Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் கைதிகளுக்காக- வவுனியாவில் திரண்டுள்ள மக்கள்!!

Featured Replies

அரசியல் கைதிகளுக்காக- வவுனியாவில் திரண்டுள்ள மக்கள்!!

 

 

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் தற்போது மாபெரும் கனவீர்ப்புப் பேரணி நடைபெற்று வருகிறது.

வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட பேரணி, மாவட்ட செயலக முன்றலை நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளது.

unnamed1-750x430.jpgunnamed-41-750x430.jpg

unnamed-210-750x430.jpgunnamed-110-750x430.jpg

https://newuthayan.com/story/11/அரசியல்-கைதிகளுக்காக-வவுனியாவில்-திரண்டுள்ள-மக்கள்.html

  • தொடங்கியவர்

அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி வீதியினை மறித்து போராட்டம்

 

வவுனியாவில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி இன்று காலை 10.00 மணியளவில் வவுனியா பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் பாரிய போராட்டம் இடம்பெற்றது. இப் போராட்டத்தின் காரணமாக ஏ9 பிரதான வீதி சுமார் 20 நிமிடங்கள் வரை மூடப்பட்டது.

DSC_3057.jpg

அரசியல் கைதிகள் உண்ணாவிரதமிருப்பதும் உறுதிமொழிகள் வழங்கப்படுவதும் பின்பு எந்த நடவடிக்கைகளுமின்றி தொடர் கதையாகவே இருந்து வருகின்றது. அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்கள். விரைவில் நடவடிக்கை எடுப்போம் என பிரதமர் அறிவிப்பதும், தமிழ்த் தலமைகள் அரசியல் கைதிகளை சென்று பார்வையிட்டு ஆவன செய்வதாக கூறுவதும், நாங்கள் ஜனாதிபதியுடன் கதைத்து விட்டோம் எல்லாம் சரிவரும் என்று கூறுவதும் மீண்டும் கடந்த தினங்களில் மேடையேற்றப்பட்டு விட்டது.

இளைஞர்களாக கைது செய்யப்பட்டவர்கள் தங்கள் வாழ்வின் அரைவாசிக் காலத்தை சிறைகளில் கழித்து இன்று முதியவர்களாகி விட்டார்கள். இன்றைய நல்லாட்சி அரசு இந்த 137 அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமலும் , விசாரணைகளின்றியும் வைத்திருப்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.

எனவே அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான போராட்டமானது பஜார் வீதியுடாக ஹோரவப்போத்தானை வீதியினை வந்தடைந்து ஹொரவபொப்த்தானை வீதியூடாக வவுனியா மாவட்ட செயலகத்தினை வந்தடைந்தது. இப் போராட்டத்தின் காரணமாக ஏ9 பிரதான வீதி சுமார் 20 நிமிடங்கள் வரை மூடப்பட்டது.

விடுதலை செய் விடுதலை செய்  அரசியல் கைதிகனை விடுதலை செய், உண்ணாவிரதிகளின் கோரிக்கையை  உடனே நிறைவேற்று , அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கு , ரத்துச் செய் பயங்கரவாத தடை சட்டத்தை ரத்து செய் , நல்லாட்சி அரசே அரசியல் கைதிகளும் மனிதர்களே , புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களை மீண்டும் கைது செய்யாதே என பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

DSC_3079.jpg

பேரணியாக வந்த போராட்டக்காரர்கள் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவுள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு அருகில் ஒன்றினைந்து போராட்ட ஏற்பாட்டு குழுவின் பேச்சாளர் தயாவின் சிறப்புரையுடன் போராட்டம் முடிவுக்கு வந்தது.

DSC_3080.jpg

இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழரசு கட்சி , புளொட் , ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் , சிறிரெலோ, ஈரோஸ் , தமிழ் தேசிய மக்கள் முன்னணி , ஈழமக்கள் ஜனநாயக கட்சி , புதிய மாக்சிச லெனின் கட்சி , வவுனியா மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் , வர்த்தக சங்கம் , தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் , சிகை அலங்கார உரிமையாளர் சங்கம் , சமூக நீதிக்கான வெகுசன அமைப்பு , இலங்கை தேசிய அரச பொது ஊழியர் சங்கம் , தமிழ் விருட்சம் , FME , போன்ற அமைப்புக்கள் பங்குபற்றின.

DSC_3084.jpg

பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் , பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன் , சிவசக்தி ஆனந்தன் , சார்ள்ஸ் நிர்மலநாதன் , வட மாகாண விவசாய அமைச்சர் சிவனேசன் ,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் , வட மாகாண சபை உறுப்பினர்களான சத்தியலிங்கம் , ஜீ.ரி.லிங்கநாதன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் , வவுனியா நகரபிதா கெளதமன், உறுப்பினர்கள், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவர் நடராஜசிங்கம் , உறுப்பினர்கள், வவுனியா வெங்கல செட்டிகுளம் தலைவர் அந்தோணி , உறுப்பினர்கள் ஆகியோருடன் பல நூற்றுக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

DSC_3092.jpg

DSC_3102.jpg

 
  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா ஆர்ப்பாட்டத்தில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோருக்கு எதிராகவும் கோசங்கள் VIDEO - சமகளம்

வவுனியா ஆர்ப்பாட்டத்தில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோருக்கு எதிராகவும் கோசங்கள் VIDEO

வவுனியாவில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் சுமந்திரன் எம்.பி ஆகியோருக்கு எதிராகவும் கோசங்கள் எழுப்பப்பட்டன.

பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் ஆரம்பமாகிய ஆர்ப்பாட்ட பேரணி பசார் வீதி வழியாக ஹொரவப்பொத்தானை வீதியை அடைந்து அதனூடாக மாவட்ட செயலக முன்றலை சென்றடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது.

இப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தின் போது எதிர்கட்சித் தலைவரே காட்டிக் கொடுக்காதே, எதிர்கட்சித் தலைவரே அரசுடன் பேசு, சுமந்திரனை வெளியேற்று போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டன. இதன்போது குறித்த பேரணியில் கலந்து கொண்ட தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் தலைவருமான மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறிஸ்கந்தராஜா, சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் எதிர்கட்சித்தலைவர் மற்றும் சுமந்திரனுக்கு எதிரான கோசங்களின் போது அமைதியாக பேரணியில் தலையை குனிந்து கொண்டு சென்றனர்.

Video Player
22-09-vavuniya-tna-4-mp4-image.png

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்த விடயத்தில் காத்திரமாக செயற்படவில்லை எனவும் அவர்களை இவர்களுக்காக போராடுமாறும் பொது அமைப்புக்கள் சார்பில் கருத்துரைத்த தயா அவர்கள் தெரிவித்தார். இதன்போது மக்கள் கைதட்டி கரகோசம் செய்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக பொது அமைப்புக்கள் சார்பில் பேசியவர் கருத்துரைத்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அவ்விடத்தில் இருந்து அமைதியாக வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த ஆர்ப்பாட்டத்தில் பிரதி அமைச்சர் கே.கே.மஸ்தான் அவர்கள் கலந்து கொண்டமை மக்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றிருந்தது.

DSC_3044 (1)

http://www.samakalam.com/செய்திகள்/வவுனியா-ஆர்ப்பாட்டத்தில/

  • தொடங்கியவர்

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி வவுனியாவில் வீதியினை மறித்து கவனயீர்ப்பு போராட்டம்

b148ddbfda6214ab4a569450ef9336ee?s=48&d=
 

வவுனியாவில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி இன்று காலை 10.00 மணியளவில் வவுனியா பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் பாரிய போராட்டம் இடம்பெற்றது. இப் போராட்டத்தின் காரணமாக ஏ9 பிரதான வீதி சுமார் 20 நிமிடங்கள் வரை மூடப்பட்டது.

அரசியல் கைதிகள் உண்ணாவிரதமிருப்பதும் உறுதிமொழிகள் வழங்கப்படுவதும், பின்பு எந்த நடவடிக்கைகளுமின்றி தொடர் கதையாகவே இருந்து வருகின்றது. அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்கள். விரைவில் நடவடிக்கை எடுப்போம் என பிரதமர் அறிவிப்பதும், தமிழ்த் தலமைகள் அரசியல் கைதிகளை சென்று பார்வையிட்டு ஆவன செய்வதாக கூறுவதும், நாங்கள் ஜனாதிபதியுடன் கதைத்து விட்டோம் எல்லாம் சரிவரும் என்று கூறுவதும் மீண்டும் கடந்த தினங்களில் மேடையேற்றப்பட்டு விட்டது.

இளைஞர்களாக கைது செய்யப்பட்டவர்கள் தங்கள் வாழ்வின் அரைவாசிக் காலத்தை சிறைகளில் கழித்து இன்று முதியவர்களாகி விட்டார்கள். இன்றைய நல்லாட்சி அரசு இந்த 137 அரசியல் கைதிகளை விடுதலை செய்யமாலும், விசாரணைகளின்றியும் வைத்திருப்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.

எனவே அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான போராட்டமானது பஜார் வீதியுடாக ஹொரவப்பொத்தானை வீதியினை வந்தடைந்து ஹொரவப்பொத்தானை வீதியுடாக வவுனியா மாவட்ட செயலகத்தினை வந்தடைந்தது. இப் போராட்டத்தின் காரணமாக ஏ9 பிரதான வீதி சுமார் 20 நிமிடங்கள் வரை மூடப்பட்டது.

விடுதலை செய் விடுதலை செய் அரசியல் கைதிகனை விடுதலை செய், உண்ணாவிரதிகளின் கோரிக்கையை உடனே நிறைவேற்று, அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கு, ரத்துச் செய் பயங்கரவாத தடை சட்டத்தை ரத்து செய், நல்லாட்சி அரசே அரசியல் கைதிகளும் மனிதர்களே, புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களை மீண்டும் கைது செய்யாதே என பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரணியாக வந்த போராட்டக்காரர்கள் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவுள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு அருகில் ஒன்றினைந்து போராட்ட ஏற்பாட்டு குழுவின் பேச்சாளர் தயா அவர்களின் உரையுடன் போராட்டம் நிறைவுபெற்றது.

இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழரசு கட்சி, புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எப், சிறிரெலோ, ஈரோஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னனி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, புதிய மாக்சிச லெனின் கட்சி, வவுனியா மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம், வர்த்தக சங்கம், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், சிகை அலங்கரிப்பாளர் கூட்டுறவாளர் சங்கம், சமூக நீதிக்கான வெகுசன அமைப்பு, இலங்கை தேசிய அரச பொது ஊழியர் சங்கம், தமிழ் விருட்சம் போன்ற பல்வேறு அமைப்புக்கள் பங்கு பற்றியதுடன், பிரதி அமைச்சர் கே.கே.மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, சிவசக்தி ஆனந்தன், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், வடக்கு விவசாய அமைச்சர் க.சிவனேசன், வடமாகாண சபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன், இ.இந்திராரஜா, யாழ் மாநகரசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன், அமைச்சர் மனோகணேசனின் இணைப்பாளர் பாஸ்கரா, மற்றும் பல்வேறு பொது அமைப்புக்களும் இதில் கலந்து கொண்டனர்.

DSC_3046.jpgDSC_3047.jpgDSC_3057.jpgDSC_3059.jpgDSC_3060.jpgDSC_3061.jpgDSC_3063.jpgDSC_3064.jpgDSC_3065.jpgDSC_3066.jpgDSC_3075.jpgDSC_3076.jpgDSC_3078.jpgDSC_3079.jpgDSC_3080.jpgDSC_3082.jpgDSC_3084.jpgDSC_3092.jpgDSC_3093.jpgDSC_3100.jpgDSC_3101.jpgDSC_3102.jpgDSC_3108.jpgDSC_3110.jpgDSC_3023.jpgDSC_3028.jpgDSC_3032.jpgDSC_3033.jpgDSC_3037.jpgDSC_3038.jpgDSC_3042.jpgDSC_3044.jpg

http://www.newsuthanthiran.com/2018/09/22/அரசியல்-கைதிகளை-விடுதலை/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, பெருமாள் said:

வவுனியாவில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் சுமந்திரன் எம்.பி ஆகியோருக்கு எதிராகவும் கோசங்கள் எழுப்பப்பட்டன.

 

4 hours ago, பெருமாள் said:

இப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தின் போது எதிர்கட்சித் தலைவரே காட்டிக் கொடுக்காதே, எதிர்கட்சித் தலைவரே அரசுடன் பேசு, சுமந்திரனை வெளியேற்று போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டன. இதன்போது குறித்த பேரணியில் கலந்து கொண்ட தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் தலைவருமான மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறிஸ்கந்தராஜா, சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் எதிர்கட்சித்தலைவர் மற்றும் சுமந்திரனுக்கு எதிரான கோசங்களின் போது அமைதியாக பேரணியில் தலையை குனிந்து கொண்டு சென்றனர்.

எப்பவோ தொடங்கியிருக்க வேண்டியது. என்றாலும் இன்னும் பிந்தவில்லை. எதிர்க்குரல் உணர்வாளர்க்கு உற்சாகம் கலந்த வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 

5 hours ago, பெருமாள் said:

இதன்போது குறித்த பேரணியில் கலந்து கொண்ட தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் தலைவருமான மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறிஸ்கந்தராஜா, சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் எதிர்கட்சித்தலைவர் மற்றும் சுமந்திரனுக்கு எதிரான கோசங்களின் போது அமைதியாக பேரணியில் தலையை குனிந்து கொண்டு சென்றனர்.

இப்ப தலையை குனிந்து என்ன பலன் தமிழருக்கு கிடைக்கவேண்டிய ஒன்றுமே கிடைக்கபன்னாமல் சம்பந்தனும் சுமத்திரனும் நந்தி போல் கிடக்கையிலே இங்கு தலையை குனிபவர்கள் ஒரு எதிர்பாவது காட்டி இருக்கணும் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை புலனாய்வுப்பிரிவினர் விசாரணைக்கு அழைக்காவிட்டால் அதே பெரிய வெற்றி.

மக்களை போராட்டத்துக்கு அழைத்து போராட வேண்டியவர்கள் 

மக்கள் போராட்டத்தில் தாங்களும் ஒருவராக கலந்திருக்கிறார்கள்.

போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் கோபப்படும்படி நாம் நடக்கக் கூடாது. அப்படி நடந்தால், எமக்குக் கிடைப்பது கூடக் கிடைக்காமல்ப் போகலாம் என்று சம்பந்தன் ஐய்யாவும், சுமந்திரன் மாத்தையாவும் சொல்லி வருகிறார்கள். 
100 நாட்களில் எல்லாவற்றையும் செய்துதருவேன் என்று கோஷமிட்டபடி வந்த மைத்திரி - ரணில் நல்லிணக்க அரசின் தூண்களான சம்பந்தனும், சுமந்திரனும் பல நூறு நாட்கள் போனபின்னரும் கூட ஏற்றுக்கொள்ளப்பட்ட எவையுமே இன்னும் செயற்படுத்தப்படவில்லை என்பதை அறிவார்களா? அல்லது அப்படி எதுவுமே செயற்படுத்தப்படப்போவது கிடையாது என்பதை அறிந்துகொண்டும் அரசுக்கு முண்டு கொடுக்கிறார்களா?

தமிழர்கள் சமஷ்ட்டி கேட்கவில்லை என்று சிங்களவர்களிடம் சுமந்திரன் சொல்கிறார். பின்னர் சில நாட்களிலேயே சமஷ்ட்டியை சிங்களவர்கள் எதிர்க்கவில்லை என்று சொல்கிறார். சிங்களவர்களே சமஷ்ட்டியை எதிர்க்காதபோது, பின் எதற்காக அவர்களிடம் போய் தமிழர்களுக்கு சமஷ்ட்டி தேவையில்லை என்று கூறவேண்டும்? ஒரே குழப்பமாக இருக்கிறதே இந்தாளின் பேச்சுக்கள்.

சம்பந்தன் பற்றிக் கேட்கவே வேண்டாம். நிமிர்ந்து நிற்கக் கூட திராணியற்று பக்கத்தில் நிற்பவரின் துணையுடந்தான் நிற்கிறார். இந்த லட்சணத்தில் அவர் தமிழர் நலன் பற்றிப் பேசுகிறாராம். இதில் வேடிக்கை என்னவென்றால், தற்போதைய ஆட்சியிலிருந்து பிரிந்து சென்ற சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், அரசுக்குமிடையே தனது வீட்டில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துகிறாராம் எதிர்கட்சித் தலைவர் !!!!

எல்லாம் சரி, ஒத்துக்கொள்ளப்பட்டதன் படி தமிழ் அரசியல்க் கைதிகளுக்கான விடுதலை, சுதந்திரமான போர்க்குற்ற விசாரணை, தமிழர்களுக்கான அரசியல் தீர்வு....இவைபற்றி சம்பந்தனும் சுமந்திரனும் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்? காலம் போகப் போக இதெல்லாம் மறந்துவிடும், தமிழர்கள் கத்தும் வரை கத்திவிட்டு ஓய்ந்துபோவார்கள் என்று கண்ணை மூடிக்கொண்டு பால்குடிக்கிறார்களா? 

இதெல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு, மக்கள் இவர்கள் பின்னால் போவதை நிறுத்தவேண்டும். பேரினவாதத்தின் ஆக்கிரமிபிற்குற்பட்டு, அதனது பாராளுமன்றத்தின் ஆசனங்களை அலங்கரித்துக்கொண்டு அவர்களின் அதிகாரத்தினை மீறி, எவராலுமே தமிழர்களுக்கு ஒரு துளி தண்ணீரைக்கூட பெற்றுத்தர முடியாதென்பதுதான் உண்மை.

அரசியல் சார்பற்ற மக்களின் எழுச்சியொன்றின்மூலமே பேரினவாதத்தின் முகத்திரை சர்வதேசத்தில் கிழித்தெறியப்பட முடியும். அதற்கு இப்போதிருக்கும் சம்பந்த சுமந்திர தலைமகள் சரிவராது. தூய, மக்கள் நலன் சிந்தனையுள்ள ஒருவரால் மட்டுமே மக்கள் எழுச்சிக்கு தலைமை வழங்க முடியும்.

Edited by ragunathan
spelling

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.