Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜனின் பெயர் பரிந்துரை

Featured Replies

பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜனின் பெயர் பரிந்துரை

 

angajan-ramanathan-300x200.jpgசிறிலங்கா நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் பதவிக்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் பெயர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று நடந்த கட்சித் தலைவர்களின். கூட்டத்தில், சபாநாயகர் கரு ஜெயசூரிய இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

பிரதி சபாநாயகராக இருந்த திலங்க சுமதிபால, அந்தப் பதவியை விட்டு விலகி, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டதை அடுத்து, பிரதி சபாநாயகர் பதவி வெற்றிடமாக இருந்து வந்தது.

இந்த நிலையிலேயே, அங்கஜன் இராமநாதனின் பெயரை சிறிலங்கா அதிபர் பரிந்துரைத்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/05/22/news/31014

  • தொடங்கியவர்

அங்கஜனுக்கு பிரதி சபாநாயகர் பதவி – கூட்டமைப்பு எதிர்ப்பு

 

 

sumanthiran-300x199.jpgபிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் இராமநாதன் நிறுத்தப்பட்டால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவரை ஆதரிக்காது என்று கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் இராமநாதனை முன்னிறுத்துவதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், சிறிலங்கா சுதந்திரக் கட்சி பரிந்துரைத்துள்ளதாக, அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

கட்சியின் தலைவர் என்ற வகையில் இந்த நியமனத்துக்கு, மைத்திரிபால சிறிசேனவின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

எனினும், அங்கஜன் இராமநாதனை பிரதி சபாநாயகராக நியமிப்பதற்கு இந்தக் கூட்டத்தில் எதிர்ப்பு வெளியிட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அவரை கூட்டமைப்பு ஆதரிக்காது என்று கூறினார் என்று  அரசியல் வட்டாரங்களை மேற்கொள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அங்கஜன் இராமநாதன், பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டால், 48 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்தப் பதவியைப் பெற்ற தமிழர் என்ற பெருமையைப் பெறுவார்.

இதற்கு முன்னர், 1968ஆம் ஆண்டு தொடக்கம், 1970ஆம் ஆண்டு வரை ஏ.சிதம்பரம் பிரதி சபாநாயகராகப் பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2018/05/23/news/31022

மீண்டும் நீங்கள் ஒரு தமிழன் என்பதை நிரூபித்துவிட்டீர்கள் திரு. சுமந்திரன்.

அப்படியே நீங்கள் ஆதரவு தெரிவிக்காமைக்கான நியாயமான காரணத்தையும் சொன்னீர்கள் என்றால் தமிழர்களாகிய நாங்கள் பெருமையடைவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பகலவன் said:

மீண்டும் நீங்கள் ஒரு தமிழன் என்பதை நிரூபித்துவிட்டீர்கள் திரு. சுமந்திரன்.

அப்படியே நீங்கள் ஆதரவு தெரிவிக்காமைக்கான நியாயமான காரணத்தையும் சொன்னீர்கள் என்றால் தமிழர்களாகிய நாங்கள் பெருமையடைவோம்.

அதை மட்டும் நாங்கள் சொல்ல மாட்டம். அறிக்கை மட்டும்தான் விடுவம் .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பகலவன் said:

மீண்டும் நீங்கள் ஒரு தமிழன் என்பதை நிரூபித்துவிட்டீர்கள் திரு. சுமந்திரன்.

அப்படியே நீங்கள் ஆதரவு தெரிவிக்காமைக்கான நியாயமான காரணத்தையும் சொன்னீர்கள் என்றால் தமிழர்களாகிய நாங்கள் பெருமையடைவோம்.

அரசுடன் அங்கஜன் அதிக நெருக்கமாகிவிடுவார் என்ற நல்லெண்ணம் தான்....

  • கருத்துக்கள உறவுகள்

அரசுடன் இணைந்து பல தமிழ்மக்களையும், போராட்ட வீரர்களையும் காவு கொண்டு போராட்டத்தையும் நலிவடையச் செய்த டக்ளசு தேவானந்தாவுடன் இணய முடிந்த, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் ஏன் அங்கஐனுடன் இணைய முடியவில்லை...? 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியுடன் இணைந்திருந்தாலும், டக்ளசு தேவானந்தாபோல் அங்கஐன் தமிழர்களைக் காவுகொண்டதாகத் தெரியவில்லை. இவருக்கு அங்கஐன்மேல் ஏன் இத்தனை கடுப்பு. ஏதாவது உள்வீட்டுப் பிரச்சனையோ....??  
 

  • தொடங்கியவர்

அங்கஜன் பிரதி சபாநாயகரானால், தமிழ்க் தேசிய கூட்டமைப்பு எதிர்க்குமா?

Angayan.jpg?resize=789%2C576

இலங்கையின் பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் இராமநாதன் நிறுத்தப்பட்டால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அவரை ஆதரிக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

 

நடைபெற்று முடிந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் இராமநாதனை முன்னிறுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், சிறிலங்காசுதந்திரக்கட்சி பரிந்துரைத்துள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்திருந்தார். இது குறித்து ஏற்கனவே ஊடகங்களிலிமு் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இது குறித்து கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிதுரு ஹெலஉறுமயவின் தலைவருமான உதய கம்மன்பிலவும் இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் கூட்டு எதிர்க்கட்சி சிந்திப்பதாகவும் அங்கஜன் இராமநாதனை நியமிப்பதில் தமக்கு ஆட்சேபனை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அங்கஜன் இராமநாதனை பிரதி சபாநாயகராக நியமிப்பதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் எதிர்ப்பு வெளியிட்டதாகவும், தமிழத்தேசிய கூட்டமைப்பு ஆதரிக்காது என தெரிவித்ததாகவும் கொழும்பு ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்போ, எம்.ஏ சுமந்திரனோ இது குறித்து தமிழ் மற்றும் இலங்கையின் பிரதான ஊடகங்களில் உத்தியோகபூர்வ கருத்துக்களை வெளியிடவில்லை.

இதேவேளை அங்கஜன் இராமநாதனுக்கு பிரதி சபாநாயகர் பதவி கிடைக்குமாயின் 48 ஆண்டுகளுக்கு பின் தமிழர் ஒருவருக்கு இந்தப் பதவி மீண்டும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2018/80509/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.