Jump to content

France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிதிப்பங்களிப்புடன் - பசளை உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை நிறுவும் முயற்சி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிதிப்பங்களிப்புடன்

 Sinnathamby Kumarathas அவர்களின் மேற்பார்வையில்

எமது ஊரிலுள்ள மூலவளங்களை 
பாவனைக்குட்படுத்துவதனூடாகவும்

அங்கு வாழும் மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை வளங்குவதனூடகவும்

எமது மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு

பசளை உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை நிறுவும் முயற்சியின்

பரிட்சார்த்த ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சில படங்கள்.

L’image contient peut-être : une personne ou plus, plein air et nature
L’image contient peut-être : une personne ou plus, plein air et nature
L’image contient peut-être : plein air
L’image contient peut-être : 1 personne, debout et plein air
 
J’aimeAfficher plus de réactions
Commenter
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது, நன்றாக நடக்கட்டும்......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/13/2018 at 10:43 PM, suvy said:

நல்லது, நன்றாக நடக்கட்டும்......!  tw_blush:

உங்களுக்கு காணிகள் இருந்தால் சொல்லுங்கள் புங்குடுதீவில் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

உங்களுக்கு காணிகள் இருந்தால் சொல்லுங்கள் புங்குடுதீவில் :)

 அங்கு நிறைய காணிகள் இருக்கு, ஆனால் நான் இன்னும் வாங்கவில்லை.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய சூழ்நிலையில்... இயற்கை உரம் அத்தியாவசியமானது.
புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின்.. முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

உங்களுக்கு காணிகள் இருந்தால் சொல்லுங்கள் புங்குடுதீவில் :)

உங்களுக்கு  கிழக்கில  கன  வேலை  இருக்கு  ராசா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறுபிட்டி வீரகத்திப் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் எனக்கு ஒரு காணி இருக்கு  ஆனால் அது கடற்கரையை அண்மித்தபகுதி ஒருகாலத்தில் அங்கு வரகு தானியம் விளைவித்தாக அம்மா கூறியது நினைவிலிருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்ல முன்மாதிரியான முயற்சி!

முன்னெடுப்பவர்களுக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்!

இதே போன்ற முயற்சியை..நெடுந்தீவு போன்ற இடங்களிலும் முன்னெடுக்கலாமே!

வல்லை வெளியெங்கும் ....எருக்குவியலும்...குதிரைச் சாணமுமாக நிறைந்து கிடைப்பதைப் பல தடவைகள் கண்டுள்ளேன்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/13/2018 at 7:13 PM, suvy said:

நல்லது, நன்றாக நடக்கட்டும்......!  tw_blush:

செய்த  மனமும்

 கால்  கைகளும்  சும்மா  இராது  அண்ணா

முதலில்  ஒரு  பரீட்சார்த்த  முயற்சி  தான்.

10  அல்லது பதினைஞ்சு  லட்சம்வரை.

வெற்றியென்றால் தொழிற்சாலை.

நல்லது தொடர்ந்து நடக்கும்  அண்ணா

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

தற்போதைய சூழ்நிலையில்... இயற்கை உரம் அத்தியாவசியமானது.
புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின்.. முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

நான்  எழுத  மறந்த இயற்கை உரம்  என்ற  பதத்தை  பதிந்துள்ளீர்கள்

அதே...

உள்ளுரில் உள்ளவர்களுக்கு வருவாயை உண்டு பண்ணும்

எரு 

குப்பை குழைகளை  சேகரித்தல்

அதனை  பணம் கொடுத்து  வாங்குவதற்கு  வழி  இருக்கு  எனும் நிலையை மக்கள் மனதில் விதைத்தல்

மரம்  நடுகை

பூந்தோட்டம்

மற்றும் 

விவசாயம்  செய்யும் ஆவலை தூண்டுதல்

வேலை  வாய்ப்பளித்தல் என  பல நல்ல  விடயங்கள்  நிறைவேறும் என எதிர்பார்த்தே தொடங்கப்படுகிறது

பரீட்சார்த்த முயற்சி  வெற்றி  பெறட்டும்

நன்றி  சிறி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Elugnajiru said:

இறுபிட்டி வீரகத்திப் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் எனக்கு ஒரு காணி இருக்கு  ஆனால் அது கடற்கரையை அண்மித்தபகுதி ஒருகாலத்தில் அங்கு வரகு தானியம் விளைவித்தாக அம்மா கூறியது நினைவிலிருக்கு 

கடற்கரை  காணிகளோ

அல்லது கடற்கரையிலிருந்து பெறப்படும் எருவோ 

மற்ற  மாவட்டங்களுக்கு  அனுப்பும் போது சரி  வராது என 

இது சார்ந்த நிபுணர்களால் எச்சரிக்கைப்படுத்தப்பட்டுள்ளது சகோ.

ஒன்றை  செய்யத்தொடங்கும் போது  தானே 

சரி  பிழை  அல்லது ஏற்புடையது அற்றது  தெரியவரும்

நன்றி சகோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, புங்கையூரன் said:

மிகவும் நல்ல முன்மாதிரியான முயற்சி!

முன்னெடுப்பவர்களுக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்!

இதே போன்ற முயற்சியை..நெடுந்தீவு போன்ற இடங்களிலும் முன்னெடுக்கலாமே!

வல்லை வெளியெங்கும் ....எருக்குவியலும்...குதிரைச் சாணமுமாக நிறைந்து கிடைப்பதைப் பல தடவைகள் கண்டுள்ளேன்! 

நேசண்ணையை   உங்களுக்கு  தெரிந்திருக்குமண்ணா

பிரான்சிலிருந்து சென்று பெரும் பண்ணை மற்றும் இறால்  வளர்ப்பு  என்று  பல  திட்டங்களை  செயற்படுத்துகிறார்

அவரது துணையோடு தான் இதுவும்  தொடங்கப்பட்டுள்ளது

மற்றவர்களுக்கும் முன்  மாதிரியாக

அவர்களையும்  உந்தித்தள்ளுதலும்   குறியே.

நன்றியண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் சில படங்கள்.

France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிதிப்பங்களிப்புடன்

Sinnathamby Kumarathas அவர்களின் மேற்பார்வையில்

எமது ஊரிலுள்ள மூலவளங்களை 
பாவனைக்குட்படுத்துவதனூடாகவும்

அங்கு வாழும் மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை வளங்குவதனூடகவும்

எமது மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு

இயற்கை உரத்தை தயாரிக்கும் உற்பத்தித்தொழிற்சாலை ஒன்றை நிறுவும் முயற்சியின்

பரிட்சார்த்த ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் சில படங்கள்.

L’image contient peut-être : nuage, ciel, plein air et nature
L’image contient peut-être : une personne ou plus, personnes debout, chaussures, arbre, ciel, enfant et plein air
L’image contient peut-être : une personne ou plus, personnes assises et plein air
L’image contient peut-être : plein air
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/14/2018 at 11:03 PM, suvy said:

 அங்கு நிறைய காணிகள் இருக்கு, ஆனால் நான் இன்னும் வாங்கவில்லை.....!  tw_blush:

எல்லோரும் விற்கிறார்கள் நீங்கள் வாங்கினால் நம்மளுக்குள்ளேயே இருக்கும் அந்த நிலங்கள் 

On 6/14/2018 at 11:13 PM, விசுகு said:

உங்களுக்கு  கிழக்கில  கன  வேலை  இருக்கு  ராசா

கிழக்கை பொறுத்தவரைக்கும் இழந்துவிட்ட ஒன்றை பெற முடியாது  எங்களுக்கு வேலை இல்லை நாங்கள் தெரிவு  செய்தவர்களும் வேலையில்லாதவர்கள் 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
மேலும் சில படங்கள்.
 
France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிதிப்பங்களிப்புடன் Sinnathamby Kumarathas அவர்களின் மேற்பார்வையில் எமது ஊரிலுள்ள மூலவளங்களை
பாவனைக்குட்படுத்துவதனூடாகவும் அங்கு வாழும் மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை வளங்குவதனூடகவும் எமது மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு இயற்கை உரத்தை தயாரிக்கும் உற்பத்தித்தொழிற்சாலை ஒன்றை நிறுவும் முயற்சியின் பரிட்சார்த்த ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் சில படங்கள்.
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தொடர்ந்து பதிவிடுங்கள் விசுகு அண்ணா ,அங்கிருந்து பெறப்படும் அனுபவங்களும் செய்முறைகளும் எம் கிராமத்திற்கும் மற்றும் வன்னியிலுள்ள அயற்கிராமங்களிற்கும் பயன்படுத்த கூடியதாக இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, அபராஜிதன் said:

தொடர்ந்து பதிவிடுங்கள் விசுகு அண்ணா ,அங்கிருந்து பெறப்படும் அனுபவங்களும் செய்முறைகளும் எம் கிராமத்திற்கும் மற்றும் வன்னியிலுள்ள அயற்கிராமங்களிற்கும் பயன்படுத்த கூடியதாக இருக்கும் 

நிச்சயமாக  சகோ

இது ஒரு  பரீட்சார்த்த  முயற்சி  தான்

எமது ஊரிலுள்ள மூலவளங்களை  பாவிப்பதும்

அந்த  மக்களை அவற்றை  சேகரிப்பதற்கு ஊக்கவிப்பதும்

அதனூடு வேலை  வாய்ப்புக்களை  ஏற்படுத்துவதுமே  நோக்கம்

இதுவரை 10  லம்சம் செலவிடப்பட்டிருக்கிறது

அந்தப்பணம் இலவசமாக  அந்த மக்களுக்கு  கொடுக்கப்படாமல்

ஒன்றை  அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு  வழங்கப்பட்டிருக்கிறது

இதுவரை 15 லோட் எருவும்  3 லோட் தும்பும் பறிக்கப்பட்டிருக்கிறது

காணியை அடைத்து கொட்டப்பட்டிருப்பவைகளை அறிக்கை  செய்யும்  பணிகள்  நடக்கின்றன

அடுத்து சில  இயந்திங்களை  கொள்வனவு செய்தல்

நீர் பாய்ச்சுதல் 

குழைத்தல் தொடங்க  இருக்கிறது

தொடர்ந்து முன்னேற்றம் பற்றி  பதிவிடுகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

தங்கள் தளராத முயற்சி தொடரட்டும், விசுகர்!

நேசன் அண்ணனை எனக்குத் தெரியும்! எனது தந்தையாரின் மாணவர் என்பது மட்டுமன்றி....அவரை..சில தடவைகள் பிரான்சிலும் சந்தித்திருக்கிறேன்!

இதே போல இன்னும் பல முயற்சிகள் செய்யலாம்!

கண்ணகை அம்மன் கோவிலடி தொடக்கம்.....கோரியா வெளிச்சவீடு வரையிலான பகுதிகள்...மட்டி விளையும் ஒரு விளை நிலமாகும்!

அத்துடன் கடலட்டை போன்றவையும் அங்கு நிறைய உண்டு!

கண்ணாத் தீவுக்கு ...ஒரு முறை போனபோது...அங்கு மட்டி பொறுக்கி மினக்கடத் தேவையில்லை! மண் வெட்டியாலேயே வெட்டி அள்ளலாம்! அவ்வளவு விளைச்சல்!

இந்த மட்டிகளுக்கு...வெளி நாடுகளில் அளவில்லாத 'சந்தை' உண்டு!

நானே....நாக்கு ..செத்துப் போற மாதிரி...இருக்கும் வேளைகளில்....ஒரு சின்னப் பேணிக்குள் வரும் மட்டி வாங்கி வறை வறுத்துச் சாப்பிடுவதுண்டு!

ஒரு சின்னப் பேணி....இரண்டு டொலர் வரை வரும்!

பிரான்சில் வாழும் உங்களுக்குக் கடலட்டை சந்தை பற்றி...நான் சொல்லத் தேவையில்லை!

அத்துடன்...மட்டிச் சதையை அகற்றியபின்னர் ...வரும்...சிப்பிகளைக் கோழித் தீனுக்கு....மூலப்பொருளாகவும்...உபயோகிக்கலாம்!

Link to comment
Share on other sites

,இது சார்ந்த தொழில்நுட்ப அறிவுகளை எங்கிருந்து பெற்றுகொண்டா/டீர்களென எழுதுங்கள் 

சிப்பிகள் சுண்ணாம்பு கைத்தொழிலிலும் பயன்படுத்தலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புங்கையூரன் said:

எவர்கிறீன்நண்டுபண்ணை

36959394_2101229129915780_33610879123083

எவர்கிறீன்நண்டுபண்ணையில்  வளர்ந்த  நண்டுகள்

37017669_2101236816581678_20338360130291

இதன்  அடுத்த  கட்டத்துக்கு லைக்கா  பிரேம் உதவுவார் போலுள்ளது

பார்க்கலாம்  அண்ணா

https://www.facebook.com/sinnathamby.kumarathas?hc_ref=ARTDn-op1s854tjRh7FxB4_Wiw5bItCUTBekiyrqRElC5lWcj2L4d5w6NIR18WUXanU&fref=nf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, அபராஜிதன் said:

,இது சார்ந்த தொழில்நுட்ப அறிவுகளை எங்கிருந்து பெற்றுகொண்டா/டீர்களென எழுதுங்கள் 

சிப்பிகள் சுண்ணாம்பு கைத்தொழிலிலும் பயன்படுத்தலாம் 

முதலில் இது  சம்பந்தமாக  பல்கலைக்கழக படிப்பை  முடித்து

ஆய்வுகளை  நடாத்திவரும் ஒருவருடன் பேசி

ஒரு கேள்விக்கொத்தை (மாதிரி கணிப்பு) கேட்டிருந்தோம்

அவர் 325 தொன் இயற்கைப்பசளை செய்வதற்கு 65 லட்சம் (6.5 மில்லியன்)ரூபாய்கள்  என  தெரிவித்திருந்தார்

அந்தளவுக்கு செய்து

அதற்கான  சந்தை வசதி  மற்றும் பாதுகாப்பு  சம்பந்தமான சங்கடங்கள் இருந்தமையால்

ஆனால் எமது ஊரில்  வீணாகிப்போகும்  மூலவளங்களை  பாவிக்கும்  திட்டம்  என்பதால்

பரீட்சார்த்தமாக சில தொன்களை  தயாரிக்க  உடன்பட்டிருக்கின்றோம்

அதேநேரம்  பரீட்சார்த்த திட்டத்துக்காகவும்

இருவர்  தென் பகுதி  சென்று  சில மாதங்கள் இது பற்றி  படித்து  அறிய  அனுப்பப்பட  உள்ளனர்

அவர்களே  பொறுப்பாக  இருந்து  இதை  செய்வர்

இது சரி  வந்தால் அவர் சமர்ப்பித்த  தொகைக்கு  நகர  தயாராக  உள்ளோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தப்பா நினைக்கவேண்டாம்

 முதலில் புங்குடுதீவின் மேட்டிப்பாங்கான பகுதிகளை இனம்கண்டு அங்கிருந்து கடலை நோக்கிச்செல்லும் மழைநீரை மறிப்பதற்கான தடை அரண்களை நிறுவவும் தவிர நெல்வயல்களில் நீங்கள் நெற்பயிர் பயிரிடுகிறீர்களோ இல்லையோ அதனது வரப்புகளைப் பராமரிக்கவும் அங்கு காணப்படும் குளங்களின் மேலதிகமாகச் சேர்ந்த மண்ணை அகற்றி அக்குளங்களில் அதிகூடிய விரைவில் தண்ணீர் நிலத்துக்கு அடியில் சேர்ந்துவிடாது தடுப்பதற்காய் களிமண் படுகையை ஏற்படுத்தவும் உங்கள் வயல்கள் தோட்டக்காணிகளுக்கு இடையில் உள்ள எல்லைகளில் சுமார் ஆறு அடிகள் அகலமுள்ள உயிவேலியை ஏற்படுத்தவும் உயிர்வேலி எனப்படுவது மரங்கள் பயந்தரு மரங்கள் கற்றாழைச்செடிகள் முள்மரங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு வேலி அமைப்புமுறை இதில் பயந்தரு மரங்கள் நடும்போது வரட்சியைத்தாங்கும் சோற்றுக்கற்றாழை ஆகியவற்றை அம்மரங்களுக்கு மிக அருகிலேயே நடவும். குறிப்பாக தீவகத்தில் இப்போது தனது கடைசி அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருக்கும் கால்நடைகளை அழியவிடாது பாதுகாருங்கள் அவைகளுக்கான நீர்த்தொட்டிகளை அமையுங்கள் கண்ணகை அம்மஙோவிலடியைச்சேர்ந்த கடற்கரைப்பிரதாசத்தை அண்டியுள்ள கிணறுகள்தான் நன்னீர்க்கிணறுகளாகக் காணப்பட்டவை ஆகவே அந்தப்பகுதிக்கடலை மழைநீர் செல்லாதபடி தடுப்பரண்களைக்கட்டுங்கள் புங்குடுதீவின் நிலப்பரப்பில் பள்ளமாக இருக்கும் பகுதியை அடையாளம்கண்டு அந்தப்பகுதிக்கு நீர்வரத்தை அதிகமாக்கும் வாய்கால்களை அமையுங்கள் காலப்போக்கில் அந்நீர் விரைவாக நிலத்தடி சென்று கடலில் கலக்காது களிமண்கொண்டு அடிப்பகுதியுல் தடை அமையுங்கள் இவை எல்லாம் புங்குடுதீவு எனும் ஒரு சொல்லின் பின்னால் நீங்கள் ஒன்றுசேரும் ஒற்றுமையை மையமாக வைத்து ஈழபகுதியில் நிறையப்பிரதேசங்கள் இருந்த்தாலும் உங்களால் மட்டுமே நிறைவேற்றக்கூடிய ஒன்றுபடும் தன்மை இருப்பதால் பெருமையுடன் ஈடுபடுங்கள் அனைத்தும் வசப்படும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கைப் பசளை தயாரிப்பது ஒன்றும் கம்பசூத்திரம் இல்லை கும்பலாகப் பசளை தயாரிக்காமல் எங்கு நீங்கள் பயன்படுத்த முயலுகிறீர்களோ அங்கேயே குறிப்பிட்ட இடைவெளியில் சிறிய குழிகளை வெட்டி அருகில் காணப்படும் குப்பை எரு அதுதவிர்ந்த உணவுக்கழிவுகள் பனம்ப்பழம் இவைகளை சேகரித்தால் இயற்கைப்பசளைக்கான ஆரம்பகட்டத்துக்கு நாம் வந்துவிட்டோம் அவை மக்குவதற்கு நிறையவே ஈரப்பதம் தேவை புங்குடுதீவையொட்டி வீசும் காற்றில் உப்புத்தன்மை ஓரளவு ஏனையபகுதிகளைவிட அதிகமாக இருப்பதால் அக்காற்றில் ஈரப்பதம் இருந்தாலும் உக்குவதற்கு ஏனைய இடங்களைவிடக்காலதாமதமாகலாம் ஆகவே அக்குழிகளில் பயந்தரு அல்லது நிழல்தரு மரங்களை நடவுசெய்து தேவைக்கேற்ற தண்ணீர் விட்டால்  குப்பை மக்குவதோடு மரமும் வளர்ந்துவிடும் கால்நடைகளிலிருந்து அவற்றைக்காப்பாற்ற யாழ் நகரை அண்டிய பகுதிகளில் தமிழீழ விடுதலைப்புலிகளது பொருண்மீய மேம்பாட்டு நிறுவனம் பனை மட்டைகளைக்கொண்டு அழகான தடுப்பரணை அமைத்ததுபோல் அமைத்தால் எளிதில் கால்நடைகள் சேதமாக்காது காலப்போக்கில் பனங்கொட்டைகளை அகற்றி அவற்றை வேறோர் இடத்தில் நடவுசெய்யலாம் 

தாக்குதலுக்குள்ளான அமெரிக்க இரட்டைக்கோபுரம் அமைந்த பகுதி ஒருகாலத்தில் விசஜந்துகள் வாழும் யாருமே ஏறிட்டுப்பார்க்காத கலட்டித்தறையாகவே இருந்த்தது சுதந்திரசிலை அமைத்தபின்னதான காலத்திலேயே அபகுதி அபிவிருத்திசெய்யப்பட்டு இப்போது உலகில் மிகவும் விலமதிப்பான பகுதியாகக்காணப்படுகிறது அது கிட்டத்தட்ட புங்குடுதீவின் பரப்பளவே உள்ள பிரதேசம். பணமுள்ளவர்கள் அப்பிரதேசத்தில் சூரியசக்தி மின்பிறப்பாக்கிகளை பெருமளவில் உருவாக்கி மின்சாரம் தயாரித்தால் மேலதிகமானதை குடாநாட்டின் ஏனைய தீவுப்பகுதிக்கும் நாமே வினியோகம் செய்யலாம் தவிர எமது தண்ணீர்த்தேவைக்காக எதிர்காலத்திட்டங்களுக்கான மின்சாரத்தை இதிலிருந்தே பெற்றுக்கொள்ளலாம். அதைவிடுத்து இரணைமடுவிலிருந்து தண்ணிதா எனக்கெட்பது அப்பிரதேச மக்களுக்கு நாம் செய்யும் நல்லசெயல் இல்லை. 

அதிகப்பிரசங்கித்தனமாகக் கருத்திடுகிறேன் என யாரும் நினைக்கவேண்டாம்

தாயகத்தின் ஏனைய பகுதிகளைவிட புங்குடுதீவிலிருந்தே இடம்பெயர்ந்த மக்கள் அத்கம் அதிலும் மேலைத்தேயநாடுகளில் குடியேறியோர் அல்லது அவர்களுடன் தொடர்புடையோர் என ஏராளமானோர் நிறையவே உள்ளனர் புலம்பெயர்ந்த தேசங்களில் வாழும் நாம் தாயகத்தின் ஏனைய பகுதிகளை அபிவிருத்தி செய்கிறோம் பேர்வளி எனக்கிளம்பினால் அங்குள்ளவர்கள் வந்திட்டாங்கள் கோப்பை கழுவியள் கக்கூஸ் கழுவியள் எங்கட அலுவல் எங்களுக்குத் தெரியும் நீங்கள் உங்கட அலுவலைப்பாருங்கோ ஆனால் காசைமட்டும் தாருங்கோ என எம்மை எட்டடி தள்ளியே வைத்திருப்பினம் ஆனால் புங்குடுதீவு அப்படியில்லை அனேகமாக படுத்த யாழ் தமிழர்களால் ஏளனப்படுத்தப்பட்ட பிரதேசம் அங்கு நாம் எதைச்செய்தாலும் நாமே முன்னிண்று செய்யலாம் எமக்கு என்ன நல்ல விடையங்கள் தோன்றுகின்றதோ அவற்றையெல்லாம் அங்கு நாம் செய்யலாம் அப்பிரதேசம் முன்னேறினால் நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கும் மதிப்பிருக்கும் அந்த ஆதங்கத்தால்தான் இவற்றை உங்களுடன் பகிர்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Elugnajiru said:

மிகவும்  தேவையான

எமது அடுத்த அடுத்த செயல்களுக்கு எடுத்துக்கொள்ளக்கூடிய   கருத்துக்கள் சகோ

தொடர்ந்து எழுதுங்கள்

இயற்கை  பசளை என்பது பெரிய விடயமன்று

ஆனால் இலங்கையில் பெரிதாக  இல்லை

அதனால் எமது மூலவளங்களையும்

புலம் பெயர் ஆலோசனை மற்றும் விளம்பர மார்க்கங்களை சரியாக பாவித்தால்

வளரலாம் என  நினைக்கின்றோம்  பார்க்கலாம்

தண்ணீர்  சிக்கல்

அது அரசு  தான் செய்யணும்  செய்கிறது

பார்க்கலாம்

மற்றும் மரங்கள்  மற்றும் மழை  நீர் சேகரித்தல்  சம்பந்தமாக 

சில செயற்திட்டங்கள்  நடைபெறுகின்றன  வேறு  அமைப்புக்களால்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • செந்தமிழன் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.   
    • 2015 ல வாக்கு போட்ட தமிழருக்கு ஒழுங்காகக் தீர்வை கொடுத்து இருந்தால் இந்த முறை பதவிக்கு வந்திருக்கலாம் ....நரி வேலை பார்த்தால் இப்படி தான் பின் வந்தவர்களை பார்த்து  சும்மா பொய் சொல்லிக்கொண்டு இருக்கணும் ......
    • கலாநிதி ஜெகான் பெரேரா நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஊழலுக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதே ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது. அந்த கட்சி மீது மக்களுக்கு பெரும் கவர்ச்சி ஏற்படுவதற்கும் அதுவே பிரதான காரணமாகவும் இருந்தது. உயர் மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரை தலைவிரித்தாடும் ஊழல் 1970 களின் பிற்பகுதியில்  திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அரசாங்கத்துறையையும் தனியார்துறையையும் தழுவியதாக வழமைானதாக்கப்பட்டுவிட்டது. பாரிய அபிவிருத்தி திட்டங்களும் வெளிநாட்டு உதவிகளும் அதிகாரப் பதவிநிலைகளில் இருந்தவர்கள் ஊழலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்கின. 2022 பொருளாதார வீழ்ச்சியும் அதன் விளைவாக மக்கள் அனுபவிக்கவேண்டி வந்த இடர்பாடுகளும் ஊழலை ஒழிக்கவேண்டும் என்றும் அதில் சம்பந்தப்பட்டவர்களை அகற்றவேண்டும் என்றும் உறுதிப்பாட்டை இறுக்கமாக்கியது. அரசியல் அதிகாரத்தை ஒருபோதும் கொண்டிராத கட்சி என்ற வகையில் தேசிய மக்கள் சக்தியே (முன்னணி கட்சிகள் மத்தியில்) ஊழல் குற்றச்சாட்டில் இருந்து விடுபட்டதாக இருந்தது. ஊழலினாலும் முறைகேடுகளினால் சீரழிந்துகிடக்கும் நாட்டை துப்புரவு செய்ய வேண்டும் என்ற வேட்கை  ஆட்சிமுறை தொடர்பில் மக்களுக்கு இருந்த அக்கறையின் மைய  விவகாரமாக இருந்தது. வேறு எந்த பிரச்சினையினாலும் அதை மறைப்புச் செய்ய முடியவில்லை. இனத்துவ தேசியவாதத்தை கிளறிவிடுவதற்கு சில எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட பிரயத்தனம் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. தேசிய மக்கள் சக்தியை தவிர, தங்கள் மத்தியில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களைக்  கொண்ட எந்தவொரு பிரதான அரசியல் கட்சியினாலும் ஊழல் பிரச்சினையை கையாள்வதற்கான அரசியல் துணிவாற்றல் தங்களுக்கு இருப்பதாக வாக்காளர்களை நம்பச்செய்ய முடியவில்லை. அதனால், அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிப்பது, வாழ்க்கைச் செலவைக் குறைப்பது போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தவறியிருப்பதாக எதாச்க்கட்சிகளினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களோ அல்லது அவற்றின் வாதங்களோ வாக்காள்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.  ஊழலை ஒழிக்க  வேண்டும் என்பதும் ஊழலுக்கு உடந்தையாக இருந்தவர்களை அகற்ற வேண்டும் என்பதுமே வாக்களர்களின் பிரதான அபிலாசையாக இருக்கிறது. முன்னைய அரசாங்கத்தின் இரு முக்கிய உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதை அடுத்து ஊழலையும் அதனுடன் இணைந்த தண்டனையின்மையையும் கையாளுவதில் அரசாங்கம் அக்கறையுடன் இருக்கிறது என்ற திருப்தி தற்போதைக்கு வாக்காளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.  பதிவு செய்யப்படாத ஆடம்பர வாகனம் ஒன்று தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் வன்முறை நடத்தை வரலாற்றைக் கொண்டவர்.  ஆனால், அவர் முன்னர் ஒருபோதும்  கைது செய்யப்பட்டதில்லை. அவரின் குடும்பம் காலத்துவத்துக்கு  முன்னரான  உயர்குடி தொடர்புகளை கொண்டவர் என்பதும் சமூகத்தின் ஒரு பிரிவினரின் வாக்குகளை பெற்றுத்தரக்கூடிய ஆற்றல் கொண்டவர் என்று கருதப்பட்டதாலும்  அவர் கைதுசெய்யப்படால் இருந்திருக்கலாம். ஆனால்,  தற்போதைய அரசாங்கம் அவரையும் பாராளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்ட  முன்னைய அரசாங்கத்தின் இன்னொரு உறுப்பினரையும் பதிவு செய்யப்படாத வாகனங்களை வைத்திருந்த ஒப்பீட்டளவில் சிறிய குற்றச்சாட்டு தொடர்பில்  இப்போது கைது செய்திருக்கிறது. இதை இவர்களின் பல சகாகக்கள் மோசடி செய்ததாக கூறப்படும் கோடிக்கணக்கான பணத்துடன்  ஒப்பிடமுடியாது. ஆனால், இது ஒரு தொடக்கம். பிரதான பிரச்சினை அதனால், பிரதான பிரச்சினையான ஊழலை தாமதமின்றி கையாளத் தொடங்கி முன்னைய அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகளில் சிலருக்கு எதிராக நடவடிக்கையை அரசாங்கம் எடுத்திருப்பதால் அது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உண்மையில் அக்கறையுடன் இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள். முன்னைய அரசாங்கத்தின் இரு உறுப்பினர்களுக்குைஎதிரான குற்றச்சாட்டுக்களை மறுதலிப்பது கஷ்டம். ஏனைன்றால் சான்றுகள் ( பதிவுசெய்யப்படாத இரு  மோட்டார் வாகனங்கள் ) கைவசம் இருக்கின்றன. கோடிக்கணக்கான பணமோசடி சம்பந்தப்பட்ட சிக்கலான வழக்குகளில் சான்றுகளைப் பெறுவது கஷ்டம். முன்னைய அரசாங்கங்களினால் கடந்த காலத்தில் நீதிமன்றங்களுக்கு கொண்டுவரப்பட்ட ஊழல் வழக்குகளில் பல தடவைகள் இடம்பெற்றதைப் போன்று அந்த சிக்கலான வழக்குகள் நீண்ட சட்ட நடைமுறைகளுக்கு உள்ளாகி இறுதியில் குற்றஞ்சாட்டப்படுபவர்கள் விடுதலையாகி விடவும் கூடும். ஆனால், தற்போதைய வழக்குகள் நேரடியானவை சிக்கலற்றவை என்பதால் அவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் குற்றவாளிகளாகக் காணப்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது. அதன் விளைவாக, இன்றைய தருணத்தில் அரசாங்கத்தின் மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் மக்கள் மத்தியில் எடுபடப் போவதில்லை. குறிப்பாக, முன்னைய அரசாங்கத்தினால் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை  இன்னறய அரசாங்கம் கையாளுகின்ற முறை தொடடர்பான விமர்சனங்களைப் பொறுத்தவரையில் நிலைமை இதுவே. அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிப்பதாகவும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதாகவும் ஜனாதிபதி தேர்தலின்போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பது இன்னொரு விமர்சனம். ஆனால் , தங்களது பொருளாதார இடர்பாடுகள்  சாத்தியமானளவு விரைவாக தணிக்கப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புவார்கள் என்கிற அதேவேளை,  புதிய அரசாங்கம் ஒரு மாத காலத்துக்கு முன்னர்தான் பதவிக்கு வந்தது என்பதையும் குறைந்த முன்னுரிமை கொண்ட துறைகளில் இருந்து உயர்ந்த முன்னுரிமை கொண்ட துறைகளுக்கு வளங்களை  மாற்றிப்பகிர்வதற்கு புதிய வரவு  --  செலவு திட்டம் ஒன்றை  நிறைவேற்ற வேண்டியிருக்கிறது என்பதையும் அவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். வரிக் கட்டமைப்புகளில் மாற்றங்களைச் செய்வதற்கு சட்டங்களில் மாற்றம் செய்யவேண்டும். பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கும் நிலையில் அது இந்த நேரத்தில் சாத்தியமில்லை. அத்துடன்,  ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அதன் போட்டிக் கட்சிகள் வழங்கிய வாக்குறுதிகளின் பினபுலத்தில் நோக்கவேண்டியதும் அவசியமாகும்.  நம்பமுடியாத நிவாரணப் பொதிகள் அவற்றில் அடங்கும். சமூகத்தின் மிகவும் நலிவுற்ற குழுக்களுக்கு மாதாந்தம் நலன்புரி கொடுப்பனவு வழங்குவதாகவும் கடன்நிவாரணத் திட்டங்கள் அறிமுகம், மாற்றுத் திறனாளிகளுக்கும் மிகவும் வறுமைப்பட்டவர்களுக்கு கொடுப்பனவுகள் அதிகரிப்பு, விவசாயிகளுக்கு கடன் ரத்து, வரிக்குறைப்பு,  இலட்சக்ணக்கில் தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல், சகல தரப்பினருக்கும் சம்பள அதிகரிப்பு, பெருமளவு வெளிநாட்டு முலீடுகளைப் பெறுதல் அல்லது குறுகிய கால வரையறைக்குள் கடன் நிவாரணங்களைப் பெறுதல் என்று பெருவாரியான வாக்குறுதிகளை அந்த கட்சிகள் வழங்கின. கடனை திருப்பிச் செலுத்துவதில் இலங்கையின் ஆற்றல் குறித்த தற்போதைய மதிப்பீடு மற்றும் சர்வதேச உறவுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது இந்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றுவது சாத்தியமில்லை. அதனால் அரசாங்கம் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது பாசாங்கத்தனமானதாகும். சாத்தியமான பங்காளிகள் அறகலய போராட்ட இயக்கத்தினால் " முறைமை மாற்றம் " என்று சுருங்கச் சொல்லப்பட்ட ஊழல் நிறைந்த ஆட்சி முறையை முற்று முழுவதுமாக மாற்றவேண்டும் என்ற மக்களின் வேட்கை பாராளுமன்ற தேர்தலிலும் மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கக்கூடிய பிரசாரத் தொனிப்பொருளாக தொடர்ந்து விளங்கப்போகிறது. ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்காளிக்காதவர்களும் கூட ஊழலற்ற ஆட்சிமுறையை விரும்புவதால் இந்த தடவை அந்த கட்சிக்கு வாக்களிக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது. மறுபுறத்தில், கடந்த மாதம் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் கண்டதைப் போன்று மக்கள் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்களுக்கு அல்லது தங்களுக்கு உதவியவர்களுக்கு உணர்ச்சிபூர்வமாக வாக்களிக்கவும் நாட்டம் காட்டலாம்.  அது உள்ளூர் மட்டத்தில் சலுகைகளைச் செய்திருக்கக்கூடிய முன்னைய அரசாங்க உறுப்பினர்களுக்கு அனுகூலமாக அமையும். எல்பிட்டிய பிரதேச சபையில்  47 சதவீதமான வாக்குகளைக்  கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி அரைவாசி ஆசனங்களைப் பெற்றது. ஆனால், கூடுதல் சதவீதமான வாக்குகளை ஏனைய கட்சிகளே பெற்றன. நாட்டில் இன, மத சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளில் காணப்படும் நிலைவரங்களும்  தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை ஆசனங்களை பெறுவதை சிக்கலாக்கும். தேசிய மக்கள் சக்தி முன்னர் பெரும்பான்மையினச் சமூகத்தின் மீதே பிரதானமாகக் கவனத்தைக் குவித்தது.  அதன் உயர்மட்டத் தலைவர்களும் அந்த இன, மதப் பின்னணியில் இருந்து வந்தவர்களே. அதனால் இன, மத சிறுபான்மைச் சமூகங்ளைப் பொறுத்தரை, தங்கள் மத்தியில் வேலை செய்யாத ஒரு தேசியக் கட்சியை விடவும் தங்களது பிரிவுசார்ந்த நலன்களுக்காக குரல் கொடுக்கின்ற கட்சிகளுக்கே வாக்களிப்பதில் இயல்பாகவே நாட்டம் காட்டுவார்கள். ஆனால், சிறுபான்மைச் சமூகங்கள் தங்களது சொந்த அரசியல் தலைவர்கள் மீதும் விரக்தியடைந்திருக்கின்ன. குறிப்பாக அந்த சமூகங்களின் இளம்  தலைமுறையினர் பிரிந்து வாழ்வதை விடவும் பிரதான சமூகத்துடனும் தேசிய பொருளாதாரத்துடனும் இணைந்து வாழ்வதில் முன்னரை விடவும் இப்போது கூடுதல் அக்கறை காட்டுகிறார்கள். அரசாங்கம் தானாகவே அரசியலமைப்புக்கு திருத்தங்களைச் செய்யும் செயன்முறைகளில் ஈடுபடுவதற்கு வசதியாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களை பாராளுமன்றத்தில் கைப்பற்றுவது சாத்தியமில்லை என்பதே  இந்த ஆய்வில் இருந்து பெறக்கூடிய முடிவாகும். அதற்கு சாதாரண பெரும்பான்மை ஒன்று கிடைக்கலாம். ஆனால் அதுவும் நிச்சயமானதல்ல. அதனால் பாராளுமன்றத்துக்கு தெரிவாகக்கூடிய கூட்டாகச் செயற்பட்டு சட்டங்களையும் அரசியலமைப்புத் திருத்தங்களையும் நிறைவேற்ற வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்படுமானால் அதுவே நாட்டுக்கு  நல்ல வாய்ப்பாக அமையும். அதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணசிக்க பிரேமதாச கூறியதைப் போன்று எதிர்க்கட்சிகளுடன்  கலந்தாலோசனை, விட்டுக்கொடுப்பு, கருத்தொருமிப்பு அவசியமாகும். ஊழலும் தண்டனையின்மையும் கோலோச்சிய கடந்த காலத்தைப் போலன்றி ஊழலை முடிவு கட்டுவதற்கு தேவையான சடடங்களைக் கொண்டு வருவதற்கு அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவது எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை ஒரு அமிலப் பரீட்சையாகும். தேசிய மக்கள் சக்தி அதன் பங்காளிகளாக வரக்கூடியவர்களை  இன, மத சிறுபான்மை கட்சிகளில் தேடிக் கொள்ளக்கூடியது சாத்தியம்.   https://www.virakesari.lk/article/198148
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.