Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூநகரியில் 1000 மெகாவாட் கூட்டு மின் உற்பத்தித் திட்டம்

Featured Replies

பூநகரியில் 1000 மெகாவாட் கூட்டு மின் உற்பத்தித் திட்டம்

wind-turbines-300x200.jpgபூநகரிப் பகுதியில் 1000 மெகாவாட் திறன் உற்பத்தித் கொண்ட, காற்றாலை மற்றும் சூரிய சக்தி  கூட்டு மின் திட்டத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, சிறிலங்காவின்  சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி இராஜாங்க அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,

“இந்தத் திட்டத்துக்கான காணிகளை அளவீடு செய்யும் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.

இந்தத் திட்டத்தை செயற்படுத்துவதற்கான சட்டரீதியான தேவைகளை நிறைவேற்றும் பணிகளில் இப்போது ஈடுபட்டுள்ளோம்.

திட்டத்துக்கான முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு போட்டி ஏலம் விடும் முறையை கையாளுவோம்.

அதேவேளை, 100 மெகாவாட் திறன் கொண்ட இன்னொரு காற்றாலை மற்றும்  150 மெகாவாட் திறனுள்ள சூரிய சக்தி மின்திட்டங்கள் இன்னும் இரண்டு மாதங்களில் உருவாக்கப்படும்.

இதில் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முடியும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/06/08/news/31295

நல்ல விடயம்.

ஆனையிறவுப் பகுதியும் இவ்வாறான மின் உற்பத்திக்கு சிறந்த இடம் என்று தமிழீழ பொருளாதார ஆய்வு மையமும் விடுதலைப்புலிகளின் காலத்தில் பரிந்துரைத்திருந்தது.

10 hours ago, நவீனன் said:

பூநகரிப் பகுதியில் 1000 மெகாவாட் திறன் உற்பத்தித் கொண்ட, காற்றாலை மற்றும் சூரிய சக்தி

நல்ல விடயம்தான் ஆனால் 1000 MV கொஞ்சம் அண்டப்புளுகு போல தெரியல்லை. 

ஆனாலும் நான் மட்டும் நம்பிட்டன். ??

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஜீவன் சிவா said:

நல்ல விடயம்தான் ஆனால் 1000 MV கொஞ்சம் அண்டப்புளுகு போல தெரியல்லை. 

ஆனாலும் நான் மட்டும் நம்பிட்டன். ??

அண்டா அளவில புளுகோ இல்லையோ. அட்லீஸ்ட் ஒரு கோப்பி கப் அளவில புளுகா இருந்தாகூட, திட்டம் நிறைவேறினால்...

தமிழ்கட்சிகள் தமிழர் பிரதேசங்களுக்கு தரும் வளர்ச்சியைவிட சிங்களவர்கள் தமிழர் பிரதேசங்களுக்கு  தரும் வளர்ச்சி கொஞ்சமாவது குறிப்பிடதக்கதா  இருக்கும் என்பது என் நம்பிக்கை.

Just now, valavan said:

இது தேநீர் கரண்டியளவில் இருந்தாலும் எனக்கு சந்தோசம். ஆனால் நான் சென்ற மூண்று வருடங்களாக அவதானித்ததில் இந்த திட்டம் நிறைவேறும் என்பதில் நம்பிக்கை இல்லை. 

திட்டமிடப்படும் + நிதியும் ஒதுக்கீடு செய்யப்படும் / ஆனால் திட்டம் நிறைவேறாது - இதுதான் யதார்த்தம். இதற்கு காரணம் அரசாங்கம் மட்டுமில்லை.

முக்கியமாக எமது அரசியல்வாதிகளே இவற்றை குழப்புவார்கள்.அப்புறமா புத்தளத்தில் இது நிர்மாணிக்கப்படும்.

அப்புறமா கத்துவார்கள் எமக்கு வந்த திட்டத்தை புத்தளத்தில் நிர்மானிக்கிறார்கள் என்று 

அம்புட்டுத்தான்

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஜீவன் சிவா said:

நீங்கள் சொன்னதைதான்  சுருக்கமா முதலே சொல்லிவிட்டேனே , எமது தமிழ்கட்சிகள் எமது பிரதேசங்களுக்கு தரும் வளர்ச்சி என்று...

30 minutes ago, ஜீவன் சிவா said:

தமிழ்கட்சிகள் தமிழர் பிரதேசங்களுக்கு தரும் வளர்ச்சியைவிட சிங்களவர்கள் தமிழர் பிரதேசங்களுக்கு  தரும் வளர்ச்சி கொஞ்சமாவது குறிப்பிடதக்கதா  இருக்கும் என்பது என் நம்பிக்கை.

11 minutes ago, valavan said:

நீங்கள் சொன்னதைதான்  சுருக்கமா முதலே சொல்லிவிட்டேனே , எமது தமிழ்கட்சிகள் எமது பிரதேசங்களுக்கு தரும் வளர்ச்சி என்று...

உங்கள் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்படவில்லை. நானும் எனது கருத்தை ஆதரவாக சேர்த்தேன் - அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, valavan said:

தமிழ்கட்சிகள் தமிழர் பிரதேசங்களுக்கு தரும் வளர்ச்சியைவிட சிங்களவர்கள் தமிழர் பிரதேசங்களுக்கு  தரும் வளர்ச்சி கொஞ்சமாவது குறிப்பிடதக்கதா  இருக்கும் என்பது என் நம்பிக்கை.

எனது நம்பிக்கையும் அதுதான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.