Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெடித்தது பால்டேம்பரிங்: ஆஸி.கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் ராஜினாமா

Featured Replies

வெடித்தது பால்டேம்பரிங்: ஆஸி.கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் ராஜினாமா

 

 
steve-smith-1-7591

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்   -  படம்: ஏஎப்ஃபி

பந்தைசேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித்தும், துணைக் கேப்டன் பதவியில் இருந்து டேவிட் வார்னரும் ராஜினமா செய்துள்ளனர்.

இதையடுத்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்து வரும் 3-வது டெஸ்ட் போட்டியில் கேப்டனாக விக்கெட் கீப்பர் டைம் பைனி செயல்படுவார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

 

தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, கேப்டவுன் நகரில் நடந்து வருகிறது. போட்டியின் போது, ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பேன்கிராப்ட் தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து மஞ்சள் நிறத்தில் ஒருபொருளை எடுத்து பந்தை சேதப்படுத்தினார். இது கேமிராவில் தெளிவாகப் பதிவானது.

இதையடுத்து பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு பதிவானது. மேலும், பந்தை சேதப்படுத்தியதாக ஒப்புக்கொண்ட கேப்டன் ஸ்மித், இந்த விவகாரம் தனக்கு தெரிந்தேதான் நடந்தது என்று தெரிவித்தார். இதனால், ஸ்மித்தை உடனடியாக கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.

ஆஸ்திரேலிய விளையாட்டு ஆணையம் கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித்தை உடனடியாக நீக்க வேண்டும், ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தது.

மேலும், ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், பந்தை சேதப்படுத்திய விவகாரம் குறித்து அறிந்துதான் மிகவும் வேதனையும், அதிர்ச்சியும் அடைந்ததாகத் தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டில் சிக்கியவர்களை உடனடியாக விசாரிக்கவும், கேப்டன் பதவியில் இருந்து ஸ்மித்தை நீக்கவும் அவர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித்தும், துணைக் கேப்டன் பதவியில் இருந்து டேவிட்ர் வார்னரும் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.

இது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேம்ஸ் சதர்லாந்து இன்று நிருபர்களிடம் கூறியதாவது:

பந்தை சேதப்படுத்திய விவகாரத்துக்கு பொறுப்பேற்று தனது கேப்டன் பதவியை ஸ்டீவ் ஸ்மித் ராஜினாமா செய்துள்ளார். அதேபோல துணைக் கேப்டன் பதவியை டேவிட் வார்னரும் ராஜினாமா செய்துள்ளார்.

தற்போது நடந்துவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியிலும்,எஞ்சியுள்ள போட்டிகளுக்கும், விக்கெட் கீப்பர் டைம் பைனி கேப்டனாக செயல்படுவார். அவருக்கு கீழ் ஸ்டீவ்ஸ்மித், டேவிட் வார்னர் செயல்பட வேண்டும். இது இன்றைய போட்டியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.

பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக விசாரணை தொடங்கப்படும், அதற்கான குழுவினர் தென் ஆப்பிரிக்கா புறப்பட்டுள்ளனர். கிரிக்கெட் மிகவும் கண்ணியமான முறையிலும், நேர்மையாகவும் விளையாடப்பட வேண்டும் என ஆஸ்திரேலிய மக்கள் விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/sports/article23347282.ece?homepage=true

  • தொடங்கியவர்

விஸ்வரூபமெடுக்கும் ‘பால்டேம்பரிங்’: கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித்தை நீக்குங்கள்: ஆஸி. விளையாட்டு ஆணையம் உத்தரவு

 

 
cameron-bancroft-and-steve-smith

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பந்தை சேதப்படுத்திய கேமரூன் பேன்கிராப்ட் ஆகியோர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த காட்சி   -  படம்உதவி: கெட்டி இமேஜஸ்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து உடனடியாக ஸ்டீவ் ஸ்மித்தை நீக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய விளையாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதனால், கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் நீக்கப்படலாம் எனத் தெரிகிறது.

 

தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, கேப்டவுன் நகரில் நடந்து வருகிறது. போட்டியின் போது, ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பேன்கிராப்ட் தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து மஞ்சள் நிறத்தில் ஒருபொருளை எடுத்து பந்தை சேதப்படுத்தினார். இது கேமராவில் தெளிவாகப் பதிவானது.

இதையடுத்து பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு பதிவானது. பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக விசாரணை முடியும்வரை ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாகத் தொடரலாம் என கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி சதர்லாந்து தெரிவித்தார்.

இதற்கிடையே ஆஸ்திரேலிய விளையாட்டு ஆணையம் கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய விளையாட்டு ஆணையத்தின் தலைவர் ஜான் வில்லி, தலைமை நிர்வாக அதிகாரி பால்மர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித்தை உடனடியாக நீக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் யாருக்கெல்லாம் அணியில் தொடர்பு இருக்கிறதோ அவர்கள் அனைவரையும் உடனடியாக நீக்க வேண்டும்.

விளையாட்டில் இதுபோன்ற மோசடியான, ஏமாற்றுத்தன செயல்கள் நடைபெறவே கூடாது. ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள் அனைவரும் ஒழுக்கத்துடன், நேர்மையுடன், மரியாதையாக நடக்க வேண்டும் என்று இந்த நாடு எதிர்பார்க்கிறது.

நாட்டின் பிரதிநிதிகளாக கிரிக்கெட் அணி இருக்கிறது. உதாரணமாக, கிரிக்கெட் போட்டியை பின்பற்றி லட்சக்கணக்கான இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட்டுக்கு பயிற்சி எடுத்து வருகிறார்கள், தேசிய அணியில் விளையாட மிகுந்த ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல உதாரணமாக வீரர்களும், அணியும் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

bancroftjpg

கேமரூன் பேன்கிராப்ட் பந்தை சேதப்படுத்த பயன்படுத்த மஞ்சள் அட்டையை எடுத்தபோது கேமிராவில் பதிவான காட்சி

 

பிரதமர் மால்கம் டர்ன்புல் வலியுறுத்தல்

இதற்கிடையே ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் அணியின் கேப்டன் பதவியில் இருந்து உடனடியாக ஸ்டீவ் ஸ்மித்தை நீக்ககோரியுள்ளார். மெல்போர்ன் நகரில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்திய செய்தியை அறிந்ததும், நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன், வேதனை அடைந்தேன். இன்றுகாலை அனைவரும் எழுந்தபோது, தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த செய்தி அனைவரையும் வேதனையில் ஆழ்த்தி இருக்கிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஏமாற்றுத்தனத்தில், மோசடியில் ஈடுபட்டு இருக்கிறது என்ற விஷயம் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைவர் டேவிட் பீவிருடன் பேசினேன். தென் ஆப்பிரிக்காவில் நடந்த சம்பவங்களுக்கு எனது வேதனைகளையும், கருத்துக்களையும் தெளிவாக அவரிடம் கூறி இருக்கிறேன்.

ஆஸ்திரேலியாவின் பிரதிநிகளாக கிரிக்கெட் அணி அங்கு சென்றுள்ளது. அங்கு அவர்கள் செய்யும் எந்த ஒரு ஒழுக்கக்குறைவான செயலும் ஒட்டுமொத்த தேசத்துக்கும் அவமானமாகும். ஆதலால், உடனடியாக விசாரணை செய்து தேவையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளேன். இந்த விவகாரத்தில் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனால், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் எந்நேரமும் நீக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.

http://tamil.thehindu.com/sports/article23347114.ece?homepage=true

  • தொடங்கியவர்

 

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தும் காட்சி

  • தொடங்கியவர்

பதவி விலகினார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்

பதவி விலகினார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தென் ஆஃபிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த போட்டிகளில் எஞ்சியுள்ள நாட்களில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன் பதவியில் இருந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரும் பதவி விலகினர்.

ஆஸ்திரேலியா - தென் ஆஃபிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் எஞ்சியுள்ள நாட்களில் டிம் பைன் கேப்டனாக இருப்பார். எனினும், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் போட்டியில் விளையாடுவார்கள்.

வேக பந்து வீச்சாளர் கேமரன் பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தியது தொடர்பான விசாரணை தொடங்கியுள்ள நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் உடனடியாக பதவி விலக வேண்டும் என அந்நாட்டு அரசின் அமைப்பான ஆஸ்திரேலிய விளையாட்டு ஆணையம் வலியுறுத்தி இருந்தது.

இந்த சம்பவத்தை முன்னே அறிந்து வைத்திருந்த யாராக இருந்தாலும், தலைமைக்குழு உறுப்பினர்கள் அல்லது பயிற்சி ஊழியர்களாக இருந்தாலும், ஸ்மித்துடன் சேர்ந்து அவர்களும் பதவி விலக வேண்டும் என்று விளையாட்டு ஆணையம் தெரிவித்திருந்தது.

பந்தை சேதப்படுத்தினாரா கேமரன் பேன்கிராஃப்ட்?படத்தின் காப்புரிமைSKY SPORTS Image captionபந்தை சேதப்படுத்தினாரா கேமரன் பேன்கிராஃப்ட்?

இச்சம்பவம் அதிர்ச்சியாகவும், மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேம்ஸ் சதர்லான்ட் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமையன்று கேப் டவுனில் நடைபெற்ற போட்டியில் தாம் பந்தை சேதப்படுத்தியது உண்மைதான் என பேன்கிராஃப்ட் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், 'பேன்கிராஃப்ட்டின் இத்திட்டம் குறித்து தமக்கு முன்பே தெரியும்' என கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறினார்.

இது தொடர்பான தகவல்களை சேகரிக்க, ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் இரண்டு மூத்த அதிகாரிகள் தென் ஆஃபிரிக்கா பயணிக்கின்றனர்.

ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேம்ஸ் சதர்லான்ட்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேம்ஸ் சதர்லான்ட்

ஸ்டீவ், கேப்டன் பதவியில் நீடிப்பது குறித்து கருத்து தெரிவித்த சதர்லான்ட், "என்ன நடந்தது என்று தெளிவாக தெரிய வந்த பிறகுதான் எதுவும் கூற முடியும்" என்று தெரிவித்தார்.

பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.

முறைகேட்டில் ஈடுபட்டதை நம்ப முடியவில்லை - ஆஸ்திரேலிய பிரதமர்

தென் ஆஃபிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலிய அணி குறித்து வந்த செய்தி அதிர்ச்சி மற்றும் மிகுந்த வருந்தத்தை அளிக்கிறது என ஆஸ்திரேலியாவின் பிரதமர் டர்ன்புல் தெரிவித்துள்ளார்.

கேமரன் பேன்கிராஃப்ட்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

"ஆஸ்திரேலிய அணி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. எங்கள் கிரிக்கெட் வீரர்கள் பலருக்கும் முன் மாதிரியாக திகழ்பவர்கள். எப்படி எங்கள் அணி மோசடி செய்யமுடியும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஷேன் வார்னே, "கேப் டவுன் போட்டியில் நடைபெற்ற சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. பந்தை சேதப்படுத்தியது உண்மைதான் என நிரூபிக்கப்பட்டால், கேப்டன் ஸ்மித்தும் பயிற்சியாளர் டேரன் லேமானும் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்

 
 

Very disappointed with the pictures I saw on our coverage here in Cape Town. If proven the alleged ball tampering is what we all think it is - 

 

WHAT THE ........ HAVE I JUST WOKEN UP TO. Please tell me this is a bad dream.


 
 

Surely, ICC will react under the laws of the game. But the World will be eagerly waiting for Cricket Australia to react appropriately...under the ethics of the game.

 

மேலும், இதுகுறித்து தலைமைக்குழு பேசியதாக கூறிய ஸ்மித், தாம் கேப்டன் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்று முன்னதாக தெரிவித்திருந்தார்.

பிற செய்திகள்

http://www.bbc.com/tamil/sport-43531252

  • கருத்துக்கள உறவுகள்

அவர் கிரிக்கட் பந்தை மட்டுமா சேதப் படுத்துகிறார்.......!  :unsure:  tw_blush:

  • தொடங்கியவர்

ஐசிசி அதிரடி முடிவு: ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஒரு டெஸ்டில் விளையாட தடை, 100 சதவீதம் அபராதம்

 

 
cameron-bancroft-and-steve-smith

ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், கேமரூன் பான்கிராப்ட்   -  படம்: ஏஎப்ஃபி

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி, கேப்டன் பதவியை இழந்துள்ள ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடையும், போட்டி ஊதியத்தில் இருந்து 100 சதவீதத்தை அபராதமாகவும் செலுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று அதிரடியாக உத்தரவிட்டது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்து வரும் 3-வது டெஸ்ட் போட்டியின் போது, ஆஸ்திரேலிய இளம் வீரர் கேமரூன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இது கேமிராவில் பதிவானது. இதையடுத்து பேட்டி அளித்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதற்காக திட்டமிட்டு பந்தை சேதப்படுத்தினோம் என்று ஒப்புக்கொண்டார்.

இதன் காரணமாக, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவி ஸ்டீவ் ஸ்மித்திடம் இருந்தும், துணைக் கேப்டன் பதவி டேவிட் வார்னரிடம் இருந்தும் பறிக்கப்பட்டது.

இந்நிலையில், ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ரிச்சார்ட்சன் பந்தை சேதப்படுத்திய விவகாரம் குறித்து விசாரணை நடத்தினார். அதன்பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

ஐசிசியின் வீரர்களுக்கான ஒழுங்கு நடத்தை விதிமுறைகளின்படி, வீரர்கள் மற்றும் வீரர்களுக்கு ஆதரவாக செயல்படும் உதவியாளர்களின் நடத்தை கிரிக்கெட் விளையாட்டுக்கு ஒருபோதும் விரோதமாக இருந்துவிடக்கூடாது.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் தனது தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனால், அவருக்கு 2 சஸ்பென்ஷன் புள்ளிகள் அளித்து, அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்படுகிறது. மேலும், 4 மைனஸ் புள்ளிகளும் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், போட்டியின் ஊதியத்தின் முழுத்தொகையையும், அதாவது 100 சதவீதத்தையும் அபராதமாக அளிக்க வேண்டும்.

பந்தை சேதப்படுத்திய மற்றொரு வீரர் கேமரூன் பான்கிராப்டுக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து 75 சதவீதம் அபராதமும், 2 மைனஸ் புள்ளிகளும் அளிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட் போட்டியின் எழுச்சிக்கு விரோதமாக, செயல்பட்டுள்ளது, போட்டியின் நேர்மை தன்மைக்கு ஊறுவிளைவித்துள்ளது. இந்த நடவடிக்கை அனைத்துக்கும் ஸ்டீவ் ஸ்மித் பொறுப்பு ஏற்பதாக தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டில் இன்னும் ஒழுக்கமான நடைமுறைகள் பின்பற்றப்படுவது அவசியமாகும். சமீபகாலங்களாக வீரர்களுடன் வம்பிழுப்பது, அவர்களை கிண்டல் செய்வது, நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, போட்டியை புறக்கணித்துச் செல்வது, பந்தை சேதப்படுத்துதல் ஆகிய விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்காமல் தவிர்க்க ஐசிசி முனைப்படும் செயல்படும். ஐசிசியில் உள்ளஉறுப்பு அணிகளும் ஒழுக்க விதிகளை காக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/sports/article23348932.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஐபிஎல் போட்டி: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் நீக்கப்படுவாரா?

 

 
sete

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்   -  படம்: ஏபி

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி, கேப்டன்பதவியை இழந்துள்ள ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் நீடிப்பாரா? அல்லது நீக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்து வரும் 3-வது டெஸ்ட் போட்டியின் போது, ஆஸ்திரேலிய இளம் வீரர் கேமரூன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இது கேமிராவில் பதிவானது. இதையடுத்து பேட்டி அளித்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதற்காக திட்மிட்டு பந்தை சேதப்படுத்தினோம் என்று ஒப்புக்கொண்டார்.

இதன் காரணமாக, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவி ஸ்டீவ் ஸ்மித்திடம் இருந்தும், துணைக் கேப்டன் பதவி டேவிட் வார்னரிடம் இருந்தும் பறிக்கப்பட்டது.

இந்நிலையில், பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கியுள்ளதையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஸ்டீவ் ஸ்மித் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

என்ன நடவடிக்கை இருக்கும்

இது குறித்து ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லாவிடம் நிருபர்களிடம் இன்று கேள்வி எழுப்பியபோது அவர் கூறுகையில், ‘பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். அதன்பின், பிசிசிஐ, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடவடிக்கையை எடுக்கும். இப்போதுள்ள நிலையில், எந்த நடவடிக்கையும் அவர் மீது பிசிசிஐ அல்லது ராஜஸ்தான் அணி ஏதும் எடுக்க முடியாது.

ராஜஸ்தான் அணியின் கேப்டன் மட்டுமல்ல மிக முக்கியமான வீரர் ஸ்டீவ் ஸ்மித். ஆதலால், அவருக்கு விதிக்கப்படும் தண்டனையைப் பொறுத்தே அணியின் முடிவு மாறுபடும். பொறுத்திருந்து பார்க்கலாம்’ எனத் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு ஸ்மித், டேவிட் வார்னர் இருவரையும் பதவிநீக்கம் செய்துள்ளது குறித்து சுக்லாவிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், ‘இது கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் உள்பிரச்சினை இதில் பிசிசிஐ, ஐபிஎல் அமைப்பு எந்த தலையீடும் செய்யாது. எங்களின் கவனம் எல்லாம் ஐசிசி என்ன சொல்லப்போகிறது என்பதுதான்’எனத் தெரிவித்தார்.

ஸ்மித் மிகவும் முக்கியம்

இதற்கிடையே பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ஸ்மித், வார்னர் ஆகிய இருவீரர்களும் ஐபிஎல் போட்டிகளுக்கு மிக முக்கியமாகும். இவர்களின் ஒப்பந்தத்தை இந்த ஒரு சம்பவத்தை வைத்து மட்டும் உடனடியாக ரத்து செய்துவிட முடியாது. ஒருவேளை ஐசிசி ஒரு டெஸ்ட் போட்டிக்கு தடை விதித்தாலோ, அல்லது 3 மைனஸ் புள்ளிகள் கொடுத்தாலோ நாம் எப்படி கடினமான முடிவுகளை ஸ்மித், வார்னர் மீது எடுக்க முடியும்.

அதுமட்டுமல்லாமல் 2 ஆண்டுகளுக்கு பின் இப்போதுதான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் போட்டிக்கு வந்துள்ளது. இப்போதுள்ள நிலையில், ஸ்மித் போன்ற நட்சத்திர வீரர் அவசியம்’ எனத் தெரிவித்தார்.

ஆதலால், ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித், வார்னர் ஆகியோர் மீது ஐசிசி கடுமையான தண்டனைகள் விதித்தால் கூட அவர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதில் பெரும்பாலும் சிக்கல் இருக்காது, அந்த தண்டனைகள் ஐபிஎல் போட்டிகளை பாதிக்காது என்றே தெரிகிறது.

http://tamil.thehindu.com/sports/article23348764.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஸ்மித்தின் பிம்பத்தை உடைத்த ‘பால் டேம்பரிங்’:இது முதலாவது அல்ல 5-வது சம்பவம்

 

 
stea

ஸ்டீவ் ஸ்மித்   -  படம்: ஏபி

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்குவது முதலாவது அல்ல, 5-வது முறையாகும்.

தென் ஆப்பிரிக்கா பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. போட்டியின் தொடக்கத்தில் இருந்தே அந்த அணி வீரர்களிடம் தொடர்ந்து வம்பு செய்வதும், அவர்களை சீண்டுவதும் வாடிக்கையாக ஆஸ்திரேலிய வீரர்கள் வைத்திருந்தனர்.

இதனால், முதலில் டேவிட் வார்னருக்கும், தென் ஆப்பிரிக்க வீரர் டீ காக்குக்கும் இடையே தகராறு ஏற்பட்டது, அதன்பின் களத்தில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கும், தென் ஆப்பிரிக்க வீரர் காகிசோ ரபாடாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஸ்மித்தின் தோள்பட்டையை இடித்ததால் 2 போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டு பின்னர் விலக்கப்பட்டது. இதனால், 3-வது போட்டி மிகுந்த பரபரப்பாகி, அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், 3-வது டெஸ்ட்டின் 3-வது நாள் ஆட்டத்தில் ஜூனியர் வீரர் கேமரூன் பேன்கிராப்ட் மூலம் பந்தை சேதப்படுத்தும் திட்டத்தை செய்து அதில் ஸ்மித் சிக்கிக்கொண்டார். திட்மிட்டு, தெரிந்தே செய்த இந்த தவறு மூலம் தனது கேப்டன் பொறுப்பை ஸ்மித் இழந்துள்ளார்.

இதுபோன்ற சர்ச்சையில் ஸ்மித் சிக்குவது முதல்முறை அல்ல இது5-முறையாகும். இதற்கு முன்பும் பல சிக்கல்களில் ஸ்மித் சிக்கியுள்ளார்.

டிஆர்எஸ் முறை விமர்சனம்

கடந்த ஆண்டு இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி விளையாடியது. இதில் பெங்களூருவில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியின் போது, எல்பிடபில்யு முடிவுக்கு டிஆர்எஸ் முறையை விராட் கோலி கோரினார். அதற்கு மூளையை மழுங்கடிக்கச் செய்யும் முறை என விமர்சனம் செய்து ஸ்மித் சர்ச்சையில் சிக்கினார்.

இங்கிலாந்து வீரருடன் வம்பு

ஆஷஸ் டெஸ்ட் தொடர் என்றால் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இடையே பெரும் மல்லுக்கட்டாக இருக்கும். கடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரின் போது, இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்சன் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், அவரை சீண்டிவிட்டு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்பின், அங்கிருந்த நடுவர் ஆலீம் தார் தலையிட்டு இருவரையும் விலக்கிவைத்தார்.

நடுவருடன் வாக்குவாதம்

கடந்த 2016ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிராக கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியின் போது, நடுவருடன் ஆஸ்திரேலிய கேப்டன் மிகவும் சத்தமாக, அசிங்கமான முறையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்காக அவரின் ஊதியத்தில் இருந்து 30 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டது.

ரபாடாவுடன் உரசல்

தென் ஆபிரிக்காவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2-வது டெஸ்ட் போட்டியின் போது, தென் ஆப்பிரிக்க வீரர் காகிசோ ரபாடாவுக்கு முகத்துக்கு நேரே சென்று புருவத்தை உயர்த்தி கிண்டல் செய்தார். இதனால், இருவருக்கும் இடையே உரசல் ஏற்பட்டு,ஸ்மித்தின் தோள்பட்டையில் ரபடா இடித்துச் சென்றார். இதற்கு ரபாடாவுக்கு 2 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டு பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது.

பந்துக்கு சேதம்

கேப்டவுனில் நடந்து வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் போது, வேண்டுமென்றே திட்டமிட்டு, பந்தை சேதப்படுத்த, தனது ஜூனியர் வீரர் கேமரூன் பேன்கிராப்டை ஸ்மித் பயன்படுத்தியுள்ளார். தான் பந்ததை சேதப்படுத்தாமல், கேமரூன் மூலம் சேதப்படுத்தியதை ஸ்மித் ஒப்புக்கொண்டு கேப்டன் பதவியை இழந்துள்ளார்.

http://tamil.thehindu.com/sports/article23348467.ece

  • தொடங்கியவர்

ஆஸி அணித் தலைவருக்கு எதிராக வாழ்நாள் போட்டித் தடை?

stevan-smith.jpg?resize=660%2C330

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித்திற்கு வாழ்நாள் போட்டித் தடை விதிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தென் ஆபிரிக்காவிற்கு கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணியின் தலைவராக ஸ்டீவன் ஸ்மித்தும், உப தலைவராக டேவிட் வார்னரும் கடமையாற்றினர்.

 

மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் பந்தை வேண்டுமென்ற பழுதாக்கி அதன் மூலம், தென் ஆபிரிக்க அணி வீரர்களை ஆட்டமிழக்கச் செய்ய முயற்சித்தமை தொடர்பில் ஸ்மித் உள்ளிட்ட அணியினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்களை அணியின் தலைவர் என்ற ரீதியில் ஸ்மித் ஏற்றுக்கொண்டிருந்தார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஸ்மித்தின் தலைமைப் பதவி நீக்கப்பட்டுள்ளதுடன், ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு சர்வதேச கிரிக்கட் பேரவை தடை விதித்துள்ளது. இந்த நிலையில், அவுஸ்திரேலிய கிரிக்கட் வாரியம் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோருக்கு எதிராக வாழ் நாள் போட்டித் தடையை விதிக்கக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

stevan-smith-2.jpg?resize=284%2C177

http://globaltamilnews.net/2018/72342/

  • தொடங்கியவர்

ஸ்மித் மீது இத்தனை கோபம் வேண்டாம், மன்னியுங்கள்: ஆஸி. மக்களிடம் மைக்கேல் கிளார்க் வேண்டுகோள்

 

 
clarke-smith

மைக்கேல் கிளார்க், ஸ்டீவ் ஸ்மித்.   -  படம். | கெட்டி இமேஜஸ்

பந்தைச் சேதப்படுத்தி கிரிக்கெட்டையும் ரசிகர்களையும் ஏமாற்றி அவமானத்துக்கு ஆளாகியிருக்கும் ஸ்டீவ் ஸ்மித்தை மக்கள் மன்னிக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“நான் ஸ்டீவ் ஸ்மித்துக்காக இரங்குகிறேன். 100 சதவீதம் ஸ்மித்தும் அவரது சகாக்களும் மிகப்பெரிய தவறு செய்துள்ளனர் என்பதில் இருவேறு கருத்தில்லை, அதற்கான விளைவுகளை அவர்கள் அனுபவிக்கப் போகிறார்கள் என்று கருதுகிறேன்

அது நியாயமானதுதான். ஆனால் நாளடைவில் நாம் ஸ்மித்தை மன்னிக்கவும் வேண்டும்.

இன்று காலை நான் கண் விழித்தவுடன் இரண்டு விஷயங்கள் என் மனதில் நின்றன, அதில் ஒன்று ‘இப்படி நிச்சயம் இனி நடக்கக் கூடாது’ என்பது ஒன்று.

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் கவனமும் இதில்தான் இருக்கும் என்று நினைக்கிறேன், இது போன்/ற ஒன்று ஒரு போதும், இனி இந்த கிரேட் கேம் ஆஃப் கிரிக்கெட்டில் நடைபெறக் கூடாது.

கிரிக்கெட் அதற்குரிய தன்மைக்குத் திரும்ப நாம் அனைவரும் நிறைய பணியாற்ற வேண்டியுள்ளது. இதை ஒரு கெட்ட கனவாக நினைத்து மறப்போம் மன்னிப்போம்.”

http://tamil.thehindu.com/sports/article23356561.ece?homepage=true

  • தொடங்கியவர்

பந்தைச் சேதப்படுத்தும் வார்னரின் யோசனையை ஸ்மித் ஏற்றுக் கொண்டார்?- ஸ்டார்க், ஹேசில்வுட் ஆர்வம் காட்டவில்லை

 

 
warner-smith

ஸ்மித், வார்னர்.   -  படம். | ஏ.எஃப்.பி.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் பேங்க்ராப்ட் பந்தைச் சேதப்படுத்தியக் குற்றச்சாட்டில் ‘ஸ்மித் ஷேம்’ என்று ஆஸி ஊடகங்கள் கொந்தளிக்க தற்போது பந்தைச் சேதப்படுத்தும் யோசனைக்குச் சொந்தக்காரர் வார்னர் அதனை ஏற்றுக் கொண்டவர் ஸ்மித், பேங்க்ராப்ட் செயல்படுத்த ஒப்புக் கொண்டவர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

ஃபேர்பேக்ஸ் மீடியா தகவல்களின் படி, மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் இந்த ஒட்டுமொத்த விவகாரத்தில் ஈடுபாடு காட்டவில்லை.

மாறாக வார்னர் இந்த யோசனைக்குச் சொந்தக்காரர் என்றும் மேற்கு ஆஸ்திரேலியா அணியில் பந்தை பளபளப்பேற்றும் வேலையைச் செய்து வந்த கேமரூன் பேங்கிராப்ட் இதற்குப் பொருத்தமானவர் என்று முடிவெடுத்து அவரை பந்தைச் சேதம் செய்ய சம்மதிக்க வைக்கப்பட்டது என்றும், இதற்கு கேப்டன் ஸ்மித் தன் ஒப்புதலைத் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வார்னர்தான் பொதுவாக பந்தை பளபளப்பேற்றும் வேலையைச் செய்பவர், ஆனால் இப்போது அவர் ஸ்லிப்பில் நிற்பதால் அவரால் இதனைச் செய்ய முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் ஆஸ்திரேலிய அணியில் உள்ள கோடீஸ்வர வீரர்கள் அணி நிர்வாகத்தினரால் அதிகச் செல்லம் கொடுத்து இம்மாதிரி காரியங்களைச் செய்ய அனுமதிக்கின்றனர் என்றும் வெல்வதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யும் துணிவையும் அணி நிர்வாகம் வழங்குவதாகவும் இந்த ஊடகம் தெரிவிக்கிறது.

மேலும் ஆஸ்திரேலியாவில் பிரெண்டன் மெக்கல்லம் ஒரு ஆக்ரோஷ வீரர்தான் ஆனால் அவர் கேப்டனாக அணியை எப்படி சலனமின்றி நடத்திச் செல்ல முடிந்தது, அவரது பாணியைக் கடைபிடிக்க வேண்டுமென்று ஆஸ்திரேலியாவில் பலதரப்புகளிலிருந்தும் கருத்துகள் எழுந்து வருகின்றன, காரணம் 2015-ம் ஆண்டுக்கான ஐசிசி ஸ்பிரிட் ஆஃப் தி கிரிக்கெட் விருதை வென்றவர் பிரெண்டன் மெக்கல்லம்.

http://tamil.thehindu.com/sports/article23356277.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்
On 3/25/2018 at 5:57 PM, suvy said:

அவர் கிரிக்கட் பந்தை மட்டுமா சேதப் படுத்துகிறார்.......!  :unsure:  tw_blush:

அவருக்கு பந்தை சேதப்படுத்தத்தான் உத்தரவு ...அது தான் பந்துகள் இருக்குமிடமெல்லாம் சேதப்படுத்துகிறார் .....tw_blush:tw_blush:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
On 3/25/2018 at 5:57 PM, suvy said:

அவர் கிரிக்கட் பந்தை மட்டுமா சேதப் படுத்துகிறார்.......!  :unsure:  tw_blush:

வேற என்னத்தை கண்டியள் கைய ஓட்டி உள்ள உரசின பந்தைப்பார்க்கிறார் அவ்வளவுதான் இதில் ன்ன குற்றம் கண்டீர் சுவி அவர்களே?tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

வேற என்னத்தை கண்டியள் கைய ஓட்டி உள்ள உரசின பந்தைப்பார்க்கிறார் அவ்வளவுதான் இதில் ன்ன குற்றம் கண்டீர் சுவி அவர்களே?tw_blush:

நீங்கள் இன்னும் இன்னும் நிறைய வளரவேண்டும் தனி.... போன் எடுத்து அக்கினியஷ்திராவுக்கு போடுங்கள் ப்ளீஸ்.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

நீங்கள் இன்னும் இன்னும் நிறைய வளரவேண்டும் தனி.... போன் எடுத்து அக்கினியஷ்திராவுக்கு போடுங்கள் ப்ளீஸ்.....!  tw_blush:

பந்தை சேதப்படுத்திய துண்டை (மஞ்சள் ) நிறத்திலாம அதை உள்ளே மறைத்து வைக்க கைய விட்டிருக்கிறார் tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

Résultat de recherche d'images pour "vadivelu reaction"

  • தொடங்கியவர்

பாடாய்படுத்தும் ‘பால்டாம்பரிங்’: ஸ்டீவ் ஸ்மித்தை ‘அசிங்கப்படுத்திய’ ஆஸ்திரேலிய ஊடகங்கள்

 

 
shame

ஆஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்ட செய்தி   -  படம் உதவி: ட்விட்டர்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் செயலை அந்த நாட்டு ஊடகங்கள் தலைப்புச் செய்தியில் பிரசுரித்து அசிங்கப்பட்டுத்தியுள்ளன.

ஸ்டீவ் ஸ்மித் மட்டுமல்ல, இனிமேல் எந்த ஆஸ்திரேலிய வீரரும் இதுபோன்ற காரியத்தை செய்ய துணியக்கூடாத அளவுக்கு செய்திகளில் வசைபாடியுள்ளன.

ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் நடந்த ‘அசிங்கமான, கெட்டுப்போன கிரிக்கெட் கலாச்சாரம்’ என்று காரசாரமாக விமர்சனம் செய்துள்ளன.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியின் போது, ஆஸ்திரேலிய இளம் வீரர் கேமரூன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இது கேமிராவில் பதிவானது. இதையடுத்து பேட்டி அளித்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதற்காக திட்டமிட்டு பந்தை சேதப்படுத்தினோம் என்று ஒப்புக்கொண்டார்.

இதன் காரணமாக, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவி ஸ்டீவ் ஸ்மித்திடம் இருந்தும், துணைக் கேப்டன் பதவி டேவிட் வார்னரிடம் இருந்தும் பறிக்கப்பட்டது. இந்த போட்டியலும் ஆஸ்திரேலிய அணி தார்மீக ரீதியான நம்பிக்கையை இழந்ததால், படுதோல்வி அடைந்தது.

பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஊடகங்கள் மத்தியில் ஒப்புக்கொண்டபின், அவரை அந்நாட்டு ஊடகங்களும், முன்னாள் வீரர்களும் கடுமையாக வசைபாடினார்கள். அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவும், அணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யவும் வலியுறுத்தினார்கள். ஆனால், அவரிடம் இருந்து கேப்டன் பதவி மட்டும் பறிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் ஸ்மித்துக்கு அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடையும், போட்டி ஊதியத்தின் 100 சதவீதத்தை அபராதமாகவும் செலுத்த ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் நாளேடுகள் தலைப்புச்செய்தியாக ஸ்டீவ் ஸ்மித்தின் லீலைகளை குறிப்பிட்டு அசிங்கப்பட்டுதியுள்ளன.

ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாட்டு தேசிய விளையாட்டும் அதில், நடக்கும் தில்லுமுல்லு சம்பவங்களை அந்த நாட்டு ஊடங்கள் ஏற்றுக்கொள்ள முடியாமல் ஆதங்கத்தை கொட்டியுள்ளன.

steve%20smith-jpg

ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் படம்: ஏபி

 

தி ஆஸ்திரேலியன்

தி ஆஸ்திரேலியன் என்ற நாளேடு ‘ ஸ்மித்தின் அசிங்கங்கள்’ என்ற தலைப்பில் மிக மோசமாக வர்ணித்துள்ளது. ஸ்மித்தின் இந்த மோசடிச் செயல் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் கால் ஷூ முதல் தலையில் அணியும் ஹெல்மெட் வரை பாதித்துவிட்டது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைவர் ஜேம்ஸ் சதர்லாந்து 20 ஆண்டுகளாக அந்தபதவியில் இருந்தும், இதுபோன்ற கெட்டுப்போன கிரிக்கெட் கலாச்சாரத்தை ஒழிக்க அவரால் முடியவில்லை. சிறிய அளவில் மட்டுமே மாற்றம் கொம்டுவர முடிந்தது. இந்த அசிங்கமான செயலால், நாட்டுக்கு பெரிய அவமானமும், தலைகுணிவும் ஏற்பட்டுள்ளது.

இப்படிச் செய்வார்களா?

கிரிக்கெட் குறித்து எழுதிவரும் ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் பீட்டர் லாலர் குறிப்பிடுகையில், ஓய்வு அறையில் முதிர்ச்சி அடைந்த கிரிக்கெட் வீரர்கள் இருந்தார்களா அப்படி இருந்திருந்தால், இதுபோன்ற கேவலமான வேலைகளை செய்திருக்கமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

சிட்னி டெய்லி டெலிகிராப்

‘சிட்னி டெய்லி டெலிகிராப்’ நாளேட்டின் விளையாட்டு ஆசிரியர் ராபர்ட் கிராட்டாக் குறிப்பிடுகையில், ஸ்மித்தின் செயல் என்பது அந்த நேரத்தில் எடுத்த பைத்தியக்கார முடிவு அல்ல. திட்டமிட்டு எடுக்கப்பட்ட முட்டாள்தன முடிவு. வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஒழுக்க நெறிகளை மீறி நடந்த சம்பவத்தால், கிரிக்கெட் உலகத்தின் முன் ஆஸ்திரேலியா தலைகுணிந்து நிற்கிறது.

ஸ்டீவ் ஸ்மித்தின் மரியாதை மட்டுமல்ல ஆஸ்திரேலிய அணியின் கண்ணியம், மரியாதையும் ஒருபோதும் நீண்டகாலத்துக்கு மீளப்போவதில்லை எனத் தெரிவித்தள்ளார்.

சிட்னி ஹெரால்டு

‘சிட்னி ஹெரால்டு’ நாளேடு குறிப்பிடுகையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் சதிக்குள் விழுந்துவிட்டார். அந்த சதிக்குள் விழுந்ததற்கு தகுந்த விலையை இப்போது கொடுத்திருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு இந்த சுற்றுப்பயணம் மிகவும் மோசமானதாக அவப்பெயர் பெற்றுத்தரக்கூடியதாக அமைந்துள்ளது. ஒரு வீரரின் செயல்பாடு ஒட்டுமொத்த அணியின் மதிப்பையும் கெடுத்துவிட்டது. இதனால், ஆஸ்திரேலிய அணியின் மதிப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு தாழ்ந்துவிட்டது. இதை மீட்டெடுக்க நீண்ட காலம் தேவைப்படும் எனத் தெரிவித்துள்ளது.

http://tamil.thehindu.com/sports/article23353487.ece

 

 

‘ஏமாற்று’ வேலை விளையாட்டில் விளையாட்டாக மறைந்து விடாது: ஸ்மித் மீது பாயும் கோபக்கனைகள்

 

 
smith

தலைப்புச் செய்தியான ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்.   -  படம். | ஏ.எஃப்.பி.

பந்தை அத்துமீறி சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் முதல் ஆஸ்திரேலிய பொதுமக்கள் வரை அனைவரும் ஸ்மித் மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர். ஆஸ்திரேலிய ஊடகங்கள் அனைத்திலும் ஸ்மித் தலைப்புச் செய்தியாகி தலைப்புப் பக்கத்தை அலங்கரித்து வருகிறார்.

இந்நிலையில் ஸ்கை ஸ்போர்ட்ஸில் ‘யாரைக் குற்றம்சாட்டுவது?’ என்ற தலைப்பில் இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

ராபர்ட் கீ: ஸ்மித்தைத்தான் நான் குற்றம்சாட்டுவேன். அவர் எல்லாவற்றையும் பற்றி கருத்துக் கூறிக்கொண்டேயிருந்தார். கேகிசோ ரபாடா தடை நீக்கம் பற்றி கருத்து கூறினார். ஆண்டர்சன் ஸ்லெட்ஜிங், ஆஷஸ் தொடர், ஜானி பேர்ஸ்டோ, பேங்க்ராப்ட் தலைமுட்டிய கதை என்று அனைத்தைப் பற்றியும் கருத்துச் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் ஆடும் கிரிக்கெட்டோ படுமோசம்.

மாட்டிக் கொண்டதால் அவர் இன்று ஏதோ பரிதாபத்துக்குரியவராக பேசிக் கொண்டிருக்கிறார். அவர் தான் செய்ததற்காக வருத்தமடைபவர் போல் தெரியவில்லை. அனைத்தையும் மூடிமறைக்கவே அவர் முயல்கிறார்.

அவர் போயேத் தீர வேண்டும், பந்தைச் சேதப்படுத்தியதற்காக மட்டுமல்ல, கிரிக்கெட் மைதானத்தில் இவரது தலைமையில் ஆஸ்திரேலியர்கள் நடந்து கொள்ளும் அனைத்து துர்நடத்தைகளுக்கும் காரணம் இவரே. போதும், மாற்றம் தேவை.

மைக்கேல் ஹோல்டிங்:

தொலைக்காட்சி ரீப்ளேக்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்து விட்டேன். மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் தாங்கள் செய்ததை ஸ்மித்தும் பேங்கிராப்ட்டும் நியாயப்படுத்துவதையும் தாண்டி ஒட்டுமொத்த இழிவையும் எதுவுவே நடக்காதது போல் பேசியதுதான் அதிர்ச்சி ஏற்பட்டது, அதாவது அது சரிப்பட்டு வரவில்லை நடுவர்கள் பந்தை மாற்றவில்லை என்ற தொனியில் பேசினர். நான் ஒருவரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டேன் ஆனால் அது இலக்கைத் தவறவிட்டது அதனால் அது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்ற தொனியில் இருவரும் பேசினர்.

இருவரும் உட்கார்ந்து இப்படிச்செய்ய எப்படித் திட்டமிட்டனர் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. ஏமாற்றத் திட்டமிட்டனர்.

பாப் வில்லிஸ்: சல்மான் பட் திட்டத்தில் மொகமது ஆமிர் சிக்கியது போல் ஸ்மித் திட்டத்தில் அனுபவமற்ற பேங்கிராப்ட் சிக்கியுள்ளார். ஸ்மித்தின் காலம் முடிவுக்கு வருகிறது என்றே கருதுகிறேன்.

ஜேஸன் கில்லஸ்பி:

செய்தியாளர்கள் சந்திப்பில் ஸ்மித் பேசியது சூழலின் சூட்டை உணராதது போல் தெரிந்தது. முன் கூட்டியே திட்டமிட்டு ஏமாற்றுவதை ஒப்புக் கொண்டது போல் பேசினார்.

அதிர்ச்சிகரமானது, வருந்தத்தக்கது, ஏமாற்றளிப்பது, ஸ்மித் தொடர்ந்து கேப்டனாக நீடிக்க முடியாது.

இத்தகைய பேரிழிவிலிருந்து ஆஸ்திரேலியா மீண்டு விடும் ஆனால் இதற்கு நிச்சயம் காலமெடுக்கும். இந்தப் புண்கள் ஆற நீண்ட காலமாகும். ஆஸ்திரேலிய அணி தங்கள் நடத்தைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய காலக்கட்டம் வந்து விட்டது, சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

மைக் ஆத்தர்டன்:

நான் ஆஸ்திரேலியர்கள் சிலரிடம் பேசினேன், அவர்கள் கூறும்போது இந்த அளவுக்கு யார் மீதும் அவர்களுக்குக் கோபம் ஏற்பட்டதில்லை என்றனர். ஸ்மித் மீது மட்டுமல்ல ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மீதே கோபம் கொப்பளிக்கிறது.

ஸ்மித்துக்கு ஆதரவு இல்லை, அவர் கேப்டன் பொறுப்பிலிருந்து நிரந்தரமாக விலக வேண்டும்.

டோமினிக் கார்க்: இவ்வளவு நடந்த பிறகும் தானே இன்னும் வழிநடத்த சரியான நபர் என்று கூறியபோதே அவரை வீட்டுக்கு அனுப்பியிருக்க வேண்டும். அவர் நேர்மையாளராக இருந்தால் செய்தியாளர்கள் சந்திப்பில் ‘நானே காரணம், நான் விலகுகிறேன்’ என்று கூறியிருக்க வேண்டும். ஏமாற்றியதாக ஒப்புக் கொண்ட பிறகு விளையாட்டில் அது விளையாட்டாக மறைந்து விடாது.

ஸ்மித் கூறுவதை எல்லாம் கேட்க வேண்டும் என்று அவசியமில்லை, பேங்கிராப்ட் மறுத்திருக்கலாம். அவருக்காக வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை.

http://tamil.thehindu.com/sports/article23355744.ece

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த பிளேனிலை....எல்லாரையும் ஏத்தி அனுப்பியிருந்தால்...பிரச்சனை எப்போதோ..முடிவுக்கு வந்திருக்கும்!

என்றைக்கு....கிரிக்கெட்...உலகில் பணம் புரளத் தொடங்கியதோ...அன்றைக்கே..இப்படியான பிரச்சனைகளும் ஆரம்பித்து விட்டன!

சின்ன வயசு.....பெரிய அளவு...காசு!

அது தான் பிரச்சனை!

எல்லாரையும் வீட்டுக்கு ...அனுப்பிறது தான் சரியான வழி!

 

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

தற்போது வந்த செய்திகளின்படி பந்தைசேதப்படுத்திய விவகாரத்தில்  ஸ்டீவ் ஸ்மித்தும், டேவிட் வார்னரும், கேமரூன் பேன்கிராப்ட் தென்ஆப்ரிக்காவில் இருந்து நாடு திரும்புகிறார்கள்

http://www.espncricinfo.com/

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, நவீனன் said:

தற்போது வந்த செய்திகளின்படி பந்தைசேதப்படுத்திய விவகாரத்தில்  ஸ்டீவ் ஸ்மித்தும், டேவிட் வார்னரும், கேமரூன் பேன்கிராப்ட் தென்ஆப்ரிக்காவில் இருந்து நாடு திரும்புகிறார்கள்

விமானநிலையத்தில் நல்ல வரவேற்பாக இருக்கும் என எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நவீனன் said:

ஸ்டீவ் ஸ்மித்தின் மரியாதை மட்டுமல்ல ஆஸ்திரேலிய அணியின் கண்ணியம், மரியாதையும் ஒருபோதும் நீண்டகாலத்துக்கு மீளப்போவதில்லை எனத் தெரிவித்தள்ளார்.

இது தான் நிதர்சனம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நவீனன் said:

 

அவசர முடிவுகள் வேணாம்:grin:

  • தொடங்கியவர்

தென்னாப்பிரிக்கா தொடரில் இருந்து ஸ்மித், வார்னர், மற்றும் பான்கிராப்ட் அதிரடி நீக்கம்!

 
 

பந்து சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய வீரர்கள் தடை தொடர்பாக அடுத்த 24 மணி நேரத்துக்குள் தெரிவிக்கப்படலாம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்க தலைவர் ஜேம்ஸ் சதர்லாண்ட் தெரிவித்துள்ளார். 

ஜேம்ஸ் சதர்லாண்ட்

 

Picture: TWITTER ICC

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான 4 போட்டிகளைக் கொண்டடெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் பந்தை சேதப்படுத்திய விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தப்  சம்பவத்தால், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். 

இந்த விவகாரத்தில் கேப்டன் ஸ்மித் க்கு ஆயுள் கால தடை விதிக்க வேண்டும் எனப் பலர் கோரிக்க விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக இன்று ஜேகன்ஸ்பர்க் -ல் செய்தியாளர்களைச் சந்தித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்க தலைவர் ஜேம்ஸ் சதர்லாண்ட், விளக்கம் அளித்தார். ”ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் வார்னர் மற்றும் பான்கிராப்ட் ஆகியோர் உடனடியாக தென்னாப்பிரிக்காவில் இருந்து நாடு திரும்ப உள்ளனர். பந்து சேதப்படுத்துவது குறித்து முன்னரே அவர்கள் தெரிந்திருந்தனர். மற்ற வீரர்கள் இதுகுறித்து தெரிந்திருக்க வில்லை.  

 

இந்த மூன்று வீரர்களுக்குப் பதிலாக மேத்திவ் ரென்ஷா, ஜோ பர்ன்ஸ் மற்றும் மேக்ஸ்வெல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பர் டிம் பெயின் கேப்டனாக செயல்படுவார். பயிற்சியாளர் லேமேன் தொடர்ந்து தனது பதவியில் செயல்படுவார். வீரர்கள் தடை தொடர்பாக அடுத்த 24 மணி நேரத்துக்குள் தெரிவிக்கும் நிலையில் இருக்கிறோம்” என்றார். 

https://www.vikatan.com/news/sports/120411-in-ball-tampering-issue-cricket-australia-ceo-talks-to-media.html

  • தொடங்கியவர்

‘லீ மேனுக்குத் தெரியாதாம்’: கிரிக்கெட் ஆஸ்திரேலியா மீது கிரிக்கெட் உலகம் எள்ளி நகையாடல்

 

 
lehman

பயிற்சியாளர் டேரன் லீ மேன் தப்பினார்.   -  படம். | ஏ.எஃப்.பி.

பந்தைச் சேதப்படுத்தி ஏமாற்றிய ஸ்மித், வார்னர், பேங்க்ராப்ட் விவகாரம் குறித்து பயிற்சியாளர் டேரன் லீ மேனுக்கு முன் கூட்டியே தெரியவில்லை எனவே அவர் பயிற்சியாளராகத் தொடர்கிறார் என்று ஜேம்ஸ் சதர்லேண்ட் அறிவித்ததையடுத்து கிரிக்கெட் உலகம் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவை எள்ளி நகையாடத் தொடங்கியுள்ளது.

ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பேங்க்ராப்ட் ஆகியோர் தென் ஆப்பிரிக்காவிலிருந்து நாடு திரும்ப டிம் பெய்ன் கேப்டனான ஆஸ்திரேலிய அணிக்குத் தொடர்ந்து லீமேன் பயிற்சியாளராக நீடிப்பார் என்று சதர்லேண்ட் அறிவித்தார்:

“தவறான செய்திகளுக்கு மாறாக டேரன் லீ மேன் ராஜினாமா செய்யவில்லை, அவருக்கு இந்த விஷயன் முன் கூட்டியே தெரியவில்லை. மேலும் ஸ்மித், பேங்க்ராப்ட், வார்னர் நீங்கலால அணியில் மற்றவர்களுக்கு பால் டேம்பரிங் பற்றி முன் கூட்டியே தெரியாது.

ஸ்மித், பேங்க்ராப்ட், வார்னர் ஆஸ்திரேலியா திரும்புகின்றனர், ரென்ஷா, மேக்ஸ்வெல், பர்ன்ஸ் ஆகியோர் தென் ஆப்பிரிக்கா வருகின்றனர், இந்த விவகாரம் குறித்து குறிப்பிடத்தகுந்த தண்டனை அளிக்க பரிசீலித்து வருகிறோம்” என்று சதர்லேண்ட் கூறினார்.

ஆனால் டேரன் லீ மேனுக்குத் தெரியாது என்று கூறியது கிரிக்கெட் உலகில் கடும் கேலிக்கு கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது.

கெவின் பீட்டர்சன், தன் ட்விட்டரில் “லீமேனுக்கு தெரியவே தெரியாதாம்” என்று வாசகமிட்டு நூற்றுக்கணக்கான ஸ்மைலிகளைப் போட்டு கடுமையாகக் கிண்டல் செய்துள்ளார்.

மேட் பிரையர் (இங்கி. முன்னாள் கீப்பர்): 3 வீரர்களுக்கு மட்டும்தான் சதி வேலை தெரியும் என்பதை நம்பமுடியவில்லை. பவுலர்கள், பவுலிங் கோச், ஆகியோர் ஏற்கெனவே விவாதித்து பந்தை எப்படி ஸ்விங் செய்வது? ஏமாற்று வேலை மூலமா அல்லது இல்லையா என்பதை விவாதிக்கவில்லையா? என்று தன் ட்விட்டரில் கேலி செய்துள்ளார்.

இன்னொரு ட்விட்டர் வாசி லீ மேன் டிரைவர்தான் பந்தைச் சேதப்படுத்தினார் என்று கடுமையாகக் கேலி செய்துள்ளார்.

மொகமது கயீஃப் மேலும் கடுமையாகக் கிண்டல் செய்து, “டேரன் லீ மேனுக்கு எதைப்பற்றியுமே முன் கூட்டியே தெரியவில்லை என்பது போல்தான் தெரிகிறார்” என்று கிண்டலடித்துள்ளார்.

ஆகாஷ் சோப்ரா: கடுமையான தண்டனைகள் காத்திருக்கின்றன, பொறுத்திருப்போம். இன்னும் 24 மணி நேரம். டேரன் லீ மேன் இதில் இல்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. மேலும் அணியில் ஒருவருக்குமே தெரியாது என்பது மேலும் ஆச்சரியமாக உள்ளது.

மைக்கேல் கிளார்க்: உண்மை, என்ன நடந்தது என்பதை முழுமையாக மக்கள் அறியவேண்டும், பொறுப்புடைமை, தலைமைத்துவம் - மக்கள் முழுமையாக அறியாதவரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் ‘இன் டீப் ஷிட்’

ஆஸ்திரேலியா வானொலி நிலையத்தின் மூத்த வர்ணனையாளர் ஜிம் மேக்ஸ்வெல், திமிர் பிடித்த கிரிக்கெட் பண்பாட்டை வளர்த்ததற்கு லீ மேன் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். இதனால்தான் கவுரவமாகத் தோற்பதை விட மோசடி செய்து வெற்றி பெறுவது மேல் என்ற எண்ணம் வளர்ந்துள்ளது என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

 

 

http://tamil.thehindu.com/sports/article23370527.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.