Jump to content

துடி­து­டித்து சாவைத் தழு­விய 147 பேர் – நவா­லிப் படு­கொலை – 23 ஆம் ஆண்டு நினை­வு­ நாள் இன்று!!


Recommended Posts

துடி­து­டித்து சாவைத் தழு­விய 147 பேர் – நவா­லிப் படு­கொலை – 23 ஆம் ஆண்டு நினை­வு­ நாள் இன்று!!

 

 

navali-church-750x430.jpg

 
 
 

இலங்கை வான்­ப­டை­யின் வானூர்­தித் தாக்­கு­த­லில் ஒரே தட­வை­யில் 147 பேரைக் காவு­ கொண்ட நவா­லிப் படு­கொ­லை­யின் 23ஆவது நினைவு நாள் இன்­றா­கும்.

1995ஆம் ஆண்டு இதே நாளில், ‘லீப்­டோர் வேர்ட்’ என்ற முன்­னோக்­கிப் பாய்­தல் இரா­ணுவ நட­வ­டிக்­கை­யி­னால், நவா­லி­யில் மக்­கள் ஏதி­லி­க­ளாக தஞ்­ச­ம­டைந்­தி­ருந்­த­னர். இலங்கை வான்­ப­டை­யின் வானூர்தி 13 குண்­டு­க­ளைத் தொடர்ச்­ சி­யாக அந்த மக்­கள் மீதும், அவர்­கள் தஞ்­ச­ம­டைந்­தி­ருந்த ஆல­யங்­கள் மீதும் வீசி­யது.

வான்­ப­டை­யின் ஈவு­இ­ரக்­க­மற்ற இந்­தக் குண்­டு­வீச்­சில், சிறு­வர்­கள், இளை­ஞர்­கள், முதி­ய­வர்­கள், பணி­யா­ளர்­கள் எனப் பல­ரும் துடி­து­டித்து ஒரு நொடிப் பொழு­தில் சாவைத் தழு­விய கொடூ­ரம் அரங்­கே­றி­யது.

 

இந்­தத் தாக்­கு­த­லில் சாவைத் தழு­வி­யோர் நினை­வாக, நவாலி சென். பீற்­றர்ஸ் தேவா­ல­யத்­தி­லும், நவாலி சின்­னக் கதிர்­கா­மம் முரு­கன் ஆல­யத்­தி­லும் இன்று சிறப்­புப் பூசை வழி­பா­டு­கள் நடை­பெ­ற­வுள்­ளன. நவா­லிப் படு­கொலை சின்­னங்­க­ளி­லும் ஞாப­கர்த்த ஒளி­யேற்­றப்­ப­டும்.

‘வானூர்­தித் தாக்­கு­தல்­க­ளால் கொல்­லப்­பட்­ட­வர்­கள், காய­ம­டைந்­த­வர்­கள், சிறப்­புத் தேவை­யு­டை­யோர்­கள், வீடு­களை இழந்­த­வர்­கள், சொத்­துக்­களை இழந்­த­வர்­க­ளது பெயர் விவ­ரம் அர­சால் கோரப்­பட்­டதே தவிர இது­வரை அழி­வுக்­க­ளுக்­கான நீதியோ, உத­வியோ கிடைக்­க­வில்லை’ என்று 23ஆவது ஆண்­டி­லும் பாதிக்­கப்­பட்ட உற­வு­கள் கண்­ணீ­ரு­டன் கருத்­துக்­க­ளைப் பகிர்ந்து கொள்­கின்­ற­னர்.

http://newuthayan.com/story/09/துடி­து­டித்து-சாவைத்-தழு­விய-147-பேர்-நவா­லிப்-படு­கொலை-23-ஆம்-ஆண்டு-நினை­வு­-நாள்-இன்று.html

Link to comment
Share on other sites

புக்காரா குண்டுகள்! இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்!

 
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…
St.Peters-Church-in-Navaly1.jpg?resize=6
 
இப்போதும் வானத்தில் ஏதேனும் அதிர்வைக் கண்டால் அஞ்சுகிறோம். தூரத்தில் மிதக்கும் பறவைகள்கூட விமானங்களைப் போல அச்சுறுத்துகின்றன. வானத்தை கண்டு அஞ்சியவர்கள் நாங்கள். வானத்தை பார்க்காது இருட்டில் கிடந்தவர்கள் நாங்கள். புக்காரா என்றொரு சொல் எங்கள் தூக்கத்தை கலைந்திருந்தது. புக்காரா என்றொரு சொல் எங்களை கனவுகளில் துரத்தியது. இலங்கைப் பிஜைகள் என்று அழைக்கப்பட்ட  எங்கள்மீது, இந்த தீவின் அரசு எமக்குமான அரசு என்று சொல்லப்பட்ட நிலையில், இத் தீவின் தலைநகர் என்று சொல்லப்பட்ட கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்ட குண்டுகளை எங்கள்மீது உருட்டித் தள்ளியவை புக்காரா.
 
இலங்கை அரசின் புக்காரா விமானங்களின் இனப்படுகொலை வேட்டைகளில் ஒன்றுதான் நவாலி தேவாலயப் படுகொலைஇன்று அதன் நினைவுநாள்.
 
இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கா குமாரதூங்க நவாலிப் படுகொலைக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். நவாலிப்படுகொலை நடைபெற்று இருபது வருடத்தின் பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்தார். அந்தப் படுகொலை இடம்பெற்றபோது ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா, இராணுவத்தையும், விமானப்படையையும் நோக்கி உரத்துக் கத்தியதாகவும் இலங்கையின் ஆட்சி மாற்றத்தின் பின்னர் கூறியிருந்தார்.
 
உண்மையில் நவாலிப்படுகொலை என்பது ஈழத் தமிழ் மக்களால் மறக்க முடியாத வடு. வலிகாமம் பகுதியில் இலங்கை அரச படைகள் முன்னேறிப் பாய்தல் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த காலத்தில் அந்த படை நடவடிக்கை்கு சாதகம் தேடும் பொருட்டு நடத்தப்பட்டது. 1995ஆம் ஆண்டு. ஜூலை ஒன்பதாம் நாள். பலாலி, அளவெட்டிப் பகுதிகளிலிருந்து தாக்குதல் நடவடிக்கையை இலங்கை அரச படைகள் தொடங்கின. நிலைகுலைந்த மக்கள் இடம்பெயரத் தொடங்கினர்.
 
கையில் அகப்பட்டவற்றை எடுத்தபடி, உடுத்த உடையுடன் வெளியேறிய மக்கள் தமது உயிரை பாதுகாக்கும் பொருட்டு தஞ்சம் தேடி அலைந்தனர். இடம்பெயர்ந்த மக்கள் நவாலி சென் பீற்றர்ஸ் ஆலயத்திலும் நவாலி சின்னக் கதிர்காமம் முருகன் ஆலயத்தில் தங்கி இளைப்பாறி தாகம் தீர்த்தவேளையில்தான் மாலை 5.45 மணியளவில் கொடிய புக்கார குண்டு வீச்சு விமானங்கள் நவாலிசென்பீட்டர் ஆலயத்தில் குண்டுகளை சொரிந்தன. யாழ் நகரத்திலிருந்து அராலி நோக்கி வந்த விமானங்கள் 13 குண்டுகளை அந்த ஆலயத்தின்மீீது கொட்டி வெறி தீர்த்தன.
 
இலங்கை அரசாங்கம் போராளிகளை நிலைகுலையச்  செய்வதற்காக அப்பாவி மக்கள்மீது சட்டவிரோதமான முறையில் குண்டுகளை வீசி தமிழ் மக்களை இனப்படுகொலைசெய்கிறது என்பதை இந்த தாக்குதல் அம்பலப்படுத்தியது. இந்த இனப்படுகொலைத் தாக்குதலில் 147 பொதுமக்கள் அழிக்கப்பட்டார்கள். சுமார் 360க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். வயோதிபர்கள், குழந்தைகள், பெண்கள் என்று ஆலய வாசல்களிலும் முற்றங்களிலும் மக்கள் கொன்று வீசப்பட்ட அந்தக் காட்சிகளை தமிழ் மக்களின் மனங்களிலிருந்து என்றும் அழி்க்க முடியாது.
St.Peters-Church-in-Navaly2.jpg?resize=8
உயிரை பாதுகாக்க தஞ்சம் தேடி வந்த மக்களை ஆலயங்களின் முன்னால் வைத்து படுகொலை செய்தது இலங்கை அரசு. அலைந்தோடி வந்த மக்கள், கையின்றியும், காலின்றியும் துடித்துக் கிடந்தனர். மக்கள் தொண்டாற்ற வந்த 48 தொண்டர்களும் அந்த இடத்தில துடித்து இறந்தார்களாம். நவாலி கிராமே இந்த இன அழிப்பு விமானத் தாக்குதலால் அதிர்ந்தது. கிராமாம் முழுவதும் தசைத் துண்டுகளும் குருதியும் தெறித்தனவாம். இலங்கை அரசு எமது அரசல்ல என்றும் எமது அரசாக இருந்தால், அது மக்களை கொன்றிராது என்றும் ஈழத் தமிழ் மக்களை உணர வைத்த, ஆழப் படிந்த இனப்படுகொலைகளில் இதுவும் ஒன்றானது.
 
இலங்கையில் தமிழ் மக்கள் இவ்வாறு பல இனப்படுகொலைகளை சந்தித்து வந்திருக்கிறார்கள். பெரும்பாலும் இலங்கை ஆட்சியாளர்கள் தமிழ் இனப்படுகொலைகளை ஏற்பதில்லை. அதை ஒரு புனித யுத்தம் என்றும் அதை ஒரு வெற்றி யுத்தம் என்றுமே சித்திரிப்பதுண்டு. நாவாலிப் படுகொலைக்கு இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இன்று கூறினாலும் இந்த சம்பவம் இடம்பெற்று இருபது வருடங்களின் பின்னர், தான் ஆட்சியை இழந்து பத்து வருடங்களின் பின்னர், இலங்கையில் ஒரு ஆட்சி மாற்ற அரசியல் –  தேர்தல் காலத்தில்தான் அவர் இப்படிப் பேசியுள்ளார் என்ற அடிப்படையிலும் இதனைப் பார்க்க வேண்டும்.
 
நவாலிப்படுகொலையில் அழிக்கப்பட்ட மக்களை அந்த மக்கள் ஆண்டு தோறும் நினைவுகூர்ந்து வருகிறார்கள். நவாலி புனித பீற்றர்ஸ் ஆலயத்திலும் நவாலிசின்னக்கதிர்காமம் முருகன் ஆலயத்திலும் மக்கள் நினைவு வழிபாடுகளில் பங்கெடுக்கிறார்கள்.இதேவேளை நவாலி வடக்கு சோமசுந்தரப் புலவர் வீதியிலும், நவாலிசென்.பீற்றர்ஸ் ஆலயப்பகுதியிலும்  அமைக்கப்பட்டுள்ள இனப்படுகொலைச் சின்னங்களிலும் மக்கள் தமது அஞ்சலியை செலுத்துகிறார்கள். அத்துடன் புலம்பெயர் நாடுகளிலும் மக்கள் இந்தப் படுகொலையை நினைவு கூர்கிறார்கள். ஆறாத காயம் இந்தப் படுகொலை.
 
போரை செய்தவர்களும் இனப்படுகொலையை புரிந்தவர்களும் மிக எளிதாக நல்லிணக்கம் பேசுகிறார்கள். உண்மையில் தாம் இழைத்த குற்றங்களை மறைக்கவும் இனப்படுகொலைப் போருக்குப் புனிதம் கற்பிக்கவுமே அவர்கள் நல்லிணக்கம் என்ற போலிக் கோசங்களை எழுப்புகிறார்கள்.  அப்படித்தான் இலங்கை ஆட்சியாளர்களும் நல்லிணக்கம் என்ற வாசகத்தை உச்சரிக்கின்றனர். எம் நெஞ்சில், எம் வரலாற்றில், எம் மண்ணில் பல நவாலிப்படுகொலைகளை உருவாக்கிவிட்டு, அவைகளுக்குப் பொறுப்புக்கூறாமல், மன்னிப்புக் கேட்காமல் பேசும் நல்லிணக்கம் என்பது மிக மிக போலியும் அநீதியுமானது.
 
சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில் பல விமானத் தாக்குதல்கள் நடந்துள்ளன. பாடசாலைகள், மருத்துவமனைகள் என்று குண்டுகள் கொட்டாத இடங்களில்லை. ஒட்டுமொத்தமாக நடந்த இந்த இனப்படுகொலைத் தாக்குதல்கள் குறித்து, ஒரு முன்னாள் ஜனாதிபதி என்ற வகையிலும், முன்யை அரசு என்ற வகையிலும் சந்திரிக்கா பண்டார நாயக்க மன்னிப்பு கேட்க வேண்டும். சந்திரிக்கா பண்டார நாயக்கா இழைத்த இனப்படுகொலைகளை பின்பற்றித்தான் மருத்துவமனைகள்மீதும் பாடசாலைகள்மீதும் பதுங்குகுழிகள்மீதும் போர் தவிர்ப்பு வலயங்கள்மீதும் ராஜபக்சேக்கள் குண்டுகளை கொட்டினர்.
 
போரும், அப்பாவிகள்மீதான விமானத் தாக்குதல்களும் இனப்படுகொலைகளும் தவறானவை,இனியும் அவைகள் இடம்பெறக்கூடாது, இந்த நாட்டில் தமிழ் மக்கள் தமிழ் மக்களாக, அவர்களின் உரிமையுடன், அவர்களின் மண்ணில் அவர்களுக்கான விடுதலையுடன் வாழ, நிலையான நியாயமான தீர்வு ஒன்றை காண நவாலிப்படு இனப்படுகொலைக்குப் பொறுப்பான சந்திரிக்கா, அதற்கு மன்னிப்புக் கோருவதே முதற்படியாக அமையும். இல்லாவிட்டால், இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தப் படுகொலைகளை வடுக்களை சுமந்தபடி இந்த நாட்களை கடப்போம். இருதயத்தில் மீண்டும் மீண்டும் புக்காரக்கள் குண்டுகளை வீசும்.
 
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

http://globaltamilnews.net/2018/86968/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 பகிர்வுக்கு நன்றி ஏன் மிகப் பெரிய எழுத்தாக இருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவாலிப் படுகொலையில் இறந்த மக்களுக்கு அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ச‌வுதி த‌ந்திர‌மாய் செய‌ல் ப‌டுகின‌ம்.......................ஜ‌ரோப்பாவில் கால‌ போக்கில் பெட்ரோல் ஏற்றும‌தி செய்ய‌ ஏலாது க‌ர‌ன்டில் ஓடும் கார் இப்ப‌வே டென்மார்க்கில் ப‌ல‌ர் வேண்டி விட்டின‌ம் என்றால் ஜேர்ம‌ன் போன்ற‌ நாடுக‌ளை சொல்ல‌ வேணும்   ச‌வுதின்ட‌ பிலான் இப்ப‌டி முன்ன‌னி கால்ப‌ந்து வீர‌ர்க‌ளை வேண்டி அவ‌ர்க‌ள் மூல‌ம் உல‌கை த‌ன் ப‌க்க‌ம் திரும்ப‌ பார்க்க‌ வைச்சு சுற்றுலா நாடாக்குவ‌து ரொனால்டோ நீய்மார் வென்சிமா இப்ப‌டி புக‌ழ் பெற்ற‌ வீர‌ர்க‌ளை வேண்டி கால்ப‌ந்தை வ‌ள‌த்த‌ மாதிரியும் இருக்கும் த‌ங்க‌ட‌ நாட்டை சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் வ‌ந்து போகும் நாடாய் ஆக்குவ‌து தான் அவ‌ர்க‌ளின் திட்ட‌ம்.............................   ஓமான் நாட்டு ச‌ட்ட‌ திட்ட‌ம் தெரியாது நான் நினைக்கிறேன் ஓமான் நாட்டு குடியுரிமை வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் தான் அவ‌ர்க‌ளின் நாட்டுக்காக‌ விளையாட‌ முடியும் Qatarஅப்ப‌டி கிடையாது திற‌மையான‌ வீர‌ர் யாராய் இருந்தாலும் ச‌ரி கோடி காசை கொடுத்து த‌ங்க‌ட‌ நாட்டுக்காக‌ விளையாட‌ விடுவாங்க‌ள் உதார‌ண‌த்துக்கு கைப‌ந்து விளையாட்டில்  பிரேசில் நாட்டை சேர்ந்த‌வ‌ர்க‌ள் ம‌ற்றும் ஜ‌ரோப்பிய‌ நாட்டை சேர்ந்த‌வ‌ர்க‌ள் தான் க‌ட்டார் தேசிய‌ அணிக்காக‌ விளையாடுகின‌ம்😁..............................................
    • அதே கட்சி, அதே தீவிர இடதுசாரி அரசியல். பெரிதாக மாற்றம் எதுவும் வரப் போவதில்லை என்றே சொல்லலாம். அந் நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற வகையில் மகிழ்ச்சியடையலாம். ஆனாலும் அந் நாடு பெரும்பாலும் பெரும் போதைப் பொருள், ஆட் கடத்தல் முதலாளிகளாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றது. அமெரிக்காவிற்கு மெக்சிக்கோவால் இரண்டு பெரிய பிரச்சனைகள், பல ஆதாயங்களும் இருக்கின்றன. முதலாவது பிரச்சனை மெக்சிக்கோவில் இருந்து அமெரிக்கா உள்ளே வரும் போதைப் பொருட்கள். இரண்டாவது பிரச்சனை அமெரிக்கா - மெக்சிக்கோ எல்லையூனூடாக அமெரிக்கா உள்ளே வரும் அகதிகள்.  இவை இரண்டுக்கும் எந்த தீர்வோ, முடிவோ இந்தப் புதிய தலைவரால் கிட்டப் போவதில்லை........ 
    • வேணாம் சாமியார்  குழப்பம் இந்தியன் டெல்லி கூட்டத்துக்கு எதோ வகிபாகம் இருக்கும் என்று பங்களிப்பு செய்தேன் ஆனால் அவர்களின் நோக்கம் இந்து கிருத்து வத்துக்குஎதிரான ஒன்று என்று தெரிந்து கொண்டபின் விலகி கொண்டேன் அவ்வளவே என் கருத்து இன்னைக்கு .
    • குத்தியனுக்கு ஏதோ தெரிஞ்சிருக்கு.....  
    • உங்கள் கற்பனை நண்றாக இருக்கிறது ஆனால் யதார்த்தத்தில் அப்படி நடக்காது எனும் அர்த்தத்தில் கருத்துவைத்ததாக கருதுகிறீர்கள் என நினைக்கிறேன், உங்களை விட என்னிடம் அதிகமான கற்பனை உண்டு, கொஞ்சகாலத்தின் பின்னர்  எமது கை கால்களில் விழுந்து எமது உரிமைகளை தருவார்கள் அதுவரை காத்திருக்கலாம் என😁.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.