனால் கமராமேன்தான் இல்லை.

சுவிட்ச் போட்டில் இருந்தவர் மாறி மாறி சொட்டுகளை தீர்மானித்தார்.

அதை நிர்ணயிக்க ஒரு இயக்குனரோ

ஒலியை பார்ப்பதற்கு ஒரு ஒலிப்பதிவாளரோ இல்லை.

icon_tv.jpg

உள்ளே வந்த பொறுப்பானவர்

என்னடாப்பா ஒவ்வொருத்தரா மாத்தி மாத்திக் காட்டுறீங்க.

ரெண்டு பேரையும் ஒரே இடத்தில இருக்கிறதா காட்டும் என்றார்.

interview.towns.2.jpg

சுவிட்சில் இருந்தவர் சரி என்று அவர் சொன்னபடி (மேலே உள்ளபடி) செய்தார்.

எனக்கு எல்லோருமே நட்பானவர்கள்.

நான் பொறுப்பானவரிடம் கேட்டேன்.

X நல்லா செய்து கொண்டிருந்தார்.

நீங்கள் ஏன் மூக்கை நுழைக்கிறீங்க என்றேன்.

அஜீவன் நாம ஏதாவது சொல்லாது போனா

நமக்கு ஒண்டுமே தெரியாது எண்டு அவங்க நினைச்சுடுவாங்க என்றார் பொறுப்பாயிருந்தவர்.

அவர் எதுவுமே சொல்லாமல் இருந்திருந்தால் நல்லாயிருந்திருக்கும் என்று நினைத்தேன்.

தேனீர் அருந்தும் போது

சுவிட்சில் இருந்த X சை பார்த்தேன். பேசக் கிடைத்தது.

நீர் செய்யிறது சரி

நல்ல டேஸ்ட்டா கட் பண்ணுறீர். வாழ்த்துகள்..........

அவருக்கு இப்டித்தான் என்று சொல் வேண்டியதுதானே

அதுக்குப் போய் கோயில் மாடு தலையாட்டுற மாதிரி

தலையை ஆட்டிட்டு ஏன் அப்பிடி மாத்தினீர் என்றேன்.

அண்ணா

உங்கள மாதிரி நல்லா செய்யிறாய் எண்டு கூட ஒரு வார்த்தை சொல்ல மாட்டாங்க.

அப்படிச் சொன்னா நாங்க சம்பளத்தை கூட கேட்டுடுவம் எண்டு

ஏதாவது குறைதான் சொல்லுவாங்க.

நமக்கெதுக்கு மாசக் கடைசியில சம்பளம் வருதா........ அது போதும்.

பேசுறவன்ட தலையை காட்டாத என்டு சொன்னாலும் செஞ்சிட்டு இருந்தா

இங்க நிம்மதியா வேலை செய்யலாம்.

இல்லையெண்டா அவர் ஒண்டும் செய்ய மாட்டார்

யாராவது இன்னொருத்தரை அனுப்பி டோச்சர் பண்ணத் தொடங்கிடுவார் என்றான்.

அடப் பாவமே என்றேன்.

அண்ணா

உங்கள மாதிரி ஒரு ஆள் இங்க வந்தா........?

ஏதாவது நடக்கும்...........

ஒரு நாள் கூட இருக்க மாட்டீங்க என்றான்.

உண்மைதான்.

இன்னொன்று

அண்மையில் ஒரு விளம்பரத்தை செய்ய ஒருவர் என்னிடம் வந்தார்.

ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் விளம்பரம் இருக்க வேண்டும்.

விளம்பரதாரர் சொன்னதை எல்லாம் குறிப்பிட்ட காலத்துக்குள் போட முடியாது.

இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்து விட்டு

அந்த தொலைக் காட்சி விளம்பரப் பொறுப்பாளரிடம் என்ன செய்யலாம் என்று கேட்பதற்காக பேசினேன்.

என் பிரச்சனையை சொன்னேன்.

பதில்:

அது பிரச்சனையில்லை

நான் பாஸ்டா ஓட விடுறன் என்றாரே பார்க்கலாம்! :huh:

இதுக்கு மேல நான் சொல்ல ஒன்றுமே இல்லயப்பா!.

Edited by AJeevan

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது அஜீவன் நான் என்ன சொல்ல வாறணெண்டால் :wacko: :wacko: :wacko:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.