Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரை நிமிடக் கதை

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

77-E4-E1-CE-3989-4-F5-E-AF64-A6-B24-B6-B

சின்னச் சின்ன தீவுகள் போல் திட்டுத் திட்டாக  அவனது கைகளில் அங்கங்கே வீக்கங்கள் தெரிந்தன.

 எனது பார்வையின் கேள்வியை கணேசன் புரிந்து கொண்டான் 

 “கிட்னி பெயிலியர் மச்சசான். மூன்று நாளுக்கு ஒருக்கால் டயாலிசிஸ் செய்ய வேண்டி இருக்குது. அதனாலை வந்த வீர வடுக்கள்

 நீண்ட நாட்களுக்கும் பிறகு.... இல்லை நீண்ட வருடங்களுக்குப் பிறகு என்பதுதான் சரியாக இருக்கும் அவனை அப்படிப் பார்த்ததில் மனது சிரமப்பட்டது.

 எனது சங்கடம் அவனுக்கு விளங்கி இருக்கும்

 “கிட்னி மாத்திறதுக்கு ஏற்கனவே கனக்க யேர்மன்காரங்கள் காதிருக்கிறாங்கள். எங்கள் தரவளிக்கு இஞ்சை கிடைக்க வாய்ப்பேயில்லை. ஊரிலை பாக்கலாமெண்டால் காசு தந்திட்டு பெட்டியைக் கட்டிக் கொண்டு போ கிட்னி சட்னி எல்லாம் கிடைக்காது எண்ட மாதிரித்தான் பேச்சு இருந்தது

கதைத்துக் கொண்டு இருக்கும் போதே அவசரப்பட்டான். “நேரம் போகுது மச்சான். டயாலிசிஸ்க்கு நாலு மணித்தியாலங்கள் தேவை. அதை முடிச்சிட்டுத்தான் வேலைக்குப் போக வேணும். முடிஞ்சால் பிறகு சந்திப்பம்

பதினைந்து வருடங்களுக்கு முன்பு அவனுக்கு குழந்தை பிறந்திருந்த போது பரிசுகள் வாங்கிக் கொண்டு எனது குடும்பத்தோடு பார்க்கப் போயிருந்தேன். நாங்கள் வருவதை அவனுக்கு அறிவித்திருந்தாலும் ஏனோதானோ என்றுதான் வரவேற்றான். பொதுவாக கணேசன் தன்னுடைய வீட்டுக்கு யாரையும் அழைப்பதில்லை. “வாற போற ஆக்களுக்கு தேவையில்லாமல் சமைச்சுப் போட்டு காசை ஏன் கரியாக்க வேணும்என்ற பரந்த உள்ளம் அவனுக்கு இருந்தது.

 மதியம் சாப்பாடு தந்தான்.. சாப்பிட்டுவிட்டு கை  கழுவும் போதுதான் பார்த்தேன் குழாயில் இருந்து தண்ணீர் சிந்திக் கொண்டிருந்தது. ஒவ்வொரு துளியாக சிந்தும் நீரெல்லாம் ஒரு பிளாஸ்ரிக் பாத்திரத்தில் ஒன்றாகி ஐக்கியமாகிக் கொண்டிருந்தன

 “கணேசா பாத்ரூமுக்குள்ளை தண்ணி சிந்துது. கவனிக்கேல்லையோ?”

 “அது நானாத்தான் சிந்த விட்டனான். இப்பிடி துளித் துளியா சிந்தினால் மீற்றர் ஓடாது. இதை வைச்சுத்தான் எங்கடை தண்ணித் தேவைகளை முடிக்கிறனாங்கள்

 சூரிய வெளிச்சமே வராத நிலத்தடி வீடு. குறைந்த வாடகை . துளித் துளியாக தண்ணீர் சேகரிப்பு. இப்படி இன்னும்  எத்தனை வழிகள் இருந்தனவோ அத்தனை வழிகளிலும் கணேசன் காசை மிச்சம் பிடித்தான்

 “என்ன பாக்கிறாய்? ஊரிலை தென்னந்தோப்போடை காணி வாங்கி இங்கத்தைய ஸ்ரைலிலை வீடு ஒண்டு கட்டுறன்காசு வேணுமெல்லே

 “வீடு கட்டுறதுக்கு யாரை பொறுப்பா விட்டிருக்கிறாய்?

 “மனுசியின்ரை தமையன் அங்கை இருக்கிறார். ஆள் பார்த்துக் கொள்ளும்_”

 இன்று கணேசனை பார்த்த பிறகு, நாள் முழுதும் அவன் நினைவுதான். கூடவே அந்தக் காணியும், தென்னந்தோப்பும், வீடும் இனி என்னவாகும் என்ற கேள்வியும் ஏனோ வந்தது.

 கவி அருணாசலம்

 

  • கருத்துக்கள உறவுகள்

திட்டங்கள், கனவுகள் எல்லாவற்றையும் நிறைவேற்ற சிறுகச் சிறுக சேமிப்பதும் கஞ்சத்தனமாக இருப்பதும் நமது பாரம்பரியத்தில் வந்தது. ஆனால் அது இப்போது மாறிக்கொண்டு வருகின்றது. நுகர்வோர் கலாச்சாரத்தால் ஆடம்பரமாக வாழ எல்லோரும் விரும்புகின்றார்கள்.

ஆசைகளை அந்த அந்த வயதில் அடையாவிட்டால் வருத்தங்களும் துன்பங்களும் வந்து சேர்த்ததையெல்லாம் பிறர் அனுபவிப்பார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் கணேசன்... இவ்வளவு கஸ்ரப் பட்டு சேமித்து, ஊரில் கட்டிய வீட்டில்  வாழ கொடுத்து வைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் என்ட வாழ்க்கையில் இவர்களை போல் எத்தனையோ பேரைப் பார்த்து உள்ளேன் ...வாழ்க்கையை அனுபவித்து வாழத் தெரியாதவர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன தவறு உள்ளது? பெரும்பாலானவர்கள் இப்படி சிறுகச் சிறுக சேமித்து ஊரிலோ அல்லது இங்கேயோ வீடு வளவு என்று வசதியாக உள்ளார்கள். சிலருக்கு அதை அனுபவிக்க இயலாமல் போய்விடும். ஆனால் அதனை அவரது பிள்ளைகள் அனுபவிப்பார்கள்.

பிற்காலத்திற்கு தேவை என்று சேமிப்பதில் தவறில்லை. 

இங்கு லண்டனில் எமது பிள்ளைகளால் வீடு வாங்க கூடியதாக இருக்குமா என்று தெரியாது.

 

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

 

24 மணி நேரமும்  வேலை,வேலை என்று அலைந்து அவர்களுக்கு காசு மட்டும் சேர்த்து வைத்து என்ன புண்ணியம் ?...அவர்களோட நேரம் செலவிட வேண்டும்,அவர்களுக்கு பிடித்தமானதை செய்ய வேண்டும்,வாழ்க்கையை அவர்களோட சேர்ந்து அனுபவிக்க வேண்டும்.

அதை விடுத்து நாங்கள் செத்தப் பிறகு எங்கள் காசு மட்டும் அவர்களுக்கு போதும் என்று நினைக்கப் படாது 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு விவாதிக்கப்படுவது எப்படி கணேசன் மிச்சம் பிடித்தார் என்பது. மற்றவர்கள் எப்படி சேமிக்கிறார்கள் என்று வேலை தொடர்பாக அல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏலுமெண்டால் மாத்திரம் வீடு வாங்கத்தான் வேணும்....காசும் சேமிக்கத்தான் வேணும்.

அதுக்காக வாழ்கையையே அர்ப்பணிக்கிறது அதாலை நோய்நொடிகளை தேடுறதெல்லாம் கொஞ்சம் ஓவர் கண்டியளோ. :cool:

  • கருத்துக்கள உறவுகள்

மீரா,கோபப் படாமல் நிதானமாய் யோசியுங்கள்...எல்லாத்திற்கும் தொடர்பு உள்ளது 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரதி said:

மீரா,கோபப் படாமல் நிதானமாய் யோசியுங்கள்...எல்லாத்திற்கும் தொடர்பு உள்ளது 

ஏற்கனவே எழுதியது தான், சிறுக சிறுக சேமிப்பதில் தவறில்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சேமிப்பு கட்டாயம் தேவைதான்....அதுக்காக உச்சா போகக்கூட நேரமில்லாமல் உழைக்கிறது கொஞ்சம் ஓவர் கண்டியளோ.....

எல்லாரும் வீடு வாங்கீனம் எண்டுட்டு அளவு தகுதிக்கு மிஞ்சின தொகையிலை வீட்டை வாங்கிறது. பிறகு இருக்க நேரமில்லாமல் வேலை வேலை எண்டு பிள்ளையளையும் கவனிக்காமல் ஓடுப்பட்டு திரியிறது. பிள்ளையள் தாங்கள் நினைச்சபடி வளர்ந்து சீரழிஞ்சு போறது...பேந்து ஐயோ குய்யோ எண்டு தலையிலை அடிச்சுக்கொண்டு திரியிறது.

இதுதானே இப்ப எங்கடை புலம்பெயர் குடும்பங்களிலை கூடுதலாய் நடக்குது :cool:

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கதைகளையும், கருத்து ஓவியங்களையும் வரைவதற்காகவே...
கவி அருணாசலம் அவர்கள்... மீண்டும் யாழ். களத்திற்கு வர வேண்டும் என்று,
அன்பாக....  வேண்டுகின்றோம்.  :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

82-F7-FCCD-2147-453-F-B8-E1-B1620603-F16

உறவு என்றொரு சொல்லிருந்தால்...

 

வீட்டுக்குப் போவதற்காக முதலாம் நம்பர் பஸ்ஸுக்கு காத்துக் கொண்டிருந்த போது கண்களை சுற்றிவர மேய விட்டேன். சுழன்ற என் கண்கள் கார் தரிப்பிடத்தில் போய் நிலை கொண்டு நின்றன.

 

குகதாஸ் கார் தரிப்பிடத்தில் இருந்து என்னைப் பார்ததுச் சிரித்தான்.

 

பஸ்ஸுக்கு இன்னும் ஏழு நிமிடங்கள் இருந்தன.

 

ஐஞ்சு நிமிசம் குகதாஸுடன் கதைக்கலாம் என கணக்குப் போட்டேன்.

 

எப்பிடி? கனகாலம் காணேல்லை...” இது ஒரு வழமையான எங்களுடைய விசாரிப்பு முறைதான். அதையே நானும் பாவித்தேன்.

 

இங்கைதான் இருக்கிறன். உங்களைத்தான் கனகாலம் காணேல்லைகேள்விக்கான பதில் குகதாஸிடம் இருந்து வந்தது.

 

எங்கை, கந்தவனத்தையும் கனகாலம் காணேல்லை. இரண்டு பேரும் ஒண்டாத்தானே திரிவீங்கள். இண்டைக்கு நீங்கள் மட்டும் தனிய நிக்கிறீங்கள். ஆளைக் கண்டால் நான் கேட்டதெண்டு சொல்லுங்கோ

 

எனக்கும் அவருக்கும் இப்ப சரியில்லை

 

ஏன் என்ன பிரச்சினை?”

 

அதண்ணை....” குகதாஸின் வார்த்தை கொஞ்சம் சுருதி குறைந்தது.

 

சொல்லக் கூடாத  விசயமெண்டால் அதை விடுங்கோ

 

இல்லை இல்லை அதிலை மறைக்கிறதுக்கு ஒண்டுமில்லை அண்ணைகந்தவனத்தின்ரை மகன் சங்கீதனுக்கு 16வது பேர்த்டே கொண்டாடினவன். அண்டைக்கெண்டு wifeஇன்ரை பெறாமகளுக்கும் சாமத்தியச் சடங்கு. அதுவும் Frankfurt இலை. அங்கை போனதாலை இவன்ரை birthdayக்கு போகேலாமல் போட்டுது

 

“birthdayக்குப் போகாததாலை பிரச்சினையாப் போச்சாக்கும்

 

விழாவுக்கு போகாததாலை பிரச்சினை இல்லை. மொய் எழுத இல்லை எண்டுதான் பிரச்சினை

 

அப்பிடியும் பிரச்சினை இருக்கே?”

 

நீங்கள் விழா வைச்சால் நாங்கள் வந்து மொய் எழுதோணும். நாங்கள் விழா வைச்சால் உங்களுக்கு  Frankfurtஇலை விழா Hamburg இலை விழா எண்டு ஓடிடுவீங்கள்  அடுத்த நாளாவது வந்து மொய் எழுதியிருக்கலாம்தானே எண்டு  ரெலிபோனிலை பேய்ச் சண்டை

 

 

அன்றைய காலத்தில் அநேக பல சரக்குக் கடைகளில், தேனீர் கடைகளில், ‘உறவுக்குப் பகை கடன்என்ற வாசகம் இருக்கும். பஸ்ஸில் வீடு நோக்கிப் பயணிக்கும் போது ஊரின்  அந்த பழைய நினைவுகள் எனக்கு வந்தன.

 

இன்று, புலம் பெயர் வாழ்வில்உறவுக்குப் பகை மொய்என்றாகிப் போயிற்று

 
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kavi arunasalam said:

நீங்கள் விழா வைச்சால் நாங்கள் வந்து மொய் எழுதோணும். நாங்கள் விழா வைச்சால் உங்களுக்கு  Frankfurtஇலை விழா Hamburg இலை விழா எண்டு ஓடிடுவீங்கள்  அடுத்த நாளாவது வந்து மொய் எழுதியிருக்கலாம்தானே எண்டு  ரெலிபோனிலை பேய்ச் சண்டை

முன்னர் ஊரில் “கொண்டாட்டம் மூன்று நாட்கள்” என்று அழைப்பிதழில் ஒரு வசனம் இருக்கும். அதற்கான காரணம் இப்பத்தான் விளங்குது😂🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.