Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் பெண் ஒருவருக்கு நேர்ந்த பயங்கரம்; தமிழர்கள் தப்பியோட்டம்!

Featured Replies

கனடாவில் பெண் ஒருவருக்கு நேர்ந்த பயங்கரம்; தமிழர்கள் தப்பியோட்டம்!

 

கனடாவில் பெண் ஒருவருக்கு நேர்ந்த பயங்கரம்; தமிழர்கள் தப்பியோட்டம்!

வாகனத்தில் மோதுண்ட பெண் ஒருவரை உயிராபத்தான நிலையில் கைவிட்டுச் சென்ற தமிழர் சிலர்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கனடாவின் மிசிசாகாவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் லெய்லா வில்கி எனும் 61வயதான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தெரியவருவதாவது,

கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் திகதி, இரவு எட்டு மணியளவில் மேவிஸ் வீதி மற்றும் நொட்டி பைன் குரோவ் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்பட்டுளது. இந்த விபத்துடன் சம்மந்தப்பட்ட தமிழரான ஓட்டுநர் குறித்த பாதசாரியான பெண்ணை மோதியபின் பயந்த நிலையில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுளது.

இந்த நிலையில் விபத்துடன் சம்மந்தப்பட்ட வாகனம் பிரம்ரனில் காணப்பட்டதாக விசாரணைகளின்மூலம் தெரியவந்துள்ளது. மேலும் குறித்த பாதசாரிப் பெண் சரியான முறையில் சாலையைக் கடக்கவில்லை என்றும் இதன்மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

கனடாவில் பெண் ஒருவருக்கு நேர்ந்த பயங்கரம்; தமிழர்கள் தப்பியோட்டம்!

சம்பவத்துடன் தொடர்புடைய ஓட்டுநர் பிரம்ரனை சேர்ந்த சச்சிதானந்தம் வயித்திலிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு இவர் வழக்கறிஞர் ஒருவருடன் கடந்த சனிக்கிழமை பொலிசாரிடம் சரணடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சம்பவம் ஒரு விபத்தாக இருந்தபோதும் அந்த பெண்ணின் மரணத்திற்குக் காரணமாக இருந்துள்ளது. ஆக அந்தப் பெண்ணின் மரணத்திற்குக் காரணமாக இருந்தும் அவரை குற்றுயிராய் விட்டுச் சென்றுள்ளதாக அவர்மீதும் அவருடன் வாகனத்துக்குள் இருந்தவர்கள்மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த வாகனத்தில் 25 வயதுடைய ஹிவிசா சச்சிதானந்தன், 28 வயதுடைய சஜீத்தா சச்சிதானந்தன் மற்றும் 28 வயதுடைய கௌதம் சற்குணராஜா ஆகியோரும் பயணித்துள்ளனர்.

கனடாவில் பெண் ஒருவருக்கு நேர்ந்த பயங்கரம்; தமிழர்கள் தப்பியோட்டம்!

கனடாவில் பெண் ஒருவருக்கு நேர்ந்த பயங்கரம்; தமிழர்கள் தப்பியோட்டம்!

https://news.ibctamil.com/ta/internal-affairs/A-woman-in-Canada-death-in-an-accident

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான விபத்துக்களில் எங்கே தப்பி ஓட முடியும் ? இவர்கள் அந்த இடத்திலேயே நின்று அவசரப் பிரிவுக்கு இவர்களாகவே அழைத்திருந்தால் இது ஒரு விபத்து என்று அடிப்படையிலேயே அணுகப்பட்டிருக்கும். பயந்த நிலையில் தப்பிச் சென்றதை ஏற்றுக்கொள்ளமுடியாது. யாரும் பார்க்கவில்லை தப்பிவிடலாம் என்று எண்ணியிருக்கலாம். அதுவே விபத்து குற்றமாக மாறுகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பு எழுதியவர் ஒரு மனநல மருத்துவரை அணுகி உதவி பெறுவது அவருக்கும், அவரின் குடும்பத்துக்கும், இந்த சமுதாயத்திற்கும் சால சிறந்தது. ?????

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் வீட்டுக்கு அருகில்தான் நடந்துள்ளது. இன்றுதான் அறிந்து கொண்டேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.