Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மானிப்பாயில் வயோதிபப்பெண் கழுத்தறுத்து கொலை

Featured Replies

மானிப்பாயில் வயோதிபப்பெண் கழுத்தறுத்து கொலை

 

(எம்.நியூட்டன்)

யாழ்ப்பாணம் மானிப்பாய் சங்கரப்பிள்ளை வீதியைச் சேர்ந்த தம்பையா லீலாதேவி என்ற வயோதிபப் பெண்ணெருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

muder_27.jpg

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மானிப்பாய் கல்லூரி ஒழுங்கையில் வசித்து வரும்  வயோதிபர் ஒருவரை  பராமரித்து வருபவர். லீலாதேவி, அவர் நேற்றுக்காலை பிச்சை எடுக்கும் நபர் ஒருவர் ஊன்றுகோலின் உதவியுடன்  பிச்சை கேட்டு வந்துள்ளார். இதன்போது லீலாதேவியும் அந்த நபருக்கு உதவி செய்துள்ளார்.  

இதன் பின்னர் வீட்டுப் பணிகளைச் செய்துகொண்டிருந்தபோது மீண்டும் குறித்த பிச்சைக்காரர் வீட்டினுல் நுழைந்து வீட்டின் சமயலறைக்குல் வைத்து லீலாதேவியை கத்தியால் கழுத்தறுத்துக் கொலை செய்து தப்பிச் சென்றுள்ளார். 

தனது உதவியாளரைக் காணவில்லை சமயலறையை திறந்த போதே அவர் இறந்திருந்ததை அவதானித்தார். அதன் பின்னர் அயலவரின் உதவிகொண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த கொலை தொடர்பில்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். 

இதேவேளை ஊன்றுகோலுடன் பிச்சை எடுக்க வந்த நபர்  அந்தப் பகுதியிலுள்ள சில வீடுகளில் பிச்சை எடுத்துள்ளதாகவும்  அயலவர்களால் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த நபரொருவர் நடமாடுவது தொடர்பில் அடையாளங்களுடன் தெரிவித்ததையடுத்து ஆனைக்கோட்டை குருசு மதவடிப் பகுதியில் வைத்து சுமார் 28 முதல் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/35696

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வயது போகுதோ....அல்லது வீரகேசரிக்குத் தான் 'அறளை'  பெயருதோ என்பதைக் காலம் தான்...கணித்துச் சொல்ல வேண்டும்!

தலையங்கத்தில் வயோதிபர் கொலை எண்டு போட்டிருக்கச்..செய்தியில்...வயோதிபரின் உதவியாளர் லீலா தேவி கொலை செய்யப்பட்டார் எண்டு எழுதியிருக்கு!

எனக்கு இப்ப ஒரு உண்மை தெரிஞ்சாக வேண்டும்!

கொலை செய்யப்பட்டது வயோதிபரா அல்லது லீலாதேவியா?

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, புங்கையூரன் said:

தலையங்கத்தில் வயோதிபர் கொலை எண்டு போட்டிருக்கச்..செய்தியில்...வயோதிபரின் உதவியாளர் லீலா தேவி கொலை செய்யப்பட்டார் எண்டு எழுதியிருக்கு!

எனக்கு இப்ப ஒரு உண்மை தெரிஞ்சாக வேண்டும்!

கொலை செய்யப்பட்டது வயோதிபரா அல்லது லீலாதேவியா?

மானிப்பாயில் வயோதிபப்பெண் கழுத்தறுத்து கொலை

அப்படித்தானே போட்டிருக்கு ,வயோதிபர் எண்டு இல்லையே, அதாவது பராமரித்தவரும் பராமரிக்கப்பட்டவரும் வயோதிபர்களாம்...

இந்த குழப்பங்களுக்கு வயசு காரணமாகாது, சின்ன பெக்’குகளும் காரணமாயிருக்கலாம் புங்கையண்ணா... ;)

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, valavan said:

மானிப்பாயில் வயோதிபப்பெண் கழுத்தறுத்து கொலை

அப்படித்தானே போட்டிருக்கு ,வயோதிபர் எண்டு இல்லையே, அதாவது பராமரித்தவரும் பராமரிக்கப்பட்டவரும் வயோதிபர்களாம்...

இந்த குழப்பங்களுக்கு வயசு காரணமாகாது, சின்ன பெக்’குகளும் காரணமாயிருக்கலாம் புங்கையண்ணா... ?

சரி....இப்ப தெளிஞ்சிருக்கு!

அதாவது....வயோதிபரை....வயோதிபப் பெண் பாராமரித்து வந்திருக்கிறார்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

சரி....இப்ப தெளிஞ்சிருக்கு!

அதாவது....வயோதிபரை....வயோதிபப் பெண் பாராமரித்து வந்திருக்கிறார்!

பகல் நேரம் வேலை நாள் வேறை இப்ப தான் தெளிஞ்சிருச்சு என்றால்

குளப்பிறீங்களே!

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

பகல் நேரம் வேலை நாள் வேறை இப்ப தான் தெளிஞ்சிருச்சு என்றால்

குளப்பிறீங்களே!

ஒண்டுமில்லை...ஈழப்பிரியன்!

நம்மட மூளை....அந்தக்காலத்து நினைவுகளை வைத்துத்தான்....சில விடயங்களை எடை போடுகின்றது போலும்!

சின்னம்மா, தங்கம்மா, செல்லம்மா, புவனம், கனகம் எண்ட மாதிரிப் பெயர் வந்திருக்கும் எண்டால்....வயோதிபப் பெண்ணாய் இருக்கும் எண்டு மூளை உடனேயே அனுமானித்து இருக்கும் என்று நினைக்கிறேன்!

லீலா தேவி....எண்ட பெயரைப் பார்த்ததும்....மூளை...வயோதிபப் பெண்ணாக உடனே ஏற்றுக்கொள்ளவில்லைப் போல உள்ளது!

குளம்பாதீங்கோ.....எல்லாம் இப்ப ஒகே!

நன்றி...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.