Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனடாவில் பதற்றம்! பயங்கர துப்பாக்கி சூட்டுச் சம்பவம் - பலர் படுகாயம்

Featured Replies

கனடாவில் பதற்றம்! பயங்கர துப்பாக்கி சூட்டுச் சம்பவம் - பலர் படுகாயம்

 

 

கனடாவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

டொரொன்டோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் 10 பேர் காயமடைந்திருக்கலாம் என உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

Danforth Avenueவுக்கு அருகில் Logan Avenue பகுதிக்கு அருகில், கனேடிய நேரப்படி இன்றிரவு 10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக டொரொன்டோ பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

எனினும் எத்தனை பேர் காயமடைந்துள்ளார்கள் என பொலிஸார் தகவல் வெளியிடவில்லை.

பலர் பலத்த காயமடைந்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 25 துப்பாக்கி சூட்டு சத்தங்கள் தங்களுக்கு கேட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை என டொரொன்டோ ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர் யார் என தெரிந்தால் தகவல் வழங்குமாறு பொலிஸார் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் கேட்டுகொண்டுள்ளனர்.

 

http://www.tamilwin.com/canada/01/188811?ref=home-latest

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் தான் அடிக்கடி துப்பாக்கி சூடு  நடக்குதென்றால்...
அந்த வியாதி.. கனடாவுக்கும், தொற்றி விட்டதா? 

  • தொடங்கியவர்

 

Multiple victims in Toronto shooting - reports

 

Scene of shooting in Toronto. Pic: CTV
Image: A child is among the victims in Toronto, reports say. Pic: CTV

By Sharon Marris, news reporter

At least nine people, including a child, have been shot in the Canadian city of Toronto, according to reports.

The shooting happened just after 10pm local time, when police were called to reports of shots being fired in the Greektown area.

The nine people injured have been taken to hospital and an unconfirmed number of people are being treated at the scene.

According to paramedics quoted in local news reports, the crime scene covers several blocks.

Witnesses told the Toronto Star that a man dressed in black had fired a gun multiple times, some estimating that he fired up to 20 shots.

Jody Steinhauer told CBC News she was at a restaurant with her family when she heard what sounded like 10 to 15 blasts of firecrackers.

She said she was told to run to the back of the restaurant, adding: "We started to hear people scream out front."

https://news.sky.com/story/multiple-victims-in-toronto-shooting-reports-11445969

 

  • கருத்துக்கள உறவுகள்

குறைந்தது 9 பேர் பலி என்று சி என் என் சொல்லுது.

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒருவர் இறந்ததாகவும் 14 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. சுட்டவரும் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தனியான துப்பாகிதாரர் நடத்திய இத்தாக்குதலில் ஒரு 9 வயதுச் சிறுமி கொல்லப்பட்டதாகவும், இன்னும் 10 பேர்வரையில் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். பொலிசாருடனான துப்பாக்கிச் சண்டையில் தாக்குதலாளியும் கொல்லப்பட்டுள்ளார்.

கிரீக் டவுன் எனப்படும் பகுதியில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில், ஒரு கைத்துப்பாகியே பாவிக்கப்பட்டதாகவும், தாக்குதலின்போது அது பலமுறை ரீலோட் பண்ணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இத்தாக்குதல் சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதா இல்லையா என்பதுபற்றி இப்போது கருத்துக் கூற மறுத்துள்ள பொலிஸார், அப்படியிருக்கலாம் என்பதையும் மறுக்கவில்லை.

நேற்று சிரியாவிலிருந்து இஸ்ரேலினால் மீட்டெடுக்கப்பட்ட சுமார் 400 சிரிய அகதிகளை கனடா, ஜேர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் குடியமர்த்தும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகையில் இச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

  • தொடங்கியவர்

டொரன்டோவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, 13 பேர் காயம்

ஒருவர் பலிபடத்தின் காப்புரிமைREUTERS

டொரொன்டோவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளம்பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும், 13 பேர் காயமடைந்ததாக கனடா நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

டேன்ஃபோர்த் மற்றும் லொகன் அவென்யூக்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச்சூட்டில், துப்பாக்கிதாரி ஒருவரும் உயிரிழந்தார்.

இதில் படுகாயமடைந்த சுமார் 8 வயது சிறுமி ஒருவர், ஆபத்தான நிலையில் உள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிலர் அப்பகுதியில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதற்கான நோக்கம் இன்னும் தெரியவில்லை.

13 பேர் காயம்படத்தின் காப்புரிமைTWITTER

அங்குள்ள உணவு விடுதியில் குடும்பத்துடன் இருந்த ஜோடி சிபிசி செய்தியிடம் கூறுகையில், பட்டாசு சத்தம் போல வெடிப்பதை தாம் கேட்டதாக குறிப்பிட்டார்.

உடனே அங்கிருந்த மக்கள் கத்திக்கொண்டு வெளியேறியதை பார்த்ததாக அவர் தெரிவித்தார்.

என்ன நடந்தது?

சிறு சிறு இடைவெளிகளில் சரமாரியாக துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

மொத்தமாக 20ல் இருந்து 30 முறை சுட்டிருப்பார்கள் என்கிறார், அங்கு நடந்து கொண்டிருந்த ஜான். "துப்பாக்கி சத்தத்தை கேட்ட நாங்கள் ஓடிவிட்டோம்" என்று அவர் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/global-44921314

  • தொடங்கியவர்

டொரண்டோவில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி, 12 பேர் காயம்

 
 
ஒருவர் பலிபடத்தின் காப்புரிமைREUTERS

டொரண்டோவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். மேலும், 12 பேர் காயமடைந்ததாக கனடா நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

டேன்ஃபோர்த் மற்றும் லொகன் அவென்யூக்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச்சூட்டில், துப்பாக்கிதாரியும் உயிரிழந்தார்.

இதில் படுகாயமடைந்த சுமார் 8 வயது சிறுமி ஒருவர், ஆபத்தான நிலையில் உள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிலர் அப்பகுதியில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதற்கான நோக்கம் இன்னும் தெரியவில்லை.

டொரண்டோ துப்பாக்கிச்சூடு

அங்குள்ள உணவு விடுதியில் குடும்பத்துடன் இருந்த ஜோடி சிபிசி செய்தியிடம் கூறுகையில், பட்டாசு சத்தம் போல வெடிப்பதை தாம் கேட்டதாக குறிப்பிட்டார்.

உடனே அங்கிருந்த மக்கள் கத்திக்கொண்டு வெளியேறியதை பார்த்ததாக அவர் தெரிவித்தார்.

13 பேர் காயம்படத்தின் காப்புரிமைTWITTER

ஞாயிற்றுக்கிழமை மாலையை உற்சாகமாக கொண்டாடிக்கொண்டிருந்த மக்கள் மீது தொடுக்கப்பட்ட இந்த "வெறுக்கத்தக்க" தாக்குதலை கண்டிப்பதாக டொரொண்டோ நகர மேயர் ஜான் டோரி கூறியுள்ளார்.

அருகாமை நாடான அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் கனடாவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் குறைவு என்றாலும், கடந்த சில வருடங்களாக டொரொண்டோ நகரில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

டொரண்டோவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, 13 பேர் காயம்படத்தின் காப்புரிமைAFP

என்ன நடந்தது?

சிறு சிறு இடைவெளிகளில் சரமாரியாக துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

மொத்தமாக 20ல் இருந்து 30 முறை சுட்டிருப்பார்கள் என்கிறார், அங்கு நடந்து கொண்டிருந்த ஜான். "துப்பாக்கி சத்தத்தை கேட்ட நாங்கள் ஓடிவிட்டோம்" என்று அவர் தெரிவித்தார்.

தாக்குதலாளி குறித்து என்ன தெரியும்?

தாக்குதல்தாரி கொல்லப்பட்டதை மட்டும் உறுதிசெய்த டொரொண்டோ காவல்துறையினர் மேலதிக தகவல் எதையும் வெளியிடவில்லை. தாக்குதல்தாரி போலீசாரின் எதிர்தாக்குதலில் உயிரிழந்தாரா அல்லது தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்தாரா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

போலீசாரிடமிருந்து மேலதிக தகவல் வெளிவரும் வரை இத்தாக்குதல் குறித்த எவ்வித முடிவுக்கும் வர வேண்டாமென டொரொண்டோ நகர மேயர் டோரி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

துப்பாக்கிதாரி சுடுவதற்கு முன்னர் அவரது முகத்தை பார்த்ததாக, துப்பாக்கிச்சூடு நடந்த இடத்துக்கு அருகிலுள்ள கடையொன்றின் ஊழியர் கூறியுள்ளார்.

"கடைக்கு உள்ளே இருந்து கண்ணாடி வழியாக நான் தாக்குதல்தாரியை பார்த்தபோது அவரும் என்னையோ, என்னருகில் இருந்த மற்றொரு பணியாளரையோ பார்த்தவுடன் கடையின் கண்ணாடியை நோக்கி சுட்டார். தாக்குதல்தாரி கருப்புநிற தொப்பி மற்றும் அடர் நிற ஆடையை அணிந்திருந்ததார்" என்று ஜெசிகா யங் என்பவர் டொரொண்டோ ஸ்டார் பத்திரிகையிடம் கூறியுள்ளார்.

டொரண்டோ துப்பாக்கிச்சூடு Image captionடொரண்டோ துப்பாக்கிச்சூடு

 

https://www.bbc.com/tamil/global-44921314

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.