Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆளைப் பார்த்து ரேட்டை சொல்லுங்க’- அதிரவைக்கும் வவுனியா விபசார வலையமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘ஆளைப் பார்த்து ரேட்டை சொல்லுங்க’- அதிரவைக்கும் வவுனியா விபசார வலையமைப்பு

June 29, 2018
IMG_8612-696x720.jpg

வவுனியா நகரத்தில் அடிக்கடி நடமாடுபவரா நீங்கள்?
அப்படியென்றார் நாம் சொல்லும் விடயங்கள் உங்களிற்கு அதிர்ச்சியளிக்காது. அடிக்கடி நீங்களும் பார்த்திருப்பீர்கள். நகரத்தின் முக்கிய முடுக்குகள், பேரூந்து நிலையம், ஆளரவற்ற இடங்களில் அடிக்கடி எதிர்ப்படும் முகங்களை மனதில் பதிய வைத்திருப்பீர்கள். அந்த முகங்கள் பற்றிய சித்திரத்தையும் உருவாக்கி வைத்திருப்பீர்கள்.

ஆனால் வவுனியாவிற்கு வரும் புதியவர் ஒருவர் நிச்சயம் நிலை தடுமாறிவிடுவார். கண்ணசைவு, உதட்டு சுழிப்பு என நகரத்தின் ஓரங்களில் நிற்கும் இளம்பெண்களின் சைகை அழைப்புக்கள் அவர்களை நிலைகுலைய வைக்கும். வடக்கு, கிழக்கில் இவ்வளவு பகிரங்கமாக பெண்கள் அழைப்பு விடுப்பதை அவர்கள் பார்த்தேயிருக்க மாட்டார்கள்.

ஆம். வவுனியாவில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழிலின் கறுப்பு பக்கங்களிற்குள் உங்களை அழைத்து செல்கிறோம். நகரத்தின் சனசந்தடியான இடங்களில் பகிரங்கமாக உலாவும் பாலியல் தொழிலாளிகள், தரகர்கள் மற்றும் பாலியல் தொழில் நடக்கும் விடுதிகள் பற்றிய அதிர்ச்சி தகவல்களின் தொகுப்பு இது.

வவுனியா மூவின மக்களின் சந்திப்பு புள்ளி. மூவின மக்கள் செறிந்து வாழும் பகுதிகளை இணைக்கிறது. வவுனியாவிலும் மூவின மக்களும் செறிந்து வாழ்கின்றனர். இனநல்லிணக்கம் பற்றி பேசப்படும் இன்றைய காலத்தில், மூவினத்தவர்களும் அமைதியாக வாழும் வவுனியாயை முன்னுதாரணமாக காட்டுபவர்களும் உள்ளனர். ஆனால், இந்த சங்கமத்தின் மறுபக்கங்களில் ஒன்றே கொடிகட்டிப்பறக்கும் பாலியல் தொழில்.

வடக்கின் நுழைவாசல் வவுனியா. அதாவது, தெற்கின் பின்கதவு. சட்டவிரோத காரியங்களை பின்கதவால் செய்வதாக கூறுவார்கள். வவுனியாவிலும் அதுதான் நடக்கிறது. வவுனியாவின் எல்லையோர கிராமங்கள், மதவாச்சி பகுதிகளிலிருந்து வவுனியா நகரத்திற்கு பல்வேறு தேவைகளிற்காக வருவதைபோல நாகரிகமாக உடுத்திக்கொண்டு வரும் சிங்கள இளம்பெண்கள் பலர், வவுனியா நகரத்தில் எடுக்கும் மறுஉருவமே பாலியல் தொழிலாளிகள்!

IMG_8604-566x400-300x212.jpg

இதனால் இன்று வவுனியா நகரமே கலாசாரத்தின் கறுப்பு பக்களில் குறிப்பிடப்படும் இடமாகி வருகிறது. நகரத்தில் ஒரு பாலியல் தொழிலாளியிடம் போக வேண்டுமென்றால் எந்த சிரமமும் இல்லாமல் உடனடியாக தொடர்புகொள்ளத்தக்கதாக நிறைந்து வழிகிறார்கள். இவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் தூர இடங்களை சேர்ந்த சிங்கள யுவதிகள். தமிழில் கொச்சையாக பேசுவார்கள். இதைவிட, பாலியல் தொழிலாளிகளிடம் வாடிக்கையாளர்களை கொண்டு செல்வதற்கு நிறைய தரகர்களும் நகரத்தில் இருக்கிறார்கள். இவர்களில் கணிசமானவர்கள் தமிழர்கள்.

மத்திய பேரூந்து நிலையம், உள்வட்ட வீதி, முதலாம் குறுக்குதெரு, இரண்டாம் குறுக்குத்தெரு, இலுப்பையடி என மக்கள் அதிகமாக நடமாடும் பிரதேசங்களில் இவர்களை அதிகமாக காணலாம். 18 வயது தொடக்கம் 25 வயது வரையான யுவதிகள் வீதிக்கரைகளில் நிற்பார்கள். இவர்களின் தோற்றம் புதியவர்களிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தாது. தூர இடங்களிற்கு செல்லும் பயணிகளை போல பயணபொதிகளை வைத்துக்கொண்டோ, வவுனியா உயர்கல்வி நிறுவனங்களில் கற்பவர்களை போன்றோதான் பெரும்பாலும் தோற்றம் அளிப்பார்கள்.

வீதியோரம் நின்றபடி ஒவ்வொருவரையும் நுணுக்கமாக அவதானிக்கிறார்கள். தமது கணக்கு சரியென உணரும் ஆண்களை கண்ஜாடை காட்டி அழைப்பார்கள். சற்று ஆளரவம் குறைந்த அல்லது இருளான சமயம் என்றால் கடந்து போகும் ஆணின் கையை எட்டிப்பிடித்து விடுகிறார்கள்.

பாலியல் தொழிலாளிகளாக வவுனியாவிற்கு வரும் சிங்கள யுவதிகள் பெரும்பாலானவர்களிற்கு தமிழில் கொச்சையாகவாவது பேச தெரிகிறது. இவர்களை விட, மிகக்குறைந்தளவிலான தமிழ் யுவதிகளும் உள்ளனர். இவர்களில் சிலர் வவுனியாவை சேர்ந்தவர்கள். இன்னும் சிலர் முல்லைத்தீவு, கிளிநொச்சியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் பேசும்போது, யுத்தப் பாதிப்புக்கள்தான் தம்மை பாலியல் தொழிலை நோக்கி தள்ளியதாக கூறுகிறார்கள். எனினும், பேரூந்து நிலைய சுற்றுவட்டாரத்தில் நடமாடும் பாலியல் தொழிலாளிகளாக இருப்பவர்கள் சிங்கள யுவதிகளே.

கண் ஜாடையாலோ, கையைப் பிடித்தோ ஓரம்கட்டும் ஆண்களிடம் தயக்கமில்லாமல் நேரடியாகவே டீலை பேசுகிறார்கள். ‘ஒரு மணித்தியாலத்திற்கு எவ்வளவு தருவியள்?’ என பேரத்தை ஆரம்பிக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் 5000 ரூபாவிலிருந்தே ஆரம்பிக்கிறார்கள். ஆகக்குறைந்த தொகை 2000 ரூபா. வயது, அழகு, தோற்றம் பணத்தை தீர்மானிக்கிறது.

பேரம் படிந்தால் முச்சக்கரவண்டிகளில் சில விடுதிகளிற்கு செல்கிறார்கள். நம்பிக்கையான- பாலியல் தொழில் வலையமைப்பில் உள்ள முச்சக்கரவண்டிகளைத்தான் இதற்கு பாவிக்கிறார்கள். முதலாம் குறுக்குத்தெரு, தேக்கவத்தை பகுதிகளில் உள்ள சில விடுதிகள்தான், வவுனியா நகரத்தின் நடமாடும் பாலியல்தொழிலாளிகளின் நம்பிக்கைக்கு பத்திரமான இடங்கள்.

பாலியல் தொழிலாளிகளின் தொலைபேசி இலக்கங்கள் இப்பொழுது வவுனியாவில் பரவலடைந்து விட்டன. ஒரு பாலியல் தொழிலாளியுடன் பேசியபோது, தனக்கு தொலைபேசி மூலமாகவே அதிக வாடிக்கையாளர்கள் வருவதாக கூறினார். தொலைபேசி இலக்கத்தை எப்படி பரவலடைய வைத்தீர்கள் என்றதற்கு, வாடிக்கையாளர்களிடம் சிலகாலம் கொடுத்ததும் அது பரவலடைந்து விட்டதென்றார்.

இதைவிட இன்னொருவிதமாகவும் பாலியல் தொழில் நடக்கிறது. இது பெருமெடுப்பிலான ஏற்பாடு. வவுனியா நகரம், தேக்கவத்தையிலுள்ள சில விடுதிகளால் நடத்தப்படும் பாலியல் தொழில். சிங்கள பகுதிகளிலிருந்து அழகிய இளம் யுவதிகளை அழைத்து வந்து தமது விடுதிகளில் தங்கவைக்கிறார்கள். பின்னர், நகரத்தில் சில தரகர்களின் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்க்கிறார்கள். ஒரு வாடிக்கையாளரை அழைத்து சென்றால் 1,000- 3,000 ரூபாய் வரை ஒரு தரகர் பெறுகிறார். நகரத்தில் தரகர்களாக அலைபவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள்தான். நகரத்திற்கு வருபவர்களை மடக்கி, விடுதிக்கு அழைத்து சென்றுவிடுவார்கள்.

IMG_8605-300x216.jpg

ஒருமுறை இவர்களுடன் பேச ஆரம்பித்தாலே விட மாட்டார்கள். பின்னாலேயே வந்து நச்சரிப்பார்கள். ‘சேர்…சேர்… வந்து பாருங்க. ஆளைப்பார்த்திட்டு மிச்சத்தை சொல்லுங்க. ரேட்டையும் அங்கயே பேசலாம்’ என ஆட்களிற்கு மத்தியில் அவர்கள் கொடுக்கும் தொல்லையிலேயே பாதிப்பேர் சத்தமில்லாமல் கூடச் சென்றுவிடுவார்கள்.

இந்த விடுதிகளில் மிக அதிக கட்டணம் அறவிடப்படுகிறது. மணித்தியாலத்திற்கு 10,000- 50,000 ரூபா வரை அறிவிடுகிறார்கள். இதில் ஒரு பகுதி பாலியல் தொழிலாளிக்கும், ஒரு பகுதி தரகருக்கும் செல்ல, எஞ்சியதை விடுதிகள் எடுத்துக்கொள்கின்றன. அதிக வருமானம் ஈட்டுவதற்காக அழகிய, இளம் யுவதிகளை அழைத்து வந்து, கட்டணத்தை உயர்த்தி கேட்பதாக ஒரு தரகர் கூறினார். அந்த தரகர் தமிழ் பக்க செய்தியாளரிடம் கூறிய இன்னொரு அதிர்ச்சி தகவல்- வவுனியாவில் உள்ள பிரபல வர்த்தகர்கள் சிலரை குறிவைத்தே இந்த விடுதிகள் இயங்குகிறதாம்.

வவுனியா நகரத்தில் பாலியல் தொழில் இவ்வளவு பகிரங்கமாக நடந்தும், காவல்த்துறை ஏன் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறது? பாலியல் தொழிலை வவுனியாவில் அங்கீகரித்து விட்டார்களா என்ற கேள்வி எழுகிறது. பேரூந்து தரிப்பிடம் மற்றும் நகரப்பகுதிகளில் பொலிசாரின் நடமாட்டம் அதிகளவில் இருந்தும், எப்படி பாலியல் தொழிலாளிகள் சுதந்திரமாக நடமாடி, வாடிக்கையாளர்களை பிடிக்கிறார்கள்?

ஆபத்தான புற்றுநோயாக வவுனியா நகரத்தில் வளர்ந்துவரும் பாலியல்தொழிலை கட்டுக்குள் கொண்டு வருவதே, ஆரோக்கியமானதும், கண்ணியமானதுமான சமூகத்தை உருவாக்க செய்ய வேண்டிய முதல்பணி. போலிசார் தொடக்கம் பொதுமக்கள்வரை அனைவரும் இதில் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும்.

http://www.pagetamil.com/9946/

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாடு தனது மக்களுக்கான வாழ்க்கை மேம்பாட்டை கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களின் தேவைகளுக்கான சமூக நலத் திட்டங்களை உருவாக்க வேண்டிய கடமை ஒவ்வொருஅரசாங்கத்துக்கு இருக்கிறது.

 வீதியில் நிற்கும் பெண்கள் தங்கள் வாழ்வுக்காகவே இந்தத் தொழிலுக்கு வருகிறார்கள். அடிப்படையை புரிந்து கொள்ளாமல், “குய்யோ முறையோஎன்று கத்துவதால் பிரயோசனம் இல்லை.

கிழக்கு ஐரோப்பாவில் கொம்யூனிசத்தில் இருந்து வெளியே வந்த  பல நாட்டுப் பெண்கள் வேறு வழி இல்லாததால் இந்த தொழிலுக்கு வரவேண்டி இருந்தது. அதிலும் போலந்து, யூக்கஸ்லோவியா, செக் நாட்டுப் பெண்களின் நிலமைகள்  மோசமாக இருந்தன.

போரானாலும், பொருளாதாரமானாலும் பாதிக்கப் படுவது என்னவோ பெண்கள்தான்.

இப்படியானவர்களை காணும் போது அவர்கள் மீது இரக்கமும் கவலையும்தான் வரவேண்டுமே தவிர கோபம் கொள்வதில் அர்ததம் இல்லை?

  • கருத்துக்கள உறவுகள்

90 களிலேயே இதை நாம் கடந்து வந்தோம். pagetamil ற்கு இப்போது தான் தெரிந்துள்ளது. ஆனால் ஒரு வித்தியாசம் அப்போது வடக்கு தமிழர்கள் இல்லை என்றே கூறலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நடக்காததா என்ன இந்த தொழில் இந்தியாவில் அங்கிகரிக்கப்பட்டுள்ளது இங்கு இன்னும் இல்லை ஆனால் இவை சிலருக்கு பாலியல் தேவைகளை ப்பூர்த்தி செய்கிறது சிலருக்கு பணத்தேவைகளை பூர்த்தி செய் கிறது  இருந்தாலும் குற்றம் ஆனாலும் சிறுவர் சிறுமி மீது  நடக்கும் வண்புணர்வுகள் குறையக்கூடிய சந்தர்ப்பங்களுமுண்டு ( எனக்கு தோன்றுகிறது )

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கையில் நடக்காததா என்ன இந்த தொழில் இந்தியாவில் அங்கிகரிக்கப்பட்டுள்ளது இங்கு இன்னும் இல்லை ஆனால் இவை சிலருக்கு பாலியல் தேவைகளை ப்பூர்த்தி செய்கிறது சிலருக்கு பணத்தேவைகளை பூர்த்தி செய் கிறது  இருந்தாலும் குற்றம் ஆனாலும் சிறுவர் சிறுமி மீது  நடக்கும் வண்புணர்வுகள் குறையக்கூடிய சந்தர்ப்பங்களுமுண்டு ( எனக்கு தோன்றுகிறது )

நான்  உங்களுடன் வவுனியாவுக்கு போய் வந்ததின் பின்னரும் பலதடவை போய் வந்துள்ளேன் - நான் இப்படியானவர்களைக் காணவில்லை.

நீங்களும் என்னுடன் சேர்ந்து வந்தபோதும்  கண்டதா சொல்லவில்லை.

நாமிருவர் மட்டும் குருடா

இல்லை Pagetamil க்கு மட்டும்தான் இது தெரியுதா?

யாமறியோம் பராபரமே 

2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

41 minutes ago, ஜீவன் சிவா said:

உங்கள் இருவரின் தவத்தையும் அவர்கள் கலைக்க விரும்பாமல் இருந்திருக்கலாம் பாஸ்......!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

நான்  உங்களுடன் வவுனியாவுக்கு போய் வந்ததின் பின்னரும் பலதடவை போய் வந்துள்ளேன் - நான் இப்படியானவர்களைக் காணவில்லை.

இல்லை Pagetamil க்கு மட்டும்தான் இது தெரியுதா?

யாமறியோம் பராபரமே 

நல்லவர்கள் கண்களில் நல்லன மட்டும்தான் தெரியும்! பொல்லாதவர்கள் கண்களில் இப்படியான பலான விடயங்கள் பக்கென்று பிடிபட்டுவிடும். ஃபோட்டோ எல்லாம் எடுத்துப் போட்டிருக்கின்றார்கள்தானே!?

On 7/6/2018 at 9:21 AM, கிருபன் said:

வவுனியா நகரத்தில் பாலியல் தொழில் இவ்வளவு பகிரங்கமாக நடந்தும், காவல்த்துறை ஏன் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறது? பாலியல் தொழிலை வவுனியாவில் அங்கீகரித்து விட்டார்களா என்ற கேள்வி எழுகிறது. பேரூந்து தரிப்பிடம் மற்றும் நகரப்பகுதிகளில் பொலிசாரின் நடமாட்டம் அதிகளவில் இருந்தும், எப்படி பாலியல் தொழிலாளிகள் சுதந்திரமாக நடமாடி, வாடிக்கையாளர்களை பிடிக்கிறார்கள்?

குறிப்பாக இலங்கைத் தமிழ் வாசகர்களின் பலவீனத்தை இந்த இணையம் தனது பிரபலத்திற்கும் சம்பாத்தியத்துக்கும் பயன்படுத்த முனைகின்றது. பாலியல் சார்ந்த புரளிகள் கலாச்சாரம் கெடுகின்றது என்ற செய்திகள் வதந்திபோல் பரவவல்லது. சற்று தள்ளி நிற்கும் ஆணும் சரி இந்த பெண்களும் சரி பைகளுடன் நிற்பது பயணத்துக்கானதக் கூட இருக்கலாம். இந்த செய்திக்கு எந்த அடிப்படை ஆதாரமும் கிடையாது. மேலே இவர் கேட்க்கும் கேள்விகள் கேணைத்தனமாக உள்ளது. இவ்வளவு காவல்துறை ராணுவம் கடற்படை என அனைத்துப் படைகளும் இருந்தும் யாழில் இத்தனை வாள்வெட்டு நடக்கின்றது அங்கே இல்லாத கேள்விகள் இங்கே என்ன இருக்கின்றது. ஒரு சிறுபான்மை இனம் என்னுமொரு பெரும்பான்மை இனத்திடம் அடிமைப்பட்டுக் கிடப்பதை மறந்து கேட்கப்படுகினறது. 

சிங்கள குடியேற்றங்கள் வாள்வெட்டுக்கள் காணாமல் போனோர் பிரச்சனை வறுமை இன்னும் இருப்பிடத்தை அடையமுடியாத நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஊனமுற்ற மக்களின் நலன்கள் போர்க்குற்றம் என வாழ்வே ஸ்திரமற்ற நிலையில் புலம்பெயர் தேசத்தில் இருந்துகொண்டு வவுனியாவில் ஒலாச்சாரத்தை காப்பாற்றுவது ரெம்ப முக்கியம்  ! 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஜீவன் சிவா said:

நான்  உங்களுடன் வவுனியாவுக்கு போய் வந்ததின் பின்னரும் பலதடவை போய் வந்துள்ளேன் - நான் இப்படியானவர்களைக் காணவில்லை.

நீங்களும் என்னுடன் சேர்ந்து வந்தபோதும்  கண்டதா சொல்லவில்லை.

நாமிருவர் மட்டும் குருடா

இல்லை Pagetamil க்கு மட்டும்தான் இது தெரியுதா?

யாமறியோம் பராபரமே 

ம்ம் நான் காண வில்லை நான் வந்தநேரமும் இரவு 12 மணியளவில் இருக்கும் வவுனியாவில் நான் அப்படியானவர்களை நான் காணவில்லை தான் ஆனால் செய்திகளும் பார்வையாளர்களையும் வாசிப்பவர்களையும் தூண்ட வேண்டும் அல்லவா கொழும்பில் கண்டுள்ளேன் இப்படியானவர்களை 

10 hours ago, Athavan CH said:

உங்கள் இருவரின் தவத்தையும் அவர்கள் கலைக்க விரும்பாமல் இருந்திருக்கலாம் பாஸ்......!

ஹாஹா ம்ம் இருக்கலாம் யாருக்கு தெரியும் 

8 hours ago, கிருபன் said:

நல்லவர்கள் கண்களில் நல்லன மட்டும்தான் தெரியும்! பொல்லாதவர்கள் கண்களில் இப்படியான பலான விடயங்கள் பக்கென்று பிடிபட்டுவிடும். ஃபோட்டோ எல்லாம் எடுத்துப் போட்டிருக்கின்றார்கள்தானே!?

ம் இதை படம்  எடுத்தவருக்கு எப்படி தெரியுமோ அவர்கள் விலைமாதுகள் என்று ஒரு கேள்வியும் எழுகிறது என் மனதினுள்  

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை ஒன்றை கவனித்தால் தெரியும் தாயகத்தில் நடக்கும் பாதகமான விடையங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வரும்.ஆனால் அங்கு சிறிய அளவிலாவது எம்மவர்களின் முயற்ச்சிகள் வெளிவருவதில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, சண்டமாருதன் said:

குறிப்பாக இலங்கைத் தமிழ் வாசகர்களின் பலவீனத்தை இந்த இணையம் தனது பிரபலத்திற்கும் சம்பாத்தியத்துக்கும் பயன்படுத்த முனைகின்றது. பாலியல் சார்ந்த புரளிகள் கலாச்சாரம் கெடுகின்றது என்ற செய்திகள் வதந்திபோல் பரவவல்லது. சற்று தள்ளி நிற்கும் ஆணும் சரி இந்த பெண்களும் சரி பைகளுடன் நிற்பது பயணத்துக்கானதக் கூட இருக்கலாம். இந்த செய்திக்கு எந்த அடிப்படை ஆதாரமும் கிடையாது. மேலே இவர் கேட்க்கும் கேள்விகள் கேணைத்தனமாக உள்ளது. இவ்வளவு காவல்துறை ராணுவம் கடற்படை என அனைத்துப் படைகளும் இருந்தும் யாழில் இத்தனை வாள்வெட்டு நடக்கின்றது அங்கே இல்லாத கேள்விகள் இங்கே என்ன இருக்கின்றது. ஒரு சிறுபான்மை இனம் என்னுமொரு பெரும்பான்மை இனத்திடம் அடிமைப்பட்டுக் கிடப்பதை மறந்து கேட்கப்படுகினறது. 

சிங்கள குடியேற்றங்கள் வாள்வெட்டுக்கள் காணாமல் போனோர் பிரச்சனை வறுமை இன்னும் இருப்பிடத்தை அடையமுடியாத நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஊனமுற்ற மக்களின் நலன்கள் போர்க்குற்றம் என வாழ்வே ஸ்திரமற்ற நிலையில் புலம்பெயர் தேசத்தில் இருந்துகொண்டு வவுனியாவில் ஒலாச்சாரத்தை காப்பாற்றுவது ரெம்ப முக்கியம்  ! 

தமிழ்ப்பக்கம் தினமுரசு பாணியிலான செய்திகளையும், கவர்ச்சிகரமான விடயங்களையும், புலிகளின் கதைகளையும்  வெளியிட்டு தம்மை பிரபல்யப்படுத்துவது உண்மை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.