Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவித்தல்: யாழ் கருத்துக்கள பகுதிகளில் மாற்றங்கள்

Featured Replies

வணக்கம்,

இவ்வருட ஆரம்பத்தில் நடாத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் கிடைக்கப்பெற்ற பரிந்துரைகளின் அடிப்படையில் யாழ் கருத்துக்கள பகுதிகளை மீளாய்வு செய்து காலத்திற்கு ஏற்ற மாற்றங்களைப் புகுத்த கள நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

முதற்கட்டமாக "ஊர்ப்புதினம்" பகுதியில் இருந்த உப பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. எனினும் அந்த உபபிரிவுகளில் இருந்த திரிகள் பொருத்தமான பிற பகுதிகளுக்கு நகர்த்தப்பட்டுள்ளன.

ஊர்ப்புதினம் பகுதியில் நீக்கப்பட்ட உப பிரிவுகள்:

  • நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்:    நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான செய்திகள், தகவல்கள், விமர்சனங்கள் மற்றும் ஆலோசனைகள். ஏற்கனவே உள்ள திரிகள் ""வாழும் புலம்"" பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன.
  • புறக்கணி சிறீலங்கா:    சிறீலங்காவின் பயங்கரவாத அரசும் அதன் இராணுவ இயந்திரமும் இயங்க தேவையான பொருளாதாரத்தை தண்டிப்பது பற்றிய தகவல்கள்.    ஏற்கனவே உள்ள திரிகள் "எங்கள் மண்" பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன.
  • மக்களின் அவலங்கள்:    தமிழ் மக்கள் மீதான இனவழிப்புப் போரும் - அவலங்களும்.     ஏற்கனவே உள்ள திரிகள் "எங்கள் மண்" பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன.
  • காணொளிப் பதிவுகள்:    மக்களின் அவலங்கள் தொடர்பான காணொளிக் காட்சிகள்.    ஏற்கனவே உள்ள திரிகள் "எங்கள் மண்" பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன.
  • மக்கள் போராட்டம்:    புலத் தமிழரின் போராட்ட முயற்சிகள் & உதவிகள் & தகவல்கள்.   ஏற்கனவே உள்ள திரிகள் ""வாழும் புலம்"" பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன.
  • கவனயீர்ப்பு நிகழ்வுகள்:    புலத் தமிழர்கள் முன்னெடுக்கும் கவனயீர்ப்பு நிகழ்வுகள்.   ஏற்கனவே உள்ள திரிகள் ""வாழும் புலம்"" பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன.

அடுத்த கட்ட கருத்துக்கள மாற்றங்கள் பின்னர் அறியத் தரப்படும்.

நன்றி

நியானி (நிர்வாகம் சார்பாக)

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

வணக்கம்,

  • வாணிப உலகம் எனும் புதிய பகுதி விளரிப்பாலை [சிந்தனைக்களம்] பிரிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்புதிய பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச் சந்தை, முதலீடு, சுயதொழில் மற்றும் நாணையமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
  • அரசியல் அலசல் பகுதி செம்பாலை [செய்திக்களம்] பிரிவுக்கு நகர்த்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

யாழ் கருத்துக்களம் பிற இணையச் செய்திகளினதும், ஆக்கங்களினதும் திரட்டியாக இல்லாது தமிழ் சமூகத்திற்கு தேவையான ஆக்கபூர்வமானதும் தரமானதுமான கருத்தாடல் தளமாகவே தொடர விரும்புகின்றோம். எனவே செய்திகளை, தகவல்களை இணைப்பவர்கள் யாழ்கள வருகையாளர்களுக்குவசியமான பதிவுகளையும், கருத்தாடலைத் தூண்டக்கூடிய பதிவுகளையும் மட்டுமே இணைக்கவேண்டும்.

மேலும், இணைக்கப்படும் செய்திகள், தகவல்கள், கட்டுரைகள், பத்திகள் போன்றவற்றிற்கு கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும்.

எ.கா:

போரில் கொல்லப்பட்டவர்களுக்கு- தென்மராட்சியில் நினைவுத் தூபி!!

சரியான மூலம்: https://newuthayan.com/story/17/போரில்-கொல்லப்பட்டவர்களுக்கு-தென்மராட்சியில்-நினைவுத்-தூபி.html

தவறான மூலம்: https://newuthayan.com

 

அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

எ.கா:

நாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்

 

நன்றி

  • தொடங்கியவர்

ஊர்ப் புதினம் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைப்பதற்கான பகுதி.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும். 

 

  • தொடங்கியவர்

செம்பாலை [செய்திக்களம்] பகுதி மாற்றங்கள்

 

ஊர்ப் புதினம் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைப்பதற்கான பகுதி.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

 

உலக நடப்பு  உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைப்பதற்கான பகுதி.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை, வணிகம், பொருளாதாரம் பற்றிய புதிய பிரிவில் இணைக்கலாம்

 

நிகழ்வும் அகழ்வும் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைப்பதற்கான பகுதி. இப்பகுதியில் இருந்த உப பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. அந்த உப பிரிவுகளில் இருந்த திரிகள் நிகழ்வும் அகழ்வும் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

 

தமிழகச் செய்திகள் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைப்பதற்கான பகுதி.

இப்புதிய பிரிவில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

 

அயலகச் செய்திகள் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைப்பதற்கான பகுதி.

இப்புதிய பிரிவில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

 

அரசியல் அலசல் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள் இணைப்பதற்கான பகுதி.

அரசியல் அலசல் விளரிப்பாலை பகுதியில் இருந்து செம்பாலைக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

 

செய்தி திரட்டி விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைப்பதற்கான பகுதி.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

 

  • தொடங்கியவர்

படுமலைபாலை [தமிழ்க்களம்] பகுதியில் மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. எனினும் பதிவுகள் இணைப்பதற்கான கீழ்க்காணும் விளக்கங்களை கருத்தில் கொள்ளுங்கள்.

 

துளித் துளியாய் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.

தொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.

 

எங்கள் மண் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.


வாழும் புலம் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

 

பொங்கு தமிழ் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

 

தமிழும் நயமும் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

 

உறவாடும் ஊடகம் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.

 

மாவீரர் நினைவு மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

 

  • தொடங்கியவர்

செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்] பகுதியில் பின்வரும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே இப்பகுதியில் புதிய திரிகளை ஆரம்பிக்கும்போது கீழே குறிப்பிடப்பட்டுள்ளவற்றைக் கருத்தில்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

 

இலக்கியமும் இசையும் இலக்கிய கட்டுரைகள், நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை சம்பந்தமான தரமானதும் அவசியமானதுமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்புதிய பிரிவில் முக்கியமான இலக்கியக் கட்டுரைகள், படைப்பாளிகளின் நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை பற்றிய தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

 

கவிதைப் பூங்காடு கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

 

கதை கதையாம் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

 

வேரும் விழுதும் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.

 

 

தென்னங்கீற்று குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை "சமூகவலை உலகம்" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.

 

நூற்றோட்டம் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.

 

கவிதைக் களம் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்புதிய பிரிவில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

 

கதைக் களம் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்புதிய பிரிவில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

 

  • தொடங்கியவர்

அரும்பாலை [இளைப்பாறுங்களம்] பகுதியில் பின்வரும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே இப்பகுதியில் புதிய திரிகளை ஆரம்பிக்கும்போது கீழே குறிப்பிடப்பட்டுள்ளவற்றைக் கருத்தில்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

 

சமூகவலை உலகம்  முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

இப்புதிய பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.

இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள்  பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.

முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.

 

வண்ணத் திரை சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

 

சிரிப்போம் சிறப்போம் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

 

விளையாட்டுத் திடல் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

 

இனிய பொழுது மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இப்பகுதியில் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

 

  • தொடங்கியவர்

கோடிப்பாலை [அறிவியற்களம்] பகுதியில் பின்வரும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே இப்பகுதியில் புதிய திரிகளை ஆரம்பிக்கும்போது கீழே குறிப்பிடப்பட்டுள்ளவற்றைக் கருத்தில்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

 

கருவிகள் வளாகம் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

 

தகவல் வலை உலகம் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

 

அறிவியல் தொழில்நுட்பம் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

 

சுற்றமும் சூழலும்  சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

 

 

  • தொடங்கியவர்

விளரிப்பாலை [சிந்தனைக்களம்] பகுதியில் பின்வரும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே இப்பகுதியில் புதிய திரிகளை ஆரம்பிக்கும்போது கீழே குறிப்பிடப்பட்டுள்ளவற்றைக் கருத்தில்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

 

வாணிப உலகம் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

 

மெய்யெனப் படுவது  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

 

சமூகச் சாளரம் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

 

பேசாப் பொருள் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.

எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.

 

  • தொடங்கியவர்

மேற்செம்பாலை [சிறப்புக்களம்] பகுதியில் மாற்றங்கள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.

எனினும் இப்பகுதியில் புதிய திரிகளை ஆரம்பிக்கும்போது கீழே குறிப்பிடப்பட்டுள்ளவற்றைக் கருத்தில்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம். 

 

நாவூற வாயூற சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

 

நலமோடு நாம் வாழ உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

 

நிகழ்தல் அறிதல் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.

 

வாழிய வாழியவே வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

 

துயர் பகிர்வோம்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

 

தேடலும் தெளிவும் பொதுவெளியில் நம்முன் எழுகின்ற கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே பதியப்படலாம்.

இப்பகுதி யாழ் கள உறுப்பினர்களால் கைவிடப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் நீக்கப்படலாம் அல்லது பெட்டகம் பகுதிக்கு நகர்த்தப்படலாம்.

  • தொடங்கியவர்

யாழ் உறவுகள் பகுதியில் புதிய மாற்றங்கள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.

எனினும் இப்பகுதியில் இருந்த  யாழ் தரவிறக்கம் பிரிவில் இருந்த திரிகள் தகவல் வலை உலகம்  பிரிவுக்கு நகர்த்தப்பட்டுள்ளன.

யாழ் தரவிறக்கம் எதிர்காலத்தில் நீக்கப்படலாம். எனவே இப்பிரிவில் புதிய தலைப்புக்கள் ஆரம்பிப்பதைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.