Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துரோ­கத்தில் தொடர்­பில்­லை­யென செல்­வமும் சித்­தார்த்­தனும் வில­கு­வ­தற்கு அனு­ம­திக்க முடி­யாது

Featured Replies

துரோ­கத்தில் தொடர்­பில்­லை­யென செல்­வமும் சித்­தார்த்­தனும் வில­கு­வ­தற்கு அனு­ம­திக்க முடி­யாது

city-1-blackGMGPage1Image0006-77b674e129a885b09068d9186bac3f159fdbe0e4.jpg

 

(ரி.விரூஷன்)

இவர்­களும் உடந்தை என்கிறது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பில் பங்­கா­ளி­க­ளாக இருந்­து­கொண்டு அதில் சம்பந்­தனும், சுமந்­தி­ரனும் செய்­கின்ற துரோ­கங்­க­ளுக்கு துணை போகின்ற ரெலோ, புளொட் ஆகிய கட்­சி­களின் தலை­மைகள், தற்­போது தமக்கு இத்­த­கைய துரோ­கத்தில் தொடர்­பில்லை என கூறி வில­கு­வதை தமிழ் மக்கள் அனு­ம­திக்க மாட்­டார்கள் என்று தமிழ் தேசிய மக்கள் முன்­ன­னியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தெரி­வித்­துள்ளார்.  

கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் கூறி­யதை அது கூட்­ட­மைப்பின் கருத்து இல்லை, அவ­ரது தனிப்­பட்ட கருத்து என கூறு­வது உலக அர­சி­ய­லிலே இதுவே முதல் முறை எனவும் அவர் கூறி­யுள்ளார்.

இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

தற்­போது சமஸ்டி தேவை­யில்லை என சுமந்­திரன் கூறிய கருத்து தொடர்­பாக கூட்­ட­மைப்பின் பங்­காளி கட்­சி­களின் தலை­வர்­க­ளிடம் வீர­கே­சரி பத்­தி­ரிகை கருத்து கேட்டு செய்தி வெளி­யிட்­டி­ருக்­கி­றது. அதில் புளொட் அமைப்பின் தலைவர் சித்­தார்த்தன் சுமந்­திரன் கூறிய கருத்து அவ­ரது தனிப்­பட்ட கருத்து என தெரி­வித்­துள்ளார். உண்­மையில் சித்­தார்த்தன் தற்­போது கூறு­வது தான் சித்­தார்த்­தனின் தனிப்­பட்ட கருத்­தாகும். எம்.ஏ.சுமந்­திரன் கூட்­ட­மைப்பின் பேச்­சாளர். அவர் கூறும் கருத்து கூட்­ட­மைப்பின் கருத்­தா­கவே அமையும்.

இதே சித்­தார்­தனே புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான குழுக்­களில் அதி­கார பகிர்வு குழுவின் தலை­வ­ராக இருக்­கின்றார். அதே நேரம் தமிழ் மக்கள் பேர­வை­யிலும் உறுப்­பி­ன­ரா­கவும் இருக்­கின்றார். இந்­நி­லையில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு ஒற்­றை­யாட்­சியை வலி­யு­றுத்­து­கின்ற புதிய அர­சி­ய­ல­மைப்பின் இடைக்­கால அறிக்­கைக்கு ஆத­ரவு கேட்டு அதற்­கான மக்­களின் ஆணை­யாக உள்­ளு­ராட்சி தேர்­தலில் போட்­டி­யிட்ட போது அதற்கு ஆத­ர­வாக வாக்­கு­களை கேட்டார்.

ஏனெனில் அப்­போது சுமந்­தி­ரனும் , சம்­மந்­தனும் சமஸ்டி தேவை­யில்லை என்­பதை வெளிப்­ப­டை­யாக கூற­வில்லை. எனவே மக்­க­ளுக்கு இந்த உண்­மைகள் தெரி­யாது என்ற நம்­பிக்­கையில் அப்­போது அவர்­க­ளோடு ஒற்­று­மை­யாக மக்­க­ளிடம் வாக்கு கேட்­டார்கள். ஆனால் இப்­போது உண்மை அம்­ப­ல­மா­கி­யுள்ள நிலையில் என்ன செய்­வ­தென்று தெரி­யாத தர்­ம­சங்­க­ட­மான நிலையில் இருக்­கி­றார்கள்.

சித்­தார்த்தன் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பில் யார் ? அதில் ஒரு சிறிய பங்­காளி கட்­சியின் தலைவர் மாத்­தி­ரமே. இந்­நி­லையில் தனது தரப்பு தான் வாக்கு கேட்ட மக்­க­ளிடம் செல்ல முடி­யாத நிலை ஏற்­பட்டு விட்­டதை உணர்ந்து அம் மக்­க­ளிடம் இருந்து தப்­பிக்க இப்­போது அது சுமந்­தி­ரனின் தனிப்­பட்ட கருத்து என்­கிறார்.

இதே போலவே ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்­க­ல­நா­தனும். பாரா­ளு­மன்ற குழுக்­களின் தலமை பத­வியை ஒற்­றை­யாட்­சிக்கு இணங்­கி­ய­மை­யா­லேயே பெற்­றுக்­கொண்­டுள்ளார். ஆகவே இவர்கள் அனை­வரும் இணைந்து எல்லாம் தெரிந்தே இம் மக்­களை ஏமாற்றி வரு­கின்­றார்கள்.

இவர்கள் தமிழ் தேசிய வாதத்தை தமிழ் அர­சி­யலில் இருந்து முற்று முழு­தா­கவே நீக்­கு­கின்ற செயற்­பாட்டை நேர்த்­தி­யாக செய்­கின்­றார்கள். இந்­நில்­லையில் தற்­போது இவ் உண்­மைகள் வெளி­வர தொடங்­கி­விட்ட நிலை­யிலும், இன்னும் பல உண்­மைகள் வெளி­வர இருக்­கின்ற நிலை­யிலும் இவற்­றுக்கு எல்லாம் காரணம் வெறு­மனே சுமந்­தி­ரனும் சம்­மந்­தனும் மாத்­தி­ரமே என அவர்கள் மீது மாத்­திரம் பழியை போட்­டு­விட்டு தாம் வில­கிட பார்க்­கின்­றார்கள்.

இவ்­வா­றான நிலையில் இவர்கள் இரு­வரும் இத்­த­கைய துரோக தனங்களை செய்வதற்கு துணைபோனவர்கள் கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் கட்சிகளின் தலைமைகளேயாவர். எனவே தற்போது இதற்கும் தமக்கு சம்மந்தமில்லை என கூறி அதிலிருந்து தாம் தப்பித்துக்கொள்ள பார்க்கும் புளொட் சித்தார்த்தன் மற்றும் ரெலோ செல்வம் அடைக்கலாநன் ஆகியோரை தமிழ் மக்கள் அனுமதிக்க கூடாது என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-09-04#page-1

 

 

''விக்கியுடனேயே கூட்டு''

Untitled-1-5d70027f088b0ff0b898eb159bf1c606adaa954a.jpg

 

(ரி.விரூஷன்)

தமிழ் தேசிய மக்கள் முன்ன ணியானது கூட்டு சேர்வதானால் அது விக்கினேஸ்வரனு டன் மாத்திரமே தவிர வேறு எவருடனும் இல்லை என அக்கட்சி அறிவித்துள்ளது. யாழ்.ஊடக அமைய த்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற  செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனை தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

தமிழ் தேசிய மக்கள் முன்னனியானது விக்கினேஸ்வரனுடன் மாத்திரமே ஒப்பந்தங்களை செய்யவும் கூட்டுச் சேரவும் தயாராகவுள்ளது. அதனை தவிர மற்றைய கட்சிகளான புளொட் அமைப்புடனோ அல்லது ரொலோவோடு அல்லது ஈ.பி.ஆர்.எல்.எவ் வுடனோ கூட்டுச் சேரமாட்டாது. அதே நேரம் அடுத்த மாகாண சபை தேர்தலில் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் விக்கினேஸ்வரன் தலமையில் கூட்டுச் சேர்ந்தால் அது தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நிலைப்பாடு என்னவாக அமையும் என வினாவிய போது,

அவ்வாறு விக்கினேஸ்வரன் அக் கட்சிகளோடு கூட்டுச் சேருவாராயின் நாம் விக்கினேஸ்வரனோடு கூட்டுச் சேர்வது தொடர்பாகவும் சிந்திக்க வேண்டி வரும் என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-09-04#page-1

  • கருத்துக்கள உறவுகள்

 கஜேந்திரன் பொன்னம்லம் அவர்கள் தமிழர் விடுதல அரசியலில் அழுத்தக் குழுவாக தீவிரமாகச் செயல்பட்டால் அவர்களை வரவேற்க்கும் முதலாளாக நானே இருப்பேன். ஆனால் அவர் பேசும் தீவிர விடுதலைக் கோட்பாட்டுக்கு மாறாக  திரு ஆனந்த சங்கரிபோல பிரதேச சபை தேர்தல் மட்டத்துக்கு இறங்கி  வாக்குகளை பிழவு படுத்துகிற அரசியல் செய்வது கவலையாக உள்ளது. அவரது வாக்கை பிழவுபடுத்தும் அரசியல் முயற்சியால் வடக்கில் எஸ்.எல்.எப்.பி மற்றும் யு.என்.பி கட்சிகள் காலூன்ற வழி வகுக்கிறது. கிழக்கிலோ தமிழ்க் கட்சிகளைத் தோற்கடித்து எஸ்.எல்.எப்.பி மற்றும் யு.என்.பி வெற்றிபெற வழி சமைக்கிறது. கஜேந்திரன் பொன்னம்பலம் அவர்கள் தேர்தல் அரசியலை விட்டு வழிகாட்டும் அழுத்த அரசியலை முன்னெடுக்க வேண்டும் 

20 hours ago, நவீனன் said:

அடுத்த மாகாண சபை தேர்தலில் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் விக்கினேஸ்வரன் தலமையில் கூட்டுச் சேர்ந்தால் அது தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நிலைப்பாடு என்னவாக அமையும் என வினாவிய போது,

அவ்வாறு விக்கினேஸ்வரன் அக் கட்சிகளோடு கூட்டுச் சேருவாராயின் நாம் விக்கினேஸ்வரனோடு கூட்டுச் சேர்வது தொடர்பாகவும் சிந்திக்க வேண்டி வரும் என்றார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒரு அப்பட்டமான சுயநலவாதி என்பதற்கும் தமிழருக்கு ஒரு நிரந்தரமான தீர்வை நோக்கி முன்னேறும் நடவடிக்கைகளை அரைவேக்காடாகவே காலத்தை கடத்தும் அவரால் செய்ய முடியாது என்பதற்கும் இதைவிட வேறென்ன சான்று வேண்டும்?

On 9/4/2018 at 9:37 AM, நவீனன் said:

இதே சித்­தார்­தனே புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான குழுக்­களில் அதி­கார பகிர்வு குழுவின் தலை­வ­ராக இருக்­கின்றார். அதே நேரம் தமிழ் மக்கள் பேர­வை­யிலும் உறுப்­பி­ன­ரா­கவும் இருக்­கின்றார். இந்­நி­லையில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு ஒற்­றை­யாட்­சியை வலி­யு­றுத்­து­கின்ற புதிய அர­சி­ய­ல­மைப்பின் இடைக்­கால அறிக்­கைக்கு ஆத­ரவு கேட்டு அதற்­கான மக்­களின் ஆணை­யாக உள்­ளு­ராட்சி தேர்­தலில் போட்­டி­யிட்ட போது அதற்கு ஆத­ர­வாக வாக்­கு­களை கேட்டார்.

ஏனெனில் அப்­போது சுமந்­தி­ரனும் , சம்­மந்­தனும் சமஸ்டி தேவை­யில்லை என்­பதை வெளிப்­ப­டை­யாக கூற­வில்லை. எனவே மக்­க­ளுக்கு இந்த உண்­மைகள் தெரி­யாது என்ற நம்­பிக்­கையில் அப்­போது அவர்­க­ளோடு ஒற்­று­மை­யாக மக்­க­ளிடம் வாக்கு கேட்­டார்கள். ஆனால் இப்­போது உண்மை அம்­ப­ல­மா­கி­யுள்ள நிலையில் என்ன செய்­வ­தென்று தெரி­யாத தர்­ம­சங்­க­ட­மான நிலையில் இருக்­கி­றார்கள்.

இவர் சொல்வதில் பிழையில்லை.
ஆனால் இவர் மட்டும் என்ன திறமான ஆளோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.