Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரே நேரத்தில் புதுடெல்லியில் முகாமிடும் மகிந்த, சம்பந்தன், மனோ, டக்ளஸ், ஹக்கீம், றிசாத்

Featured Replies

ஒரே நேரத்தில் புதுடெல்லியில் முகாமிடும் மகிந்த, சம்பந்தன், மனோ, டக்ளஸ், ஹக்கீம், றிசாத்

Newdelhi-court-300x200.jpgசிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச புதுடெல்லி செல்லவுள்ள அதே காலப்பகுதியில் இந்திய அரசின் அழைப்பின் பேரில், இரா.சம்பந்தன், டக்ளஸ் தேவானந்தா, மனோ கணேசன் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் அங்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

இருதரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பல கட்சி குழுவை புதுடெல்லி வருமாறு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 9ஆம் நாள் தொடக்கம் 14ஆம் நாள் வரை, 10 பேர் கொண்ட சிறிலங்காவின் பல கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு,  சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் புதுடெல்லியில் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இந்தக் குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் இ.ரா.சம்பந்தன், அவை முதல்வரான அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, கூட்டு எதிரணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இடம்பெறவுள்ளனர்.

இந்தியத் தலைவர்களுடன் இந்தக் குழு நடத்தவுள்ள பேச்சுக்களின் போது, பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடவுள்ளது. புதிய அரசியலமைப்பு தொடர்பாகவும் இந்திய தரப்புக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.

பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடவும், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் இது நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று என்று டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பின் பேரில் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச புதுடெல்லியில் வரும் 12ஆம் நாள் நடைபெறும் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றவுள்ளார்.

அவர் வரும் 11ஆம் நாள் புதுடெல்லி செல்லவுள்ளார். அங்கு 3 நாட்கள் தங்கியிருப்பார்.

மகிந்த ராஜபக்ச புதுடெல்லியில் தங்கியிருக்கும் தருணத்திலேயே சிறிலங்காவின் பல கட்சி நாடாளுமன்றக் குழுவும் அங்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2018/09/02/news/32662

  • கருத்துக்கள உறவுகள்

1 hour ago, நவீனன் said:

இந்தக் குழுவில்திர்க்கட்சித் தலைவர் இ.ரா.சம்பந்தன், அவை முதல்வரான அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, கூட்டு எதிரணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இடம்பெறவுள்ளனர்.

??

singampuli.jpg

 என்ன வேர்லட் எக்கணமி பேச போகினமா ?  பாயாசம் வர்ல.. ?

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

பச்சோந்திகள் பச்சோந்திகளுடன் சந்திப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச புதுடெல்லி செல்லவுள்ள அதே காலப்பகுதியில் இந்திய அரசின் அழைப்பின் பேரில், இரா.சம்பந்தன், டக்ளஸ் தேவானந்தா, மனோ கணேசன் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் அங்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

இருதரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பல கட்சி குழுவை புதுடெல்லி வருமாறு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 9ஆம் நாள் தொடக்கம் 14ஆம் நாள் வரை, 10 பேர் கொண்ட சிறிலங்காவின் பல கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் புதுடெல்லியில் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இந்தக் குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் இ.ரா.சம்பந்தன், அவை முதல்வரான அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, கூட்டு எதிரணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இடம்பெறவுள்ளனர்.

இந்தியத் தலைவர்களுடன் இந்தக் குழு நடத்தவுள்ள பேச்சுக்களின் போது, பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடவுள்ளது. புதிய அரசியலமைப்பு தொடர்பாகவும் இந்திய தரப்புக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.

பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடவும், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் இது நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று என்று டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பின் பேரில் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச புதுடெல்லியில் வரும் 12ஆம் நாள் நடைபெறும் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றவுள்ளார்.

அவர் வரும் 11ஆம் நாள் புதுடெல்லி செல்லவுள்ளார். அங்கு 3 நாட்கள் தங்கியிருப்பார்.

மகிந்த ராஜபக்ச புதுடெல்லியில் தங்கியிருக்கும் தருணத்திலேயே சிறிலங்காவின் பல கட்சி நாடாளுமன்றக் குழுவும் அங்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/105564?ref=rightsidebar

  • தொடங்கியவர்

இந்திய விஜயத்தில் எந்த பிரச்சினையும் எழப்போவதில்லை

15_02092018_SSK.jpg
 
1986 ஆம் ஆண்டு சென்னை சூழைமேட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் 10 பாராளுமன்ற  உறுப்பினர்களைக் கொண்ட குழு எதிர்வரும் 9ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளது. இந்தக் குழுவில் டக்ளஸ் தேவானந்தாவும் இடம்பெற்றுள்ளார். சூழைமேட்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அவருக்கு எதிராக அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இந்தியாவுக்கு செல்வது குறித்தே இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.

அரசியல் உள்நோக்கத்துடனேயே தன்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நீதிமன்றுக்கு யாராவது சமுகமளிக்கவில்லை என்றால் அந்த நீதிமன்றத்தால் அவரை கண்டுபிடிக்குமாறு அல்லது அழைத்து வந்து நீதிமன்றில் ஆஜர்படுத்தும்படி பொலிசாருக்கு ஆணையிடுவது வழமை.

சூழைமேட்டு சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பு இல்லாதுவிட்டாலும் ஈ.பி.ஆர்.எல்.எவ். என்ற அமைப்பில் இருந்த காரணத்தால் அதற்கான தார்மீக பொறுப்பை எடுத்திருந்தேன். இந்த வழக்கில் தொடர்புபட்டிருந்த நான் 1990 ஆம் ஆண்டு தமிழ் நாட்டு அரசாங்கத்தின் ஒப்புதல் பெற்று இலங்கை வந்திருந்தேன்.

இலங்கையில் நான் இருந்தமையால் நீதிமன்றுக்குச் சமுகமளிக்கவில்லை என்ற காரணத்தால் நீதிமன்று எனக்கு அழைப்பாணை ஒன்றை பிறப்பித்திருந்தது. அதன் பின்னர் நான் அதற்கு சரியான காரணத்தை கொடுத்திருந்தமையால் அந்த அழைப்பாணை எப்போதோ நீக்கப்பட்டுவிட்டது.

அதனால் குறித்த வழக்கு தொடர்பாக எனக்கு எந்தவொரு பிரச்சினையும் கிடையாது. தற்போதும் அந்த வழக்கு விசாரணை இருக்கின்றது. இதற்கு நான் வீடியோ காணொளியூடாக முன்னிலையாகி வருகின்றேன். அதுமட்டுமல்ல அந்த வழக்கு மிகவிரைவில் நிறைவுக்கு வந்துவிடும் என்றும் நம்புகின்றேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், எதிர்க்கட்சி தலைவர் இரா சம்பந்தன், அமைச்சர்களான நிமால் சிறிபால டி.சில்வா, ராவூப் ஹக்கீம், லக்ஸ்மன் கிரியல்ல, றிசாட் பதீயுதீன், மனோ கணேசன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா, தினேஸ்குணவர்த்தன, விஜிதஹேரத் ஆகியோர் உள்ளிட்ட குழுவினரே செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.thinakaran.lk/2018/09/03/உள்நாடு/26631/இந்திய-விஜயத்தில்--எந்த-பிரச்சினையும்-எழப்போவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

அண்ணோய்,

கவனமண்ணோய்.... டெல்லிக்காரரை நம்ப ஏலாது. 

தூக்கி சென்னைக்கு அனுப்பிடுவினம்... வழக்கை சந்திக்க...

மகிந்தரும் இப்ப ஜனாதிபதி இல்லை, வெட்டி ஆடி திருப்பி கொன்டு வர..

அப்புறம் உங்கண்ட விருப்பம்..  ?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு தமிழீழ விடுதலை ஒன்றையே சிந்தனையாகக் கொண்டு போராடிய போராட்டக் குழுக்களை ஒன்றாக அழைத்து அவர்களிடையே பிளவை ஏற்படுத்தி மோதவிட்ட இந்தியாதான் இன்று இவர்களை அழைத்துள்ளது. அன்றிலிருந்து இன்றுவரை இந்தியா, இலங்கைத் தமிழரைக் கையாழும் கொள்கையிலிருந்து மாறவில்லை என்பது கண்கூடு. என்னாகுமோ? ஏதாகுமோ?

On 9/2/2018 at 8:40 AM, நவீனன் said:

ஒரே நேரத்தில் புதுடெல்லியில் முகாமிடும் மகிந்த, சம்பந்தன், மனோ, டக்ளஸ், ஹக்கீம், றிசாத்

தமிழின விரோதிகள் அனைவரையும் சந்தித்து இந்திய மத்திய அரசுக் கயவர்கள் மீண்டுமொருமுறை தமிழின அழிப்புக்கு உதவுவதன் மூலம் சீனாவை ஓரம் கட்டலாம் என்று காணும் கனவு நனவாகக் காலம் கடந்துவிட்டது.

சீனாவின் ஆக்கிரமிப்பால் மிரண்டிருக்கும் இந்திய மத்திய அரசுக் கயவர்கள் மகிந்தவின் காலடியில் வீழ்வதைத் தவிர வேறுவழியில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.