Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மாகாண ஆளுநராக தமிழர்; மைத்திரியின் அதிரடி நடிவடிக்கை

Featured Replies

வடக்கு மாகாண ஆளுநராக தமிழர்; மைத்திரியின் அதிரடி நடிவடிக்கை

 

வடக்கு மாகாண ஆளுநராக தமிழர்; மைத்திரியின் அதிரடி நடிவடிக்கை


வடக்கு மாகாண ஆளுநராக தமிழரை நிஜமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாகாணங்கள் ஒவ்வொன்றிலும் காணப்படும் ஆளுநரை உடனடியாக இடமாற்றம் செய்வதற்கு முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனடிப்படையில் முதன் முறையாக வடக்கு மாகாணத்திற்கு தமிழர் ஒருவரை நிஜமிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மேல் மாகாண ஆளுநரான கே.சி. லோகேஸ்வரனை வடக்கு மாகாண ஆளுநராக நிஜமிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனடிப்படையில் பாக்கிஸ்தானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, அதற்கு முன் ஆளுநர்களுக்கு நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுளளது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/tamil-man-will-Governor-of-Northern-Province

  • கருத்துக்கள உறவுகள்

கதிர்காமர்,சுவாமினாதன் போன்றோர் வரிசையில் இவரும் வந்திட்டால்.....எல்லாம் சுபமே.....ஆர்யாவை தூக்கி கொண்டாடும் நம்ம விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு...அவர் வந்து காட்டியவேலை ..மானிப்பாய் மசூதியிலபோய் கும்பிட்டது......நம்ம இருப்பும் இப்ப கேள்விக்கிடமாகிவிட்டுது...

 

  • தொடங்கியவர்

வட மாகாண ஆளுநராக கே.சி.லோகேஸ்வரன்?

logeswaran1.jpg?resize=800%2C622

வடக்கு மாகாண சபையின் ஆளுநராக தமிழர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. மாகாணங்களின் ஆளுநர்களை  இடமாற்றம் செய்யவுள்ள அரசு,  வடக்கு மாகாணத்திற்கு,  மேல் மாகாண சபையின் ஆளுநராக கடமையாற்றிய கே.சி.லோகேஸ்வரனை நியமிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

ஆளுநரட ஒருவரின் சேவைக்காலம் ஒரே இடத்தில் மூன்று வருடங்கள் என வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதுள்ள அனைத்து மாகாணங்களின் ஆளுநர்களையும் இடம் மாற்றம் செய்யவேண்டிய நிலையில், ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கமைவாக மேல்மாகாண ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன் வட மாகாண ஆளுநராகவும், தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார மேல்மாகாண ஆளுநராகவும், சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா தென் மாகாண ஆளுநராகவும், மத்திய மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க சப்ரகமுவ மாகாண ஆளுநராகவும்,  வடமேல் மாகாண ஆளுநர் அமரா பியசீலி ரத்நாயக்க வட மத்திய மாகாண ஆளுநராகவும் மற்றும் வட மத்திய மாகாண ஆளுநர் பி.பீ.திசாநாயக்க வடமேல் மாகாண ஆளுநராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறித்த கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

logeswaran2.jpg?resize=675%2C347

மேல் மாகாண சபையின் ஆளுநராக பொறுப்பேற்ற  போது

http://globaltamilnews.net/2018/72205/

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசின் ஊதுகுழலாக  இல்லாமல்  வடக்கு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வடமாகாண ஆளுனராக செயற்பட்டால் நல்லது. பெயரில் மட்டுமல்ல செயலிலும். இவருக்கு தமிழ் பேச, எழுத, வாசிக்க வருமோ?  தெரிந்து கொள்ள ஆசை.  அதனால கேட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

சிங்கள அரசின் ஊதுகுழலாக  இல்லாமல்  வடக்கு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வடமாகாண ஆளுனராக செயற்பட்டால் நல்லது. பெயரில் மட்டுமல்ல செயலிலும். இவருக்கு தமிழ் பேச, எழுத, வாசிக்க வருமோ?  தெரிந்து கொள்ள ஆசை.  அதனால கேட்டேன்.

https://ta.wikipedia.org/wiki/கே._சி._லோகேசுவரன்

  • கருத்துக்கள உறவுகள்

 தகவலுக்கு நன்றி நுணா. நல்லது நடக்குமென நம்புவோம். தமிழராயிருந்தாலும் பதவியில் இருக்கும்வரை அவர் அரச ஊழியர்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, alvayan said:

கதிர்காமர்,சுவாமினாதன் போன்றோர் வரிசையில் இவரும் வந்திட்டால்.....எல்லாம் சுபமே.....ஆர்யாவை தூக்கி கொண்டாடும் நம்ம விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு...அவர் வந்து காட்டியவேலை ..மானிப்பாய் மசூதியிலபோய் கும்பிட்டது......நம்ம இருப்பும் இப்ப கேள்விக்கிடமாகிவிட்டுது...

 

இலங்கேசுவரன், பிரபாகரன், விக்னேசுவரன், லோகேசுவரன் இந்தப் பெயர்களில் ஒரு ஒற்றுமையின் ஒளிக்கீற்றுத் தெரிகிறது. அது தமிழுக்கு ஒளிதரும் என்று நம்பலாம்.
 

  • கருத்துக்கள உறவுகள்

ஈரஞ்சு, ஈராறு மாதத்தில் ஓய்வு பெறாமல் இருந்தால். நல்லவர்கள் தமிழருக்கு சேவை செய்ய அதிக காலம் வழங்கப் படுவதில்லை. ஓய்வு பெற இருக்கும் வேளையில் அனுப்பி ஓய்வும் கொடுத்து விடுவார்கள்.

  • தொடங்கியவர்

தமிழ் ஆளு­நர் மாற்­றம் வர­வேற்­பிற்­கு­ரி­யது!

 

தமி­ழர்­க­ளின் மிக நீண்ட காலக் கோரிக்கை ஒன்று நிறை­வே­றும் நிலமை ஏற்­பட்­டுள்­ளது மகிழ்ச்­சி­யான செய்தி. வடக்கு மாகா­ணத்­திற்கு தமிழ் ஆளு­நர் ஒரு­வர் நிய­மிக்­கப்­ப­டப் போ­கின்­றார் என்­பதே அந்­தச் செய்தி. மேல் மாகாண ஆளு­ந­ராக இருந்­து­வ­ரும் கே.சி.லோகேஸ்­வ­ரன் வடக்­குக்கு நிய­மிக்­கப் ப­டப் போகின்­றார்.

தற்­போ­தைய அர­ச­மைப்­பின் 13ஆவது திருத்­தத்­தின் கீழ் உரு­வாக்­கப்­பட்ட மாகாண சபை­க­ளில் மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட பிர­தி­நி­தி­க­ளைக் கொண்ட சட்­ட­வாக்­கச் சபை ஒன்று இருந்­தா­லும், ஆளு­நரே அதி­கா­ரம் மிக்க நபர். மக்­கள் பிர­தி­நி­தி­கள் சபை­யால் ஆளு­நரை மீறி எத­னை­யும் செய்ய முடி­யாது என்­பதே நிலமை. இத­னால் வடக்கு மற்­றும் கிழக்கு மாகா­ணங்­க­ளில் ஆட்­சி­யா­ளர்­கள் ஒரு தரப்­பா­க­வும் ஆளு­நர் வேறு தரப்­பா­க­வும் இருப்­பது எப்­போ­தும் பிரச்­சி­னைக்­கு­ரி­ய­தா­கவே உள்­ளது.

கிழக்கு மற்­றும் வடக்கு மாகாண சபை­கள் உரு­வாக்­கப்­பட்ட காலம் முதலே அவற்­றுக்­குத் தமிழ் ஆளு­நர்­களை நிய­மிப்­ப­தன் மூலம் இரு தரப்­புகளுக்கும் இடை­யி­லான வேறு­பா­டு­களை, மோதல்­களை, உர­சல்­க­ளைக் குறைக்க முடி­யும் என்­கிற யோசனை தொடர்ச்­சி­யாக முன்­வைக்­கப்­பட்டே வந்­தது. ஆனால், கொழும்பு ஆட்­சி­யா­ளர்­களோ சிங்­கள ஆளு­நர்­க­ளையே இந்த இரு மாகா­ணங்­க­ளுக்­கும் நிய­ம­னம் செய்து வந்­த­னர்.

இவ்­வாறு தமிழ் மாகா­ணங்­க­ளுக்­குச் சிங்­கள ஆளு­நர்­களை நிய­ம­னம் செய்­வது தொடர்ச்­சி­யா­கவே இரு தரப்­பி­ன­ருக்­கும் இடை­யி­லான நம்­பிக்­கை­யீ­னத்தை உரு­வாக்கி வந்­தது. மாகாண சபை­யின் தீர்­மா­னங்­க­ளை­யும் கோரிக்­கை­க­ளை­யும் ஆளு­நர் நிரா­க­ரிக்­கும் ஒவ்­வொரு தட­வை­யும் அவர் சிங்­க­ள­வர் என்­ப­தா­லேயே நிரா­க­ரிக்­கி­றார் என்று இல­கு­வா­கக் குற்­றஞ்­சாட்­டக்­கூ­டி­ய­தாக இருந்­தது. தமி­ழர் சிங்­க­ள­வர் என்­கிற இன வேறு­பாடே இத்­த­கைய முரண் நிலைக்கு அடிப்­படை என்­றால், அதனை நிரா­க­ரிக்க முடி­யாது.

வடக்கு மாகாண சபை அமைக்­கப்­பட்ட காலத்­தில் இங்கு ஆளு­ந­ராக இருந்­த­வ­ரான மேஜர் ஜென­ரல் ஜி.ஏ.சந்­தி­ர­சிறி இந்த விட­யத்­திற்கு மிகச் சிறப்­பான உதா­ர­ணம் என்று கூற­லாம். மாகாண சபையை மதிக்­கா­தது மட்­டு­மன்றி தன்­னிச்­சை­யா­க­வும் செயற்­பட்­டார் அவர். பழைய இரா­ணுவ அதி­கா­ரி­யான அவர், மக்­க­ளாட்­சிப் பண்­பு­க­ளுக்கு மாறாக இரா­ணுவ உத்­த­ர­வுப் பாணி­யி­லேயே மக்­கள் பணி­யா­ளர்­க­ளு­டன் நடந்து கொண்­டார்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு வடக்கு மாகாண சபை­யைக் கைப்­பற்­றி­ய­தைத் தொடர்ந்து ஆளு­நர் ஜி.ஏ.சந்­தி­ர­சி­றியை மாற்­ற­ வேண்­டும் என்று அழுத்­தம் கொடுத்­தது. ஆனால், மகிந்த ராஜ­பக்ச ஆட்­சி­யில் இருந்­த­வரை அது நடக்­க­வில்லை. 2015 ஆம் ஆண்டு மைத்­திரி – ரணில் அரசு தமிழ் மக்­க­ளின் பேரா­த­ர­வு­டன் ஆட்­சிக்கு வந்­த­தைத் தொடர்ந்து இந்­தக் கோரிக்கை வலுப்­பெற்­றது. ஆளு­நரை மாற்­றும்­போது தமிழ் ஆளு­நர் ஒரு­வரை நிய­மிக்­கு­மா­றும் பல­மான கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது. ஆனால், மீண்­டும் சிங்­க­ள­வர் ஒரு­வரே ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்­டார்.

வடக்கு மாகா­ணத்­தின் ஆளு­ந­ராக இருப்­ப­வ­ரான ரெஜி­னோல்ட் குரே தனிப்­பட்ட ரீதி­யில் முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ர­னின் நண்­பர் என்­ற­போ­தி­லும், தொழில்­மு­றை­யில் இரு­வ­ருக்­கும் இடை­யி­லான முட்­டல் மோதல்­கள் தொடர்­கின்­றன. தனது கோரிக்­கை­களை ஆளு­நர் செயற்­ப­டுத்­து­கி­றார் இல்லை என்­கிற குறை முத­ல­மைச்­ச­ருக்­கும் முறை­யற்ற கோரிக்­கை­களை முன்­வைத்­தால் எப்­படி நிறை­வேற்­று­வது என்­கிற கவலை ஆளு­ந­ருக்­கும் இருக்­கின்­றன.

அதே­நே­ரத்­தில் ஆளு­நர் சிங்­க­ள­வ­ரா­க­வும், தேசி­யக் கட்சி ஒன்­றின் உறுப்­பி­ன­ரா­க­வும் இருக்­கின்­றார் என்­ப­தால் அவர் தனது கட்சி அர­சி­யல் சார்ந்தே இயங்­கு­கின்­றார் என்­கிற குற்­றச்­சாட்­டும் மாகாண சபை­யால் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது.

இது­போன்ற புரிந்­து­ணர்­வின்­மை­கள், முரண்­பா­டு­கள் தமிழ் ஆளு­நர் ஒரு­வரை நிய­மிக்­கும்­போது இல்­லா­மல் போகும் என்­பது பெரும் எதிர்­பார்ப்பு. எனி­னும் எந்த இன ஆளு­ந­ராக இருந்­தா­லும் அவர் சட்ட ஏற்­பா­டு­க­ளுக்கு அப்­பால் செயற்­பட முடி­யா­த­வர் என்­ப­தால் தமிழ் ஆளு­நர் வந்­த­வு­டன் பிரச்­சி­னை­கள் அனைத்­தும் தீர்ந்­து­வி­டும் என்­றும் எதிர்­பார்க்க முடி­யாது.

அதே­நே­ரத்­தில் முத­ல­மைச்­சர் நிதி­யத்­திற்­கான அனு­ம­தியை வழங்­கு­தல், அமைச்­சுச் செய­லா­ளர்­களை மாற்­று­வது உள்­ளிட்ட உட­ன­டிச் சவால்­கள் என்­பவைவரப்­போ­கும் தமிழ் ஆளு­ந­ருக்­கும் பெரும் முட்­டுக்­கட்­டை­கள்­தான். சட்ட நீதியா, இயற்கை நீதியா என்­ப­தில்­தான் முத­ல­மைச்­சர், – புதிய ஆளு­நர் உற­வின் அடித்­த­ளமே இருக்­கும் என்­ப­தால் தமிழ் ஆளு­ந­ரு­டன் வடக்கு மாகாண சபைக்­கும் ஆளு­ந­ருக்­கு­மான பிரச்­சி­னை­கள் தீர்ந்­து­வி­டுமா என்­பது கேள்­விக்­கு­றி­தான்.

http://newuthayan.com/story/78587.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.