Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எடுத்த திடீர் முடிவு

Featured Replies

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எடுத்த திடீர் முடிவு

download.jpg
 
 

 

 

சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது அமைச்சுப் பதவியை இன்று இராஜினாமாச் செய்யவுள்ளார் என்று தெரிய வருகின்றது.

விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உயிர்ப்பிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்த கருத்து தென்னிலங்கையில் பெரும் பரபரப்பையும் தீவிர எதிர்ப்பலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக நேற்றைய தினம் தலைமைஅமைச்சர் ரணில் விக்ரமசிங்கவுடன் இராஜாங்க அமைச்சர் விஜயகலா சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் விஜயகலா மகேஸ்வரன் இன்று தனது அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்யவுள்ளார் என்று கூறப்படுகின்றது.

 

தனக்கு எதிரான எதிர்ப்பலைகள் மற்றும் தான் சொல்லவந்த கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக அவர் நாடாளுமன்றத்தில் சிறப்பு உரையொன்றை ஆற்ற தயாராகி உள்ளார் என அவர் கூறினார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://newuthayan.com/story/08/இராஜாங்க-அமைச்சர்-விஜயகலா-மகேஸ்வரன்-எடுத்த-திடீர்-முடிவு.html

  • தொடங்கியவர்

தமிழ் மக்களுக்காக பதவியை தியாகம் செய்கிறேன்: விஜயகலா மகேஸ்வரன்

 

vijayakala-maheshwaran-720x450.jpg

 

தமிழ் மக்களுக்காக தமது பதவியை தியாகம் செய்ய தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர்  விஜயகலா மகேஸ்வரன் எமது ஆதவன் செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

வடக்கில் குற்றங்கள் அதிகரித்துள்ளதால் மீண்டும் விடுதலைப் புலிகள் உருவாகுவதை எதிர்பார்ப்பதாக விஜயகலா தெரிவித்த கருத்து, நாட்டில் பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.

இந்நிலையில், தமிழ் மக்களின் கௌரவத்திற்காகவும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவுமே விடுதலைப் புலிகள் தொடர்பான கருத்தை வெளிப்படுத்தியதாக தெரிவித்த விஜயகலா, தமிழ் மக்களுக்காக தமது பதவியை தியாகம் செய்வதாக குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகள் தொடர்பில் விஜயகலா தெரிவித்த கருத்து குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு, உரிய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

அத்தோடு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் நேற்று மாலை பிரதமரை சந்தித்த விஜயகலா, தமது விளக்கத்தை வழங்கியிருந்தார். இந்நிலையில், தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதா அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/?p=698871

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்காவில் தமிழ் மக்களின் உண்மையைப் பேசி அரசியல் செய்ய முடியாது. சிங்களவனுக்கு கூஜா தூக்கிற கருத்துக்களைச் சொன்னால் தான் பிழைக்கலாம். இதெல்லாம்.. தன்னை சன நாய் அக நாடு என்று தான் அழைச்சுக்கனும். ?

இந்த உலகம் மாறினாலும்.. சொறீலங்காவில் சிங்களவனின் இனவெறியும் குறுகிய சிந்தனைகளும்.. கேடுகெட்ட கருத்தோட்டங்களும் மாறாது. மாறவும் விடமாட்டாங்கள்.. அவங்கட அரசியல்வியாதிகள். 

இந்த நிலைக்கு சர்வதேச சமூகத்தின் ஒருதலைப்பட்சமான.. தமிழ் மக்கள் விரோத நிலைப்பாடுகளும் காரணமுமாகும். 

  • தொடங்கியவர்

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும்- விஜயகலா!!

vijayakala_mini-720x430.jpg
 
 
 

வடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி தொடர்பாக, அமைச்சுப் பதவியிலிருந்து கொண்டு அவ்வாறான கருத்தை தெரிவித்திருப்பது பிழையாக இருந்தாலும், என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும் என்று இராஜாங்க அமைச்சர்தெரிவித்துள்ளார்.

விஜயகலாவின் கருத்து தெற்கில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி தற்போது பெரும் விவகாரமாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நான் வெளியிட்ட புலிகள் விவகாரக் கருத்துத் தொடர்பில், எனது கட்சியின் தலைவருக்குத் தொலைபேசியில் தெரியப்படுத்தினேன். எனது நிலமை, கருத்துத் தொடர்பில் கட்சியின் தலைவர் புரிந்து கொண்டார். நான் ஏன் அப்படி கூறினேன் என்பதையும் அவர் விளங்கிக் கொண்டார்.

 

இந்தச் சர்ச்சைகள் மற்றும் விசாரணைகள் முடியும் வரை எனது இராஜாங்க அமைச்சு பொறுப்பிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக, எனது கட்சியின் தலைவரிடம் நான் தெரிவித்திருந்தேன். ஆனால் கட்சி வட்டாரங்களும், எனது கட்சியின் தலைவரும் அதை ஏற்க மறுத்து விட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை விஜயகலா மகேஸ்வரன் தனது அமைச்சர் பதவியை இன்று இராஜினாமா செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://newuthayan.com/story/11/அடுத்து-என்ன-செய்ய-வேண்டும்-என்பது-எனக்குத்-தெரியும்-விஜயகலா.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அமைச்சு பதவியை இராஜினாமா செய்தார் விஜயகலா மகேஸ்வரன்

 

அமைச்சு பதவியை இராஜினாமா செய்யும் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கையளித்துள்ளார்.

சற்று முன்னர் தனது இராஜினாமா கடிதத்தை விஜயகலா மகேஸ்வரன் கையளித்துள்ளதாக தெரிய வருகின்றது.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அரச நிகழ்வு ஒன்றில் உரையாற்றி விஜயகலா மகேஸ்வரன், விடுதலைப் புலிகளில் மீள்வருகை குறித்து பேசியிருந்தார்.

இது தென்னிலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து பல்வேறு தரப்பினர்களும் விஜயகலா மகேஸ்வரனை பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், தனது பதவி விலகல் கடிதத்தை விஜயகலா மகேஸ்வரன், ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் சற்று முன்னர் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://www.tamilwin.com/politics/01/187278?ref=home-latest

  • தொடங்கியவர்

மக்களுக்காகவே இதைச் செய்கின்றேன்! பதவி விலகியதன் பின் விஜயகலா உருக்கம்

 

 

வடக்கில் மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் வெளிக்கொண்டுவரும் வகையிலேயே நான் கருத்துத் தெரிவித்திருந்தேன்.

அத்தகைய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமையால் கட்சியின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியும், மக்களுக்காகவும் எனது அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளேன் என முன்னாள் சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கில் குறிப்பாக யாழ்.குடாநாட்டில் வன்முறைகளும் குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளன.

ஆறு வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 59 வயதான வயோதிபப் பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் வீட்டில் கொள்ளையும் இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

போதைவஸ்து பாவனையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் மக்களின் துன்பங்களைத் தாங்கமுடியாது புலிகளின் காலத்தை நினைவூட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

ஆறு வயதுச் சிறுமியின் படுகொலை உட்பட வன்முறைகள் குடாநாட்டில் அதிகரித்து வருவதனால் மக்கள் அச்சத்தின் மத்தியில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் நிம்மதியின்றி வாழ்கின்றனர்.

இந்த நிலையில் மக்களின் துன்பங்களை வெளிக்கொண்டு வர வேண்டியது அவர்களது பிரதிநிதியான எனது கடமையாகும். இதனால்தான் மக்களின் துன்பங்களை வெளிக்கொண்டு வரும் வகையில் எனது கருத்தினை தெரிவித்திருந்தேன்.

மக்களின் துன்ப துயரங்களை பறைசாற்றாது மக்களின் பிரதிநிதியாக இருக்க முடியாது. இதனால்தான் வடபகுதி மக்களின் துன்பங்களை எடுத்துக்கூறும் வகையில் உரையாற்றியிருந்தேன்.

இந்தக் கருத்து தென்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமையால் இவ்விடயம் தொடர்பில் கட்சித்தலைமைக்கு விளக்கம் அளித்துள்ளேன்.

கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமரும் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க அவர்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தபோது என்னுடன் தொடர்புகொண்டு எனது கருத்துக் குறித்து கலந்துரையாடினார்.

இதன்போது எனது நிலைப்பாட்டினை அவருக்கு விளக்கிக் கூறினேன். எனது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமையால் வேண்டுமானால் அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்வதற்கு நான் தயாராகவுள்ளதாக பிரதமரிடம் நான் எடுத்துக்கூறினேன். ஆனால் அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதன் பின்னர் கொழும்பு திரும்பிய நான் புதன்கிழமை மாலை பிரதமரைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன் வடக்கில் குறிப்பாக குடாநாட்டில் இடம்பெற்று வரும் போதைப்பொருள் பாவனை, வன்முறைகள், படுகொலைகள் தொடர்பில் எடுத்துக்கூறி மக்களின் துன்பங்களைப் பொறுக்க முடியாமையால் தான் நான் உரையாற்றியதாக விளக்கமளித்தேன்.

தற்போது எனது உரை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமையால் கட்சியின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தற்காலிகமாக அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதற்கு நான் தயார் என்று பிரதமரிடம் எடுத்துக் கூறினேன்.

இதற்கிணங்கவே நான் எனது அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்துள்ளேன். என்னைத் தெரிவுசெய்த மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வர வேண்டியது அவசியமானதாகும்.

மக்கள் துன்பத்திலும் துயரத்திலும் இருக்கின்றபோது நாம் எதனையும் செய்யாது வேடிக்கை பார்க்க முடியாது. இதனால் தான் மக்களின் துன்பங்களில் எடுத்துக்கூற நான் முயன்றேன்.

இதனால் தென்பகுதியில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளதனால் எனது அமைச்சுப் பதவியினை மக்களுக்காக மகிழ்ச்சியுடன் இராஜினாமாச் செய்துள்ளேன்.

எனது மக்களுக்காக குரல் எழுப்பியமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பிலான எத்தகைய விசாரணைகளையும் எதிர்கொள்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.

வடக்கு மக்கள் எம்மை தமது பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்காகவுமே தெரிவுசெய்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் துன்பப்படும்போது நாம் பேசாதிருக்க முடியாது.

வடக்கில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை மற்றும் வன்முறைகள் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தி மக்கள் அச்சமின்றி அமைதியாக வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்.

அவ்வாறான சூழல் ஏற்படுவதற்கு அரசாங்கமானது உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆறு வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்டமை போன்ற சம்பவங்கள் இனிமேலும் தொடரக்கூடாது.

மக்களுக்காக அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளமை தொடர்பில் நான் பெருமை கொள்கின்றேன் என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.tamilwin.com/politics/01/187308?ref=home-latest

  • கருத்துக்கள உறவுகள்

வாயை வைச்சுக்கொண்டு சும்மா இருக்கமுடியாதென்றால் இப்படித்தான் நடக்கும். மக்களுக்காக என்பதெல்லாம் சுத்த அபத்தம். 

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா சுவிஸ் குமாரை கொழும்புக்கு அரக்கிய போதே அக்காவின்ட சாயம் வெளுத்து போச்சு , அக்கா ஒரு அடி மக்கு பீஸ் 
ஒழுங்காக வாதத்தை அடுக்கியிருந்தால் இந்த பிரச்சினையில் எதிர்த்தரப்பை மண் கவ்வ வைத்திருக்கலாம் , கதைத்து போட்டு திரித்து விட்டார்கள் 
துருத்தி விட்டார்கள் என்று குஸ்தி அடித்தால் எடுபடாது .பிள்ளைப்பூச்சிக்கு கொடுக்கு முளைத்தது போல் எல்லா டிவி காரனும் ஆளுக்கு போனை போட்டு மாறி மாறி  களட்டுறானுகள். அக்காவுக்கு அவ்வளவு தான் சரக்கு  

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அக்கா சுவிஸ் குமாரை கொழும்புக்கு அரக்கிய போதே அக்காவின்ட சாயம் வெளுத்து போச்சு , அக்கா ஒரு அடி மக்கு பீஸ் 
ஒழுங்காக வாதத்தை அடுக்கியிருந்தால் இந்த பிரச்சினையில் எதிர்த்தரப்பை மண் கவ்வ வைத்திருக்கலாம் , கதைத்து போட்டு திரித்து விட்டார்கள் 
துருத்தி விட்டார்கள் என்று குஸ்தி அடித்தால் எடுபடாது .பிள்ளைப்பூச்சிக்கு கொடுக்கு முளைத்தது போல் எல்லா டிவி காரனும் ஆளுக்கு போனை போட்டு மாறி மாறி  களட்டுறானுகள். அக்காவுக்கு அவ்வளவு தான் சரக்கு  

அண்மையில்  கொலை செய்யப் பட்ட சிறுமியின் மரணத்தை... 
அது கொலை அல்ல தற்கொலை என்று அக்கா சொன்னவராம். 
அக்காவுக்கு...  அரசியல் அறிவு மட்டும் அல்ல, மக்களின் உணர்வு அறிந்தும் பேசத் தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people smiling

அடேங்கப்பா.... இதற்கும், சுவரொட்டி (நோட்டீஸ்)   அடித்து விட்டார்கள்,  தமிழ் பேசும் மக்கள். :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.