Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பொறியியல் பீட மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர்

Featured Replies

யாழ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பொறியியல் பீட மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர்

 

 

DSC_0006.jpg?resize=800%2C531
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முதலாவது பொறியியல் பீட மாணவர்கள் நாளை வெள்ளிக்கிழமை (08-06-2018) பட்டம் பெற்று வெளியேறுகின்றனர். யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி அறிவியல்நகரில் அமைந்துள்ள பொறியியல் பீடத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரம் சித்தியடைந்த மாணவர்கள் 2014 ஆம் ஆண்டு பல்கலைகழகத்திற்குள் உள்வாங்கப்பட்டு 2017 ஒக்ரோபர் முழுமையான கற்கைநெறியினை முடித்திருந்தனர். இவர்களுக்கான பட்டமளிப்பு நாளை வெள்ளிக்கிழமை யாழ் பல்கலைகழகத்தில் இடம்பெறுகிறது.

 

39 மாணவர்கள் உள்வாங்கப்பட்டு அதில் 31 கல்வியை பூர்த்தி செய்து நாளை பொறியியல் விஞ்ஞானமானி பட்டத்தை பெறுகின்றனர்.

1979 ஆம் ஆண்டு மறைந்த பேராசிரியர் அ.துரைராஜா அவர்கள் யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் பொறியியல் பீடத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து வந்தார். பின்னர் 1988 ஆம் ஆண்டு பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு யாழ் பல்கலைகழகத்தில் பொறியியல் பீடம் அமைப்பதற்கான அனுமதியை வழங்கியது. இருந்த போதும் நாட்டில் ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக அது நிறைவேறவில்லை.

இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு கொக்காவில் தொலைத் தொடர்பு கோபுரம் திறப்பு விழாவுக்கு வருகைதந்திருந்த அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் அப்போது அமை்சசராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவும், பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சந்திரகுமாரும் கிளிநொச்சி அறிவியல்நகர் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் பல்கலைகழகத்தை பரிந்துரைத்திருந்தனர்.

இவர்களுடன் அப்போது பல்கலைகழக துணைவேந்தராக இருந்த வச்தி அரசரட்ணம் மற்றும் பேராசிரியர் கந்தசாமி, தற்போதைய பீடாதிபதி அற்புதராஜா உள்ளிட்ட பலர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்

இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பயனாக அமைச்சரவை அனுமதியும் கிடைக்கப்பெற்று 2014 இல் மாணவர்கள் உள்வாங்கப்பட்டு கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படடு நாளை வெள்ளிக்கிழமை யாழ் பல்கலைகழகத்தின் முதலாவது பொறியியலாளர்களாக வெளியேறுகின்றனர்

IMG_9771.jpg?resize=800%2C533IMG_9780.jpg?resize=800%2C533

DSC_0014.jpg?resize=800%2C531

http://globaltamilnews.net/2018/82742/

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணப் பல்­க­லை­யி­லி­ருந்து முதல் தட­வை­யாக 33 பொறி­யி­ய­லா­ளர்­கள் – இன்று பட்­ட­ம­ளிப்பு!!

 

 

Capture-115.jpg

 
 

யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் கிளி­நொச்சி வளா­கத்­தி­லுள்ள பொறி­யி­யற் பீடத்­தி­லி­ருந்து உரு­வா­கிய முதல் தொகு­திப் பொறி­யி­ய­லா­ளர்­கள் இன்று பட்­டம் பெற்று வெளி­யே­ற­வி­ருக்­கின்­ற­னர். இன்று, வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற­வுள்ள யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் 33 ஆவது பொதுப்­பட்­ட­ம­ளிப்பு இன்று இடம்­பெ­று­கி­றது.

யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக பொறி­யி­யற் பீடத்­தில் கற்­றுத் தேர்ந்த 33 பேர் பொறி­யி­யல் விஞ்­ஞா­ன­மா­ணிப் பட்­டம் பெற்று பொறி­யி­ய­லா­ளர்­க­ளாக இன்று வெளி­யே­ற­வி­ருக்­கின்­ற­னர்.
இது வரை கால­மும் யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து பொறி­யி­யல் பீடத்­துக்­குத் தெரிவு செய்­யப்­ப­டும் மாண­வர்­கள் பேரா­தனை, மொரட்­டுவ,சிறி ஜெய­வர்த்­த­ன­புர, ருகுண பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கே சென்று கற்­றலை மேற்­கொண்டு பட்­டம் பெற்று வந்­த­னர்.

இந்­த­முறை முதன் முத­லாக நாட்­டின் பல பாகங்­க­ளில் இருந்­தும் தெரிவு செய்­யப்­பட்ட மாண­வர்­கள் தமிழ் மண்­ணி­லி­ருந்து பொறி­யி­ய­லா­ளர்­க­ளாக வெளி­வ­ர­வி­ருக்­கின்­ற­னர்.

 

பொறி­யி­யல் துறை­யில் உல­கம் போற்­றும் :”துரை விதியை” அறி­மு­கப்­ப­டுத்­திய மாம­னி­தர் பேரா­சி­ரி­யர் அ. துரை­ராஜா அவர்­க­ளின் கனவு இப்­போது நன­வா­கி­யி­ருக்­கின்­றது. பேரா­தனை பல்­க­லைக்­க­ழக பொறி­யி­யல் பீடத்­தில் இருந்து யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு வந்­த­போது யாழ்ப்­பா­ணத்­தில் பொறி­யி­யல் பீட­மொன்றை நிறுவ வேண்­டும் என்ற கன­வோடு செய­லாற்­றி­ய­வர் மாம­னி­தர் பேரா­சி­ரி­யர் அ. துரை­ராஜா. அவ­ரது கனவு கிட்­டத்­தட்ட 30 வரு­டங்­க­ளுக்­குப் பிறகு கைகூ­டி­யி­ருக்­கின்­றது.

யாழ்ப்­பாண பல்­க­லைக் கழ­கத்­தில் பொறி­யி­யல் பீடத்தை அமைப்­ப­தற்­கான முயற்சி முதன்­மு­த­லாக 1979 இல் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. அந்த ஆண்டு பல்­க­லைக்­க­ழக மூத­வை­யில் சமர்ப்­பிக்­கப்­பட்ட திட்ட முன்­மொ­ழிவு, மூத­வை­யி­லும், பல்­க­லைக்­க­ழ­கப் பேர­வை­யி­லும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு அதற்­கான சாத்­தி­யப்­பா­டு­களை ஆராய்­வ­தற்­கெ­னக் குழு ஒன்று அமைக்­கப்­பட்­டி­ருந்­தது.

அந்­தக் குழு­வின் பரிந்­து­ரை­களை ஏற்­றுக் கொண்ட பல்­க­லைக்­க­ழக மானி­யங்­கள் ஆணைக்­குழு 1988 ஆம் ஆண்டு யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழ­கத்­தில் பொறி­யி­யல் பீட­மொன்றை கிளி­நொச்­சி­யில் நிறு­வு­வ­தற்கு அனு­மதி வழங்­கி­ய­து­டன், 1991/1992 கல்வி ஆண்­டில் பொறி­யி­யல் பீடத்­துக்கு மாண­வர்­களை அனு­ம­திப்­ப­தற்­கும் தீர்­மா­னித்­தி­ருந்­தது.

நாட்­டில் நில­விய சூழ்­நி­லை­க­ளால் அந்த முயற்சி கைகூ­ட­வில்லை. அதன் பின்­னர் பல தட­வை­கள் பொறி­யி­யல் பீடத்தை யாழ்ப்­பா­ணத்­தில் அமைப்­ப­தற்­கான முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்­ட ­போ­தி­லும் அவை காலந்­தாழ்த்­தப்­பட்டு வந்­தன.

2010 ஆம் ஆண்டு பல்­க­லைக்­க­ழ­கத்­தின் பேரவை, யாழ்ப்­பா­ணத்­தைச் சேர்ந்த புல­மை­யா­ளர்­கள், புலம்­பெ­யர் கல்­வி­யி­ய­லா­ளர்­க­ளின் வேண்­டு­கோ­ளின் பல­னாக யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் மூத­வை­யில் 2010 ஒக்­ரோ­பர் 29 ஆம் திகதி யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக பொறி­யி­யல் பீடத்­தைக் கிளி­நொச்­சி­யில் அமைப்­பது தொடர்­பில் ஆராய்­வ­தற்­கென பேரா­சி­ரி­யர் க.கந்­த­சாமி தலை­மை­யில் குழு ஒன்று அமைக்­கப்­பட்­டி­ருந்­தது.

அந்­தக் குழு, முன்­னைய குழுக்­க­ளின் பரிந்­து­ரை­க­ளை­யும் சேர்த்து யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழ­கத்­தின் பொறி­யி­யல் பீடத்­தைக் கிளி­நொச்­சி­யில் அமைப்­ப­தற்­கும், முதற்­கட்­ட­மாக குடி­சார் பொறி­யி­யல், இலத்­தி­ர­னி­யல் பொறி­யி­யல், கணி­னிப் பொறி­யி­யல் துறை­களை ஆரம்­பிப்­ப­தற்­கும் நிரந்­தர கட்­ட­டங்­கள் அமைக்­கப்­ப­டும்­வரை பொறி­யி­யல் பீடத்­தைக் கிளி­நொச்சி அறி­வி­யல் நக­ரில் அமைந்­துள்ள விவ­சாய பீடத்­து­டன் அமைப்­ப­தற்­கும் 2011 மார்ச் 29 ஆம் திகதி மூத­வைக்­குப் பரிந்­துரை செய்­தது. அது பல்­க­லைக்­க­ழக மானி­யங்­கள் ஆணைக்­கு­ழு­வுக்­கூ­டாக உயர் கல்வி அமைச்­சுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டது.

அதற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­க­ரித்து முத­லா­வது தொகு­தி­யில் 47 மாண­வர்­கள் உள்­வாங்­கப்­பட்­ட­னர். முத­லா­வது பீடா­தி­ப­தி­யாக பேரா­தனை பல்­க­லைக் கழ­கத்­தில் இருந்து பேரா­சி­ரி­யர் அ.அற்­பு­த­ராஜா பதி­வி­யேற்­றார்.

ஆரம்­பத்­தில் விவ­சாய பீடத்­தோடு இணைந்­த­தாக பொறி­யி­யல் பீடத்­தின் நட­வ­டிக்­கை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்­தா­லும், இலங்கை மற்­றும் இந்­திய அர­சு­க­ளின் நிதி­யு­த­வி­க­ளோடு துரி­த­மா­கப் பௌதிக அபி­வி­ருத்­தி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு முழுக் கட்­ட­மைப்­பு­டைய ஒரு பொறி­யி­யல் பீட­மாக யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக பொறி­யி­யல் பீடம் நிமிர்ந்து நிற்­கி­றது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

http://newuthayan.com/story/09/யாழ்ப்பாணப்-பல்­க­லை­யி­லி­ருந்து-முதல்-தட­வை­யாக-33-பொறி­யி­ய­லா­ளர்­கள்-இன்று-பட்­ட­ம­ளிப்பு.html

Edited by நவீனன்

பட்டம்பெற்று வெளியேறும் பொறியிலாளர்களுக்கு வாழ்த்துக்கள்.

இந்த பொறியியல் பீடம் இலங்கையில் இருக்கும் மற்றைய பொறியியல் பீடங்களுக்கு இணையாக பௌதிகவளங்களில் மேம்படவும், பட்டதாரிகள் மேற்படிப்பை மேலை நாடுகளில் தொடரகூடிய சந்தர்ப்பங்களை, அறிவுரைகளை வழங்கவும் புலம்பெயர் புத்திஜீவிகள் களம் அமைத்துகொடுக்கவேண்டும் என்பதே எனது அவா.

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்

பட்டம் பெற்றவுடன் எத்தனைபேர் பறக்க போகிறார்கள் என்று நினைக்கும் போதும் கவலையாத்தான் இருக்கு ( இலங்கையில் வேலை கிடைப்பது கஸ்ரம் )

  • தொடங்கியவர்

யாழ்.பல்கலைக்கழக 33ஆவது பொது பட்டமளிப்பு

 

 

IMG_5850.jpg?resize=720%2C480

 

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 33ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

07 அமர்வுகளாக நடைபெறுகின்ற இந்த பட்டமளிப்பு விழாவில் கலை, மருத்துவ, விஞ்ஞான, பொறியியல் மற்றும் பட்டப்பின் கற்கைகள் பீடங்களைச் சேர்ந்த ஆயிரத்து 223 உள்வாரி பட்டதாரிகளும், 43 டிப்ளோமா தாரிகளும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதோடு, யாழ். பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தைச் சேர்ந்த 440 வெளிவாரிபட்டதாரிகளின் பட்டங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இம்முறை, இருவர் கலாநிதிப் பட்டங்களையும், 07 பேர் முதுமெய்யியல்மாணி பட்டங்களையும் , வவுனியா வளாகத்தைச் சேர்ந்த 170 பேர் முதுகல்விமாணி பட்டங்களையும் , 07 போர் சுகாதார முகாமைத்துவத்தில் தகைமைச் சான்றிதழ்களையும், 21 பேர் சைவ சித்தாந்தத்தில் முதுமாணி பட்டங்களையும் , 11 பேர் முதுவியாபாரமாணி பட்டங்களையும் , 04 பேர் முகாமைத்துவத்தில் பட்டப்பின் தகைமைச் சான்றிதழ்களையும், 95 பேர் மருத்துவமாணி சத்திரசிகிச்சைமாணி பட்டங்களையும் , ஒருவர் மருத்துவ விஞ்ஞானமாணி பட்டத்தையும், 31 பேர் பொறியியல் விஞ்ஞானமாணி பட்டங்களையும் , 78 பேர் விஞ்ஞானமானி சிறப்பு மற்றும் 79 பேர் விஞ்ஞானமாணி பொதுப் பட்டங்களையும், 16 பேர் கணினி விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டங்களையும், 08 பேர் பிரயோக விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டங்களையும், 07 பேர் விவசாய விஞ்ஞானமாணி பட்டங்களையும், 146 பேர் நுண்கலைமாணி ( கா்நாடக சங்கீதம், நடனம், சித்திரமும் வடிவமைப்பு) பட்டங்களையும், 459 பேர் சிறப்பு கலைமாணி, மற்றும் 81 பேர் பொதுக் கலைமாணிப் பட்டங்களையும் பெறவிருப்பதோடு, 05 பேர் விஞ்ஞானத்தில் தகைமைச் சான்றிதழ்களையும், 09 பேர் இதழியலில் தகைமைச் சான்றிதழ்களையும், 16 பேர் சந்தைப்படுத்தல் முகாமைத்துவத்தில் தகைமைச் சான்றிதழ்களையும், 13 பேர் மனிதவள முகாமைத்துவத்தில் தகைமைச் சான்றிதழ்களையும் பெற்றுள்ளனர்

வெளிவாரியாகப் பட்டங்களைப் பெறுகின்ற 374 கலைமாணிப் பட்டதாரிகளினதும், ஒரு இசைமாணிப் பட்டதாரியினதும், 03 நடனமாணி பட்டதாரிகளினதும் 37 வணிகமாணி, 25 வியாபார முகாமைத்துவமாணி பட்டதாரிகளினதும் பட்டங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

மொத்தமாக இம்முறை ஆயிரத்து 706 பட்டங்கள் வழங்கப்படவிருப்பதோடு, சகல கற்கை நெறிகளுக்குமாக 34 தங்கப் பதக்கங்களும், 48 பரிசில்கள் மற்றும் புலமைப்பரிசில்களும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

IMG_5839.jpg?resize=720%2C480IMG_5840.jpg?resize=720%2C480IMG_5841.jpg?resize=720%2C480IMG_5842.jpg?resize=720%2C480IMG_5843.jpg?resize=720%2C366IMG_5844.jpg?resize=720%2C480IMG_5845.jpg?resize=720%2C480IMG_5846.jpg?resize=720%2C480IMG_5847.jpg?resize=720%2C480IMG_5848.jpg?resize=720%2C480IMG_5849.jpg?resize=720%2C480

IMG_5838.jpg?resize=720%2C480

http://globaltamilnews.net/2018/82800/

  • கருத்துக்கள உறவுகள்

கண்டி நடனம் இல்லியா

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நந்தன் said:

கண்டி நடனம் இல்லியா

ம்கும் எதிர்பார்த்தியள் போல

இருக்கு அதில என்னத்தையா ரசிப்பீர் நீர் ?  :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ம்கும் எதிர்பார்த்தியள் போல

இருக்கு அதில என்னத்தையா ரசிப்பீர் நீர் ?  :unsure:

ஆட்டங்கலை ரசிக்கலாம் ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.